இணையவழியில் வாங்குவது அதிகரித்து வருகிறது. ஆனால், அதன் வரையறைகள் இடம், தயாரிப்பு வகை மற்றும் நுகர்வோர் நம்பிக்கையால் வரையறுக்கப்படுகின்றன.
இந்தியாவின் மின்-வணிகக் கதை (e-commerce story) பெரும்பாலும் பரந்த அளவில் கூறப்படுகிறது. இது வேகமான வளர்ச்சி, அதிக தள்ளுபடிகள் மற்றும் பெரும்பாலும் நகர்ப்புற வாடிக்கையாளர்களைப் பற்றி பேசுகிறது. இதில், மக்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் பெரிய, விரிவான ஆய்வுகள் எதுவும் இல்லை. நாடு தழுவிய அளவில் கிடைக்கும் ஒரே தரவு வீட்டு நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு (Household Consumer Expenditure Survey (HCES)) ஆகும். இந்த கணக்கெடுப்பு குறிப்பாக இணையத்தில் பொருள் வாங்குவதை (online shopping) அளவிடுவதற்காக செய்யப்படவில்லை என்றாலும், நுகர்வோர் நடத்தை எவ்வாறு மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது இன்னும் உதவுகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு, 2022–23 கணக்கெடுப்பு முதலில் இணையத்தில் பொருள் வாங்குவதை (online shopping) பொருட்கள் வாங்குவதற்கான ஒரு தனி வழியாக அங்கீகரித்தது. இந்த நடத்தை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்க சமீபத்திய தரவு நமக்கு உதவுகிறது. 2023–24 தரவு ஒரு கலவையான படத்தைக் காட்டுகிறது. இணையத்தில் பொருள் வாங்கல் அதிகரித்து வருவதால் இடம், தயாரிப்பு வகை மற்றும் நுகர்வோர் எவ்வளவு நம்பிக்கையுடன் உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.
HCES மின் வணிகத்தை நேரடியாகக் கண்காணிக்கவில்லை. இருப்பினும், இது இணையத்தில் பொருள் வாங்கல் பற்றிய பயனுள்ள குறிப்புகளை வழங்குகிறது. இது இணையப்படும் செலுத்தும் பணப் பரிவர்த்தனையை பதிவு செய்கிறது. இது உண்மையான முழு இணையக் கொள்முதல்களைவிட அதிகமாக இருக்கலாம். இதற்கான போக்குகள் ஆண்டுதோறும் எவ்வாறு மாறி வருகின்றன என்பதை அட்டவணை காட்டுகிறது.
இதற்கான முக்கிய விஷயம் என்னவென்றால், இணையத்தில் பொருள் வாங்கல் கிட்டத்தட்ட ஒவ்வொரு வகையிலும், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் வளர்ந்துள்ளது. ஒரே விதிவிலக்கு மொபைல் போன்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, கிராமப்புறங்களில் இணையம் மூலம் ஆடை கொள்முதல் 9.1%-லிருந்து 12% ஆக உயர்ந்துள்ளது. மேலும், இணையத்தில் பொருள் வாங்கல் ஏற்கனவே பிரபலமாக இருந்த நகர்ப்புற இந்தியாவில், இந்த எண்ணிக்கை 32.5%-லிருந்து 35.8% ஆக உயர்ந்துள்ளது.
மற்ற பிரிவுகளும் இதேபோன்ற நிலையைக் காட்டுகின்றன. கிராமப்புறங்களில், மொபைல் ரீசார்ஜ்கள், சந்தாக்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவுகள் போன்ற சேவைகள் 16.2% இலிருந்து 28.2%-ஆக அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில், ஆன்லைன் சேனல்கள் மூலம் 'எரிபொருள் மற்றும் விளக்கு' மீதான செலவு 17.4%-லிருந்து 28.6%-ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இது, மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதையோ அல்லது எல்பிஜி நிரப்புதல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் அடிப்படையில், அதிகமான மக்கள் வசதியாகி வருவதைக் காட்டக்கூடும்.
சில மாற்றங்கள் சிறியதாக இருந்தன. எடுத்துக்காட்டாக, கிராமப்புறங்களில் கழிப்பறைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதில் சிறிது அதிகரிப்பு இருந்தது. இது அன்றாடப் பொருட்களுக்குக் கூட இது பொருந்தும். இதில், டிஜிட்டல் ஷாப்பிங்கில் மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது.
எவ்வாறாயினும், தளபாடங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற பிரிவுகளில், ஆன்லைன் கொள்முதல்களின் பங்கு அப்படியே இருந்தது அல்லது கொஞ்சம் குறைந்துள்ளது. பெரிய அல்லது அரிதான கொள்முதல்கள் இன்னும் பெரும்பாலும் ஆஃப்லைனில் செய்யப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. உற்பத்தி தயாரிப்புகளைத் தொட்டுச் சரிபார்க்கவும், நிறுவலில் உதவி பெறவும், விற்பனையாளரை அதிகம் நம்பவும் மக்கள் ஆஃப்லைன் ஷாப்பிங்கை விரும்புகிறார்கள்.
இணையத்தின் வாங்குபவர்களின் பங்கு
ஒவ்வொரு தயாரிப்பு வகையிலும் எத்தனை நுகர்வோர் ஆன்லைனில் வாங்கினார்கள் என்பதைக் கண்டறிய நாங்கள் பொருட்களின் குறியீடுகளைப் (item codes) பயன்படுத்தினோம் (படத்தைப் பார்க்கவும்). 2023-24-ஆம் ஆண்டில், நகர்ப்புற மொபைல் போன் வாங்குபவர்களில் சுமார் 21 சதவீதம் பேர் ஆன்லைனில் வாங்கினார்கள். கிராமப்புறங்களில், 8 சதவீதம் பேர் மட்டுமே வாங்கினார்கள். ஆடைகளைப் பொறுத்தவரை, நகரங்களில் இணையத்தின் பங்கு இன்னும் அதிகமாக இருந்தது. இது, கிராமப்புறங்களில் 12 சதவீதத்துடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் 36 சதவீதம் ஆகும்.
கடிகாரங்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற தனிப்பட்ட மின்னணு சாதனங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டைக் காட்டின. நகர்ப்புறங்களில், 9.3% வாங்குபவர்கள் இந்தப் பொருட்களை ஆன்லைனில் வாங்கினார்கள். கிராமப்புற இந்தியாவில், 3.7% பேர் மட்டுமே வாங்கினார்கள். மறுபுறம், பால், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பொருட்கள் பெரும்பாலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஆஃப்லைனில் வாங்கப்பட்டன. எனவே, சில வகைகளில் இணையத்தில் பொருள் வாங்கல் வளர்ந்து வந்தாலும், உண்மையான எண்கள் பெரும்பாலும் உற்சாகமான செய்தி விவாதங்கள் கூறுவதைவிட மிகக் குறைவு.
இந்த முறையை என்ன விளக்குகிறது?
முதலாவதாக, தயாரிப்பு வகை முக்கியமானது. தரப்படுத்தப்பட்ட, பிராண்டட் செய்யப்பட்ட மற்றும் திரும்பப் பெறக்கூடிய தயாரிப்புகள் ஆடை மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்றவை ஆன்லைன் விற்பனையில் சிறப்பாகச் செயல்பட்டன.
இரண்டாவதாக, இணையத்தில் பொருள் வாங்கலின் வளர்ச்சி கட்டண முறைகள் மற்றும் இணைய இணைப்பைப் பொறுத்தது. கிராமப்புற இந்தியாவில், UPI அடிப்படையிலான செயலிகள் பரவுவதால், அதிகமான மக்கள் இணைய சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். மக்கள் டிஜிட்டல் பணம் செலுத்துவதில் மிகவும் வசதியாகி வருகின்றனர்.
மூன்றாவதாக, நுகர்வுப் பழக்கங்கள் எளிதில் மாறாது. உள்ளூர் கிரானா கடைகளுடனான அவர்களின் தனிப்பட்ட உறவுகளை மக்கள் மதிக்கிறார்கள். பண அடிப்படையிலான பரிவர்த்தனைகளையும் அவர்கள் வசதியாகக் காண்கிறார்கள். கூடுதலாக, வாங்குவதற்கு முன் பொருட்களை நேரடியாக ஆய்வு செய்வதை அவர்கள் நம்புகிறார்கள். இந்தக் காரணிகள் நுகர்வோர் நடத்தையை தொடர்ந்து இயக்குகின்றன.
நான்காவதாக, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டவர்கள்கூட இணையத்தில் பொருள் வாங்கல் முறைக்கு முழுமையாக மாறாமல் இருக்கலாம். அவர்களுக்கு, இணையத்தில் பொருள் வாங்கல் பெரும்பாலும் அதை மாற்றுவதற்குப் பதிலாக நேரடி வாங்கலில் சேர்க்கிறது. உதாரணமாக, ஒருவர் வாங்குபவர் ஒரு தொலைபேசியைப் பற்றிய விவரங்களை ஆன்லைனில் சரிபார்த்து, கடையில் இருந்து அதை வாங்கலாம். சில நேரங்களில், அவர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்து ஒரு கடையில் பார்த்த பிறகு அதை இணையத்தில் வாங்கலாம். ஒரே குடும்பம் தங்களுக்கான ஆடைகளை ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கலாம். அதேநேரம், அவர்கள் இன்னும் ஒரு சாலையோர விற்பனையாளரிடமிருந்தும் காய்கறிகளை வாங்கலாம்.
ஐந்தாவது, இணையத்தில் பொருள் வாங்கல் இனி நகர்ப்புற உயரடுக்கிற்கு கட்டுப்படுத்தப்படவில்லை. இது இப்போது இந்தியாவின் பரந்த நுகர்வு முறையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. இருப்பினும், இந்த மாற்றம் வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமாக நடக்கிறது. நகர்ப்புற இந்தியா ஆன்லைனில் அதிக அளவிலான தயாரிப்புகளை முயற்சித்து வருகிறது. மறுபுறம், கிராமப்புற இந்தியா மெதுவாகவும் கவனமாகவும் டிஜிட்டல் வாங்கலில் மிகவும் வசதியாகி வருகிறது.
எதிர்பார்க்க வேண்டியது என்ன?
இந்தியாவில் சில்லறை விற்பனையின் எதிர்காலம் கலப்பினமாக இருக்கும். இது உள்ளூர் சுற்றுப்புற உறவுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் டிஜிட்டல் வசதியால் மேம்படுத்தப்படும். பிராண்டுகள் மற்றும் தளங்களைப் பொறுத்தவரை, அவர்கள் பல்வழி உத்திகள் (omni-channel strategies) உருவாக்க வேண்டும் என்பதாகும். அவர்கள் டிஜிட்டல்-மட்டும் மாதிரிகளை (digital-only models) மட்டும் நம்பியிருக்கக்கூடாது. கொள்கை வகுப்பாளர்களுக்கு, இது அனைத்து சேனல்களையும் நியாயமாக நடத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அவர்கள் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும். மேலும் அனைத்து வடிவங்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
புள்ளியியல் வல்லுநர்களுக்கு, இணையம் மற்றும் நேரடி இரண்டிலும் செய்யப்படும் கொள்முதல்களின் மதிப்பைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். இது நுகர்வோர் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறது. வீட்டு நுகர்வோர் செலவு கணக்கெடுப்பின் (Household Consumer Expenditure Survey (HCES)) எதிர்கால சுற்றுகளில் இந்தத் தரவு இருக்க வேண்டும். அவ்வாறு செய்வது பணவீக்கத்தை மிகவும் துல்லியமாக அளவிட அனுமதிக்கும். நுகர்வோர் விலைக் குறியீடுகளைக் கணக்கிடும்போது இணையம் மற்றும் நேரடி முறைகள் இரண்டிலிருந்தும் வாங்குதல்களை முழுமையாகச் சேர்க்கலாம்.
குமார் ஒரு சிறப்பு ஆய்வாளர், மற்றும் அப்ரோல் பஹ்லே இந்தியா அறக்கட்டளையில் ஒரு வருகைதரு ஆய்வாளர்.