இணைய குற்ற விசாரணைகளின் மோசமான பின்விளைவுகள். -கங்கா நாராயண் மற்றும் ரத்சிராயு சர்மா



2025-ஆம் ஆண்டில் சுமார் 28 லட்சம்  இணையவழிக் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இது தொடர்பான விசாரணைகளின் போது, சிறு குறு வணிகங்களின் வங்கித் கணக்குகள் நியாயமற்ற முறையில் முடக்கப்படுவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.


டிஜிட்டல் வளர்ச்சியின் பின்னணியில், ஒரு புதிய வகையான "குடிசைத் தொழில்" (“cottage industry”) உருவாகியுள்ளது. இது பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, திட்டமிட்ட முறையில் ஏமாற்று வேலைகளையும் மோசடிகளையும் செய்கிறது. நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தொடரான ‘Jamtara – Sabka Number Ayega’, கிராமப்புறங்களில் நடக்கும் இந்த இணைய மோசடி (Phishing) மையங்களின் கொடூரமான உண்மை நிலையை உலகிற்குக் காட்டியது. ஆனால், இது ஒரு பெரிய ஆபத்தான சிக்கலின் தொடக்கம் மட்டுமே என்கின்றனர்.


இந்தத் தொடர் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது.  இன்றைய இணைய மோசடிகள் மேம்பட்ட ஹேக்கிங் (Hacking) முறைகளைவிட, மக்களின் மனநிலையைக் கையாளுவதையே அதிகம் சார்ந்துள்ளன. மோசடி செய்பவர்கள் வங்கி அதிகாரிகள், முதலீட்டு ஆலோசகர்கள், காவல்துறை அல்லது நீதித்துறை அதிகாரிகளைப் போல நடித்து, அவசரத்தையும் பயத்தையும் உண்டாக்கி, மக்களைத் தூண்டிவிட்டு அவர்களின் முக்கியமான நிதித் தகவல்களைப் பெறுகின்றனர். 


இந்தியா தற்போது ஒரு இரட்டை சவாலை எதிர்கொண்டு வருகிறது: ஒருபுறம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பொருளாதாரமாகத் திகழ்கிறது மற்றும் இணையவழிக் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) மற்றும் இந்திய இணையவழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) ஆகியவற்றின் புள்ளிவிவரப்படி, 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.8 மில்லியன் இணையவழிக் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டைவிட 24% அதிகம் என்கின்றனர்.


குடிமக்கள் நிதிசார் இணையக் குற்றப் புகாரளிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பை (Citizen Financial Cyber Fraud Reporting and Management System) பயன்படுத்தி, அதிகாரிகள் மேற்கொண்ட தீவிரமான உடனடி நடவடிக்கைகளால் ₹8,000 கோடிக்கும் அதிகமான பணம் காப்பாற்றப்பட்டது. இருப்பினும், ஒட்டுமொத்தப் பண இழப்பு என்பது மிகப்பெரிய அளவிலேயே உள்ளது. இந்தியர்கள் டிஜிட்டல் குற்றவாளிகளிடம் சுமார் ₹22,495 கோடியை இழந்துள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.7 சதவீதம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.


தற்போது 2026-ஆம் ஆண்டில், மோசடிகள் எந்தளவுக்குத் தொழில்ரீதியாக வளர்ந்துள்ளன என்பதற்கு, தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunication (DoT)) மற்றும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India (TRAI)) இணைந்து 3 கோடிக்கும் மேற்பட்ட போலி அலைபேசி இணைப்புகளைத் துண்டித்திருப்பது, இதற்குச் சான்றாக அமைகிறது.


முடக்கும் காரணி


டிஜிட்டல் மோசடிகளுடன் சேர்ந்து, மற்றொரு புதிய பிரச்சனையும் உருவெடுத்துள்ளது: அதுதான் அதிகாரிகளால் வங்கிக் கணக்குகள் அளவுக்கு அதிகமாகவும், எவ்வித பாகுபாடின்றியும் முடக்கப்படுவது. திருடப்பட்ட பணத்தைக் கண்டுபிடித்து மீட்பதற்கான அவசர முயற்சியில், காவல்துறை அமைப்புகள் முக்கியமாக இணையவழிக் குற்றப் பிரிவு (Cyber Crime Cell) கணக்குகளை முடக்குவதையே ஒரு முக்கியமான விசாரணை கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், பல நேரங்களில் இத்தகைய நடவடிக்கைகள், சந்தேகிக்கப்படும் குற்றத்தின் தன்மையோடு ஒப்பிடுகையில் தேவையற்றதாக இருக்கின்றன.


2026-ஆம் ஆண்டின் தொடக்கத் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 28.15 லட்சம் இணையவழிக்  குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் "ஒட்டுமொத்த கணக்கு முடக்கம்" நடவடிக்கைகள் காரணமாக, எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்களுக்குச் சொந்தமான சுமார் ₹12,000 கோடி பணம் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் 6.4 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs), அவர்களின் கணக்கில் தெரியாமல் வரும் ஒரு ₹100 சந்தேகத்திற்கிடமான வரவு கூட, அவர்களின் மொத்த வேலை மூலதனக் கணக்கையும் முடக்குவதற்கு வழிவகுக்கிறது. அதேபோல, ஒரு தள்ளுவண்டி வியாபாரியின் கணக்கில் தெரியாமல் வரும் சிறிய தொகையான ₹20 கூட, அவரது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாதவாறு முடக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


சிறு வணிகர்கள் மற்றும் மாத ஊதியம் பெறுபவர்களின் நிதி பரிவர்த்தனைகளை முடக்குவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தொழில் செய்யும் உரிமை மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் செயலாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


இணையவழிக் குற்றங்கள் டிஜிட்டல் முறையில் நடந்தாலும், முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வழிமுறைகள் இப்போதும் பெரும்பாலும் நேரடி வருகை, மெதுவான வேகம் மற்றும் அதிகப்படியான ஆவணங்களைச் சார்ந்தே இருக்கின்றன. ஒரு சிறு வணிகர் அல்லது மாத ஊதியம் வாங்குபவரின் வங்கி கணக்கு வேறொரு மாநிலத்தில் உள்ள இணையவழிக் குற்றப்பிரிவால் முடக்கப்பட்டால், அவர் அங்கு நேரில் செல்வதற்கும் சட்ட உதவிகளைப் பெறுவதற்கும் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த இடமாற்றச் சிக்கலும், நடைமுறைச் சிக்கலும் சாதாரண இந்தியர்களுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.


வங்கிக் கணக்குகள் நான்கு முதல் ஏழு மாதங்கள் வரை முடக்கப்படும்போது, வணிகங்கள் அவற்றின் செயல்பாட்டுச் சுழற்சியின் போது தேவையான நடைமுறை மூலதனத்தை இழக்கின்றன. இதனால் வர்த்தகம் முடங்குதல், சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியாமை மற்றும் சில நேரங்களில் நீண்டகால நிதி நெருக்கடி போன்றவை ஏற்படுகின்றன. சிக்கலான மோசடிப் பரிவர்த்தனைகளை விசாரிக்க அதிகாரிகள் முயன்று வரும் நிலையில், சந்தேகத்திற்குரிய "நிலை 1" (Layer 1) சார்ந்த சுமார் 2.6 மில்லியனுக்கும் அதிகமான 'Mule' (மோசடிக்கு பயன்படுத்தப்படும் இடைத்தரகர் கணக்குகள்) கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) தரவுகள் தெரிவிக்கின்றன.


டிஜிட்டல் குற்றங்களைக் கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கை அவசியமாக இருக்கலாம். இருப்பினும், முறையான நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல், கணக்குகளை முழுமையாகவோ அல்லது காலவரையின்றியோ முடக்குவது, அந்த நடவடிக்கை நியாயமானதா மற்றும் விகிதாசாரமானதா என்பது குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்று நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


டிஜிட்டல் அறிவு


அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிப் பிரச்சனையைத் தீர்க்க தனிநபர்கள், வங்கிகள், தொழில்நுட்பத் தளங்கள், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் பயன்பாடு சார்ந்த அறிவை மேம்படுத்துவதே இதற்கு எதிரான முதல் கட்டப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கின்றனர். இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய நிதி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், குறிப்பாக இரண்டாம் நிலை நகரங்கள் (Tier-2 cities) மற்றும் கிராமப்புறங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். மேலும், வங்கிகளும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களும், இழப்புகள் ஏற்படும் முன்பே சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்த மோசடிகளை கண்டறிதல், வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தல் மற்றும் உடனுக்குடன் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல் போன்ற முறைகளை விரைவுபடுத்த வேண்டும். இதன் மூலம் இழப்புகள் ஏற்படுவதற்கு முன்பே சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டறிந்து தடுக்க முடியும் என்கின்றனர்.


இறுதியில், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்பது தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்தது அல்ல என்றும் அது ஒரு பொறுப்பான டிஜிட்டல் கலாச்சாரத்தை உருவாக்குவதையும் சார்ந்தது என்றும் தெரிவிக்கின்றனர். அத்தகைய கலாச்சாரத்தில், புதிய கண்டுபிடிப்புகள் என்பது நம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் உறுதி ஆகியவற்றின் துணையோடு வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


கங்கா நாராயண் ரத், ஒரு முன்னாள் மத்திய வங்கி அதிகாரி மற்றும் சிராயு சர்மா, ஒரு சுதந்திரமான ஆராய்ச்சியாளர் ஆவார்.


Original Link: Unfortunate fallout of cyber crime investigations.


Share:

குடியேற்றம், குடியுரிமை மற்றும் 'நாகரிகம்' தொடர்பான அச்சங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில், கடவுச்சீட்டு என்பது ஒரு போராட்டக்களமாக மாறியுள்ளது. - சுகதா ஸ்ரீனிவாசராஜு

மேற்கத்திய நாடுகள் ஒரு காலத்தில் குடியேற்றத்தை ஊக்குவித்தன. ஆனால், இன்று அதே நாடுகளுக்குள் அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.


கடந்த சில வாரங்களாக, கடவுச்சீட்டுகள் பற்றிய விவாதங்கள் முதன்மையான தலைப்பாக மாறியுள்ளன. இதனால் இது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மா, மூன்று நாடுகளின் கடவுச்சீட்டுகளை ரகசியமாக வைத்திருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு முன்னதாக, அசாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன் கோகோயின் பிரிட்டிஷ் குடியுரிமை மற்றும் அவருக்குப் பாகிஸ்தானுடன் இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.


வடகிழக்கு இந்தியாவில் கடவுச்சீட்டு தொடர்பான இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில், இந்தப் பகுதியில் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) மற்றும் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் சிறப்பு தீவிர திருத்த முறை (Special Intensive Revision (SIR)) போன்ற குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீப காலங்களாக, ஒருவருடைய அடையாளம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான கேள்விகள் இங்கே மிக முக்கியமானதாக மாறியுள்ளன. இதன் தாக்கம் மேற்குவங்கம் வரை எதிரொலித்துள்ளது. அங்கு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட ஒருவர், தன்னிடம் இருக்கும் சரியான இந்தியக் கடவுச்சீட்டுக்கு இனி என்ன மதிப்பு இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்தச் சிக்கல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மற்றொரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாகவும், அவர் ரகசியமாகப் பிரிட்டிஷ் கடவுச்சீட்டு வைத்துள்ளார் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இந்தத் தனிப்பட்ட சம்பவங்கள் பல விவாதங்களுக்கும், அவதூறு வழக்குகளுக்கும், அரசியல் ரீதியான எதிர்வினைகளுக்கும் வழிவகுத்துள்ளன. அதோடு, இவை மக்களிடையே மனவருத்தத்தையும், ஒருவித ஏமாற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நேரங்களில் இவை வாக்காளர்களின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்தச் சம்பவங்கள் கவனிக்கப்பட வேண்டியவைதான். இருப்பினும், நாம் கவனிக்க வேண்டிய ஒரு பெரிய பின்னணி உள்ளது. அதுதான் கடந்த 25 ஆண்டுகளில் கடவுச்சீட்டு தொடர்பான சிக்கல்கள் கடந்து வந்த பயணம் ஆகும்.


1990-ஆம் ஆண்டுகளில் தேசிய அடையாளங்கள் வலுவிழந்து காணப்பட்ட காலத்திலிருந்து, இன்று அவை மீண்டும் வலிமையுடன் எழுச்சி பெற்றுள்ள காலம் வரை, கடவுச்சீட்டின் பிம்பம் பெருமளவு மாறியுள்ளது. உண்மையில், அது தனது பழைய நிலையை நோக்கியே திரும்பியுள்ளது எனலாம். 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வரை உலகளாவிய சூழல் ஓரளவுக்கு நிலையாக இருந்தபோது, கடவுச்சீட்டின் பங்கு ஒரு மென்மையான கருவியாகவே இருந்தது. ஆனால், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மீண்டும் ஒரு நாட்டின் கலாச்சாரம், இனம் மற்றும் தேசியம் சார்ந்த அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளதால், கடவுச்சீட்டு என்பது தனது பழைய அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் மீண்டும் பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.


உலகளாவிய ஒத்துழைப்பு பொதுவாக இருந்த காலத்திலும், உலகம் ஒரே சமூகமாகப் பார்க்கப்பட்ட காலத்திலும், கடவுச்சீட்டுகள் அவற்றின் வலுவான தேசிய அடையாளத்தை இழந்திருந்தன. அவை வெறும் பயண ஆவணங்களாக மட்டுமே பார்க்கப்பட்டன. அதேபோல், நுழைவு இசைவு (விசா) நடைமுறைகளும் மிகவும் எளிமையாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் மாறின. இந்த மாற்றம் குறிப்பாக 'பனிப்போர்' முடிவுக்கு வந்த பிறகு தெளிவாகத் தெரிந்தது. நாடுகள் தங்களுக்கு இடையேயான எல்லைகளைத் திறந்து, பிளவுகளைக் குறைத்துக் கொண்டதால், கடவுச்சீட்டு தொடர்பான கடுமையான விதிகளும் தளர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.


தாராளமயமாக்கல் காலத்தில், கடவுச்சீட்டு தொடர்பான சேவைகள் விரைவுபடுத்தப்பட்டது ஆட்சியின் சிறந்த  அடையாளமாக மாறியது. இந்தியாவும் ஒரு "தாராளமய கடவுச்சீட்டு கொள்கையை" அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், கடவுச்சீட்டு பெறுவது என்பது பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது. ஒருவரது செல்வமும் முதலீடும், அவருக்குக் கடவுச்சீட்டுகளையும் 'கோல்டன் விசா'க்களையும் (Golden Visas) எளிதாகப் பெற்றுத் தந்தன. ஒரு வகையில் பார்த்தால், குடியுரிமை என்பது விலை கொடுத்து வாங்கக்கூடிய ஒரு பொருளைப் போல மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் தங்கள் தாய்நாட்டின் மீதான உணர்வுப்பூர்வமான பிணைப்பைவிட, வரிச் சலுகை அளிக்கும் நாடுகளுக்கே (Tax havens) முன்னுரிமை அளித்தனர். இது குடிமக்கள் உலகளவில் இடம்பெயர்ந்து வேலை செய்யவும், செல்வத்தைப் பெருக்கவும் உதவியது. பனிப்போருக்குப் பிறகு, தாய்நாடு அல்லது தந்தைநாடு என்ற தேசப்பற்று சார்ந்த கருத்துக்களைவிட சந்தைப் பொருளாதாரமே முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.


உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் உலகளாவிய தொழிலாளர் சந்தையின் ஒரு அங்கமாக மாறியதால், கடவுச்சீட்டு என்பது ஒரு சிலருக்கு மட்டுமேயான விஷயமாக இல்லாமல் போனது. மலிவான உழைப்பு, வெளிப்பணி வழங்கல் (outsourcing) மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தியைத் தொடங்குதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. உதாரணமாக, கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டன. உலகளாவிய இடப்பெயர்வு அதிகரித்ததால், மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெயர்வது சாதாரணமான ஒன்றாக மாறியது. இதன் விளைவாக, மேற்கத்திய நாடுகளில் பல தொழில் நகரங்கள் தங்களின் நீண்டகால வரலாற்றை ஒரே இரவில் இழந்தது போல மிக வேகமாக வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


இந்த அமைப்பின் பெரும்பகுதி இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதை இயக்கும் அடிப்படை நோக்கம் மாறிவிட்டது. புதிய அரசியல் மற்றும் கலாச்சார ரீதியான அக்கறைகள் இப்போது உருவாகியுள்ளன. நாடுகள் தற்போது கலாச்சார சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இருப்பினும், இவை எப்போதும் நேரடியான எதிர்ப்புகளாக இருப்பதில்லை. மாறாக, இந்த உணர்வு மிகக் குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்று, கடவுச்சீட்டுகளில் கலாச்சார அடையாளம் மற்றும் இனத்துவத்தின் மீது மீண்டும் ஒரு கவனம் திரும்பியுள்ளது. இது ஒரு முழுமையான புதிய உலக ஒழுங்கைக் குறிக்கவில்லை. எனினும் இவை மேம்பட்ட தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளால் வடிவமைக்கப்பட்ட முந்தைய காலத்து உலக நடைமுறைக்கு நாம் மீண்டும் திரும்புவதைக் காட்டுகிறது.


கடந்த காலத்தில், ரஷ்யக் கவிஞர் விளாடிமிர் மாயகோவ்ஸ்கி தனது சோவியத் கடவுச்சீட்டை "மிகப்பெரிய மதிப்புமிக்க ஒரு அடையாளம்" என்று குறிப்பிட்டார். இன்று அந்த முக்கியத்துவம் மீண்டும் வந்துள்ளது. 1960-ஆம் ஆணடுகளில் பாப்லோ நெருடாவும் தனது கடவுச்சீட்டின் மீது கவனம் செலுத்தி, "எனது கவிதைகள் கொடுங்கோலர்களை அச்சுறுத்துவதால், அவர்கள் எனக்கு கடவுச்சீட்டு வழங்க மறுக்கிறார்கள்" என்று எழுதினார். அந்த காலகட்டத்தில், கவிஞர்கள் ஒரு உலகளாவிய, மனிதாபிமான பார்வையை முன்வைக்க முயன்றனர். இதையே சித்தாந்த ரீதியிலான பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, தாங்கள் சாதித்துவிட்டதாக வர்த்தக உலகம் கூறிக்கொண்டது. ஆனால், அது உண்மையில் வெற்றி பெறவில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறை மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளதுடன், ஏழை-பணக்கார இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான செல்வம் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, சமூக ஒழுக்கச் சீரழிவோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இன்று, தாராளவாதக் கருத்துக்கள் பெரும்பாலும் வரம்பற்ற சுதந்திரமாகவும், சுயக்கட்டுப்பாடற்ற ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன. இது கடவுச்சீட்டுகள் வழங்கும் 'தடையற்ற இடப்பெயர்வு' சுதந்திரத்தைப் பாதித்துள்ளது. இன்று பல வகையான இடப்பெயர்வுகள் விதிமீறல்களாகவே பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, குடியேற்றம் என்பது நாட்டின் பெருமைக்கும் ஒருவித அச்சுறுத்தலாகக் கருதப்படுவதுடன், அனைத்து நிகழ்வுகளும் ஒரு நாட்டின் கலாச்சார அடையாளத்தைப் பாதிப்பதாகவே உணரப்படுகின்றன.


பொதுவாக, உலகளாவிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு நீண்டகாலம் ஆகும். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிக்கொள்ளும் ஒரு சூழலுக்கு நாம் மீண்டும் தள்ளப்பட்டிருக்கிறோம். பிரிட்டன் தனது பழைய பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரெக்ஸிட் (Brexit) மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. அதேபோல், அமெரிக்காவை மீண்டும் வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், டிரம்ப் வர்த்தக வரிகளை விதித்து உலகளாவிய வர்த்தகத்தைத் தடுத்ததோடு, குடியுரிமை மற்றும் அங்கு தங்குவதற்கான விதிகளையும் கடுமையாக்கியுள்ளார். ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகள் எதனை ஊக்கப்படுத்தினவோ, அதே குடியேற்றக் கொள்கைக்கு இன்று அந்த நாடுகளிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது முரண்பாடான உண்மை ஆகும். ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கனவு, திடீரெனச் சுருங்கிப்போயுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


சுகதா ஸ்ரீனிவாசராஜு, 'The Conscience Network: A Chronicle of Resistance to a Dictatorship' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.



Original Link: In era of migration, citizenship and ‘civilisational’ anxieties, passport has become a battleground.


Share:

‘வங்கிச் செயல்பாடுகளை நிலைகுலையச் செய்யும்’: மோசடியானவை என அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த நேரடி விசாரணை கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏன் நிராகரித்தது? -அமால் ஷேக்

வங்கிக் கணக்குகளை "மோசடி" என வகைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனம் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியாதபடி தடைப்பட்டியலில் சேர்க்கப்பட வழிவகுக்கும். இந்த விஷயத்தில், நீதி மற்றும் வங்கி நடைமுறைகளை உறுதி செய்து, கடன் வாங்குபவர்களின் உரிமைகள் குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கீழே குறிப்பிட்டுள்ளது.


ஒரு வங்கி ஒரு கடன் கணக்கை 'மோசடி' என்று முத்திரை குத்தினால், அது கடன் வாங்கியவரின் கடன் பெறும் வாய்ப்பைத் துண்டித்து, குற்றவியல் விசாரணைக்கு உள்ளாக நேரிடும். எதிர்கால நிதிப் பரிவர்த்தனைகளையும் பாதிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, ஒரு கடன் கணக்கை மோசடியானது என்று வகைப்படுத்துவதற்கு முன்பு, கடன் வாங்கியவருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்த நடைமுறைச் சிக்கலை உச்சநீதிமன்றம் இந்த வாரம் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின் மூலம்  தீர்த்து வைத்துள்ளது.


நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இயற்கை நீதி கொள்கைகளின்படி நேரில் வந்து விளக்கம் அளிப்பது அவசியமில்லை என்றும் அப்படிச் செய்வது வங்கிச் செயல்பாடுகளை நிலைகுலையச் செய்யும்" என்று கூறியது. மாறாக, கடன் வாங்கியவருக்கு இது தொடர்பாக ஒரு நோட்டீஸ் வழங்குவது, அதற்கு அவர் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க வாய்ப்பளிப்பது மற்றும் முறையான காரணங்களைக் கூறி முடிவெடுப்பது ஆகியவையே போதுமானவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த "மோசடி" வகைப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், இது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற முடியாதபடி ஒருவரைத் தடைப்பட்டியலில் (Blacklisting) சேர்த்துவிடும் என்கின்றனர்.


இந்த விவகாரம் எவ்வாறு நீதிமன்றத்தின்  கவனத்திற்குச் சென்றது?


தற்போதுள்ள இந்த வழக்கு இரண்டு விதமான உண்மைகளின்  அடிப்படையில் எழுந்துள்ளது.


கடன் வாங்கிய நிறுவனமான அமித் அயர்ன் பிரைவேட் லிமிடெட், பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) ஒரு கணக்கைக் கொண்டிருந்தது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் காரணமாக, ஆகஸ்ட் மாதம் 2019-ஆம் ஆண்டில் அந்தக் கணக்கு வராக்கடன் (Non-Performing Asset (NPA)) என அறிவிக்கப்பட்டது.. டிசம்பர்  மாதம் 2023-ஆம் ஆண்டுக்குள், கடன் ஆவணங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை மீறியது மற்றும் நிதி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டது" ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் வங்கி அந்த நிறுவனத்திற்கு ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியது.


கடன் வாங்கியவர் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்து எழுத்துப்பூர்வமாகப் பதில் சமர்ப்பித்த பிறகு, வங்கியானது, மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டில், “இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட ஒரு தெளிவான உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறி, அந்தக் கணக்கை மோசடியானது என வகைப்படுத்தியது.


மேலும், அந்தக் கணக்கு வகைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, கடன் வாங்கியவருக்கு ஒரு “தனிப்பட்ட விசாரணை” மற்றும் முழுமையான தடயவியல் தணிக்கை அறிக்கையை அவர்களிடம் வழங்கியிருக்க வேண்டும் என்றும் கல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


லில்லிபுட் கிட்ஸ்வேர் லிமிடெட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, பேங்க் ஆஃப் இந்தியாவில் கடன் வாங்கியவரின் கணக்கு மார்ச் மாதம் 2012-ஆம் ஆண்டில் கணக்கு வாராக்கடனாக (non-performing asset (NPA)) மாறியது. ஆகஸ்ட் மாதம் 2023-ஆம் ஆண்டு மற்றும் ஜனவரி மாதம் 2024-ஆம் ஆண்டில் விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. நிறுவனத்தின் பதிலைப் பரிசீலித்த பிறகு, மே மாதம்  2025-ஆம் ஆண்டில் வங்கி அந்தக் கணக்கை மோசடி என அறிவித்தது.


தனிப்பட்ட விசாரணை தேவை என்றும், தணிக்கை ஆவணங்கள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறி, டெல்லி உயர் நீதிமன்றம் அந்த வகைப்பாட்டை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 


இந்த இரண்டு வழக்குகளிலும், வங்கிகள் ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்றின. அவை அறிவிப்பு, எழுத்துப்பூர்வ பதில் மற்றும் காரணங்களுடன் கூடிய முடிவை வழங்கின. இந்த செயல்முறை கடுமையாக இருந்ததால், இந்த நடைமுறை போதுமானதாக இல்லை என்று கடன் வாங்கியவர்கள் வாதிட்டனர். மோசடி குற்றச்சாட்டுகளை அவர்கள் சட்ட உரிமை இழப்பிற்கு ஒப்பாக விவரித்தனர். இதன் விளைவாக தடைப்பட்டியலில் சேர்க்கப்படுதல், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுதல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.




இயற்கை நீதி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்


இந்த வழக்கில் உள்ள முக்கியப் பிரச்சினை, மோசடி வகைப்பாடு குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதல்களும், அவை இயற்கை நீதியின் கோட்பாடுகளுடன், குறிப்பாக ‘ஆடி ஆல்டெரம் பார்டெம்-(audi alteram partem)’ (மறுதரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும்) என்பதனுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதும் அமைந்துள்ளன.


1949-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 35A-பிரிவானது (Banking Regulation Act, 1949), பொது நலன் கருதியோ, வங்கிக் கொள்கையின் நலன் கருதியோ, அல்லது "வங்கிக் கணக்கு வைப்புதாரர்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது வங்கி நிறுவனத்தின் நலன்களுக்குப் பாதகமான" செயல்களைத் தடுப்பதற்காகவோ வங்கிகளுக்கு வழிகாட்ட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளித்தது. இந்த அதிகாரத்தின் மூலமே ஒரு கணக்கை "மோசடி" என வகைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


இருப்பினும், 2016-ஆம் ஆண்டின் முதன்மை வழிகாட்டுதல்களில், ஒரு கணக்கை மோசடி என்று முத்திரை குத்துவதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கடன் வாங்கியவருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிப்பது குறித்த நடைமுறைகள் எதுவும் இடம்பெறவில்லை. 2023-ஆம் ஆண்டில், பாரத ஸ்டேட் வங்கி vs ராஜேஷ் அகர்வால் (SBI vs Rajesh Agarwal) வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களில் இயற்கை நீதியைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு கணக்கையும் மோசடியானது என வகைப்படுத்துவதற்கு முன்பு வங்கிகள் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும், அதற்கான பதிலை பரிசீலிக்க வேண்டும் மற்றும் காரணங்களுடன் கூடிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


2024-ம் ஆண்டிற்குள், இந்திய ரிசர்வ் வங்கி தனது முதன்மை வழிகாட்டுதல்களைப் புதுப்பித்து, அதில் விளக்கம் கோரும் அறிவிப்பு, குறைந்தபட்சம் 21-நாட்கள் பதிலளிக்கும் காலஅவகாசம் மற்றும் காரணத்துடன் கூடிய உத்தரவு ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்தச் செயல்முறையை முறைப்படுத்தியது.


இருந்தபோதிலும், "விளக்கம் அளிப்பது" என்பதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வாய்ப்பும் உள்ளதா என்பதும், மோசடி என வகைப்படுத்த அடிப்படையாக இருந்த தடயவியல் தணிக்கை அறிக்கையைப்  பார்க்கும் உரிமை கடன் வாங்கியவர்களுக்கு உண்டா என்பதும் இன்னும் தீர்க்கப்படாத கேள்விகளாகவே உள்ளன.


நீதிமன்றம் கூறியது என்ன?


உச்சநீதிமன்றம் வங்கிகளின் மேல்முறையீடுகளைப் பகுதியளவு ஏற்றுக்கொண்டு, கணக்குகளை மோசடியானவை என வகைப்படுத்தும் நடைமுறையையும் மாற்றியமைத்துள்ளது. ஒரு கணக்கை மோசடியானது என அறிவிப்பதற்கு முன்பு, வங்கிகள் நேரடி அல்லது வாய்மொழி விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ரத்து செய்தது. ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் கையாளும் வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அத்தகைய ஒரு நிபந்தனை "நடைமுறையில் பொருத்தமற்றது" என்று நீதிமன்றம் கருதியது.


2022-2023-ஆம் நிதியாண்டில் 13,494 மோசடி வழக்குகளும், 2023-24-ஆம் நிதியாண்டில் 36,060 மோசடி வழக்குகளும், 2024-25-ஆம் நிதியாண்டில் 23,953 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியதுடன், வாய்மொழி விசாரணைகளைக் கட்டாயமாக்குவது,  முடிவெடுக்கும் செயல்முறையை முடக்கி, கடன் வாங்குபவர்கள் காலதாமதம் செய்ய வழிவகுக்கும் என்றும் எச்சரித்தது.


மேலும், பாரத ஸ்டேட் வங்காய் vs ராஜேஷ் அகர்வால் (SBI vs Rajesh Agarwal) வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அது தெளிவுபடுத்தியதுடன், நேரில் ஆஜராகி விசாரணை பெறுவதற்கான எந்தவொரு உரிமையையும் அங்கீகரிக்கவில்லை என்றும், இதை எழுத்துப்பூர்வமான மனு மூலம் இச்செயல்முறையை நிறைவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


இருப்பினும், தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டபோது, ​​கடன் வாங்கியவரின் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்தது. ஒரு கணக்கை மோசடியானது என வகைப்படுத்தி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு, தடயவியல் தணிக்கை அறிக்கையை கடன் வாங்கியவருக்கு வழங்குவது வங்கிகளின் கடமை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்த அறிக்கையில் உண்மையில் என்னென்ன அடங்கியுள்ளன மற்றும் அது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பொறுத்தே இந்த வாதம் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.


வெறும் முடிவுகளையும், தீர்மானங்களையும் மட்டும் வழங்குவது இயற்கை நீதி கோட்பாடுகளை முழுமையாகப் பின்பற்றியதாகாது, என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தக் கண்டறிதல்களுக்கான காரணங்கள் அறிக்கையின் உள்ளடக்கத்திலேயே இடம்பெற்றுள்ளன. அந்தக் காரணங்கள் இல்லாமல், கடன் வாங்கியவர் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. அறிக்கையின் முழு உள்ளடக்கத்தையும் படித்தால் மட்டுமே, எடுக்கப்பட்ட முடிவுகளின் முழுமையான பொருளைப் புரிந்துகொள்ள முடியும், என்றும் நீதிமன்றம் கூறியது.


அறிக்கையின் சில பகுதிகளைத் திருத்தி எழுத வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால், அவை மூன்றாம் தரப்பு அல்லது தனியுரிமை தொடர்பானவையாக இருந்தால் மட்டுமே என்றும், தொடர்புடைய தகவல்களை மறைப்பதற்கு வங்கிகள் இதை ஒரு காரணமாகப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் எச்சரித்தது.


இந்திய ரிசர்வ் வங்கியின் விரிவான மோசடி குறித்த வகைப்பாட்டு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் உறுதிசெய்ததுடன், இந்த மூன்று நிலைகள் கொண்ட செயல்முறையானது, வேகத்திற்கும், நியாயத்திற்கும் இடையே ஒரு சரியான சமநிலையை ஏற்படுத்துவதோடு, கடன் வாங்குபவருக்கு நியாயத்தை உறுதிசெய்யும் இயற்கை நீதியின் கோட்பாடுகளுடன் முறையாக உறுதி செய்கிறது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.


மேலும் அது, மோசடி வகைப்பாட்டை, ஒரு குற்றவியல் விசாரணை அல்ல என்றும், மாறாக, “வங்கியால் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஒரு முறையான சரிபார்ப்புப் பணி” என்றும் விவரித்தது. நிதிநிலை அறிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைப் பதிவுகள் உள்ளிட்ட சான்றுகள் பெரும்பாலும் ஆவண வடிவில் உள்ளன. மேலும், அந்தச் சான்றுகள் ஏற்கனவே கடன் வாங்கியவருக்குத் தெரிந்தே இருக்கின்றன.


கடன் வாங்கியவர்கள் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கான வழக்குகளுடன் செய்த ஒப்பீட்டையும் நீதிமன்றம் ஆராய்ந்தது. அந்த வழக்குகளில், வழக்கமாக வாய்மொழி விசாரணைகள் வழங்கப்படுகின்றன. மோசடியும் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாததும் இயல்பில் மிகவும் வேறுபட்டவை என்று நீதிமன்றம் கூறியது. வேண்டுமென்றே தவறு செய்பவரிடம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழி இருந்தும் அவர் செலுத்தாமல் இருக்க முடிவு செய்கிறார். அதேசமயம் மோசடியில் "குற்றவியல் அம்சம்", முறைகேடு, போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவை அடங்கியுள்ளன. அவர்களுக்காக வெவ்வேறு நடைமுறைகளை வடிவமைக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு உரிமை உண்டு என்றும், இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் "ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவை கேள்விக்குட்படுத்தக் கூடாது" என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.


Original Link: ‘Would throw banking operations into disarray’: Why SC rejected oral hearings for accounts declared fraudulent,


Share:

அரசுப் பத்திரங்கள், கருவூல கடன் பத்திரங்கள் மற்றும் பத்திர ஈட்டுத்தொகை என்பவை என்ன?. -குஷ்பூ குமாரி

அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு  தொகுப்பு முதலீடுகளுக்கான (FPI) சதவீத வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றாமல் வைத்துள்ளது. அரசுப் பத்திரங்கள் (Government Securities(G-Secs)) என்றால் என்ன? அவற்றை யார் வெளியிடுகிறார்கள்? பத்திர வருவாய்க்கும் (Bond Yields) இவற்றுக்கும் என்ன தொடர்பு?


தற்போதைய நிகழ்வு என்ன?


இந்திய ரிசர்வ் வங்கி, 2026-27 ஆம் ஆண்டிற்கான கடன் சந்தையில் வெளிநாட்டு  தொகுப்பு  முதலீட்டாளர்களின் (FPI) முதலீடுகளுக்கான சதவீத வரம்புகளை மாற்றாமல் வைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் 6 ஏப்ரல், 2026 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, பொது வழிமுறைக்கான 2027 நிதியாண்டில், அரசுப் பத்திரங்கள் (G-Secs), மாநில அரசுப் பத்திரங்கள் (SGSs) மற்றும் பெருநிறுவன பத்திரங்களில் வெளிநாட்டு தொகுப்பு முதலீட்டாளர்கள் (FPI)  முதலீட்டிற்கான வரம்புகள், செயல்பாட்டில் உள்ள பத்திரங்களின் இருப்பில் முறையே 6%, 2% மற்றும் 15% என்ற அளவிலேயே தொடரும்.


முக்கிய அம்சங்கள் :


1. அரசுப் பத்திரங்கள் அல்லது அரசாங்கப் பத்திரங்கள் என்பவை மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் வெளியிடப்படும் வர்த்தகம் செய்யக்கூடிய ஆவணங்களாகும். அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து பணத்தை கடன் வாங்குவதற்கு இதைப் பயன்படுத்துகிறது.


அடிப்படைத் தகவல்கள்


பத்திரம் என்பது அரசாங்கத்திற்குக் கொடுக்கும் ஒரு கடனாகும்.

அரசுப் பத்திரங்கள் (G-Secs) என்பவை, பொதுமக்களிடமிருந்து கடன் பெறுவதற்காக மத்திய அல்லது மாநில அரசுகளால் வெளியிடப்படும் வர்த்தகம் செய்யக்கூடிய பத்திரங்களாகும். அரசாங்கம் ஆண்டுதோறும் வட்டியை செலுத்தி, இறுதி காலத்தில் உங்கள் அசல் தொகையைத் திருப்பித் தருகிறது. அரசுப் பத்திரங்களில் நடைமுறையில் கடன் தவறும் அபாயம் கிட்டத்தட்ட இல்லை. எனவே, அவை அபாயமற்ற, அரசுப் பாதுகாப்புள்ள பத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


2. கருவூல கடன் பத்திரங்கள் (Treasury Bills) மற்றும் காலவரையறைப் பத்திரங்கள் (Dated Securities) ஆகியவை இரண்டு முக்கிய வகைகளாகும். கருவூல கடன் பத்திரங்கள் (Treasury Bills) என்பவை 91 நாட்கள், 182 நாட்கள் அல்லது 364 நாட்களில் முதிர்வடையும் குறுகிய நிதி ஆவணங்களாகும். காலவரையறைப் பத்திரங்கள் அல்லது அரசாங்கப் பத்திரங்கள் என்பவை 5 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை முதிர்வடையும் நீண்ட நிதி ஆவணங்களாகும்.


3. 2010இல், தற்காலிக பணப்புழக்க ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்யும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி பண மேலாண்மைப் பத்திரங்கள் (Cash Management Bills (CMB)) எனப்படும் ஒரு புதிய குறுகிய கால பத்திரத்தை அறிமுகப்படுத்தியது. கருவூலப் பத்திரங்களின் (T-Bills) அதே பொதுவான தன்மையைக் கொண்ட பண மேலாண்மைப் பத்திரங்கள், 91 நாட்களுக்கும் குறைவான முதிர்வுக் காலத்திற்கு வழங்கப்படுகின்றன.

4. கருவூலப் பத்திரங்கள் அல்லது கருவூல கடன் பத்திரங்கள் (Treasury Bills)  என்பவை 'பூஜ்ஜிய வட்டிப் பத்திரங்கள்' (Zero Coupon Securities) ஆகும். அதாவது, இவை தனியாக எந்த வட்டியையும் வழங்குவதில்லை. அவை தள்ளுபடி விலையில் வெளியிடப்பட்டு, முதிர்வு காலத்தில் முகமதிப்பை விடக் குறைந்த விலையில் மீட்கப்படுகின்றன. இதை ஓர் உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம்:


ஒரு 91-நாள் கருவூலப் பத்திரத்தின் முகமதிப்பு ₹100 என்று வைத்துக்கொள்வோம். இது ₹98.20 என்ற விலையில் வெளியிடப்படலாம். இதன் பொருள், இது ₹1.80 தள்ளுபடி விலையில் வெளியிடப்பட்டுள்ளது என்பதாகும். முதிர்வடையும்போது, ​​இது ₹100-க்குத் திரும்பப் பெறப்படுகிறது. ₹100 மற்றும் ₹98.20 ஆகிய தொகைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை முதலீட்டாளர் இலாபமாகப் பெறுகிறார். எனவே, இதிலிருந்து கிடைக்கும் வருவாய் ₹1.80 ஆகும்.


5. இந்திய ரிசர்வ் வங்கியின்படி, “இந்தியாவில், மத்திய அரசு கருவூலப் பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் அல்லது காலவரையறைப் பத்திரங்கள் ஆகிய இரண்டையும் வெளியிடுகிறது. அதேசமயம், மாநில அரசுகள் கடன் பத்திரங்கள் அல்லது காலவரையறைப் பத்திரங்களை மட்டுமே வெளியிடுகின்றன. இவை மாநில வளர்ச்சிக் கடன்கள் (State Development Loans (SDL)) என்று அழைக்கப்படுகின்றன. அரசுப் பத்திரங்களில் (G-Secs) கடன் தவறுவதற்கான அபாயம் நடைமுறையில் இல்லை. எனவே, அவை அபாயமற்ற, உயர் பாதுகாப்பு வாய்ந்த பத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.”


6. இந்திய ரிசர்வ் வங்கியே அரசுப் பத்திரங்களை ஏலங்கள் மூலம் வெளியிடும் ஒரே அதிகார அமைப்பாகும். இந்த ஏலங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் மைய வங்கித் தீர்வு (Core Banking Solution (CBS)) தளமான இ-குபேர் (E-Kuber) எனப்படும் மின்னணுத் தளத்தில் நடத்தப்படுகின்றன. இ-குபேரில் (E-Kuber) உறுப்பினர்களாக உள்ள வணிக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (UCBs), காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிறர் இந்த மின்னணுத் தளம் வழியாக ஏலத்தில் தங்கள் ஏலத்தொகையைச் சமர்ப்பிக்கலாம்.





பத்திர வருவாய் மற்றும் பத்திர விலையுடனான அதன் தொடர்பு


1. அரசாங்கப் பத்திரங்களின் மீதான பயனுள்ள வட்டியானது ஈட்டு விகிதம் (yield) என்று அழைக்கப்படுகிறது. ஆனால், வருமான விகிதம் நிலையானது அல்ல, அது பத்திரத்தின் விலையைப் பொறுத்து மாறுகிறது. ஆனால் அதைப் புரிந்துகொள்ள, பத்திரங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை ஒருவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பத்திரத்திற்கும் ஒரு முகமதிப்பும் (Face Value) ஒரு 'கூப்பன்' செலுத்துதலும் (நிலையான வட்டி) உண்டு. பத்திரத்திற்கு ஒரு சந்தை விலையும் உள்ளது. இந்த விலையானது முகமதிப்பிற்குச் சமமாக இருக்கலாம் அல்லது மாறுபட்டும் இருக்கலாம்.


2. ஒரு 10 ஆண்டு கால அரசாங்கப் பத்திரத்தின் முகமதிப்பு ரூ. 100 என்றும், அதன் கூப்பன் தொகை ரூ. 5 என்றும் வைத்துக்கொள்வோம். இந்தப் பத்திரத்தை வாங்குபவர்கள் அரசாங்கத்திற்கு ரூ. 100 (முகமதிப்பு) செலுத்துகிறார்கள். அதற்குப் பதிலாக, அரசாங்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு ரூ. 5 (கூப்பன் தொகை) செலுத்தி, காலக்கட்டம் முடிவில் அவர்களின் ரூ. 100-ஐத் திருப்பிக் கொடுக்கும். இந்த நிலையில், பத்திரத்தின் ஈட்டுத்தொகை, அல்லது பயனுள்ள வட்டி விகிதம், 5% ஆகும். இந்த ஈட்டுத்தொகை என்பது, இன்று ரூ. 100-ஐ முதலீட்டாளர் அரசுக்கு அளித்ததற்காக அவருக்குக் கிடைக்கும் வருமானமே இந்த ‘வருவாய்’ ஆகும். மேலும், அந்தப் பணத்தை 10 ஆண்டுகளுக்குத் தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள இயலாதிருப்பதற்குப் பெறும் வெகுமதியாகவும் இது அமைகிறது.


3. ஒரே ஒரு அரசுப் பத்திரம் மட்டும் இருப்பதாகவும், அதை வாங்க இரண்டு நிலையில் வாங்குபவர்கள் (அல்லது அரசுக்குக் கடன் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள்) இருப்பதாகவும் இதற்கான சூழலைக் கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய சூழ்நிலையில், அந்த இரண்டு வாங்குபவர்களுக்கும் இடையிலான போட்டி ஏலத்தின் காரணமாக, பத்திரத்தின் விற்பனை விலை ரூ. 100-லிருந்து ரூ. 105-ஆகவோ அல்லது ரூ. 110-ஆகவோ உயரக்கூடும். முக்கியமாக, அந்தப் பத்திரம் ரூ. 110-க்கு விற்கப்பட்டாலும் கூட, அதற்கான வட்டித் தொகையான ரூ. 5-ல் எந்த மாற்றமும் இருக்காது. எனவே, பத்திரத்தின் விலை ரூ. 100-லிருந்து ரூ. 110-ஆக உயரும்போது, ​​அதன் ஈவு (yield) 4.5%-ஆகக் குறைகிறது.


4. அரசுப் பத்திரங்களின் ஈவு விகிதங்கள், பொருளாதாரத்தில் அப்போதைய சூழலில் நிலவும் வட்டி விகிதங்களுக்கு இணையாகவே அமையும். மேலே குறிப்பிடப்பட்ட உதாரணத்தின் அடிப்படையில் பார்த்தால், பொருளாதாரத்தில் நிலவும் வட்டி விகிதம் 4%-க இருக்கும்போது, ​​அரசு 5% ஈவு விகிதம் கொண்ட ஒரு பத்திரத்தை (அதாவது, ரூ. 100 முகமதிப்பு மற்றும் ரூ. 5 வட்டித் தொகை கொண்ட பத்திரம்) வெளியிடுவதாக அறிவித்தால், அதிக வட்டி வருமானத்தைப் பெறுவதற்காகப் பலரும் அந்தப் பத்திரத்தை வாங்க வருவார்கள்.


5. இந்த அதிகரித்த தேவை, பத்திரங்களின் விலைகளை உயர்த்தத் தொடங்கும். அதே நேரத்தில், வருவாய்களும் குறையத் தொடங்கும். இந்தப் செயல்முறை தொடர்ந்து நடைபெறும். பத்திரத்தின் விலை ரூ. 125-ஐ எட்டும் வரையில், ரூ. 5 என்ற கூப்பன் செலுத்தும் தொகையானது 4% வருவாயை ஈட்டித் தரும். இந்த வருவாய் விகிதம், பொருளாதாரத்தின் பிற துறைகளில் நிலவும் விகிதத்திற்குச் சமமாக இருக்கும்.


6. இந்திய ரிசர்வ் வங்கியின்படி, “சந்தைக்கான வட்டி விகிதங்கள் உயர்ந்தால், ஒரு பத்திரத்தின் விலை குறையும். இதற்கு நேர்மாறாக, வட்டி விகிதங்கள் அல்லது சந்தை வருவாய் குறைந்தால், பத்திரத்தின் விலை உயரும். ஏனெனில், ஒரு பத்திரத்தின் வருவாய் அதன் விலைக்கு நேர்மாறு விகிதத்தில் உள்ளது.”


7. 'வருவாய் வளைகோடு' (yield curve) என்பது, வெவ்வேறு கால அளவுகளில் (சமமான கடன் மதிப்பீட்டைக் கொண்ட) பத்திரங்களின் ஈட்டுத்தொகைகளைக் காட்டும் ஒரு வரைபடப் பிரதிநிதித்துவம் ஆகும். பொதுவாக, இந்தச் சொல் அரசாங்கப் பத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், அவை ஒரே மாதிரியான 'இறையாண்மை உத்தரவாதத்தை' (sovereign guarantee) கொண்டிருக்கின்றன.


8. பத்திர முதலீட்டாளர்கள் பொருளாதாரம் இயல்பாக வளரும் என்று எதிர்பார்த்தால், அவர்கள் நீண்ட காலத்திற்கு கடன் கொடுக்கும்போது அதிக வெகுமதியை (அதாவது, அதிக வருவாயை) எதிர்பார்ப்பார்கள். இது ஒரு இயல்பான வருவாய் வளைவுக்கு வழிவகுக்கிறது. இந்த வளைவு மேல்நோக்கிச் சரிவாக இருக்கும்.


9. வருவாய் வளைவின் செங்குத்தானது எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்து வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக நீண்ட காலக் கடன்களுக்கான ஈட்டுத்தொகை இருக்கும். பொருளாதாரம் மிகக் குறைவாகவே வளரும் என்று எதிர்பார்க்கப்படும்போது, ​​ஈட்டு வளைவு  குறைவாக இருக்கும்.


10. நீண்ட காலப் பத்திரத்தின் வருவாய், குறுகிய காலப் பத்திரத்தின் வருவாயை விடக் குறைவாக இருக்கும்போது வருவாய் தலைகீழ் (Yield inversion) மாற்றம் ஏற்படுகிறது. இது ஒரு பொருளாதார மந்தநிலையின் எச்சரிக்கை அறிகுறியாகும். ஒரு தலைகீழ் வருவாய் வளைவு, எதிர்கால வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடையும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதைக் காட்டுகிறது. ஏனெனில், பணத்திற்கான தேவை இன்று இருப்பதை விட மிகவும் குறைவாக இருக்கும். எனவே வருவாய்களும் குறைவாக இருக்கும்.


திறந்த சந்தை நடவடிக்கைகள் (Open Market Operations (OMO))


1. இந்திய ரிசர்வ் வங்கி, சந்தையில் ரூபாயின் பணப்புழக்கத்தை நிர்வகிக்க நீடித்த நிலையில் சரிசெய்வதற்காக, திறந்த சந்தை நடவடிக்கைகளை (OMOs) பயன்படுத்துகிறது. சந்தையில் அதிகப்படியான பணப்புழக்கம் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி உணரும்போது, ​​அது அரசுப் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் ரூபாயின் பணப்புழக்கத்தை குறைக்கிறது.


2. இதேபோல், பணப்புழக்க நிலைமைகள் இறுக்கமாக இருக்கும்போது, ​​மத்திய வங்கி சந்தையிலிருந்து பத்திரங்களை வாங்குகிறது. இந்த நடவடிக்கை சந்தையில் பணப்புழக்கத்தை வெளியிடுகிறது. இது, அமைப்பில் உள்ள பணவீக்கத்தையும் பண விநியோகத்தையும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.


3. இருப்பினும், பணப்புழக்கம் குறையும்போது, ​​இந்திய ரிசர்வ் வங்கி சந்தையில் அதிக அரசுப் பத்திரங்களை வெளியிடுவதாலும், பத்திரங்களை வாங்குபவர்கள் இந்தப் பத்திரங்களுக்கு அதிக வட்டி விகிதத்தைக் கோருவதாலும், அது பத்திர வருவாயில் அதிக உயர்வுக்கு வழிவகுக்கலாம்.


Original Link: Government securities, T-bills, and bond yields.


Share:

2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் உற்பத்திக்கான புதிய அனுமதிகள் வழங்கப்படாது. -குஷ்பூ குமாரி

 



2027-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அல்லது கூடுதல் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அனுமதிகளை அரசாங்கம் நிறுத்தவுள்ளது. இந்த உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது?  எந்த வகையான சர்வதேச ஒப்பந்தங்கள் இதைக் கையாளுகின்றன?


தற்போதைய செய்தி


புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களின் (hydrofluorocarbons (HFCs)) உற்பத்தியை படிப்படியாகக் குறைப்பதற்கான  சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஏற்ப, டிசம்பர் 31, 2027ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய அல்லது கூடுதல் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து மாநில மற்றும்  ஒன்றிய  அரசு அதிகாரிகளுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


புதிய ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் உற்பத்தியைத் தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவு, 2100-ஆம் ஆண்டிற்குள் 0.5 டிகிரி செல்சியஸ் வரையிலான புவி வெப்பமயமாதலைத்  குறைக்கும் என எதிர்பார்க்கப்படும் கிகாலி திருத்தத்திற்கு (Kigali amendment) ஏற்ப அமைந்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு இது ஏன் முக்கியமானது என்பதற்கான காரணங்கள்  கூறப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. ஓசோன் படலத்தின் சேதத்தைத் சமாளிப்பதற்காக, குளோரோ ஃபுளோரோ கார்பன்களைப் படிப்படியாக நீக்கி, 2010-ஆம் ஆண்டு முதல் அவற்றுக்கு முழுமையான தடை விதித்த, 1989-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாண்ட்ரியல் ஒப்பந்ததத்தில் இந்தியா ஓர் உறுப்பினராக உள்ளது.


2. பின்னர் 2021-ஆம் ஆண்டில், குளோரோ ஃபுளோரோ கார்பன்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்களின் பயன்பாடுகளைப் படிப்படியாகக் குறைக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்ட, கிகாலி திருத்தத்தை இந்தியா அங்கீகரித்தது. ஒப்பந்தத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தம், 2016இல்  ருவாண்டாவின் கிகாலியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


3. இந்தியா, 2028 ஜனவரி 1 முதல் தொடங்கும் வகையில் ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன் (HFC) வாயுக்களை படிப்படியாகக் குறைக்கும் அட்டவணைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி, 2032-ஆம் ஆண்டிற்குள் 10% குறைத்து, அதை 2047-ஆம் ஆண்டிற்குள் 85% வரை அதிகரித்து குறைக்கும் திட்டம் உள்ளது.




4. இது, கிகாலி திருத்தத்தின் கீழ் உள்ள ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன் பயன்பாட்டைக் குறைக்கும் கால அட்டவணையுடனும், ஜனவரி 1, 2028-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கட்டுப்பாட்டில் உள்ள பயன்பாடுகளுக்காகப் புதிய ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கோ அல்லது இருக்கும் மையங்களை விரிவாக்கம் செய்வதற்கோ தடை விதிக்கப்படும். மேலும், ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன் உற்பத்தியை அனுமதிப்பதற்கான ஒரு தகுந்த கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்கின்றனர்.


மாண்ட்ரீல் ஒப்பந்தத்திலிருந்து கிகாலி திருத்தம் வரை: பருவநிலை மாற்றப் போராட்டத்தில் ஓசோன் ஒப்பந்தம்  பற்றி


1. 1989-ஆம் ஆண்டு மாண்ட்ரீல் ஒப்பந்தமானது, வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அது தொடக்கத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாக இருக்கவில்லை. முன்னர், குளிர்பதன  துறைகளில் பயன்படுத்தப்பட்ட குளோரோ ஃப்ளூரோ கார்பன்கள் (CFCs) உள்ளிட்ட சில வேதிப்பொருட்கள், மேல் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கை சேதப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது.


2.  இந்த வாயுக்களின் அதிகப்படியான பயன்பாடு ஓசோன் அடுக்கின் சுருக்கத்திற்கும், அண்டார்டிக்கா பகுதியில் “ஓசோன் துளை” உருவாகவும் முக்கிய காரணியாக இருந்தது. மாண்ட்ரீல் ஒப்பந்தம், குளோரோஃப்ளூரோ கார்பன்கள் மற்றும் பிற ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் பொருட்களை (Ozone-Depleting Substances (ODS)) முழுமையாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. கடந்த   30 ஆண்டுகளாக இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.


3. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின்படி, மாண்ட்ரீல் ஒப்பந்தமானது வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகப் போற்றப்படுகிறது. இது ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் பொருட்களில் (ODS) 98%-ஐ படிப்படியாக அகற்றி, இந்த நூற்றாண்டின் இடைப்பகுதிக்குள் ஓசோன் படலத்தை சேதத்தில் இருந்து மீட்பதற்கான வழியாக அமையும் என்கின்றனர். 


4. ஓசோன் படலத்தை அழிக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட வாயுக்களே ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும்  வாயுக்கள் (ODS) ஆகும். குளோரோஃப்ளூரோகார்பன்கள் (CFC) ஹைட்ரோகுளோரோஃப்ளூரோகார்பன்கள் (HCFC) ஹைட்ரோப்ரோமோஃப்ளூரோகார்பன்கள் (Hydrobromoflurocarbons (HBFC)), ஹாலோன்கள், மெத்தில் புரோமைடு (Methyl bromide), கார்பன் டெட்ராகுளோரைடு (Carbon tetrachloride) மற்றும் மெத்தில் குளோரோஃபார்ம் (Methyl chloroform) ஆகியவை இதில் அடங்கும்.


ஓசோன் (வேதியியல் ரீதியாக, மூன்று ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட ஒரு மூலக்கூறு, அல்லது O3) பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 முதல் 50 கிமீ உயரத்தில் உள்ள மேல்மண்டலமான “அடுக்கு மண்டலம்” (Stratosphere) பகுதியில் காணப்படுகிறது. இது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவதால், பூமியில் உயிர்கள் வாழ்வதற்கக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் புற ஊதா கதிர்கள் மனிதர்களுக்குத் தோல் புற்றுநோயையும், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்குப் பலவிதமான நோய்களையும், உடல் குறைபாடுகளையும் ஏற்படுத்தக்கூடியவை.


5. ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், குளோரோ புளோரோ கார்பன்கள் (CFC) பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. சில  சமயங்களில், இவை முதலில் ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன்கள் (HCFC) மூலம் மாற்றப்பட்டன.  பின்னர் இறுதியாக ஓசோன் படலத்திற்கு மிகக் குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ புளோரோ கார்பன்கள் (HFC) மூலம் மாற்றப்பட்டன. தற்போது, குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில், ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன்கள் (HCFC) பயன்பாட்டிலிருந்து ஹைட்ரோபுளோரோகார்பன்கள் (HFC) பயன்பாட்டிற்கு மாறும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


6. ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்கள் (hydrofluorocarbons (HFCs)) ஓசோன் படலத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்துவதில்லை. இதுவே அவை முதலில் தடை செய்யப்படாததற்குக்  காரணமாக அமைந்தது. ஆனால், அவை மிகவும் சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். எனவே, மாண்ட்ரீல் ஒப்பந்தத்தின்கீழ் அவை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


7. இருப்பினும், புவி வெப்பமயமாதலை ஏற்படுத்துவதில் கார்பன் டை ஆக்சைடைவிட ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகிறது. உண்மையில், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்படி (United Nations Environment Programme (UNEP)), அதிகம் பயன்படுத்தப்படும் 22 ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களின் சராசரி புவி வெப்பமயமாதல் திறன், கார்பன் டை ஆக்சைடைவிட 2,500 மடங்கு அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


8. கிகாலி திருத்த ஒப்பந்தம், தற்போது பயன்படுத்தப்படும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன் வாயுக்களில் 80–90% வரை 2050-ஆம் ஆண்டுக்குள் குறைக்க முயல்கிறது. இதனால், 2100-ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை உயர்வை 0.5°C வரை தவிர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


9. கிகாலி ஒப்பந்தத்தின்கீழ், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், தங்களின் ஹைட்ரோஃப்ளூரோகார்பன் பயன்பாட்டைப் படிப்படியாக, அவற்றுக்குப் பதிலாக காலநிலைக்கு ஏற்ற மாற்றுகளைப் பயன்படுத்துவதற்கான வெவ்வேறு காலஅட்டவணைகளுடன், தனித்தனி நாடுகளின் குழுக்களில் இடம்பெற்றுள்ளன.

10. இந்தியா, பஹ்ரைன், ஈரான், ஈராக், குவைத், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் சேர்த்து இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்த இலக்கின்படி, இந்தியா தனது ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) பயன்பாட்டை 2047-ஆம் ஆண்டிற்குள் 80% குறைக்க வேண்டும். இதே இலக்கை, சீனா 2045-ஆம் ஆண்டிற்குள்ளும், அமெரிக்கா 2034-ஆம் ஆண்டிற்குள்ளும் அடைய வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மீத்தேன்


1. ஆறு முக்கிய பசுமை இல்ல வாயுக்களில், கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக மீத்தேன் 2-வது இடத்தில் உள்ளது. இது உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில்  17 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.


2. 100 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வளிமண்டலத்தில் நிலைத்திருக்கும் கார்பன் டை ஆக்சைடுடன் ஒப்பிடுகையில், மீத்தேன் 12 ஆண்டுகள் என்ற ஒப்பீட்டளவில் குறுகிய கால அளவைக் கொண்டுள்ளது. ஆனால், கார்பன் டை ஆக்சைடைவிட 80 மடங்கு அதிக புவி வெப்பமடைதளுக்கான ஆற்றலைக் கொண்டுள்ளது. தொழிற்புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட வெப்பநிலை உயர்வில் குறைந்தது 30 சதவீதம் மீத்தேன் வெளியேற்றத்தின் காரணமாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.















3.  மீத்தேன் என்பது நிறமற்ற, வாசனையற்ற ஒரு வாயு ஆகும். இது இயற்கையான மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூலங்களைக் கொண்டுள்ளது. இயற்கையாகவே, இது சதுப்பு நிலங்களில் நீருக்கடியில் தாவரங்கள் சிதைவடைவதன் காரணமாக உருவாகிறது. கரையான், எரிமலைகள், காட்டுத்தீ போன்றவை மீத்தேன் உருவாவதற்கான இயற்கை ஆதாரங்களாகும்.


4. மனிதனால் உருவாக்கப்படும் மீத்தேன் வாயு வெளியேற்றத்திற்கு காரணமான முக்கியத் துறைகள்: வேளாண்மைத் துறை, இது 40% வெளியேற்றத்திற்குக் காரணமாகிறது. இதில் கால்நடை கழிவுகள் மற்றும் நெல் சாகுபடி ஆகியவை அடங்கும். இதற்குப் பிறகு, புதைபடிவ எரிபொருள் துறை 35% மீத்தேன் வெளியேற்றத்திற்குக் காரணமாக உள்ளது. கழிவு மேலாண்மை, ஏறக்குறைய 20% வெளியேற்றத்திற்குக் காரணமாக உள்ளது. இது குப்பை கிடங்குகள், திறந்தவெளி கழிவுகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளில் உயிரியல் பொருட்கள் சிதைவதால் உருவாகிறது.


5. 1997-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2005-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த கியோட்டோ  ஒப்பந்தம் (Kyoto Protocol), 6 பசுமை இல்ல வாயுக்களைப் பட்டியலிட்டது. அவற்றில் மீத்தேனும் ஒன்றாகும். கியோட்டோ ஒப்பந்தமானது, இந்த வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் மீது கட்டாய  விதிமுறைகளை நிர்ணயித்தது.


6. பாரிஸ் ஒப்பந்தம் 2015-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாயு வெளியேற்ற இலக்குகளை நிர்ணயிப்பதில் வளர்ந்த நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்பார்த்தபோதிலும்,  தேசிய அளவில் தீர்மானிக்கப்படும் அணுகுமுறையை நோக்கிய மாற்றத்தைக் குறித்தது.


7. COP 26-வது காலநிலை மாநாட்டில், 2030-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய மீத்தேன் வெளியேற்றத்தை 2020-ஆம் ஆண்டு அளவிலிருந்து குறைந்தபட்சம் 30 சதவீதம் குறைக்கும்  வேண்டும் என்கிற முக்கிய இலக்குடன், உலகளாவிய மீத்தேன் உறுதிமொழி (Global Methane Pledge (GMP)) ஒரு தன்னார்வ சர்வதேச முன்னெடுப்பாகத் தொடங்கப்பட்டது.


8. அஜர்பைஜானின் பாகு (Baku) நகரில் நடைபெற்ற COP29-வது காலநிலை மாநாட்டில், 30-க்கும் மேற்பட்ட நாடுகள் கரிமக் கழிவுகளிலிருந்து மீத்தேன் வாயுவைக் குறைப்பதற்கான பிரகடனத்தை அங்கீகரித்தன. இது உலகளாவிய காலநிலை முன்னெடுப்புகளில் ஒரு  முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் மொத்த மீத்தேன் வாயுவில் 20% பங்களிக்கும் உணவுக்கழிவுகள்,  வேளாண் கழிவுகள் மற்றும் கழிவுநீர் போன்ற கரிமக் கழிவுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதை இந்தப் பிரகடனம் இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Original Link: No new clearances for HFC production in India after 2027.


Share: