2024-25 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் (FY25) முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் "முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை" (First Advance Estimates” (FAE)) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டது. முன்கூட்டிய மதிப்பீடுகள் (Advance Estimates) என்பது நிதியாண்டானது முடிவடையும் நேரத்தில் இந்தியாவின் பொருளாதார உற்பத்தி என்னவாக இருக்கும் என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் எதிர்பார்க்கும் ஒரு கணிப்பு ஆகும். கிடைக்கக்கூடிய தரவு மற்றும் கடந்த கால போக்குகளைப் பயன்படுத்தி ஆண்டு இறுதி மதிப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) இந்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இது பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தரவைப் பெறுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கணிப்பு என்ன?
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு பண அளவீடு (monetary measure) ஆகும். இது ஒரு வருடத்தில் இந்தியாவின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பைக் குறிக்கிறது. இது இந்தியப் பொருளாதாரத்தின் அளவை மதிப்பிடுகிறது.
MoSPI அமைச்சகத்தின் படி, இந்தியாவின் பெயரளவு GDP (nominal GDP) மார்ச் இறுதிக்குள் ரூ.324 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் (FY24) ஒப்பிடும்போது 9.7 சதவீத வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் அளவிற்குச் சமமான அமெரிக்க டாலரைக் கணக்கிடுவதற்கு பெயரளவு GDP பயன்படுத்தப்படுகிறது. ஒரு டாலருக்கு 85 ரூபாய் மாற்று விகிதமாக இருந்தால், நிதியாண்டு-2025 இல் இந்தியாவின் GDP $3.8 டிரில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014-ம் ஆண்டில் இந்தியாவின் மாற்று விகிதம் ஒரு டாலருக்கு 61 ரூபாயாக இருந்திருந்தால், இந்தியா இன்று $5 டிரில்லியன் பொருளாதாரமாக (சரியாக $5.3 டிரில்லியன்) ஆகியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த பெயரளவிலான GDP (nominal GDP) பட்ஜெட் மதிப்பீடுகளை விட குறைவாக உள்ளது. இந்த மதிப்பீடுகள் கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டிலும் (ரூ.328 லட்சம் கோடி) ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட முழு ஒன்றியப் பட்ஜெட்டிலும் (ரூ.326 லட்சம் கோடி) தாக்கல் செய்யப்பட்டன.
இருப்பினும், அன்றாட பயன்பாட்டில், இது "உண்மையான" மொத்த உள்நாட்டு உற்பத்தி (real GDP) ஆகும்.
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (real GDP) பணவீக்கத்தின் விளைவை பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (nominal GDP) இருந்து நீக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. பெயரளவு GDP இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கலாம். முதலில், நாடு அதிக பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யலாம். இரண்டாவதாக, பணவீக்கம் காரணமாக தற்போதுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயரக்கூடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரண்டு காரணிகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்புக்கு பங்களிக்கின்றன.
இந்தியா போன்ற ஒரு நாடு எவ்வளவு அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்துள்ளது என்பதை உண்மையான ஜிடிபி (Real GDP) வெளிப்படுத்துகிறது. இது விலை மாற்றங்களின் தாக்கத்தைத் தவிர்த்து கணக்கீடு செய்கிறது.
MoSPI அமைச்சகத்தின் படி, நிதியாண்டு-2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் உண்மையான GDP ₹184.9 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57% மட்டுமே. மீதமுள்ள 43% விலைவாசி உயர்வின் விளைவை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் பொருளாதார உற்பத்தி (GDP) மெதுவான வேகத்தில் வளர்ந்து வருவதை அட்டவணை 1 இல் உள்ள தரவு காட்டுகிறது. பெயரளவு GDP அல்லது உண்மையான GDP என்று குறிப்பிட்டிருந்தாலும் இது உண்மைதான். இதன் பொருள் பொருளாதார உற்பத்தி குறைகிறது என்று அர்த்தமல்ல. ஒரு வருடத்திலிருந்து அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் மெதுவாக வருகிறது என்று அர்த்தம்.
அட்டவணை 1
கோவிட்க்கு முந்தைய ஆண்டான 2020 ஆண்டு முதல், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (compounded annual growth rate (CAGR)) 4.8% மட்டுமே வளர்ந்துள்ளது. 1991 ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்தியா அனுபவித்த 7% சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு.
விளக்கப்படம் 1. ஆதாரம்: ஜூலை 2020 முதல் மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் அறிக்கை.
பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை, 10 சதவீதத்திற்கும் குறைவான வருடாந்திர அதிகரிப்பு சமீபத்திய காலங்களில் இந்தியாவின் செயல்திறனிலிருந்து மிகவும் வேறுபட்டது. 2003-04 மற்றும் 2018-19 க்கு இடையில், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 13.5 சதவீத விகிதத்தில் வளர்ச்சியடைந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பொருளாதாரத்தில் செலவழிக்கப்பட்ட அனைத்து பணத்தையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ள, செலவினத்தின் நான்கு முக்கிய வகைகளைப் பார்க்க வேண்டும். இந்த வகைகளை பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் நான்கு இயந்திரங்களாகச் செயல்படுகிறது.
1. மக்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் செலவழித்தல் : தொழில்நுட்ப ரீதியாக இது தனியார் இறுதி நுகர்வு செலவு (Private Final Consumption Expenditure (PFCE)) என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 60% ஆகும்.
2. சம்பளம் போன்ற தினசரி செலவுகளை சந்திக்க அரசாங்கங்கள் செய்யும் செலவுகள் : இது அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவு (Government Final Consumption Expenditure (GFCE)) ஆகும். இது மிகச்சிறியளவிலான செயல் இயக்கமாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% ஆகும்.
3. பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யும் செலவு முதலீடு : சாலைகள் அமைக்கும் அரசாங்கங்கள் அல்லது தொழிற்சாலைகள் கட்டும் நிறுவனங்கள் அல்லது கணினிகளை வாங்குவது இதில் அடங்கும். இந்த செலவு மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation (GFCF)) என்று அழைக்கப்படுகிறது. மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF) என்பது வளர்ச்சியின் இரண்டாவது பெரிய இயக்கமாகும். பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஆகும்.
4. நிகர ஏற்றுமதி அல்லது நிகர செலவினம் இந்தியர்கள் இறக்குமதி மற்றும் வெளிநாட்டவர்கள் இந்திய ஏற்றுமதியில் செலவு செய்வதால் விளைகிறது : இந்தியா வழக்கமாக ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த GDPயை இயக்கச் செயல்பாடு இழுக்கச் செய்கிறது. இதன் விளைவாக, இது ஒரு கழித்தல் அடையாளத்துடன் காண்பிக்கப்படுகிறது.

இந்த கூறுகள் ஒவ்வொன்றும் முழுமையான மற்றும் சதவீத அடிப்படையில் எவ்வாறு செய்துள்ளன என்பதை அட்டவணை 2 காட்டுகிறது.
அட்டவணை 2
தனியார் நுகர்வு தேவை அல்லது PFCE (PRIVATE CONSUMPTION DEMAND) : இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் என்ன செலவிடுகிறார்கள் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகும். இந்த வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தால், அது ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை இணைப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் முதலீடு செய்வதிலிருந்து தனியார் துறையையும் தடுக்கிறது. நடப்பு ஆண்டிற்கு, இந்த செலவு 7.3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அட்டவணையில் முக்கியமான எண் நிதியாண்டு-2020 முதல் வெறும் 4.8% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் மிகப்பெரிய செயல்பாடு 5% க்கும் குறைவாக அதிகரித்து வருகிறது என்றால், ஏப்ரல் 2019 தொடக்கத்திலிருந்து ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதமும் 4.8% ஆக இருப்பதில் ஆச்சரியமில்லை.
அரசாங்க செலவுகள் : அரசாங்கங்களை மற்ற பொருளாதார நிபுணர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவர்களின் வருமானத்தை விட அதிகமாக செலவழிக்கும் திறன் ஆகும். கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் இதைச் செய்கின்றன. பொருளாதாரத்தின் மற்ற பகுதிகள் சிரமப்படும்போது, அரசாங்கங்கள் பணத்தை கடன் வாங்கலாம் அல்லது அச்சிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், கோவிட் காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், அரசாங்கத்தின் செலவுகள் குறைவான அளவில் கூட அதிகரிக்கவில்லை. இது இந்த ஆண்டு வெறும் 4.2% ஆகவும், 2019 முதல் சராசரியாக 3.1% ஆகவும் வளர்ந்துள்ளது.
உற்பத்தித் திறனை நோக்கிய செலவினங்கள் : உற்பத்தித் திறனை நோக்கிச் செலவிடுவது பொதுவாக இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கிறது. முதலாவதாக, தனியார் வணிகங்கள் திறனை விரிவுபடுத்துகின்றன. ஏனெனில், அவை பொதுமக்களுக்கு அதிகமாக விற்க எதிர்பார்க்கின்றன. இரண்டாவதாக, அரசாங்கங்கள் பௌதீக உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவை அதிகரிக்கின்றன. இந்த ஆண்டு, செலவு 6.3% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நீண்ட காலமாக, இது ஆண்டுக்கு 5.3% மட்டுமே அதிகரித்துள்ளது. உண்மையில், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 2014 ஆண்டு முதல் முதலீட்டு வளர்ச்சி குறைந்து வருவதைக் காட்டுகிறது. இது ஆச்சரியமல்ல. ஏனென்றால், தனியார் நுகர்வு மீண்டு வராவிட்டால், வணிகங்கள் வரி சலுகைகளைப் பொருட்படுத்தாமல், புதிய திறனில் முதலீடு செய்யாது.
நிகர ஏற்றுமதி : எந்தவொரு குறிப்பிட்ட ஆண்டிற்கான தரவு எதிர்மறையான அடையாளத்துடன் காண்பிக்கப்படும்போது, இந்தியர்கள் ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. பெரும்பாலான ஆண்டுகளில், நிகர ஏற்றுமதி எதிர்மறை எண்ணாக உள்ளது. எனவே, இந்த பிரிவில் எதிர்மறை வளர்ச்சி விகிதங்கள் ஒரு நல்ல வளர்ச்சியாகும். நடப்பு ஆண்டிலும், சமீப காலத்திலும் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இந்த இடைவெளி குறைந்துள்ளது.
சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் குடிமக்களுக்கும் ஒரு உண்மையான சோதனையை வழங்குகின்றன. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகை வெல்லும் வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளது. ஆனால், மேலே உள்ள தரவு பகுப்பாய்வு வெளிப்படுத்துவது போல, இந்தியாவின் சமீபத்திய அதிகரித்த வளர்ச்சி விகிதங்களின் பெரும்பகுதி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறிப்பிடத்தக்க பகுதியாக உருவாக்கப்பட்ட ஒரு புள்ளிவிவர மாயையாகும். இந்த மாயை 2020-21 ஆண்டில் GDP சுருக்கத்தின் விளைவாக குறைந்த GDP அடிப்படையால் உருவாக்கப்பட்டது.
2019-20 (கோவிட்க்கு முந்தைய ஆண்டு) உட்பட சற்று நீண்ட காலத்தை நாம் பார்க்கும்போது, இந்தியாவின் உண்மையான பொருளாதாரம் ஆண்டுக்கு 5%க்கும் குறைவாகவே வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது. இது 2047-ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்குத் தேவையான விகிதத்தில் பாதியாகும்.
Original article: