உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்த பாரத்போல் (Bharatpol) தளம், நாடுகடந்த குற்றங்களை விசாரிக்க எவ்வாறு உதவும்? - மகேந்திர சிங் மன்ரல்

 பாரத்போல் (Bharatpol) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படும்? அது பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு எவ்வாறு உதவும்? 


உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஜனவரி 7, செவ்வாய்க்கிழமை அன்று  “பாரத்போல்” (Bharatpol) தளத்தை தொடங்கிவைத்தார். இது சட்ட விசாரணை அமைப்புகளுக்கான சர்வதேச ஒத்துழைப்பை சீராக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


பாரத்போல் என்பது சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவதற்காக ஒன்றிய புலனாய்வு அமைப்பால் (Central Bureau of Investigation (CBI)) உருவாக்கப்பட்ட தளமாகும். இந்த தளம் ஒன்றிய மற்றும் மாநில அமைப்புகளை பன்னாட்டு முகமையுடன் (Interpol) விரைவாக தொடர்பு கொள்ளவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் அனுமதிக்கும்.

 

பாரத்போல் (Bharatpol) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படும்? அது பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு எவ்வாறு உதவும்? ஒன்றிய புலனாய்வு  அமைப்பு அதை ஏன் உருவாக்கியது? 


ஒன்றிய புலனாய்வு  அமைப்பு, பன்னாட்டு முகமைக்கான இந்தியாவின் தேசிய பணியகமாகும். இந்திய சட்ட செயலாக்கம் 195 நாடுகளில் உள்ள பன்னாட்டு முகமைகளுடன் இணைக்கிறது. தற்போது, ​​ஒன்றிய புலனாய்வு  அமைப்பு, பன்னாட்டு முகமை அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளுடன் ஒன்றிய அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறை கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைநகல் மூலம் தொடர்பு கொள்கின்றன. இதனால், அவர்களின் விசாரணையில் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது.

 

பாரத்போல், சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பை மிகவும் தடையற்றதாகிறது. 


சைபர் குற்றங்கள், நிதிக் குற்றங்கள், ஆன்லைன் தீவிரமயமாக்கல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் போன்ற சர்வதேச குற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்த இணையதளத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.  இந்த வழக்குகளின், விசாரணைகளுக்கு சர்வதேச உதவி தேவைப்படுகிறது.


ஐந்து முக்கிய அம்சங்கள்: 


ஒருங்கிணைந்த தளம் (Unified Platform): இந்த தளம் ​​ஒன்றிய புலனாய்வு அமைப்பை பன்னாட்டு முகமைகளை (Interpol-NCB-New Delhi) இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளுடனும், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்கள் வரை ஒருங்கிணைக்கிறது. 


எளிமைப்படுத்தப்பட்ட கோரிக்கை செயல்முறை (Simplified Request Mechanism): தரப்படுத்தப்பட்ட படிவங்களைப் பயன்படுத்தி 195 பன்னாட்டு முகமை உறுப்பு நாடுகளிடம் இருந்து சர்வதேச உதவியை விரைவாகவும் எளிதாகவும் பெற இந்த தளம் காவல்துறை அதிகாரிகளை அனுமதிக்கிறது. 


விரைவான தகவல் பரப்புதல் (Rapid Information Dissemination): இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களுடனும் 195 நாடுகளின் குற்றவியல் தகவல்களை விரைவாகப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.


பன்னாட்டு முகமையின் உடனடி அறிவிப்பிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துதல் (Increase utilisation of Interpol notices): இந்த  தளம் சிவப்பு வண்ண உடனடி அறிவிப்புகள் (Red Corner Notice)  மற்றும் பிற  பன்னாட்டு முகமை அறிவிப்புகளை உருவாக்குவதை எளிதாக்கும். இது உலகம் முழுவதும் உள்ள குற்றங்கள், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் சொத்துக்களை கண்காணிக்க உதவும்.


திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி (Capacity Building and Training): இந்த இணையதளம் தொடர்புடைய ஆவணங்கள், வார்ப்புருக்கள் (templates) மற்றும் பயிற்சி ஆதாரங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் வெளிநாடுகளில் விசாரணை நடத்தவும், பன்னாட்டு முகமை மூலம் வெளிநாட்டு உதவியை பெறவும் உதவும்.


புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தப்பியோடியவர்களை பிடிக்க இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று கூறினார். உலகளாவிய சவால்கள் மற்றும் உள் அமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாரத்போல் முக்கியத்தை  அவர் விளக்கினார். பன்னாட்டு முகமையில் உள்ள 195 நாடுகளில் இருந்து ஒன்றிய மற்றும் மாநில முகமைகள் தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் பெறவும் புதிய தளம் உதவும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக விளக்கினார். 


மேலும், இதில் இணைத்தல் (Connect), பன்னாட்டு முகமை அறிவிப்புகள் (INTERPOL Notices), குறிப்புகள் (References), தொலைப்பரப்பு (Broadcast) மற்றும் ஆதாரங்கள் (Resources) என ஐந்து முக்கிய தொகுதிகள் உள்ளன.  

"இணைத்தல் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க முகவர்களும் பன்னாட்டு முகமையின் உடன் நெருக்கமாக செயல்படும் வாய்ப்பு உருவாகும். மேலும், இந்த அமைப்பு விரைவாகவும் பாதுகாப்பாகவும் பன்னாட்டு முகமை அறிவிப்புகளுக்கான கோரிக்கைகளை அனுப்பும். இது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள குற்றவாளிகளைக் கண்டறிய உதவும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார். 


பன்னாட்டு முகாமையில் உள்ள 195 உறுப்பு நாடுகளின் உதவிக்கான கோரிக்கைகள் தொலைப்பரப்பு தொகுதியில் கிடைக்கும். பின்பு, ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும் நிர்வகிக்கவும் ஆதாரங்கள் தொகுதியானது பயன்படுகிறது.




Original article:

Share: