இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எவ்வாறு உறுதிப்படுத்துவது? இதற்கான பதில் 75 ஆண்டுகளாக உள்ளது. -ஜக்தீப் எஸ்.சோக்கர்

 இந்திய தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியத்துவமானது. அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்கள், நியமனங்கள் தொடர்பான நியாயமான செயல்முறையை கோடிட்டுக் காட்டுகின்றன.


யோகேந்திர யாதவ் தனது இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில், அக்டோபர் 29 அன்று "கைவிடவேண்டிய மாதிரி நடத்தை விதிகள்" (Junk Model Code of Conduct) என்று குறிப்பிடுகிறார். மேலும், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு நமக்கு ஒரு நம்பிக்கையான ஆணையர்கள் மிகவும் தேவை’ என்கிறார். இந்த பிரச்சினைக்கான பதிலை அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களில், தலைமை தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (Election Commissioners (EC)) எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பான பதிலைக் காணலாம். நியமனம் தொடர்பான தீர்வைப் பற்றி விவாதிப்பதற்கு முன், ஒரு சில பின்னணியான தகவல்கள் உதவியாக இருக்கும். 


தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) நியமிப்பது குறித்து அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly (CA)) நீண்ட நேரம் விவாதம் மேற்கொண்டது. இந்த விவாதங்களுக்குப் பிறகு, அரசியல் நிர்ணய சபையானது, அரசியலமைப்பில் 324(2) என்ற பிரிவைச் சேர்த்தது. மேலும், இந்த விதி குறிப்பிடுவதாவது, "தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம், நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்ட விதிகளுக்கும் உட்பட்டு, குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட வேண்டும்." 


ஆனால், இந்த விஷயத்தில் நாடாளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றவில்லை. இதன் விளைவாக, அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, அவை நிறைவேற்று அதிகாரத்தால் (executive power) நியமிக்கப்படுகின்றன. 


ஒரு பொதுநல மனுவுக்கு (public interest litigation (PIL)) பதிலளித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 2, 2023 அன்று அளித்த தீர்ப்பில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமனங்கள் இந்தியப் பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமனம் மேற்கொள்ளப்படும். 


இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. டிசம்பர் 23, 2023 அன்று நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது. இந்தத் தேர்வுக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். அவையில், பிரதமர் தலைவராகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் ஒன்றிய கேபினட் அமைச்சர் போன்றோர் உறுப்பினராக இருப்பர். இந்த சட்டம், மார்ச் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிலைநிறுத்தும் அதே வேளையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிக விரிவாக வழங்கிய காரணத்திற்கு எதிராக மாறியது.இது அரசியல் நிர்ணயச் சபையில் இருந்து விவாதங்களைக் குறிப்பிடுகிறது.


நியமனம் தொடர்பான கட்டுப்பாடுகள் அரசியல் நிர்ணயச் சபை விவாதங்களை முழுமையாக விவாதிக்க அனுமதிக்கவில்லை. இருப்பினும், பி.ஆர். அம்பேத்கரின் முன்மொழிவுக்கு ஷிபன் லால் சக்சேனா செய்த திருத்தத்தில் முக்கியமான அம்சம் இடம்பெறுகிறது. சக்சேனா ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்ததாவது, "அனைத்து கட்சியினரிடமும் நம்பிக்கை கொண்டவராக, குழுவில் இருப்பவர் இருக்க வேண்டும். அவர்களின் நியமனம் வெறும் தனிப்பெரும்பான்மையால் மட்டுமல்ல, இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உறுதி செய்யப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 


ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்க முடியும். இருப்பினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்றால், மற்ற இதர கட்சிகள் இந்த நியமனத்தில் உடன்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் ஆணையத்தின் உண்மையான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆணையத்தை விமர்சிப்பதை தடுக்க உதவுகிறது. மேலும், ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், குடியரசுத் தலைவரால் முன்மொழியப்படும் பெயர்கள் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையின் நம்பிக்கையைப் பெற்றதாக இருக்க வேண்டும்.


சக்சேனாவின் தலைமையைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) மற்றும் தேர்தல் ஆணையர்களை (Election Commissioners (EC)) நியமிப்பதற்கான ஒரு புதிய அமைப்பு முன்மொழியப்பட்டது:


1. தற்போதுள்ள நாடாளுமன்றக் குழு அல்லது புதிதாக அமைக்கப்பட்ட குழு தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (EC) நியமிப்பதற்கான தகுதிகள் மற்றும் தேவைகளை பரிந்துரைக்க வேண்டும்.


2. இந்தக் குழுவின் முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட வேண்டும். அவை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டு வாக்களிக்க வேண்டும்.


3. தகுதிகள் மற்றும் தேவைகளை நாடாளுமன்றம் அங்கீகரித்தவுடன், அதே குழுவிற்கு தேர்தல் ஆணையர்கள் (ECs) மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் (CEC) பதவிகளுக்கான தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணி வழங்கப்பட வேண்டும்.


இந்தப் பதவிகளுக்குத் தகுந்த மற்றும் ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து நியமனங்கள் மற்றும் விண்ணப்பங்களை இந்தக் குழு வரவேற்க வேண்டும்.


பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களிலிருந்து, குழு தகுதியானதாகக் கருதப்படும் நபர்களின் குறுகிய பட்டியலை உருவாக்க வேண்டும்.


இந்தக் குழு குறுகிய பட்டியலிடப்பட்ட நபர்களை வெளிப்படையான விசாரணைகளை நடத்த வேண்டும். இது வீடியோ பரிமாற்றம் மூலம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். 


விசாரணைகளுக்குப் பிறகு, தேர்தல் ஆணையர் / தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கான நபர்களை குழு தேர்வு செய்ய வேண்டும். 


4. குழு தனது பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.


5. குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு வாக்களிக்கின்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அவை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்.


6. நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆணையர்களின் நியமனங்களுக்கான ஒப்புதலுக்கு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும்.


7.    நியமனம் செய்யப்பட்டவுடன், அத்தகைய நபர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 75 வயது வரை, இதில் எது முந்தையதோ அது வரை அந்த பதவிகளில் இருக்க வேண்டும். 69 வயதுக்கு மேற்பட்ட நபர்களை ஆறு ஆண்டுகள் பதவிக் காலம் அனுமதிக்கக் கூடாது.


8. மேலே குறிப்பிட்ட 7-ஆம் நிபந்தனை ஒவ்வொரு சந்திப்பிற்கும் தனித்தனியாகப் பொருந்த வேண்டும். ஒவ்வொரு, தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் இருக்க வேண்டும். 


முன்மொழியப்பட்ட குழுவுக்கு நிறைய நேரத்தை விரயப்படுத்தலாம் மற்றும் விமர்சகர்களால் நடைமுறைக்கு மாறானதாகக் கூட கருதப்படலாம். குறிப்பாக, இன்று நாடாளுமன்றம் செயல்படும் அல்லது செயல்படாத விதத்தைப் பார்க்கும்போது இது உண்மையாக இருக்கலாம். எவ்வாறாயினும், இந்தியா உண்மையான மற்றும் பயனுள்ள ஜனநாயகத்தை உருவாக்க விரும்பினால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


தேர்தல் ஆணையத்தின் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் அங்கீகரிப்பது ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது. இந்த பதவிகள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் முக்கியமானவை என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. இது அவர்களின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகளுக்கு இடையிலான உறவையும், தேசத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. 


இந்த தீர்ப்பு டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகளில் குறிப்பிடுவதாவது, "நிர்வாகி தலைமையின் கீழ்" (under the thumb of the Executive) யாராவது தேர்தல் செயல்முறையை கட்டுப்படுத்தினால், அது ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தின் இதயம். முறையான தேர்தல்கள் இல்லாமல், ஒரு முறையான ஜனநாயகம் கூட உண்மையாக இருக்க முடியாது, இது செயல்படும் அரசியல் ஜனநாயகம் என்று அழைக்கப்படுவதற்கு இன்றியமையாதது.


கட்டுரையாளர் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) நிறுவன உறுப்பினர் ஆவார்.




Original article:

Share: