காசநோய் சவாலுக்கு பல்முனை அணுகுமுறை தேவை -தலையங்கம்

 காசநோய் தொற்று மற்றும் இறப்பு வீதம் குறைந்து வருவது ஊக்கமளிப்பதாக உள்ளது. இன்னும், மருந்து எதிர்ப்பு காசநோய்க்கு (drug-resistant TB) சிறப்பு கவனம் வழங்கப்பட வேண்டும்.  


2022 உடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக காசநோய்கள் பதிவாகியுள்ளன. இது, நோய் கண்டறிவதற்கான முயற்சிகள் சிறப்பாக செயல்படுவதைக் காட்டுகிறது. தனியார் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களின் மேம்பட்ட செயல்திறன் காரணமாக வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் சிறந்த நோய் பரிசோதனை செய்கின்றன. இதனால் அதிகமான நோயாளிகள் சரியான சிகிச்சையைப் பெற முடியும். இது, காசநோய் பரவுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் மக்கள் காச நோயினால் இறப்பதைத் தடுக்கிறது அல்லது நோயின் ஆபத்தான வடிவங்களைப் குறைக்கிறது.


காசநோய் நோயாளிகளைக் கண்டறிவதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் காசநோய் மற்றும் இறப்புகளின் ஒட்டுமொத்த குறைவு நம்பிக்கைக்குரியது. இருப்பினும், மருந்து-எதிர்ப்பு காசநோய் ( drug-resistant TB) மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவு, தொற்றுநோய்க்கு முன், இந்தியாவில் கூட்டு மருந்து எதிர்ப்பு (multi-drug resistant (MDR) TB) விகிதம் மெதுவாகக் குறைந்து வருவதாகக் குறிப்பிடுகிறது. ஆயினும்கூட, 2021 இல் நோய் தொற்றுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் பதிவுகள் இந்தப் போக்கை உறுதிப்படுத்துகின்றன, உலகளவில் அதிக எண்ணிக்கையிலான கூட்டு மருந்து எதிர்ப்பு காசநோய் (multi-drug resistant (MDR) TB) நோயாளிகளைக் கொண்ட நாடு என்பதைக் காட்டுகிறது. மருந்து-எதிர்ப்பு காசநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு முக்கியமான மருந்தான பெடாகுலினுக்கான (bedaquiline) காப்புரிமை விண்ணப்பங்கள் குறித்த இந்தியாவின் கொள்கை உள்ளூர் உற்பத்தியை எளிதாக்கியுள்ளது. இருந்தபோதிலும், பெடாகுலின் கிடைப்பது தேவையை விட மிகக் குறைவாகவே உள்ளது.


நுரையீரல் அல்லாத காசநோய் (Non-lung TB) இந்தியாவின் காசநோய் பிரச்சனையின் குறிப்பிடத்தக்க மற்றும் சிக்கலான பகுதியாகும். காசநோயின் இந்த வடிவம் பெண்களில் அடிக்கடி காணப்படுகிறது மற்றும் நுரையீரல் காசநோய் அறிகுறிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அறிகுறிகளைக் காட்டுகிறது. இது, நுரையீரலைப் பாதிக்கிறது மற்றும் அதன் அறிகுறிகள் பொதுவாக அறியப்படுகின்றன. இதன் விளைவாக, நுரையீரல் அல்லாத காசநோய் பெரும்பாலும் கண்டறியப்படாமல் போகும். சரியான நேரத்தில் மருத்துவச் சேவையைப் பெறுவதில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களால் நிலைமை மோசமாகிறது. இந்தச் சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டமானது நோயின் பல அம்சங்களைக் கையாளும் ஒரு இராஜதந்திரத்தை செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது.  




Original article:

Share:

தொற்றுநோய்க்கான ஒப்பந்தத்தை (pandemic treaty) எவ்வாறு உறுதிபடுத்துவது? -மரியானா மசுகாடோ

 ஒரு வரைவு தொற்றுநோய் ஒப்பந்தத்தில் (draft pandemic treaty) உள்ள குறிப்பிட்ட நிபந்தனைகள் மீது பல நாடுகள் குழப்பமடைவதால், அந்த ஆவணமானது பயனற்றதாகிவிடும் என்று கவலைபடுகிறார்கள். 


உலகளாவிய தொற்றுநோய் ஒப்பந்தத்தின் சமீபத்திய பதிப்புகள் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டன, அவை  அவமானம் (shameful) மற்றும் நியாயமற்றவை (unfair) என்று அழைக்கப்பட்டன. மார்ச் 18 அன்று பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது, கோவிட் -19 இலிருந்து ஒரு முக்கிய பாடத்தை நாம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது, பொது சுகாதாரமும், பொருளாதாரமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். இரண்டையும் அடைவதற்கு உடல்நலம் மற்றும் நல்வாழ்வு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது, உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் விநியோகிக்கப்படுகிறது மற்றும் பொருளாதாரங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதற்கான விதிகளை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும். இந்த ஒப்பந்ததின் வெற்றியானது, உறுப்பு நாடுகளின் விதிமுறையில் நியாயமானதாக இருக்கும். அதையொட்டி, ஒரு புதிய பொருளாதார முன்னெடுப்பு தேவைப்படும். இங்கு, தலைமை தாங்கிய அனைவருக்கும், சுகாதாரப் பொருளாதாரம் குறித்த உலக சுகாதார அமைப்பின் கவுன்சில் (World Health Organization Council), அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.


அனைத்து நாடுகளிலிருந்தும் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் எதிர்காலத்தில் மக்களின் உடல்நலப் பிரச்சினைகளை மிகவும் மோசமாக்குவதைத் தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம், புதுமை (innovation), அறிவுசார் சொத்துரிமை (intellectual property (IP)), பொது மற்றும் தனியார் துறைகளுக்கு (public and private sectors) இடையில் ஒன்றிணைந்து செயல்படுதல் மற்றும் நிதியளித்தல் உள்ளிட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இந்த இலக்கை நோக்கமாகக் கொண்டவை என்பதை உறுதிப்படுத்துவதாகும். ஒரு தொற்றுநோய்களின் போது சோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அனைவருக்கும் கிடைக்காவிட்டால் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பொருளாதாரமும் பாதிக்கப்படுவதால் இதில் சமத்துவம் முதலில் வர வேண்டும். புதுமையும், அறிவும் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது புதுமையைப் போலவே முக்கியமானது. புதிய கண்டுபிடிப்புகளால் யார் பயனடைகிறார்கள் என்பதை தீர்மானிக்க அரசாங்கங்களுக்கு நிறைய அதிகாரம் உள்ளது. ஆரம்பகால ஆராய்ச்சி, தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை உருவாக்குதல் போன்ற விஷயங்களில் அவர்கள் நிறைய பணம் செலுத்துகிறார்கள். 


உதாரணமாக, mRNA கோவிட்-19 தடுப்பூசிகள் அமெரிக்க பொதுப் முதலீட்டிலிருந்து (US public investment) சுமார் 31.9 பில்லியன் டாலரைப் பெற்றன. தனியார் நிறுவனங்கள் பொதுப் பணத்தைப் பெறுவதற்கு கடுமையான விதிகளை உருவாக்குவது, அனைவரும் தடுப்பூசிகளை நியாயமாகவும் நல்ல விலையிலும் பெறுவதை உறுதிசெய்யும். இது லாபத்தைப் பகிர்வதையும், பங்குதாரர்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, ஆராய்ச்சி போன்ற பயனுள்ள விஷயங்களில் பணத்தைத் திரும்பச் செலுத்துவதையும் ஊக்குவிக்கும். தனியார் நிறுவனங்களுடன் சிறந்த உறவைக் கொண்டிருப்பதே இதன் முக்கிய யோசனையாக இருக்கும். இந்த கூட்டாண்மை பொதுவான இலக்குகள் மற்றும் அபாயங்கள் மற்றும் வெகுமதிகளை ஒன்றாக எதிர்கொள்ளும் அடிப்படையில் இருக்க வேண்டும். கோவிட் -19 மாறுபாடுகள் மீண்டும் மீண்டும் பரவுவதை நாம் கண்டதைப் போல, சிலரால் மட்டுமே தடுப்பூசியை வாங்க முடிந்தால், அது ஒரு தொற்றுநோயைத் தடுக்காது. ஒரு தொற்றுநோய் உடன்படிக்கை இந்த மாற்றத்திற்கு உறுதியுடன் உறுதியளிக்க வேண்டும் மற்றும் இலாபங்களைத் தேடும் தனியார் நலன்களுக்கு பயனளிக்கும் உட்பிரிவுகளைத் தவிர்க்க வேண்டும்.


பொது-தனியார் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான முக்கியப் பகுதி, ஏகபோக இலாபங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பொது நலனுக்காகச் சேவை செய்யும் அறிவு ஆளுகை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளுக்கான அணுகுமுறையை நிறுவுவதாகும். இந்த விவகாரம் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது. இதற்கான புதிய சோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்குவதற்கு ஏழ்மையான நாடுகள் நோய்க்கிருமிகளின் தரவை வழங்க வேண்டும். ஆனால், இந்த தயாரிப்புகளை அவர்கள் பெறுவார்கள் என்று எந்த உறுதிமொழியும் இல்லை. அறிவுசார் சொத்துரிமை விதிகளின் முக்கியத்துவத்தை இந்த வரைவு குறிப்பிடுகிறது, ஆனால் அது மலிவு மற்றும் அணுகலைக் கட்டுப்படுத்தாது.  இது கோரிக்கைகளுக்குப் பதிலாக, அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும் மட்டுமே பரிந்துரைக்கிறது. நிறுவனங்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துகிறது. காப்புரிமை தள்ளுபடிகளை ஆதரிப்பது பற்றி அரசாங்கங்கள் சிந்திக்க ஒரு எளிய ஆலோசனை கூட ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. 


அறிவுசார் சொத்துரிமை பற்றிய தற்போதைய விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்துவது பேச்சுவார்த்தைகளை மிகவும் கடினமாக்குகிறது என்பதே இதன் பொருள். புதுமைகளை ஊக்குவிக்கவும், அனைவரும் பயன்பெறுவதை உறுதி செய்யவும், காப்புரிமைகள் இன்னும் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும். மேலும் இரண்டு முக்கியமான விஷயங்கள் தேவை: முதலில், அவர்கள் புதிய யோசனைகளை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இரண்டாவதாக, பொருட்களை உருவாக்குவதற்கான அறிவையும், தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான வாக்குறுதிகள் இருக்க வேண்டும். இந்த தொற்றுநோய் உடன்படிக்கையில் இன்னும் ஒரு சிக்கல் என்னவென்றால், பணம் பற்றிய தெளிவான வாக்குறுதிகள் இன்னும் தெளிவாக இல்லை.


கோவிட் -19 தாக்குதல் மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்கள் காரணமாக உலகப் பொருளாதாரம் குறைந்தது 13.8 டிரில்லியன் டாலரை இழந்துள்ளது. இது, பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுத்தது என்று சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) தெரிவித்துள்ளது. இதற்கான நெருக்கடியை சமாளிக்க அரசாங்கங்கள் மேலும் டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவிடப்பட்டன. ஆரோக்கியம், நலம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில், நோய்க்கான கட்டுப்பாட்டை மீறிய நெருக்கடியிலிருந்து செலவுகளைச் செய்வதற்கு, தடுப்புக்கான முதலீடுகளை அதிகரிப்பது விரும்பத்தக்கது என்பது தெளிவாக இருக்க வேண்டும். உலக சுகாதர நிறுவன குழு (WHO council) சுட்டிக்காட்டியபடி, "குணப்படுத்துவதை விட தடுப்பது மிகவும் செலவு குறைந்ததாகும்." நிதியின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம். ஏழ்மையான நாடுகளுக்கு முக்கியமான சுகாதார முதலீடுகளுக்கு நீண்ட கால நிதி தேவைப்படுகிறது. தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் பதிலளிப்பதற்கான நிதிகளை அதிகரிப்பதில் கடன் நிவாரணத்தின் முக்கியத்துவத்தை ஒப்பந்தம் ஒப்புக்கொள்கிறது, ஆனால் அதன் வார்த்தைகளில் உறுதியான அர்ப்பணிப்பு இல்லை. ஆரோக்கியத்திற்கான நிதியுதவி என்பது குறுகிய கால வரவுசெலவுத் திட்ட இலக்குகளுக்குச் சேவை செய்யக் குறைக்கப்படும் செலவாக இல்லாமல், நீண்ட கால முதலீடாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது ஒரு நாட்டின் எல்லைகளைத் தாண்டிய கடமையும் கூட இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடைசியாக, தொற்றுநோய் ஒப்பந்தத்தின் நோக்கம் அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பாதிக்கும் என்பதால், சுகாதாரத்தை சுகாதார அமைச்சகங்களுக்கு மட்டும் விட்டுவிடக்கூடாது.


அறிவுசார் சொத்துரிமைகள் போன்ற பொருளாதாரக் கொள்கைத் தேர்வுகள் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார அம்சங்கள் போன்ற ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகளையும் அரசாங்கங்களின் முடிவுகள் பாதிக்கின்றன. அரசாங்கங்கள் எவ்வாறு புதுமைகளை நிர்வகிப்பது, பொது மற்றும் தனியார் துறைகள் எவ்வாறு இணைந்து செயல்படுவது மற்றும் மனித மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வகையில் நிதி எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதை மாற்ற வேண்டும். "அனைவருக்கும் ஆரோக்கியம்" என்பதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், அது உலக அளவில் பொருளாதாரத்தை பாதிக்கும்.


ஒப்பந்தத்தின் சில பகுதிகளைப் பற்றி உறுப்பு நாடுகள் வாதிடுகையில், தங்களின் ஆரோக்கியத்தை ஒரு மனித உரிமையாக எடுத்துக்கொள்வது மற்றும் அறிவுசார் சொத்துரிமை விதிகளை பலவீனப்படுத்துவது, குறைந்த பணத்தை செலவழிப்பது மற்றும் விஷயங்களை கவனமாக சரிபார்க்காதது போன்றவை குறித்து அவர்கள் செய்யும் தேர்வு குறித்து எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. இந்த ஒப்பந்தம் தொற்றுநோய்களைத் தடுப்பது அல்லது குறைப்பது குறித்த ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவது, கொள்கை வகுப்பாளர்கள் அதை நன்றாகப் புரிந்துகொள்ளச் செய்யும். அரசாங்கங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான உலகளாவிய ஒத்துழைப்பைத் தடுத்து நிறுத்திய குறுகிய யோசனைகளைப் பயன்படுத்துவதை இது நிறுத்தவும் செய்யும். உறுப்பு நாடுகள் மே மாதம் உலக சுகாதார பேரவைக்கு (World Health Assembly) தயாராகும்போது, இந்த முக்கியமான விஷயத்தை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 


எழுத்தாளர் புதுமை மற்றும் பொது நோக்கத்திற்கான UCL நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் ஆவார். 




Original article:

Share:

பெங்களூரு முதல் சென்னை வரை மற்றும் அதற்கு அப்பாலும் இந்தியாவின் நகர்ப்புற தண்ணீர் நெருக்கடியை எவ்வாறு சரிசெய்வது? -சச்சின் திவாலே

 தண்ணீர் வழங்கல் மற்றும் அவற்றின் தரம் பற்றிய கேள்விகள் மையப்படுத்தப்பட்ட விநியோக முறையை மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கும்.


பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழையின் மூலம் மோசமாக மழை இருந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதற்கு, போதுமான கட்டுப்பாடு இல்லாமல் வேகமான நகர வளர்ச்சி மற்றும் குறைந்த நிலத்தடி நீர் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. சமீப காலமாக, சென்னையிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், இந்தியாவின் பல நகரங்கள் இதே போன்ற பிரச்சினைகளைக் கையாள்கின்றன. நகர திட்டமிடலில் தண்ணீர் வழங்கல் பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதை இது காட்டுகிறது. 


இந்தியாவின் நகரங்களில் பலருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. சமீபத்திய ஆய்வில், இந்திய நகரங்களில் 10 சதவீதம் மட்டுமே குடிநீருக்கான தரத்தை பூர்த்தி செய்கின்றன என்று அது கண்டறிந்துள்ளது.


பல காரணங்களால் விநியோக அமைப்பில் நீரின் தரம் மோசமடைந்து வருகிறது. இதில், பழைய குழாய்கள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை தண்ணீரில் வெளியிடுகிறது. அவை, வண்டல்களை உருவாக்கலாம் மற்றும் நோய்க்கிருமிகள் உண்டாக்குகிறது.  வளர்ந்த நாடுகளில் கூட இது போன்ற நிகழ்வுகளால், பல பகுதிகளில் இது கவலையளிக்கிறது. மேலும், குழாய்கள் அடிக்கடி கசிவதால் இந்திய நகரங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் மோசமாக உள்ளது. மேலும், அவற்றில் பல கழிவுநீர் பாதைகளுக்கு அருகில் தண்ணீர் குழாய்கள் உள்ளன.


கடந்த 20 ஆண்டுகளில், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைத் தயாரிக்கும் மற்றும் புட்டியில் தொகுக்கப்பட்ட குடிநீரை (packaged drinking water (PDW)) விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்த தண்ணீர் பற்றாக்குறையை பயன்படுத்தி, இந்தியா முழுவதும் அதிகமான அளவில் தண்ணீர் விநியோயம் செய்வதன் மூலம், குடும்பங்கள் குடிநீரை பெரும்பாலும் அதை 20 லிட்டர் கொள்கலன் குடிநீரை வாங்குவதை நம்பியுள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, கொல்கத்தாவில் 38 சதவீத வீடுகளும், சென்னையில் 70 சதவீத வீடுகளும் குழாய் நீர் கிடைத்தாலும் தண்ணீர் கொள்கலன்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.


கடந்த 15 ஆண்டுகளில் தண்ணீர் விநியோகமானது, தொகுக்கப்பட்ட குடிநீர் (packaged drinking water (PDW)) மாதிரி மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் தண்ணீரை சுத்திகரித்து குழாய்கள் இல்லாமல் கொள்கலன் மூலம் விநியோகம் செய்வதில் கவனம் செலுத்துகிறது. இதில், பெரிய நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்கள் போன்ற பல குழுக்கள், மக்களின் வீடுகளில் தண்ணீர் சேவைகளை வழங்குவதில் முக்கியமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது, இந்த மாதிரி நம்பகமானதாக உள்ளது. ஏனெனில், இது அதன் சொந்த நீர் ஆதாரமான, நிலத்தடி நீரைப் பயன்படுத்துகிறது. மேலும், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை உள்ளடக்கிய ஒரு குழு செயல்முறை உள்ளது.


மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பின் (Central Public Health and Environmental Engineering Organisation) தரநிலைகளின்படி,  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (Ministry of Housing and Urban Affairs) தொழில்நுட்ப பிரிவான தண்ணீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்கான விதிமுறைகளை அமைக்கிறது.  இந்திய நகரங்களில் ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது, குழாய் நீர் விநியோக அமைப்பில் (piped water supply system) உள்ள அனைத்து தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டு, குடிப்பதற்கு பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குடிப்பதற்கும், சமையலுக்கும் இந்த தண்ணீரில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். இவ்வளவு தண்ணீரை உயர் தரத்திற்குச் சுத்திகரித்து, எப்போதும் பாதுகாப்பான தண்ணீரை, சுத்தமில்லாத குழாய்கள் மூலம் விநியோகம் செய்வது அர்த்தமுள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தண்ணீர் விநியோக அமைப்பைப் பராமரிக்கவும், அவற்றை சரிசெய்யவும் நிறைய செலவாகும். இதன்மூலம், நம்மிடம் குறைந்த வளங்கள் இருப்பதால், மற்ற வீட்டுத் தேவைகளுக்காக மற்ற பயன்பாடுகளிலிருந்து குடிநீரைப் பிரிக்க வேண்டும். 


தொகுக்கப்பட்ட குடிநீர் (packaged drinking water (PDW)) முறையில், பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு மற்றும் குழாய் அல்லாத தண்ணீர் விநியோக முறையானது நன்றாக உள்ளது. பெங்களூருவின் சமீபத்திய தண்ணீர் நெருக்கடியின் மூலம் அதிகாரிகளை தண்ணீர் ஏடிஎம்களை (water ATM) வழங்க வழிவகுத்தது. டெல்லி போன்ற பிற நகரங்களிலும் இதேபோன்ற சோதனைகள் நடந்து வருகின்றன. ஆனால், அவை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.


இருப்பினும், கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான காரணங்கள் உள்ளன. சிலரிடம், தனியார் நிறுவனங்களிடம் தண்ணீர் வாங்க போதிய பணம் இல்லாமல் இருக்கும். இதில், தனியார் நிறுவனங்கள் தலைகீழ் சவ்வூடுபரவலைப் (reverse osmosis method) பயன்படுத்தி தண்ணீரை எவ்வாறு சுத்திகரிக்கிறது என்பது அறிந்ததால், உலக சுகாதார அமைப்பு (WHO) கவலையளிக்கிறது. ஏனெனில், இது தண்ணீரில் உள்ள முக்கியமான தாதுக்களை நீக்குகிறது. தண்ணீரை சுத்திகரிப்பதற்கான பிற வழிகளை நாம் பரிசீலிக்கவும், சரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் பேச வேண்டும். தொழில்நுட்பம் போன்ற விஷயங்களை ஒழுங்கமைப்பதற்கான புதிய வழிகள் உட்பட இதைச் செய்வதற்கான மலிவான வழிகளைக் கண்டறிய எங்களுக்கு கூடுதல் சோதனைகள் தேவை. தொழில்நுட்பம் மற்றும் அமைப்பின் முன்னேற்றங்கள் காரணமாக குழாய் நீர் அமைப்புகள் (Piped water supply) உருவாக நீண்ட காலம் எடுத்தது. இப்போது, தரமான பிரச்சினைகளை சரிசெய்ய தண்ணீரை வழங்க வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு மற்றும் குழாய்கள் இல்லாமல் தண்ணீரை வழங்குவதில் பரிசோதனை செய்ய முயற்சிக்க வேண்டும்.  

 

கட்டுரையாளர் பெங்களூருவில் உள்ள சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர் ஆவார்.




Original article:

Share:

சரியான நேரத்தில் மறுபரிசீலனை : ஊடகம் மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான விசாரணைக்கு முந்தைய தடைகளைப் (pre-trial injunctions) பற்றி . . .

 பத்திரிகை உள்ளடக்கம் மீதான விசாரணையின் முந்தைய தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. 


அடிப்படை சட்டக் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துவது எப்போதுமே நன்மை பயக்கும். குறிப்பாக, நீதிமன்றத் தீர்ப்புகள் அவற்றைக் கவனிக்காததாகத் தோன்றும் போது. இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது. அவதூறு வழக்குகளில் விசாரணைக்கு முந்தைய உத்தரவுகளுடன் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்கள் பேச்சு சுதந்திரத்தை கணிசமாக பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்தது. பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையையும் அவர்கள் கட்டுப்படுத்தலாம். விசாரணை தொடங்கும் முன் தற்காலிக தடை உத்தரவுகளை வழங்குவது பொது விவாதத்தை நசுக்கிவிடும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. டெல்லியில் உள்ள கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால் இந்த அவதானிப்பு வந்தது. இந்த முந்தைய முடிவை, டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது. ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (Zee Entertainment Enterprises Ltd) பற்றிய கட்டுரையை நீக்குமாறு ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அந்தக் கட்டுரை அவதூறானதாகக் கூறப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் சுருக்கமான உத்தரவு தற்காலிக தடை உத்தரவுகளை வழங்குவதற்கான நிலையான அளவுகோல்களை மீண்டும் வலியுறுத்தியது மட்டுமல்லாமல், ஊடகங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பத்திரிகை சுதந்திரத்தை அரசியலமைப்பு கடமையாக பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. இந்த தடை உத்தரவுகளுக்குத் தேவையான அளவுகோல்களை நீதிமன்றங்கள் வெறுமனே உறுதி செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் எச்சரித்தது-ஒரு வலுவான ஆரம்ப வழக்கு இருந்தாலும், வழக்கின் சமநிலை தற்காலிகமாக வெளியீட்டை நிறுத்துவதற்கு சாதகமாக இருந்து அதை நிறுத்தாவிட்டால் அது வாதிக்கு சரியான நியாயம் இல்லாமல் சீர்படுத்த முடியாத சேதத்தை ஏற்படுத்தும். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகக் கூறுவதற்குப் பதிலாக, வழக்கின் உண்மைகளை முழுமையாக ஆராய்வதன் மூலம் நீதிமன்றங்கள் அவற்றின் முடிவுகளுக்கான விரிவான காரணங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


துரதிர்ஷ்டவசமாக, பத்திரிகையை கட்டுப்படுத்தும் மூன்று வகையான நீதித்துறை உத்தரவுகளைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்:


1. நீதிமன்ற வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை முற்றிலும் தடை செய்யும் பேச்சு நிறுத்த ஆணை (outright gag orders). 


2. ஒரு வாதியின் அவதூறு மீண்டும் மீண்டும் நிகழும் என்ற அச்சத்தின் காரணமாக அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் முன் தடை உத்தரவுகள்.


3. ஒரு கட்டுரையை அகற்றி, அதைப் பற்றி மேலும் வெளியிடுவதை நிறுத்துமாறு சில ஊடகங்களுக்கு முன் விசாரணை உத்தரவு.  


போனார்ட் vs பெர்ரிமேன் (Bonnard vs Perryman) இல் உள்ள பொதுவான சட்டக் கொள்கையை நாம் புறக்கணிக்காத வரை உத்தரவுகள் நடைமுறையில் அமலாகாது. அவதூறு வழக்கில் உள்ளடக்கம் அவதூறாக இருந்தால் மட்டுமே, விசாரணையின் போது அதை நியாயப்படுத்த முடியாவிட்டால், அது உண்மை மற்றும் பொது நலன் என்று நிரூபிப்பதன் மூலம் மட்டுமே அவதூறு வழக்கில் தடை விதிக்க முடியும் என்று இந்தக் கொள்கை கூறுகிறது. சமீபத்திய உத்தரவு பொது பங்கேற்பிற்கு எதிரான செயல்தந்திர வழக்கு ((Strategic Litigation/Lawsuit against Public Participation (SLAPP)) பற்றி பேசுகிறது. இது செல்வாக்கு மிக்க மற்றும் செல்வந்தர்களால் பொது விமர்சனத்தை நிறுத்த பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும். நீண்ட விசாரணையில் முன்கூட்டியே தடை உத்தரவு பிறப்பிப்பது என்பது வெளியிடப்பட வேண்டிய விஷயங்களுக்கு "மரண தண்டனை" வழங்குவது போல் இருக்கும்   நீதிமன்றம் இதை எச்சரிக்கிறது.




Original article:

Share:

சீனா-தைவான் மோதலைத் தடுத்தல் -அர்சான் தாராபூர்

 இந்தியா தனது சொந்த நலன்களைப் பாதுகாக்க கடுமையான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும்.


இந்தியாவின் தேசிய நலன்கள் வளரும்போது, தொலைவில் இருக்கும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது. தைவான் போன்ற ஆசியாவின் தொலைதூரப் பகுதிகளில் இந்தியா இப்போது சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளது. தைவானை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, தேவைப்பட்டால் அதை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்கிடையில், அமெரிக்கா தைவானை பாதுகாக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. தைவான் மீது இந்தியா ராணுவ மோதலில் ஈடுபடுவது மிகக் குறைவு. இருப்பினும், இந்தியா முக்கியமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு கவலைகளைக் கொண்டுள்ளது. இது போன்ற ஒரு மோதலைத் தடுப்பதற்கான குறிப்பிடத்தக்க கொள்கைகளும் இதில் உள்ளன.


தற்போதைய நிலையைத் தொடரவும்


தைவான் தொடர்பான தற்போதைய நிலைமையைத் தக்கவைக்க புதுடெல்லிக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, தைவானை சுதந்திரப் பிரகடனம் செய்யாமல் ஒரு சுயராஜ்ய அமைப்பாக வைத்திருப்பதில் இந்தியாவுக்கு விருப்பம் உள்ளது. இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையிலான வர்த்தகம் 2001 முதல் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அவர்கள் பரிசீலித்து வருகின்றனர். தைவான் நிறுவனமான பவர்சிப் செமிகண்டக்டர் (Powerchip Semiconductor) உற்பத்தி நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் முதல் குறைக்கடத்தி ஆலையை (semiconductor plant) உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தைவானுக்கு இந்தியத் தொழிலாளர்களை அனுப்புவதற்கான சமீபத்திய ஒப்பந்தமும் உள்ளது. இந்தியாவின் தொழில்துறை, முக்கியமான விநியோகச் சங்கிலிகள் மற்றும் வெளிநாட்டில் வாழும் குடிமக்கள் தைவான் ஜலசந்தி முழுவதும் ஒரு நிலையான சூழ்நிலையிலிருந்து பயனடைகிறார்கள்.


இரண்டாவதாக, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால், அது இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மோதல் சீனா மற்றும் தைவானுடனான உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைக்கும். இந்த இடையூறு ஆசியா மற்றும் மேற்கு ஆசியாவை பாதிக்கும். ப்ளூம்பெர்க் (Bloomberg) நடத்திய ஒரு ஆய்வு, ஒரு மோதல் ஏற்பட்டால் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%க்கும் அதிகமாக செலவாகும் என்று கூறுகிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தை விட இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும். இந்தியாவின் முக்கிய தொழில்களான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருந்து பொருட்கள் போன்றவை அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.


சீனாவும் அமெரிக்காவும் தைவானைத் தாண்டி ஒரு நீண்ட அல்லது பெரிய போரில் ஈடுபட்டால், அது பல இடங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டமான எல்லையை இன்னும் மோசமாக்கும். இது சீனா, அமெரிக்கா மற்றும் முழு உலகிற்கும் தேவையான பிற நாடுகளின் தொழில்களின் பெரிய பகுதிகளை சேதப்படுத்தலாம் அல்லது மூடலாம். கூடுதலாக, இது மிகவும் மோசமான அணுசக்தி நிலைமைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். தைவான் மீதான போரை இந்தியாவால் கையாள முடியாது, குறிப்பாக தனது சொந்த வளர்ச்சிக்கு உறுதித்தன்மை மற்றும் வளர்ச்சியை இந்தியா விரும்புகிறது.


மூன்றாவதாக, ஒரு மோதல் ஏற்பட்டால் அது பேரழிவுகரமானதாக இருக்கும். இந்த மோதலின் விளைவுகள் நீண்டகால நோக்கில் இந்தியாவின் நிலைமையை மேலும் மோசமாக்கும். இது யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. தைவான் அருகே சீனாவின் கை ஓங்கியுள்ளதால் ஒரு சிறிய மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் சீனா தைவானை வீழ்த்த வழிவகுக்கும். இது அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இழப்பை ஏற்படுத்தும். சீனா வெற்றி பெற்று பிராந்தியத்தின் உயர்மட்ட இராணுவ சக்தியாக மாறினால், சீனா தனது பாதுகாப்பு அமைப்பை மாற்றும். 


பாதுகாப்பு பற்றிய அமெரிக்க வாக்குறுதிகள் நம்பகத்தன்மை குறைந்ததாகத் தோன்றும். அண்டை நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்க்காக மேலும் ஆயுதங்களை அதிகரிக்கலாம் அல்லது அவர்களின் பாதுகாப்பிற்காக ஆக்கிரமிப்பு நிலைப்பாடுகளை எடுக்கலாம். சீன இராணுவம் இந்தியப் பெருங்கடல் உட்பட பகுதிகளில் மிகவும் சுதந்திரமாக செல்வாக்கு செலுத்த முடியும். அருணாச்சல பிரதேசத்தின் மீதான தங்கள் உரிமைகோரல்களையும் அவர்கள் கடுமையாக அழுத்தக்கூடும். இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடு அல்ல. இருப்பினும், இராணுவ மேம்பாடுகள் மற்றும் பொதுவாக சாதகமான இராஜதந்திர சூழ்நிலைக்கு இந்தியா அமெரிக்காவை நம்பியுள்ளது.


இந்தியாவால் என்ன செய்ய முடியும்


வெவ்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தைவானுக்கான பெய்ஜிங்கின் இராஜதந்திரத்தைத் தடுக்க இந்தியா உதவ முடியும். இராணுவ பலம் இல்லாத சர்வதேச சட்டம், பொருளாதாரம் மற்றும் இராஜதந்திரம் ஆகியவை இதில் அடங்கும். தேவைப்பட்டால் மட்டுமே ராணுவம் அல்லாத நடவடிக்கைகளை சீனா விரும்புகிறது. வெற்றிக்கான நிலைமைகளை உறுதிப்படுத்திய பின்னரே இராணுவ நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது. இராணுவ சமநிலை முக்கியமானது. பெய்ஜிங்கிற்கு அது போதுமான அளவு தயாராகவில்லை என்பதைக் காட்டுவதன் மூலம் இந்தியா பங்களிக்க முடியும். இந்தியாவுக்கு ஆறு வாய்ப்புகள் உள்ளன: சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்துதல், பொதுமக்கள் கருத்தை வடிவமைத்தல், இராஜதந்திர ஒருங்கிணைப்பு, பொருளாதார நடவடிக்கைகள், தகவல் பிரச்சாரங்கள் மற்றும் அமெரிக்கப் படைகளை ஆதரித்தல். இந்த விருப்பங்களை இலக்குகள் மற்றும் அரசியல் விருப்பத்தின் அடிப்படையில் சரிசெய்யலாம், மற்ற நாடுகளும் அவற்றைப் பயன்படுத்தலாம்.


இந்த விருப்பங்களை செயல்படுத்துவது சீனா-தைவான் பிரச்சினையில் அவற்றின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல், இந்தியாவின் ஒட்டுமொத்த இராஜதந்திர நிலைக்கு பயனளிக்கும். முதலாவதாக, சீனாவுடனான வளர்ந்து வரும் போட்டியில் அவை இந்தியாவுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும். இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றவும், அதன் சொந்த முன்னேற்றத்திற்கு உதவவும் அவை அதிக வழிகளை வழங்குகின்றன. கூடுதலாக, உலகளவில், குறிப்பாக சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக செயல்படாத வளரும் நாடுகளிடையே இந்தியா வழிநடத்த ஒரு பரந்த தளத்தை அவை வழங்குகின்றன.


எனவே, இந்தக் கொள்கைகள் தைவானுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ உதவுவதற்காக மட்டும் அல்ல, அவை இந்தியாவின் சொந்த நலனுக்காக உள்ளன. சூழ்நிலையைப் பொறுத்து, இந்த நடவடிக்கைகள் சீனாவின் பதிலடிக்கு வழிவகுக்கும். இருப்பினும், எந்தவொரு கொள்கையும் அதன் சவால்கள் இல்லாமல் வராது. சீனாவின் விமர்சனங்களை தேவைப்படும்போது எதிர்கொண்டு நிற்க முடியும் என்பதை இந்தியா சமீபத்தில் நிரூபித்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் ஆர்வங்கள் மற்றும் இலக்குகளைப் பொறுத்தவரை, அதன் கொள்கைகள் உருவாக வேண்டும் என்பது தெளிவாகிறது. செயலற்ற தன்மையின் சாத்தியமான விளைவுகளுடன் ஒப்பிடும்போது இந்தப் புதிய கொள்கைகளின் செலவுகள் குறைவு.


அர்சான் தாராபூர் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தில் பி.எச்.டி ஆராய்ச்சி அறிஞராக உள்ளார்.




Original article:

Share:

மனிதாபிமான உதவியின் பின்னணியில் உள்ள அரசியல் - டி.எஸ்.திருமூர்த்தி

 "காஸாவில் 100 சதவீத மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையாக உள்ளனர்" என்றும், "மொத்த மக்கள் தொகையுக்கும் உணவுப் பற்றாக்குறையாக வகைப்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். விரைவில், அமெரிக்க காங்கிரஸானது (U.S. Congress) ஐக்கிய நாடு நிவாரணம் மற்றும் பணிகள் முகமைக்கு (UN Relief and Works Agency(UNRWA)) நிதியளிப்பதை மார்ச் 2025 வரை நிறுத்துகிறது. காசா பகுதி, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள மில்லியன் கணக்கான பாலஸ்தீன அகதிகளுக்கு முக்கியமான உதவிகளை வழங்கும் ஒரே ஐக்கிய நாடு நிறுவனம் ஐக்கிய நாடு நிவாரணம் மற்றும் பணிகள் முகமை (UNRWA) ஆகும். இந்த நடவடிக்கை, மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் மூலம் ஓர் நல்ல அரசியலை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வருகிறது. இந்த நிதியை நிறுத்துவதன் மூலம் மனித உயிர்களை, குறிப்பாக பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது.


முரண்பாடாக, இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளால் UNRWA க்கு நிதியளிப்பதை நிறுத்திய சில மேற்கத்திய நாடுகள் இப்போது அந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை உணர்ந்து மீண்டும் UNRWA க்கு நிதியளிக்கத் தொடங்கியுள்ளன.   ஆனால், இது ஒரு  முக்கியமான அரசியல் கண்ணோட்டமாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளவையின் நிவாரணம் மற்றும் பணிகள் முகமை (UNRWA) நிதியைத் திரும்பப் பெறுவது மூலம் பாலஸ்தீனிய அகதிகளை மறைமுகமாக அங்கீகரிப்பது மற்றும் பாலஸ்தீனிய நாட்டிற்கான தீர்க்கப்படாத பிரச்சினைகளை அகற்றக்கூடும். மேலும், இது அவர்களின் நிலையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அகதிகளின் உரிமையாக உள்ளது. இதைத்தான் இஸ்ரேல் காலம் காலமாக வலியுறுத்தி வந்தது.


இலவச மதிய உணவு என்று எதுவும் இல்லை. புவிசார் அரசியலிலும் இதே நிலைமைதான். சில நேரங்களில், மில்லியன் கணக்கான மக்கள் அரசியல் அல்லது இராணுவ இலக்குகளை அடைய பட்டினியாக இருக்கக்கூடும் என்று அர்த்தம். இது காசாவின் சமீபத்திய நிகழ்வாக இருந்தாலும், இது காஸாவைப் பற்றியது மட்டுமல்ல என்றே அர்த்தம்.


காசா ஒரு கப்பலுக்காக காத்திருக்கிறது


பாலஸ்தீனியர்களுக்கு உதவி வழங்குவதற்காக காசா கடற்கரையில் ஒரு தற்காலிக கப்பல் கட்டும்  திட்டஙக்ளைச் செயபடுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் திட்டம், தேவைப்படும் மக்களுக்கு உதவுவது அரசியலில் எவ்வாறு சிக்கலாகிறது என்பதைக் காட்டுகிறது.  அவசரமாக உணவு மற்றும் மருந்துகள் தேவைப்படும் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இந்த கப்பல் கட்டும் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனினும், இந்த உதவிக்கான நடவடிக்கை அரசியல் பிரச்சினைகளினால் தடைபட்டுள்ளது. ரஃபா (Rafah) அல்லது கரீம் அபு சலீமில் (Karem Abu Salem) உள்ள தரைவழித் திறப்புகள் வழியாக இஸ்ரேல் எளிதாக உணவுக்கான வாகனங்களை அனுமதிக்க முடியும். அதேபோல், முழுக்க முழுக்க அமெரிக்காவை நம்பியிருக்கும் இஸ்ரேலை, உதவித் தொடரணிகளை நிறுத்த வேண்டாம் என்று அமெரிக்கா வெறுமனே கேட்டுக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. மாறாக, 1.4 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு 38,000 உணவுப் பொட்டலங்களை விமானம் மூலம் ரஃபாவில் (Rafah) மேலேயிருந்து வீசினர். இது ஒரு சோகமான சம்பவத்திற்கு வழிவகுத்தது. அங்கு, காஸாவில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 112 பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றனர். மேலும் பலர் உணவுக்காக காத்திருந்த போது காயமடைந்துள்ளனர். கடலில் இருந்து உணவுப் பொட்டலங்களை எடுக்க முயன்ற 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் ஒரு அரசியல் பிரச்சினையை இராணுவ நடவடிக்கைகளால் தீர்க்கிறார்கள். அதை, ஒரு தளவாட பிரச்சனையாக கருதுகின்றனர்.


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், சமீபத்தில் ரஃபாவில் (Rafah) கூறியது போல், இந்தக் குறுக்கு பாதையில், இது எப்படியான மனதையும் பதைக்கும் மற்றும் கொடூரமானது என்பதை நாம் காணலாம். வாயில்களின் ஒருபுறம் தடுக்கப்பட்ட நிவாரண வாகனங்களின் நீண்ட வரிசை, மறுபுறம் பட்டினியின் நீண்ட நிழல். இந்த நிலைமை ஒரு தார்மீகரீதியான சீற்றமாகும். மனிதாபிமான உதவிகளை நிறுத்துவது சர்வதேச சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், காசாவுக்கு "பயனுள்ள மற்றும் உடனடி" (effective and immediate) உதவிக்கு அழைப்பு விடுக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவையும் இது மீறுகிறது. தற்போது, வாக்குறுதியளிக்கப்பட்ட கப்பல் கட்டுமானத்திற்காக பாலஸ்தீனியர்கள் காத்திருக்கின்றனர்.


மார்ச் 25 அன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UN Security Council (UNSC)) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தற்போது, ரமலான் வருவதால், இந்த   மாதத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னர் நீடித்த போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் அது கோருகிறது. மேலும், இதன் மூலம் பணயக் கைதிகளை விடுவிக்கவும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகளை வழங்கவும் தீர்மானம் கோருகிறது. ஆனால், இதற்கு அமெரிக்கா வாக்களிக்கவில்லை. ஐக்கிய நாடுகளுக்கான பிரெஞ்சு தூதர் நெருக்கடி இன்னும் முடிந்துவிடவில்லை என்று எச்சரித்தார். ரமலானுக்குப் பிறகு, இரண்டு வாரங்களில், ஒரு நிரந்தர போர் நிறுத்தம் நிறுவப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.


ஆனால் முதலில், இஸ்ரேல் இதற்கான தீர்மானத்தை மதித்து போர் நிறுத்தத்தை கடைபிடிக்குமா? இருப்பினும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவியை அனுமதிக்குமா? ஆனால், இஸ்ரேல் அவ்வாறு செய்யும் மனநிலையில் இல்லை என்று தெரிகிறது. இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உயிருடனோ அல்லது பிணமாகவோ திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். அதற்கு பதிலுக்கு ஹமாஸ் பாலஸ்தீன கைதிகளை விரும்புகிறது. பரிமாற்றம் மற்றும் ரமலானுக்குப் பிறகு, இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இம்முறை, ஹமாஸிடம் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு இருக்காது. அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இதற்கான தீர்மானத்தை "பிணைப்பு இல்லாதது" (non-binding) என்று அழைத்தது. இஸ்ரேல் இப்போது கட்டுப்பாடுகள் இல்லாமல் குண்டு வீச முடியும்.  காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஐக்கிய நாடு பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் (UN Security Council resolution) கூட உதவ முடியாது.


இந்தியா உதவிகளை அனுப்பிய போது


நாடுகளின் மோதல்களில், அரசியல் நோக்கங்களுக்காக மனிதாபிமான உதவியைப் பயன்படுத்துவது நீண்டகால நடைமுறையாகும். இது, நாடுகளின் இராஜதந்திரத்தின் தொடக்கத்தில் இருந்து வருகிறது. சமீபத்தில், இந்தியாவில் ஒரு மாநில அரசு மற்றொரு நாட்டிற்கு மனிதாபிமான உதவி வழங்கிய அசாதாரண நிகழ்வு நடந்ததுள்ளது. 2008 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் தலைமையில், இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் பொதுமக்களுக்கு உணவு மற்றும் உடைகள் அடங்கிய 80,000 'குடும்பப் பொட்டலங்களை' (family packets) அனுப்பியது.


இந்த நேரத்தில், தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் அரசியல்ரீதியாக செய்திகள் மூலம் தொடர்பு கொண்டணர். இதன்மூலம் அவர்கள், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. மேலும், இலங்கை தமிழர்களுக்கு உதவிப் பொட்டலங்களை விநியோகிக்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (Red Cross) கேட்டது. இதேபோல், 2022-ல் தமிழ்நாடு சார்பாக இலங்கைக்கு மேலும் பல உதவிகளை செய்தனர். கிட்டத்தட்ட 10,000 டன் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்துள்ளனர். இது இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது நடந்தது மிகச் சிறப்பாக பார்க்கப்படுகிறது.


கோவிட்-19 காலத்தில், மேற்கத்திய நாடுகள் தடுப்பூசிகளை வைத்திருந்தபோது, இந்தியா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பியது. இது இராஜதந்திர ரீதியில் கருணையின் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது. மேலும், சர்வதேச உறவுகளில் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு நல்ல அரசியல் உத்தியால் இயக்கப்படுவதில்லை என்பதை இது காட்டுகிறது.


ஆப்கானிஸ்தான் விவகாரம்


2021 முதல் 2022 வரை இந்தியா ஐக்கிய நாடு பாதுகாப்பு கவுன்சிலில் (UN Security Council) இருந்தபோது, உதவியின் மனிதாபிமான அடிப்படையில், பலமுறை அரசியலில் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, P-5 போன்ற சக்தி வாய்ந்த நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக, ஐக்கிய நாடு பாதுகாப்பு கவுன்சில் (UNSC) 2021 டிசம்பரில் தலிபான்களுக்கு தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளை வழங்க முடிவு செய்தது. இது, குறிப்பாக பெண்களின் உரிமைகள் தொடர்பாக கவுன்சில் நிர்ணயித்த அளவுகோல்களை நிவர்த்தி அடையாதபோது கூட இது முக்கியமானதாக உள்ளது. தலிபான்களுக்கு இரண்டு ஆண்டுகளாக உதவிகள் வந்து குவிந்த நிலையில், ஆப்கான் பெண்களின் நிலைமை மோசமடைந்துள்ளது. இருப்பினும், இப்போது இதற்கான கவனம் உக்ரைன் மற்றும் காசா மீது உள்ளது. மாறாக, ஆப்கானிஸ்தானின் பெண்களை மறந்துவிடுகிறது.


சிரியா, எத்தியோப்பியா, யேமன் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதில் அரசியல் வெற்றி பெறுவதை ஐக்கிய நாடு பாதுகாப்பு கவுன்சில் (UN Security Council) கண்டுள்ளது. இதனால், வழக்கமான மக்களுக்கு நிறைய துன்பங்களை ஏற்படுத்துகிறது. சிரியாவில், அமெரிக்கா, துருக்கி மற்றும் சில மேற்கத்திய மற்றும் வளைகுடா நாடுகள் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை (Bashar al-Assad) ஆட்சியில் இருந்து அகற்ற முடியாததால், அவர்கள் இப்போது அரசியல் காரணங்களுக்காக உதவியைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் வடக்கு சிரியாவில் துருப்புக்களைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களின் சோதனைச் சாவடிகளில் அவர்கள் கட்டுப்படுத்தும் சிரியர்களுக்கு மட்டுமே உதவி வழங்குகிறார்கள். ஏமனிலும் இதுதான் நடந்தது. எத்தியோப்பியாவில், Tigray People's Liberation Front (TPLF), மேற்கு நாடுகளின் ஆதரவைக் கொண்டிருந்தது. எனவே எத்தியோப்பிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க மனிதாபிமான உதவி பயன்படுத்தப்பட்டது. இப்போது அது சூடானில் நடக்கிறது. 14 மில்லியன் குழந்தைகள் உட்பட சுமார் 25 மில்லியன் சூடானியர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. ஆனால் உள்ளே முரண்பாடு உள்ளது, தேவையான நிதியில் 5% மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.


உலகளவில் உள்ள மக்கள், உணவு மற்றும் மருந்துக்காக காத்திருக்க விடப்படுகிறார்கள். அதே நேரத்தில், தலைவர்கள் பெரும்பாலும் மோதல்கள் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு மத்தியில் அவர்களின் அவலநிலையை கவனிக்கவில்லை.




Original article:

Share:

உலக வர்த்தக அமைப்பின் முதலீட்டு வசதி பேச்சுவார்த்தைகள் சட்டவிரோதமானவை அல்ல

 அபுதாபியில் நடைபெற்ற  உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization (WTO)) 13வது அமைச்சர்கள் மாநாட்டில் (Ministerial Conference  (MC13)) வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி (investment facilitation for development (IFD)) ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாதது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். கூட்டு அறிக்கை, முன்முயற்சி மூலம் இந்தியா உட்பட 70 நாடுகளுடன் வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை 2017 இல் தொடங்கியது. இந்தியா போன்ற நாடுகளின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், நவம்பர் 2023 இறுதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளில் 70% க்கும் அதிகமான நாடுகள், அதாவது, 166 நாடுகளில் 120 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. 


அபுதாபியில் நடைபெற்ற, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டின் போது 120 நாடுகள் வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தத்தை பன்முக ஒப்பந்தமாக (plurilateral agreement (PA))  மாற்ற விரும்பினர். ஒப்பந்தத்தின் இணைப்பு 4 க்குள் இதை பன்முக ஒப்பந்தமாக  சேர்க்க விரும்பினர். உலக வர்த்தக அமைப்பு முதன்மையாக பலதரப்பு ரீதியாக செயல்படும் போது, பிரிவு II.3 இன் கீழ் பன்முக ஒப்பந்தங்களை அனுமதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. 


இந்தியாவின் கவலைகள்


வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தம், ஒழுங்குமுறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும், அதிக அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஒப்பந்தத்தில் சந்தை அணுகல், முதலீட்டு பாதுகாப்பு அல்லது முதலீட்டாளர் மற்றும் அரசுக்கிடையே தகராறு தீர்வு (investor-state dispute settlement (ISDS)) தொடர்பான விதிகள் இல்லை. முதலீட்டாளர்-அரசு தகராறு தீர்வு (investor-state dispute settlement (ISDS)) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்த நாட்டின் மீது வழக்குத் தொடர அனுமதிக்கிறது. இது சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்வு முறையின் தற்போதைய அமைப்பில் நாடுகள் மட்டுமே ஒருவருக்கொருவர் வழக்குத் தொடர மட்டுமே அனுமதிக்கிறது என்பதால், முதலீட்டாளர்-அரசு தகராறு தீர்வை  (investor-state dispute settlement (ISDS)) உலக வர்த்தக அமைப்பு  உடன்  சேர்ப்பது சாத்தியமில்லை என்று தெரிகிறது.


வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் ஒரு பகுதியாக மாறுவதைத் தடுப்பதில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முக்கிய பங்கு வகித்தன. இந்தியாவின் கவலைகள் வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி  ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பற்றியது அல்ல, இரண்டு முக்கிய பிரச்சினைகள்  உள்ளன. முதல் பிரச்சினை, முதலீடு உலக வர்த்தக அமைப்பின் பகுதியாக இருக்க முடியுமா என்பதுதான். இரண்டாவது பிரச்சினை, வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தத்தை  உலக வர்த்தக அமைப்பின் விதிப்புத்தகத்தில் சேர்க்கப் பயன்படுத்தப்படும் செயல்முறையாகும்.


முதலீடு என்பது வர்த்தகம் அல்ல


இந்தியாவின் முக்கிய வாதம் என்னவென்றால், முதலீடு என்பது வர்த்தகத்தைப் போன்றது அல்ல. ஏனெனில் இது எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு வழிவகுக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இது வர்த்தகத்திற்கும் முதலீட்டிற்கும் இடையே வலுவான தொடர்பைக் காட்டும் பொருளாதார ஆய்வுகளுடன் முரண்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Organization for Economic Cooperation and Development (OECD)) கருத்துப்படி, உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 70% உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள் (global value chains) மூலம் நிகழ்கிறது. இந்த சங்கிலிகள் வர்த்தகம் மற்றும் முதலீடு இரண்டையும் உள்ளடக்கியது. அவை எவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.


அதனால்தான் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (Regional Comprehensive Economic Partnership (RCEP)) மற்றும் டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மைக்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்தம் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) போன்ற பல நவீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு பற்றிய விரிவான விதிகளைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடனான (European Free Trade Association) இந்தியாவின் புதிய வர்த்தக ஒப்பந்தமும் முதலீட்டைப் பற்றி பேசுகிறது. இருப்பினும் அவை முதலீடுகளை எளிதாக்குதல் மற்றும் ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றன.


வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி உடன்படிக்கையை பேச்சுவார்த்தை நடத்தும் செயல்முறை குறித்து, இந்தியா ஒரு முக்கிய கருத்தை தெரிவித்தது. முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு எந்த விதியும் இல்லை என்று இந்தியா கூறியது. 2004 இல், உலக வர்த்தக அமைப்பு ஒரு முடிவை எடுத்தது. இந்த முடிவு வர்த்தகம் மற்றும் முதலீடு எவ்வாறு தொடர்புடையது என்பது பற்றிய பேச்சுக்கள் பற்றியது. இந்தப் பேச்சுக்கள் 'சிங்கப்பூர் பிரச்சினைகள்' (‘Singapore issues’) என்று அழைக்கப்பட்டன. அவைகள் 1996 உலக வர்த்தக அமைப்பின் சிங்கப்பூர் அமைச்சர்கள் மாநாட்டில் தொடங்கியதால் இவ்வாறு அழைக்கப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைகள் தோஹா சுற்றின் ஒரு பகுதியாக இருக்காது என்று பொதுக்குழு முடிவு செய்தது. தோஹா சுற்றுப் (Doha round) பேச்சுவார்த்தை 2001 இல் தொடங்கியது.


2015 உலக வர்த்தக அமைப்பின் நைரோபி அமைச்சர்கள் ( Nairobi ministerial) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. புதிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான எந்தவொரு முடிவும் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் ஒருமித்த ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூறியது. வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால், பேச்சுவார்த்தைகளும் அதன் விளைவாக வரும் உரையும் விதிகளுக்கு எதிரானவை என்று இந்தியா வாதிடுகிறது.


வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு எதிராக ஒரு விதி இருப்பதாக இந்தியா வாதிடுகிறது. ஆனால் இது இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. முதலாவதாக, இந்த உத்தரவு, வசதி உட்பட அனைத்து முதலீட்டு அம்சங்களுக்கும் பொருந்துமா என்பது முதல் கேள்வி? 1996இல் பரிந்துரைக்கப்பட்ட முதலீட்டு ஒப்பந்தத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் சந்தை அணுகல் மற்றும் முதலீட்டு பாதுகாப்பு பற்றியது. உலக வர்த்தக அமைப்பில் உள்ள அனைத்து முதலீட்டு விஷயங்களுக்கும் இந்த விதி பொருந்துமா?


இரண்டாவதாக, அனைத்து உறுப்பினர்களுடனும் புதிய பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது விதி. ஆனால் இது சில உறுப்பினர்களால் மட்டுமே தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியதா? வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி (investment facilitation for development (IFD))  ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்து உறுப்பினர்களுடனும் தொடங்கப்படவில்லை. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் பிரிவு X.9 இணைப்பு 4-ல் இருக்கும் பட்டியலில் புதிய ஒப்பந்தத்தைச் சேர்க்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும், புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுக்களை தொடங்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் கூறவில்லை.


உலக வர்த்தக அமைப்புக்கு, பழைய விதிகளை புதுப்பித்து, உலகளாவிய வர்த்தகத்திற்காக புதிய விதிகளை உருவாக்குவது என்ற ஒரு முக்கியமான வேலை உள்ளது. ஆனால், உலக வர்த்தக அமைப்பில் முடிவுகளை எடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால், அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தை அடைவது மிகவும் கடினமாக உள்ளது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை போன்ற பன்முக ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து வருகிறது. உலக வர்த்தக அமைப்பில் முன்மொழியப்பட்ட வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி (investment facilitation for development (IFD))  ஒப்பந்தம் போன்ற உடன்படிக்கைகளுக்கான அதன் எச்சரிக்கையான அணுகுமுறையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.




Original article:

Share:

2024 ஜனவரி மற்றும் பிப்ரவரியில் எப்போதும் இல்லாத வெப்பப்பதிவு -தி இந்து தரவுக் குழு

 பிப்ரவரி 2024இல், சராசரி உலக வெப்பநிலை 13.54 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட அதிகமான வெப்பமாகும்.


இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான மாதமாக இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதமும் அப்படித்தான்.  2023 ஆம் ஆண்டின் கடைசி ஏழு மாதங்களும் அதிகமான வெப்ப உயர்வுகளைக் குறித்தன. அடுத்தடுத்த ஆண்டுகளில் வெப்பமானது, தொடர்ந்து அதிகரித்துவருகிறது அதாவது உலகம் வெப்பமடைகிறது.


வெப்பநிலை அதிகரித்து வருவது மட்டுமல்லாமல், அவை முன்பை விட வேகமான விகிதத்தில் உயர்ந்து வருகின்றன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலைக்கும், முந்தைய ஆண்டுகளின் பழைய பதிவுகளுக்கும் இடையிலான இடைவெளி கணிசமாக அதிகரித்துள்ளது, இது வெப்பநிலை உயர்வு விரைவானது என்பதைக் காட்டுகிறது.


விளக்கப்படம் 1 ஆண்டு வாரியாக மாதாந்திர சராசரி உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலையைக் காட்டுகிறது. கிடைமட்ட அச்சில் 1 முதல் 12 வரையிலான எண்கள் ஜனவரி 1 முதல் டிசம்பரில் 12 வரை ஆண்டின் மாதங்களைக் குறிக்கின்றன. தெளிவுக்காக, 2020 ஆம் ஆண்டும் அடுத்தடுத்த ஆண்டுகளும் சிவப்பு நிறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.


பிப்ரவரி 2024 இல், சராசரி வெப்பநிலை 13.54 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது கடந்த பிப்ரவரியை விட வெப்பமானது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு சராசரி வெப்பநிலை 13.42 டிகிரி செல்சியஸைத் தொட்டதே சாதனையாக இருந்தது.  இந்த சாதனை 2020 இல் பதிவான 13.33 டிகிரி செல்சியஸ் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.


ஜனவரி 2024 இல், சராசரி வெப்பநிலை 13.14 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது எந்த ஜனவரியையும் விட வெப்பமானது. இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு 13.02 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.  இது முந்தைய சாதனையான 12.99 டிகிரி செல்சியஸை முறியடித்தது, இது 2016 இல் அமைக்கப்பட்டது.


வரைபடம் 2 பிப்ரவரி 15, 2024 அன்று நாடு வாரியான சராசரி மாதாந்திர மேற்பரப்பு வெப்பநிலையைக் காட்டுகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் தெற்கு சூடான், மேற்கு ஆப்பிரிக்காவில் கானா மற்றும் டோகோ ஆகியவை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளன. 62 நாடுகளில், அந்த நாளில் சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது.  இந்தியா உட்பட 41 நாடுகளில் இது 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது.  அன்றைய தினம் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 20.17 டிகிரி செல்சியஸ்.


உலகளாவிய சராசரியின் அடிப்படையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெப்பமான மாதமாக இருந்தாலும், இது அனைத்து தனிப்பட்ட நாடுகளுக்கும் பொருந்தாது. உதாரணமாக, வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள 194 நாடுகளில், 58 நாடுகள் மட்டுமே 2024இல் பிப்ரவரிமாதத்தில் அதிகமான வெப்பநிலை பதிவானது. ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்னியா, குரோஷியா, செக்கியா, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் இதில் அடங்கும். 2006 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக வெப்பமான பிப்ரவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை 21.94 டிகிரி செல்சியஸாக இருந்தது.


விளக்கப்படம் 3 ஆண்டு வாரியாக மாதாந்திர மேற்பரப்பு வெப்பநிலை விலகல்களைக் காட்டுகிறது. ஒரு மாதத்தின் முழுமையான வெப்பநிலை விளக்கப்படம் 1 இல் சித்தரிக்கப்பட்டுள்ளது, 1991- 2020 சராசரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட மாதத்தின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை விலகல் விளக்கப்படம் 3 இல் சித்தரிக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி 2024இல், விலகல் +0.81°C ஆக இருந்தது.  அதாவது, அந்த மாத வெப்பநிலை 1991-2020 பிப்ரவரி சராசரியை விட 0.81 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த விலகலாகும். ஜனவரி 2024 இல், விலகல் +0.70°C ஆக இருந்தது, இது ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலையாகும்.


பிப்ரவரி 15, 2024 நிலவரப்படி, 1991-2020 காலக்கட்டத்தின் சராசரியுடன் ஒப்பிடும்போது வரைபடம் 4  நாடு வாரியான மாதாந்திர மேற்பரப்பு வெப்பநிலை விலகல்களைக் காட்டுகிறது. இந்த விலகல் பெரும்பாலான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் +2 ° C க்கு மேல் இருந்தது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளும் அந்த தேதியில் இதேபோன்ற உயர் விலகலைப் பதிவு செய்தன. அதே நேரத்தில், இந்தியாவின் சில பகுதிகள் வெப்பநிலையானது +0.3 டிகிரி செல்சியஸாக இருந்தன.


கோப்பர்நிக்கஸ் மாதாந்திர அறிக்கையின்  படி, பிப்ரவரி 2024 இல் ஐரோப்பிய வெப்பநிலை பிப்ரவரிக்கான 1991-2020 சராசரியை விட 3.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக, அதாவது, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சராசரியை விட அதிக வெப்பநிலை பதிவானது.


ஐரோப்பாவிற்கு வெளியே, வடக்கு சைபீரியா, மத்திய மற்றும் வடமேற்கு வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பகுதி, ஆப்பிரிக்கா முழுவதும் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக பதிவானது.




Original article:

Share: