வளர்ந்த இந்தியா இலக்கை அடைவதற்கு அதிகரித்து வரும் பாதுகாப்புத் துறை சாகசங்கள் முக்கியமானதாகிறது. -சௌமியா காந்தி கோஷ், ஃபால்குனி சின்ஹா

 இந்தியாவின் பாதுகாப்புத் துறை அதன் கடந்த கால வரம்புகளைத் தாண்டி முன்னேற்றம் அடைந்து வருகிறது. மேலும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மையை ஆதரிப்பதில் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல்கள், இந்தியாவின் பாதுகாப்புத் துறையை இறையாண்மை உறுதிப்பாட்டின் புதிய மையமாகக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ஒரு புதிய, சுயசார்பு இந்தியா (Aatmanirbhar Bharat) இராஜதந்திரக் கோட்பாடு மற்றும் பொருளாதார தத்துவத்தில் ஒரு டெக்டோனிக் மறுசீரமைப்பையும் (Tectonic Reorientation) பிரதிபலிக்கிறது.


Tectonic Reorientation (டெக்டானிக் மறுநிலைமை) என்றால் என்ன?


ஒரு நாட்டின் பொருளாதார கொள்கையில் ஏற்படும் பெரிய மாற்றத்தை ‘டெக்டானிக் மறுநிலைமை’ என்று அழைக்கலாம்.


இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் கடந்த 10 ஆண்டுகளில் 33 மடங்கு உயர்ந்துள்ளன. 2016 நிதியாண்டில் $113 மில்லியனிலிருந்து 2025-ஆம் நிதியாண்டில் $2.8 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவை சர்வதேச பாதுகாப்பு விநியோகச் சங்கிலியில் ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், உலகளாவிய ஆயுத ஏற்றுமதியின் அடுக்கு படிநிலையில் ஒரு இடத்திற்கான நம்பகமான போட்டியாளராகவும் நிலைநிறுத்தியுள்ளது.  உலக வங்கியின் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Stockholm International Peace Research Institute (SIPRI)) அறிக்கையின்படி, உலகளாவிய பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு, நிதியாண்டு 14-ல் 4%-லிருந்து 2023 நிதியாண்டில் 10% ஆக உயர்ந்துள்ளது.


இந்த மிகப்பெரிய முன்னேற்றம், இந்தியாவின் இராணுவ-தொழில்துறை வளாகத்தின் கட்டமைப்பு மறுசீரமைப்பை உலக அளவில் போட்டியிடும் நிறுவனமாக மாற்றியுள்ளது. விநியோகச் சங்கிலிகள் 80 கூட்டாளி நாடுகளில் விரிவடைகின்றன. இந்தியாவின் போர்-தொழில்துறை வளாகத்தின் இந்த மறுசீரமைப்பு இரட்டை-முன் அணுகுமுறையால் (dual-front approach) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற இடங்களில் 11 முக்கிய இடங்களை உள்ளடக்கிய முக்கியமான பாதுகாப்பு மண்டலங்களை இந்தியா அமைத்துள்ளது. இந்த மண்டலங்கள் ஏற்கனவே ₹8,658 கோடி உண்மையான முதலீடுகளை ஈட்டியுள்ளன, 


மேலும், 253 ஒப்பந்தங்கள் பிப்ரவரி 2025ஆம் ஆண்டுக்குள் ₹53,439 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கு வழிவகுக்கும். மேலும், இந்தியா இப்போது வேகமான மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதில் துல்லியமான ஆயுதங்கள், பிரம்மோஸ் போன்ற சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் புதிதாக சோதிக்கப்பட்ட Bhargavastra போன்ற ஸ்மார்ட் ஆண்டி-ட்ரோன் அமைப்புகள் ஆகியவை அடங்கும். இது இந்தியா நவீன, அடுத்த தலைமுறை போர் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்கிறது என்பதைக் காட்டுகிறது. மேலும், இந்தியா தற்போதைய வேகத்தில் வளர்ந்து கொண்டே இருந்தால், அதன் பாதுகாப்பு ஏற்றுமதி 2030-ஆம் ஆண்டிற்குள் $5 பில்லியன்களைத் தாண்டும்.


இந்த தொழில்துறை வளர்ச்சியின் சங்கமம், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கு ஒன்றிய அரசு ₹1.12 லட்சம் கோடி ஒதுக்கீட்டையும், தனியார் துறைக்கு ₹27,000 கோடிக்கும் அதிகமான நிதியையும் ஒதுக்கியுள்ளது. இது வாங்குபவர்-விற்பனையாளர் சமச்சீரற்ற தன்மையிலிருந்து கூட்டு மேம்பாட்டு முன்னுதாரணத்திற்கு மாறுவதைக் குறிக்கிறது. இந்த மாற்றம் உலகளாவிய பாதுகாப்பு மதிப்புச் சங்கிலியில், குறிப்பாக விண்வெளி தளங்கள், ஆளில்லா அமைப்புகள் மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை உயர்த்தக்கூடும்.


இந்தியாவின் 2026-ஆம் ஆண்டு பாதுகாப்பு வரவு செலவு அறிக்கை ஆண்டுக்கு ஆண்டு 9.53% வலுவான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது மற்றும் நிதியாண்டிற்கான மொத்த யூனியன் வரவு செலவு அறிக்கை 13.45% ஆகும். இது விரிவான இராணுவ நவீனமயமாக்கல் மற்றும் தேசிய பாதுகாப்பு தயார்நிலையை நோக்கிய ஒரு ராஜதந்திர மறுசீரமைப்பைக் குறிக்கிறது.


ரூ.1.80 லட்சம் கோடி முதலீட்டு ஒதுக்கீடு (capital outlay) உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை நோக்கிய திட்டமிட்ட திருப்பத்தை பிரதிபலிக்கிறது. இது இந்திய கடலோர காவல்படையின் (Indian Coast Guard) முதலீட்டு வரவு செலவு அறிக்கையில் 43% உயர்வு மற்றும் எல்லை சாலை அமைப்புக்கு (Border Roads Organisation (BRO)) ரூ.7,146 கோடி குறிப்பிடத்தக்க ஒதுக்கீடு ஆகியவற்றால் வலுப்பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (defence R&D) 12% அதிகரிப்பை கண்டது. பாதுகாப்புச் சிறப்பிற்கான புதுமைகள் (Innovations for Defence Excellence (iDEX))  உடன் புதுமையான தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை முன்னேற்றுதல் (Acing Development of Innovative Technologies with iDEX (ADITI)) போன்ற திட்டங்கள் மூலம் புதுமைக்கான ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைக்கப்பட்ட நிதி பாதை இந்தியாவின் பாதுகாப்பு துறை பார்வையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது தொழில்நுட்ப ஊடுருவல், இராஜதந்திர சுதந்திரம் மற்றும் பொருளாதார பெருக்கு விளைவுகளால் வரையறுக்கப்படுகிறது.


ஒரு காலத்தில் அதன் அளவு மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சிகளுக்காகப் பாராட்டப்பட்ட சீனாவின் பாதுகாப்பு அமைப்பு, இப்போது அதன் சொந்த பிரச்சினைகளுடன் போராடி வருகிறது. களிமண் கால்களைக் கொண்ட ஒரு ராட்சதரைப் போல, பெய்ஜிங்கின் பாதுகாப்பு நிறுவனம் அதன் தொழில்நுட்ப சாதனைகளை திறமையுடன் வெளிப்படுத்தியுள்ளது.  ஆனால், மேற்பரப்பிற்குக் கீழே அத்துமீறல், ரகசியம் மற்றும் கடுமையான இராஜதந்திரத்தின் விரிசல்கள் உள்ளன. இந்தியா-பாகிஸ்தான் மோதல் தற்போதைக்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சீன பாதுகாப்பு பங்குகள் கடுமையான திருத்தத்திற்கு உள்ளாகி வருவதில் ஆச்சரியமில்லை. அவற்றின் பாதுகாப்பு அமைப்புகளின் திறன் குறித்து இப்போது கடுமையான சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.


SIPRI  கூற்றுப்படி, 2020 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கு இடையில் உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 5.9% ஆக இருந்தது. இது முன்பை விடக் குறைவு மற்றும் ஒரு ஆழமான சிக்கலைக் காட்டுகிறது. சீனா தனது ஆயுதங்களை வாங்க சில நாடுகளை அதிகமாகச் சார்ந்துள்ளது. அதன் ஆயுத ஏற்றுமதியில் 63%க்கும் அதிகமானவை ஒரு சிறிய குழு வாடிக்கையாளர்களுக்கு, முக்கியமாக பாகிஸ்தானுக்குச் செல்கின்றன. இது ஒரு பெரிய உலகளாவிய ஆயுத சக்தியாக மாறுவதற்கான சீனாவின் கனவை ஆபத்தானதாக ஆக்குகிறது. ஏனெனில், அது பெரும்பாலும் நிலையற்ற, ஒரு கூட்டு நாட்டை மட்டுமே நம்பியுள்ளது.


சீனா தனது வலிமையைக் காட்ட பெரிய மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்தியா வேறுபட்ட பாதையை எடுத்து வருகிறது. இந்தியா வலுவான மற்றும் நம்பகமான அமைப்புகளை உருவாக்குவதில், நம்பகமான கூட்டாண்மைகளை உருவாக்குவதில் மற்றும் ஏற்றுமதிக்கு அதன் ஆயுதங்களை உருவாக்குவதில் மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதில் கவனம் செலுத்துகிறது.


இந்தியாவின் புதுப்பயணம் (recalibration) அதன் புவியியல் கூட்டுறவுகளின் (geopolitical partnerships) மறுசீரமைப்பில் தெளிவாகக் காணப்படுகிறது. கடந்த காலத்தில் ரஷ்யவால் உருவாக்கப்பட்ட ஆயுத அமைப்புகள் மீது இந்தியா பெரிதும் சார்ந்திருந்தாலும், தற்போது இந்தியா அதிகமாக இணைந்த மேம்பாடு மற்றும் உரிமம் பெற்ற உற்பத்தி ஒப்பந்தங்கள் ஆகியவற்றை தொழில்நுட்பமாக முன்னேறிய, அணிசேரா நாடுகளான (non-aligned states) அர்மேனியா, ஐக்கிய அரபு அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 


இதன்மூலம், இந்தியாவின் பாதுகாப்பு பொருட்கள் விநியோகச் சங்கிலி (defence supply chains) பெரும் சக்திகள் சார்ந்த சிக்கல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு, இந்தியாவின் தன்னிச்சையான மேலும் நம்பகமாகவும் செயல்படக்கூடியதாகவும் உருவாகிறது. இந்நிலையில், உற்பத்தி தொடர்பான ஊக்கத்திட்டம் (Production Linked Incentive (PLI))  மற்றும் உள்நாட்டு நேரடி வெளிநாட்டு முதலீடு (Foreign Direct Investment (FDI)) துறைகளில் 74% வரை  தானாக அனுமதிக்கப்படும் வழி (automatic route) மூலம் செய்யப்படும் முதலீடுகள் ஒன்றிணைந்து, பாதுகாக்கும் நோக்கில் அமைத்து மற்றும் அதன் செயல்பாட்டில் சுதந்திரமாக இயங்கும் முதலீட்டு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. 


உலகளாவிய பாதுகாப்பு செலவுகள் பல நாடுகள் மோதும் சூழ்நிலை (multipolar frictions) காரணமாக தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இந்தியா அவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தீவிரமாகப் பங்கேற்பாளாராகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு துறை ஒரு செலவு தரும் அவசர தேவையாக இல்லாமல், வருமானம் தரும், வேலை வாய்ப்பு அதிகமான, மற்றும் இராஜதந்திர ரீதியாக முக்கியமான துறையாக மாறி, வர்த்தகச் சேர்ந்துணர்வுகள் மற்றும் பாதுகாப்பு வரைபடங்களை (security cartographies) மாற்றக்கூடியதாகிறது.


இந்தியாவின் பாதுகாப்புத் துறை அதன் வரலாற்றுத் தடைகளைத் தாண்டி, நிலையற்ற, நிச்சயமற்ற மற்றும் பெருகிய முறையில் பாதுகாப்பான உலகில், பெரிய பொருளாதார நிலைத்தன்மை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய இராஜதந்திரதத்தை நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய பங்கை ஏற்றுக்கொள்கிறது. அரசாங்கம் வளர்ந்த இந்தியா@2047 என்ற தனது தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதால், பாதுகாப்பு எந்திரம் சமகால பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக பலப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், புதுமை சார்ந்த வளர்ச்சியின் இயந்திரமாகவும் நிலைநிறுத்தப்பட்டு, புவிசார் இராஜதந்திரதத்தை தொழில்துறை முன்னேற்றத்துடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது. இது இந்திய பாதுகாப்புப் படைகளுக்குச் செலுத்தும் புகழுரையாக (tribute) இருக்கலாம்.


சௌமியா காந்தி கோஷ் 16-வது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், State Bank of India குழுவின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார். ஃபால்குனி சின்ஹா State Bank of India நிறுவனத்தின் பொருளாதார நிபுணராகவும் உள்ளார்.

                   

Original article:
Share:

நான்காவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்கிறது. ஆனால் குறுகிய காலக் கண்ணோட்டம் தெளிவாக இல்லை.

 முதலீடுகளில் ஏற்பட்டுள்ள கணிசமான அதிகரிப்பின் நிலைத்தன்மை குறித்து கேள்விகள் உள்ளன.


இந்திய பொருளாதாரம் 2024-25ன் நான்காம் காலாண்டில் வலுவாக 7.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது பெரும்பாலான எதிர்பார்ப்புகளை தாண்டிய வளர்ச்சியாகும். முழு ஆண்டிற்கான வளர்ச்சி இப்போது தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (National Statistics Office) 6.5 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அந்த தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் முந்தைய மதிப்பீடுகளுக்கு ஏற்பவே உள்ளது. பொருட்களின் மீதான நிகர வரிகளை நீக்கிவிட்டு பார்த்தால், பொருளாதாரத்தின் மதிப்பு சேர்க்கை நான்காம் காலாண்டில் 6.8 சதவீதம் வளர்ந்துள்ளது. மேலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சியில் கணிசமான முன்னேற்றம் இருந்தபோதிலும்  இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி 5.6 சதவீதமாக சரிந்ததால் வளர்ச்சி வேகம் கடுமையாக குறைந்தது. இந்திய பொருளாதாரம் 2024-25 நிதியாண்டில் கணிசமாக மந்தமாகியுள்ளது. பெயரளவு உள்நாட்டு உற்பத்தியும் (Nominal GDP) 10 சதவீதத்திற்கு குறைவாக வந்துள்ளது. அடுத்த ஆண்டிற்கான கணிப்புகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.


துறை வாரியாக பிரிக்கப்பட்ட தரவுகள், சாதகமான வானிலை மற்றும் லாபகரமான விலைகள் காரணமாக விவசாயம் தொடர்ந்து ஆரோக்கியமான வேகத்தில் விரிவடைந்து வருவதைக் காட்டுகிறது. இது விவசாயிகளை அதிக பரப்பளவில் விதைக்கத் தூண்டியது. 4-வது காலாண்டில் 5.4 சதவீத வளர்ச்சி, இந்தத் துறையின் முழு ஆண்டு வளர்ச்சியை 4.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது . இது அதன் நீண்டகால சராசரியை விட அதிகமான வளர்ச்சியாகும். இது கிராமப்புற நுகர்வுக்கு நல்ல அறிகுறியாகும். இருப்பினும், தொழில்துறை மந்தநிலையுடனே தொடர்கிறது. உற்பத்தித்துறை பாதிப்பு இதற்கு முக்கிய காரணியாகும். இந்த துறை 2024-25ல் 4.5 சதவீதம் வளர்ந்தது. முந்தைய ஆண்டின் 12.3 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது. எனினும், கட்டுமானத்துறை தொடர்ந்து நிலையான வளர்ச்சியைக் கண்டது. 


2024-25 நிதியாண்டில் 9.4 சதவீதம் விரிவடைந்தது, முந்தைய ஆண்டு10.4 சதவீத வளர்ச்சியைப் பெற்றது. சேவைத் துறையும் சிறிது சரிவைக் கண்டது, வர்த்தகம்,உணவகங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மற்றும் நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் பிரிவுகள் முன்பை விட மெதுவான வேகத்தில் வளர்ந்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளும் கடந்த ஆண்டு தனியார் நுகர்வு 7.2 சதவீதமாக வளர்ந்ததாகக் காட்டுகிறது. கடந்த ஆண்டு மக்களின் செலவு தனியார் நுகர்வில் 7.2% அதிகரித்துள்ளதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவு காட்டுகிறது. ஆனால், இது இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் (இந்தியா இன்க்) கூறியதற்கு முழுமையாக பொருந்தவில்லை . ஆண்டு முழுவதும் பலவீனமான தேவை மற்றும் சுருங்கி வரும் நடுத்தர வர்க்கம் குறித்து அவர்கள் கவலைப்பட்டனர். நான்காவது காலாண்டில் முதலீடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் நிலைத்தன்மை குறித்தும் கேள்விகள் உள்ளன. சமீபத்திய தரவுகளின்படி மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 9.4 சதவீதமாக வளர்ந்தது.


குறுகிய கால எதிர்பார்ப்பு தெளிவாக இல்லை. வரும் காலாண்டுகளில் பொருட்களின் குறைந்த விலைகள் பணவீக்கத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சில நிபுணர்கள் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை காரணமாக முதலீடு குறையக்கூடும் என்று கருதுகின்றனர். இருப்பினும், அரசாங்கம் வரி குறைப்புகளை வழங்கினால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தால், அது மக்கள் அதிகமாகச் செலவிட உதவும். ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee) வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. பணவீக்கம் மத்திய வங்கியின் இலக்குகளின் அளவுகளுக்கு ஏற்ப இருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு வலுவான வளர்ச்சிக்கான நம்பிக்கைகள் குறைவாகவே உள்ளன. 2025-26-ஆம் ஆண்டில் பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது. மேலும், சில நிபுணர்கள் இது 6.2% முதல் 6.5%வரை இருக்கும் என்று கருதுகின்றனர். எனினும், முதலீடுகளின் கணிசமான முன்னேற்றத்தின் நிலைத்தன்மை குறித்து கேள்விகள் உள்ளன.


Original article:
Share:

பனிப்பாறை இழப்புக்கான நேரடி காரணம் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் (Paris climate agreement) ஏற்றுக்கொள்ளப்பட்டபடி, உலக வெப்பநிலை உயர்வை 1.5°C-ஆகக் கட்டுப்படுத்துவது 54% இரண்டு மடங்கு அதிக பனிப்பாறையை பாதுகாக்க முடியும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.


• ஸ்விஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் (Alps) உள்ள பிளாட்டன் (Blatten) கிராமத்தில் ஒரு பனிப்பாறையின் பெரும் பகுதி பள்ளத்தாக்கில் சரிந்து, மலையடிவாரத்தில் உள்ள ஒரு மலைக்கிராமத்தின் பெரும்பகுதியை புதைத்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த ஆய்வு வெளியானது.


• இந்த ஆய்வு உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகளை ஆய்வு செய்தது.  மேலும், அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள மிகப் பெரிய பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளன. இன்று வெப்பநிலை அதிகரிப்பதை நிறுத்தினாலும், உலகின் பனிப்பாறைகள் 2020ஆம் ஆண்டின் அளவை விட 39% இழக்கும் என்றும், அது கடல் மட்டம் 113 மிமீ உயரத்திற்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வு எச்சரித்தது.


• ஆய்வின் படி, மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஸ்காண்டிநேவியாவில் உள்ள பனிப்பாறைகள், மேற்கு கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள ராக்கி மலைகள் மற்றும் ஐரோப்பிய ஆல்ப்ஸ் ஆகியவை அடங்கும். ஸ்காண்டிநேவியாவில், 2°C வெப்பம் உயர்வதால் எந்த பனிப்பாறை பனியும் மீதமிருக்காது. அதே நேரத்தில் ராக்கீஸ் மற்றும் ஐரோப்பிய ஆல்ப்ஸ் அதே அளவிலான வெப்பமடைதலில் வெறும் 10-15% பனிப்பாறைகளை மட்டுமே மீதமிருக்கும்.


உங்களுக்குத் தெரியுமா?:


• இந்திய பனிப்பாறைகள், குறிப்பாக மேற்கு தெற்காசியாவில் உள்ளவை. தற்போதைய வெப்பமயமாதலுடன் தங்கள் பனியில் சுமார் 5% இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த பனிப்பாறைகள் மிகவும் உணர்திறன் கொண்டவை. உலகம் 0.1°C மட்டுமே வெப்பமடைந்தால் (1.5°C முதல் 3°C வரை), பனிப்பாறை இழப்பு விரைவாக அதிகரிக்கிறது. உலகளவில், பனிப்பாறைகள் ஒவ்வொரு 0.1°C அதிகரிப்புக்கும் சுமார் 2% அதிக பனியை இழக்கின்றன. மேலும், இந்தியாவின் சில பகுதிகளில் இழப்பு இன்னும் வேகமாக உள்ளது.


• இந்தியாவின் முக்கிய நதிகளான கங்கை, சிந்து மற்றும் பிரம்மபுத்ரா ஆகியவை வட இந்தியா, வடகிழக்கு மற்றும் இந்தோ-கங்கை சமவெளிகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவுகின்றன. இந்து குஷ் இமயமலையில், வெப்பநிலை 2°C அதிகரித்தால் 2020ஆம் ஆண்டு முதல் 25% பனி மட்டுமே இருக்கும். இதைக் கண்டறிய, 10 நாடுகளைச் சேர்ந்த 21 விஞ்ஞானிகள் எட்டு வெவ்வேறு பனிப்பாறை மாதிரிகளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள 2,00,000க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் வெவ்வேறு வெப்பமயமாதல் சூழ்நிலைகளில் எவ்வாறு பனியை இழக்கக்கூடும் என்பதை ஆய்வு செய்தனர்.


• இந்த ஆய்வு நூற்றுக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கிய விரிவான கணினி (computer simulations) உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தியது. சில பனிப்பாறைகள், குறிப்பாக துருவப் பகுதிகளில், இன்று நிகழும் காலநிலை மாற்றங்களுக்கு முழுமையாக எதிர்வினையாற்ற 1,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அது காட்டுகிறது.


Original article:
Share:

நகர்ப்புற சவால் நிதி -குஷ்பு குமாரி

 நகரமயமாக்கல் என்றால் என்ன?, நகர்ப்புற சவால் நிதியம் (Urban Challenge Fund) அதனுடன் தொடர்புடைய சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறது? நகரமயமாக்கலுடன் தொடர்புடைய முக்கியமான சொற்கள் யாவை?, நகராட்சி நிதிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கை நகர்ப்புற நிர்வாகத்தின் தற்போதைய நிலையை எவ்வாறு வெளிப்படுத்துகிறது?


தற்போதைய செய்தி


2025-26-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நகரங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுதல்’ (Cities as Growth Hubs), ‘நகரங்களை ஆக்கப்பூர்வமாக மறுவடிவமைப்பு செய்தல்’ (Creative Redevelopment of Cities) மற்றும் ‘நீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல்’ (Water and Sanitation) போன்ற திட்டங்களை செயல்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதியை அரசாங்கம் உருவாக்கும் என்று அறிவித்தார்.



முக்கிய அம்சங்கள்:


1. நகர்ப்புற சவால் நிதி (Urban Challenge Fund) மூன்று அம்சங்களை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, நகரங்களை பொருளாதார வளர்ச்சியின் உற்பத்தித்திறன் மிக்க மற்றும் திறமையான மையங்களாக மாற்றுவது (வளர்ச்சி மையங்களாக நகரங்கள்); இரண்டாவதாக, அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் மேம்படுத்துவது மற்றும் மறுவளர்ச்சி செய்வது (நகரங்களின் ஆக்கப்பூர்வ மறுவளர்ச்சி), மூன்றாவதாக, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது (நீர் மற்றும் சுகாதாரம்) போன்றவையாகும்.


2. முதல் வருடத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்ட இந்த நிதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள மிக முக்கியமான சவால்களை நிவர்த்தி செய்ய முயற்சி செய்கிறது.


3. அரசாங்கம் திட்டங்களுக்கு 25 சதவீத நிதியை நகர்ப்புற சவால் நிதி வழங்கும். "இந்த நிதி வங்கிக்கு ஏற்ற திட்டங்களின் செலவில் 25 சதவீதம் வரை நிதியுதவி அளிக்கும். குறைந்தபட்சம் 50 சதவீத செலவு பத்திரங்கள், வங்கிக் கடன்கள் மற்றும் பொது தனியார் கூட்டாண்மை (Public Private Partnership (PPP)) மூலம் நிதியளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்படுகிறது. 2025-26-ஆம் ஆண்டிற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளது" என்று நிதி அமைச்சர் கூறினார்.


4. இந்த நிதியின் கீழ், அரசாங்கம் ரூ.10,000 கோடி வழங்க திட்டமிடும் அதே வேலையில், நகரங்கள் மீதமுள்ள ரூ.40,000 கோடியை நகராட்சி பத்திரங்களை வெளியிடுவது, பொது தனியார்  கூட்டாண்மைகளில் இணைவது மற்றும் கடன் வாங்குவதன் மூலம் பெற வேண்டும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.


5. ‘நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுவடிவமைப்பு’ (creative redevelopment of cities) என்பதன் கீழ், அளவிலான நெரிசல் உள்ள தற்போதைய நகரங்களை புதுப்பிக்க (refurbished) முடியும் . இந்த நிதி, 2023-2024-ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் இருந்து ரூ.10,000 கோடி நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை (Urban Infrastructure Development Fund (UIDF)) மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, இந்த நிதி நகரங்கள் சந்தை நிதியை திரட்ட ஊக்குவிக்கும்.

நகரமயமாக்கல் (Urbanisation) என்றால் என்ன?


நகரமயமாக்கல் என்பது ஒரு சமூகம் கிராமப்புறங்களிலிருந்து பெரும்பாலும் நகர்ப்புறங்களுக்கு பரிணமிக்கும்போது ஏற்படும் மாற்றத்தின் செயல்முறையாகும். இது நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் நாட்டின் மக்கள்தொகையின் விகிதத்தின் அதிகரிப்பை உள்ளடக்கியது. இது நகரங்கள் மற்றும் நகரங்களின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. கூடுதலாக, இது நகரங்களின் விரிவாக்கம் மட்டுமல்லாமல், அவற்றின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களையும் உள்ளடக்கியது.


இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு (Indian Census) 'நகர்ப்புற' பகுதிகளின் இரண்டு வகைகளை அடையாளம் காட்டுகிறது:


1. சட்டப்பூர்வ நகரங்கள் (Statutory towns) - இவை நகராட்சி நிறுவனம் அல்லது நகராட்சி குழு போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட  இடங்களாகும்.


2. மக்கள் தொகை கணக்கெடுபின்படி-  அனைத்தும் நகரங்களும் இந்த 3 நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்:


a) குறைந்தபட்சம் 5000 பேர் கொண்ட குடியிருப்பாளர்கள் இருக்க வேண்டும்.


b) ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் குறைந்தபட்சமாக 400 நபர்கள் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும்.


c) ஆண் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளில் பணிபுரிய வேண்டும்.




நகரமயமாக்கலுடன் தொடர்புடைய முக்கிய சொற்கள்

நகர்ப்புற கூட்டமைப்புகள் (Urban agglomerations) என்பது ஒரு நகரம் மட்டுமல்ல, அதை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் செயல்பாட்டு தொடர்புகளைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நகரங்களையும் உள்ளடக்கிய பரந்த பகுதிகளும் அடங்கும்.

பெருநகரங்கள் (Megacities) என்பது மக்கள்தொகை கொண்ட நகரங்கள், பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இடமாகும். போக்குவரத்து நெரிசல், போதுமான வீட்டுவசதி இல்லாதது மற்றும் நெருக்கடியான உள்கட்டமைப்பு போன்ற அவற்றின் அளவு காரணமாக இந்த நகரங்கள் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றன.

Gentrification (ஜென்ட்ரிபிகேஷன்) என்பது அந்த பகுதியில் முதலீடு மற்றும் வசதியான வர்க்கங்களின் வருகையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் இடம்பெயர்ந்த ஒரு இடம் அல்லது அந்தப் பகுதியில் மாற்றத்தைக் குறிக்கிறது.

நகர்ப்புற விரிவாக்கம் (Urban Sprawl) என்பது நகரங்கள் மற்றும் நகரங்களின் திட்டமிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தைக் குறிக்கிறது. இதன் காரணமாக நகர்ப்புறங்களை சுற்றியுள்ள கிராமப்புற அல்லது வளர்ச்சியடையாத பகுதிகள் ஆக்கிரமிப்பு (encroachment) செய்யப்படுகின்றன.


நகர்ப்புற விரிவாக்கத்தினால் ஏற்படும் சவால்கள்


1. டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் முக்கிய பிரச்சனைகளாக அதிக மக்கள்தொகை, போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை, வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகும். அனைவருக்கும் போதுமான தண்ணீர், கழிப்பறைகள், போக்குவரத்து அல்லது சுகாதாரப் பராமரிப்பு இல்லை, எனவே சேவைகள் சிறப்பாக செயல்படவில்லை, மேலும் சுற்றுச்சூழல் மோசமடைந்து வருகிறது.


2. கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். சமூக சமத்துவமின்மை (Social inequality) ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் பெரும்பாலும் வளர்ச்சி வாய்ப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றன.


3. தனியார் முதலீட்டின் பற்றாக்குறை அரசாங்கத்திற்கு  முக்கிய கவலையாக உள்ளது. தற்போது, ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் நகர்ப்புற உள்கட்டமைப்பில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக நிதியளிக்கின்றன. அதே சமயம் நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் (Urban Local Bodies (ULB)) தங்கள் சொந்த உபரி வருவாய் மூலம் 15 சதவீதம் நிதியளிக்கின்றன. இந்திய நகரங்களின் உள்கட்டமைப்புத் தேவைகளில் 5 சதவீதம் மட்டுமே தற்போது தனியார் மூலங்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது.


நகராட்சி நிதிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கை


1. ரிசர்வ்  வங்கியின் சமீபத்திய நகராட்சி நிதி அறிக்கையின் படி (நவம்பர் 2024), மாநகராட்சிகள் மிகவும் பலவீனமான வருவாய் வசூலை உருவாக்குகின்றன. 2024-ஆம் நிதியாண்டின் உள் நாட்டு உற்பத்தி வெறும் 0.6 சதவீதம் வரை சேர்தது. இது மத்திய அரசு (9.2%) மற்றும் மாநில அரசுகள் (14.6%) வசூலிப்பதை விட மிகக் குறைவு. நகராட்சி நிறுவனங்கள் வசூலிக்கும் பணத்தில் பெரும்பகுதி சொத்து வரிகளிலிருந்து வருகிறது.


2. நகராட்சி நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணத்தையே அதிகம் நம்பியுள்ளன என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2022–23 நிதியாண்டில், மத்திய அரசின் மானியங்கள் 24.9% மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் 20.4% அதிகரித்துள்ளன. இருப்பினும், நகராட்சி நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் மத்திய அரசின் பணம் 2.5% மட்டுமே உள்ளது.


3. 2036ஆம் ஆண்டுக்குள், 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்திய நகரங்களில் வசிப்பார்கள் என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் நகரங்கள் நிறைய வளரும். இந்த வளர்ச்சியை ஆதரிக்க, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா சுமார் 840 பில்லியன் டாலர்கள் (ரூ. 70 லட்சம் கோடி)  அல்லது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55 பில்லியன் டாலர்கள் (ரூ. 4.6 லட்சம் கோடி)  நகர உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவிட வேண்டும்.


நகராட்சி பத்திரங்கள் (Municipal Bonds)


நகராட்சி பத்திரங்கள் (muni bonds) நகராட்சி நிறுவனங்கள் (MCs) பணம் திரட்டுவதற்கான ஒரு வழியாகும். இவை உள்ளூர் அரசாங்கங்கள் அல்லது MCs முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் கடன்கள் ஆகும். அதற்கு ஈடாக, அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீட்டாளர்களுக்கு வட்டி செலுத்துகிறது. நகராட்சி பத்திரங்கள் (muni bonds) நல்ல திறனைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதால், நகர்ப்புற சவால் நிதி உருவாக்கப்பட்டது.


இந்தியாவில் முதல் நகராட்சி பத்திரங்கள் (muni bonds) 1997ஆம் ஆண்டில் பெங்களூரு மாநகராட்சியால் வெளியிடப்பட்டது. இதன் மூலம் ரூ.125 கோடி திரட்டப்பட்டது. SEBI கூற்றுப்படி, 2017ஆம் ஆண்டு முதல் 17 நகராட்சி பத்திரங்கள் (muni bonds) மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அதன் மூலம் மொத்தம் ரூ.2,800 கோடி திரட்டப்பட்டுள்ளன. இந்த பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற, SEBI 2015ஆம் ஆண்டில் நகராட்சி பத்திரங்களை வெளியிடுவதற்கான விதிகளை அறிமுகப்படுத்தியது.

Original article:
Share:

இந்தியாவில் மழைப்பொழிவு முறைகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த கேள்விகள் -நிதேந்திர பால் சிங்

 கேள்வி 1 : காலநிலை மாற்றம் இந்தியாவில் பருவமழை முறையை எவ்வாறு பாதித்துள்ளது?


அறிமுகம் :


பருவமழை (monsoon) என்பது காற்றின் திசையில் ஏற்படும் மாற்றமாகும். இது பொதுவாக அதிக மழை அல்லது வறண்ட வானிலையைக் கொண்டுவருகிறது. பருவமழை பெரும்பாலும் ஆசியாவின் சில பகுதிகளில் நிகழ்கிறது. இந்தியாவில் இரண்டு முக்கிய வகையான பருவமழைகள் உள்ளன : தென்மேற்கு பருவமழை (Southwest monsoon), வடகிழக்கு பருவமழை (Northeast monsoon) ஆகும்.

(i) தென்மேற்கு பருவமழை (Southwest monsoon) : இந்த பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நிகழ்கிறது. இது முதலில் தென்மேற்கு கடற்கரையில் கேரளாவை அடைகிறது. பின்னர், அது நாடு முழுவதும் நகர்கிறது. இது இந்தியாவின் முக்கிய பருவமழையாகும். இது வெப்பமான காலநிலையை குளிர்விக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு உதவுகிறது. காரீஃப் பயிர்களை (kharif crops) வளர்ப்பதற்கு இது மிகவும் முக்கியமானதாக உள்ளது.


(ii) வடகிழக்கு பருவமழை (Northeast monsoon) : இது பின்னடையும் பருவமழை (retreating monsoon) என்றும் அழைக்கப்படுகிறது. இது அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் மற்றும் தீபகற்ப இந்தியாவை பாதிக்கிறது. இது தென்மேற்கு பருவமழையைப் போல வலுவாக இல்லை. இருப்பினும், ராபி பயிர்களை (rabi crops) வளர்ப்பதற்கு இது முக்கியமானது.


 அமைப்பு :


இந்தியாவில் மழைப்பொழிவு முறைகளில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் : 


  • இந்தியாவில் பருவமழை முறைகள் விரைவாக மாறி வருவதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. இந்த மாற்றம் முக்கியமாக காலநிலை மாற்றத்தின் வேகமான விகிதத்தால் ஏற்படுகிறது.


  • இந்தியாவின் 55% உள்ளூர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த அதிகரிப்பு குறுகிய கால, கடுமையான மழைப்பொழிவின் விளைவாகும். இது அடிக்கடி திடீர் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.


  • இந்தியாவில், தென்மேற்கு பருவமழையின் போது, ​​தீவிர ஈரப்பதமான நிகழ்வுகள் மொத்த பருவகால மழையில் பெரும் பகுதியை உருவாக்குகின்றன.


  • பருவமழை முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் விவசாய உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதிக்கலாம். 

  • பருவமழை எல்லா பருவங்களிலும் அல்லது மாதங்களிலும் சமமாகப் பெய்வதில்லை.


Original article:
Share:

இன்றைய பாலின சமத்துவமின்மை பற்றி ஆரம்பகால பெண்ணிய இயக்கம் நமக்கு கூறுவது என்ன? - முகமது அசிம் சித்திக்

 மகப்பேறு விடுப்பு (maternity leave) என்பது அரசியலமைப்பு ரீதியான உரிமை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முடிவு செய்தது. ஒரு பெண்ணுக்கு மூன்றாவது குழந்தை இருக்கும்போது கூட இது பொருந்தும். ஆனால், இந்த மாற்றங்கள் சமூகத்தில் நடந்து வரும் ஆழமான ஏற்றத்தாழ்வுகளுடன் எவ்வாறு தொடர்புடையவை? மேலும், இந்த பிரச்சினைகள் மேரி வால்ஸ்டோன்கிராஃப்டின் ஆரம்பகால பெண்களின் உரிமைகளை ஆதரிக்கும் பணிகளுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன?


சமீபத்தில், ஒரு பள்ளி ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு மறுத்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் அவருக்கு,  இரண்டு குழந்தைகள் இருந்தாலும் மகப்பேறு சலுகைகளைப் பெற அவர் தகுதியானவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.


இருப்பினும், பெண்கள் எதிர்கொள்ளும் மற்ற கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் இன்னும் உள்ளன. The Time Use Survey 2024 (ஜனவரி-டிசம்பர்) படி, ஆண்கள் பெண்களை விட 132 நிமிடங்கள் வேலை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் செலவிடுகின்றனர். இருப்பினும், பெண்கள் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். இந்தப் பணிகளில் பெண்கள் தினமும் 289 நிமிடங்கள் செலவிடுகிறார்கள், ஆண்கள் 88 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள்.


இந்த சூழலில், கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதில் நாம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம்? சட்டங்கள் மட்டுமே இந்த ஆழமான பிரச்சினைகளை சரிசெய்ய முடியுமா? அல்லது சமூகம் எப்படி நினைக்கிறது என்பதில் நமக்கு ஒரு பெரிய மாற்றம் தேவையா? பெண்ணியக் கருத்துக்களில் இந்தக் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. அவற்றை நன்கு புரிந்துகொள்ள, பெண்ணிய இயக்கம் (feminist movement) எவ்வாறு தொடங்கியது என்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.


"பெண்ணியம்" (feminism) என்ற சொல் 1800ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தொடங்கியது. அப்போது, ​​அது "ஒரு பெண்ணின் குணங்களைக் கொண்டிருத்தல்" (having the qualities of a female) என்று பொருள்படும். 1890ஆம ஆண்டுகளில் இந்த வார்த்தை மிகவும் பொதுவானதாக மாறியது. அந்த நேரத்தில், பெண்களின் வாக்களிக்கும் உரிமையை எதிர்த்தவர்கள் அதை எதிர்மறையான வழியில் பயன்படுத்தினர். விரைவில், அரசியல் கட்சிகளும் பிற குழுக்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினர்.


பெண்ணியத்தின் வரலாறு காலப்போக்கில் பல முறிவுகளையும் மாற்றங்களையும் சந்தித்துள்ளது. 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கிய இரண்டாவது பெண்ணிய அலையின் தாக்கத்தின் போதுதான் இயக்கம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், நிலையானதாகவும் மாறியது. இந்த நேரத்தில், பெண்ணியம் பல திசைகளில் வளர்ந்தது. சட்ட மற்றும் அரசியல் அறிஞர்கள் வலுவான தத்துவார்த்த கருத்துக்களை வளர்த்துக் கொண்ட அதே வேளையில், ஆர்வலர்கள் சமூக மட்டத்தில் பணியாற்றினர்.


இப்போது, ​​பெண்ணியத்தின் நான்காவது அலை என்று அழைக்கப்படும் இந்த இயக்கம் பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. இதில் இந்த இயக்கம் பல்வேறு அணுகுமுறைகள், கட்டமைப்புகள் மற்றும் வழிமுறைகளாகப் பிரிந்து, "பாலியல், பாலியல் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இயக்கம்" (a movement to end sexism, sexist exploitation, and oppression) என்று பெண்ணிய அறிஞர் பெல் ஹூக்ஸ் விவரித்த பணியைத் தொடர்கிறது.



போராட்டம் தொடர்கிறது


பெண்ணியத்தின் முதல் அலை 1830 மற்றும் 1920ஆம் ஆண்டுக்கு இடையில் தெளிவாகத் தொடங்கியது. இது முக்கியமாக வாக்குரிமை இயக்கத்துடன் (generally identified with the suffragette movement) அடையாளம் காணப்பட்டுள்ளது. 1848ஆம் ஆண்டில் நியூயார்க்கின் செனிகா ஃபால்ஸில் நடைபெற்ற பெண்கள் உரிமைகள் மாநாட்டில் தொடக்கத்தைக் காணலாம். இந்த மாநாட்டில் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவத்தை வலியுறுத்தும் பல தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றினர். அவர்கள் உணர்வுகளின் பிரகடனத்தையும் (Declaration of Sentiments) வெளியிட்டனர். இது இயக்கத்தின் முக்கிய அறிக்கையாக (movement’s manifesto) மாறியது.


எலிசபெத் கேடி ஸ்டாண்டன் இந்த நிகழ்வின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவர் ஆவர். முதல் அலையில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார். மேலும் 19 ஆம் நூற்றாண்டு முழுவதும் பெண்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். உணர்வுகளின் பிரகடனம் (Declaration of Sentiments) வாக்குரிமை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறித்தது. அதே ஆண்டில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலியில் உள்ள பெண்கள் குழுக்கள் தொழிலாளர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட குழுக்களுடன் (marginalised groups) இணைந்து சமத்துவத்தைக் கோரின. இது இயக்கத்தை சர்வதேசமாக்கியது.


இந்த நேரத்தில், பல பெண்ணிய இதழ்களும் பெண்களின் செயல்பாடுகள் பற்றிய செய்திகளையும், விமர்சனங்களையும் வெளியிடத் தொடங்கின. பெண்கள் பல அடக்குமுறைச் சட்டங்களை கடுமையாக எதிர்த்தனர். இந்தச் சட்டங்கள் ஒப்பந்தங்களைச் செய்வதற்கான, சொத்துக்களை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதற்கான, தங்கள் குழந்தைகள் மீது உரிமைகளைப் பெறுவதற்கான அல்லது உயில் எழுதுவதற்கான உரிமையை மறுத்தன. இந்தக் காலகட்டத்தில், பெண்கள் பொதுவாக கல்விக்கான சிறந்த அணுகல், சொத்துரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமையைக் கோரினர்.


18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில், முதலாளித்துவமும் (capitalism), ஜனநாயகமும் (democracy) உயரத் தொடங்கின. இந்த எழுச்சி தனிநபர் உரிமைகள் பற்றிய புதிய விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது. இருப்பினும், முதலாளித்துவத்தால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரம், வேலை மற்றும் ஊதியங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு உதவியது. இதன் விளைவாக, பெண்கள் தொடர்ந்து அசாதரண நிலையில் இருந்தனர் மற்றும் ஆண்களை அதிகமாகச் சார்ந்து இருந்தனர்.


இதேபோல், தனிநபர் உரிமைகள் பற்றிய ஆரம்பகால கோட்பாடுகளும் ஆண்களை மையமாகக் கொண்டிருந்தன. பெண்ணிய இயக்கம், பெண்களின் பொருளாதார உழைப்பு மற்றும் அவர்களின் உரிமைகளின் மதிப்பை வலியுறுத்தும் இத்தகைய பிரச்சினைகளை எடுத்துரைத்தது.


எஸ்டெல் பி. ஃப்ரீட்மேன் தனது ”No Turning Back: The History of Feminism and the Future of Women” (2002) என்ற புத்தகத்தில் இதை விளக்குகிறார். முதலாளித்துவம், தொழில்துறை வளர்ச்சி, ஜனநாயகக் கருத்துக்கள் மற்றும் சோசலிச விமர்சனங்கள் என பல விஷயங்கள் ஒன்றிணைந்த இடத்திலிருந்து பெண்ணிய அரசியல் தொடங்கியது என்று அவர் கூறுகிறார். இது 1800ஆம் அண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் நடந்தது. இந்தக் காலகட்டத்தில், பெண்களும் சில ஆண்களும் கல்வி, வேலை மற்றும் அரசியலில் சம வாய்ப்புகளைக் கோரத் தொடங்கினர். சமத்துவத்திற்கான இந்தப் போராட்டம் இன்றும் நடந்து வருகிறது.


உண்மை ஏன் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்?


பெண்ணியத்தின் முதல் அலையின் போது, ​​பெண்கள் சுரண்டல் பற்றிய விவாதத்தை இரண்டு முக்கிய கருத்துக்கள் வடிவமைத்தன. அவை மார்க்சியம் (Marxism) மற்றும் தாராளமயம் (liberalism) ஆகும். முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பெண்களை விடுவிப்பதில் மார்க்சியம் கவனம் செலுத்தியது. முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிவதன் மூலம் பெண்களின் விடுதலை வரும் என்று அது நம்பியது.


தாராளமயம் (liberalism) வேறுபட்ட அணுகுமுறையை எடுத்தது. இது பகுத்தறிவு சிந்தனை மற்றும் நியாயமான நிர்வாகத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. சட்டத்தின் கீழ் அனைத்து மக்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதை அது வலியுறுத்தியது.


பெண்களின் சமத்துவம் குறித்த தாராளவாத நிலைப்பாடு மேரி வால்ஸ்டோன்கிராஃப்ட் மற்றும் ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற சிந்தனையாளர்களால் வலுவாக வெளிப்படுத்தினர். அவரது மிகவும் பிரபலமான படைப்பான ”A Vindication of the Rights of Woman: With Strictures on Political and Moral Subjects” (1792), வால்ஸ்டோன்கிராஃப்ட், சுதந்திரம், சம வாய்ப்பு மற்றும் பகுத்தறிவு ஆகிய அறிவொளியின் கொள்கைகளிலிருந்து நுண்ணறிவுகளை வரைந்து, கணவர்களின் தெய்வீக உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியது மற்றும் பெண்களின் தாழ்வு மனப்பான்மை பற்றிய கருத்தை சவால் செய்தது. 


வால்ஸ்டோன்கிராஃப்ட் என்ற சிந்ந்தனையாளர் ஜீன்-ஜாக் ரூசோவுடன் உடன்படவில்லை. ஏனெனில், ரூசோ தனது ”எமிலி” (Emile) என்ற புத்தகத்தில் பெண் கல்வி குறித்து எதிர்மறையான கருத்தைக் கொண்டிருந்தார். வால்ஸ்டோன்கிராஃப்ட் குறிப்பிட்டதாவது, இதற்கு நேர்மாறாக, ஆண்களும் பெண்களும் கல்வி பெற வேண்டும். மேலும், பெண்கள் தங்கள் மனதை வளர்த்துக் கொள்ள ஊக்குவித்தார். பெண்கள் அழகு மற்றும் நாகரிகப்போக்கில் (fashion) மட்டும் கவனம் செலுத்தக்கூடாது என்று அவர் கூறினார்.


ஒரு எளிய கோட்பாட்டின் அடிப்படையில் பெண்களின் உரிமைகளுக்காக எனது வாதமானது, ஆண்களுக்குத் துணையாக இருக்க பெண்கள் கல்வி கற்கவில்லை என்றால், அறிவு மற்றும் நல்லொழுக்கத்தில் முன்னேற்றம் நின்றுவிடும் என்ற உண்மை அனைவராலும் பகிரப்பட வேண்டும். இல்லையெனில், மக்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை அது திறம்பட பாதிக்காது.


பெண்கள் ஏன் நல்லொழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் எவ்வாறு ஒன்றாக வேலை செய்ய முடியும்? சுதந்திரம் அவர்களின் பகுத்தறிவை வலுப்படுத்த வேண்டும். இந்த வழியில், அவர்கள் தங்கள் கடமைகளைப் புரிந்துகொண்டு, இந்தக் கடமைகள் அவர்களின் உண்மையான நல்வாழ்வோடு எவ்வாறு இணைகின்றன என்பதைக் காணலாம்.


பெண்கள் தங்கள் சொந்த திறனை வளர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய அவர், "ஆண்கள் மீது அவர்கள் அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. ஆனால் அவர்கள் மீது அதிகாரம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார். அவரது செல்வாக்கின் காரணமாக, பெண்ணியத்தின் முதல் அலையின் போது கல்வி பெண்களின் முதல் கோரிக்கையாக மாறியது.


ஜான் ஸ்டூவர்ட் மில் 1869-ல் ”பெண்களின் சப்ஜெக்ஷன்” (The Subjection of Women) என்ற நூலை எழுதினார். இது ஒரு முக்கியமான தாராளவாத-பெண்ணிய படைப்பாகும். இந்த உரை பெண்ணியத்தின் எதிர்கால வளர்ச்சியை பாதித்தது. பிரிட்டனில் பெண்களின் சுதந்திரம் மற்றும் வாக்களிக்கும் உரிமைக்காக மில் கடுமையாக வாதிட்டார்.


ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் விதி தவறானது. இந்த விதி ஒரு பாலினத்தை மற்றொரு பாலினத்திற்கு சட்டப்பூர்வமாக கீழ்ப்படுத்துகிறது. இது மனித முன்னேற்றத்திற்கும் ஒரு பெரிய தடையாகும். அதற்கு பதிலாக, இந்த விதி மாற்றப்பட வேண்டும். புதிய விதி முழுமையான சமத்துவத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். இது ஒரு பாலினத்திற்கு எந்த அதிகாரத்தையும் அல்லது சிறப்பு உரிமைகளையும் அனுமதிக்கக்கூடாது. இது மற்றொரு பாலினத்திற்கு எந்த பாதகங்களையும் உருவாக்கக்கூடாது.


மது துஷ்பிரயோகம் மற்றும் ஒழுக்கக்கேடு


அமெரிக்காவில் பெண்கள் இயக்கம் மது ஒழிப்பு (abolition) மற்றும் மதுவிலக்கு (temperance) இயக்கங்களுடன் தொடர்புடையது. மது ஒழிப்பு இயக்கம் மது பயன்பாட்டை நிறுத்துவதில் கவனம் செலுத்தியது. இருப்பினும், ஆண்கள் தலைமையிலான அடிமைத்தன ஒழிப்பு குழுக்களில் பல பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இதன் காரணமாக, அவர்கள் தங்கள் தனிப்பட்ட பெண்கள் உரிமைக் குழுக்களை உருவாக்க வேண்டியிருந்தது. செனிகா நீர்வீழ்ச்சி மாநாட்டை (Seneca Fall Convention) ஏற்பாடு செய்வதற்கான ஒரு முக்கிய காரணம், 1840ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த உலக அடிமைத்தன மாநாட்டில் ஐந்து அமெரிக்க பெண்கள் பிரதிநிதிகளாக இருக்க அனுமதிக்கப்படவில்லை என்பதுதான்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில், மது அருந்துதல் மிக அதிக அளவில் வளர்ந்தது. ஆண்களின் மது அருந்துதலால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். 1874ஆம் ஆண்டில், பெண்கள் கிறிஸ்தவ சுய கட்டுப்பாடு சங்கம் (Woman’s Christian Temperance Union (WCTU)) உருவாக்கப்பட்டது. பின்னர், இந்தக் குழுவின் பல கிளைகள் தோன்றின. மது அருந்துதல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையுடன் அதன் தொடர்பை எதிர்த்துப் போராட இந்தக் குழுக்கள் பெண்களுக்கு உதவின.


”Man Cant Speak For Her: A Critical Study of Early Feminist Rhetoric, Vol. 1” (1989) என்ற முன்னோடி ஆய்வில், கார்லின் கோர்ஸ் கேம்பல் பெண்களின் பேச்சுகள் மற்றும் எழுத்துக்களை ஆராய்கிறார். 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பெண்கள் தங்கள் சீர்திருத்த முயற்சிகளை வெளிப்படுத்த மதுவிலக்கு இயக்கும் ஒரு வழியாக இருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார்.


அந்த நேரத்தில், 'நல்ல' பெண்கள் விமர்சிக்கப்படாமல் மதுவிலக்கு இயக்கத்தில் (temperance movement) சேர முடியும். பெண்கள் கிறிஸ்தவ சுய கட்டுப்பாடு சங்கம் (WCTU) பெண்களின் நிலைகள் பற்றிய பாரம்பரிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாக கேம்பல் விளக்குகிறார். இருப்பினும், பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதன் மூலம் வீட்டிற்கு வெளியே செல்வாக்கு செலுத்த வேண்டும் என்றும் WCTU வாதிட்டது. இதன் காரணமாக, பழமைவாத பெண்களும் ஆண்களும் பெண் வாக்குரிமையை ஆதரிக்கத் தொடங்கினர். அவர்கள் முன்பு அதை நிராகரித்தனர், ஆனால் மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து பெண்கள் தங்கள் வீடுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக இது பார்க்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொண்டனர்.


வாக்களிக்கும் உரிமையை வென்றெடுப்பது


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் பெண்கள் இயக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் கவனம் தேசபக்தி மற்றும் தேசிய நலன்களுக்கு மாறியது. இதன் காரணமாக, பெண்களின் கோரிக்கைகள் குறைந்த முக்கியத்துவம் பெற்றன. பெண்கள் குழுக்கள் ஒன்றியத்தையும் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்தன. பதிலுக்கு அவர்கள் தங்கள் உரிமைகளுக்கான ஆதரவை எதிர்பார்த்தனர்.


இருப்பினும், அவர்களின் நம்பிக்கைகள் ஏமாற்றமடைந்தன. 1868ஆம் ஆண்டில், 14-வது திருத்தத்தின் பிரிவு 2 அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பிரிவு வாக்களிக்கும் உரிமைகளைக் கையாண்டது மற்றும் அமெரிக்க அரசியலமைப்பில் "ஆண்" என்ற வார்த்தையை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது.  இது 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அமெரிக்க ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் தங்களை விலக்குவதை எதிர்த்து வழக்கை மேற்கொண்டனர். ஆனால் 1875 ஆம் ஆண்டில், வாக்களிக்கும் உரிமைக்கான அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.


தேசிய பெண் வாக்குரிமை சங்கம் (National Woman Suffrage Association (NWSA)) மற்றும் அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கம் (American Woman Suffrage Association (AWSA)) ஆகிய இரண்டு போட்டியான பெண்கள் அமைப்புகளின் இணைப்புக்கான வாக்குரிமை இயக்கத்தில் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும். பிப்ரவரி 18, 1890ஆம் ஆண்டில் தேசிய அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கம் (National American Woman Suffrage Association (NAWSA)) மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்பை உருவாக்க இந்த இணைப்பு வழிவகுத்தது. அதன் தலைவர்கள் முறைகள் மற்றும் கொள்கைகளில் அடிக்கடி கடுமையாக வேறுபட்டாலும், புதிய அமைப்பு பெண்களின் வாக்களிக்கும் உரிமைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. 


1910ஆம் ஆண்டில், தீவிர ஆர்வலர் ஆலிஸ் பால் NAWSA இல் சேர்ந்தார். அவர் இந்த குழுவின் கவனத்தை மாநில வாக்குரிமையிலிருந்து தேசிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு மாற்றினார். இருப்பினும், அவர் NAWSA இன் கொள்கைகளுடன் உடன்படவில்லை. இதன் காரணமாக, அவர் தேசிய பெண்கள் கட்சியை (National Woman’s Party) உருவாக்கினார். அவரது பணி 1920ஆம் ஆண்டில், அமெரிக்க அரசியலமைப்பின் பத்தொன்பதாம் திருத்தத்தை அங்கீகரிப்பதற்கு வழிவகுத்தது. இந்தத் திருத்தம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.


முகமது அசிம் சித்திக் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக உள்ளார்.


Original article:
Share: