ஐ.நா. சாசனத்தின் 81 ஆண்டுகள்: இது எப்படி உருவானது? -அபிஷேக் நாயர்

ஜூன் மாதம் 26-ஆம் தேதி, 1945-ஆம் ஆண்டு, மற்றொரு உலகப் போர் உருவாவதைத் தடுப்பதற்காக 50 நாடுகள் இணைந்து ஒரு சாசனத்தில் (Charter) கையெழுத்திட்டன. இந்தச் சாசனத்தை ஆரம்பத்தில் எதிர்த்த நாடுகளும்கூட, காலப்போக்கில் இதில் இணைந்து கையெழுத்திட்டன. இருப்பினும், அவர்கள் அன்று உருவாக்கிய அந்த ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations (UN)) கட்டமைப்பு இன்றுவரை பெரிய அளவில் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதன் காரணமாக, 21-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.


ஜூன் மாதம் 26-ஆம் தேதி, 1945-ஆம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள 'Veterans’ War Memorial' கட்டிடத்தில், 50 நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் கையெழுத்திட்டனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த சாசனம், 19 அத்தியாயங்களில் பரவியுள்ள 111 விதிகளைக் கொண்டதாகும்.


சர்வதேச அமைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட இந்த மாநாடு, ஜப்பானுக்கு எதிரான உலகப்போர் இன்னும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போதே, ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி கூட்டப்பட்டது. இந்த மாநாடு நடந்து கொண்டிருந்த பாதியிலேயே, அதாவது மே மாதம் 8-ஆம் தேதி ஜெர்மனி போரில் சரணடைந்தது.


இந்தச் சாசனம் ஜூன் மாதம் 25-ஆம் தேதி மாநாட்டில் இருந்த அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதற்கடுத்த நாள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது.





அன்று கையெழுத்திடப்பட்ட இந்த சாசனம், அதன் முதல் விதியின்படி                        (Article 1) நான்கு முக்கிய நோக்கங்களைக் கொண்டிருந்தது: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கு இடையே நட்பு உறவை வளர்த்தல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம் மற்றும் மனிதநேயப் பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை நாடுதல், மற்றும் இந்த இலக்குகளை நோக்கி நாடுகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாகச் செயல்படுதல் ஆகியனவாகும்.


அந்த சாசனத்தில் எதைப் பற்றியெல்லாம் குறிப்பிடவே இல்லையோ, அதுவும் சம அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. சுற்றுச்சூழல்,                  நிலையான வளர்ச்சி, காலநிலை, அணு ஆயுதங்கள், உலகளாவிய பெருந்தொற்றுகள் அல்லது இணையவழித் தாக்குதல் போர்முறை (Cyberwarfare) பற்றிய எந்தவொரு குறிப்பும் அதில் இடம்பெறவில்லை.


திட்டத்தை உருவாக்கிய அந்த உச்சிமாநாடு 


ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் (The UN Charter) திடீரென்று உருவானது அல்ல. அதன் அறிவுசார்ந்த வரலாறு, இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நடந்த பல உச்சிமாநாடுகள் மற்றும் பிரகடனங்களின் வழியாகவே வளர்ந்து வந்தது. ஆகஸ்ட் மாதம் 1941-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மற்றும் பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகியோர் 'அட்லாண்டிக் சாசனத்தில்' (Atlantic Charter) கையெழுத்திட்டபோதுதான், 'ஐக்கிய நாடுகள்' என்ற யோசனை முதன்முதலில் வடிவம் பெறத் தொடங்கியது. இது போருக்குப் பிந்தைய அமைதியான சர்வதேச ஒழுங்கிற்கான நேச நாட்டுப் படைகளின் (Allied powers) கூட்டுப் பிரகடனம் ஆகும்.


அக்டோபர் மாதம் 1943-ஆம் ஆண்டில் நடந்த மாஸ்கோ மாநாட்டில்     (Moscow Conference), அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து 'மாஸ்கோ பிரகடனத்தை' வெளியிட்டனர். உலக அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த                                  ஒரு பொதுவான சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சோவியத் யூனியனின் முதல் உறுதியான வாக்குறுதி இதுவாகும்..



அதே ஆண்டு நவம்பர் மாதம், ரூஸ்வெல்ட் மற்றும் சர்ச்சில் ஆகிய தலைவர்கள் கெய்ரோ மாநாட்டிற்காக (நவம்பர் 22-26, 1943) கெய்ரோவிற்கு பயணம் மேற்கொண்டனர். சீனாவின் சியாங் கே-ஷேக் உடன் நடந்த இந்த உச்சிமாநாட்டில், ஜப்பானுக்கு எதிரான நட்பு நாடுகளின் நிலைப்பாடு விவரிக்கப்பட்டது.                      மேலும், ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று கோரும் 'கெய்ரோ பிரகடனம்' வெளியிடப்பட்டு, ஆசியாவின் எதிர்காலம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இதற்கு அடுத்தபடியாக, இந்த மூன்று தலைவர்களும் தெஹ்ரான் மாநாட்டிற்காக (நவம்பர் 28 - டிசம்பர் 1, 1943) தெஹ்ரானில் மீண்டும் கூடினர். அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் (Big Three) ஆகிய மூன்று வல்லரசுத் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சந்தித்த முதல் மாநாடு ஆகும்.                          இங்கு ரூஸ்வெல்ட், உலக அமைதியை நிலைநிறுத்தும் ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்குவதற்கு ஸ்டாலின் மற்றும் சர்ச்சிலை ஒப்புக்கொள்ள வைத்தார்.


பிரெட்டன் வூட்ஸ் மாநாடு (Bretton Woods Conference) நடந்த அடுத்த மாதத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வாஷிங்டனில் உள்ள டம்பர்டன் ஓக்ஸ் (Dumbarton Oaks) என்ற இடத்தில் சந்தித்தனர். நாடுகள் அனைத்தும் இறையாண்மையுடன் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், பொதுச் சபை, பாதுகாப்புப் பேரவை மற்றும் செயலகம் ஆகியவற்றைக் கொண்ட "ஐக்கிய நாடுகள் சபை" (The United Nations) என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து விவாதித்தனர். இருப்பினும், பாதுகாப்புப் பேரவையின் மிக முக்கியமான 'வாக்களிப்பு முறை' குறித்த கேள்விக்கு அப்போது தீர்வு காணப்படாமல் இருந்தது.


அந்தக் குறைபாடு 1945-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த யால்டா மாநாட்டில் (Yalta Conference) சரி செய்யப்பட்டது. அங்கு சந்தித்த அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகிய மூன்று பெரும் நாடுகளின் தலைவர்கள்  தடையுரிமை அதிகார (Veto formula) வழிமுறையை இறுதி செய்தனர். இதுவே இன்றுவரை பாதுகாப்புப் பேரவையின் கட்டமைப்பைத் தீர்மானிப்பதாக உள்ளது.




அதன்பின்னர், இந்த அமைப்பை முன்னின்று நடத்திய அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளும், ஜெர்மனி அல்லது ஜப்பான் மீது போர் பிரகடனம் செய்திருந்த பிற நாடுகளை சான் பிரான்சிஸ்கோ மாநாட்டிற்கு அழைத்தன. இதில் ஐம்பது நாடுகள் பங்கேற்றன. 1942 பிரகடனத்தில் ஆரம்பத்திலேயே கையெழுத்திட்டிருந்த போலந்து (Poland) நாடு இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை, எனினும் பின்னர் கையெழுத்திட்டு அதன் 51-வது ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது.


பாதுகாப்புப் பேரவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் இதரப் பெரும்பாலான நாடுகளும் அதன் சாசனத்தை ஏற்று அங்கீகரித்ததைத் தொடர்ந்து, 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நாள் தற்போது 'ஐக்கிய நாடுகள் தினமாக' (United Nations Day) கொண்டாடப்படுகிறது.


ஐ.நா சாசனத்தின் விதிகள் 53 மற்றும் 107-ன்கீழ் (இவை பின்னர் "எதிரி நாட்டு விதிகள்" (Enemy State Clauses) என்று அழைக்கப்பட்டன), ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 'எதிரி நாடுகள்' என முத்திரையிடப்பட்டன. சட்டப்படி, எந்தவொரு ஐ.நா உறுப்பு நாடும் பாதுகாப்புப் பேரவையின் முன்அனுமதி இல்லாமலேயே இந்த நாடுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.


போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கைக் கட்டுப்படுத்தப்போகும் இந்த                   ஐ.நா சாசனத்தை உருவாக்குவதில், இரண்டாம் உலகப் போருக்குக் காரணமான முக்கிய மூன்று 'அச்சு நாடுகளுக்கு' (Axis powers - ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) எந்தப் பங்கும் இருக்கவில்லை. இத்தாலி 1935-ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவையும், ஜப்பான் 1931-ஆம் ஆண்டில் மஞ்சூரியாவைக் கைப்பற்றி 1937-ஆம் ஆண்டில் சீனாவையும் ஆக்கிரமித்தன. ஜெர்மனி 1938-ஆம் ஆண்டில் பிற நாடுகளைத் தன்னுடன் இணைக்கத் தொடங்கியது. இத்தகைய தொடர் ஆக்கிரமிப்புகள்தான் ஏற்கனவே இருந்த சர்வதேச நாடுகளின் அமைப்பை             (League of Nations) அழித்து, இந்த உலகப் போருக்குக் காரணமாக அமைந்தன.




எதிரி நாடுகளிலிருந்து உறுப்பு நாடுகளாக 


இரண்டாம் உலகப் போரில் தோற்ற அச்சு நாடுகளுக்கு (ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக நுழைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி, 1955-ஆம் ஆண்டு ஒரு "தொகுப்பு ஒப்பந்தத்தின்" ஒரு பகுதியாக இத்தாலி ஐநா சபையில் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் பாதுகாப்புச் சபை ஒரே நேரத்தில் பதினாறு நாடுகளை உறுப்பினர்களாக சேர்க்கப் பரிந்துரைத்தது. மேற்கத்திய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரச உடன்படிக்கையே இதுவாகும்; ஏனெனில், மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமாக இருந்த நாடுகள் ஐ.நா-வில் சேருவதைத் தடுக்க சோவியத் யூனியன் தனது 'தடுப்புரிமை' (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி அதுவரை தடுத்து வந்தது.


ஜப்பான் ஐ.நா-வில் சேருவதற்கு இன்னும் கூடுதல் காலம் எடுத்தது. 1950-களின் தொடக்கத்தில் சோவியத் யூனியன் ஜப்பானின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடர்ந்து தடுத்து வந்தது. 1956-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜப்பான் மற்றும் சோவியத் யூனியன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு, ஜப்பானின் ஐ.நா உறுப்பினர் சேர்க்கை முயற்சியை ஆதரிக்க சோவியத் யூனியன் ஒப்புக்கொண்ட பிறகே, டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி,                    1956-ஆம் ஆண்டு ஐ.நா சபை தொடங்கப்பட்டு பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.


சோவியத் ஒன்றியம், அன்றைய மேற்கு ஜெர்மனியை (Federal Republic of Germany) அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் கூட்டாளியாகவே பார்த்தது. அதேபோல, சோவியத் ஒன்றியத்தின் ஆதரவைப் பெற்றிருந்த கிழக்கு ஜெர்மனி (German Democratic Republic) தங்களோடு இணைவதையோ அல்லது தங்களது கூட்டணியில் சேருவதையோ அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இருதரப்பினருமே தங்களுக்கு எதிரே இருந்த மற்றொரு நாடான ஜெர்மனியை ஒரு சட்டவிரோதமான நாடாகவே கருதினர்.



மேற்கு ஜெர்மனி (ஜெர்மனி கூட்டாட்சிக் குடியரசு) மற்றும் கிழக்கு ஜெர்மனி (ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு) ஆகிய இரண்டு நாடுகளும் செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி, 1973-ஆம் ஆண்டு ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையில் சேர்க்கப்பட்டன.


அதிகரித்து வரும் முக்கியத்துவமின்மை மற்றும் சீர்திருத்தம் குறித்த கேள்வி 


காசா (Gaza) மற்றும் உக்ரைனில் (Ukraine) நடந்து வரும் போர்கள்,                       ஐநா சபையின் கூட்டுப் பாதுகாப்பு என்ற வாக்குறுதிக்குக் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் நாடான ரஷ்யா உக்ரைன்மீது படையெடுத்தது.                 அதே நேரத்தில் காசா போர் மிகப்பெரிய அளவில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் மட்டும், தடுப்புரிமை (Veto) அதிகாரம் பயன்படுத்தப்பட்டதால் ஏழு வரைவுத் தீர்மானங்கள் தோல்வியடைந்தன. இது 1986-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். அமெரிக்கா, காசா விவகாரத்தில் மூன்று முறை தனது தடுப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அதே நேரத்தில் ரஷ்யா, காசா, உக்ரைன், சூடான் மற்றும் விண்வெளி தொடர்பான தீர்மானங்களின் மீது நான்கு முறை தனது மறுப்பாணை அதிகாரத்தைப் பயன்படுத்தியது.


ஐக்கிய நாடுகள் சபை எந்த ஒரு சாசனத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதோ, அதை நிலைநிறுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக இன்று பல ஆய்வாளர்களும் உறுப்பு நாடுகளும் கூறுகின்றனர். ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் இன்றைய உலகிற்குப் பொருந்தாத, காலாவதியான, அநீதியான மற்றும் செயலற்ற ஒரு அமைப்பு என்று சாடியுள்ளார். மேலும் சூடான், காசா மற்றும் உக்ரைன் போன்ற பகுதிகளில் நடக்கும் பெரிய அளவிலான போர்களை நிறுத்துவதில் இந்த அமைப்பு தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




ஐநா பாதுகாப்புச் சபையின் 'தடுப்புரிமை' (Veto) அதிகாரம் என்பது, தொடக்கத்தில் உலகின் முன்னணிப் வல்லரசு நாடுகளை ஐநா அமைப்போடு தொடர்ந்து பிணைத்து வைத்திருப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது.                  இருப்பினும், அதற்கு மாறாக, அது இன்று ஐநாவின் அவசர நடவடிக்கைகளைத் தடுக்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது. 1945-ஆம் ஆண்டிலிருந்து இந்த மறுப்பாணை அதிகாரம் ஏறக்குறைய 300 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 1963-ஆம் ஆண்டில், பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து பத்தாக உயர்த்தப்பட்டது. பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அதில் செய்யப்பட்ட ஒரே கட்டமைப்பு மாற்றம் இதுமட்டுமே ஆகும்.


ஐநா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் அப்படியே இருக்கிறார்கள். இன்றைய மக்கள்தொகை, உலகப் பொருளாதாரம் அல்லது புவிசார் அரசியல் நிதர்சனங்களை இந்த அமைப்பு பிரதிபலிக்கவில்லை என்றும், இது 1945-ஆம் ஆண்டின் பழைய உலக அதிகாரப் சமநிலையின் எஞ்சிய அடையாளம் என்றும் இப்போது விமர்சிக்கப்படுகிறது.


தன்னுடைய பரப்பளவு, உலகளாவிய பங்களிப்புகள் மற்றும் ஜனநாயக மதிப்புகளின் காரணமாகத் தனக்கு ஒரு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்று இந்தியா வாதிடுகிறது. ஐநா பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்பினராக இந்தியா ஏற்கனவே எட்டு முறை பணியாற்றியுள்ளது. பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து, 80 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட ஒரு சபை இன்றைய நவீன உலகிற்குப் பொருந்தாது என்று இந்தியாவும் தனது கருத்தைப் பதிவு செய்கிறது.


உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, ஐநா அமைப்பிற்கு நீண்டகாலமாக வழங்கி வரும் பங்களிப்புகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே தனக்குள்ள தலைமைப் பண்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்தியா இந்த நிரந்தர இடத்தைக் கோருகிறது. ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் நான்கு நாடுகள் இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கின்றன. ஆனால், சீனா மட்டுமே இதை எதிர்க்கும் ஒரே நிரந்தர நாடாக உள்ளது. இருப்பினும், நிரந்தர இடத்திற்கான இந்த விவாதம் என்பது ஒரு பெரிய பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே ஆகும்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், உலகளாவிய பெருந்தொற்றுகள் அல்லது இணையவழித் தாக்குதல் போர்முறை போன்ற நவீனப் பிரச்சினைகளை உள்ளடக்க ஐநா சாசனம் இதுவரை திருத்தப்படவில்லை. காலநிலை மாற்றம், பெருந்தொற்றுகள், பெருமளவிலான மக்கள் இடப்பெயர்வு மற்றும் அணுஆயுதப் பரவல் உள்ளிட்ட இன்றைய மிகப்பெரிய உலகளாவிய சவால்கள் எதுவுமே, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த ஐநா சாசனம் எழுதப்பட்டபோது கற்பனைகூடச் செய்து பார்க்கப்படவில்லை.


ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை சாசனத்தை மாற்றி எழுதுவதற்குப் பதிலாக, அதன் அசல் கட்டமைப்புடன் புதிய உடன்படிக்கைகளையும் பிரத்யேக அமைப்புகளையும் உருவாக்குவதன் மூலமாகவே இந்த புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.


அபிஷேக் நாயர், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் பயிற்சிப் பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.


Original Link: 81 years of the UN Charter: How did it come about?

Share:

புதிய வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட விதிகளும் இந்தியாவில் மதமாற்றம் குறித்த வரலாற்று விவாதமும் -ராம் மாதவ்

வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட (Foreign Contribution (Regulation) Act (FCRA)) விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் வெளியிட்டது.                               இந்த விதிகளின்படி, வெளிநாட்டு நிதியுதவிகளை வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ, புனித நூல்களை அச்சிடுவதற்கோ மற்றும் டிஜிட்டல் மயமாக்குவதற்கோ, ஆன்மீகப் பயணிகளுக்கு வசதிகளை உருவாக்குவதற்கோ பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.


வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (FCRA) புதிய விதிகளை இந்த வாரத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய விதிகளின்படி, வெளிநாட்டு நிதியைக் கொண்டு வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும், புனித நூல்களை அச்சிடுவதற்கும் மற்றும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும், ஆன்மீகப் பயணிகளுக்கான வசதிகளை உருவாக்குவதற்கும், பொது அன்னதானக் கூடங்களை நடத்துவதற்கும், மற்றும் உள்ளூர் மற்றும் பழங்குடியினரின் வழிபாட்டு முறைகளை ஊக்குவிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டு நிதியை மதமாற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு இந்த விதிகள் முற்றிலும் தடை விதிக்கின்றன.


இந்தச் சட்டத் திருத்தங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அவை இந்தியா மற்றும் அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) முன்மொழியப்பட்ட மாற்றங்கள், சமீபத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது ஒரு முக்கியத் தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்தன.                   இந்த விவாதம் வாஷிங்டனில் (Washington) உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடம் (Capitol Hill) வரை எதிரொலித்தது. அங்கிருக்கும் செனட் வெளியுறவு உறவுக் குழுவின் தலைவரான ஜேம்ஸ் ரிஷ், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் மனித உரிமைகளை மீறும் நாடுகளைச் சுட்டிக்காட்ட அமெரிக்கா ஒருபோதும் தயங்காது என்று எச்சரித்தார். 


மத மாற்றங்கள் பற்றிய விவாதங்கள் ஆங்கிலயேர் ஆட்சியின் காலனித்துவக் காலத்திலிருந்தே நடந்து வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, ஒடிசா (1967), மத்தியப் பிரதேசம் (1968) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (1978) போன்ற மாநிலங்கள் மதமாற்றத் தடைச் சட்டங்களை (Anti-conversion laws) அறிமுகப்படுத்தின.                 அதன் பிறகு, சத்தீஸ்கர் (2000), குஜராத் (2003), இமாச்சலப் பிரதேசம் (2006), ஜார்க்கண்ட் (2017), உத்தராகண்ட் (2018), உத்தரப் பிரதேசம் (2021), ஹரியானா (2022), ராஜஸ்தான் (2025) மற்றும் மகாராஷ்டிரா (2026) ஆகிய மாநிலங்களிலும் இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.


பல கிறிஸ்தவ அமைப்புகள், தங்களின் மதத்தைப் "பரப்பும் உரிமை" (Right to propagate) என்பதில் மற்றவர்களைத் தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கான உரிமையும் அடங்கும் என்று வாதிடுகின்றனர். இருப்பினும், ரெவரெண்ட் ஸ்டெனிஸ்லாஸ் vs மத்தியப் பிரதேச அரசு (Rev. Stainislaus vs State of Madhya Pradesh (1977)) வழக்கின்போது, உச்சநீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு-25 (Article 25) மக்களுக்குத் தங்களுக்குப் பிடித்த மதத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறதே தவிர, மற்றவர்களை மதமாற்றம் செய்யும் உரிமையை வழங்கவில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அரசாங்கத்தின் தற்போதைய இந்த நடவடிக்கை, உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பைப் பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சுதந்திரத்திற்கு முன்பு, ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களும் சீர்திருத்தவாதிகளும் மதமாற்றங்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பினர். மார்ச் மாதம் 1931-ஆம் ஆண்டில் அளித்த ஒரு நேர்காணலில் காந்தி, "வெளிநாட்டு மதபோதகர்கள் (Missionaries) தங்களை வெறும் மனிதநேயப் பணிகளுடனும், ஏழைகளுக்கு உதவுவதுடனும் மட்டுமே நிறுத்திக்கொண்டால், அவர்கள் இங்கு தங்கலாம். ஆனால், அவர்கள் மக்களை மதமாற்றம் செய்வதற்காக மருத்துவ உதவியையோ அல்லது கல்வியையோ ஒரு கருவியாகப் பயன்படுத்தினால், நான் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்வேன்" என்று குறிப்பிட்டார். 1935 மே மாதம் 11-ஆம் தேதி, 'Harijan' இதழில் வெளியான மற்றொரு நேர்காணலில் காந்தி, "எனக்குச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இருந்தால், நான் நிச்சயமாக அனைத்து மதமாற்றங்களையும் தடுத்து நிறுத்துவேன்; ஏனெனில் அவை தேவையற்ற மோதல்களை உண்டாக்குகின்றன" என்று கூறினார்.


இருப்பினும், 1946-ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு ஒரு உறுதியை அளித்தார். அவர், "கிறிஸ்தவர்கள் இந்த நாட்டின் மூன்றாவது பெரிய மதக் குழுவாக இருக்கிறார்கள்; எனவே அவர்களின் மத அல்லது பிற உரிமைகள் மறுக்கப்படும் என்று நினைப்பது நியாயமற்றது" என்று கூறினார். அரசியலமைப்பு நிர்ணய சபையில், மதத்தைப் பரப்புவதற்கான உரிமை மற்றும் மதமாற்றங்கள் போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். இதற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் சுதந்திரம் உண்டு என்று உறுதியளித்திருந்தது. ஆனால், மதபோதகர்கள் தங்களுக்கு மதத்தைப் பரப்புவதற்கான உரிமை வேண்டும் என்றும், அதில் மற்றவர்களைத் தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கான உரிமையும் அடங்கும் என்றும் கோரினர்.                     கே. எம். முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர் மற்றும் சி. ராஜகோபாலாச்சாரி போன்ற தலைவர்கள் 'மதமாற்ற உரிமை' என்ற யோசனையை வலுவாக எதிர்த்தனர். சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத் போன்ற தலைவர்கள்கூட, மதபோதகர்கள் பெருமளவிலான மதமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வாதாடினர். இருப்பினும், இந்த கருத்துக்களுக்கு அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. இதன் விளைவாக,                                  இந்திய அரசியலமைப்பின் 19-வது பிரிவில் (Article 19) "மதத்தைப் பரப்புவதற்கு" (to propagate religion) என்ற சொற்றொடர் இறுதியாகச் சேர்க்கப்பட்டது.


கிறிஸ்தவ மதபோதகர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. மத்தியப் பிரதேச அரசால் 1954-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 'நியோகி குழு' (Niyogi Committee), அந்த மாநிலத்தின் பழங்குடியினப் பகுதிகளில் மதபோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.               அந்த அறிக்கையின் முக்கியப் பரிந்துரைகள் பின்வருமாறு: மதமாற்றம் செய்வதையே தங்களின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ள மதபோதகர்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும்; மேலும், வெளிநாட்டு மதபோதகர்கள் இந்தியாவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும். வெளிநாட்டினர் இங்கு மதப்பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவும், சட்டவிரோத வழிகளில் மதமாற்றம் நடப்பதைத் தவிர்க்கவும் ஏதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். மேலும், தவறான வழிகளில் நடக்கும் மதமாற்றங்களைக் கட்டுப்படுத்த முறையான சட்ட நடவடிக்கைகள் இயற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.


ஆனால், அப்போதைய நேரு அரசாங்கம் இந்த நியோகி குழுவின் குற்றச்சாட்டுகளையும் பரிந்துரைகளையும் நிராகரித்தது. இப்போது, 70 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அரசாங்கம் அந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


கட்டுரையாளர், ‘India Foundation’ அமைப்பின் தலைவராகவும், பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பிலும் உள்ளார்.


Original Link: New FCRA Rules and the Historical Debate on Religious Conversion in India.

Share:

அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, தொகுதி மறுவரையறை மற்றும் வரிப் பகிர்வு தொடர்பான சவால்களுக்கு ஒரு தீர்வாகாது. -சி ரங்கராஜன் மற்றும் ஜே கே சதியா

எந்தவொரு மாநிலமும் தங்களது பிறப்பு விகிதத்தை (Fertility rate) அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் இன்னும் நிலையான மக்கள் தொகையை எட்டும் இலக்கிலிருந்து வெகு தொலைவில்தான் இருக்கிறோம். மக்கள்தொகை பற்றாக்குறை ஒன்றும் மாநிலங்களின் அதிவேக வளர்ச்சிக்குத் தடையாக இல்லை.


சமீபத்தில், மாதிரி பதிவு முறை (Sample Registration System (SRS)) மற்றும் ஆறாவது சுற்று தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (National Family Health Survey (NFHS-6)) ஆகியவை தங்களது ஆய்வு முடிவுகளை வெளியிட்டன. இந்த முடிவுகள் இந்தியாவின் எதிர்கால மக்கள்தொகை அளவைப் பற்றி என்ன சொல்கின்றன? வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, 2017-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் (Total Fertility Rate (TFR)) 1.9-ஆக இருக்கும் என்று கணித்ததுடன், நாட்டின் மக்கள் தொகை 2048-ஆம் ஆண்டில் 160 கோடியை எட்டி உச்சத்தைத் தொடும் என்றும் கணித்திருந்தது.                   இருப்பினும், மாதிரி பதிவு முறையின் (SRS) அறிக்கையின்படி இந்தியாவின்               பிறப்பு விகிதம் (TFR) 2024-ஆம் ஆண்டிலேயே 1.9 என்ற அளவை எட்டிவிட்டதால், முந்தைய கணிப்பு மிகவும் முன்கூட்டியே நடந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. தொடர்ந்து மக்கள்தொகை கணிப்புகளைப் புதுப்பித்து வரும் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை பிரிவு, இந்தியாவின் மக்கள் தொகை 2062-ஆம் ஆண்டில்                     170 கோடியை எட்டி உச்சத்தைத் தொடும் என்றும், அதன் பிறகு குறையத் தொடங்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. தற்போதைய புதிய தரவுகளின் அடிப்படையில், இதுவே நடப்பதற்கு அதிக சாத்தியமுள்ள ஒன்றாகத் தெரிகிறது.


முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருப்பதால், பல சவால்கள் இன்னும் நீடிக்கவே செய்கின்றன. பொதுவாக பிறப்பின் போது இயல்பான பாலின விகிதம் (Normal sex ratio) 955-ஆக இருக்க வேண்டும். ஆனால், 2022-24-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த பிறப்பு பாலின விகிதம் (Sex Ratio at Birth (SRB)) 918-ஆக மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்ந்து "பெண் குழந்தைகள் பற்றாக்குறை" நிலவுவதைக் காட்டுகிறது. இதற்கு முன்னதாக 2018-20-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இது 907-ஆக இருந்தது. தற்போதைய முன்னேற்ற வேகத்தின்படி பார்த்தால், இயல்பான அளவை எட்டுவதற்கே இன்னும் சுமார் 13 ஆண்டுகள் ஆகும். மேலும், இந்தப் பெண் குழந்தைகள் பற்றாக்குறை நிலை இன்னும்                 நீண்டகாலத்திற்குத் தொடர வாய்ப்புள்ளது.


மிகப் பெரிய கவலை என்னவென்றால், மாநிலங்களுக்கு இடையே உள்ள மக்கள்தொகை சார்ந்த இடைவெளிதான். ஒட்டுமொத்த இந்தியாவின் மொத்த  பிறப்பு விகிதம் (TFR) 1.9-ஆக இருக்கும் வேளையில், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 2.9 மற்றும் 2.6 என்ற மிக உயர்ந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன. தற்போதைய வீழ்ச்சி வேகம் இப்படியே தொடர்ந்தால், மக்கள்தொகை காலப்போக்கில் நிலைத்தன்மை அடைவதற்கான 'மாற்று நிலை பிறப்பு விகிதமான' (Replacement fertility rate) 2.1 என்ற அளவை எட்டுவதற்கு பீகாருக்கு சுமார் 18 ஆண்டுகளும், உத்தரப் பிரதேசத்திற்கு சுமார் 10 ஆண்டுகளும் ஆகும்.


இதற்கு ஒரு சாத்தியமான தீர்வு என்னவென்றால், அதிக  பிறப்பு விகிதம் (fertility rate) கொண்ட மாநிலங்களில் மக்கள்தொகை பெருக்கத்தை வேகமாகக் குறைப்பதும், அதேநேரத்தில் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட மாநிலங்களில் அதை அதிகரிக்குமாறு ஊக்குவிப்பதும் ஆகும். பெண்களின் முன்னேற்றமும், பிறப்புக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் எளிதாகக் கிடைப்பதுமே பிறப்பு விகிதம் குறைவதற்குக் காரணமான முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.                          இந்தியா முழுவதும், ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 73.7% பேர் பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை பீகாரில் (64.1%) மற்றும் உத்தரப் பிரதேசத்தில் (70.1%) மிகவும் குறைவாக உள்ளது. அதேபோல், இந்தியா முழுவதும் உள்ள பெண்களில் 46.4% பேர் குறைந்தது 10 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்துள்ளனர். ஆனால், பீகாரில் 33.1% பெண்களும்,                   உத்தரப் பிரதேசத்தில் 42.5% பெண்களும் மட்டுமே 10 ஆண்டுகள் படிப்பை முடித்துள்ளனர். 15 முதல் 49 வயதுடைய திருமணமான பெண்களிடையே ஏதேனும் ஒரு பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்துவது தேசிய அளவில் 69.1%-ஆக உள்ளது. ஆனால், இது பீகாரில் வெறும் 59.3%-ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் 62.4%-ஆகவும் மட்டுமே இருக்கிறது. பெண்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமானால், இந்த மாநிலங்களில் பெண்களின் கல்வி, அவர்களின் முன்னேற்றம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் அவர்களுக்குக் கிடைப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


மிகக் குறைவான பிறப்பு விகிதம் உள்ள மாநிலங்களில்,                                     அதை அதிகரிப்பதற்கு என்ன செய்ய முடியும்? சமீபத்தில், ஆந்திரப் பிரதேசம் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்ளும் வகையில் ஒரு புதிய மக்கள்தொகைக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மூன்றாவது குழந்தை பிறப்பிற்கு ₹30,000 மற்றும் நான்காவது குழந்தை பிறப்பிற்கு ₹40,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், மூன்றாவது குழந்தைக்கு மாதந்தோறும் ₹1,000 ஊட்டச்சத்து உதவித்தொகை, 18 வயது வரை இலவசக் கல்வி மற்றும் நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு ஆகியவையும் இதில் வழங்கப்படுகின்றன. இருப்பினும், 1945-ஆம் ஆண்டு ஸ்வீடனில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துவரும் பிரச்சனை குறித்து ஆய்வு செய்த ஆல்வா மிர்டல், தனது "Nation and Family" என்ற புத்தகத்தில்,                   இது போன்ற ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


இருப்பினும், எந்தவொரு மாநிலமாவது தனது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இந்தியாவில், மாநிலங்களுக்கு இடையே மக்கள்தொகை வளர்ச்சியில் காணப்படும் வேறுபாடுகள், பொருளாதாரரீதியாக மட்டுமின்றி அரசியல்ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதில் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. ஏனெனில், எந்தவொரு மாநிலமும் தனது அரசியல் முக்கியத்துவத்தை இழக்க விரும்புவதில்லை. எனவே, இந்தச் சிக்கலுக்கு மக்கள்தொகைக் கொள்கையைத் தவிர்த்து, பிற வழிமுறைகளின் மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும்.


எந்தவொரு மாநிலமும் தங்களுடைய குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா இன்னும் மக்கள்தொகை நிலைத்தன்மையை அடைவதிலிருந்து சற்று தொலைவிலேயே உள்ளது. மக்கள்தொகை பற்றாக்குறை என்பது மாநிலங்களின் வேகமான வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு காரணி அல்ல. அதற்குப் பதிலாக, மக்கள்தொகையின் அளவு ஒரு மாநிலத்தின் அரசியல் செல்வாக்கைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். மாநிலங்களுக்கு மத்திய வரிகளைப் பகிர்ந்து அளிப்பதில், மக்கள்தொகையின் அளவு மற்றும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு ஆகிய இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டது.


இந்தியா தனது மக்கள்தொகையின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS), பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் மொத்த பிறப்பு விகிதத்தை (TFR), மாதிரி பதிவு முறையின் (SRS) மதிப்பீடுகளைவிடக் குறைவாக இருப்பதாகக் கணித்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியா தனது மக்கள்தொகை நிலைத்தன்மையை எதிர்பார்த்ததைவிட விரைவாகவே எட்டிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நாட்டின் மக்கள்தொகை குறித்து மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான தரவுகளைப் பெறுவதற்கு முறையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் அவசியமாகின்றன.


ரங்கராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PM-EAC) முன்னாள் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் ஆவார். சாதியா, இந்திய பொதுச் சுகாதார நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் ஆவார்.


Original Link: More children isn’t the answer to delimitation, tax challenges.

Share:

ஜூலை 1 முதல் அதிகரிக்கவுள்ள கடவுச்சீட்டுக் (Passport) கட்டணங்கள் : அரசு ஏன் தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளது?. -திவ்யா ஏ

2012-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, அரசாங்கம் கடவுச்சீட்டுக் கட்டணத்தைக் (passport fees) கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய கட்டண அமைப்பை விரிவாக விளக்கி, இந்த உயர்வுக்குப் பின்னணியில் உள்ள காரணங்களையும் எடுத்துரைக்கிறோம்.


வெளியுறவுத் துறை அமைச்சகம் அனைத்துப் பிரிவுகளுக்குமான கடவுச்சீட்டுக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் கட்டணங்களில் செய்யப்படும் முதல் பெரிய திருத்தம் இதுவாகும். இந்தப் புதிய விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.


கடவுச்சீட்டுகளைச் செயலாக்குதல், அச்சிடுதல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான நிர்வாகச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை ஈடுசெய்யும் விதமாகவே அரசு இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் (MEA) வெளியிடப்பட்ட, திருத்தப்பட்ட கடவுச்சீட்டுகள் (திருத்த) விதிகள்-2026 (Passports (Amendment) Rules), இன் படி, புதிய கடவுச்சீட்டு பெறுவதற்கும் அல்லது ஏற்கனவே உள்ளதை மீண்டும் பெறுவதற்கும் (reissue) பின்வரும் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை,


36 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டு : ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


60 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டு : ரூ. 2,000-லிருந்து ரூ. 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


36 பக்கங்கள் கொண்ட தட்கல் (Tatkaal) கடவுச்சீட்டு : ரூ. 3,500-லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


60 பக்கங்கள் கொண்ட தட்கல் (Tatkaal) கடவுச்சீட்டு : ரூ. 4,000-லிருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


இதற்கிடையில், 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் செய்யும் புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இருப்பினும், காணாமல் போன அல்லது சேதமடைந்த கடவுச்சீட்டை மீண்டும் பெற விரும்புவோருக்கு, கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. 36 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டு கட்டணம் ரூ. 5,000 முதல் ரூ. 7,500 வரையிலும், 60 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டு கட்டணம் ரூ. 6,000 முதல் ரூ. 8,500 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


அரசு இப்போது ஏன் கடவுச்சீட்டு (passport) விலையை உயர்த்தியுள்ளது?


அரசின் கடவுச்சீட்டு விண்ணப்ப இணையதளத்தில், கட்டண அமைப்புப் பிரிவின்கீழ், "கடவுச்சீட்டு சேவை திட்டம் நாடு முழுவதும் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு, கட்டண அட்டவணை மறுசீரமைக்கப்படும்" என்ற குறிப்பு உள்ளது.


எனவே, ஒரு நாள் முன்னதாக, ஜூன் 24 அன்று வெளியுறவு அமைச்சகம் கடவுச்சீட்டு சேவை தினத்தைக் கொண்டாடியபோது, ​​கடந்த 10 ஆண்டுகளில் கடவுச்சீட்டு வசதிகள் 77-லிருந்து 545 கடவுச்சீட்டு சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலக கடவுச்சீட்டு சேவை மையங்கள் அதிகரித்து, கடவுச்சீட்டு சேவைத் திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது என்றும் அறிவித்தது.



2025-ஆம் ஆண்டில் 1.5 கோடிக்கும் அதிகமான கடவுச்சீட்டு தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன என்றும், குடிமக்கள் இப்போது மையங்களில் சராசரியாக 45 நிமிடங்களுக்கும் குறைவாகவே செலவிடுகின்றனர் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது. வழக்கமான கடவுச்சீட்டு செயலாக்க நேரம் (காவல்துறை சரிபார்ப்பைத் தவிர்த்து) ஆறு வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மிகவும் பாதுகாப்பான, சிப் வசதியுள்ள மின்னணு கடவுச்சீட்டுகளின் வெற்றிகரமான மற்றும் தொடர்ச்சியான அறிமுகப் பணிகளையும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது.


2024-ஆம் ஆண்டு மே மாதம் அடுத்த தலைமுறை கடவுச்சீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியக் குடிமக்களுக்கு ஒரு கோடி மின்னணு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 10 கோடி கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் தற்போதுள்ள அனைத்து கடவுச்சீட்டுகளும் மின்னணு கடவுச்சீட்டுகளால் மாற்றப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அப்படியானால், நாம் யாருக்குக் கூடுதல் பணம் செலுத்துகிறோம்?


ஒரு மின்-ஆளுமைத் திட்டமாக, கடவுச்சீட்டு வழங்கும் முறையைச் சீரமைத்து டிஜிட்டல் மயமாக்குவதற்காக, 2010-ல் கடவுச்சீட்டு சேவா திட்டம் தொடங்கப்பட்டபோது, ​​அது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இந்த நவீன அமைப்பு, காவல்துறை அனுமதிகளை விரைவுபடுத்துவதற்கும் ஆவண மோசடியைத் தடுப்பதற்கும், பயோமெட்ரிக் தரவு மற்றும் டிஜிட்டல் சரிபார்ப்பு செயல்முறைகளை ஒருங்கிணைக்கிறது. மேலும், இந்தத்திட்டம் பாதுகாப்பான மைக்ரோசிப்களைக் கொண்ட அடுத்த தலைமுறை மின்-கடவுச்சீட்டுகளுக்கும் வழிவகுத்தது.


இருப்பினும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வலைத்தளத்தின்படி, கடவுச்சீட்டு சேவா திட்டம், கட்டமைத்து – உரிமையுடன் வைத்திருந்து – இயக்கி – பின்னர் அரசிடம் ஒப்படைக்கும் முறை' (Build-Own-Operate-Transfer (BOOT)) மாதிரியில் இயக்கப்படுகிறது. ஆரம்ப மூலதனச் செலவுகளைத் தனியார் நிறுவனங்களே ஏற்கிறார். இந்தத்திட்டத்திற்கு அரசாங்கம் முன்கூட்டியே நிதியளிப்பதில்லை. மாறாக, அது ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணங்களை நேரடியாக TCS-க்குச் செலுத்துகிறது. பின்னர், இந்தக் கட்டணங்கள் குடிமக்களால் செலுத்தப்படும் விண்ணப்ப மற்றும் செயலாக்கக் கட்டணங்களால் ஈடுசெய்யப்படுகின்றன.


வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரணீத் கவுர் மக்களவையில் அளித்த பதிலின்படி, அனைத்து கடவுச்சீட்டு சேவை மையங்கள் (PSK), மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள்/அஞ்சல் அலுவலகங்கள், காவல்துறை மற்றும் அஞ்சல் துறை ஆகியவற்றை இணைக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கி, ஒவ்வொரு சேவைக்கும் தனியார் நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் வகையில், கடவுச்சீட்டின் மூன்று பக்க சேவைகளை வெளிப்பணிக்கு விடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்   ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது.


இரண்டுகட்ட ஏல நடைமுறைக்குப் பிறகு மே 2008-ல் செயல்படுத்துவதற்கான சேவை வழங்குநராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மேற்கொண்ட முதலீட்டை, ஒவ்வொரு கடவுச்சீட்டிற்கும் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் மூலம், வழங்கப்படும் சேவைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மீட்டெடுக்க அனுமதிக்கப்பட்டது. இந்தச் சேவைக் கட்டணம் 27 கடுமையான சேவை வழங்கல் தரநிலைகளை (Service Delivery Levels) பூர்த்தி செய்வதைப் பொறுத்து இருக்கும். இந்த தரநிலைகள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்குகின்றன: வெளிப்புற மற்றும் உள்புற செயல்திறன் (External & Internal Efficiency), வெளிப்புற, உள்புற மற்றும் தொழில்நுட்ப செயல்பாட்டு திறன் (External, Internal & Technical Effectiveness), அலுவலகச் சூழல் மற்றும் வசதிகள் (Environment & Ambience), வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் சேவைத் தரம் (Customer Relations) ஆகும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்க்கு வழங்கப்படும் சேவைக் கட்டணம், கடவுச்சீட்டு சேவையின் தரம் மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.


Original Link: Passport fees to increase from July 1: Why the government has raised charges now.

Share:

பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) என்றால் என்ன? அமெரிக்கத் தலைமையிலான இந்த முன்னெடுப்பில் இந்தியா ஏன் இணைந்துள்ளது? - குஷ்பூ குமாரி

வாஷிங்டனில் நடைபெறும் 2-வது உச்சிமாநாட்டில், அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பில் இந்தியா கையெழுத்தியிட்ட நிலையில், பாக்ஸ் சிலிக்கா என்றால் என்ன, அது இந்தியாவிற்கு ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வோம். கனிமப் பாதுகாப்பு கூட்டாண்மை (MSP) குறித்தும்  தெரிந்து கொள்ளுங்கள்.


தற்போதைய செய்தி :


ஜூன் 25, 2026 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற 2-வது 'பாக்ஸ் சிலிக்கா' (Pax Silica) உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை வலுப்படுத்துவதற்கான நம்பகமான மற்றும் உறுதியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் அமெரிக்கத் தலைமையிலான முன்னெடுப்பில் இந்தியா மற்றும் 35 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த உச்சிமாநாட்டில் இந்தியாவின் சார்பில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் மற்றும் இந்தியத் தொழில் துறையின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பாக்ஸ் சிலிக்கா பற்றியும், இந்தியாவிற்கு அதன் முக்கியத்துவம் குறித்தும், முக்கிய தனிமங்களுடன் தொடர்புடைய முக்கிய கலைச்சொற்கள் பற்றியும் அறிந்துகொள்வோம்.


முக்கிய  அம்சஙகள்:


1. புது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த உச்சி மாநாட்டின் (AI Impact Summit) ஒரு பகுதியாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா இந்த முயற்சியில் இணைந்தது. 2-வது உச்சிமாநாட்டின் போது அர்ஜென்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து, சிலி, கோஸ்டா ரிக்கா, கிரீஸ், கஜகஸ்தான், பனாமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பாக்ஸ் சிலிக்கா முயற்சியில் இணைந்தன.

2. பாக்ஸ் சிலிக்கா என்பது, அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு ராஜதந்திர முயற்சி ஆகும். இதன் நோக்கம், பாதுகாப்பான, வளமான மற்றும் புதுமையை மையமாகக் கொண்ட சிலிக்கான் விநியோகச் சங்கிலியை (Supply Chain) உருவாக்குவதாகும். இந்த முயற்சி பின்வரும் துறைகளை கொண்டுள்ளது: முக்கிய கனிம வளங்கள் அவை: ஆற்றல் உள்ளீடுகள், மேம்பட்ட உற்பத்தி, குறைமின்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகும். இந்த முயற்சி டிசம்பர் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டபோது, ​​இந்தியா இதன் நிறுவனக் குழுவில் இடம் வகிக்கவில்லை.


3. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, “பாக்ஸ் சிலிக்கா” (Pax Silica) என்பது, பாக்ஸ் அமெரிக்கானா (Pax Americana) மற்றும் பாக்ஸ் ரோமானா (Pax Romana) போன்ற சொற்களில் காணப்படுவது போல, அமைதி, நிலைத்தன்மை மற்றும் நீண்டகால செழிப்பு என்ற லத்தீன் வார்த்தையான 'பாக்ஸ்' (pax) என்பதிலிருந்து பெறப்பட்டது. சிலிகா என்பது சிலிக்கான் ஆகச் சுத்திகரிக்கப்படும் ஒரு சேர்மமாகும். சிலிக்கான் என்பது, செயற்கை நுண்ணறிவு செயல்படுவதற்குத் தேவையான கணினி சிப்புகள் (Computer Chips) தயாரிப்பில் அடிப்படையாகப் பயன்படும் முக்கிய வேதியியல் தனிமங்களில் ஒன்றாகும்.



4. பாக்ஸ் சிலிக்கா திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு: அவை, புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் மூலோபாய இணை முதலீட்டு வாய்ப்புகளைத் தொடர்வது, சம்பந்தப்பட்ட நாடுகளின் முறையற்ற அணுகல் அல்லது கட்டுப்பாட்டிலிருந்து அதிக திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைப்புகள், ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள், தரவு மையங்கள், அடிப்படை மாதிரிகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட நம்பகமான தொழில்நுட்பச் சூழல் அமைப்புகளை உருவாக்குவது போன்றவையாகும்.


5. குறைமின்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்றவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் சிலிக்கான் மற்றும் முக்கியத் தனிமங்களுக்கான நம்பகமான, மீள்திறன் கொண்ட மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளால் மேம்படுத்தப்படும் விநியோகச் சங்கிலிகளைக் கட்டமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.




6. மக்களவையில் நட்சத்திரக்குறியிடப்படாத கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த முயற்சியில் இணைவதன் மூலம் முக்கிய தனிமச் சுத்திகரிப்புத் துறையில் முதலீடுகளை எளிதாக்கவும், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை ஆதரிக்கவும், முக்கியத் துறைகளில் இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கவும், நம்பகமான நட்பு நாடுககளுடனான ஒத்துழைப்பின் மூலம் பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்தவும் முடியும் என்று சுட்டிக்காட்டினார்.


இந்தியாவிற்கு பாக்ஸ் சிலிக்காவின் முக்கியத்துவம் என்ன?


• அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி உள்ளீடுகள் முதல் மேம்பட்ட உற்பத்தி மற்றும் குறைமின்கடத்திகள் வரை பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகளை (supply chains) உருவாக்குவதை பாக்ஸ் சிலிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவிற்கு அக்கறைக்குரிய துறைகளாகும்.


சீனாவின் பங்களிப்பு உள்ள முக்கியத் துறைகளில் நாடுகள் தங்களை மறுசீரமைத்துக் கொள்ளும்போது, ​​அடுத்த உலகளாவிய தொழில்நுட்ப நடவடிக்கைகள் எவ்வாறு வடிவம் பெறக்கூடும் என்பதை இது உணர்த்துவதால் முக்கியத்துவம் பெறுகிறது. பாக்ஸ் சிலிக்கா போன்ற குழுக்கள், அடுத்ததாக விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன.


அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகித் தங்கள் வணிகத்தைப் பல்வேறு நாடுகளுக்கு கொண்டுசெல்ல முயற்சித்து வருவதால், இந்தியாவும் உலகளாவிய விநியோகச் சங்கிலி மறுசீரமைப்பில் தனது பங்களிப்பை வழங்க முயற்சி செய்து வருகிறது.


• பாக்ஸ் சிலிக்கா முயற்சியில் இந்தியாவின் பங்கேற்பு, தற்போது புது இந்தியாவிடம் பற்றாக்குறையாக உள்ள மற்றும் இறக்குமதி சார்புநிலையை ஆழப்படுத்தும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடும். அமெரிக்கா தலைமையிலான இந்த முயற்சியில் இடம் பெற்றிருக்கும் நாடுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைமின்கடத்தி விநியோகச் சங்கிலி போன்றவற்றில் முன்னணி நாடுகளாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

• இந்தியாவில் தற்போது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு இல்லை. எனவே, இந்த முயற்சியின்கீழ் ஏற்படவிருக்கும் முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் இந்தியா பயன்பெறும்.


முக்கிய தனிமங்கள்: முக்கியத் தனிமங்கள் என்பவை, நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நாடுகள் அல்லது உலகின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் தனிமங்களின் ஒரு துணைப்பிரிவாகும். 2023-ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் 

முக்கியமானதாக கருதப்படும் லித்தியம், கோபால்ட், நிக்கல், கிராஃபைட், தகரம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட 30 முக்கிய தனிமங்களை  ஒன்றிய அடையாளம் கண்டது.


அரிய மண் தனிமங்கள் (Rare Earth Elements (REEs)): அரிய மண் தனிமங்கள் என்பவை தனிம வரிசை அட்டவணையில் உள்ள 17 வேதியியல் தனிமங்களின் ஒரு தொகுப்பாகும். இதில் 15 லந்தனைடுகள் மற்றும் ஸ்கேண்டியம், இட்ரியம் ஆகியவை அடங்கும். இவை லந்தனைடுகள் காணப்படும் அதே தாதுப் படிவுகளில் காணப்படுகின்றன. மேலும், ஒரே வேதியியல் பண்புகளையும் கொண்டுள்ளன.


அரிய புவித் தனிமங்கள் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், இந்தத் தனிமங்கள் அரிதானவை அல்ல. அவை பூமியின் மேலோட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. இருப்பினும், சுரங்கத் தொழிலுக்குப் பொருளாதாரரீதியாக லாபகரமான செறிவுகளில் அவை அரிதாகவே காணப்படுகின்றன. எனவே, அரிய மண் தனிமங்களைப் பிரித்தெடுத்துப் பதப்படுத்துவது சிக்கலானதும்அதிக செலவு கொண்டது ஆகும். அவற்றைத் தனிமைப்படுத்தித் தூய்மைப்படுத்த, உயர்நிலை நுட்பங்ககளை கையாள அதிக திறன் கொண்ட தொழிலார்கள்  தேவைப்படுகின்றன.


அரிய மண் நிரந்தர காந்தங்கள்: இவை நிரந்தர காந்தங்களின் வலிமையான வகைகளில் ஒன்றாகும். மேலும், சிறிய அளவிலான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட காந்தக் கூறுகள் தேவைப்படும் தொழில்நுட்பங்களில் இவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய உயர் செயல்திறன் கொண்ட நிரந்தர காந்தங்களைத் தயாரிப்பதற்கு அரிய மண் தனிம உலோகங்கள் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் (metric tonnes per annum (MTPA)) ஒருங்கிணைந்த அரிய மண் நிரந்தர காந்த உற்பத்தித் திறனை ஆதரிக்கும் நோக்கில், 'சின்டர்டு அரிய மண் நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை' அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத்திட்டம் குறிப்பாக "சின்டர்டு அரிய மண் நிரந்தர காந்தங்கள்" மீது கவனம் செலுத்துகிறது. இவை நியோடைமியம், இரும்பு மற்றும் போரான் (neodymium, iron and boron (NdFeB)) காந்தங்களாகும். மேலும், இவை மிகவும் வலிமையானதாகவும் வணிகரீதியாக அதிக தேவை கொண்டதாக உள்ளன.


தனிமப் பாதுகாப்பு கூட்டமைப்பு (Minerals Security Partnership (MSP))


1. ஜூன் 2023-ல், அமெரிக்கா தலைமையில் செயல்படும் 14 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த தனிமப் பாதுகாப்பு கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பின் நோக்கம், உலகளாவிய முக்கிய தனிமங்களின் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பொது மற்றும் தனியார் துறையின் முதலீடுகளை ஊக்குவித்து, பாதுகாப்பான மற்றும் நிலையான விநியோக அமைப்பை உருவாக்குவதாகும்.


2. 2023 ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட இந்தியா-அமெரிக்கா கூட்டறிக்கை, “இருநாடுகளின்  சந்தைகளுக்கு தேவையான முக்கியத் தனிமங்கள் நன்கு விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய இணைந்து செயல்படுவோம்” என்ற இரு அரசாங்கங்களின் நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், “நெகிழ்வான முக்கியத் தனிமங்கள் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்காக இருதரப்பு ஒத்துழைப்பை விரைவுபடுத்துவோம்” என்ற இரு தரப்பினரின் உறுதிமொழியையும் மீண்டும் உறுதிப்படுத்தி, இந்தியாவை அமெரிக்கா அந்தக் கூட்டமைப்பிற்குள் வரவேற்றது.


3. தனிமப் பாதுகாப்பு கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, கனடா, எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், நார்வே, கொரியக் குடியரசு, சுவீடன், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அடங்கும்.


4. ஜனவரி 2025-ல், முக்கிய தனிமத் துறையில் தன்னிறைவு அடைய உதவும் வகையில், இந்தியா ஒரு தேசிய முக்கிய தனிம இயக்கத்தைத் தொடங்கியது. 2023-ல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் தேவையான லித்தியம், கோபால்ட், நிக்கல், கிராஃபைட், தகரம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட 30 முக்கிய தனிமங்களையும்  அரசு அடையாளம் கண்டது.


5. இந்தியா-அமெரிக்கா முக்கிய தனிமங்கள் கட்டமைப்பு: கடந்த மே மாதம், இந்தியாவும் அமெரிக்காவும் முக்கிய தனிமங்கள் மற்றும் அரிய மண் தனிமங்களின் விநியோகம், சுரங்கத் தொழில் மற்றும் பதப்படுத்துதலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் இந்தியா-அமெரிக்கா முக்கிய தனிமங்கள் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


Original Link: What is Pax Silica and why has India joined the US-led initiative?

Share:

இந்தியாவில் பருவமழை குறித்து… -ரோஷ்னி யாதவ்

பருவமழை என்பது, நிலத்திற்கும் கடலுக்கும் இடையே ஏற்படும் மாறுபட்ட வெப்பமயமாதல் மற்றும் அதன் விளைவான ஏற்படும் அழுத்த வேறுபாடுகளால், பருவகாலத்திற்கேற்ப காற்றுகள் தலைகீழாக மாறுவதாகும். கோடைக்காலத்தில், அருகிலுள்ள கடல்களைவிட நிலப்பரப்புகள் வேகமாக வெப்பமடைகின்றன. இதனால், நிலத்திற்கு மேலுள்ள காற்று உயர்ந்து, ஒரு குறைந்த அழுத்தப் பகுதியை உருவாக்குகிறது. இந்தக் குறைந்த அழுத்தமானது, கடலுக்கு மேலுள்ள உயர் அழுத்தப் பகுதிகளிலிருந்து குளிர்ச்சியான, ஈரப்பதம் நிறைந்த காற்றை உள்ளிழுக்கிறது. இது, நிலத்தை அடையும்போது பரவலான மழையைக் கொண்டுவரும் பருவமழைக் காற்றை உருவாக்குகிறது.




குளிர்காலத்தில், இந்தச் செயல்முறை தலைகீழாக மாறுகிறது. குளிர்ச்சியான நிலப்பரப்புகளிலிருந்து கடலை நோக்கி காற்று வீசுகிறது. இந்த நிகழ்வு, பின்னடையும் பருவமழை (Retreating Monsoon) என்று அழைக்கப்படுகிறது. இந்த விளக்கம் பருவமழை சுழற்சி குறித்த ஒரு எளிமையான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

இந்தியாவில் உள்ள பருவமழை வகைகள்


இந்தியாவில் இரண்டு குறிப்பிடத்தக்க பருவமழை வகைகள் உள்ளன : அவை,


(1) தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) : இது ஜூன் முதல் செப்டம்பர் வரை நிகழ்கிறது. இது தென்மேற்குக் கடற்கரையில் உள்ள கேரளாவைத் தாக்கி, பின்னர் நாடு முழுவதும் பரவுகிறது. இந்தப் பருவமழையே இந்தியாவைப் பாதிக்கும் முதன்மைப் பருவமழையாகும். இது கோடைக்கால வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புக்கும் பொருளாதாரத்திற்கும், குறிப்பாக காரிஃப் பயிர்களின் (Kharif crops) வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. இந்தியாவின் ஆண்டு மழையளவில் 70%-க்கும் அதிகமான மழை, இந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் கிடைக்கிறது. இக்காலகட்டத்திற்கான இந்தியாவின் நீண்டகால சராசரி (Long Period Average (LPA)) மழையளவு 880 மி.மீ ஆகும்.


நீண்டகால சராசரி (Long Period Average (LPA)) என்பது என்ன?


நீண்டகால சராசரி (LPA) என்பது 50 ஆண்டு கால மழையளவுத் தரவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்டு, ஜூன் முதல் செப்டம்பர் வரை பதிவுசெய்யப்பட்ட சராசரி மழைப்பொழிவு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் பெய்யும் மழையளவைக் கணிப்பதற்கான ஒரு அளவுகோலாக (benchmark) இந்த நீண்டகால சராசரி (LPA) விளங்குகிறது.


(2) வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) : இது இந்தியத் துணைக்கண்டத்தின் காலநிலை அமைப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான அம்சமாகும். இதன் பெயர், வடகிழக்கிலிருந்து தென்மேற்கு திசையை நோக்கி வீசும் பருவக்காற்றுகளின் திசையிலிருந்து இதற்கு இப்பெயர் வந்தது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்து, தீபகற்ப இந்தியாவைப் பாதிக்கிறது. இது தென்மேற்குப் பருவமழை அளவுக்குத் தீவிரமானது அல்ல என்றாலும், ராபி (rabi) பயிர்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது.


வடகிழக்குப் பருவமழையானது (Northeast Monsoon) தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா மற்றும் தென்னிந்தியாவில் உள்ள ஏனாம் ஆகிய பகுதிகளிலும் பருவமழை மிகவும் முக்கியமானது. மொத்த ஆண்டு மழையளவில், தமிழ்நாடு ஏறக்குறைய 48 சதவிகிதத்தை (443.3 மி.மீ) அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் பெறுகிறது. இது ராபி சாகுபடிக்கு முக்கியமானதாகும். வடகிழக்குப் பருவமழையானது குளிர்காலப் பருவமழை (winter monsoon), பின்வாங்கும் பருவமழை (retreating monsoon) அல்லது தலைகீழ் பருவமழை (reverse monsoon) என்றும் அழைக்கப்படுகிறது.

கேள்வி 2 : இந்தியப் பருவமழையைப் பாதிக்கும் முக்கிய காரணிகள் யாவை?


இந்தியாவின் பல பகுதிகள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், வரும் மாதங்களில் மிதமான அல்லது வலுவான 'எல் நினோ' (El Niño) உருவாகக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஆய்வு (United Nations weather agency) அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தப் பருவமழை வரும் மாதங்களில் உருவாகக்கூடும் என்பதால், அதிக வெப்பநிலை, சீரற்ற மழைப்பொழிவு மற்றும் உணவு, நீர் அமைப்புகளுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்த கவலைகள் எழுகின்றன. இந்தச் சூழலில், இந்தியப் பருவமழையைப் பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகிறது.


பருவமழையானது, வளிமண்டல மற்றும் கடல்சார் நிகழ்வுகளின் சிக்கலான ஒன்றிணைப்பால் பாதிக்கப்படுகிறது. எல் நினோ-தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation (ENSO)), மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation (MJO)), மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) ஆகியவை இதன் முக்கியக் காரணிகளாகும். இவை அனைத்தும் நாடு முழுவதும் மழைப்பொழிவின் நேரம், தீவிரம் மற்றும் பரவலைக் கணிசமாகப் பாதிக்கக்கூடும்.

எல் நினோ-தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation)


எல் நினோ தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation) என்பது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதன் மேலுள்ள வளிமண்டலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் குறிக்கப்படும் ஒரு காலநிலை நிகழ்வாகும். இது உலகளாவிய வளிமண்டல சுழற்சியை மாற்றியமைத்து, அதில் குறுக்கிடக்கூடும். இதன் விளைவாக உலகம் முழுவதும் வானிலை பாதிக்கப்படுகிறது. இது மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. வெப்ப நிலை (எல் நினோ - ஸ்பானிஷ் மொழியில் 'சிறுவன்' என்று பொருள்), குளிர் நிலை (லா நினா - ஸ்பானிஷ் மொழியில் 'சிறுமி' என்று பொருள்) மற்றும் நடுநிலை ஆகும். இது 2 முதல் 7 ஆண்டுகள் வரையிலான ஒழுங்கற்ற சுழற்சிகளில் நிகழ்கிறது.


இயல்பான நிலையில், பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியைவிட (பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு அருகில்) அதன் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில்) குளிர்ந்த நிலையில் இருக்கும். இதற்குக் காரணம், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் நிலவும் காற்று அமைப்புகளே ஆகும். இவை வெப்பமான மேற்பரப்பு நீரை இந்தோனேசியக் கடற்கரையை நோக்கி அடித்துச் செல்கின்றன. கீழிருந்து வரும் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான நீர், இடம்பெயர்ந்த அந்த நீருக்குப் பதிலாக மேலே வருகிறது.


எல் நினோ (El Niño) நிகழ்வின் போது, ​​பசிபிக் பெருங்கடலின் இப்பகுதியில் உள்ள மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைவதால், இந்தியாவில் ஈரப்பதமான காற்றின் ஓட்டம் தடைபடுகிறது. இதன் விளைவாக, இந்தியாவில் பருவமழை பலவீனமாகவோ அல்லது தாமதமாகவோ பெய்கிறது. அத்துடன் முக்கிய விவசாய மாநிலங்களில் வறட்சியும் ஏற்படுகிறது. மேலும், இந்தியாவில் ஏற்படும் வெப்ப அலைகளின் (heatwaves) நிகழ்வெண் மற்றும் தீவிரத்தன்மைக்கும் எல் நினோ நிகழ்வுக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகளும் உள்ளன.


லா நினோ (La Niña) நிகழ்வின் போது இதற்கு நேர்மாறான சூழல் ஏற்படுகிறது. அதாவது, கிழக்கு பசிபிக் பகுதியின் மேற்பரப்பு நீர் குளிர்ச்சியடைகிறது. இதனால், இந்தியாவில் வலுவான, ஈரப்பதம் நிறைந்த காற்று வீசுவதோடு, வழக்கமாக அதன் தென்மேற்குப் பருவமழையும் அதிகரிக்கிறது. தீவிரமான சூழ்நிலைகளில், இந்த அதிகப்படியான மழை வெள்ளப்பெருக்கையும் பயிர் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (Inter-Tropical Convergence Zone (ITCZ))


வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (ITCZ) என்பது பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு மாறுதலுக்குட்பட்ட மண்டலமாகும். இங்கு வட மற்றும் தென் அரைக்கோளங்களின் வர்த்தகக் காற்றுகள் ஒன்றிணைகின்றன. கடுமையான சூரிய ஒளியும் கடலின் வெதுவெதுப்பான நீரும் இப்பகுதியில் காற்றைச் சூடாக்கி, அதன் ஈரப்பதத்தை அதிகரிக்கின்றன. காற்று மேலே எழும்போது, ​​அது குளிர்ச்சியடைந்து, தேங்கிய ஈரப்பதத்தை வெளியிடுகிறது. இதன்மூலம் மழைப்பொழிவு ஏற்படுகிறது. இந்தியப் பருவமழையில் வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (ITCZ) ​​ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.


பருவமழை காலத்தில், இந்த வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (ITCZ) இந்திய நிலப்பரப்பின் மீது அமைந்திருக்கும். செப்டம்பர் மாதத்தில், வட அரைக்கோளத்தில் வெப்பநிலை குறையத் தொடங்கும் போது, ​​இந்த வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (ITCZ) தெற்கு நோக்கி, பூமத்திய ரேகையை நோக்கியும், மேலும் தென் அரைக்கோளத்திற்குள்ளும் நகரத் தொடங்குகிறது. அங்குதான் கோடைக்காலம் உருவாக ஆரம்பிக்கிறது.

மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation (MJO))

மேடன்-ஜூலியன் அலைவு (MJO) என்பது இந்தியப் பருவமழைகளைப் பாதிக்கும் மிக முக்கியமான மற்றும் சிக்கலான கடல்-வளிமண்டல நிகழ்வுகளில் ஒன்றாகும். இது இந்தியப் பெருங்கடலில் உருவாகிறது. குறிப்பிடத்தக்க வகையில், எல்-நினோ ஒரு நிலையான அமைப்பாகும். ஆனால் மேடன்-ஜூலியன் அலைவு (MJO) என்பது பூமத்திய ரேகையைச் சுற்றி வரும்போது மழையைக் கொண்டுவரும் காற்று, மேகம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் ஒரு நகரும் அமைப்பாகும்.


மேடன்-ஜூலியன் அலைவின் (MJO) ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், மேகங்கள், காற்று மற்றும் காற்றழுத்தத்தின் ஒரு சீர்குலைவு வினாடிக்கு 4-8 மீட்டர் வேகத்தில் கிழக்கு நோக்கி நகர்கிறது. 30 முதல் 60 நாட்களுக்குள், மேடன்-ஜூலியன் அலைவு (MJO) காற்றுப் பட்டைகள் உலகைச் சுற்றிப் பயணித்து, அவற்றின் இயக்கத்தின் போது குறிப்பிடத்தக்க வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். சாதகமான ஒரு கட்டத்தில், இது பருவமழைக் காலத்தில் இந்தியாவில் மழைப்பொழிவை அதிகரிக்கச் செய்யும்.

இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD))


இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) என்பது இந்தியப் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையேயான கடல் மேற்பரப்பு வெப்பநிலைகளின் (surface temperatures (SST)) வேறுபாடு ஆகும். எல் நினோ-தெற்கு அலைவைப் (El Niño-Southern Oscillation (ENSO)) போலவே, இதற்கும் நேர்மறை, எதிர்மறை மற்றும் நடுநிலை என மூன்று கட்டங்கள் உள்ளன. நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கும் அதேவேளையில், எதிர்மறையான நிலை குறைந்த மழைப்பொழிவை விளைவிக்கிறது. நடுநிலை இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department (IMD)) வண்ணக் குறியீடு கொண்ட வானிலை எச்சரிக்கைகள் யாவை?


இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), பருவமழைக் காலத்தில் அவ்வப்போது வண்ணக் குறியீடு கொண்ட வானிலை எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. இவை குடிமக்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பதோடு, கணிக்க முடியாத வானிலை நிலவும் காலங்களில் சிறந்த தயார்நிலைக்கு உதவுகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை வண்ணக் குறியிடப்பட்டுள்ளன.


1. ‘பச்சை’ (Green) நிறம் ‘எச்சரிக்கை இல்லை’ என்பதைக் குறிக்கிறது. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. மேலும் லேசானது முதல் மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின்படி, 15.6 மி.மீ முதல் 64.4 மி.மீ வரையிலான மழைப்பொழிவு “மிதமானதாக” கருதப்படுகிறது.


2. ‘மஞ்சள்’ (Yellow) நிற எச்சரிக்கை என்பது “கண்காணிக்கவும்” (Watch) நிலையைக் குறிக்கிறது. மேலும், இந்த நிலைமை குறித்து “தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு” அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். வானிலை ஆய்வு மையத்தின்படி, 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரையிலான மழை “கனமழை” எனக் கருதப்படுகிறது.


3. ‘ஆரஞ்சு’ (Orange) நிற எச்சரிக்கை என்பது "விழிப்புணர்வு" (Alert) என்பதைக் குறிக்கிறது. மேலும், அதிகாரிகள் “தயாராக இருக்க வேண்டும்” என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரஞ்சு எச்சரிக்கையின்போது, ​​கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) படி, 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரையிலான மழை "மிகக் கனமழை" எனக் கருதப்படுகிறது.


4. ‘சிவப்பு’ (Red) நிற எச்சரிக்கை என்பது "எச்சரிக்கை" (Warning) என்பதைக் குறிக்கிறது. மேலும், அதிகாரிகளை “நடவடிக்கை எடுக்குமாறு” கேட்டுக்கொள்கிறது. மிக அதிகப்படியான கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இருப்பினும், "சிவப்பு நிற எச்சரிக்கை என்பது 'ரெட் அலர்ட்' (Red Alert) என்பதைக் குறிக்காது" என்றும், அது "நடவடிக்கை எடுப்பதைக்" மட்டுமே குறிக்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்துகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, 204.5 மி.மீ-க்கு மேல் பெய்யும் மழை "மிக அதிகப்படியான கனமழை" (extremely heavy) எனக் கருதப்படுகிறது.


கேள்வி 3 : இந்தியப் பருவமழை ஏன் இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது?


இந்தியப் பருவமழை என்பது ஒரு முக்கியமான புவியியல் நிகழ்வு மட்டுமல்ல. அது பெரும் பொருளாதார மதிப்பையும் கொண்டுள்ளது. இந்தியாவின் முழு விவசாயச் சுழற்சியும் இந்தப் பருவமழையையே மையமாகக் கொண்டு இயங்குகிறது. ஏனெனில், இந்தியாவில் சுமார் 64 சதவீத மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையைச் சார்ந்துள்ளனர். மேலும் வேளாண்மையும் தென்மேற்குப் பருவமழையையே சார்ந்துள்ளது.

இந்தியாவில் விவசாயச் செழிப்பு, சரியான நேரத்தில் மற்றும் போதுமான அளவில் பெய்யும் மழையைப் பெரிதும் சார்ந்துள்ளது. மழை பொய்த்துப் போனால், குறிப்பாக நீர்ப்பாசன வசதிகள் வளர்ச்சியடையாத பகுதிகளில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஒரு நல்ல பருவமழை, வேளாண் உற்பத்தியை அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, கிராமப்புற வருமானம் மற்றும் நுகர்வை மேம்படுத்துகிறது. எனவே, இது இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.



பருவமழைத் திட்டம் (Monsoon Mission) என்பது என்ன?


பருவமழைத் திட்டம் என்பது, வெவ்வேறு கால அளவுகளில் பருவமழைப் பெயவதற்கான அதிநவீன இயக்கவியல் முன்கணிப்பு அமைப்புகளை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், புவி அறிவியல் அமைச்சகத்தால் (MoES) தொடங்கப்பட்ட ஒரு தேசியத் திட்டமாகும்.




இந்தியாவில் உள்ள பிராந்திய காலநிலை வேறுபாடுகள், அங்குள்ள பல்வேறு வகையான உணவு, உடை மற்றும் வீட்டு வகைகளில் பிரதிபலிக்கின்றன. பருவமழைக் காலநிலையில் ஏற்படும் பிராந்திய வேறுபாடுகள், பல்வேறு வகையான பயிர்களை வளர்க்க உதவுகின்றன. வட இந்தியாவில் மிதவெப்ப மண்டலச் சூறாவளிகளால் ஏற்படும் குளிர்கால மழையானது, ராபி பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

Original Link: What is the Monsoon in India?

Share: