கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் (White House) மீண்டும் திரும்பிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அவருடன் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் "சட்டவிரோத குடிபெயர்ந்தவர்களை அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டாரா" என்று கேட்டதற்கு, டிரம்ப் குறிப்பிட்டதாவது "அவர் (மோடி) சரியானதைச் செய்வார். அதற்கு நாங்கள் விவாதித்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.
மேலும், இருநாட்டு தலைவர்களும் திங்கள்கிழமை (ஜனவரி 27) "நீண்ட பேச்சுவார்த்தையை" நடத்தி வருகிறோம் என்று அதிபர் குறிப்பிட்டிருந்தார். பிப்ரவரியில் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு வருகை தருவார் என்றும், மேலும், "நாங்கள் இந்தியாவுடன் மிகச் சிறந்த உறவைக் கொண்டுள்ளோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள வெளியுறவுக் கொள்கை பார்வையாளர்கள் அதிபர் கவனமாகப் பேசியதைக் கவனித்தனர். இது, மோடியுடனான தனது அழைப்பு குறித்துப் பேசும்போது அவர் அச்சுறுத்தல்களையோ அழுத்தத்தையோ பயன்படுத்தவில்லை. மேலும், அவர் அடிக்கடி "குற்றவாளிகள்" (criminals) மற்றும் "குண்டர்கள்" (gangsters) என்று அழைக்கும் ஆவணமற்ற குடிப்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தவில்லை.
டிரம்ப் பொதுவாக இருநாடுகளின் ஒப்பந்தங்களின் மூலம் சாதுர்யமாக அணுகுமுறை மேற்கொள்பவர்கள். ஆனால், இந்த முறை, கடந்த வாரம் கொலம்பியாவுடன் அவர் செய்ததைப் போலவே, அமெரிக்க-இந்திய உறவு கையாள மிகவும் முக்கியமானது என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரிகிறது.
டிசம்பரில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரண்டு முறை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். மேலும், டிரம்பின் பதவியேற்பு விழாவிற்காக ஜனவரியில் மீண்டும் பயணம் மேற்கொண்டார். இந்த வருகைகளின்போது, புதிய நிர்வாகத்தின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதில் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) மற்றும் இரண்டு முறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் அடங்குவர். அவர் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent), வர்த்தக செயலாளர் வேட்பாளர் ஹோவர்ட் லுட்னிக் (Howard Lutnick), FBI இயக்குனர் வேட்பாளர் காஷ் படேல் (Kash Patel) மற்றும் எரிசக்தி செயலாளர் வேட்பாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) ஆகியோரையும் சந்தித்தார்.
செனட்டர் பெரும்பான்மைத் தலைவர் ஜான் துனே மற்றும் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜான்சன் உள்ளிட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார். டிரம்பின் உள்நாட்டு முன்னுரிமையான குடியேற்றத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு முதன்மையான காரணம் சட்டவிரோத குடியேற்றம் (illegal immigration) என்று அமெரிக்க வலதுசாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை இந்தியா திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக இந்திய அதிகாரிகள் தங்கள் அமெரிக்க உரையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது, இந்தியாவுக்கு ஒரு குறைந்த சலுகையான முடிவாகும். டிரம்பின் பெருமளவிலான நாடுகடத்தல் திட்டங்களின் ஒரு பகுதியாக நாடு கடத்தப்படவுள்ள 20,000 சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவிற்கு பயணிக்க இந்தியர்கள் எந்த சட்டப்பூர்வ வழிகளையும் கட்டுப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் முன்னுரிமையாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கவலை என்னவென்றால், டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்தலை மக்கள் தொடர்பு நோக்கங்களுக்காக அதிக தெரிவுநிலை பொது நிகழ்வாக மாற்றக்கூடும். இது புது தில்லிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் புலம்பெயர்ந்தோர் திரும்பி வருவதை நியாயப்படுத்துவது கடினமாக்கும், குறிப்பாக சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இடையே சிறிய வேறுபாடு உள்ள பகுதிகளில்.
2024-ம் ஆண்டில், இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றமற்ற விசாக்களை வழங்கியது. இதில் சாதனை எண்ணிக்கையிலான பார்வையாளர் விசாக்களும் (visitor visas) அடங்கும். சுற்றுலா, வணிகம் மற்றும் கல்விக்காக அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான இந்தியர்களிடையே வலுவான தேவையை இந்த அதிக எண்ணிக்கை காட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, 2024-ம் ஆண்டில் அமெரிக்கா சுமார் 1,100 சட்டவிரோத குடியேறிகளை மட்டுமே இந்தியாவிற்கு நாடு கடத்தியது.
ஒட்டுமொத்தமாக, அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான 2024 நிதியாண்டில், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (Immigration and Customs Enforcement (ICE)) 271,484 குடிமக்கள் அல்லாதவர்களை வெளியேற்றியுள்ளது. இது டிசம்பரில் வெளியிடப்பட்ட FY-2024க்கான குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) ஆண்டு அறிக்கையின்படி உள்ளது. டிரம்ப் ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் ஆவணமற்ற குடியேறிகளை நாடு கடத்த விரும்புகிறார். இதன் பொருள் ஒவ்வொரு நாளும் சுமார் 2,750 பேர் நாடு கடத்தப்படுவார்கள். கடந்த வாரம், ICE முகவர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 900 பேரைத் தடுத்து வைத்தனர்.
சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை கைது செய்வதற்கு ஒவ்வொரு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) கள அலுவலகத்திற்கும் தினசரி இலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பணியிடங்கள் மற்றும் வீடுகளில் தடுப்புக்காவல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் உள்ள பல தொழிலாளர்கள் வேலை மற்றும் அவர்களின் பணியிடங்களிலிருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) திறன் குறைவாக உள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சுமார் 40,000 படுக்கைகள் மட்டுமே உள்ளன. குவாண்டனாமோ விரிகுடா சிறையில் 30,000 கைதிகள் வரை தடுத்து வைக்கப்படுவதற்குத் தயாராக இருக்குமாறு பென்டகன் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு (Pentagon and Department of Homeland Security) உத்தரவிடுவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை சுற்றி வளைக்க உதவுவதற்காக குடிவரவு அதிகாரிகள் உள்ளூர் காவல்துறை மற்றும் இராணுவத்திடமிருந்தும் வளங்களைப் பெற்று வருகின்றனர்.
டிரம்ப் விரும்பும் அளவில் நாடுகடத்தலை மேற்கொள்ள அமெரிக்கா தனது விமானங்களின் திறனை அதிகரிக்க வேண்டியிருக்கும். இந்த நாடுகடத்தல் காரணமாக விமானங்களுக்கு பணம் செலுத்துமாறு மற்ற நாடுகளையும் அது கேட்கலாம்.
இந்தியாவில் இருந்து சுமார் 20,000 சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தலுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 7,25,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. டிரம்பின் பெரிய அளவிலான நாடுகடத்தல் முயற்சி இதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நிவர்த்தி செய்யக்கூடும். இந்தியாவின் முக்கிய கவலை கல்வி மற்றும் வேலைக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மீதான தாக்கமாகும். மே 2024 நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 351,000 இந்திய மாணவர்கள் இருந்தனர், முக்கியமாக STEM துறைகளில் பட்டதாரி திட்டங்களில், என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2022 மற்றும் செப்டம்பர் 2023-க்கு இடையில், H-1B திட்டத்தின் கீழ் அமெரிக்கா வழங்கிய கிட்டத்தட்ட 4,00,000 விசாக்களில் 72% இந்தியர்களுக்குச் சென்றது. H-1B திட்டம் சிறப்பு வேலைகளில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கானது. இந்த நேரத்தில், அமெரிக்காவின் முதல் நான்கு இந்திய ஐடி நிறுவனங்கள் : இன்ஃபோசிஸ் (Infosys), டிசிஎஸ் (TCS), எச்சிஎல் (HCL) மற்றும் விப்ரோ (Wipro) சுமார் 20,000 ஊழியர்களை H-1B விசாக்களில் பணிபுரிய அனுமதி பெற்றதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளின் (US Citizenship and Immigration Services (USCIS)) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
மாணவர் (F பிரிவு) மற்றும் திறமையான தொழில்முறை (H-1B) மூலம் குடிபெயர்ந்தவர்கள் இருவரும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாக இந்திய அதிகாரிகள் தங்கள் அமெரிக்க சக ஊழியர்களிடம் வாதிட்டனர். அவர்கள் அமெரிக்க சமூகத்திற்கு ஒரு முக்கிய வளமாகக் கருதப்படுகிறார்கள்.
டிரம்ப் இதுவரை H-1B திட்டத்தை ஆதரித்து வருகிறார். டிசம்பரில், தான் "H-1B-யில் நம்பிக்கை கொண்டவர்" என்றும், எப்போதும் விசாக்களை ஆதரித்து வருபவர் என்றும் கூறினார். ஜனவரியில், அமெரிக்காவிற்கு "மிகவும் திறமையான" மற்றும் "சிறந்த" நபர்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டார், அவர்களை விசா திட்டம் (visa program) மூலம் அவர்களை கொண்டு வர உதவுகிறது.
பல மாநிலங்கள் ஏற்கனவே டிரம்பின் குடியேற்ற உத்தரவுகளை சவால் செய்துள்ளன. இந்த உத்தரவுகளின் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மை குறித்து அதிபர் கவலைப்படவில்லை என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதற்கு பதிலாக, அவர் தனது MAGA தளத்திற்கு சில குறீயீடுகளை அனுப்பக்கூடும்.
இதற்கு பெரிய இடையூறுகளை ஏற்படுத்தாத வரை, அமெரிக்க குடியேற்றக் கொள்கையை சரிசெய்ய இந்தியா தனது வரவேற்பை திறந்திருக்கும்.
Original article: