இந்திய அரசியலமைப்பின் 44வது சட்டப்பிரிவு -பிரியா குமாரி சுக்லா

 ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உத்தரகாண்டில் பொதுக் குடிமைச் சட்டத்தின் (Uniform Civil Code (UCC)) மாதிரியை பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாதிரியில், பழங்குடியினர், அவர்களின் பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் சட்டங்களை ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்திலிருந்து விலக்கியுள்ளோம். எப்பொழுதெல்லாம் நாட்டில் பொதுக் குடிமைச் சட்டத்தை அமல்படுத்துகிறோமோ, அங்கு பழங்குடியின சமூகங்களுக்கு விலக்களிப்போம். இதில் எந்த குழப்பமும் இல்லை” என்றார்.


திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்காக இந்தியாவில் உள்ள அனைத்து மத சமூகங்களுக்கும் பொருந்தும் ஒரே மாதிரியான சட்டமே குடிமைச் சட்டமாகும்.  அரசியலமைப்பின் 44-வது சட்டப்பிரிவு, இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று கூறுகிறது.


பிரிவு 44 என்பது அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாட்டின் (directive principles) ஒரு பகுதியாகும். பிரிவு 37-ல் வரையறுக்கப்பட்ட இந்தக் கோட்பாடுகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படாதவை. ஆனால், அவை நல்லாட்சிக்கு அடிப்படையானவை. மாறாக, அடிப்படை உரிமைகள் (Fundamental rights) நீதிமன்றத்தில் நடைமுறைப்படுத்தக்கூடியவை. 44-வது பிரிவு "அரசு முயற்சி செய்யும்"  (‘state shall endeavour’) என்று கூறுகிறது. இதற்கு நேர்மாறாக, “வழிகாட்டுதல் கோட்பாடுகள்” (‘Directive Principles’) அத்தியாயத்தில் உள்ள பிற கட்டுரைகள் குறிப்பாக உள்ளன. "குறிப்பாக அதன் கொள்கையை வழிநடத்தும்" மற்றும் "அரசின் கடமையாக இருக்க வேண்டும்" போன்ற வலுவான சொற்றொடர்களைப் பயன்படுத்துகின்றன. 


எடுத்துக்காட்டாக, பிரிவு 43 "அரசு பொருத்தமான சட்டத்தின் மூலம் முயற்சி செய்யும்" என்று கூறுகிறது. இருப்பினும், "பொருத்தமான சட்டத்தின் மூலம்" என்ற சொற்றொடர் பிரிவு 44-ல் சேர்க்கப்படவில்லை. இது பிரிவு 44-ஐ விட மற்ற உத்தரவுக் கொள்கைகளில் அரசின் கடமை அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.




Original article:

Share:

PM E-Drive: திட்டத்தின் முதல் மாதத்திலேயே ₹320 கோடி ஊக்கத்தொகையை அரசாங்கம் வழங்கத் தொடங்குகிறது. -எஸ்.ரோனேந்திர சிங்

 அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10,900 கோடி ரூபாய்  செலவில் மொத்தம் 28,81,436 யூனிட் மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்படும். 


அக்டோபர் 1 முதல்,  புதுமையான வாகன மேம்பாட்டுத் திட்டத்தின்  (PM E-DRIVE)  கீழ் மின்சார வாகனங்களான இரண்டு சக்கர (e2W), மூன்று சக்கர (e3W) மற்றும் இ-கார்ட் / ரிக்ஷாவுக்கு அரசாங்கம் சுமார் 320 கோடியை ரூபாய் வழங்கியுள்ளது. 


கனரக தொழில்துறை அமைச்சகத்தின் படி (Ministry of Heavy Industries (MHI)),  அக்டோபர் 28 நிலவரப்படி ஏற்கனவே 52 சதவீத இரண்டு சக்கர மின்சார வாகன  விற்பனையையும், மூன்று சக்கர மின்சார வாகன (L5) பிரிவில் 73 சதவீதத்தையும் அடைந்துள்ளது. மொத்தம் ₹10,900 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 


முதல் ஆண்டில்,  இரண்டு சக்கர மின்சார வாகனங்களின் (e2W) உச்சவரம்பு 10,64,000 யூனிட்கள் உள்ளது. அதில் இருந்து இரண்டு சக்கர மின்சார வாகன நிறுவனங்கள், அக்டோபர் 28 நிலவரப்படி 5,49,698 யூனிட்களை விற்றுள்ளன (52 சதவீதம்) மற்றும் அதே தேதியில் 3,28,524 யூனிட்களுக்கான உரிமைகோரல்களை கனரக தொழில்துறை அமைச்சகத்தின் போர்ட்டலில் சமர்ப்பித்துள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 


மூன்று சக்கர மின்சார வாகனப் பிரிவில் (e3W), முதல் ஆண்டில் 43,371 யூனிட்கள் உள்ளது. உற்பத்தியாளர்கள் அக்டோபர் வரை 912 யூனிட்களை விற்றுள்ளனர் மற்றும் 758 யூனிட்களுக்கு உரிமைகோரல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 


மூன்று சக்கர மின்சார வாகன (e3W)  (L5) வகைக்கு, முதல் ஆண்டில் 80,546 யூனிட்டுகளுக்கு வரம்பு உள்ளது. இதில் அக்டோபர் 28 நிலவரப்படி, உற்பத்தியாளர்கள்  58,640 யூனிட்களை (73 சதவீதம்) விற்க முடிந்தது. மேலும், 40,075 யூனிட்களுக்கான உரிமைகோரல்கள் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 


எனவே, மொத்தத்தில் இந்த வகைகளின் 11,87,917 மின்சார வாகனங்கள் (EVs) முதல் ஆண்டில் மானியமாக வழங்கப்படும் என்ற வரம்பு உள்ளது. அவற்றில் அக்டோபர் 28 நிலவரப்படி 6,09,250 வாகனங்கள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன. மேலும், 3,69,357 மின்சார வாகனங்களுக்கான உரிமைகோரல்கள் (51 சதவீதம்) இணைய இடைமுகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


மொத்த செலவினமான ₹1,575 கோடி ரூபாயில், அக்டோபர் 28, 2024 நிலவரப்படி ₹514 கோடி ரூபாய் உரிமைகோரல்கள் போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து IFCI (திட்ட மேலாண்மை நிறுவனம்) ₹352 கோடி ரூபாய்க்கு பரிந்துரைத்துள்ளது. கனரக தொழில்துறை அமைச்சகம் ₹320 கோடி ரூபாய்  வழங்கியுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 


மீதமுள்ள வாகனங்களுக்கு IFCI-ல் ₹147 கோடிக்கான உரிமைகோரல்களும் நடைமுறையில் உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. 


PM E-Drive திட்டம் மார்ச் 31, 2026 வரை செயல்படுத்தப்படும். மின்சார மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் (Electric Mobility Promotion Scheme (EMPS) 2024, இரண்டு சக்கர மின்சார வாகனம் (e2W)  மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனத்திற்கான (e3W)  ஊக்கத்தொகை  வழங்குதல் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, 2024 வரை செயல்படுத்தப்பட்டது. 


PM E-DRIVE திட்டமானது இ-ஆம்புலன்ஸ்கள், இ-டிரக்குகள், இ-பஸ்கள் மற்றும் சார்ஜிங் மேம்படுத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ₹10,900 கோடி பட்ஜெட்டில் மொத்தம் 28,81,436 வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

 

2024-25 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட இரண்டு சக்கர மின்சார வாகனம் (e2W) / மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு (e3W) ஒரு  கிலோவாட் மணிக்கு (kWh) ₹5,000 ரூபாய்  மற்றும் திட்டத்தின் 2025-26 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட இரண்டு சக்கர மின்சார வாகனம் (e2W) / மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு (e3W) ஒரு கிலோவாட் மணிக்கு (kWh) ₹2,500 ரூபாய் ஊக்கத்தொகையை அரசாங்கம் வழங்குகிறது. மேலும், திட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு வாகனத்திற்கு ஆண்டு வாரியாக ஊக்கத்தொகை அல்லது இரண்டு சக்கர மின்சார வாகனம் (e2W) / மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு (e3W) தொழிற்சாலை விலையில் 15 சதவீதம், இதில் எது குறைவோ இருக்குமோ அது வழங்கப்படும். 




Original article:

Share:

சரக்கு மற்றும் சேவை வரி (GST) சுற்றறிக்கைகள் தெளிவாகவும் புரிந்துகொள்ள எளிதாகவும் இருக்க வேண்டும் - மோகன் ஆர் லவி

 இது மதிப்பீட்டு செயல்முறையை எளிதாக்கும் மற்றும் தீர்ப்பாயங்களில் மேல்முறையீடுகள்  அதிகரிப்பதை குறைக்கும். 


மாதாந்திர சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பொருளாதாரத்தின் நிலையை அளவிடுவதற்கான ஒரு வகையான அளவுகோலாக மாறி வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டால், அக்டோபர் 2024 தரவு, இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருப்பதைக் குறிக்கிறது. 


அதிகரித்த உள்நாட்டு விற்பனை மற்றும் சிறந்த இணக்கம் காரணமாக, அக்டோபர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 9% அதிகரித்து ₹1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 2024-ல் ₹2.10 லட்சம் கோடியைத் தொடர்ந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூலாகும்.


மத்திய சரக்கு மற்றும் சேவை வரி வசூல் (Central GST) 33,821 கோடி ரூபாயாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூல் (State GST) 41,864 கோடி ரூபாயாகவும்,  ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் (IGST) 99,111 கோடி ரூபாயாகவும், செஸ் (cess) 2,550 கோடி ரூபாயாகவும் வசூலானது. 


சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் தரவு, சிறந்த இணக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு மதிப்பீடுகள் போன்ற பொருளாதாரம் அல்லாத காரணிகளால் வருவாய் எவ்வளவு என்பதை முன்னிலைப்படுத்தவில்லை. இவை இரண்டும் சந்தேகத்திற்கு இடமின்றி வருவாய் அதிகரிப்புக்கு பங்களிக்கின்றன.


பொதுவாக, வரி செலுத்துவோர் சரக்கு மற்றும் சேவை வரி சட்டங்களுக்கு இணங்கியுள்ளனர். மின்-விலைப்பட்டியல் இல்லாத உள்ளீட்டு வரி கடன் பெறுவதற்கான போலி விலைப்பட்டியல் பயன்பாட்டை குறைத்துள்ளது.  இருப்பினும், சரக்கு மற்றும் சேவை வரி மதிப்பீடுகள் வருவாய் வசூலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. 


குவிந்து கிடக்கும் ஏராளமான மேல்முறையீடுகளைக் கையாள்வதற்குத் தேவையான வேகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி  தீர்ப்பாயங்கள் நிறுவப்படவில்லை.  மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) மதிப்பீடுகள் சுமூகமாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தகுதியான வழக்குகள் மட்டுமே தீர்ப்பாயங்களில் முடிவடைகின்றன. தற்போதைய சில சுற்றறிக்கைகளைப் போலல்லாமல், தெளிவான மற்றும் அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய சுற்றறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் இதைச் செய்ய முடியும். 


உதாரணமாக, பிரிவு 128A மற்றும் விதி 164 ஆகியவை மார்ச் 31, 2025-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரி செலுத்தப்பட்டால், சில நிதியாண்டுகளுக்கு வட்டி அல்லது அபராதம் அல்லது இரண்டையும் தள்ளுபடி செய்ய பல்வேறு அறிவிப்புகள் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 


இருந்தபோதிலும், CBIC சுற்றறிக்கை எண் 238/32/2024-GST வெளிவர வேண்டிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை.  இது 15 பக்கங்களுக்கு மேல், விண்ணப்பத்தை தாக்கல் செய்தல், வரி செலுத்துதல் மற்றும் செயலாக்கம் தொடர்பான சிக்கல்களை தெளிவுபடுத்தி உள்ளது. 

 

முகாந்தரம் எங்கே? 


கடந்த ஆண்டு அல்லது அதற்கு மேலாக, சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில்,  வரி விகிதத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான கடந்த கால மதிப்பீடுகளை முடிக்க 'எங்கே முகாந்தரம் உள்ளது' என்ற சொற்றொடரை விரும்பியதாகத் தெரிகிறது. இந்த வார்த்தையை வரையறுக்க எந்த வழிகாட்டுதலும் இல்லாததால், வரி செலுத்துவோர் இந்த சொற்றொடரை எவ்வாறு தீவிரமாக மதிப்பிட்டு,  அதிகாரிகள் எப்படி விளக்குவார்கள் என்று கவலைப்படுகிறார்கள். 236/30/2024 சுற்றறிக்கை இந்த தலைப்பில் சில வழிகாட்டல்களை வழங்க முயல்கிறது. 


சரக்கு மற்றும் சேவை வரி சூழலில், 'எங்கே உள்ளபடி ஒழுங்குபடுத்தப்பட்டது' என்ற சொற்றொடர், குறைந்த விகிதத்தில் செலுத்தப்பட்ட கட்டணம் அல்லது வரி செலுத்துவோர் கோரிய விலக்கு ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் அதிக விகிதத்தில் வரி செலுத்தப்பட்டிருந்தால் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. 


சரக்கு மற்றும் சேவை வரி  கவுன்சிலின் நோக்கம், வரி செலுத்துபவரின் நிலையின் அடிப்படையில், பூஜ்ய விகிதம் உட்பட குறைந்த விகிதத்தில் பணம் செலுத்துவதை முறைப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது வரிப் பொறுப்பை முழுமையாக வெளியேற்றுவதாகும்.


அடிப்படையில் உள்ளபடி மதிப்பீடுகளில் வரி செலுத்துவோரின், பல கேள்விகளை சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறதா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.


ஒரு சில முரண்பாடுகளைத் தவிர, சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் நியாயமான நிலைகளில் இருப்பதாகத் தெரிகிறது. வரி செலுத்துவோர், இத்தகைய சட்டங்கள் மற்றும் இணைய இடைமுகத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களுக்கு பழகிவிட்டனர். தெளிவற்ற சுற்றறிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளை எவ்வாறு முடிப்பது என்பது குறித்த விரிவான வழிமுறைகள் இல்லாதது கவலைக்குரிய பகுதிகளாக உள்ளன. இவை சரி செய்யப்பட்டால், மாதாந்திர சரக்கு மற்றும் சேவை வரிவருவாய் தொடர்ந்து 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்.




Original article:

Share:

கைது செய்வதற்கான காரணத்தை கைது செய்யப்படுபவருக்கு நிச்சயம் தெரிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் -உத்கர்ஷ் ஆனந்த்

 கைது செய்யப்படுபவர்களுக்கு கைதுக்கான காரணங்களை அவர்களுக்கு  முறையாக தெரிவிக்க வேண்டியது அரசு மற்றும் விசாரணை அமைப்புகளின் அடிப்படை கடமை என்பதை உச்ச நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது. 


கைது செய்யப்பட்டவர்களை கைது செய்வதற்கான காரணங்களை தெரிவிப்பது அரசு மற்றும் விசாரணை அமைப்புகளின் அடிப்படை கடமை என்பதை உச்சநீதிமன்றம் திங்களன்று அடிக்கோடிட்டுக் காட்டியது. 


நீதிபதிகள் பூஷண் ஆர். கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகாராஷ்டிரா அரசாங்கத்தை விமர்சித்து இந்தக் கருத்தை எடுத்துரைத்தது. தடுப்புக்காவலில் வைப்பதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகாரிகள் தெரிவிக்கத் தவறிவிட்டனர். அவரை விடுவித்த நீதிமன்ற உத்தரவை மகாராஷ்டிரா அரசு மேல்முறையீடு செய்திருந்தது குறிபிடத்தக்கது. 

 

பிரிவு 22 (1) கீழ் இதுபோன்ற அடிப்படை உரிமைகளை புறக்கணிக்க முடியாது என்று அமர்வு எச்சரித்தது. கைது செய்வதற்கான காரணங்களை தெரிவிப்பது இந்தியாவின் நீதித்துறை செயல்முறையில் ஒரு கட்டாய விதி என்பதை மீண்டும் வலியுறுத்தியது. பிரிவு 22 (1) கைதிகள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது. 


பங்கஜ் பன்சால் மற்றும் பிரபீர் புர்கயஸ்தா வழக்குகளில் முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, மாநிலங்களும் விசாரணை அமைப்புகளும் இந்த தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டவை என்று அமர்வு சுட்டிக்காட்டியது. தடுப்புக்காவலுக்கு எழுத்துப்பூர்வ காரணங்களை வழங்க தவறுவது ஒரு தனிநபரின் சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகும் என்று இரண்டு தீர்ப்புகளும் கூறின.  மேலும், இந்த பிரிவு 22(1)-க்கு விதிவிலக்கு இல்லை என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது. 


வீடு வாங்குபவர்களை ஏமாற்றி நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுப்ரீம் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டெவலப்பர்ஸ் (Supreme Construction and Developers) நிறுவனத்தின் இயக்குநர் மனுல்லா காஞ்ச்வாலாவின் கைதை ரத்து செய்து ஆகஸ்ட் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் தற்போதைய நடவடிக்கைகள் எழுந்தன. காஞ்ச்வாலாவை கைது செய்வதற்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது. 


தற்போதைய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது எங்கள் தீர்ப்புகளை மீறுவதாகும் என்று அமர்வு குறிப்பிட்டது. எந்த விதிவிலக்கும் இதில் இருக்க முடியாது என்றும், நமது அணுகுமுறையில் நாம் சீராக இருக்க வேண்டும்  என்றும்  குறிப்பிட்டது.


மகாராஷ்டிரா அரசின் வழக்கறிஞர் ஆதித்யா ஏ பாண்டே வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்ட போது, மேல்முறையீட்டைத் தொடரும் மாநிலத்தின் முடிவை அமர்வு கண்டித்தது. தீபாவளி விடுமுறை மற்றும் மூத்த வழக்கறிஞரை ஈடுபடுத்த இயலாமை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, பாண்டே ஒரு வார காலத்திற்கு வழக்கை ஒத்திவைக்க கோரியபோது,  மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பெரும் அபராதம் விதிக்கப்படும் என்று  அமர்வு எச்சரித்தது. 


"நாங்கள் ஒத்திவைப்போம். ஆனால், இதன் செலவு  ஒத்திவைப்பு செலவில்  சேர்க்கப்படும்" என்று அமர்வு கூறியது. மாநில அரசுக்கு ஒரு முன்மாதிரியான அபராதம் விதிக்கப்படலாம் என்பதை வலியுறுத்தியது. அபராதம் குறித்து மகாராஷ்டிராவின் உள்துறை செயலாளருடன் கலந்தாலோசிக்குமாறு  வழக்கறிஞருக்கு அமர்வு அறிவுறுத்தியது. 


இந்த எச்சரிக்கையை எதிர்கொண்ட மகாராஷ்டிராவின் வழக்கறிஞர் மேல்முறையீட்டை திரும்பப் பெற முடிவு செய்தார். அமர்வு மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெறுவதை ஏற்றுக்கொண்டது. உயர் நீதிமன்ற உத்தரவை முறையீடு செய்வதற்கான மாநிலத்தின்  செயல் முடிவுக்குக் கொண்டு வந்தது. 


கைது காரணங்களை தெரிவிக்கத் தவறுவது சட்டப்பூர்வ மீறல் மட்டுமல்ல. ஜனநாயக கொள்கைகளை அவமதிப்பதாகும் என்பதால், பிரிவு 22 (1)  கடைப்பிடிப்பது  முக்கியமானது என்பதை விசாரணை அமைப்புகளுக்கு, இந்த நடவடிக்கைகள் ஒரு முக்கியமான நினைவூட்டல்ஆகும். 


பங்கஜ் பன்சால் vs  இந்திய அரசு மற்றும் பிறர் ( Pankaj Bansal vs Union of India and others (2023)), வி செந்தில் பாலாஜி vs இந்திய அரசு மற்றும் பிறர் ( V Senthil Balaji vs State and others (2024)) மற்றும் பிரபீர் புர்கயஸ்தா vs இந்திய அரசு (Prabir Purkayastha Vs State (2024)) உள்ளிட்ட சமீபத்திய தீர்ப்புகள் மூலம்,  உச்சநீதிமன்றம் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும்,  அரசியலமைப்பின் பிரிவு 22 (1)-க்கு ஏற்ப சட்ட அமலாக்க நிறுவனங்கள் உரிய செயல்முறையை பின்பற்றுவதை உறுதி செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் தனது உறுதிப்பாட்டை வெளிபடுத்தியுள்ளது.  இது தாம் ஏன் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கின்றது.  இந்த தீர்ப்புகள், விசாரணை முகமைகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கைது செய்வதற்கான எழுத்துப்பூர்வ காரணங்களை வழங்க கடமைப்பட்டுள்ளன. இது தவிர, நடைமுறை அல்லது கணிசமான மீறல்கள் இருந்தால் கைது செய்யப்பட்ட நபரை உடனடியாக நீதிமன்றங்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கலாம். 


துஷ்பிரயோகம் மற்றும் கைது செய்வதற்கான அதிகாரத்தை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க அரசியலமைப்பு மற்றும் சட்டமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட கடுமையான பாதுகாப்புகளை வலியுறுத்திய உச்சநீதிமன்றம், தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், சட்ட அமலாக்க நிறுவனங்கள் உரிய செயல்முறை மற்றும் நியாயத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. 


இந்த தீர்ப்புகள் மூலம், கைது செய்யப்பட்ட காரணங்களைத் தெரிவிப்பது ஒரு முக்கியமான அரசியலமைப்பு பாதுகாப்பு என்றும், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்த  இவை ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு கைது நடைமுறைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. குறிப்பாக  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act, (PMLA)) போன்ற கடுமையான சட்டங்களின் கீழ், அவை சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகின்றன. இது பெரும்பாலும் தேசிய பாதுகாப்பு, நிதி ஒருமைப்பாடு மற்றும் தனிநபர் உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.




Original article:

Share:

மேற்கத்திய நாடுகள் பல்லுயிர் பாதுகாப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 உண்மையான நடவடிக்கை இல்லாமல் முந்தைய பெரும் வாக்குறுதிகளை மீண்டும் செய்வது பூமிக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கும் என்பதை மேற்கு நாடுகள் நினைவில் கொள்ள வேண்டும்.


கடந்த வாரம், உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான ஐ.நா மாநாட்டின் (Convention on Biological Diversity (CBD)) உறுப்பு நாடுகளின் மாநாட்டின் (COP-16) 16-வது கூட்டம் காலநிலை தொடர்பான தீர்மானம் ஏதுமின்றி முடிவடைந்தது. இதற்கான முடிவு அறிவிப்புக்கு தேவையான எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை சரியான நேரத்தில் அடைய முடியாததால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது. 


கூட்டம் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான உலகளாவிய முயற்சி சில முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மாநாட்டில் ஒரு செயல்பாட்டில் சில உடன்பாடு ஏற்பட்டது. உயிரியல் தகவலின் வணிகப் பயன்பாட்டிற்கான மூல அதிகார வரம்புகளை இந்த வழிமுறை ஈடுசெய்யும். கூடுதலாக, பழங்குடியினக் குழுக்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மாநாட்டிற்குள் ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.


ஆனால், COP-16-ன் சிறப்பம்சமாக, பல்லுயிர் பாதுகாப்புக்கான நிதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் பணக்கார நாடுகளின் குழுவாக இருக்கும். இது 2022 குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்பின் (Global Biodiversity Framework (GBF)) முக்கிய குறிக்கோளாகும். 2030-ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு ஆண்டும் $200 பில்லியனைத் திரட்டுவதே இதன் நோக்கமாகும். 2025-ம் ஆண்டளவில் பணக்கார நாடுகளிடமிருந்து $20 பில்லியன் பெறப்படும். இது உயிரியல் பன்முகத்தன்மைக்கான மாநாட்டிற்கு (Convention on Biological Diversity (CBD)) முன்னுரிமை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், நார்வே மற்றும் பிற வளர்ந்த நாடுகள் ஒரு பிரத்யேக நிதியை உருவாக்குவதை எதிர்த்தன. இது, பல்லுயிர் பெருக்கம் மிகவும் ஆபத்தில் உள்ளதால் உலகளாவிய தெற்கிற்கு பேச்சுவார்த்தைக்கு இடமில்லாதது. 


உலகெங்கிலும் உள்ள பல்லுயிரின் இழப்பால் அதன் வரலாற்றுரீதியான பங்கை எப்படி புறக்கணிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நிதியுதவியில் மேற்கத்திய நாடுகளின் தயக்கம் குழப்பமளிக்கிறது. அதன் காலனித்துவ பதிவு மற்றும் அதன் நுகர்வு மற்றும் இறக்குமதியின் குறிப்பிடத்தக்க தாக்கம் வளரும் நாடுகளில் உயிரியல் செல்வத்தை குறைத்துள்ளது. இந்த வரலாற்றை புறக்கணிக்க முடியாது.


உலகளாவிய காலநிலை நடவடிக்கை பேச்சுவார்த்தைகளின் 29-வது பதிப்பு தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், நிதியை முடிவு செய்யத் தவறியது மற்றும் நிதியளிப்பதில் உறுதியளிக்கத் தவறியது உலகளாவிய தெற்கிற்கும், வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. முந்தைய முறையை மீண்டும் செய்வது, அதற்கு இணையான செயல்பாட்டால் ஆதரிக்கப்படாத ஒரு மகத்தான பார்வை பூமிக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மேற்கத்திய நாடுகள் மனதில் கொள்ள வேண்டும்.




Original article:

Share:

புகைப்பனிக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் ஒன்றிணைய வேண்டும்? -ஆதி மாதவன்

 இயற்கை தேசிய எல்லைகளை மதிப்பதில்லை. காற்று, எல்லைகளைக் கடந்து மாசுகளை கொண்டு சேர்க்கிறது. இதில் தரவு பகிர்வு, கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு போன்ற கூட்டு நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சமாளிக்க உதவும். 


பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் அதிகரித்து வரும் மாசு மற்றும் புகைப்பனி மூட்டத்தை போக்க இந்தியாவுடன் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இரு நாடுகளும் இந்த தீவிர காலநிலை தொடர்பான அவசரத்தை முழுமையாக அங்கீகரிக்காவிட்டாலும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒன்றாகக் கையாள்வது அவசியமானது என்று ஷெரீப் நம்புகிறார். 


காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகளை நிவர்த்தி செய்ய சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இவற்றில் பல பிரச்சினைகள் தேசிய எல்லைகளை கடப்பது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகும். அவற்றை முழுமையாக நிவர்த்தி செய்ய, சில நடவடிக்கைகள் வரையப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். இது, பெரும்பாலும் சுற்றுச்சூழல் யதார்த்தமான தன்மைகளை பிரதிபலிக்காது. இன்று, இந்த சிக்கல்கள் மிகவும் உறுதியான வடிவத்தைக் கொண்டுள்ளன மற்றும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மாதிரியான நிலப்பரப்புகள், பகிரப்பட்ட நீர் ஆதாரங்கள் மற்றும் பொதுவான காற்று காரணமாக பல சவால்களை எதிர்கொள்கின்றன.


குறிப்பாக, ஆண்டின் இந்த நேரத்தில், அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் எரிக்கப்படுவதாலும், பண்டிகைகள் கொண்டாடப்படுவதாலும், காற்று மாசுபாடு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல நகரங்களில் ஆறு முக்கிய காற்றோட்டப்பகுதிகள் (airsheds) உள்ளன. மேலும், காற்றின் தன்மைகளுக்கு ஏற்றாற்போல், காற்று மாசுபாடு எல்லைகளைக் கடந்து வீசுகின்றன. டெல்லி மற்றும் லாகூர் போன்ற பெரிய நகரங்கள் இந்த காற்றோட்டப்பகுதிகளுக்குள் (airsheds) வருகின்றன. மேலும், பிற பிராந்தியங்களுக்குள் காற்று மாசுபாடுகள் அதிகரிப்பதால் பாதிக்கப்படுகின்றன. 


பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 போன்ற காற்று மாசுபாட்டின் அளவு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன மற்றும் மோசமாக்குகின்றன. மேலும், அவை சுகாதார அமைப்புகளை கஷ்டப்படுத்துவது மட்டுமல்லாமல் பொருளாதார இழப்புகளுக்கும் வழிவகுக்கும். காற்று மாசுபாடு தொடர்பான நோய்கள் மற்றும் அவற்றின் இறப்புகளால் இந்தியப் பொருளாதாரம் 37 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில், காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் விமானங்கள் தாமதமாகி, கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் மூடப்படுகின்றன. சராசரியாக, லாகூரில் உள்ள குடிமக்கள் காற்று மாசுபாடு காரணமாக தங்கள் வாழ்நாளில் ஐந்து வருடங்களை இழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 


இதேபோல், கடுமையான வெப்பத்தின் நீண்ட மற்றும் பரவலான மழைகளும் அவற்றுடன் பல உடல்நலப் பிரச்சினைகளையும் கொண்டு வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நகரங்கள் விரைவான நகரமயமாக்கலுக்கு உட்பட்டுள்ளதால், முன்பு பசுமையான இடங்கள் இப்போது வெப்ப-கதிர்வீச்சு ஊடுருவ முடியாத மேற்பரப்புகளால் நிரப்பப்பட்டுள்ளன. நகர்ப்புற வெப்பம் பொதுவாக ஒரு உள்ளூர் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. ஆனால், நகர்ப்புற வெப்பத் தீவுகள் நகர்ப்புற நிலப்பரப்புகளையும் சுற்றியுள்ள கிராமப்புறங்களையும் பாதிக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல நகரங்கள் வெப்பத்தை சமாளிக்க போதுமான வசதிகள் இல்லாதவையாக உள்ளன. மேலும், குளிரூட்டும் முறைகளை அணுகக்கூடியவை எரிசக்திக்கான தேவைகளை அதிகரிப்பதன் மூலம் வெப்பத்தை அதிகரிக்க மட்டுமே செய்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வெப்ப அலைகள் ஒருவருக்கொருவர் நேரடியாக பொறுப்பேற்காது என்றாலும், நகர்ப்புற வெப்பத் தீவுகள் ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும் மற்றும் பனிப்பாறைகள் உருகுவது போன்ற இரு நாடுகளையும் பாதிக்கும் பிரச்சினைகளாக மேலும் அதிகரிக்கக்கூடும். 


இந்து-குஷ் மற்றும் காரகோரம் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உயரும் வெப்பநிலையால் இவை உருகுவதற்கு பங்களிக்கிறது. கூடுதலாக, கருப்பு கார்பன் போன்ற மாசுக்கள் பனிப்பாறைகளில் குடியேறுவதால், பனிப்பாறைகள் அதிக ஆற்றலை உறிஞ்சி இன்னும் வேகமாக உருகும் தன்மை கொண்டது. வட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெரும்பகுதியில் பரவியுள்ள எல்லை கடந்த சிந்து ஆற்றுப்படுகை, உணவு மற்றும் நீர் பாதுகாப்பிற்காக இந்த பனிப்பாறைகளில் உருவாகும் நதி அமைப்புகளைச் சார்ந்துள்ளது. 


இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்து குஷ் பிராந்தியத்தின் பனிப்பாறைகள் 80 சதவீதம் குறைந்தால், தற்போது இப்பகுதியில் வாழும் 300 மில்லியன் கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆறுகள் குறைந்த நீரைக் கொண்டு செல்வதால், பாசன அமைப்புகள் சரிவைக் கொண்டுள்ளது. இதனால், ஏற்கனவே சுமையாக இருக்கும் நிலத்தடி நீர் அமைப்புகளை சார்ந்திருப்பது அதிகரிக்கும். சிந்துப் படுகையானது, கோதுமை மற்றும் அரிசி போன்ற நீர் மிகுந்த பயிர்கள் உட்பட, பிராந்தியத்தின் பெரும்பகுதிக்கு உணவளிக்கும் பயிர்களை உற்பத்தி செய்கிறது.


இது பனிப்பாறைகள் உருகும் விகிதத்தில் இருப்பதால், மோசமான மற்றொரு பிரச்சினைக்கு நம்மை கொண்டு செல்கிறது. இதனால், கடல் மட்டம் உயரும். தற்போது, உலகளாவிய கடல் மட்டங்கள் கடந்த நூற்றாண்டின் இறுதியில் இருந்ததை விட இரண்டு மடங்கு வேகமாக உயர்ந்து வருகின்றன. மேலும், அவை இன்னும் வேகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


இதனால், அரபிக்கடலை ஒட்டிய கரையோர தாழ்வான பகுதிகள் புயல்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடலோரத்தில் வசிப்பவர்கள் சூறாவளி உயர் அலைகளின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது அவர்களின் வீடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் கடல் மட்டம் உயரும்போது உள்நாட்டில் மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடல் மட்டம் உயர்வதால் மீன்பிடி சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றன. மேலும், நீர் நுகர்வு அல்லது விவசாயத்திற்கு நீரின் தன்மை உப்பாக மாறுகிறது. சிந்து டெல்டாப் பகுதி ஏற்கனவே அதன் கடற்கரையில் 12 சதவீதத்தை இழந்துவிட்டது. 


மேலும், இழக்கும் அபாயத்தில் உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. அடிக்கடி வரும் வெட்டுக்கிளி திரள்களைப் போலவே, வாழ்க்கை மீளமுடியாமல் மாறும் முன், இந்த பிரச்சினைகளின் தாக்கத்தை குறைக்க இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். நாடுகள் தொடர்பான மோதல்கள் மற்றும் வரலாற்று வேறுபாடுகள் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவது கடினமாக உள்ளது. 


இருப்பினும், இதற்கான விஷயங்களை மாற்றுவது அவசியம். போதுமான கூட்டு நடவடிக்கை இருந்தால், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நாம் தீர்க்க முடியும். இதில் தரவு பகிர்வு (data sharing), கூட்டு முயற்சிகள் (joint ventures) மற்றும் பகிர்தல் தொழில்நுட்பம் (sharing technology) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் (renewable energy sources) ஆகியவை அடங்கும். இத்தகைய ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக அவநம்பிக்கையை தீர்க்க வழிவகுக்கும்.


பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஒன்றிணைந்து செயல்படுவது கடந்த காலத்தை மாற்றாது. இருப்பினும், எதிர்கால சந்ததியினருக்கு பல சிக்கல்களைத் தடுக்க இது உதவும். மேம்பட்ட உறவுகளுடன், பிரிவினையின் நினைவுகளைச் சுமக்காத இளைய மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் வாழ்க்கையின் மற்ற பகுதிகளிலும் ஒத்துழைப்பை விரிவாக்க முடியும்.




Original article:

Share:

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைகள், இந்தியா காசநோய் சிகிச்சையை மேம்படுத்தினாலும் நிதிப் பற்றாக்குறை காசநோய் ஒழிப்பை தாமதப்படுத்தலாம் எனக் குறிப்பிடுகிறது

 காசநோயைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சியை இந்த அறிக்கை அங்கீகரிக்கிறது. ஆனால், 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை (Tuberculosis (TB)) ஒழிப்பதற்கான உண்மையான இலக்கை அடைய வேகம் அதிகரிக்க வேண்டும். 


உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) உலகளாவிய காசநோய் பரவல் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவிற்கு சில சாதகமான முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் காசநோயை கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை இந்த அறிக்கை அங்கீகரிக்கிறது. 2023-ம் ஆண்டில், இந்தியாவில் 2.7 மில்லியன் காசநோயாளிகள் (Tuberculosis (TB)) இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 2.51 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இதன் பொருள் பாக்டீரியா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நோய் மிகவும் தீவிரமானது என்பதால், காசநோய்க்கு மருத்துவ சிகிச்சை பெறாதவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இறப்புக்கு ஆளாகின்றனர். பல மருந்து எதிர்ப்பு (multi-drug resistant) காசநோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா பெற்ற வெற்றியையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. காசநோய் சிகிச்சையின் காலத்தைக் குறைப்பது போன்ற சில சமீபத்திய அரசாங்கத் தலையீடுகள் பயனுள்ளதாக இருப்பதை இது காட்டுகிறது.


கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு 18 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சரிவு உலக சராசரியான 8 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விகிதத்தில், 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் இலக்கை அடைய இந்தியா முயற்சி மேற்கொள்ளலாம். அரசாங்கம் இதை ஒழிப்பதற்கான நிலைத்தன்மை இருந்தபோதிலும், பல சவால்கள் உள்ளன. 


இதில் குறைந்த விழிப்புணர்வு, போதிய மருத்துவ வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கு இடையூறாக உள்ளன. கடந்த ஆண்டு லான்செட்டின் ஒரு அறிக்கையானது, ஒவ்வொரு ஆண்டும் 35 முதல் 45 சதவிகிதம் புதிய காசநோய்களுக்கு மோசமான உணவுகள் பங்களிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. காசநோயாளிகளின் ஊட்டச்சத்து குறைபாடும் இறப்புக்கான குறிப்பிடத்தக்க ஆபத்தான காரணியாகும். காசநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து தொடர்பான திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் காசநோயாளிகளின் மருத்துவ ஆதரவைப் பெறும் சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவுவதற்கு வழங்கப்படும் தொகை இன்னும் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். கூடுதலாக, காசநோயாளிகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் இன்னும் எந்த ஆதரவையும் பெறவில்லை என்று அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


கடந்த ஆண்டு PLOS குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான பகுதியினரின் குடும்பங்கள் அதிகமான செலவுகளை எதிர்கொள்கின்றன என்று குறிப்பிட்டது. இந்த எண்ணிக்கை 20 சதவீதம் வரை இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 


இந்தியாவில் காசநோயை ஒழிப்பதற்கான நிதியுதவியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருப்பதாக உலகளாவிய நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. 2019-ம் ஆண்டில் 432.6 மில்லியன் டாலரில் இருந்து 2023-ம் ஆண்டில் 302.8 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. காசநோய் ஒழிப்புத் திட்டத்தை சரி செய்ய அரசு தயாராக உள்ளது. அதன் வீச்சைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (health insurance program) காசநோய் நோயாளிகளுக்கு, குறிப்பாக நோய்த்தொற்றின் மிகவும் வீரியமானவர்களுக்கு வழங்கப்படலாம். இது இந்தியாவில் காசநோயை ஒழிக்க பெரிதும் உதவும். 




Original article:

Share:

அதிபர் தேர்தல்கள் ஏன் எப்போதும் நவம்பர் மாதத்தின் ஒரு செவ்வாய்க்கிழமையில் நடைபெறுகின்றன? -அலிந்த் சௌஹான்

 1845-ம் ஆண்டில், அமெரிக்க நாடாளுமன்றம் (காங்கிரஸ்) முழு நாட்டிற்கும் ஒரே தேர்தல் நாளை நிர்ணயிக்க ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. 


பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, நவம்பர் முதல் செவ்வாய்க் கிழமையில் அமெரிக்கா தனது தேர்தல் தினத்தை நடத்தியது. இந்தத் தேர்வு அமெரிக்கப் பொருளாதாரம், பெரும்பாலான குடிமக்களின் கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் முந்தைய திட்டத்தின் மீதான விமர்சனங்களை பிரதிபலிக்கிறது.


1845-ம் ஆண்டு வரை, டிசம்பரில் அடுத்த அதிபரைச் தேர்ந்தெடுப்பதற்கு  வாக்காளர் குழு (Electoral College) கூடுவதற்கு முன்பு 34 நாட்களுக்குள் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த மாநிலங்கள் அனுமதிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, 1844-ம் ஆண்டில், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெற்றது.


1845-ம் ஆண்டில், அமெரிக்க நாடாளுமன்றம் (காங்கிரஸ்) முழு நாட்டிற்கும் ஒரே தேர்தல் நாளை நிர்ணயிக்க ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. 


* 1800-களின் நடுப்பகுதியில், மாநிலங்கள் வாக்களிக்கும் உரிமையை விரிவுபடுத்தத் தொடங்கின. அவர்கள், 21 வயதுக்கு மேற்பட்ட நில உரிமையாளர் அல்லாத வெள்ளையர்களை வாக்களிக்க அனுமதித்தனர். இந்த மாற்றம் வாக்காளர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், தேர்தலில் வாக்குப்பதிவை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.


* முந்தைய தேர்தல் நடைமுறையின் விமர்சனங்கள், காலப்போக்கில் தேர்தல்களை விரிவுபடுத்துவது தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தியது என்று வாதிட்டனர். சில மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிப்பதும், தேர்தலுக்கான  முடிவுகள் அறிவிக்கப்படுவதும் பின்னர் வாக்களித்த மாநிலங்களில் வாக்குப்பதிவு மற்றும் வாக்களிக்கும் நடைமுறையை பாதித்ததாகக் சுட்டிக்காட்டினர்.


ஆரம்பத்தில், இந்த சட்டம் அதிபர் தேர்தலுடன் மட்டுமே தொடர்புடையது. ஆனால், அதன் நோக்கம் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர், தேர்தல் நாளாக எந்த நாளைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி அப்போது எழுந்தது. 


பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்கா முக்கியமாக ஒரு விவசாய நாடாக இருந்தது மற்றும் பெரும்பாலான வாக்காளர்கள் கிராமப்புறங்களில் வசித்து வந்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியில் இவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். 


நவம்பர் மாதம் வாக்களிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில், அது பரபரப்பான வசந்த கால நடவுப் பருவம் அல்லது இலையுதிர்கால அறுவடை ஆகியவற்றுடன் பொருந்தவில்லை. கூடுதலாக, கடுமையான குளிர்காலம் இன்னும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் உள்ளது.


வாக்களிப்பதற்கு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஏனெனில், மத மற்றும் பொருளாதார காரணிகளை உள்ளடக்கியது.


பத்தொன்பதாம் நூற்றாண்டில், பல கிராமப்புற வாக்காளர்கள் வாக்களிக்க நாள் முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதன் காரணமாக, குறிப்பிட்ட நாட்கள் வாக்களிக்க விலக்கப்பட்டன. ஞாயிறு, திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மக்கள் தேவாலயத்திற்குச் செல்லக்கூடும் என்பதால், இந்த நாட்கள் விலக்கப்பட்டன. புதன் கிழமை பிரபலமான சந்தை நாள் என்பதால் அதுவும் விலக்கப்பட்டது. இந்த நாளில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க அருகிலுள்ள நகரங்கள் மற்றும் நகரங்களுக்குச் செல்வது வழக்கம்.


இறுதியில், தேர்தல் நாளுக்காக நவம்பர் முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு முதல் செவ்வாய்க் கிழமையை நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தது. நவம்பர் 1-ம் தேதியை, கிறிஸ்தவர்கள் அனைத்து புனிதர்களின் தினத்தை கொண்டாடுவதையும், வணிகர்கள் பொதுவாக முந்தைய மாதத்திலிருந்து தங்கள் வழக்கத்தைத் தீர்மானித்தனர். 


சமீபத்திய ஆண்டுகளில், இந்த நாள் தேர்தலுக்கான விமர்சனத்தை எதிர்கொண்டது. இப்போது, ​​அமெரிக்க மக்கள் தொகையில் 12%-க்கும் குறைவானவர்களே விவசாயத்தில் உள்ளனர். வாக்களிக்க பலர் வேலையை இழக்க வேண்டியுள்ளது.




Original article:

Share:

இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எவ்வாறு உறுதிப்படுத்துவது? இதற்கான பதில் 75 ஆண்டுகளாக உள்ளது. -ஜக்தீப் எஸ்.சோக்கர்

 இந்திய தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியத்துவமானது. அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்கள், நியமனங்கள் தொடர்பான நியாயமான செயல்முறையை கோடிட்டுக் காட்டுகின்றன.


யோகேந்திர யாதவ் தனது இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில், அக்டோபர் 29 அன்று "கைவிடவேண்டிய மாதிரி நடத்தை விதிகள்" (Junk Model Code of Conduct) என்று குறிப்பிடுகிறார். மேலும், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு நமக்கு ஒரு நம்பிக்கையான ஆணையர்கள் மிகவும் தேவை’ என்கிறார். இந்த பிரச்சினைக்கான பதிலை அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களில், தலைமை தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (Election Commissioners (EC)) எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பான பதிலைக் காணலாம். நியமனம் தொடர்பான தீர்வைப் பற்றி விவாதிப்பதற்கு முன், ஒரு சில பின்னணியான தகவல்கள் உதவியாக இருக்கும். 


தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) நியமிப்பது குறித்து அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly (CA)) நீண்ட நேரம் விவாதம் மேற்கொண்டது. இந்த விவாதங்களுக்குப் பிறகு, அரசியல் நிர்ணய சபையானது, அரசியலமைப்பில் 324(2) என்ற பிரிவைச் சேர்த்தது. மேலும், இந்த விதி குறிப்பிடுவதாவது, "தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம், நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்ட விதிகளுக்கும் உட்பட்டு, குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட வேண்டும்." 


ஆனால், இந்த விஷயத்தில் நாடாளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றவில்லை. இதன் விளைவாக, அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, அவை நிறைவேற்று அதிகாரத்தால் (executive power) நியமிக்கப்படுகின்றன. 


ஒரு பொதுநல மனுவுக்கு (public interest litigation (PIL)) பதிலளித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 2, 2023 அன்று அளித்த தீர்ப்பில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமனங்கள் இந்தியப் பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமனம் மேற்கொள்ளப்படும். 


இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. டிசம்பர் 23, 2023 அன்று நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது. இந்தத் தேர்வுக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். அவையில், பிரதமர் தலைவராகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் ஒன்றிய கேபினட் அமைச்சர் போன்றோர் உறுப்பினராக இருப்பர். இந்த சட்டம், மார்ச் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிலைநிறுத்தும் அதே வேளையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிக விரிவாக வழங்கிய காரணத்திற்கு எதிராக மாறியது.இது அரசியல் நிர்ணயச் சபையில் இருந்து விவாதங்களைக் குறிப்பிடுகிறது.


நியமனம் தொடர்பான கட்டுப்பாடுகள் அரசியல் நிர்ணயச் சபை விவாதங்களை முழுமையாக விவாதிக்க அனுமதிக்கவில்லை. இருப்பினும், பி.ஆர். அம்பேத்கரின் முன்மொழிவுக்கு ஷிபன் லால் சக்சேனா செய்த திருத்தத்தில் முக்கியமான அம்சம் இடம்பெறுகிறது. சக்சேனா ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்ததாவது, "அனைத்து கட்சியினரிடமும் நம்பிக்கை கொண்டவராக, குழுவில் இருப்பவர் இருக்க வேண்டும். அவர்களின் நியமனம் வெறும் தனிப்பெரும்பான்மையால் மட்டுமல்ல, இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உறுதி செய்யப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 


ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்க முடியும். இருப்பினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்றால், மற்ற இதர கட்சிகள் இந்த நியமனத்தில் உடன்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் ஆணையத்தின் உண்மையான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆணையத்தை விமர்சிப்பதை தடுக்க உதவுகிறது. மேலும், ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், குடியரசுத் தலைவரால் முன்மொழியப்படும் பெயர்கள் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையின் நம்பிக்கையைப் பெற்றதாக இருக்க வேண்டும்.


சக்சேனாவின் தலைமையைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) மற்றும் தேர்தல் ஆணையர்களை (Election Commissioners (EC)) நியமிப்பதற்கான ஒரு புதிய அமைப்பு முன்மொழியப்பட்டது:


1. தற்போதுள்ள நாடாளுமன்றக் குழு அல்லது புதிதாக அமைக்கப்பட்ட குழு தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (EC) நியமிப்பதற்கான தகுதிகள் மற்றும் தேவைகளை பரிந்துரைக்க வேண்டும்.


2. இந்தக் குழுவின் முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட வேண்டும். அவை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டு வாக்களிக்க வேண்டும்.


3. தகுதிகள் மற்றும் தேவைகளை நாடாளுமன்றம் அங்கீகரித்தவுடன், அதே குழுவிற்கு தேர்தல் ஆணையர்கள் (ECs) மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் (CEC) பதவிகளுக்கான தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணி வழங்கப்பட வேண்டும்.


இந்தப் பதவிகளுக்குத் தகுந்த மற்றும் ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து நியமனங்கள் மற்றும் விண்ணப்பங்களை இந்தக் குழு வரவேற்க வேண்டும்.


பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களிலிருந்து, குழு தகுதியானதாகக் கருதப்படும் நபர்களின் குறுகிய பட்டியலை உருவாக்க வேண்டும்.


இந்தக் குழு குறுகிய பட்டியலிடப்பட்ட நபர்களை வெளிப்படையான விசாரணைகளை நடத்த வேண்டும். இது வீடியோ பரிமாற்றம் மூலம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். 


விசாரணைகளுக்குப் பிறகு, தேர்தல் ஆணையர் / தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கான நபர்களை குழு தேர்வு செய்ய வேண்டும். 


4. குழு தனது பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.


5. குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு வாக்களிக்கின்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அவை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்.


6. நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆணையர்களின் நியமனங்களுக்கான ஒப்புதலுக்கு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும்.


7.    நியமனம் செய்யப்பட்டவுடன், அத்தகைய நபர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 75 வயது வரை, இதில் எது முந்தையதோ அது வரை அந்த பதவிகளில் இருக்க வேண்டும். 69 வயதுக்கு மேற்பட்ட நபர்களை ஆறு ஆண்டுகள் பதவிக் காலம் அனுமதிக்கக் கூடாது.


8. மேலே குறிப்பிட்ட 7-ஆம் நிபந்தனை ஒவ்வொரு சந்திப்பிற்கும் தனித்தனியாகப் பொருந்த வேண்டும். ஒவ்வொரு, தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் இருக்க வேண்டும். 


முன்மொழியப்பட்ட குழுவுக்கு நிறைய நேரத்தை விரயப்படுத்தலாம் மற்றும் விமர்சகர்களால் நடைமுறைக்கு மாறானதாகக் கூட கருதப்படலாம். குறிப்பாக, இன்று நாடாளுமன்றம் செயல்படும் அல்லது செயல்படாத விதத்தைப் பார்க்கும்போது இது உண்மையாக இருக்கலாம். எவ்வாறாயினும், இந்தியா உண்மையான மற்றும் பயனுள்ள ஜனநாயகத்தை உருவாக்க விரும்பினால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


தேர்தல் ஆணையத்தின் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் அங்கீகரிப்பது ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது. இந்த பதவிகள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் முக்கியமானவை என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. இது அவர்களின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகளுக்கு இடையிலான உறவையும், தேசத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. 


இந்த தீர்ப்பு டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகளில் குறிப்பிடுவதாவது, "நிர்வாகி தலைமையின் கீழ்" (under the thumb of the Executive) யாராவது தேர்தல் செயல்முறையை கட்டுப்படுத்தினால், அது ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தின் இதயம். முறையான தேர்தல்கள் இல்லாமல், ஒரு முறையான ஜனநாயகம் கூட உண்மையாக இருக்க முடியாது, இது செயல்படும் அரசியல் ஜனநாயகம் என்று அழைக்கப்படுவதற்கு இன்றியமையாதது.


கட்டுரையாளர் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) நிறுவன உறுப்பினர் ஆவார்.




Original article:

Share: