இந்தியாவின் இணையத்தில் பொருள் வாங்கும் (online shopping) பழக்கங்கள் எவ்வாறு மாறியுள்ளன? -ஆஷிஷ் குமார் சாக்ஷி அப்ரோல்

 இணையவழியில் வாங்குவது அதிகரித்து வருகிறது. ஆனால், அதன் வரையறைகள் இடம், தயாரிப்பு வகை மற்றும் நுகர்வோர் நம்பிக்கையால் வரையறுக்கப்படுகின்றன.


இந்தியாவின் மின்-வணிகக் கதை (e-commerce story) பெரும்பாலும் பரந்த அளவில் கூறப்படுகிறது. இது வேகமான வளர்ச்சி, அதிக தள்ளுபடிகள் மற்றும் பெரும்பாலும் நகர்ப்புற வாடிக்கையாளர்களைப் பற்றி பேசுகிறது. இதில், மக்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் பெரிய, விரிவான ஆய்வுகள் எதுவும் இல்லை. நாடு தழுவிய அளவில் கிடைக்கும் ஒரே தரவு வீட்டு நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு (Household Consumer Expenditure Survey (HCES)) ஆகும். இந்த கணக்கெடுப்பு குறிப்பாக இணையத்தில் பொருள் வாங்குவதை (online shopping) அளவிடுவதற்காக செய்யப்படவில்லை என்றாலும், நுகர்வோர் நடத்தை எவ்வாறு மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது இன்னும் உதவுகிறது.


ஒரு வருடத்திற்கு முன்பு, 2022–23 கணக்கெடுப்பு முதலில் இணையத்தில் பொருள் வாங்குவதை (online shopping) பொருட்கள் வாங்குவதற்கான ஒரு தனி வழியாக அங்கீகரித்தது. இந்த நடத்தை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்க சமீபத்திய தரவு நமக்கு உதவுகிறது. 2023–24 தரவு ஒரு கலவையான படத்தைக் காட்டுகிறது. இணையத்தில் பொருள் வாங்கல் அதிகரித்து வருவதால் இடம், தயாரிப்பு வகை மற்றும் நுகர்வோர் எவ்வளவு நம்பிக்கையுடன் உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.


HCES மின் வணிகத்தை நேரடியாகக் கண்காணிக்கவில்லை. இருப்பினும், இது இணையத்தில் பொருள் வாங்கல் பற்றிய பயனுள்ள குறிப்புகளை வழங்குகிறது. இது இணையப்படும் செலுத்தும் பணப் பரிவர்த்தனையை பதிவு செய்கிறது. இது உண்மையான முழு இணையக் கொள்முதல்களைவிட அதிகமாக இருக்கலாம். இதற்கான போக்குகள் ஆண்டுதோறும் எவ்வாறு மாறி வருகின்றன என்பதை அட்டவணை காட்டுகிறது.


இதற்கான முக்கிய விஷயம் என்னவென்றால், இணையத்தில் பொருள் வாங்கல் கிட்டத்தட்ட ஒவ்வொரு வகையிலும், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் வளர்ந்துள்ளது. ஒரே விதிவிலக்கு மொபைல் போன்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, கிராமப்புறங்களில் இணையம் மூலம் ஆடை கொள்முதல் 9.1%-லிருந்து 12% ஆக உயர்ந்துள்ளது. மேலும், இணையத்தில் பொருள் வாங்கல் ஏற்கனவே பிரபலமாக இருந்த நகர்ப்புற இந்தியாவில், இந்த எண்ணிக்கை 32.5%-லிருந்து 35.8% ஆக உயர்ந்துள்ளது.


      மற்ற பிரிவுகளும் இதேபோன்ற நிலையைக் காட்டுகின்றன. கிராமப்புறங்களில், மொபைல் ரீசார்ஜ்கள், சந்தாக்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவுகள் போன்ற சேவைகள் 16.2% இலிருந்து 28.2%-ஆக அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில், ஆன்லைன் சேனல்கள் மூலம் 'எரிபொருள் மற்றும் விளக்கு' மீதான செலவு 17.4%-லிருந்து 28.6%-ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இது, மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதையோ அல்லது எல்பிஜி நிரப்புதல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் அடிப்படையில், அதிகமான மக்கள் வசதியாகி வருவதைக் காட்டக்கூடும்.


சில மாற்றங்கள் சிறியதாக இருந்தன. எடுத்துக்காட்டாக, கிராமப்புறங்களில் கழிப்பறைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதில் சிறிது அதிகரிப்பு இருந்தது. இது அன்றாடப் பொருட்களுக்குக் கூட  இது பொருந்தும். இதில், டிஜிட்டல் ஷாப்பிங்கில் மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது.


எவ்வாறாயினும், தளபாடங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற பிரிவுகளில், ஆன்லைன் கொள்முதல்களின் பங்கு அப்படியே இருந்தது அல்லது கொஞ்சம் குறைந்துள்ளது. பெரிய அல்லது அரிதான கொள்முதல்கள் இன்னும் பெரும்பாலும் ஆஃப்லைனில் செய்யப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. உற்பத்தி தயாரிப்புகளைத் தொட்டுச் சரிபார்க்கவும், நிறுவலில் உதவி பெறவும், விற்பனையாளரை அதிகம் நம்பவும் மக்கள் ஆஃப்லைன் ஷாப்பிங்கை விரும்புகிறார்கள்.


இணையத்தின் வாங்குபவர்களின் பங்கு


ஒவ்வொரு தயாரிப்பு வகையிலும் எத்தனை நுகர்வோர் ஆன்லைனில் வாங்கினார்கள் என்பதைக் கண்டறிய நாங்கள் பொருட்களின் குறியீடுகளைப் (item codes) பயன்படுத்தினோம் (படத்தைப் பார்க்கவும்). 2023-24-ஆம் ஆண்டில், நகர்ப்புற மொபைல் போன் வாங்குபவர்களில் சுமார் 21 சதவீதம் பேர் ஆன்லைனில் வாங்கினார்கள். கிராமப்புறங்களில், 8 சதவீதம் பேர் மட்டுமே வாங்கினார்கள். ஆடைகளைப் பொறுத்தவரை, நகரங்களில் இணையத்தின் பங்கு இன்னும் அதிகமாக இருந்தது. இது, கிராமப்புறங்களில் 12 சதவீதத்துடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் 36 சதவீதம் ஆகும்.


       கடிகாரங்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற தனிப்பட்ட மின்னணு சாதனங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டைக் காட்டின. நகர்ப்புறங்களில், 9.3% வாங்குபவர்கள் இந்தப் பொருட்களை ஆன்லைனில் வாங்கினார்கள். கிராமப்புற இந்தியாவில், 3.7% பேர் மட்டுமே வாங்கினார்கள். மறுபுறம், பால், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பொருட்கள் பெரும்பாலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஆஃப்லைனில் வாங்கப்பட்டன. எனவே, சில வகைகளில் இணையத்தில் பொருள் வாங்கல் வளர்ந்து வந்தாலும், உண்மையான எண்கள் பெரும்பாலும் உற்சாகமான செய்தி விவாதங்கள் கூறுவதைவிட மிகக் குறைவு.


இந்த முறையை என்ன விளக்குகிறது?


முதலாவதாக, தயாரிப்பு வகை முக்கியமானது. தரப்படுத்தப்பட்ட, பிராண்டட் செய்யப்பட்ட மற்றும் திரும்பப் பெறக்கூடிய தயாரிப்புகள் ஆடை மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்றவை ஆன்லைன் விற்பனையில் சிறப்பாகச் செயல்பட்டன.


இரண்டாவதாக, இணையத்தில் பொருள் வாங்கலின் வளர்ச்சி கட்டண முறைகள் மற்றும் இணைய இணைப்பைப் பொறுத்தது. கிராமப்புற இந்தியாவில், UPI அடிப்படையிலான செயலிகள் பரவுவதால், அதிகமான மக்கள் இணைய சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். மக்கள் டிஜிட்டல் பணம் செலுத்துவதில் மிகவும் வசதியாகி வருகின்றனர்.


மூன்றாவதாக, நுகர்வுப் பழக்கங்கள் எளிதில் மாறாது. உள்ளூர் கிரானா கடைகளுடனான அவர்களின் தனிப்பட்ட உறவுகளை மக்கள் மதிக்கிறார்கள். பண அடிப்படையிலான பரிவர்த்தனைகளையும் அவர்கள் வசதியாகக் காண்கிறார்கள். கூடுதலாக, வாங்குவதற்கு முன் பொருட்களை நேரடியாக ஆய்வு செய்வதை அவர்கள் நம்புகிறார்கள். இந்தக் காரணிகள் நுகர்வோர் நடத்தையை தொடர்ந்து இயக்குகின்றன.


நான்காவதாக, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டவர்கள்கூட இணையத்தில் பொருள் வாங்கல் முறைக்கு முழுமையாக மாறாமல் இருக்கலாம். அவர்களுக்கு, இணையத்தில் பொருள் வாங்கல் பெரும்பாலும் அதை மாற்றுவதற்குப் பதிலாக நேரடி வாங்கலில் சேர்க்கிறது. உதாரணமாக, ஒருவர் வாங்குபவர் ஒரு தொலைபேசியைப் பற்றிய விவரங்களை ஆன்லைனில் சரிபார்த்து, கடையில் இருந்து அதை வாங்கலாம். சில நேரங்களில், அவர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்து ஒரு கடையில் பார்த்த பிறகு அதை இணையத்தில் வாங்கலாம். ஒரே குடும்பம் தங்களுக்கான ஆடைகளை ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கலாம். அதேநேரம், அவர்கள் இன்னும் ஒரு சாலையோர விற்பனையாளரிடமிருந்தும் காய்கறிகளை வாங்கலாம்.


ஐந்தாவது, இணையத்தில் பொருள் வாங்கல் இனி நகர்ப்புற உயரடுக்கிற்கு கட்டுப்படுத்தப்படவில்லை. இது இப்போது இந்தியாவின் பரந்த நுகர்வு முறையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. இருப்பினும், இந்த மாற்றம் வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமாக நடக்கிறது. நகர்ப்புற இந்தியா ஆன்லைனில் அதிக அளவிலான தயாரிப்புகளை முயற்சித்து வருகிறது. மறுபுறம், கிராமப்புற இந்தியா மெதுவாகவும் கவனமாகவும் டிஜிட்டல் வாங்கலில் மிகவும் வசதியாகி வருகிறது.


எதிர்பார்க்க வேண்டியது என்ன?


இந்தியாவில் சில்லறை விற்பனையின் எதிர்காலம் கலப்பினமாக இருக்கும். இது உள்ளூர் சுற்றுப்புற உறவுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் டிஜிட்டல் வசதியால் மேம்படுத்தப்படும். பிராண்டுகள் மற்றும் தளங்களைப் பொறுத்தவரை, அவர்கள் பல்வழி உத்திகள் (omni-channel strategies) உருவாக்க வேண்டும் என்பதாகும். அவர்கள் டிஜிட்டல்-மட்டும் மாதிரிகளை (digital-only models) மட்டும் நம்பியிருக்கக்கூடாது. கொள்கை வகுப்பாளர்களுக்கு, இது அனைத்து சேனல்களையும் நியாயமாக நடத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அவர்கள் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும். மேலும் அனைத்து வடிவங்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


புள்ளியியல் வல்லுநர்களுக்கு, இணையம் மற்றும் நேரடி இரண்டிலும் செய்யப்படும் கொள்முதல்களின் மதிப்பைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். இது நுகர்வோர் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறது. வீட்டு நுகர்வோர் செலவு கணக்கெடுப்பின் (Household Consumer Expenditure Survey (HCES)) எதிர்கால சுற்றுகளில் இந்தத் தரவு இருக்க வேண்டும். அவ்வாறு செய்வது பணவீக்கத்தை மிகவும் துல்லியமாக அளவிட அனுமதிக்கும். நுகர்வோர் விலைக் குறியீடுகளைக் கணக்கிடும்போது இணையம் மற்றும் நேரடி முறைகள் இரண்டிலிருந்தும் வாங்குதல்களை முழுமையாகச் சேர்க்கலாம்.


குமார் ஒரு சிறப்பு ஆய்வாளர், மற்றும் அப்ரோல் பஹ்லே இந்தியா அறக்கட்டளையில் ஒரு வருகைதரு ஆய்வாளர்.



Original article:

Share:

இந்தியாவில் வறுமை குறைப்பு வேகம் மந்தமாகியிருப்பதாக தோன்றுகிறது. -ஜதீந்தர் சிங் பேடி

 தனிநபர் வருமான உயர்வின் பலன் 2015-16-க்கு முன்பு நடந்த அளவுக்கு மக்களுக்குச் சென்றடையவில்லை.


உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் வறுமை கடுமையாகக் குறைந்துள்ளது. இது 2011-12-ல் 27.1%-லிருந்து 2022-23-ல் 5.3% ஆகக் குறைந்துள்ளது. இது 2011-12 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கான NSS/PLFS வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பின் (Household Consumption Expenditure Survey) தரவை அடிப்படையாகக் கொண்டது. இந்த கணக்கீடு 2021 வாங்கும் சக்தி சமநிலையை (purchasing power parity) ஒரு நாளைக்கு $3 என்ற விகிதத்தில் பயன்படுத்துகிறது. இந்த சரிவு என்பது வறுமையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1.82 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது என்பதாகும்.


தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு (NSS) 2011-12 மற்றும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) 2022-23 இன் HCES தரவை நேரடியாக ஒப்பிட முடியாது என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், இந்தக் கணக்கெடுப்புகளில் பயன்படுத்தப்படும் நினைவுகூரும் காலங்கள் வேறுபட்டவையாக உள்ளன. எனவே, இந்த தரவை ஒப்பிடுவதற்கு மாற்றங்கள் தேவை.


ஹிமான்ஷு, பீட்டர் லாஞ்சோவ் மற்றும் பிலிப் ஷிர்மர் (EPW, 2025) ஆகியோர் தரவை ஒப்பிடத்தக்கதாக மாற்றுவதில் பணியாற்றினர். பின்னர் அவர்கள் வறுமை குறைப்பை மதிப்பிடுவதற்கு பொருத்தமான விலைக் குறைப்பான்களைப் (price deflators) பயன்படுத்தினர். அவர்களின் கணக்கீடுகளின்படி, 2005-12 நிதியாண்டில் (2004-05 முதல் 2011-12 வரை) வறுமை 37.2%-லிருந்து 21.9%-ஆகக் குறைந்தது. 2022-23-ஆம் ஆண்டில் இது மேலும் 9.9%-ஆகக் குறைந்தது. இதற்காக அவர்கள் டெண்டுல்கர் குழுவின் வறுமைக் கோடு (Tendulkar Committee’s poverty line)  வரையறையைப் பயன்படுத்தினர்.


இதன் அடிப்படையில், 2004-05 நிதியாண்டில் இருந்த 2.18 ppa உடன் ஒப்பிடும்போது, 2012-23 நிதியாண்டில் 1.09 ppa சரிவுடன் வறுமைக் குறைப்பு வேகம் பாதியாகக் குறைந்துள்ளது என்று அவர்கள் வாதிட்டனர். வறுமைக் குறைப்புக்கு முக்கியமான வேறு சில பேரியல் குறிகாட்டிகளின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதன் மூலம் இத்தகைய எதிர் உரிமைகோரல்களில் சில வெளிச்சம் போடலாம்.


தனிநபர் வருமானம் மற்றும் HDI


வறுமைக் குறைப்பு தானாகவே நடக்காது என்பதும், தனிநபர் வருமானத்தில் (PCY) வளர்ச்சி என்பது வறுமையைக் குறைப்பதற்கு அவசியமான நிபந்தனையாகும். வருமான வளர்ச்சியுடன், நன்மைகள் மக்களைச் சென்றடைய வேண்டும். மக்களின் செலவழிக்கக்கூடிய வருமானம் உயரும்போது, அவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும். கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான சிறந்த அணுகலையும் அவர்கள் பெறுகிறார்கள். இதன் பொருள் PCY இன் அதிகரிப்பு மற்றும் தனிநபர் வருமானம் (PCY) மற்றும் மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) ஆகியவற்றின் தொடர்பு வறுமைக் குறைப்புக்கு முக்கியமானது. 2010-ம் ஆண்டில் முகர்ஜி மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, 1983, 1993, 1999 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கான 28 மாநிலங்களின் தரவைப் பயன்படுத்தியது. PCY-ன் அதிகரிப்புக்கும் HDI மதிப்பெண்களின் அதிகரிப்புக்கும் இடையே ஒரு தொடர்பை அவர்கள் கண்டறிந்தனர். இந்தத் தொடர்பு இரு வழிகளிலும் செயல்படுவதாக ஆய்வு காட்டுகிறது.


இந்த கட்டுரை நிலையான விலைகளில் PCY நிலைக்கும் HDI குறியீட்டிற்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்கிறது. இந்த பகுப்பாய்வு ஜம்மு & காஷ்மீர் (இப்போது யூனியன் பிரதேசம்) உட்பட 20 முக்கிய மாநிலங்களின் தரவைப் பயன்படுத்துகிறது, இதற்கான நிதியாண்டு 2005 முதல் நிதியாண்டு 2023 வரை ஆகும். இந்த இரண்டு மாறிகளுக்கும் இடையிலான தொடர்பு குணகம் FY2005-15 ஆண்டுகளில் மிக அதிகமாக (0.8 க்கு மேல்) இருந்தது. ஆனால் அது 2020-21 இல் 0.678 ஆகவும், 2022-23 இல் 0.641 ஆகவும் குறைந்தது (படம் 1 ஐப் பார்க்கவும்).


இந்த சரிவு என்பது 2015-16-க்குப் பிறகு மக்களின் நலனில் குறைவான முன்னேற்றம் இருப்பதைக் குறிக்கிறது. அதாவது, வெவ்வேறு மாநிலங்களில் PCY அதிகரித்தபோதும் வறுமைக் குறைப்பு குறைந்துள்ளது. இது, அதிகரித்து வரும் PCY-யின் நன்மைகள் 2015-16-க்கு முன்பு இருந்த அளவுக்கு பொது மக்களைச் சென்றடையவில்லை என்பதைக் காட்டுகிறது. மாறாக, ஆதாயங்கள் பெரும்பாலும் பணக்கார தொழிலதிபர்கள், பெரிய நில உரிமையாளர்கள் மற்றும் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்குச் சென்றன. குறைந்த வருமானக் குழுக்கள் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது குறைவான நன்மைகளைக் கண்டன. நாட்டில் PCY வளர்ச்சியும் குறையத் தொடங்கியபோது இந்த பலவீனமான தொடர்பு ஏற்பட்டது. இந்த இரண்டு பிரச்சனைகளும் சேர்ந்து நாட்டில் வறுமைக் குறைப்பின் வேகத்தைக் குறைத்திருக்கலாம்.


PCY பற்றிய தரவுகளின்படி, FY2016-23-ல் PCY-ன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 4.1 சதவீதமாகக் குறைந்தது. இது FY2012-16-ல் ஆண்டுக்கு 5.1 சதவீத வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவாகும். இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் NAS, 2011-12 தொடர் தரவுகளை 2011-12 விலைகளில் அடிப்படையாகக் கொண்டவை. FY2016-23-ல் ஆண்டுக்கு 4.1 சதவீத வளர்ச்சி விகிதமும் FY2005-12-ல் காணப்பட்ட 4.8 சதவீத ஆண்டு வளர்ச்சியை விடக் குறைவு. FY2005-12 தரவு NAS, 2004-05 தொடர் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.


இங்கே முக்கியமான பிரச்சினையாக 2011-12 தொடரில் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களை (NAS) அளவிடப் பயன்படுத்தப்படும் முறையாகும். நாகராஜ் மற்றும் ஸ்ரீனிவாசன் (2017) போன்ற பல அறிஞர்கள், இந்த முறை வளர்ச்சி விகிதங்களை மிகைப்படுத்துவதற்கு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். அதிக வளர்ச்சி மற்ற பெரிய பொருளாதார குறிகாட்டிகளுடன் பொருந்தாததால் இந்த மிகைப்படுத்தல் தெளிவாக உள்ளது. NAS 2004-05 தொடரின் தரவு 2014-15-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை கிடைக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இந்தத் தரவிலிருந்து மதிப்பிடப்பட்ட PCY வளர்ச்சி விகிதம், 2011-12-ஆம் ஆண்டு தொடங்கி, ஆண்டுக்கு 2.8 சதவீதமாகும். இந்த 2.8 சதவீத வளர்ச்சியை, நிதியாண்டு 2012 முதல் நிதியாண்டு 2016 வரையிலான PCY வளர்ச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். இந்த விகிதம் NAS 2011-12 தொடர் தரவுகளில் காணப்படும் ஆண்டுக்கு 5.1 சதவீத வளர்ச்சியை விட மிகக் குறைவு. இந்த வேறுபாடு விளக்கப்படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.


2016-23 நிதியாண்டில் PCY வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 4.1 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் NAS, 2011-12 தொடரை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், உண்மையான வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருக்கலாம். PCY வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை 2011-12 க்குப் பிறகு தொடங்கியிருக்கலாம். இது 2015-16-க்குப் பிறகு இன்னும் குறைந்துள்ளது. இந்த மந்தநிலை வறுமை ஒழிப்பு வேகத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது. 2015-16-க்குப் பிறகு, வறுமை ஒழிப்பு வேகம் மோசமாகியிருக்க வேண்டும். PCY வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு PCY வளர்ச்சி HDI-க்கு எவ்வளவு பதிலளித்தது என்பதன் சரிவுடன் தொடர்புடையது என்பதால் இது நடந்தது.


அமைப்புசாரா துறையின் சிக்கல்கள்


2016 முதல் அமைப்புசாரா துறையின் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இந்தத் துறை அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது. 2016-23 நிதியாண்டில் தனிநபர் வருமானம் (PCY) அதிகரித்த போதிலும் மனித மேம்பாட்டு குறியீட்டு (HDI) முன்னேற்றம் குறைந்ததற்கு இந்த சரிவு ஒரு முக்கிய காரணமாகும். இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் தரவு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSES)) இதை தெளிவாகக் காட்டுகிறது. 2016 நிதியாண்டில் 63.4 மில்லியனாக இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 2022 நிதியாண்டில் 59.7 மில்லியனாகக் குறைந்தது. அதே காலகட்டத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 111.3 மில்லியனில் இருந்து 97.9 மில்லியனாகக் குறைந்தது. 2016-க்கு முன்பு, இதற்கான நிலைமை  வேறுபட்டது. 2011 நிதியாண்டுக்கும் 2016 நிதியாண்டுக்கும் இடையில், நிறுவனங்கள் 57.7 மில்லியனிலிருந்து 63.4 மில்லியனாக வளர்ந்தன. இதில், தொழிலாளர்கள் 108 மில்லியனிலிருந்து 111.3 மில்லியனாக அதிகரித்தனர்.


அமைப்புசாரா துறையில் வருமானம் மற்றும் வருவாய் மந்தநிலை 2015-க்குப் பிறகு மூன்று பெரிய எதிர்பாரா நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கலாம். முதலாவதாக, 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்தது. அடுத்து, 2017-ல் ஜிஎஸ்டி மோசமாக செயல்படுத்தப்பட்டது. இறுதியாக, 2020-ல் திடீர் மற்றும் கடுமையான கோவிட் ஊரடங்குகள் ஏற்பட்டன.


2020-ம் ஆண்டு முதல் பேடி மற்றும் பிரபாகரின் பணி இங்கே முக்கியமானது. வழக்கமான ஜிஎஸ்டி அல்லது கூட்டு வரி செலுத்துவோர் அல்லாத சிறிய அலகுகளை ஜிஎஸ்டி அமைப்பு விலக்குகிறது என்று அவர்கள் கூறினர். இந்த சிறிய அலகுகள் ஏற்கனவே செலுத்திய ஜிஎஸ்டியில் உள்ளீட்டு கிரெடிட்டை கோர முடியாது. அதற்கு மேல், அவர்களின் வெளியீட்டின் முழு மதிப்பிலும் 1% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இது ஒரு அடுக்கு வரி விளைவை (cascading tax effect) ஏற்படுத்துகிறது, அதாவது வரியின் மீது வரி வசூலிக்கப்படுகிறது. மேலும், வழக்கமான அலகுகள் இந்த சிறிய அலகுகளிலிருந்து வாங்க விரும்புவதில்லை. ஏனெனில் வழக்கமான அல்லது கூட்டு அலகுகளிலிருந்து வாங்காத வாங்குபவர்கள் அந்த வாங்குதல்களுக்கு உள்ளீட்டு வரி கிரெடிட்டை கோர முடியாது. இதன் விளைவாக, சிறிய அலகுகள் பெரிய அலகுகளின் மதிப்புச் சங்கிலியிலிருந்து வெளியேறுகின்றன. இந்த விலக்கின் காரணமாக, இந்த சிறிய அலகுகளில் வேலைவாய்ப்பு மற்றும் மதிப்பு கூட்டல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


இந்த கண்டுபிடிப்புகள், 2011-12-க்குப் பிறகு வறுமை ஒழிப்பு குறைந்துள்ளதாகக் கூறுகின்றன. 2016 நிதியாண்டிலிருந்து 2023 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த மந்தநிலை இன்னும் குறிப்பிடத்தக்கதாக மாறியது.


எழுத்தாளர் சண்டிகரில் உள்ள வளர்ச்சி மற்றும் தொடர்பு நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியர் ஆவர்.



Original article:

Share:

பொம்மை தீர்ப்பு, ஜனநாயகத்திற்கு வரம்புகளை நிர்ணயிக்கிறது -ஆஷிஷ் பரத்வாஜ், இன்சியா வாகன்வதி

 பொம்மை தீர்ப்பு ஒரு முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் நியாயமற்ற முறையில் அகற்றப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.


இந்திய அரசியலில் பெரும்பாலும் அதிகாரப் போராட்டங்கள், கட்சி முறிவுகள் மற்றும் திடீர் மாற்றங்கள் இருக்கும். ஆனால் இந்தப் பிரச்சினைகள் மாநில அரசாங்கங்களைப் பாதிக்கும்போது, அது அரசியலமைப்பையும் அதைப் பாதுகாக்கும் நிறுவனங்களையும் சோதிக்கிறது. ஒரு முக்கியமான வழக்கு எஸ்.ஆர். பொம்மை vs. இந்திய ஒன்றியம் (SR Bommai vs. Union of India) (1994). தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை நியாயமற்ற முறையில் அகற்றுவதைத் தடுக்க இந்தத் தீர்ப்பு ஒரு கேடயமாகச் செயல்பட்டது. இருப்பினும், 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி பிளவுபட்டபோது ஏற்பட்ட நெருக்கடி, அரசியல் இன்னும் வலுவான அரசியலமைப்பு பாதுகாப்புகளைக்கூட அவற்றின் வரம்புகளுக்குள் தள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது.


முதலில், பொம்மை வழக்கு என்பது என்ன? கர்நாடகாவின் முதல்வராக எஸ்.ஆர். பொம்மை இருந்தார். அவரது கட்சி வேறொரு கட்சியுடன் இணைந்தது, இது அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. சில சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. பொம்மைக்கு போதுமான ஆதரவு இல்லை என்று ஆளுநர் விரைவாக முடிவு செய்து, அவரது அரசாங்கத்தை நீக்குமாறு குடியரசுத்தலைவரிடம் கேட்டுக் கொண்டார். பொம்மைக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு எதுவும் இல்லை.


ஆனால், இது ஒரு தனிப்பட்ட வழக்கு அல்ல. அந்த நேரத்தில், அரசியலமைப்பின் 356-வது பிரிவு  அரசியலமைப்பைப் பின்பற்றாத ஒரு மாநில அரசாங்கத்தை மத்திய அரசு அகற்ற அனுமதிக்கிறது. இது 95 முறை பயன்படுத்தப்பட்டது. சில நேரங்களில் அது சரியாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலும் எதிர்க்கட்சி அரசாங்கங்களை அகற்ற இது தவறாகப் பயன்படுத்தப்பட்டது.


1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் பெரிய அரசியல் பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. இது மத்திய அரசை மேலும் நான்கு மாநில அரசாங்கங்களை பதவி நீக்கம் செய்ய வைத்தது. பொம்மையுடன் சேர்ந்து மூன்று மாநிலங்கள் இந்த அகற்றுதல்களை நீதிமன்றத்தில் எதிர்த்தன. ஒன்பது நீதிபதிகள் கொண்ட சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்து, பிரிவு 356-ஐப் பயன்படுத்துவதற்கான வரம்புகளை முடிவு செய்தது.


ஒரு அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை சரிபார்க்க நம்பிக்கை வாக்கெடுப்பு அவசியம் என்று அமர்வு கூறியது. மேலும், பிரிவு 356-ன் கீழ் குடியரசுத்தலைவர் ஆட்சியைப் பயன்படுத்துவதற்கான அதிகாரம் வரம்பற்றது அல்ல என்றும், அவற்றை நீதிமன்றங்கள் அதை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் தெளிவுப்படுத்தியது. மதச்சார்பின்மை அரசியலமைப்பின் அடிப்படைப் பகுதி என்று நீதிமன்றம் கூறியது. எனவே, ஒரு மாநில அரசு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராகச் சென்றால், அதை நீக்கலாம். நீதிமன்ற அமர்வில் ஒருவரான (இன்சியா வாகன்வதி) தாத்தாவான நீதிபதி ஏ.எம். அஹ்மதி, தனது 37 பக்கக் கருத்தில் இந்தக் கருத்தை மேலும் விளக்கினார். எனவே, நீதிமன்றம் பொம்மையின் நீக்கத்தை ரத்து செய்தது, ஆனால் மற்ற மூன்று தீர்ப்புகள் மதச்சார்பின்மையை ஆதரித்ததால் அவற்றை நிறுத்தி வைத்தது.


மகாராஷ்டிராவில் ஏற்பட்ட சமீபத்திய அரசியல் நெருக்கடியின் போது, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே அதிகாரம் எவ்வாறு பகிரப்படுகிறது என்பது குறித்த கொள்கைகள் மீண்டும் கவனத்திற்கு வந்தன. 2022 ஆம் ஆண்டில், சிவசேனா கட்சிக்குள் பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஒரு குழு முதல்வர் உத்தவ் தாக்கரேவை ஆதரித்தது, மற்றொரு குழு பாஜகவுடன் இணைந்த ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்தது. இரு குழுக்களும் தங்களை "உண்மையான" சிவசேனா என்று கூறிக்கொண்டன. இந்த குழப்பத்தின் போது, ஆளுநர் தாக்கரேவிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தனக்கு இன்னும் போதுமான ஆதரவு இருப்பதாக நிரூபிக்கச் சொன்னார். ஆனால் இது நடப்பதற்கு முன்பு, தாக்கரே ராஜினாமா செய்தார். பின்னர் ஷிண்டே முதலமைச்சரானார். இருப்பினும், தாக்கரே தனது பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்பதற்கான தெளிவான ஆதாரம் இல்லாமல் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்டது சரியா என்பது குறித்து இன்னும் பெரிய கேள்விகள் இருந்தன.


2023-ஆம் ஆண்டில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை வழங்கியது. ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்த முடிவு தவறானது. ஏனெனில், அது கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், உண்மையான அரசியலமைப்பு நெருக்கடி அல்ல என்றும் விளக்கியது. சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்ததால் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றதாக அர்த்தமல்ல என்றும் விளக்கியது.


இருப்பினும், நீதிமன்றம் இதைத் தெளிவுபடுத்திய போதிலும், அரசியல் நிலைமை மாறவில்லை. தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தானே ராஜினாமா செய்தார். எனவே நீதிமன்றம் அவரை மீண்டும் முதல்வராக ஆக்க முடியவில்லை. இந்திய தேர்தல் ஆணையம் (ECI) சிவசேனாவின் பெயரையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்கியது. இந்த முடிவுக்கு எதிரான தாக்கரேவின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் விசாரிக்கும்.


பொம்மை வழக்கில், ஆளுநர் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்தது கடிதங்கள் மற்றும் யூகங்களின் அடிப்படையில்தான், நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்டு அல்ல. சிவசேனா வழக்கில், ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பை தவறாகப் பயன்படுத்தினார். இரண்டு நிகழ்வுகளிலும், முதலமைச்சர் சரியான நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் நீக்கப்பட்டார்.


மகாராஷ்டிரா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 2023-ஆம் ஆண்டு தீர்ப்பு, பழைய பொம்மை தீர்ப்பு இன்றும் இந்தியாவில் மிகவும் முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. பல ஆண்டுகளாக, அரசியல் பிரச்சனைகளின் போது நீதிமன்றம் இந்த தீர்ப்பை பல முறை பயன்படுத்தியுள்ளது. உதாரணமாக, 1999-ஆம் ஆண்டில், பீகாரில் ராப்ரி தேவி அரசாங்கம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. 2016-ஆம் ஆண்டில், ஆளுநரின் நடவடிக்கைகள் "அரசியலமைப்புக்கு முரணானது" என்று கண்டறியப்பட்டதால் அருணாச்சலப் பிரதேச அரசாங்கம் மீட்டெடுக்கப்பட்டது. அதே ஆண்டில், நீக்கப்பட்ட உத்தரகண்ட் அரசாங்கமும் மீண்டும் கொண்டுவரப்பட்டது. மிக சமீபத்தில் கர்நாடகாவில், ஒரு கட்சிக்குள் ஏற்படும் சண்டைகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த போதுமான காரணம் அல்ல என்று நீதிமன்றம் கூறியது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும், பொம்மை தீர்ப்பு இன்னும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறது. ஒரு ஜனநாயகத்தில், அதிகாரம் சரியான விதிகள் மூலம் கை மாற வேண்டும் என்பதும், அவை நியாயமற்ற அரசியல் மூலம் அல்ல என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.


ஆஷிஷ் பரத்வாஜ் மும்பையில் உள்ள பிட்ஸ் பிலானியில் சட்டப் பள்ளியின் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார். இன்சியா வாகன்வதி *The Fearless Judge என்ற புத்தகத்தின் ஆசிரியர்.



Original article:

Share:

மறுவாழ்வு என்பது அடிப்படை உரிமை அல்ல : உச்ச நீதிமன்றம் -உத்கர்ஷ் ஆனந்த்

 பொதுப் பயன்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்கள் மறுவாழ்வு அல்லது புதிய நிலத்தை சட்டப்பூர்வ உரிமையாகக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


அரசியலமைப்புச் சட்டம் நிலத்திற்கு நியாயமான விலையை மட்டுமே உத்தரவாதம் செய்கிறது, ஆனால் அதற்கான குறிப்பிட்ட சட்டம் அல்லது கொள்கை இல்லாவிட்டால் புதிய வீடுகள் அல்லது நிலம் போன்ற கூடுதல் உதவியை உறுதியளிக்கவில்லை என்று நீதிமன்றம் விளக்கியது.


பொது நோக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்துவது சட்டப்பூர்வமாக செய்யப்பட்டால், பிரிவு 21-ன் கீழ் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார உரிமையை மீறாது என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. மறுவாழ்வு தொடர்பான எந்தவொரு கொள்கையையும் அரசாங்கம் நியாயமாகப் பின்பற்ற வேண்டும், ஆனால் சட்டம் அல்லது குறிப்பிட்ட கொள்கைகளில் வழங்கப்பட்டுள்ளதைத் தாண்டி மறுவாழ்வு அளிக்காது.


நீதிபதிகள் ஜே.பி. பர்டிவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, பொது நோக்கத்திற்காக சட்டத்திற்கு இணங்க நிலத்தை இழப்பது, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் உள்ள வாழ்வு மற்றும் வாழ்வாதார உரிமையை மீறுவதில்லை என்று தீர்ப்பளித்தது. மேலும், ஒரு கொள்கையின் கீழ் மறுவாழ்வு வெளிப்படையாக வழங்கப்படாவிட்டால், மாநிலம் மாற்று நிலம் அல்லது வீட்டுவசதி வழங்குவதற்கு சட்டப்பூர்வ கடமையில் இல்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது, மேலும் அத்தகைய கொள்கை இருந்தாலும், அது நியாயமாகவும் அதன் எல்லைகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.


பொதுப் பயன்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது, அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் மக்கள் வாழ்வாதார இழப்பைக் கோர முடியாது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியது.


ஜூலை 14 அன்று, ஹரியானாவில் உள்ள நில உரிமையாளர்கள் தங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு மலிவான விலையில் மற்ற நிலங்களை விரும்பினர் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.


ஹரியானாவின் கைதல் மாவட்டத்தில் உள்ள மக்களின் மனுக்களிலிருந்து இந்த வழக்கு வந்தது. மக்களை மகிழ்விப்பதற்காக கூடுதல் சலுகைகளை வழங்குவது பெரும்பாலும் நிலம் கையகப்படுத்துதலை கடினமாக்குகிறது மற்றும் நீண்ட நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுக்கும் என்று நீதிமன்றம் அனைத்து மாநிலங்களையும் எச்சரித்தது.


பொதுப் பயன்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது, உரிமையாளர் சட்டத்தின் மூலம் நியாயமான பணத்தை இழப்பீடாகப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே அரசாங்கம் புதிய நிலங்கள் அல்லது பிற சலுகைகள் போன்ற கூடுதல் உதவியை வழங்க வேண்டும்.


தேவையற்ற நலத்திட்டங்கள், அவை மக்களுக்கு உதவுவதற்காகவே இருந்தாலும், ஒவ்வொரு நிலம் கையகப்படுத்தல் வழக்கிலும், குறிப்பாக சட்டம் அவற்றை கட்டாயப்படுத்தாதபோது, எதிர்பார்க்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது.


சில நேரங்களில், மாநில அரசுகள் மக்களை மகிழ்விக்க இதுபோன்ற திட்டங்களை உருவாக்குகின்றன. ஆனால், இது பின்னர் பிரச்சினைகளை ஏற்படுத்தி பல நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுக்கும். இந்த வழக்கு அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.


மக்கள் மறுவாழ்வு பெற (வேறு இடங்களில் குடியேற உதவ) அரசியலமைப்பு ரீதியாக உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.


முடிந்தால் புதிய நிலத்தை வழங்குவதன் மூலம் நிலத்தை இழக்கும் மக்களுக்கு உதவ அரசாங்கம் முயற்சிப்பது நல்லது. ஆனால், அரசாங்கத்தை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்த முடியாது.


இதுபோன்ற வழக்குகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு உதவியும் நியாயம் மற்றும் கருணையின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு சட்ட உரிமையின் அடிப்படையிலும் அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


மறுவாழ்வு மூலம் உதவி என்பது நிலத்தை நேரடியாக நம்பியுள்ள மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.  விவசாயிகள் அல்லது விவசாயம் செய்து வாழும் குடும்பங்கள் போன்றவை மற்றும் நிலம் அல்லது வீடுகளை இழப்பதால் ஏழைகளாக மாறுபவர்கள்.


இந்த வழக்கில், ஹரியானாவில் உள்ள சில நில உரிமையாளர்கள் 1990-ஆம் ஆண்டுகளில் தங்கள் நிலத்தை இழந்தனர். அரசாங்கம் 1992 கொள்கையின் கீழ் மற்றும் அப்போது நிர்ணயிக்கப்பட்ட பழைய விலையில் அவர்களுக்கு புதிய குடியிருப்பு நிலங்களை வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.


ஆனால், உச்சநீதிமன்றம் அதற்கு உடன்படவில்லை. 1992ஆம் ஆண்டு விலையில் சட்டப்பூர்வ உரிமையாக நிலங்களை கோர முடியாது என்று அது கூறியது.


மாறாக, அவர்கள் புதிய 2016ஆம் ஆண்டு ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (Haryana Urban Development Authority (HUDA)) கொள்கையின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்தக் கொள்கை இடம்பெயர்ந்த மக்களுக்கு நிலங்களை வழங்குகிறது. ஆனால், தற்போதைய விலைகள் மற்றும் நிபந்தனைகளின்படி. நீதிமன்றம் அவர்களுக்கு விண்ணப்பிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளித்ததுடன், 2016 விதிகளின்படி அவர்களின் விண்ணப்பங்களைச் செயல்படுத்த அதிகாரிகளிடம் கூறியது.


துஷ்பிரயோகம் மற்றும் மோசடியை நிறுத்த, நில மோசடி கும்பல்களிடமிருந்து இந்தத் திட்டத்தின் நியாயமற்ற பலனைப் பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் HUDA மற்றும் ஹரியானாவிடம் கூறியது.


மேலும், மனைகளைப் பெறுபவர்கள் அவற்றை விரைவாக பணம் சம்பாதிப்பதற்கான சொத்தாக கருத முடியாது என்றும், சிறப்பு அனுமதி இல்லாமல் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மனைகளை விற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.



Original article:

Share:

உச்சநீதிமன்றம், கணவன்-மனைவிகளுக்கு இடையே இரகசியமாக பதிவு செய்யப்பட்ட உரையாடல்களை நீதிமன்ற ஆதாரமாக அனுமதித்தது ஏன்?

 விவாகரத்து வழக்குகளில் மனைவியின் சிறப்புரிமை (privilege) நேரடியாகப் பொருந்தாது. இந்தக் குற்றச்சாட்டுகள் கடிதங்கள், புகைப்படங்கள் அல்லது பிற நபர்களின் சாட்சியங்கள் போன்ற ஆதாரங்களால் கூடுதலாக வழங்கப்படுகின்றன.


விவாகரத்து வழக்குகள் உள்ளிட்ட திருமண தகராறுகளில், கணவன்-மனைவி இடையே இரகசியமாக பதிவு செய்யப்படும் உரையாடல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. இதில் விவாகரத்து கோரும் கணவர், தனது மனைவியுடன் இரகசியமாகப் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்த 2021-ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத் தீர்ப்பை இது ரத்து செய்தது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தியச் சட்டத்தில் கணவன்-மனைவி இடையேயான தனிப்பட்ட உரையாடல்களைப் பாதுகாக்கிறது. மேலும், திருமணத்தின் போதும், திருமணம் முடிந்த பின்னரும் கூட, இந்த சட்டத்தின் அடிப்படையில் கணவன்-மனைவி அல்லது திருமண உரிமை தொடர்பான சலுகையின் விதிகளை மாற்றுகிறது.


வாழ்க்கைத் துணை சிறப்புரிமை (spousal privilege) என்றால் என்ன?


வாழ்க்கைத் துணை சலுகை (Spousal privilege) என்பது ஒரு நபரை ஒரு குற்றவியல் வழக்கில் தனது துணைக்கு எதிராக சாட்சியமளிக்க கட்டாயப்படுத்த முடியாது. இந்த யோசனை திருமணத்தின்போது கணவன்-மனைவி இடையேயான தனிப்பட்ட உரையாடலைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது.


இந்தியாவில், சாட்சியச் சட்டத்தின் பிரிவு 122 இந்த விதியை விளக்குகிறது. எந்தவொரு திருமணமான நபரோ அல்லது முன்பு திருமணமான ஒருவரோ, திருமணத்தின் போது தங்கள் துணையால் செய்யப்பட்ட எந்தவொரு தொடர்பையும் வெளிப்படுத்த வேண்டியதில்லை என்று அது கூறுகிறது. அதைச் சொன்ன நபரோ அல்லது அவர்களின் பிரதிநிதியோ ஒப்புக் கொள்ளாவிட்டால், அத்தகைய தொடர்பைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கும் அனுமதி இல்லை. இருப்பினும், விதிவிலக்குகள் உள்ளன. திருமணமானவர்களுக்கு இடையிலான வழக்குகளிலோ அல்லது ஒரு துணை மற்றொருவருக்கு எதிரான குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட சட்ட வழக்குகளிலோ இந்த விதி பொருந்தாது.


சட்டத்தின்படி, மற்ற மனைவி சம்மதிக்கும்போது அல்லது ஒரு மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் மூன்றாம் தரப்பினருக்கு நிகழ்வுகளை விவரித்தபோது, கணவன்-மனைவி தொடர்பு ஆதாரமாக அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் எதுவும் நடக்கவில்லை என்றால், ஒரு துணை தற்செயலாக ஏதாவது ஒன்றை வெளிப்படுத்தினாலும், அந்தத் தகவல் பதிவிலிருந்து நீக்கப்படும். நீதிமன்றம் அதை ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது.


விவாகரத்து வழக்குகளுக்கு சட்டம் எவ்வாறு பொருந்தும்?


விவாகரத்து வழக்குகளில் வாழ்க்கைத் துணை சிறப்புரிமை நேரடியாகப் பொருந்தாது. ஒரு துணை மற்றவரைக் குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தால், அந்தக் கோரிக்கைகளைப் பயன்படுத்தலாம். இந்தக் கோரிக்கைகள் கடிதங்கள், புகைப்படங்கள் அல்லது சாட்சி அறிக்கைகள் போன்ற பிற ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகின்றன. இருப்பினும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், குறுஞ்செய்திகள், வீடியோ மற்றும் குரல் பதிவுகள், மின்னஞ்சல்களும் பெரும்பாலும் ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இரண்டு முக்கிய காரணங்களுக்காக பல உயர் நீதிமன்றங்கள் இரகசியப் பதிவுகளை ஆதாரமாக ஏற்றுக் கொள்வதைத் தவிர்த்து வருகின்றன:


சில நேரங்களில் சந்தேகத்திற்கிடமான அல்லது கட்டாய முறைகளைப் பயன்படுத்தி ரகசியப் பதிவுகள் செய்யப்படலாம். இந்த பதிவுகள் பொருத்தமானவையா மற்றும் ஒவ்வொரு வழக்கிலும் ஆதாரமாக அனுமதிக்கப்படுகின்றனவா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க வேண்டும். விசாரணையின்போது இந்த முடிவெடுக்கும் செயல்முறை ஆதாரங்களை (decision-making process) மதிப்பிடுதல் என்று அழைக்கப்படுகிறது.


திருமணமானது தனியுரிமைக்கான நியாயமான எதிர்பார்ப்புடன் வருகிறது. ரகசியப் பதிவுகள் இந்த தனியுரிமையை மீறுகின்றன. தனியுரிமை இல்லாதபோது, வாழ்க்கைத் துணைவர்கள் பார்க்கப்படுவதா அல்லது கண்காணிக்கப்படுவதா என்று கவலைப்படலாம்.


ஏன் SC ரகசியப் பதிவுகளை நீதிமன்றத்தில் ஏற்கும்படி செய்தது?


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 1973-ம் ஆண்டு முந்தைய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. அந்த வழக்கு ஒரு மருத்துவர் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டை நிரூபிக்க காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பு பற்றியது. அப்போது, ஆதாரம் எவ்வாறு பெறப்பட்டது என்பதில் நீதிமன்றம் கவனம் செலுத்தவில்லை. ஏனெனில், இந்த வழக்கு ஒரு பொது ஊழியரால் ஊழல் செய்யப்பட்டது மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்பானது அரசால் செய்யப்பட்டது. இப்போது, உச்ச நீதிமன்றம் திருமணமான தம்பதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கும் இதே காரணத்தைப் பயன்படுத்தியுள்ளது.


ஆதாரங்கள் பொருத்தமானதாக இருந்தால், தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்படலாம் மற்றும் சட்ட விதிவிலக்குகளுக்குள் பொருந்தினால், அது ரகசியமாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது. அதே சமயத்தில், ரகசிய பதிவுகள் அடிப்படை உரிமைகளை மீறுகின்றன என்றும் நீதிமன்றம் கூறியது. ஆனால், தனியுரிமைக்கான உரிமை நியாயமான விசாரணைக்கான உரிமையுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும்.


உச்சநீதிமன்றம் (SC) பிரிவு 122-ஐ விளக்கியுள்ளது. அதாவது, ஒரு நபர் தனது துணைக்கு எதிராக சாட்சியமளிக்க கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், இது போன்ற ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது, குறிப்பாக திருமணம் தொடர்பான வழக்குகளில். ரகசியமாகப் பதிவு செய்யும் தொலைபேசி "ஒட்டுக் கேட்பவரிடமிருந்து வேறுபட்டவர் இல்லை" (no different from an eavesdropper) என்று நீதிமன்றம் கூறியது. இதன் பொருள் நீதிமன்றம் டிஜிட்டல் ஆதாரங்களை ஒரு தனிப்பட்ட உரையாடலைக் கேட்டு சாட்சியம் அளிக்கும் மூன்றாவது நபரைப் போல நடத்துகிறது.


தீர்ப்பின் தாக்கம் என்னவாக இருக்கும்?


2017-ல் தனியுரிமைக்கான உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. நீதிமன்றம் அந்த தனியுரிமைக்கான உரிமையை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது. "திருமணத்தின் புனிதத்தை" (sanctity of marriage) பாதுகாப்பதற்காக பிரிவு 122 உருவாக்கப்பட்டது என்று நீதிமன்றம் கூறியது. அது திருமணத்திற்குள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக அல்ல என்றும் கூறியது..


சாட்சியச் சட்டம் 1872-ல் (Evidence Act) நடைமுறைக்கு வந்தது. இது விக்டோரியன் காலத்திலிருந்து வந்த ஒரு சட்டமாகும். இது அந்தக் காலத்திற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால் இன்று, தனியுரிமை ஒரு அடிப்படை உரிமையாகப் பார்க்கப்படுகிறது. இந்த உரிமை ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாக்கிறது. இது அரசு மற்றும் தனியார் தனிநபர்களின் தலையீட்டைத் தடுக்கிறது. இந்த உரிமையை யாராவது மீறினால், அதை அனுமதிக்க ஒரு செல்லுபடியாகும் சட்டம் இருக்க வேண்டும்.


நீதிமன்றத்தில் ரகசிய பதிவுகளை அனுமதிப்பது திருமணங்களுக்குள் கண்காணிப்பை உருவாக்கும் என்ற வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு திருமணம் வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவருக்கொருவர் உளவு பார்க்கும் நிலையை அடைந்தால், அந்த திருமணம் ஏற்கனவே சிதைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது என்று நீதிமன்றம் கூறியது. மேலும், இருவர்களிடையே எந்த நம்பிக்கையும் இல்லை என்பதையும் இது காட்டுகிறது.


இந்தத் தீர்ப்பு நியாயமான விசாரணைக்கான பெண்களின் உரிமையைப் பாதிக்கக்கூடும் என்ற கவலை உள்ளது. இந்தியாவில், ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பதிலும் தொழில்நுட்பத்தை அணுகுவதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. மொபைல் பாலின இடைவெளி அறிக்கை 2025-ன் படி, ஆண்களுடன் ஒப்பிடும்போது 39% குறைவான பெண்கள் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கிறார்கள். ஸ்மார்ட்போன் மூலம் ஆதாரங்களை எளிதாக சேகரிக்க முடியும் என்பதால், இந்த தொழில்நுட்பத்தை சிறப்பாக அணுகக்கூடிய தரப்புக்கு இயற்கையாகவே ஒரு நன்மை உண்டு.



Original article:

Share:

விண்வெளி பயணம் சுபன்ஷு சுக்லாவின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்? ஏன் விண்வெளி வீரர்களுக்கு பூமியில் மீட்புப் பயிற்சி தேவைப்படுகிறது? -அனோனா தத்

 சுபன்ஷு சுக்லா மற்றும் பிற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நுண் ஈர்ப்பு விசையில் வாழப் பழக சில நாட்கள் ஆனது. ஆனால் அவர்கள் பூமிக்குத் திரும்பும்போது, அவர்களின் உடல்கள் மீண்டும் ஈர்ப்பு விசையின் விளைவுகளை உணரும்.


சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி, பூமியை 288 முறை சுற்றி வந்த இந்திய விண்வெளி வீரர்கள் குழுவின் கேப்டன் சுபன்ஷு சுக்லா வீடு திரும்புகிறார். கிரேஸ் என்று பெயரிடப்பட்ட ஸ்பேஸ் டிராகன் விண்கலம், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கலிபோர்னியா கடற்கரைக்கு அருகில் நான்கு விண்வெளி வீரர்களுடன் கடலில் தரையிறங்கும்.


சுக்லா மற்றும் மற்றவர்கள் விண்வெளியில் மைக்ரோகிராவிட்டி சூழலுக்கு ஏற்ப மாறுவதற்கு சில நாட்கள் ஆனாலும், பூமிக்கு திரும்பியவுடன் அவர்களின் உடல் புவியீர்ப்பின் தாக்கத்தையும் உணரக்கூடும்.


சுபான்ஷு சுக்லா விண்வெளியில் என்ன அனுபவித்தார்?


சுக்லா கூறினார், அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் இரண்டு நாட்களுக்கு தனது வழக்கமான உணர்வை உணரவில்லை, ஏனெனில் அவர் நுண்ணீர்ப்பு சூழலுக்கு பழகிக்கொண்டிருந்தார். ISS இலிருந்து ஒரு உரையாடலின்போது, அவர் கூறினார்: “இது எனக்கு முதல் முறை, எனவே திரும்பும்போது என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை. ஒரே நம்பிக்கை — மேலே செல்லும்போது எனக்கு சில அறிகுறிகள் இருந்தன — எனவே கீழே இறங்கும்போது அவை இல்லாமல் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், இரு உலகங்களின் மோசமான நிலையை நான் பெறவில்லை என்றால், இரண்டு முறையும் அவற்றை அனுபவிக்க வேண்டியிருக்கும்.”


நான்கு பேர் கொண்ட ஆக்சியம் குழுவில், விண்வெளி மற்றும் ஐ.எஸ்.எஸ்-க்கு முன்பு சென்ற ஒரே நபர் கமாண்டர் பெக்கி விட்சன் மட்டுமே. பூமியின் ஈர்ப்பு விசைக்கு பழகுவதைவிட, விண்வெளியில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை சூழலுக்கு தான் எளிதாகப் பழகிவிடுவதாக அவர் கூறினார். "சிலர் விண்வெளிக்குச் செல்லும்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பார்கள், சிலர் பூமிக்குத் திரும்பி வரும்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பார்கள். நான் திரும்பி வரும்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பேன். ஏனென்றால், நான் ஈர்ப்பு விசைக்கு நன்றாக பழகவில்லை" என்று அவர் விளக்கினார்.


கீழிறங்கியவுடன் என்ன நடக்கும்?


கடலில் தரையிறங்கிய பிறகு, சுக்லாவும் அவரது குழுவினரும் ஸ்பேஸ்எக்ஸ் மீட்பு வாகனம் மூலம் விண்கலத்திலிருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள். இந்த வாகனத்தில் அவர்களுக்கு முதல் சுகாதார பரிசோதனை செய்யப்படும். பின்னர், ஒரு ஹெலிகாப்டர் அவர்களை ஏற்றிக்கொண்டு தரையிறங்கும்.


விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும்போது, மருத்துவர்கள் அவர்களின் முக்கியமான சுகாதார அறிகுறிகளைச் சரிபார்க்கிறார்கள். அவர்கள் விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பு இந்த அறிகுறிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். பின்னர், ஒவ்வொரு விண்வெளி வீரரும் தங்கள் உடலநிலையை மீட்டெடுக்க உதவும் ஒரு சிறப்புத் திட்டத்தைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டம் அவர்களின் இயக்கம், சமநிலை, நெகிழ்வுத்தன்மை, உடற்பயிற்சி, வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் உடலின் நிலை மற்றும் இயக்க உணர்வை மேம்படுத்த உதவுகிறது.


விண்வெளியில் விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் முதலில் சோர்வாக உணர்கிறார்கள். ஏனெனில் அவர்களின் மூளை குழப்பமடைகிறது. பூமியில், உள் காது ஈர்ப்பு மற்றும் இயக்க சமிக்ஞைகளைப் பயன்படுத்தி சமநிலையை பராமரிக்க உதவுகிறது. ஆனால், விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை. எனவே, மூளை உள் காதைப் புறக்கணிக்கக் கற்றுக்கொள்கிறது. விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும்போது, அவர்களின் மூளை மீண்டும் சரிசெய்ய வேண்டியிருப்பதால், அவர்கள் நிற்கவும் நடக்கவும் சிரமப்படுகிறார்கள்.


சுக்லாவும் அவரது குழுவினரும் விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் மட்டுமே இருந்ததால் லேசான பிரச்சினைகள் மட்டுமே இருக்கும். நீண்ட நேரம் விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு வலுவான அறிகுறிகள் இருக்கும்.


விண்வெளி வீரர்களுக்கு ஏன் மீட்புப் பயிற்சி தேவை?


விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பி வரும்போது தங்கள் உடல்கள் மீண்டு வர சிறப்புப் பயிற்சித் தேவை. ஏனென்றால் விண்வெளிப் பயணம் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் அவர்களுக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


விண்வெளியில், விண்வெளி வீரர்கள் சமநிலை உணர்வை இழக்க நேரிடலாம், கண்களை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம், எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றல் ஏற்படலாம், முதுகு அல்லது இயக்கப் பிரச்சினைகள் ஏற்படலாம்.


மறு பயிற்சி செயல்முறை, விண்வெளி வீரர்களை மீண்டும் அவர்களின் உள் காது ஒலிகளைக் கேட்கப் பழக்குவது, இயக்கக் கட்டுப்பாட்டிற்கு உதவுவது, மற்றும் அவர்கள் நிற்கும்போது எதிர்கொள்ளும் நிலைமைகளைக் கவனித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது அவர்களின் உடல் இயக்கத்தின் உணர்வு, வலிமை, மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றையும் கையாள்கிறது. கூடுதலாக, விண்வெளி வீரர்கள் திறமையான செயல்பாடுகளை மேற்கொள்வதையும் இது பரிசீலிக்கிறது.


நாசாவின் கூற்றுப்படி, விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு சுமார் 92% விண்வெளி வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுகின்றன. இந்த காயங்களில் கிட்டத்தட்ட பாதி திரும்பிய ஒரு வருடத்திற்குள் நிகழ்கின்றன. இந்த காயங்களில் தசைப் பகுதிகள், தசைநார் பிரச்சினைகள் மற்றும் உடைந்த எலும்புகள் ஆகியவை அடங்கும்.  முதுகெலும்புக்கும் பாதிப்பு ஏற்படும். திரும்பும் விண்வெளி வீரர்களில் பாதி பேருக்கு குடலிறக்கம் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. பலருக்கு தங்கள் உடலை சரியாக நகர்த்துவதிலும் வளைப்பதிலும் சிக்கல் உள்ளது.


"விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், தண்ணீர் குடிப்பது, நடப்பது, தூங்குவது போன்ற எளிய விஷயங்கள் கூட முதலில் கடினமாக இருக்கும். அதற்குப் பழக சில நாட்கள் ஆகும், ஆனால் பின்னர் அது சாதாரணமாகிவிடும்" என்று சுபன்ஷு சுக்லா தனது உரையாடல் ஒன்றில் விளக்கினார்.



Original article:

Share:

சுத்தமான எரிசக்தியின் தேவைகளும் புதிய தொழில்நுட்பமும் இந்தியாவில் கனிம நிர்வாகத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன? - ரேணுகா

 இந்தியா பல்வேறு வகையான கனிமங்களால் நிறைந்துள்ளது. இவை அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆனால், கனிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே அரசியலமைப்பு அதிகாரப் பிரிவு என்ன?


ஒரு முக்கியமான கொள்கை நடவடிக்கையில், சுரங்கத் துறை அமைச்சகம் சிறு கனிமங்களான பாரைட்ஸ், ஃபெல்ஸ்பார், அபிரகம் (Mica) மற்றும் குவார்ட்ஸ் (Quartz) ஆகியவற்றை முக்கிய கனிமங்களாக மறுவகைப்படுத்தியுள்ளது. இந்த கனிமங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், ஆற்றல் மாற்றம், விண்வெளிக் கப்பல் தொழில்கள், சுகாதாரத் துறை போன்றவற்றுக்கு மிகவும் முக்கியமானவை.


பிப்ரவரி 20, 2025 தேதியிட்ட அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்ட இந்த மறுவகைப்படுத்தல், இந்தியாவின் சுத்தமான ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான முக்கியமான மற்றும் ராஜதந்திர கனிம வளங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய முக்கியமான கனிமத் திட்டத்தின் கீழ் (National Critical Mineral Mission) அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சிகளை ஆதரிக்கிறது.


இது இந்தியாவின் கனிம நிர்வாகத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு பகுதியான சிறு கனிமங்களின் ஒழுங்குமுறைக்கு கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், சிறு கனிமங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன? அதை ஆராய்வோம்.


சிறு கனிமங்கள் (minor minerals) என்றால் என்ன?


சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) (Mines and Minerals (Development and Regulation) (MMDR)) சட்டம், 1957-ன் கீழ், கட்டுமானக் கற்கள், சரளை, சாதாரண களிமண் மற்றும் சாதாரண மணல் என சிறு கனிமங்கள் வரையறுக்கப்படுகின்றன. 'சிறு கனிமங்கள்' என்ற சொல் பெரும்பாலும் குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இருப்பினும், 2000-ஆம் ஆண்டு குவாரி உரிமையாளர்கள் சங்கம் vs பீஹார் மாநில வழக்கில், உச்சநீதிமன்றம் MMDR சட்டத்தின் கீழ் கனிமங்களை முக்கிய அல்லது சிறு என வகைப்படுத்துவது அவற்றின் அளவு கிடைக்கும் தன்மை அல்லது உற்பத்தி அளவுகளாக இல்லாமல் அவற்றின் இறுதிப் பயன்பாடு மற்றும் உள்ளூர் முக்கியத்துவத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என தெளிவுபடுத்தியது.


இந்த வகைப்பாடு நிர்வாக வசதிக்காகவும் உள்ளது. நிலக்கரி, இரும்பு தாது அல்லது பாக்சைட் போன்ற தேசிய மற்றும் ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய கனிமங்கள் மீது மத்திய அரசு கட்டுப்பாட்டை வைத்துள்ளது. அதே, நேரத்தில் சிறு கனிமங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மாநில அரசுகளின் அதிகார வரம்பில் வருகிறது.


மத்திய அரசுக்கு வேறு எந்த கனிமத்தையும் சிறு கனிமமாக அறிவிக்கும் அதிகாரமும் உள்ளது. இது இதுவரை ஜிப்சம், அபிரகம் (Mica), குவார்ட்ஸ், களிமண் அடிப்படையிலான கனிமங்கள், மணல் போன்ற சுமார் 31 கனிமங்களை சிறு கனிமங்களாக அறிவித்துள்ளது.


சிறு கனிமங்கள் உட்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆற்றுப் படுகைகள், வெள்ளப்பெருக்குகள், மலைகள், கடலோரப் பகுதிகள், பாலைவனங்கள் மற்றும் திறந்தவெளி குவாரிகளில் இருந்து பெறப்படுகின்றன.


பிரித்தெடுத்தல் பொதுவாக சிறிய முதல் நடுத்தர அளவில் நடைபெறுகிறது மற்றும் மாநில அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. குவார்ட்ஸ் மற்றும் சிலிக்கா மணல் (Silica sand) போன்ற சிலிக்கா நிறைந்த கனிமங்கள் பொதுவாக ஆற்றுப்படுகை மற்றும் பாலைவன பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கண்ணாடித் தயாரிப்பு மற்றும் மின்னணுத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மணல் கான்கிரீட், மோட்டார் மற்றும் நிலக்கீல் மணற்கலவை (asphalt) ஆகியவற்றின் முக்கிய அங்கமாக மணல் உள்ளது. மணல் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்புகளுக்கு முக்கியமானதாக உள்ளது.


பெல்ட்ஸ்பார், மைக்கா (Mica), மற்றும் கயோலின் (Kaolin) ஆகியவை பெரும்பாலும் மட்பாண்டங்கள், வண்ணப்பூச்சுகள் மற்றும் ரப்பர் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், சுண்ணாம்புக்கல் வழித்தோன்றல்களான கால்சைட் (Calcite), ஜிப்சம் (Gypsum) மற்றும் லைம் கன்கர் (Lime kankar) ஆகியவை கட்டுமானம் மற்றும் இரசாயன செயல்பாட்டிற்கு முக்கியமானவை. சமீபத்தில், முக்கிய கனிமமாக வகைப்படுத்தப்பட்ட பாரைட்ஸ் (barytes) முக்கியமாக எண்ணெய் மற்றும் எரிவாயு தோண்டுதலில் பயன்படுத்தப்படுகிறது.


இந்த கனிமங்கள் உள்ளூரில் பெறப்பட்டு பெரும்பாலும் சிறிய அளவில் பிரித்தெடுக்கப்பட்டாலும், இந்தியாவின் கட்டுமான எழுச்சி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. எனினும், சூழலியல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகளில் அவற்றின் கட்டுப்பாடற்ற பிரித்தெடுத்தல் நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை தொடர்பான கவலைகளை எழுப்புகிறது.


கனிமங்களின் ஒழுங்குமுறை


இந்திய அரசியலமைப்பின் கீழ், 7-வது பட்டியலின் பட்டியல் II-ன் (மாநிலப் பட்டியல்) கீழ் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் குறித்து சட்டங்கள் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், பட்டியல் I-ன் (மத்திய பட்டியல்) கீழ், பொதுநலனுக்காக அறிவிப்பதன் மூலம் சுரங்கங்கள் மற்றும் கனிமங்களை ஒழுங்குபடுத்துவது குறித்த சட்டங்களையும் மத்திய அரசு உருவாக்கலாம்.


இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு 1957-ல் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை (Mines and Minerals (Development and Regulation (MMDR)) சட்டத்தை இயற்றியது - இது சுரங்கத் துறையை ஒழுங்குபடுத்தும் ஒரு முக்கிய சட்டமாகும். இந்த சட்டம் கனிமங்களை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகிறது. முக்கிய மற்றும் சிறு மற்றும் சுரங்க குத்தகை வழங்குதல், உரிமக் கட்டண வசூல் மற்றும் முக்கிய கனிம வளங்களின் ஒட்டுமொத்த மேலாண்மைக்கான சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது.


சட்டத்தின் பிரிவு 15 சிறு கனிமங்கள் தொடர்பான விதி-இயற்றும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. இது மாநிலங்களுக்கு குத்தகை வழங்குதல், அனுமதி வழங்குதல் மற்றும் சுரங்கக் குத்தகை மற்றும் அனுமதி வைத்திருப்பவர்களிடமிருந்து வாடகை மற்றும் உரிமக் கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதற்கான விதிகளை வடிவமைக்கும் அதிகாரம் வழங்குகிறது.


இந்த விதி-இயற்றும் அதிகாரப் பிரிவு மாநிலங்கள் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்குமுறை முறைமைகளை வடிவமைக்க முடியும் என உறுதி செய்கிறது. மேலும், குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பாதிப்பு கருதி, மாசுபாடு, வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சட்டங்களின் கீழ் சிறு கனிமங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.


கொள்கை ரீதியாக, மத்திய அரசு வரலாற்று ரீதியாக முக்கிய கனிமங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. அதேநேரத்தில் சிறு கனிமங்கள் பெரும்பாலும் மாநில-குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் விதிகள் மூலம் நிர்வகிக்கப்பட்டுள்ளன. எனினும், சுற்றுச்சூழல் குறித்த அதிகரித்துவரும் கவலைகள், குறிப்பாக ஆறுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் இருந்து மணல் எடுப்பது மத்திய அரசை இதில் அதிகம் தலையிட வைத்துள்ளது.


இதற்கு பதிலளிக்கும் விதமாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest, and Climate Change (MoEFCC) 2016 மற்றும் 2020-ல் மணல் சுரங்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் 2018-ல் மணல் சுரங்கக் கட்டமைப்பை வெளியிட்டது.


உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) சிறு கனிமங்களின் சுரங்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. குறிப்பாக, இந்த கனிமங்களைச் சுரங்கப்படுத்துவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி எனப்படும் அனுமதியை அவை கோருகின்றன.


2012-ஆம் ஆண்டு தீபக் குமார் vs ஹரியாணா மாநிலம் என்ற குறிப்பிடத்தக்க வழக்கில், உச்சநீதிமன்றம் சிறு கனிமங்களின் அறிவியலற்ற மற்றும் சட்டவிரோத சுரங்கத்தை கவனித்து, ஐந்து ஹெக்டேருக்கு கீழ் உள்ள அனைத்து சுரங்க நடவடிக்கைகளுக்கும் தகுந்த அதிகாரியிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதை கட்டாயமாக்கியது.


நீதிமன்றம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு முன் கட்டாய சுரங்கத் திட்டத்தையும் பரிந்துரைத்தது. குறிப்பிடத்தக்க வகையில், பல்வேறு தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றம் சிறு கனிமங்களின் நிலையான பிரித்தெடுத்தலின் தேவையை வலியுறுத்தியுள்ளது.


2012-ஆம் ஆண்டு தீபக் குமார் vs ஹரியானா மாநிலம் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, MoEFCC 2013-ல் ஐந்து ஹெக்டேருக்கும் குறைவான குத்தகை பகுதியைக் கொண்ட ஆற்று மணல் சுரங்கத் திட்டம் சுற்றுச்சூழல் அனுமதிக்கு கருத்தில் கொள்ளப்படக்கூடாது என அறிவித்தது. எனினும், இந்த அறிவிப்பு 2014-ஆம் ஆண்டு ஹிம்மத் சிங் சேகாவத் vs ராஜஸ்தான் மாநிலம் வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டது.


அதேபோல், 2018-ஆம் ஆண்டு சதேந்திர பாண்டே vs இந்திய ஒன்றியம் வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜனவரி 15, 2016 தேதியிட்ட அறிவிப்பை 25 ஹெக்டேருக்கு கீழ் உள்ள பகுதிகளில் சிறு கனிமங்கள் சுரங்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறையை நீர்த்துப்போகச் செய்தது என்ற அடிப்படையில் தள்ளுபடி செய்தது. இந்த அறிவிப்பு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு முன், அத்தகைய திட்டங்களுக்கு பொது ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளித்தது.


சவால்கள் மற்றும் முன்னோக்கிய வழி


மாநில ஒழுங்குமுறைகள் மற்றும் நீதித்துறை மேற்பார்வை இருந்தபோதிலும், சுரங்கத் துறை தொடர்ந்து பிரச்சினைகளுடன், சட்டவிரோத மற்றும் அறிவியல் பூர்வமற்ற சுரங்கத்துடன் போராடி வருகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் சட்டவிரோத மணல் சுரங்கத்தின் முக்கிய இடங்களாக மாறிவிட்டன.


இது கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. ஆற்றோர பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைவு, அருகிலுள்ள பகுதிகளில் மாசுபாட்டை ஏற்படுத்தி மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. ஆறுகளிலிருந்து மணல் மற்றும் சரளை பிரித்தெடுப்பது கரியல் (Gharial) மற்றும் கங்கை நதி டால்பின்களின் (Ganges River dolphins) எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.


இது தவிர, விவசாய நிலங்களிலிருந்து அதிகமான களிமண் சுரங்கம் மண் வளத்தை இழக்கச் செய்கிறது மற்றும் நீண்டகால நில சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. சட்டவிரோத பிரித்தெடுப்பு, சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் இடையே மோதல்கள் மற்றும் இந்த நடைமுறையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக சுரங்கம் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.


சிறு கனிமங்களின் சூழலியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவற்றின் நிலையான மேலாண்மையை உறுதிப்படுத்த வலுவான அரசியல் மற்றும் அதிகாரத்துவ விருப்பத்தின் அவசர தேவை உள்ளது. பொது நம்பிக்கைக் கொள்கையை (Public trust doctrine) நிலைநிறுத்தி, அரசாங்கம் ஒரு பராமரிப்பாளரைப் போல இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பது பொது நலனுக்கு சேவை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.


கடுமையான சட்ட அமலாக்கம், நிலையான கட்டுமான நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இயற்கை வள பிரித்தெடுப்புக்கு சாத்தியமான மாற்றுகளை ஊக்குவித்தல் ஆகியவை மிகவும் முக்கியமானவை. மாநிலங்கள் முழுவதும் விதிகளை செயல்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் வளர்ச்சி இலக்குகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்க ஒரு விரிவான முன்மாதிரி ஒழுங்குமுறை கட்டமைப்பு தேவைப்படுகிறது.



Original article:

Share: