சுத்தமான எரிசக்தியின் தேவைகளும் புதிய தொழில்நுட்பமும் இந்தியாவில் கனிம நிர்வாகத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன? - ரேணுகா

 இந்தியா பல்வேறு வகையான கனிமங்களால் நிறைந்துள்ளது. இவை அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆனால், கனிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே அரசியலமைப்பு அதிகாரப் பிரிவு என்ன?


ஒரு முக்கியமான கொள்கை நடவடிக்கையில், சுரங்கத் துறை அமைச்சகம் சிறு கனிமங்களான பாரைட்ஸ், ஃபெல்ஸ்பார், அபிரகம் (Mica) மற்றும் குவார்ட்ஸ் (Quartz) ஆகியவற்றை முக்கிய கனிமங்களாக மறுவகைப்படுத்தியுள்ளது. இந்த கனிமங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், ஆற்றல் மாற்றம், விண்வெளிக் கப்பல் தொழில்கள், சுகாதாரத் துறை போன்றவற்றுக்கு மிகவும் முக்கியமானவை.


பிப்ரவரி 20, 2025 தேதியிட்ட அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்ட இந்த மறுவகைப்படுத்தல், இந்தியாவின் சுத்தமான ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான முக்கியமான மற்றும் ராஜதந்திர கனிம வளங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய முக்கியமான கனிமத் திட்டத்தின் கீழ் (National Critical Mineral Mission) அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சிகளை ஆதரிக்கிறது.


இது இந்தியாவின் கனிம நிர்வாகத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு பகுதியான சிறு கனிமங்களின் ஒழுங்குமுறைக்கு கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், சிறு கனிமங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன? அதை ஆராய்வோம்.


சிறு கனிமங்கள் (minor minerals) என்றால் என்ன?


சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) (Mines and Minerals (Development and Regulation) (MMDR)) சட்டம், 1957-ன் கீழ், கட்டுமானக் கற்கள், சரளை, சாதாரண களிமண் மற்றும் சாதாரண மணல் என சிறு கனிமங்கள் வரையறுக்கப்படுகின்றன. 'சிறு கனிமங்கள்' என்ற சொல் பெரும்பாலும் குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இருப்பினும், 2000-ஆம் ஆண்டு குவாரி உரிமையாளர்கள் சங்கம் vs பீஹார் மாநில வழக்கில், உச்சநீதிமன்றம் MMDR சட்டத்தின் கீழ் கனிமங்களை முக்கிய அல்லது சிறு என வகைப்படுத்துவது அவற்றின் அளவு கிடைக்கும் தன்மை அல்லது உற்பத்தி அளவுகளாக இல்லாமல் அவற்றின் இறுதிப் பயன்பாடு மற்றும் உள்ளூர் முக்கியத்துவத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என தெளிவுபடுத்தியது.


இந்த வகைப்பாடு நிர்வாக வசதிக்காகவும் உள்ளது. நிலக்கரி, இரும்பு தாது அல்லது பாக்சைட் போன்ற தேசிய மற்றும் ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய கனிமங்கள் மீது மத்திய அரசு கட்டுப்பாட்டை வைத்துள்ளது. அதே, நேரத்தில் சிறு கனிமங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மாநில அரசுகளின் அதிகார வரம்பில் வருகிறது.


மத்திய அரசுக்கு வேறு எந்த கனிமத்தையும் சிறு கனிமமாக அறிவிக்கும் அதிகாரமும் உள்ளது. இது இதுவரை ஜிப்சம், அபிரகம் (Mica), குவார்ட்ஸ், களிமண் அடிப்படையிலான கனிமங்கள், மணல் போன்ற சுமார் 31 கனிமங்களை சிறு கனிமங்களாக அறிவித்துள்ளது.


சிறு கனிமங்கள் உட்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆற்றுப் படுகைகள், வெள்ளப்பெருக்குகள், மலைகள், கடலோரப் பகுதிகள், பாலைவனங்கள் மற்றும் திறந்தவெளி குவாரிகளில் இருந்து பெறப்படுகின்றன.


பிரித்தெடுத்தல் பொதுவாக சிறிய முதல் நடுத்தர அளவில் நடைபெறுகிறது மற்றும் மாநில அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. குவார்ட்ஸ் மற்றும் சிலிக்கா மணல் (Silica sand) போன்ற சிலிக்கா நிறைந்த கனிமங்கள் பொதுவாக ஆற்றுப்படுகை மற்றும் பாலைவன பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கண்ணாடித் தயாரிப்பு மற்றும் மின்னணுத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மணல் கான்கிரீட், மோட்டார் மற்றும் நிலக்கீல் மணற்கலவை (asphalt) ஆகியவற்றின் முக்கிய அங்கமாக மணல் உள்ளது. மணல் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்புகளுக்கு முக்கியமானதாக உள்ளது.


பெல்ட்ஸ்பார், மைக்கா (Mica), மற்றும் கயோலின் (Kaolin) ஆகியவை பெரும்பாலும் மட்பாண்டங்கள், வண்ணப்பூச்சுகள் மற்றும் ரப்பர் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், சுண்ணாம்புக்கல் வழித்தோன்றல்களான கால்சைட் (Calcite), ஜிப்சம் (Gypsum) மற்றும் லைம் கன்கர் (Lime kankar) ஆகியவை கட்டுமானம் மற்றும் இரசாயன செயல்பாட்டிற்கு முக்கியமானவை. சமீபத்தில், முக்கிய கனிமமாக வகைப்படுத்தப்பட்ட பாரைட்ஸ் (barytes) முக்கியமாக எண்ணெய் மற்றும் எரிவாயு தோண்டுதலில் பயன்படுத்தப்படுகிறது.


இந்த கனிமங்கள் உள்ளூரில் பெறப்பட்டு பெரும்பாலும் சிறிய அளவில் பிரித்தெடுக்கப்பட்டாலும், இந்தியாவின் கட்டுமான எழுச்சி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. எனினும், சூழலியல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகளில் அவற்றின் கட்டுப்பாடற்ற பிரித்தெடுத்தல் நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை தொடர்பான கவலைகளை எழுப்புகிறது.


கனிமங்களின் ஒழுங்குமுறை


இந்திய அரசியலமைப்பின் கீழ், 7-வது பட்டியலின் பட்டியல் II-ன் (மாநிலப் பட்டியல்) கீழ் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் குறித்து சட்டங்கள் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், பட்டியல் I-ன் (மத்திய பட்டியல்) கீழ், பொதுநலனுக்காக அறிவிப்பதன் மூலம் சுரங்கங்கள் மற்றும் கனிமங்களை ஒழுங்குபடுத்துவது குறித்த சட்டங்களையும் மத்திய அரசு உருவாக்கலாம்.


இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு 1957-ல் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை (Mines and Minerals (Development and Regulation (MMDR)) சட்டத்தை இயற்றியது - இது சுரங்கத் துறையை ஒழுங்குபடுத்தும் ஒரு முக்கிய சட்டமாகும். இந்த சட்டம் கனிமங்களை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகிறது. முக்கிய மற்றும் சிறு மற்றும் சுரங்க குத்தகை வழங்குதல், உரிமக் கட்டண வசூல் மற்றும் முக்கிய கனிம வளங்களின் ஒட்டுமொத்த மேலாண்மைக்கான சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது.


சட்டத்தின் பிரிவு 15 சிறு கனிமங்கள் தொடர்பான விதி-இயற்றும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. இது மாநிலங்களுக்கு குத்தகை வழங்குதல், அனுமதி வழங்குதல் மற்றும் சுரங்கக் குத்தகை மற்றும் அனுமதி வைத்திருப்பவர்களிடமிருந்து வாடகை மற்றும் உரிமக் கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதற்கான விதிகளை வடிவமைக்கும் அதிகாரம் வழங்குகிறது.


இந்த விதி-இயற்றும் அதிகாரப் பிரிவு மாநிலங்கள் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்குமுறை முறைமைகளை வடிவமைக்க முடியும் என உறுதி செய்கிறது. மேலும், குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பாதிப்பு கருதி, மாசுபாடு, வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சட்டங்களின் கீழ் சிறு கனிமங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.


கொள்கை ரீதியாக, மத்திய அரசு வரலாற்று ரீதியாக முக்கிய கனிமங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. அதேநேரத்தில் சிறு கனிமங்கள் பெரும்பாலும் மாநில-குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் விதிகள் மூலம் நிர்வகிக்கப்பட்டுள்ளன. எனினும், சுற்றுச்சூழல் குறித்த அதிகரித்துவரும் கவலைகள், குறிப்பாக ஆறுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் இருந்து மணல் எடுப்பது மத்திய அரசை இதில் அதிகம் தலையிட வைத்துள்ளது.


இதற்கு பதிலளிக்கும் விதமாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest, and Climate Change (MoEFCC) 2016 மற்றும் 2020-ல் மணல் சுரங்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் 2018-ல் மணல் சுரங்கக் கட்டமைப்பை வெளியிட்டது.


உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) சிறு கனிமங்களின் சுரங்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. குறிப்பாக, இந்த கனிமங்களைச் சுரங்கப்படுத்துவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி எனப்படும் அனுமதியை அவை கோருகின்றன.


2012-ஆம் ஆண்டு தீபக் குமார் vs ஹரியாணா மாநிலம் என்ற குறிப்பிடத்தக்க வழக்கில், உச்சநீதிமன்றம் சிறு கனிமங்களின் அறிவியலற்ற மற்றும் சட்டவிரோத சுரங்கத்தை கவனித்து, ஐந்து ஹெக்டேருக்கு கீழ் உள்ள அனைத்து சுரங்க நடவடிக்கைகளுக்கும் தகுந்த அதிகாரியிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதை கட்டாயமாக்கியது.


நீதிமன்றம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு முன் கட்டாய சுரங்கத் திட்டத்தையும் பரிந்துரைத்தது. குறிப்பிடத்தக்க வகையில், பல்வேறு தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றம் சிறு கனிமங்களின் நிலையான பிரித்தெடுத்தலின் தேவையை வலியுறுத்தியுள்ளது.


2012-ஆம் ஆண்டு தீபக் குமார் vs ஹரியானா மாநிலம் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, MoEFCC 2013-ல் ஐந்து ஹெக்டேருக்கும் குறைவான குத்தகை பகுதியைக் கொண்ட ஆற்று மணல் சுரங்கத் திட்டம் சுற்றுச்சூழல் அனுமதிக்கு கருத்தில் கொள்ளப்படக்கூடாது என அறிவித்தது. எனினும், இந்த அறிவிப்பு 2014-ஆம் ஆண்டு ஹிம்மத் சிங் சேகாவத் vs ராஜஸ்தான் மாநிலம் வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டது.


அதேபோல், 2018-ஆம் ஆண்டு சதேந்திர பாண்டே vs இந்திய ஒன்றியம் வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜனவரி 15, 2016 தேதியிட்ட அறிவிப்பை 25 ஹெக்டேருக்கு கீழ் உள்ள பகுதிகளில் சிறு கனிமங்கள் சுரங்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறையை நீர்த்துப்போகச் செய்தது என்ற அடிப்படையில் தள்ளுபடி செய்தது. இந்த அறிவிப்பு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு முன், அத்தகைய திட்டங்களுக்கு பொது ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளித்தது.


சவால்கள் மற்றும் முன்னோக்கிய வழி


மாநில ஒழுங்குமுறைகள் மற்றும் நீதித்துறை மேற்பார்வை இருந்தபோதிலும், சுரங்கத் துறை தொடர்ந்து பிரச்சினைகளுடன், சட்டவிரோத மற்றும் அறிவியல் பூர்வமற்ற சுரங்கத்துடன் போராடி வருகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் சட்டவிரோத மணல் சுரங்கத்தின் முக்கிய இடங்களாக மாறிவிட்டன.


இது கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. ஆற்றோர பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைவு, அருகிலுள்ள பகுதிகளில் மாசுபாட்டை ஏற்படுத்தி மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. ஆறுகளிலிருந்து மணல் மற்றும் சரளை பிரித்தெடுப்பது கரியல் (Gharial) மற்றும் கங்கை நதி டால்பின்களின் (Ganges River dolphins) எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.


இது தவிர, விவசாய நிலங்களிலிருந்து அதிகமான களிமண் சுரங்கம் மண் வளத்தை இழக்கச் செய்கிறது மற்றும் நீண்டகால நில சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. சட்டவிரோத பிரித்தெடுப்பு, சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் இடையே மோதல்கள் மற்றும் இந்த நடைமுறையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக சுரங்கம் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.


சிறு கனிமங்களின் சூழலியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவற்றின் நிலையான மேலாண்மையை உறுதிப்படுத்த வலுவான அரசியல் மற்றும் அதிகாரத்துவ விருப்பத்தின் அவசர தேவை உள்ளது. பொது நம்பிக்கைக் கொள்கையை (Public trust doctrine) நிலைநிறுத்தி, அரசாங்கம் ஒரு பராமரிப்பாளரைப் போல இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பது பொது நலனுக்கு சேவை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.


கடுமையான சட்ட அமலாக்கம், நிலையான கட்டுமான நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இயற்கை வள பிரித்தெடுப்புக்கு சாத்தியமான மாற்றுகளை ஊக்குவித்தல் ஆகியவை மிகவும் முக்கியமானவை. மாநிலங்கள் முழுவதும் விதிகளை செயல்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் வளர்ச்சி இலக்குகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்க ஒரு விரிவான முன்மாதிரி ஒழுங்குமுறை கட்டமைப்பு தேவைப்படுகிறது.



Original article:

Share: