பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (Pradhan Mantri Awaas Yojana - Gramin (PMAY-G)) திட்டத்தின் கீழ் வனப்பகுதிகளில் வீடுகள் கட்டுவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது; வன உரிமைச் சட்டம் (Forest Rights Act (FRA)), 2006-ன் படி தனிநபர் வன உரிமைகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அந்த இடத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று Indian Express நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
— வன உரிமைச் சட்டத்தின் (Forest Rights Act (FRA)) பிரிவு 3-ன் கீழ், வன உரிமைகளை அங்கீகரிப்பது என்பது வன நிலத்தை உடைமையாக வைத்திருப்பது மற்றும் அங்கு வசிக்கும் உரிமையை உள்ளடக்கியது என்றும், கிராம சபையினால் உரிய நடைமுறைகள் மற்றும் சரிபார்ப்புகள் பின்பற்றப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் கூறுகிறது.
— ஒன்றிய அரசின் கருத்துக்கள் பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் மூலம் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யப்பட்டன. வனப்பகுதிக்குள் வீடுகள் கட்டுவதற்கு அனுமதிப்பதற்கான நோக்கம் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இது வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act), 1980-ன் விதிகளைக் கருத்தில் கொண்டும். அதே, சமயம் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய இரண்டும் இணைந்து செயல்படும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
— 2006ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டம் (Forest Rights Act), பழங்குடியினர் மற்றும் இதர வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் வரலாற்றுப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிக்கிறது. அதேவேளையில், வனப் (பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) (Van (Samvardhan Evam Sanrakshan) Adhiniyam) பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act) என்பது வன நிலங்களைப் பயன்படுத்துவதையும், வனப் பகுதி அல்லாத பணிகளுக்காக வன நிலங்களை பயன்படுத்துவதையும் முறைப்படுத்துகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய ஆவணங்களில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PM Awas-Gramin Yojana) திட்டத்தின் கீழ் வீடுகள் போன்ற பயன்களைப் பெறுவது என்பது, வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளின் ஒரு விரிவாக்கமே ஆகும் என்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் (Tribal Affairs Ministry) தெரிவித்திருந்தது.
— மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பினேகா கிராமத்தில் வசிக்கும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி பிரிவைச் சேர்ந்த (Particularly Vulnerable Tribal Group (PVTG)) சிறிய சகரியா (Sahariya) சமூகத்தினருக்கு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (Pradhan Mantri Awas Yojana - Gramin (PMAY-G)) திட்டத்தின் கீழ் வனப்பகுதியில் வீடுகள் கட்டுவது தொடர்பாக தொடரப்பட்ட ஒரு குடிமை மேல்முறையீடு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.
— தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)), பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் வனப் பாதுகாப்புச் சட்டத்தை (FCA) மீறுவதாகத் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 63 குடும்பங்களைக் கொண்ட அந்தச் சமூகம் தற்போது மேல்முறையீடு செய்துள்ளது.
— இந்த வழக்கின் தீர்ப்பானது, நலிந்த நிலையில் உள்ள பழங்குடியின மக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து அனைத்துப் பயனாளிகளையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா:
— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) என்பது பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் (Scheduled Tribes) ஒரு துணைப் பிரிவாகும். இவர்கள் சாதாரண பழங்குடியினரை விட அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள். அழியும் நிலையில் உள்ள பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் பட்டியல் உருவாக்கப்பட்டது.
— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) எனப்படும் நலிவடைந்த பழங்குடியின மக்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்விடம், குறைந்த மக்கள் தொகை மற்றும் தனித்துவமான சமூக-பொருளாதார, கலாச்சார பண்புகளால் பொதுச் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்தப் பழங்குடியின மக்கள் அடிப்படை சேவைகளைப் பெறுவதில் சிரமம், சமூகப் பாகுபாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அல்லது இயற்கை பேரிடர்களால் தங்களது இடங்களை விட்டு வெளியேற்றப்படும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மேலும், இவர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே அரசியல் பிரதிநிதித்துவம் இருப்பதால், முக்கிய முடிவெடுக்கும் செயல்பாடுகளில் இவர்களால் பங்கேற்க முடிவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
— பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது நாட்டின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கும் குறைந்த வருமானக் குழுக்களுக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக 2015-ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மை வீட்டுக் கடன்-இணைக்கப்பட்ட மானியத் திட்டமாகும்.
— பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: ஒன்று நகர்ப்புறங்களுக்கான திட்டம் (Pradhan Mantri Awas Yojana-Urban) மற்றும் மற்றொன்று கிராமப்புறங்களுக்கான (Pradhan Mantri Awas Yojana-Gramin/Rural) திட்டமாகும். இதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வீட்டுவசதித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அதேவேளையில் PMAY-G/R யோஜனா கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
Original article :What are the efforts made by the government for PVTGs? ( COMPLETED) -Khushboo Kumari