இந்தியா, ஓமன் நாடுகள் புதிய பொருளாதார வழித்தடத்தை ‘உயிர்ப்பூட்டுகின்றன’. — ராஜேஷ் அக்ரவால்

 விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (Comprehensive Economic Partnership Agreement (CEPA))) என்பது இருநாடுகளுக்கு இடையே இன்னும் பலமான, ஒன்றிணைந்த மற்றும் பரந்த அளவிலான பொருளாதாரக் கூட்டாண்மையை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.


இந்தியாவிற்கும் ஓமானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றன. பழங்கால பாய்மரக் கப்பல்களின் (Dhows) வழியே உருவான இந்த இருதரப்புப் பகிர்வு வரலாறு, தலைமுறைகளைக் கடந்த கலாச்சாரப் பரிமாற்றங்கள் மூலம் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்திய-ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) இந்த நாகரிகப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும். உலகளாவிய வர்த்தகமானது புவிசார் அரசியல் போட்டிகள், விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் வளர்ந்துவரும் பாதுகாப்புவாதம் (Protectionism) போன்ற சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்த ஒப்பந்தம் நம்பகமான கூட்டமைப்பு நாடுகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதியைக் காட்டுகிறது. 2022-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தமானது (CEPA) வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதார ஈடுபாட்டை மிக உறுதியாக நிலைநிறுத்துகிறது.


இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் சீராக விரிவடைந்து, 2025-26-ஆம் நிதியாண்டில் 11.18 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அதே சமயம் 2024-ஆம் ஆண்டீல் சேவைத் துறை வர்த்தகம் 863 மில்லியன் டாலராக இருந்தது. பொருளாதார உறவுகள் பாரம்பரியப் பொருட்களையும் தாண்டி, பொறியியல் பொருட்கள், மருந்துகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் எனப் பல துறைகளில் விரிவடைந்துள்ளன. இருப்பினும், இன்னும் பயன்படுத்தப்படாத பெரும் வாய்ப்புகள் உள்ளன. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வர்த்தகம், முதலீடு, நிபுணர்களின் எளிதான இடப்பெயர்வு மற்றும் ஒழுங்குமுறை ஒத்துழைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதன் மூலம், இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தமானது (CEPA) மிகவும் நெகிழ்வான, ஒருங்கிணைந்த மற்றும் பரந்த அளவிலான பொருளாதாரக் கூட்டமைப்புக்கான ஒரு முழுமையான கட்டமைப்பை உருவாக்குகிறது.


ஏற்றுமதி வளர்ச்சிக்கான ஒரு நுழைவாயில்


இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையிலான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA), ஓமனின் 98.08 சதவீத இறக்குமதி வரிப் பிரிவுகளில் இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரி இல்லாத சந்தை வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு முன்னால், ‘மிகவும் விரும்பப்படும் நாடு’ (Most Favoured Nation) என்ற விதிமுறையின்கீழ், இந்தியாவின் சுமார் 15 சதவீத ஏற்றுமதிப் பொருட்கள் மட்டுமே வரி இல்லாமல் ஓமனுக்குள் நுழைந்தன. மீதமுள்ள பொருட்களுக்கு 5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது, இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் (CEPA) இந்தியாவின் தற்போதைய ஏற்றுமதி அளவுகளில் 99.38 சதவீதப் பொருட்கள் வரி இல்லாத நுழைவு வசதியைப் பெறுகின்றன.


இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இதனால் கிடைக்கும் லாபம் மிக அதிகம். ஓமனின் ‘Vision 2040’ திட்டத்தின்கீழ் உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் தொழில்துறைப் பன்முகத்தன்மை ஆகியவற்றில் ஓமன் செய்யும் முதலீடுகள், இந்தியப் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கும். 2024-25-ஆம் நிதியாண்டில் 875.83 மில்லியன் டாலர் (87.58 கோடி டாலர்) மதிப்பில் இருந்த பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி, 2030-ஆம் ஆண்டிற்குள் 1.3 பில்லியன் முதல் 1.6 பில்லியன் டாலர் (130 கோடி முதல் 160 கோடி டாலர்) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு எவ்வித வரியும் இல்லாத 'வரியில்லா' (Zero-duty) அனுமதி கிடைப்பதால், அண்டை நாட்டுப் போட்டியாளர்களைவிட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். இது திருப்பூர், சூரத், லூதியானா மற்றும் கோயம்புத்தூர் போன்ற அதிக தொழிலாளர்களைக் கொண்ட ஜவுளி உற்பத்தி மையங்களுக்குப் புத்துயிர் கொடுப்பதோடு, பெருமளவில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வாய்ப்புகள் மிகவும் விரிவானவை மற்றும் பலதரப்பட்டவை ஆகும். இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் ஓமனின் மருத்துவப் பொருட்கள் சந்தை, இந்திய நிறுவனங்களுக்கு ஒரு வலுவான வாய்ப்பை வழங்குகிறது. அங்கு வேகமான அரசு அனுமதிகள், தரச் சான்றிதழ்களுக்கான அங்கீகாரம் மற்றும் முக்கிய மருந்துப் பொருட்களுக்கு வரி இல்லாத அனுமதி ஆகியவை கிடைப்பதால், விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செலவுகள் குறையும்; சந்தைக்குள் எளிதாக ஊடுருவவும் முடியும். இது தவிர, அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், நறுமணப் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த ஏற்றுமதிகளும் இதன் மூலம் பெரும் பயனடையும் என்கின்றனர்.


பொருளாதார சந்தைகளைத் திறத்தல்


இந்தியாவின் சமீபத்திய வர்த்தக ஒப்பந்தங்களைப் போலவே, இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தமும் (CEPA) சமநிலையான மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்தியா தனது சந்தைப் போட்டியை மேம்படுத்தவும், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒரு அங்கமாக மாறவும் தனது சந்தைகளைத் திறந்துவிட்டாலும், அதேநேரத்தில் முக்கியமான மற்றும் பாதிப்படையக்கூடிய உள்நாட்டுத் துறைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் போன்ற முக்கியமான வேளாண் உற்பத்தி பொருட்களும், ரப்பர், ஜவுளி மற்றும் காலணிகள் போன்ற தொழில்துறைகளும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறையானது, வெளிநாட்டுச் சந்தைகளுக்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்நாட்டுத் தொழில்களுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது.


ஓமன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஏறக்குறைய 95% பொருட்களை உள்ளடக்கிய, 77%-க்கும் அதிகமான இறக்குமதிப் பொருட்களுக்கான வரிவிதிப்பை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் ஓமனின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான மெத்தனால் (Methanol) மற்றும் நீர்மமற்ற அமோனியா (Anhydrous ammonia) போன்ற தொழில்முறை மூலப்பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் ஒரு சாதகமான போட்டிச் சூழல் உருவாகிறது. மேலும், பல்வேறு வகையான உலோகங்கள் மற்றும் உலோகக் கலவைகளை இந்தியச் சந்தைக்குள் முன்னுரிமையுடன் கொண்டு வருவதற்கான அனுமதியும் ஓமனுக்குக் கிடைக்கும். இது இருநாடுகளுமே குறைந்த உற்பத்திச் செலவின் மூலம் பயனடைய உதவும் என்கின்றனர்.


இந்தியா தனது உள்நாட்டு நலன்களைப் பாதுகாக்க விரும்பும் துறைகளில், ஓமனுக்கு விகிதாச்சார வரி ஒதுக்கீடு (Tariff Rate Quotas (TRQ)) மூலமாகச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறையின்கீழ், பேரிச்சம்பழம், பளிங்குக்கல் (Marble) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்நிலை பெட்ரோகெமிக்கல் பொருட்கள் (Downstream petrochemicals) போன்றவற்றை, ஒரு குறிப்பிட்ட அளவு வரை குறைந்த வரி விகிதத்தில் ஓமனால் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும். மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஏற்பாடு, சந்தையில் பொருட்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதோடு, நலிவடைந்த நிலையில் உள்ள உள்நாட்டுத் துறைகள் இந்த நெருக்கடி காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

               

வர்த்தகம், திறமை மற்றும் நம்பிக்கை


இந்திய-ஓமன் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA), தகவல் தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள் மற்றும் கட்டுமானத்துறை போன்ற இந்தியா வலுவாக இருக்கும் துறைகளில், இந்திய சேவை வழங்குநர்களுக்கு ஓமன் சந்தையில் நுழைவதற்கான உறுதியான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஒப்பந்தம் பல துறைகளில் 100% வரை அந்நிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment (FDI)) அனுமதிப்பதால், இந்திய நிறுவனங்கள் ஓமனில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும்.


திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான ஒன்றாகும். நிறுவனங்களுக்குள்ளான பணியாளர் இடமாற்ற (Intra-Corporate Transferee (ICT)) வரம்பை 50%-ஆக உயர்த்துவதன் மூலம், இந்திய நிறுவனங்கள் தங்களது சிறப்புப் பணியாளர்களை எளிதாக ஓமனுக்கு அனுப்பி, அங்குள்ள சந்தையில் தங்களது நிலையை வலுப்படுத்திக்கொள்ள முடியும். மேலும், ஓமன் நாடு தனது வரலாற்றிலேயே முதன்முறையாக எந்தவொரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலும் (Free Trade Agreement (FTA)) இல்லாதவாறு, தனிப்பட்ட முறையில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு ஒரு தனித்துவமான இயக்கக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. உலக அளவில் மக்கள் தொகை மாற்றங்களால் பல நாடுகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் இந்தச் சூழலிலும், உற்பத்தித் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இந்த ஒப்பந்த விதிமுறை இந்திய நிபுணர்களுக்கு உலக அளவில் ஒரு முக்கியமான முன்மாதிரியாக அமைகிறது.


விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் (CEPA) ஒரு சிறப்பு மருத்துவ இணைப்புச் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பொதுவான முதன்மை மருத்துவக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது. அதோடு, மருத்துவ வல்லுநர்களுக்கான உரிமம் பெறும் நடைமுறைகளையும் எளிதாக்குகிறது. மேலும், இந்த ஒப்பந்தமானது ஒரு சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் (Social Security Agreement (SSA)) குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதைக் கட்டாயமாக்குகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருநாடுகளிலும் சமூக பாதுகாப்புக்கான பங்களிப்புத் தொகையை (வரி போன்ற கட்டணம்) இரட்டை முறையாகச் செலுத்துவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்கின்றனர்.


பிராந்திய மதிப்புச் சங்கிலிகள்


இந்தியா – ஓமன் நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA) என்பது வெறும் வரிகளை குறைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இருநாடுகளின் விதிமுறைகளை ஒன்றிணைத்தல், பொதுவான தரநிலைகளை உருவாக்குதல் மற்றும் தரநிர்ணயச் சோதனை முறைகள் மூலமாக வர்த்தகத்திற்கு இடையூறாக இருக்கும் வரி அல்லாத தடைகளையும் தகர்க்கிறது. இது இந்தியாவின் நவீன வர்த்தக ஒப்பந்தங்களில் காணப்படும் உயர்தர அணுகுமுறையைப் பிரதிபலிப்பதுடன், உள்நாட்டு வர்த்தகத்தை முடக்கும் பல தடைகளுக்கும் தீர்வாக அமைகிறது.


மிகவும் நெருக்கமான ஒரு பிராந்திய வர்த்தகக் கட்டமைப்பிற்கான வலுவான அடித்தளத்தை இந்தியா அமைத்து வருகிறது. இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்த (FTA) கூட்டணி நாடுகளெல்லாம் ஒன்றிணைந்தால், அவை உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏறக்குறைய 67%-யும், உலகளாவிய பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதியில் சுமார் 75%-யும் கொண்டுள்ளன. வளைகுடா நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் பரந்த இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இணைக்கும் மிக முக்கியப் புவியியல் அமைப்பில் ஓமன் நாடு அமைந்துள்ளது. ஓமனின் 'சோஹர்', 'துக்ம்' மற்றும் 'சலாலா' போன்ற தளவாட மற்றும் தொழிற்துறை மையங்கள், இந்தியாவின் உற்பத்தித் திறனையும் திறமையான மனிதவளத்தையும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சந்தைகளுடன் இணைக்கும் மதிப்புச் சங்கிலியாக மாற முடியும். இது பிராந்திய இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு வலுவான கூட்டமைப்பை உருவாக்குகிறது.


வணிகங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யவும், தொழிலாளர்கள் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நாடுகள் நீண்டகாலப் பொருளாதாரப் பங்களிப்பை உருவாக்கவும் வழிவகுக்கும்போதுதான் வர்த்தக ஒப்பந்தங்கள் வெற்றியடைகின்றன. இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA), இருநாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருக்கும் உறவை,           21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ற ஒரு ராஜதந்திரரீதியான பொருளாதாரக் கூட்டணியாக மாற்றி, அதைச் சாத்தியப்படுத்துகிறது.


ராஜேஷ் அகர்வால், மத்திய வர்த்தகச் செயலாளர் ஆவார்.


Original article : India, Oman ‘energise’ new economic corridor. -Rajesh Agrawal

Share:

இந்தியாவின் தற்போதைய பொருளாதார சவால்கள், சிக்கன நடவடிக்கை குறித்து உணர்த்துவது என்ன? -ரித்விகா பட்கிரி

 மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்களால் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சிக்கன நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த அரசு செலவினங்கள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. சிக்கனக் கொள்கைகளின் (Austerity policies) வரலாறு அவற்றின் செயல்திறன் குறித்து கூறுவது என்ன?


ஈரானில் நடக்கும் போர் மற்றும் ஹார்முஸ் நீர்சந்தி (Strait of Hormuz) முற்றுகை காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தங்கம் வாங்குவது, வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது மற்றும் தனிநபர் வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி குடிமக்களை வலியுறுத்தியுள்ளார்.


பொருளாதாரத்தில் இத்தகைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் "சிக்கன நடவடிக்கை" (Austerity) என்று வரையறுக்கப்படுகின்றன. சிக்கன நடவடிக்கை என்றால் என்ன? சிக்கனக் கொள்கைகளின் வரலாறு அவற்றின் செயல்திறனைப் பற்றி என்ன சொல்கிறது? ஜான் மேனார்ட் கீன்ஸ் உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்கள் இத்தகைய கொள்கைகளை எவ்வாறு கேள்விக்குள்ளாக்கினர்? மேலும், இந்தியாவில் தற்போதைய சிக்கன நடவடிக்கை குறித்த விவாதம், நாட்டின் பொருளாதார சவால்களைப் பற்றி உணர்த்துவது என்ன?



சிக்கன நடவடிக்கை என்றால் என்ன?


சிக்கன நடவடிக்கைகள் என்பது அரசுச் செலவினங்களை குறைப்பதன் மூலம், நிதி சமநிலையை மீட்டெடுப்பதையும் பொருளாதார போட்டித்தன்மையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட கொள்கைகளின் தொகுப்பாகும். இந்தச்  சிக்கன நடவடிக்கைகளில் பொதுவாக சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் பிற சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இவை பின்வரும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியிருக்கலாம்:


பிற்போக்கு வரி விதிப்பு (Regressive taxation): குறைந்த வருமானம் உடையவர்கள் அதிக வரி செலுத்தும் முறை.


மூலதன ஆதாய வரியைக் குறைத்தல் (Reduction in capital gains tax): முதலீடுகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கான வரிகளைக் குறைப்பது.


நுகர்வு மீதான வரிகளை அதிகரித்தல்: பொருட்கள் மற்றும் சேவைகள் (Goods and Services Tax (GST)) மீதான வரிகளை உயர்த்துவது.


பணவாட்டம் (Deflation): பணவீக்கத்தைக் குறைக்க, அரசுச் செலவுகள் அல்லது கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்துவது.


வட்டி விகித உயர்வு: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மூலம் வட்டி விகிதங்களை உயர்த்துவது.


தனியார்மயமாக்கல் (Privatisation): அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை விற்பது அல்லது பொதுச் சேவைகளை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவது.


நெகிழ்வான தொழிலாளர் ஒப்பந்தங்கள், ஊதியக் கட்டுப்பாடு மற்றும் வேலைவாய்ப்பு விதிமுறைகளைத் தளர்த்துதல்.



பேரியல் பொருளாதார (Macroeconomics) மாதிரிகளின்படி, இந்த சிக்கனக் கொள்கைகளின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று, பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தேவைக் குறைவதால் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதாகும். உதாரணமாக, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அரசு செலவினங்களைக் குறைக்கும்போது, புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது, ஆட்குறைப்பு செய்வது மற்றும் ஊதிய உயர்வு முடக்கம் போன்றவற்றால் நேரடியாக வேலைவாய்ப்புகள் குறைகின்றன.


1930-கள் மற்றும் 1970-களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிகளின்போது, மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகள் 


சிக்கனக் கொள்கைகளின் (Austerity policies) வரலாறு, பொருளாதார நெருக்கடி காலங்களில் அரசாங்கங்கள் இத்தகைய கொள்கைகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. கிளாரா மாட்டே என்ற பொருளாதாரப் பேராசிரியை, தனது "The Capital Order: How Economists Invented Austerity and Paved the Way to Fascism (2022)" என்ற புத்தகத்தில், முதலாளித்துவத்தின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக முதலாம் உலகப் போருக்குப் பிறகு நிலவிய பணவீக்கம், பொதுக் கடன்கள் மற்றும் தொழிலாளர் வேலைநிறுத்தங்களுக்குப் பதிலடியாகவே இந்தச் சிக்கனக் கொள்கை ஒரு வழிமுறையாக உருவானது என்று கூறுகிறார்.


1930-களில் ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பெருமந்தத்தின் (Great Depression) போது, பல அரசாங்கங்கள் நிதிக் குறைப்பு, வரி உயர்வு மற்றும் ஊதியக் குறைப்பு போன்றவற்றின் மூலம் பதிலளித்தன. இந்தச் சூழ்நிலையில்தான், நவீன பேரியல் பொருளாதாரத்தின் (Macroeconomics) தந்தை என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜான் மேனார்ட் கீன்ஸ், உலகளாவிய வேலைவாய்ப்பின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் "The General Theory of Employment, Interest, and Money (1936)" என்ற புத்தகத்தை எழுதினார்.


கீன்ஸின் 'சிக்கன முரண்பாடு' (Paradox of thrift) எனப்படும் சேமிப்பு முரண்பாடு கோட்பாட்டின்படி, பொதுவாக, வேலைவாய்ப்பின்மை காரணமாக தனிநபர்கள் அல்லது குடும்பங்களின் சேமிப்பு விகிதம் அதிகரிக்கும்போது, அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் சேமிப்பைக் குறைத்து, இறுதியில் பொருளாதார மந்தநிலையை மேலும் மோசமாக்கும் என்கின்றனர்.

1970-களில் "தேக்கவீக்கம்" (Stagflation) என்ற பொருளாதார நிலை உருவானது. இது ஒரே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவது, பணவீக்கம் (விலைவாசி உயர்வு), மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய மூன்றும் ஒன்றாகக் காணப்படும் ஒரு காலகட்டமாகும். இந்தக் காலத்தில், இங்கிலாந்து (UK) மற்றும் அமெரிக்கா (US) ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் நவதாராளவாத (Neoliberal) பொருளாதாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தன. அதாவது நிதி ஒழுக்கம், தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், மற்றும் தொழிலாளர் சந்தை நெகிழ்வுத்தன்மை போன்ற கொள்கைகளை அமல்படுத்தின. அப்போது நிலவிய அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டுமே தொழிலாளர் சங்கங்கள் பலவீனமடைவதற்குக் காரணமாக அமைந்தன.


இந்த மாற்றங்கள் அதற்குப் பிந்தைய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்தன. மேலும், அரசின் செலவினக் குறைப்பு மற்றும் நவதாராளவாத சீர்திருத்தங்களுக்கு எதிரான பரவலான விமர்சனங்கள் எழுவதற்கும் இது வழிவகுத்தது.


செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான விமர்சனங்கள்


கெய்னீசியன் (Keynesians) பொருளாதார அறிஞர்களின் விமர்சனங்களைத் தவிர, இடதுசாரி விமர்சகர்களும் இந்தச் சிக்கனக் கொள்கைகளை எதிர்க்கிறார்கள். இத்தகைய கொள்கைகளின் வரலாறு, தொழிலாளர்களின் பேரம் பேசும் உரிமைகள், அவர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளைக் குறைக்கும் போக்கையே காட்டுகிறது என்று வாதிடுகின்றனர். மார்க் பிளைத் தனது "Austerity: The History of a Dangerous Idea (2013)" என்ற புத்தகத்தில், இந்தச் சிக்கனக் கொள்கை வரலாற்றில் எந்தவொரு காலக்கட்டத்திலும் கடனைக் குறைக்கவோ அல்லது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவோ உதவியதில்லை என்று விளக்குகிறார்.






கெய்னீசியப் பார்வை (Keynesian perspective): பொருளாதார மந்தநிலை அல்லது வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும்போது, அரசாங்கமே நேரடியாகப் பணத்தைச் செலவழித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிப் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்ற பொருளாதாரக் கொள்கை.


இருப்பினும், அரசாங்கங்கள் இத்தகைய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, 2008-ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு, பல நாடுகளின் முதன்மையான கொள்கை முடிவாக இந்த நிதிச் செலவினக் குறைப்பு முறைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சந்தையின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொதுக் கடனைச் சீராகப் பராமரிக்கவும், நீண்டகாலப் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.


இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட சிக்கனக் கொள்கைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) குறைவதற்கும், சமத்துவமின்மை அதிகரிப்பதற்கும், பொதுச் சுகாதாரத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைந்தன என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும், இது பாலினரீதியாக சமமற்ற பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன், ஏழை எளிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலையமைப்புகளையும் குறைத்துவிட்டது.


கிரேக்க நாட்டின் நிதி நெருக்கடி 


அரசாங்கத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு, கிரேக்க நாட்டின் நிதி நெருக்கடி ஒரு மிகச்சிறந்த உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது. 2001-ஆம் ஆண்டில் கிரேக்க நாடு 'யூரோ' நாணய முறையை ஏற்றுக்கொண்ட பிறகு, பொதுச் சேவைகள் மற்றும் இதர சமூக நலத்திட்டங்களுக்காக அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கியது. இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையும், பொதுக் கடனும் மிக வேகமாக உயர்ந்தன. 2009-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், கிரேக்க நாட்டின் நிதிப் பற்றாக்குறை அனைவரும் நினைத்ததைவிட மிக அதிகமாக இருப்பதை வெளிப்படுத்தியது.       இது 2011-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15.6 சதவீதத்தை எட்டியது.


கிரேக்க அரசாங்கம் திவாலாவதைத் தடுப்பதற்காக, ஐரோப்பிய ஆணையம் (European Commission), ஐரோப்பிய மத்திய வங்கி (European Central Bank (ECB)) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளடங்கிய "Troika" கூட்டமைப்பு, மூன்று ஆண்டுகால நிதியுதவித் திட்டத்தை வழங்கியது. ஆனால், இத்திட்டம் கிரேக்க அரசுக்கும் அதன் மக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதில் வரிகளை உயர்த்துதல், ஓய்வூதியம் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும்.


கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றிடமிருந்து 100 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகையைக் கடனாகப் பெற்றது. இருப்பினும், கடனை அடைப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட நிதி ஒருங்கிணைப்பு (Fiscal consolidation) கிரேக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுத்தது. இதனால் அவர்களின் மொத்த பொருளாதார உற்பத்தி 25 சதவீதம் என்ற அளவுக்குக் குறைந்தது.  வேலையில்லாத் திண்டாட்டம் 27 சதவீதத்தை எட்டியது. மக்களின் ஊதியங்களும் ஓய்வூதியங்களும் பெருமளவு குறைந்தன.  மேலும், நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (Debt-to-GDP ratio) 2009-ஆம் ஆண்டில் 130 சதவீதமாக இருந்தது, 2014-ஆம் ஆண்டில் 180 சதவீதமாக உயர்ந்தது. இதனால்தான், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் எந்தளவுக்குப் பயனுள்ளவை என்ற விவாதங்களில், கிரேக்கத்தின் இந்த அனுபவம் இன்றும் மிக முக்கிய உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது.


சிக்கன நடவடிக்கையால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள்


சமீபத்திய கொரோனா (Covid-19) பெருந்தொற்று, சுகாதாரம் மற்றும் பிற சமூகத் துறைகளுக்கான அரசாங்க நிதியுதவியைக் குறைப்பதால் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.             பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நிதிக் குறைப்பு (Fiscal restraint) காரணமாக, பல நாடுகளின் பொது சுகாதார அமைப்புகள் எவ்வளவு பலவீனமாக உள்ளன என்பதை இந்தச் சுகாதார நெருக்கடி வெளிக்காட்டியது. நிலைமையைச் சமாளிக்க அரசாங்கங்கள் பொதுச் செலவினங்களை அதிகரித்தபோது, சிக்கன நடவடிக்கை குறித்த விவாதங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றன.


பெண்ணிய அறிஞர்களும் இந்தச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். நிதிக் குறைப்பு கொள்கைகள் பாரம்பரிய பாலினப் பொறுப்புகளையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் மேலும் வலுப்படுத்துவதாக வாதிடுகின்றனர். உதாரணத்திற்கு, 1970-களில் நிலவிய ஊதியப் பணவீக்கத்தின்போது, அரசாங்கம் வழங்கிய நலத்திட்ட உதவிகளும் வேலையில்லாத் திண்டாட்டக் கால உதவிகளும், ஆண்களே குடும்பத்தின் முதன்மை உழைப்பாளி என்ற பாரம்பரியக் குடும்பக் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்ட உதவிகள், உணவு உதவித் திட்டங்கள் அல்லது வேலைக்குச் செல்லும் மனைவிகளை நம்பியிருந்த ஆண்கள் சமூகத்தால் பெண்தன்மை கொண்ட ஆண்கள் (Feminised men) என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டனர்.


சிக்கன நடவடிக்கை குறித்த சமீபத்திய பெண்ணிய விமர்சனங்கள் கூறுவது என்னவென்றால், சுகாதாரம், குழந்தைப் பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகியவற்றிற்கான பொதுச் செலவுகளை அரசாங்கம் குறைக்கும்போது, அந்தப் பொறுப்புகள் அனைத்தும் பெண்களுக்கு மேலும் சுமையாக கருதப்படுகின்றன. இதனால், அவர்களுக்கு ஊதியமில்லாத வீட்டு வேலைகளும், பராமரிப்புப் பணிகளும் பெருமளவில் அதிகரிக்கின்றன. மேலும், பெண்கள் பொதுவாக இத்தகைய பராமரிப்புத் துறைகளில்தான் அதிக அளவில் வேலை செய்கிறார்கள் என்பதால், அரசாங்கம் இத்துறைகளுக்கான நிதியைக் குறைக்கும்போது அவர்கள் வேலை இழக்கும் அபாயமும் அதிகமாகிறது.


இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விவாதங்கள்


இந்தியாவில், சிக்கனக் கொள்கை பற்றிய கவலைகள் ஒரு மாறுபட்ட சூழ்நிலையில் எழுந்துள்ளன. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கியக் காரணம் மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள்தான்.           இது எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது, இதனால் உலகளாவிய பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளால் இந்தியப் பொருளாதாரம் எளிதில் பாதிக்கப்படுகிறது.


அரசாங்கக் கொள்கை அளவில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசின் சமீபத்திய கோரிக்கைகள் மக்களின் நடத்தையில் மாற்றங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதாவது எரிபொருள் நுகர்வைக் குறைத்தல், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தல் மற்றும் தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்துதல் போன்றவையாகும்.


இருப்பினும், சுகாதாரம் மற்றும் கல்விக்கான பொதுச் செலவினங்கள் குறித்து இந்தியாவிலும் விவாதங்கள் எழுந்துள்ளன. ஒட்டுமொத்த அரசுச் செலவுகள் அதிகரித்திருந்த போதிலும், நாட்டின் வளர்ச்சித் தேவைகளோடு ஒப்பிடும்போது இந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு இன்னும் போதிய அளவில் இல்லை என்று பல பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.


சிக்கன நடவடிக்கைகளின் வரம்புகள்


‘State of Working India report 2026’ அறிக்கையின்படி, இந்தியாவில் 15-25 வயதுப் பிரிவில் உள்ள பட்டதாரிகளில் 40 சதவீதத்தினரும், 25-29 வயதுப் பிரிவில் உள்ளவர்களில் 20 சதவீதத்தினரும் தகுந்த வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். இந்த அதிகப்படியான வேலையில்லாத் திண்டாட்டம், நமது பொருளாதார அமைப்பில் உள்ள ஆழமான அடிப்படைக் குறைபாடுகளைக் காட்டுகிறது.


கெய்னீசியப் பொருளாதாரக் கோட்பாட்டின்படி, இத்தகையச் சூழல் நிலவும்போது அரசாங்கமே நேரடியாகப் பொதுத்துறையில் முதலீடு செய்வதும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்காகப் பணம் செலவழிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. குறிப்பாக சுகாதாரம், கல்வி, முதியோர் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பணிகள், மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்த முதலீடுகள் அவசியமாகின்றன.


சொந்த வாகனங்களுக்குப் பதிலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற மக்களின் பழக்கவழக்க மாற்றங்கள் ஓரளவுக்கு உதவக்கூடும் என்றாலும், பொதுப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகளில் கூடுதல் முதலீடுகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது.

மக்களின் பழக்கவழக்க மாற்றங்கள் பொருளாதாரக் கொள்கைகளுக்குத் துணையாக இருக்க முடியுமே தவிர, நீண்டகால வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அரசு செய்ய வேண்டிய முதலீடுகளுக்கு அவை மாற்றாக அமைந்துவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


Original article : What India’s current economic challenges reveal about austerity. -Ritwika Patgiri

Share:

புலி வழித்தடங்கள் எவ்வாறு ஒட்டுமொத்த நிலப்பரப்பிலும் வனவிலங்கு பாதுகாப்பை பராமரிக்க உதவுகின்றன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• இந்தத் திட்ட முன்மொழிவு, காட்சிரோலி (Gadchiroli) பகுதியில் உள்ள           9.4 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை, 'Lloyds Metals & Energy' நிறுவனத்தின் இரும்புத்தாது பிரித்தெடுத்தல் மற்றும் பதப்படுத்துதல் பணிகளுக்காக மாற்றுவதை உள்ளடக்கியது. இந்தத் திட்டத்திற்கு ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதியன்று வனத்துறையின் அனுமதியும், மே மாதம் 12-ஆம் தேதி சுற்றுச்சூழல் அனுமதியும் கிடைத்தன. அதற்கு அடுத்த நாளே, வனவிலங்கு பாதுகாப்பு அனுமதி பெறுவதிலிருந்து இத்திட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது.


• சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) ‘Lloyds’ நிறுவனம் சமர்ப்பித்த திட்ட வரைபடத்தின்படி, இந்தத் திட்டப் பகுதி, காட்டின் 196, 197, 273, 274, 275, 276, 298, 300 மற்றும் 301 ஆகிய வனப் பிரிவுகளுக்குள் வருகிறது. இதில் ஒன்றை (300) தவிர மற்ற அனைத்து வனப் பிரிவுகளும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் (National Tiger Conservation Authority (NTCA)) அங்கீகரிக்கப்பட்ட தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தின் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தில், தடோபா-இந்திராவதி புலி வழித்தடங்களின் (Tiger corridor) ஒரு பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


• மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டில் ‘Lloyds’ நிறுவனம் சமர்ப்பித்த வனவிலங்கு அனுமதி விண்ணப்பத்தில், ‘தேவைப்படும் நிலத்தின் வகை’ என்ற பிரிவின்கீழ், அந்தத் திட்டப் பகுதியை ஒரு "புலி வழித்தடங்கள்" என்று ஒப்புக்கொண்டுள்ளது.


• இருப்பினும், எந்தவொரு புலிகள் பாதுகாப்புத் திட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள தேசியப் பூங்கா, சரணாலயம், புலிகள் காப்பகம் அல்லது நடமாட்டப் பாதைக்குள்ளோ அல்லது அதற்கு அருகிலோ இந்தத் திட்டப் பகுதி வரவில்லை என்று கூறி, மகாராஷ்டிர முதன்மை தலைமை வனவிலங்குப் பாதுகாவலர் (Chief Wildlife Warden (CWLW)) எம். சீனிவாச ரெட்டி, மே மாதம் 13-ஆம் தேதி இந்தத் திட்டத்திற்கு வனவிலங்கு அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளித்து, காட்டின் நிலப்பகுதியை அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• புலி வழித்தடங்கள் என்பவை புலிகளின் வாழ்விடங்களை இணைக்கும் மிக முக்கியமான வனவிலங்குப் பாதைகளாகும். இவை விலங்குகளின் இடப்பெயர்வு, மரபணுப் பரிமாற்றம் மற்றும் அவை நீண்டகாலம் உயிர்வாழ்வதை சாத்தியமாக்குகின்றன. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி (Wildlife Protection Act), புலி காப்பகங்கள் அல்லது புலி வழித்தடங்களுக்குள் அல்லது அவற்றைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு, தேசிய வனவிலங்கு வாரியத்தின் (National Board for Wildlife (NBWL)) நிலையான குழுவிடமிருந்து சட்டப்பூர்வ அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். புலி பாதுகாப்புத் திட்டம் (TCP) என்பது ஒவ்வொரு புலி காப்பகத்திற்காகவும், தேசிய புலி பாதுகாப்பு ஆணையத்தால் (NTCA) அங்கீகரிக்கப்பட்ட 10 ஆண்டுகால வழிகாட்டி வரைபடமாகும். 



Original article : How do tiger corridors help in maintaining landscape-level conservation? -Priya Kumari Shukla

Share:

மதமாற்றத்தைத் தொடர்ந்து பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதால் ஏற்படும் அரசியலமைப்புரீதியான தாக்கங்கள் யாவை? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


ஒரு வாரத்திற்குப் பிறகு, புது டெல்லி சங்கத்துடன் இணைந்த ஒரு பெரிய ஆதிவாசிக் கூட்டம், கிறிஸ்தவம் அல்லது இஸ்லாமிற்கு மதம் மாறும் பழங்குடியினரை பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) பிரிவிலிருந்து "பட்டியல் நீக்கம்" செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.


 "பட்டியல் நீக்கம்" (Delisting) என்பது, கிறிஸ்தவம் அல்லது இஸ்லாமிற்கு மதம் மாறும் பழங்குடியினர், பட்டியல் பழங்குடியினருக்கான சலுகைகளைத் தொடர்ந்து பெறக்கூடாது என்ற கோரிக்கையைக் குறிக்கிறது. இந்தக் கோரிக்கையை எழுப்புபவர்களில் ஆதிவாசி இந்துக்களும் அடங்குவர்.


ஆனால், ஆதிவாசிகளின் மற்றொரு பிரிவான சர்னா சமூகம் தங்களை இந்து என்றோ கிறிஸ்தவர் என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. பழங்குடியினருக்கான அங்கீகாரத்தை நீக்குவதற்கு மதம் அடிப்படையாக அமைந்தால், இந்து மதத்திற்கு மாறிய பழங்குடியினருக்கும் அதே விதி பொருந்த வேண்டும் என்று கூறுகிறது.


பட்டியலிலிருந்து நீக்குவது குறித்த இந்த புதிய விவாதம், மதம் மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு சார்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறும் தலித்துகள், சட்டப்பிரிவு 341-ன் கீழ் பட்டியல் சாதி அங்கீகாரத்தை தொடர்ந்து கேட்க முடியாது என்று உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் கூறிய நிலையில் மீண்டும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. இருப்பினும், பழங்குடியினரைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு 342, மதத்தை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.  தற்போது பழங்குடியினர் அடையாளம் மற்றும் மதமாற்றம் தொடர்பான விவாதங்களில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது.



உங்களுக்குத் தெரியுமா?


பட்டியலிலிருந்து நீக்கம் என்ற கருத்து இந்திரா காந்தியின் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக பணியாற்றிய முக்கிய ஆதிவாசி தலைவர் பாபா கார்த்திக் ஓரான் அவர்களிடம் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகிறது.


கார்த்திக் ஓரான், 1962-ல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியான லோஹர்தகாவில் போட்டியிட்ட முதல் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அவருக்கு எதிராக நின்ற வேட்பாளர், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் இனி ஓரான் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினர் அல்லாத நபர் என்றும், எனவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். இருப்பினும், பாட்னா உயர் நீதிமன்றம், ஓரோன் என்பது "முதன்மையாக ஒரு பழங்குடி மற்றும் இன அடையாளம், வெறும் மதம் அல்ல" என்று தீர்ப்பளித்தது. கிறிஸ்தவ ஓரான் பழங்குடியினர் தங்கள் பழங்குடி குல முறை, கலாச்சாரம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை பாட்னா உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்கள் "முதலில் ஓரான்கள், அதன் பிறகுதான் கிறிஸ்தவர்கள்" என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. பட்டியலிலிருந்து நீக்கக் கோரும் கோரிக்கையின் எதிர்ப்பாளர்கள், பழங்குடியின அடையாளத்தைத் தீர்மானிப்பதில் மதம் முக்கியமானது அல்ல என்று கூறுவதற்கு, உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர்.


1967-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கார்த்திக் ஓரோன் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தபோது, ​​இந்தியா முழுவதும் சாதிகள் மற்றும் பழங்குடியினரைச் சேர்ப்பது மற்றும் விலக்குவது தொடர்பான விதிகளைத் திருத்துவதற்காக, அரசாங்கம் 'பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணைத் திருத்த மசோதாவை' (Scheduled Castes and Scheduled Tribes Order Amendment Bill) மக்களவையில் அறிமுகப்படுத்தியது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம், அந்த மசோதாநாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.


அந்தக் குழு, 1969-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி அளித்த   அறிக்கையில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியப் பழங்குடியினராக மதம் மாறியவர்களைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவிலிருந்து விலக்குவதற்காக மசோதாவில் திருத்தத்தை மேற்கொள்ள பரிந்துரை செய்தது. இருப்பினும், அரசாங்கம் அந்தப் பரிந்துரை குறித்துத் தனது ஆட்சேபணைகளைத் தெரிவித்தது. நாடாளுமன்றம் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.


Original article : What are the constitutional implications of delisting Scheduled Tribes following religious conversion? -Priya Kumari Shukla

Share:

பிரம்மோஸை (BrahMos) தனித்துவமாக்குவது எது? அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் குறித்து . . . -ரோஷ்னி யாதவ்

 வியட்நாம் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாலும், இந்தோனேசியாவும் ஒரு ஒப்பந்தத்தில் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், இந்தியாவின் முதன்மை ஏவுகணை அமைப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிரம்மோஸை மற்ற ஏவுகணைகளிலிருந்து வேறுபடுத்துவது எது, மற்றும் எந்த தொழில்நுட்பங்கள் அதற்கு சக்தி அளிக்கின்றன? என்பதை கீழே குறிப்பிட்டுள்ளன.


பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு – தொழில்நுட்பம் மற்றும் கருத்துக்கள்


தற்போதைய நிகழ்வு என்ன?


வியட்நாமுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாகவும், இந்தோனேசியாவுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்தார். குறிப்பிடத்தக்க வகையில், 2022-ல் இந்தியாவிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை (BrahMos missile system) வாங்கிய முதல் வெளிநாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.


முக்கிய அம்சங்கள் :


1. பிரம்மோஸ், இந்தியா மற்றும் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தமானது, இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் NPO மஷினோஸ்ட்ரோயேனியா (NPO Mashinostroyenia (NPOM)) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் (BrahMos Aerospace) நிறுவனம் உருவாவதற்கு வழிவகுத்தது.


2. பிரம்மோஸ் என்பது பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா நதிகளின் பெயர்களின் கலவையாகும். ஒரு மீயொலிவேக (supersonic), உயர்-துல்லியமான பயண ஏவுகணை மற்றும் அதன் வகைகளை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் தயாரித்தல் ஆகிய பொறுப்புகளுடன் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் நிறுவப்பட்டது.


3. இந்தக் கூட்டு முயற்சியில் இந்தியா 50.5 சதவீதப் பங்கையும், ரஷ்யா மீதமுள்ள 49.5 சதவீதப் பங்கையும் கொண்டுள்ளது. இந்த ஏவுகணையின் முதல் வெற்றிகரமான சோதனை, ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரைக்கு அப்பால் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தரைவழி ஏவுதளத்திலிருந்து ஜூன் 12, 2001 அன்று நடத்தப்பட்டது.


4. பிரம்மோஸ் என்பது திட எரிபொருள் உந்துவிசை இயந்திரத்தைக் கொண்ட ஒரு இரு-நிலை ஏவுகணையாகும். முதல்நிலை, ஏவுகணையை ஒலியின் வேகத்தைவிட அதிகமான மீயொலிவேகத்திற்குக் கொண்டு செல்கிறது, பின்னர் அது பிரிக்கப்படுகிறது.


5. பின்னர், திரவ ராம்ஜெட்டின் இரண்டாம் நிலை, ஏவுகணையை அதன் பயணக் கட்டத்தில் ஒலியின் வேகத்தைப் போல் மூன்று மடங்கு வேகத்திற்கு உந்தித் தள்ளுகிறது. திரவ ராம்ஜெட் என்பது காற்றை உள்ளிழுக்கும் ஒரு ஜெட் இயந்திரமாகும். இது திரவ எரிபொருளைப் பயன்படுத்துகிறது. அந்த எரிபொருள் அதிவேகக் காற்று ஓட்டத்தில் செலுத்தப்பட்டு, உந்துவிசையை உருவாக்குவதற்காகப் பற்றவைக்கப்படுகிறது.


6. பிரம்மோஸ் என்பது மிகவும் பல்துறை வாய்ந்த, தொலைதூரத் தாக்குதல் திறன் கொண்ட, 'தானியங்கி' (fire-and-forget) வகையிலான ஒரு மீயொலிவேகப் பயண ஏவுகணையாகும். இது தரைவழி, கப்பல்வழி, வான்வழி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்வழிப் பதிப்புகளில் தனது திறன்களை நிரூபித்துள்ளது.


7. இந்த ஏவுகணை மிகக் குறைந்த ரேடார் தடயத்தைக் கொண்டிருப்பதால், இது மறைவாகச் செல்லக்கூடியது. மேலும், இது பல்வேறு பாதைகளைப் பின்பற்றக்கூடியது. அதன் இணையதளத்தின்படி, இதன் பயண உயரம் 15 கி.மீ. வரையிலும், இறுதி இலக்கு உயரம் 10 மீட்டர் வரையிலும் இருக்கலாம். இந்த ஏவுகணை 200-300 கிலோ எடையுள்ள ஒரு வழக்கமான போர்க்குண்டைக் கொண்டுள்ளது.


8. பிரம்மோஸ் போன்ற பயண ஏவுகணைகள், "தொலைதூர ஆயுதங்கள்" (stand-off range weapons) என்ற வகையின் கீழ் வருகின்றன. இவை, தாக்குபவர் எதிரியின் தற்காப்புத் தாக்குதலில் இருந்து தப்பிக்கப் போதுமான தூரத்திலிருந்து ஏவப்படுகின்றன. இந்த ஆயுதங்கள் உலகின் பெரும்பாலான முக்கிய இராணுவங்களின் ஆயுதக் கிடங்குகளில் உள்ளன.


9. தற்போது சோதனையில் உள்ள பிரம்மோஸ் பதிப்புகள் நீட்டிக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளன. அவை 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடியவை. இது ஏவுகணையின் உண்மையான வரம்பான 290 கிலோமீட்டரை விட அதிகம்.


10. சப்சோனிக் பயண ஏவுகணைகளுடன் (subsonic cruise missiles) ஒப்பிடும்போது, பிரம்மோஸ் மூன்று மடங்கு வேகம், 2.5 மடங்கு பறக்கும் தூரம் மற்றும் அதிக தேடல் வரம்பைக் கொண்டுள்ளது. இது அதிக துல்லியத்திற்கும் ஒன்பது மடங்கு அதிக இயக்க ஆற்றலுக்கும் வழிவகுக்கிறது.


ஏவுகணைக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல்


1. பயண ஏவுகணைகள் (Cruise missiles) : பயண ஏவுகணைகள் (Cruise missiles) ஜெட் என்ஜின்களால் இயக்கப்படும் ஆளில்லா வாகனங்கள் ஆகும். இவற்றைத் தரை, வான் அல்லது கடல் தளங்களில் இருந்து ஏவ முடியும். பயண ஏவுகணைகள் தரையிலிருந்து குறைந்த தூரத்தில் பறக்கின்றன. அதேசமயம், பாலிஸ்டிக் ஏவுகணைகள் பரவளையப் பாதையைப் பின்பற்றுகின்றன. பயண ஏவுகணைகள் அவற்றின் சூழ்ச்சித்திறன் காரணமாக வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்ற முடியும். பிரம்மோஸ், டோமஹாக், காலிபர், ஏஜிஎம்-86 ஏஎல்சிஎம் மற்றும் ஜேஏஎஸ்எஸ்எம் ஆகியவை பயண ஏவுகணைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

அப்படியானால், பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic missiles) என்றால் என்ன?


பாலிஸ்டிக் ஏவுகணைகள், எறிபொருளின் இயக்கத்தைப் பயன்படுத்தி போர்க்குண்டுகளை ஒரு இலக்கிற்குச் செலுத்துகின்றன. அவை ஒப்பீட்டளவில் குறுகிய நேரத்திற்கு இயக்கப்படுகின்றன. அதன் பிறகு இயற்பியல் விதிகளின்படி தங்கள் இலக்கை நோக்கிச் செல்கின்றன. இந்த ஏவுகணைகள் அவற்றின் வரம்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பாலிஸ்டிக் ஏவுகணைகள் அணு அல்லது வழக்கமான போர்க்குண்டுகளைச் சுமந்து செல்ல முடியும். அக்னி I, அக்னி II, பிருத்வி I, பிருத்வி II மற்றும் தனுஷ் ஏவுகணைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.


2. ராம்ஜெட் (Ramjet) : பிரம்மோஸின் இரண்டாம் கட்டத்தில் திரவ ராம்ஜெட் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரோவின் கூற்றுப்படி, "ராம்ஜெட், ஸ்க்ராம்ஜெட் மற்றும் இரட்டை-முறை ராம்ஜெட் (Dual Mode Ramjet (DMRJ)) ஆகியவை பல்வேறு விண்வெளி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வரும் காற்றை உள்ளிழுக்கும் இயந்திரங்களின் மூன்று கருத்தாக்கங்கள் ஆகும்."


ராம்ஜெட் காற்றை உள்ளிழுக்கும் ஜெட் இயந்திரங்களில், சுழலும் அழுத்தி (compressor) இல்லாமல், வாகனம் முன்னோக்கிய இயக்கத்தைப் பயன்படுத்தி எரிப்புக்காக உள்ளே வரும் காற்றை அழுத்துகிறது. பின்னர், எரிபொருள் எரிப்பு அறைக்குள் செலுத்தப்படுகிறது. அங்கு அது சூடான அழுத்தப்பட்ட காற்றுடன் கலந்து பற்றிக்கொள்கிறது. உந்துவிசையை உருவாக்கத் தொடங்கும் வேகத்திற்கு அதை முடுக்கிவிட, ராக்கெட் உதவி போன்ற ஒரு துணை புறப்பாடு (assisted take-off) இதற்குத் தேவைப்படுகிறது.


இஸ்ரோவின் கூற்றுப்படி, ராம்ஜெட்டுகள் ஒலியின் வேகத்தைப் போல் மூன்று மடங்கு வேகமான, அதாவது மாக் 3 அளவிலான சூப்பர்சோனிக் வேகத்தில் மிகவும் திறமையாகச் செயல்படுகின்றன. மேலும், மாக் 6 (Mach) வரையிலான வேகத்தில் இயங்கக்கூடியவை. இருப்பினும், வாகனம் ஹைப்பர்சோனிக் வேகத்தை அடையும்போது ராம்ஜெட்டின் செயல்திறன் குறையத் தொடங்குகிறது,” என இஸ்ரோ மேலும் கூறுகிறது.


அப்படியானால், ஸ்க்ராம்ஜெட் (Scramjet) மற்றும் இரட்டை-முறை ராம்ஜெட் (Dual Mode Ramjet (DMRJ)) என்றால் என்ன?


ஸ்க்ராம்ஜெட்(Scramjet) : ஒரு சூப்பர்சோனிக் எரிப்பு ராம்ஜெட் அல்லது ஸ்க்ராம்ஜெட் என்பது ராம்ஜெட் எந்திரங்களின் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். ஏனெனில் இது ஹைப்பர்சோனிக் வேகத்தில் திறமையாகச் செயல்படுவதுடன், சூப்பர்சோனிக் எரிப்பையும் அனுமதிக்கிறது. இதில், முன்பக்கத்திலிருந்து காற்று உள்ளிழுக்கப்பட்டு, நடுவில் எரிபொருள் எரிந்து, பின்பக்கத்திலிருந்து வெளியேறும் புகை வாயு உந்துவிசையை உருவாக்குகிறது.



இரட்டை-முறை ராம்ஜெட் (DMRJ) : ஒரு இரட்டை-முறை ராம்ஜெட்டில் (DMRJ), ஜெட் இயந்திரமானது மாக் 4 முதல் 8 வரையிலான வேக வரம்பில் ஒரு ஸ்க்ராம்ஜெட்டாக (scramjet) உருமாறுகிறது. இதன் பொருள் என்னவென்றால், இது ஒலிக்குக் குறைவான மற்றும் ஒலிக்கு அதிகமான எரிப்பு அறை முறைகள் ஆகிய இரண்டிலும் திறம்படச் செயல்பட வல்லது.


பிரம்மோஸின் வகைகள்


சந்திப்பூர் சோதனைத் தளத்தில் முதல் வெற்றிகரமான ஏவுதலைத் தொடர்ந்து, பிரம்மோஸ் 2005-ல் கடற்படையிலும், 2007-ல் இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டது. மேலும், 2017-ல் இந்திய விமானப்படையின் சுகோய்-30 MKI போர் விமானத்துடன் முதல் வெற்றிகரமான ஏவுதல் நடைபெற்றது. தரை, வான், கடல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை இந்த ஏவுகணையின் பரந்த வகைப்பாடுகளாக இருந்தாலும், கடந்த 24 ஆண்டுகளில் நீட்டிக்கப்பட்ட வரம்புகள் மற்றும் வளர்ந்து வரும் உணர்திறன் திறன்களைக் கொண்ட எண்ணற்ற பதிப்புகள் சோதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.



1. கப்பல் சார்ந்த வகை : பிரம்மோஸ் ஏவுகணையின் கடற்படைப் பதிப்பை செங்குத்தாகவோ அல்லது சாய்வாகவோ, நகரும் மற்றும் நிலையான கடற்படைத் தளங்கள் இரண்டிலிருந்தும் ஏவ முடியும். கப்பல்களிலிருந்து, பிரம்மோஸ் ஏவுகணையைத் தனித்தனியாகவோ அல்லது ஒரேநேரத்தில் (salvo) எட்டு ஏவுகணைகள் வரை கொண்ட தொகுப்பாகவோ ஏவமுடியும். தொகுப்பாக ஏவும்போது, ​​ஏவுகணைகள் சுமார் இரண்டரை வினாடி இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாகச் சுடப்படுகின்றன. இத்தகைய தொகுப்புத் தாக்குதல்கள், நவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளைக் கொண்ட போர்க்கப்பல்களின் (frigates) குழுவைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை. பிரம்மோஸ் என்பது அத்தகைய இலக்குகளுக்கான ஒரு 'முதன்மையான தாக்குதல் ஆயுதம்' (prime strike weapon) ஆகும். இது நீண்ட தூரங்களில் உள்ள கடற்படை மேற்பரப்பு இலக்குகளைத் தாக்கும் திறனை கணிசமாக அதிகரிக்கிறது.


இந்தியக் கடற்படை 2005-ம் ஆண்டு முதல் தனது முன்னணிப் போர்க்கப்பல்களில் பிரம்மோஸைப் பயன்படுத்தத் தொடங்கியது. மேலும், இது ரேடார் எல்லைக்கு அப்பால் உள்ள கடல்சார் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இந்தியக் கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ். ராஜ்புத், பிரம்மோஸைப் பயன்படுத்திய முதல் கப்பலாகும். அதன் பின்னர் இது மற்ற போர்க்கப்பல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


2. தரைவழி அமைப்பு : தரைவழி பிரம்மோஸ் அமைப்பில் நான்கு முதல் ஆறு நகரும் தன்னாட்சி ஏவுகணை ஏவுதளங்கள் (mobile autonomous launchers) உள்ளன. ஒவ்வொரு ஏவுதளத்திலும் மூன்று ஏவுகணைகள் உள்ளன. அவற்றை ஒரேநேரத்தில் மூன்று வெவ்வேறு இலக்குகளை நோக்கி வெவ்வேறு உள்ளமைவுகளில் ஏவ முடியும். இந்தியாவின் நில எல்லைகள் நெடுகிலும் பல பிரம்மோஸ் பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


பிரம்மோஸின் தரைவழித் தாக்குதல் பதிப்பு, 2.8 மாக் (Mach) வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. மேம்படுத்தல்களுக்குப் பிறகு, இது 400 கிலோமீட்டர் வரையிலான தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயண வரம்பு மற்றும் 5 மாக் வரையிலான வேகம் கொண்ட மேம்பட்ட பதிப்புகளின் உருவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. பிரம்மோஸின் தரைவழி அமைப்புகள், அணு, உயிரியல் மற்றும் இரசாயன (Nuclear, Biological, and Chemical (NBC)) பாதுகாப்புடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறையைக் கொண்டுள்ளன. பிரம்மோஸின் தரைத் தாக்குதல் பதிப்பு 2007-ல் இந்திய ராணுவத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.


3. வான்வழி ஏவுதல் பதிப்பு : பிரம்மோஸ் வான்வழி ஏவப்படும் குரூஸ் ஏவுகணை (Air-Launched Cruise Missile (ALCM)) இந்தியாவின் முன்னணி போர் விமானமான சுகோய்-30 MKI-ல் பொருத்தப்பட்டுள்ள மிகவும் கனமான ஏவுகணையாகும். நவம்பர் 2017-ல், வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு கடல்சார் இலக்கைத் தாக்க, இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் முதன்முறையாக வெற்றிகரமாகப் பறக்கவிட்டுச் சோதிக்கப்பட்டது. அதன் பின்னர் பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது. 2019-ல் நடத்தப்பட்ட சோதனைகளில், பிரம்மோஸ் வான்வழி ஏவப்படும் குரூஸ் ஏவுகணை (Air-Launched Cruise Missile (ALCM)), பகல் அல்லது இரவு என எல்லா நேரங்களிலும், அனைத்து வானிலை நிலைகளிலும், நீண்டதூரத்திலிருந்து தரைத் தாக்குதல் மற்றும் கப்பல் எதிர்ப்புத் திறனைச் சரிபார்த்து உறுதிப்படுத்தியது.


4. நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் பதிப்பு : இந்தப் பதிப்பை நீரின் மேற்பரப்பிலிருந்து சுமார் 50 மீட்டர் ஆழத்திலிருந்து ஏவ முடியும். கொள்கலனில் சேமிக்கப்பட்ட இந்த ஏவுகணை, ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் அழுத்தக் கூட்டில் (pressure hull) இருந்து செங்குத்தாக ஏவப்படுகிறது. மேலும், நீருக்கடியில் மற்றும் நீருக்கு வெளியே பறப்பதற்கு வெவ்வேறு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. இந்த பதிப்பு முதன்முதலில் மார்ச் 2013-ல் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அப்பால் உள்ள ஒரு நீருக்கடியில் அமைக்கப்பட்ட தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


5. எதிர்கால வடிவமான பிரம்மோஸ்-என்ஜி : பிரம்மோஸின் எதிர்கால பதிப்பான பிரம்மோஸ்-என்ஜி (அடுத்த தலைமுறை) முதன்மையாக வான் மற்றும் கடற்படை பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பதிப்பு குறைக்கப்பட்ட பரிமாணங்கள் மற்றும் எடை, அடுத்த தலைமுறை மறைந்திருந்து தாக்கும் அம்சங்கள், மின்னணு எதிர்-எதிர் நடவடிக்கைகளுக்கு (Electronic Counter-Countermeasures (ECCM)) எதிரான அதிக செயல்திறன், நீருக்கடியில் போரிடுவதற்கான அதிக பன்முகத்தன்மை மற்றும் ஒரு டார்பிடோ குழாயிலிருந்து ஏவும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

Original article : What makes BrahMos different? Technology and Concepts behind it -Roshni Yadav

Share:

இந்திய நகரங்கள் கோடைக்காலத்தில் ஏன் மாசடைகின்றன? - முகமது ரஃபியுதீன், ஸ்நேகா மரியா இக்னேஷியஸ்

 கோடைக்கால காற்று மாசுபாடு, குளிர்கால மாசுபாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? வெப்பமான காலநிலையில் ஓசோனின் அளவு ஏன் அதிகரிக்கிறது? இந்திய நகரங்களில் PM10 துகள்களின் அளவு திடீரென அதிகரிக்கக் காரணம் என்ன? புழுதிப் புயல்கள் காற்றின் தரத்தை எவ்வாறு பாதிக்கின்றன? மனிதச் நடவடிக்கைகள் கோடைக்கால காற்று மாசுபாட்டை எவ்வாறு தீவிரப்படுத்துகின்றன? கோடைக்கால காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட நகரங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?


தற்போதைய  செய்தி:


மார்ச் மாதத்தில், தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (Capital Region and Adjoining Areas (CAQM)), தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (Graded Response Action Plan (GRAP)) கீழ் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ரத்து செய்தது. இது டெல்லியில் நிலவிய குளிர்கால காற்று மாசுபாடு முடிவுக்கு வந்ததை  அனைவருக்கும் உணர்த்தியது.



ஒரு மாதம் கழித்து, வெப்பநிலை உயர்ந்ததால், கோடைக்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் முதல் கட்டத்தை அது மீண்டும் அமல்படுத்தியது. வட இந்தியா வெப்ப அலைகளால் தத்தளித்துக் கொண்டிருந்த மே மாதத்தில், அது சிறிது காலத்திற்கு ரத்து செய்யப்பட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.


கோடைக்காலத்தில் நகரங்களில் ஏன் மாசுபாடு ஏற்படுகிறது?


குறைவான வெப்பநிலை, குறைந்த காற்று வேகம், மற்றும் ஆற்றுப்படுகை போன்ற நிலப்பரப்பு ஆகியவை காற்றில் உள்ள மாசுகளை பூமிக்கு மிக அருகில் சிக்க வைப்பதால், டெல்லி மற்றும் இந்தோ-கங்கை சமவெளியும் குளிர்கால புகை மூட்டதிற்கு (smog) பெயர் பெற்றவை.


கோடைக்காலத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பது, அவ்வப்போது ஏற்படும் இடியுடன் கூடிய மழை மாசுபடுத்தும் துகள்களை வெளிக்கொண்டு வருவது, மேலும் வெப்பநிலை உயர்வால் மாசுபடுத்திகள் வளிமண்டலத்தின் மேல்பகுதியுடன் ஒன்றாக இணைவது போன்ற வானிலை நிகழவுகள் காணப்படுகின்றன. இது போன்ற சாதகமான வானிலைக் காரணிகள் இருந்தபோதிலும், ஏப்ரல் 1 முதல் மே 31, 2026 வரையிலான காலகட்டத்தில், டெல்லியில் 54 நாட்கள் தினசரி சராசரி PM10 அளவுகள், 24 மணி நேரத்திற்கான தேசிய சுற்றுப்புற காற்றுத் தரத் தரநிலையான (National Ambient Air Quality Standard (NAAQS)) 100 ug/m³ என்ற வரம்பை மீறியுள்ளன. அதே வேளையில், 40 நாட்களில், நகரில் உள்ள குறைந்தது ஒரு 'தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையம்' (Continuous Ambient Air Quality Monitoring Station (CAAQMS)), 1 மணி நேர ஓசோன் தரநிலையான 180 ug/m³ என்ற வரம்பு தாண்டியுள்ளதாக பதிவு செய்துள்ளது.


பெரும்பாலான தலைப்புச் செய்திகளைப் போல் இல்லாமல், இது டெல்லிக்கானது மட்டுமல்ல. மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற பிற பெரிய நகரங்களிலும் இந்த கோடையில் இதே காலகட்டத்தில் மாசுபாடு அதிகரித்துள்ளது. PM10 மற்றும் ஓசோன் அளவுகள் பல்வேறு அளவுகளில் தேசிய தரநிலைகளைத் தாண்டியுள்ளன. வாகனப் புகை, சாலைத் தூசி, கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைப் புகை மற்றும் உள்ளூர் புயல்களால் ஏற்படும் தூசி போன்ற உள்ளூர் காரணிகளால் இந்த அதிகரிப்புகள் ஏற்பட்டன. உதாரணமாக, மும்பை கடந்த சில ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள், தூசி மற்றும் வாகனப் போக்குவரத்து காரணமாக அதிக PM10 மற்றும் ஓசோன்  அளவுகளை பதிவுசெய்து வருகிறது. சென்னை நகரில் PM10 அளவு வரம்பு மீறுவது அவ்வப்போது மட்டுமே நிகழ்ந்தாலும், அதிக வாகன நெரிசல் மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக அது ஓசோன் மாசுபாட்டிற்கான முக்கியக் காரணியாகவும்  உள்ளது.


கோடைகால காற்று மாசுபாடு குளிர்கால காற்று மாசுபாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


குளிர்கால மாசுபாடு பெரும்பாலும் நுண்ணிய PM 2.5 துகள்கள் அதிகமாக இருக்கும் நிலையில், கோடைக்கால காற்று மாசு சற்றுப் பெரிய PM10 துகள்கள் மற்றும் ஓசோனால் ஏற்படுகிறது.


வாகனங்கள், தொழிற்சாலைகள், கழிவுகளை எரித்தல், வேளாண்க் கழிவுகளை எரித்தல், கட்டுமானத் தளங்கள் மற்றும் சேதமடைந்த சாலைகள் ஆகியவை ஆண்டு முழுவதும் மாசுபாட்டிற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. குளிர்காலத்தில், வெப்பமூட்டுவதற்காக உயிரி எரிபொருள்கள் எரிக்கப்படுகின்றன. கோடைக்காலத்தில் ஏற்படும் புழுதிப் புயல்கள் PM10 அளவை அதிகரிக்கின்றன. அதே நேரம், வெப்பமும் சூரிய ஒளியும் அதிகமாக இருப்பதால் ஓசோன் வாயு உருவாக்கம் வேகமடைகிறது.


வெப்பமான வானிலையில் ஓசோன் அளவு ஏன் அதிகரிக்கிறது?


நேரடியாக வாகனப் புகை (tailpipe) அல்லது புகைபோக்கி (chimney) வழியாக ஓசோன் வளிமண்டலத்தை அடைவதில்லை. பெரும்பாலும் வாகனங்களிலிருந்து வரும் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப் புகை, வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற மூலங்களிலிருந்து வரும் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (volatile organic compounds (VOCs)) ஆகியவை கடுமையான சூரிய ஒளியுடன் ஒன்று சேரும் போது இது உருவாகிறது. இதனால், வெப்பமான நாட்களில் ஓசோன் உருவாவதற்கான சாதகமான சூழல் ஏற்படுகிறது. இந்த ஓசோன் மற்றும் காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் ஆகியவை சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை .


இந்தியாவில் PM10 அளவுகள் திடீரென உயரக் காரணம் என்ன?


இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் வெப்பமான சூழல், ஈரான் வரை நீளும் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியை உருவாக்குகிறது. சுற்றியுள்ள உயர் காற்றழுத்தப் பகுதிகளுடனான அதன் தொடர்பு, வெப்பமான மற்றும் காற்று வீசும் சூழலை உருவாக்குகிறது. இந்தக் காற்றுகள், 'லூ' எனப்படும் வெப்பக் காற்றுகள் உட்பட புழுதிப் புயல்களைக் ஏற்படுத்தக்கூடும். இந்த 'லூ' காற்றுகள், மேற்கு ஆசியா மற்றும் தார் பாலைவனத்திலிருந்து புழுதியை இந்தியா வழியாக வங்காள விரிகுடாவை நோக்கிக் கொண்டு செல்கின்றன. 2018-ஆம் ஆண்டில் வட இந்தியாவில் வீசிய கடுமையான புழுதிப் புயல்களின்போது காணப்பட்டதுபோல, இதுபோன்ற நிகழ்வுகள் PM10 அளவை நாட்கணக்கில்  அதிகரிக்க செய்யும்.


இந்திய துணைக்கண்டத்தில், ‘அந்தி’ (Andhi) என்று அழைக்கப்படும் குறுகிய கால, குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பாதிக்கும் தூசிப் புயல்களும் ஏற்படுகின்றன. இவை பொதுவாக சில மணி நேரங்களுக்குள் குறைந்துவிடும். இதுபோன்ற புயல்கள், இடியுடன் கூடிய மழை மேகங்களுடன் தொடர்புடைய வலுவான கீழ்நோக்கி வீசும் காற்று (downdraft) தரையைத் தாக்கும்போது உருவாகின்றன. இந்த காற்று தரையில் உள்ள தளர்வான தூசிகளை உயர்த்தி, அதிக வேகத்தில் எடுத்துச் செல்கிறது. ‘லூ’ (Loo) போன்ற தூசிப் புயல்கள் வட இந்தியாவில் பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால் மும்பை மும்பை மற்றும் ஹைதராபாத்  போன்ற நகரங்களில், இடியுடன் கூடிய மழையால் ஏற்படும் காற்றோட்டங்களின் காரணமாக தூசி நிறைந்த வானிலை நிகழ்வுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.


மனிதச் செயல்பாடுகள் இயற்கையான தூசியின் அளவை மேலும் மோசமாக்குகின்றன. கடுமையான குளிர்கால தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (Graded Response Action Plan (GRAP)) கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபிறகு, கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகள் பெரும்பாலும் மீண்டும் தொடங்குகின்றன. தள அளவில் போதுமான தூசிக் கட்டுப்பாடு இல்லாத நிலையில், இந்தச் செயல்பாடுகள் PM10 அளவுகளை அதிகரிக்கின்றன. மேலும், வறண்ட கோடை மாதங்களில், சேதமடைந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள், தளர்வான, தூசியை   காற்றுடன் மீண்டும் சேர்க்கின்றன.


கோடைக்கால காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட நகரங்கள் என்ன செய்யமுடியும்?


தூசியின் இயற்கையான மூலங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அவற்றைக் கணிக்க முடியும். டெல்லியின் காற்றுத் தர முன் எச்சரிக்கை அமைப்பு (Air Quality Early Warning System (AQEWS)), 2018-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான புழுதிப் புயல்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட புகைமூட்ட நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இதற்போது இது ஆண்டு முழுவதும் செயல்பட்டு வருகிறது. பின்னர் இது ஜெய்ப்பூர் மற்றும் மும்பை போன்ற பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பல மாசுபடுத்திகள் குறித்த கணிப்புகளைப் பல நாட்களுக்கு முன்பே வழங்குகிறது. அதன் அறிக்கை டெல்லிக்கான விரிவான வானிலை தகவல்களையும், 140 இந்திய நகரங்களுக்கான மூன்று நாள் காற்றுத் தரக் குறியீட்டுக் கணிப்புகளையும் வழங்குகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையமும் (IMD) ஒரு நாளில் பலமுறை தேசிய வானிலை முன்னறிவிப்பு அறிக்கைகளை வெளியிடுகிறது. புழுதிப் புயல்கள், ஓசோன் மற்றும் மோசமான காற்றின் தரம் குறித்து உள்ளூர் எச்சரிக்கைகளை வெளியிட அதிகாரிகள் இந்த அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் குடிமக்கள் அவற்றின் பாதிப்பைக் குறைக்க முடியும்.

கட்டுப்படுத்தக்கூடிய இயற்கை அல்லாத மூலங்களைப் பொறுத்தவரை, நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. குளிர்காலம் அல்லாத காலங்களிலும் கட்டுமானத் தளங்களுக்குத் தீவிரமான தூசி மேலாண்மை தேவைப்படுகிறது.


ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றம் (Council on Energy, Environment and Water (CEEW)) நடத்திய ஓர் ஆய்வில், கட்டுமானத் தளங்களில் கனரக வாகனங்களின் இயக்கத்தைக் குறைப்பதன் மூலமே உள்ளூர் நுண்துகள்களின் அளவைக் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றம் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட பிருஹன்மும்பை மாநகராட்சியின் (Brihanmumbai Municipal Corporation (BMC)) காற்றுத் தர முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு (Air Quality Decision Support System (AQDSS)), கட்டுமானத் தளங்களைக் கண்காணிக்க உதவுகிறது. மும்பையில், 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 1,000-க்கும் மேற்பட்ட தளங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இது ஏற்கனவே உதவியுள்ளது.


ஓசோனைக் குறைப்பதற்கு, தூய்மையான போக்குவரத்து, சிறந்த ஒருங்கிணைப்பு, கரைப்பான்கள், வண்ணப்பூச்சுகள், எரிபொருள் எரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (volatile organic compounds (VOCs)) உமிழ்வுகளைக் குறைக்க வேண்டும். சந்திப்புகளில் காத்திருக்கும்போது வாகனங்களை அணைத்து,  இயக்குவதால் ஏற்படும் உமிழ்வுகளைக் குறைக்குமாறு ஓட்டுநர்களை வலியுறுத்தும் டெல்லி அரசின் 'சிவப்பு விளக்கு எரியும்போது, வண்டியை அணை' (Red Light On, Gaadi Off) பிரச்சாரம் போன்ற எளிமையான நடவடிக்கைகள்கூட ஓசோன் உருவாவதைக் குறைக்க முடியும். ஆனால், இந்திய நகரங்களுக்கு இன்னும் நீடித்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.


2022-ஆம் ஆண்டு முதல் டெல்லியில் ஒரு கோடைக்கால செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற நகரங்களுக்கும், வானிலை முன்னறிவிப்பு, பொது சுகாதார ஆலோசனைகள், கட்டுமானத் தூசிக் கட்டுப்பாடு, சாலைப் புழுதி மேலாண்மை மற்றும் ஓசோனை உருவாக்கும் மாசுகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இது போன்ற திட்டங்கள் தேவைப்படுகிறது. கோடைக்காலத்தில் சில மாசுபடுத்திகள் குளிர்காலத்தைவிட வேகமாக சிதறிச் செல்லலாம். ஆனால், அதிக வெப்பமும் சூரிய ஒளியும்  காற்று மாசுபாட்டு இரசாயன மாற்றங்களை உருவாக்குகின்றன. எனவே, இந்திய நகரங்கள் குளிர்காலத்தையும் கோடைக்காலத்தையும் முக்கியமானதாகக் கருதி, இரண்டு பருவங்களுக்கும் ஏற்றவாறு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்.


முகமது ரஃபியுத்தீன் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றத்தின் திட்டத் தலைவராகவும், சினேகா மரியா இக்னேஷியஸ் திட்ட இணை உறுப்பினராகவும் உள்ளனர்.


Original article : Why do Indian cities get polluted in summer? -Mohammad Rafiuddin, Sneha Maria Ignatious

Share:

மகிழ்ச்சியும் வேதனையும்: 6-வது தேசிய குடும்ப நல ஆய்வு தரவுகள் குறித்து..

 6-வது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மூலம் ஏற்பட்டுள்ள சுகாதார மேம்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இருப்பினும், தீர்க்கப்படாத சுகாதாரத் தேவைகளும் உள்ளன.


வெற்றியும் தோல்வியும் நேரத்தில் வந்தால், ​​அந்த வெற்றிகளைக் கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே சமயம், நிலைமையை ஆராய்ந்து, குறைபாடுகளை மதிப்பீடு செய்து, அவற்றை சரிசெய்யும் வகையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட 6-வது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகள் இதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. 2023-24-ஆம் ஆண்டிற்கான இந்தத்தரவுகள், இந்தியா அடைந்துள்ள சில முக்கிய முன்னேற்றங்களை வெளிக் காட்டுவதோடு, உரியவகையில் கவனிக்கப்படாமல் விட்டால் எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய சில பலவீனங்களையும் சுட்டிக்காட்டுகின்றன. மிக முக்கியமான முன்னேற்றங்கள் குழந்தைகள் சுகாதாரத் துறையில் காணப்பட்டன: குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு (Stunting) 17% குறைந்துள்ளது. கடுமையான உடல் மெலிவு (severe wasting) 32% குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் விகிதம் 90%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், 12-23 மாத வயதுடைய குழந்தைகளுக்கான முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு (Full Immunisation Coverage) 87%-க்கும் மேல் உயர்ந்துள்ளது. கூடுதலாக, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) 2.0 என்ற அளவில் நிலைபெற்றுள்ளதாகவும், இது 2.1 என்ற 'மாற்று நிலைக்கு' (replacement level) கீழே உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது போன்ற மிகவும் முக்கியமான துறைகளில், இறுதியாக ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது நம்பிக்கை அளிக்கும் ஒரு அறிகுறியாகும். பொதுத்துறையில் சேவைகளுக்கான அணுகல் அல்லது தரத்தின்மீது எந்தவிதமான சமரசத்தையும் செய்துகொள்ளாமல், அதேவேளையில் சேவை வழங்கலில் எந்தவிதமான தொய்வும் ஏற்படாமல், தற்போது அடைந்துள்ள இந்த முன்னேற்றங்களை வலுப்படுத்த வேண்டும். ஆனால், சுகாதார நிர்வாகிகள் இந்த நிலைமையின் மற்றொரு பக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 6-வது தேசிய குடும்ப நல ஆய்வின்படி, இந்தியா தற்போது “இரட்டை பொது சுகாதாரச் சுமை” (Dual Public Health Burden) என்ற நிலையை எதிர்கொள்கிறது. ஒருபுறம், உடல் பருமன் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்களிடம் உடல் பருமன் விகிதம் 22.9%-லிருந்து 27.3%-ஆகவும், பெண்களிடம் 24%-லிருந்து 30.7-ஆகவும் உயர்ந்துள்ளது. மறுபுறம், ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition) இன்னும் ஒரு பிரச்சினையாகவே தொடர்கிறது. இதனுடன், வாழ்க்கைமுறை நோய்கள் அதிகரிப்பதும் கவலைக்குரியதாக உள்ளது. மேலும், 6-வது தேசிய குடும்ப நல ஆய்வு, ஆறு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு வழங்கப்படும் முழுமையான தாய்ப்பாலூட்டல் (Breastfeeding) விகிதம் 5-வது தேசிய குடும்ப நல ஆய்வில் இருந்த 63.7%-லிருந்து 55.8%-ஆகக் குறைந்திருப்பதை காட்டுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கவும், ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யவும் தாய்ப்பால் மிகவும் முக்கியமானது.



உலகின் மிகப் பெரிய ஒரே காலகட்ட ஆய்வு (cross-sectional) குடும்பக் கணக்கெடுப்புகளில் ஒன்றான தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS), பொதுக் கொள்கைகளை வடிவமைப்பதற்கும், ஆதாரங்களின் அடிப்படையிலான நிர்வாக முறையை (evidence-based governance) முன்னெடுக்கவும் முக்கியமான கருவியாகக் கருதப்படுகிறது. மேலும், இது வளர்ச்சி குறியீடுகளை கண்காணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய குடும்ப நல ஆய்வு மூலம் உருவாக்கப்படும் தரவுகள் மிகவும் முக்கியமானவை. இதே காலகட்டத்தில் இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட பிற ஆய்வுகளின் தரவுகளும் இதே போன்ற போக்குகளை வெளிப்படுத்துகின்றன. மாதிரி பதிவேட்டு அமைப்பு (Sample Registration System (SRS)) மற்றும் தேசிய சுகாதார கணக்குகள் ஆய்வு (National Health Accounts Survey) ஆகியவை, வாழ்க்கைமுறை நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகள்   மீது போதிய கவனமும் நிதி ஒதுக்கீடும் இல்லாததை காட்டுகின்றன. இந்த நிலையை தொடர அனுமதிப்பதன் ஆபத்து, இந்தியா மக்கள் தொகை மாற்றத்தின் மூலம் வயதானோர் அதிகம் கொண்ட நாடாக மாறும் நிலை விரைவில் ஏற்பட்டடு விடும். தற்போது மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. இந்த கட்டத்தில் இன்னும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தொற்றாத நோய்களுக்கு (Non-Communicable Diseases (NCDs)) விரிவான பரிசோதனைத் திட்டங்களை அமைத்தல், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியததுவம் குறித்து நாடு முழுவதும் நடத்தை மாற்றத் தகவல் பரப்புதலை வலுப்படுத்தல், மேலும் அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அதிக வரி விதித்தல் ஆகியவை தொற்றாத நோய்களின் சுமையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும். மேலும், இந்த தொற்றாத நோய்கள் (NCDs) ஒருமுறை ஏற்பட்டுவிட்டால், அவற்றை திறம்பட கையாளுவதற்காக கிராமம், நகரம் மற்றும் மாநகரம் என அனைத்து மட்டங்களிலும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும்.


Original article : ​Joy and pain: On the NFHS-6 data.

Share: