பெங்களூரு முதல் சென்னை வரை மற்றும் அதற்கு அப்பாலும் இந்தியாவின் நகர்ப்புற தண்ணீர் நெருக்கடியை எவ்வாறு சரிசெய்வது? -சச்சின் திவாலே

 தண்ணீர் வழங்கல் மற்றும் அவற்றின் தரம் பற்றிய கேள்விகள் மையப்படுத்தப்பட்ட விநியோக முறையை மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கும்.


பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழையின் மூலம் மோசமாக மழை இருந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதற்கு, போதுமான கட்டுப்பாடு இல்லாமல் வேகமான நகர வளர்ச்சி மற்றும் குறைந்த நிலத்தடி நீர் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. சமீப காலமாக, சென்னையிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், இந்தியாவின் பல நகரங்கள் இதே போன்ற பிரச்சினைகளைக் கையாள்கின்றன. நகர திட்டமிடலில் தண்ணீர் வழங்கல் பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதை இது காட்டுகிறது. 


இந்தியாவின் நகரங்களில் பலருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. சமீபத்திய ஆய்வில், இந்திய நகரங்களில் 10 சதவீதம் மட்டுமே குடிநீருக்கான தரத்தை பூர்த்தி செய்கின்றன என்று அது கண்டறிந்துள்ளது.


பல காரணங்களால் விநியோக அமைப்பில் நீரின் தரம் மோசமடைந்து வருகிறது. இதில், பழைய குழாய்கள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை தண்ணீரில் வெளியிடுகிறது. அவை, வண்டல்களை உருவாக்கலாம் மற்றும் நோய்க்கிருமிகள் உண்டாக்குகிறது.  வளர்ந்த நாடுகளில் கூட இது போன்ற நிகழ்வுகளால், பல பகுதிகளில் இது கவலையளிக்கிறது. மேலும், குழாய்கள் அடிக்கடி கசிவதால் இந்திய நகரங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் மோசமாக உள்ளது. மேலும், அவற்றில் பல கழிவுநீர் பாதைகளுக்கு அருகில் தண்ணீர் குழாய்கள் உள்ளன.


கடந்த 20 ஆண்டுகளில், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைத் தயாரிக்கும் மற்றும் புட்டியில் தொகுக்கப்பட்ட குடிநீரை (packaged drinking water (PDW)) விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்த தண்ணீர் பற்றாக்குறையை பயன்படுத்தி, இந்தியா முழுவதும் அதிகமான அளவில் தண்ணீர் விநியோயம் செய்வதன் மூலம், குடும்பங்கள் குடிநீரை பெரும்பாலும் அதை 20 லிட்டர் கொள்கலன் குடிநீரை வாங்குவதை நம்பியுள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, கொல்கத்தாவில் 38 சதவீத வீடுகளும், சென்னையில் 70 சதவீத வீடுகளும் குழாய் நீர் கிடைத்தாலும் தண்ணீர் கொள்கலன்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.


கடந்த 15 ஆண்டுகளில் தண்ணீர் விநியோகமானது, தொகுக்கப்பட்ட குடிநீர் (packaged drinking water (PDW)) மாதிரி மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் தண்ணீரை சுத்திகரித்து குழாய்கள் இல்லாமல் கொள்கலன் மூலம் விநியோகம் செய்வதில் கவனம் செலுத்துகிறது. இதில், பெரிய நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்கள் போன்ற பல குழுக்கள், மக்களின் வீடுகளில் தண்ணீர் சேவைகளை வழங்குவதில் முக்கியமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது, இந்த மாதிரி நம்பகமானதாக உள்ளது. ஏனெனில், இது அதன் சொந்த நீர் ஆதாரமான, நிலத்தடி நீரைப் பயன்படுத்துகிறது. மேலும், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை உள்ளடக்கிய ஒரு குழு செயல்முறை உள்ளது.


மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பின் (Central Public Health and Environmental Engineering Organisation) தரநிலைகளின்படி,  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (Ministry of Housing and Urban Affairs) தொழில்நுட்ப பிரிவான தண்ணீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்கான விதிமுறைகளை அமைக்கிறது.  இந்திய நகரங்களில் ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது, குழாய் நீர் விநியோக அமைப்பில் (piped water supply system) உள்ள அனைத்து தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டு, குடிப்பதற்கு பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குடிப்பதற்கும், சமையலுக்கும் இந்த தண்ணீரில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். இவ்வளவு தண்ணீரை உயர் தரத்திற்குச் சுத்திகரித்து, எப்போதும் பாதுகாப்பான தண்ணீரை, சுத்தமில்லாத குழாய்கள் மூலம் விநியோகம் செய்வது அர்த்தமுள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தண்ணீர் விநியோக அமைப்பைப் பராமரிக்கவும், அவற்றை சரிசெய்யவும் நிறைய செலவாகும். இதன்மூலம், நம்மிடம் குறைந்த வளங்கள் இருப்பதால், மற்ற வீட்டுத் தேவைகளுக்காக மற்ற பயன்பாடுகளிலிருந்து குடிநீரைப் பிரிக்க வேண்டும். 


தொகுக்கப்பட்ட குடிநீர் (packaged drinking water (PDW)) முறையில், பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு மற்றும் குழாய் அல்லாத தண்ணீர் விநியோக முறையானது நன்றாக உள்ளது. பெங்களூருவின் சமீபத்திய தண்ணீர் நெருக்கடியின் மூலம் அதிகாரிகளை தண்ணீர் ஏடிஎம்களை (water ATM) வழங்க வழிவகுத்தது. டெல்லி போன்ற பிற நகரங்களிலும் இதேபோன்ற சோதனைகள் நடந்து வருகின்றன. ஆனால், அவை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.


இருப்பினும், கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான காரணங்கள் உள்ளன. சிலரிடம், தனியார் நிறுவனங்களிடம் தண்ணீர் வாங்க போதிய பணம் இல்லாமல் இருக்கும். இதில், தனியார் நிறுவனங்கள் தலைகீழ் சவ்வூடுபரவலைப் (reverse osmosis method) பயன்படுத்தி தண்ணீரை எவ்வாறு சுத்திகரிக்கிறது என்பது அறிந்ததால், உலக சுகாதார அமைப்பு (WHO) கவலையளிக்கிறது. ஏனெனில், இது தண்ணீரில் உள்ள முக்கியமான தாதுக்களை நீக்குகிறது. தண்ணீரை சுத்திகரிப்பதற்கான பிற வழிகளை நாம் பரிசீலிக்கவும், சரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் பேச வேண்டும். தொழில்நுட்பம் போன்ற விஷயங்களை ஒழுங்கமைப்பதற்கான புதிய வழிகள் உட்பட இதைச் செய்வதற்கான மலிவான வழிகளைக் கண்டறிய எங்களுக்கு கூடுதல் சோதனைகள் தேவை. தொழில்நுட்பம் மற்றும் அமைப்பின் முன்னேற்றங்கள் காரணமாக குழாய் நீர் அமைப்புகள் (Piped water supply) உருவாக நீண்ட காலம் எடுத்தது. இப்போது, தரமான பிரச்சினைகளை சரிசெய்ய தண்ணீரை வழங்க வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு மற்றும் குழாய்கள் இல்லாமல் தண்ணீரை வழங்குவதில் பரிசோதனை செய்ய முயற்சிக்க வேண்டும்.  

 

கட்டுரையாளர் பெங்களூருவில் உள்ள சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர் ஆவார்.




Original article:

Share: