நான்காவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்கிறது. ஆனால் குறுகிய காலக் கண்ணோட்டம் தெளிவாக இல்லை.

 முதலீடுகளில் ஏற்பட்டுள்ள கணிசமான அதிகரிப்பின் நிலைத்தன்மை குறித்து கேள்விகள் உள்ளன.


இந்திய பொருளாதாரம் 2024-25ன் நான்காம் காலாண்டில் வலுவாக 7.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது பெரும்பாலான எதிர்பார்ப்புகளை தாண்டிய வளர்ச்சியாகும். முழு ஆண்டிற்கான வளர்ச்சி இப்போது தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (National Statistics Office) 6.5 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அந்த தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் முந்தைய மதிப்பீடுகளுக்கு ஏற்பவே உள்ளது. பொருட்களின் மீதான நிகர வரிகளை நீக்கிவிட்டு பார்த்தால், பொருளாதாரத்தின் மதிப்பு சேர்க்கை நான்காம் காலாண்டில் 6.8 சதவீதம் வளர்ந்துள்ளது. மேலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சியில் கணிசமான முன்னேற்றம் இருந்தபோதிலும்  இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி 5.6 சதவீதமாக சரிந்ததால் வளர்ச்சி வேகம் கடுமையாக குறைந்தது. இந்திய பொருளாதாரம் 2024-25 நிதியாண்டில் கணிசமாக மந்தமாகியுள்ளது. பெயரளவு உள்நாட்டு உற்பத்தியும் (Nominal GDP) 10 சதவீதத்திற்கு குறைவாக வந்துள்ளது. அடுத்த ஆண்டிற்கான கணிப்புகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.


துறை வாரியாக பிரிக்கப்பட்ட தரவுகள், சாதகமான வானிலை மற்றும் லாபகரமான விலைகள் காரணமாக விவசாயம் தொடர்ந்து ஆரோக்கியமான வேகத்தில் விரிவடைந்து வருவதைக் காட்டுகிறது. இது விவசாயிகளை அதிக பரப்பளவில் விதைக்கத் தூண்டியது. 4-வது காலாண்டில் 5.4 சதவீத வளர்ச்சி, இந்தத் துறையின் முழு ஆண்டு வளர்ச்சியை 4.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது . இது அதன் நீண்டகால சராசரியை விட அதிகமான வளர்ச்சியாகும். இது கிராமப்புற நுகர்வுக்கு நல்ல அறிகுறியாகும். இருப்பினும், தொழில்துறை மந்தநிலையுடனே தொடர்கிறது. உற்பத்தித்துறை பாதிப்பு இதற்கு முக்கிய காரணியாகும். இந்த துறை 2024-25ல் 4.5 சதவீதம் வளர்ந்தது. முந்தைய ஆண்டின் 12.3 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது. எனினும், கட்டுமானத்துறை தொடர்ந்து நிலையான வளர்ச்சியைக் கண்டது. 


2024-25 நிதியாண்டில் 9.4 சதவீதம் விரிவடைந்தது, முந்தைய ஆண்டு10.4 சதவீத வளர்ச்சியைப் பெற்றது. சேவைத் துறையும் சிறிது சரிவைக் கண்டது, வர்த்தகம்,உணவகங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மற்றும் நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் பிரிவுகள் முன்பை விட மெதுவான வேகத்தில் வளர்ந்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளும் கடந்த ஆண்டு தனியார் நுகர்வு 7.2 சதவீதமாக வளர்ந்ததாகக் காட்டுகிறது. கடந்த ஆண்டு மக்களின் செலவு தனியார் நுகர்வில் 7.2% அதிகரித்துள்ளதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவு காட்டுகிறது. ஆனால், இது இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் (இந்தியா இன்க்) கூறியதற்கு முழுமையாக பொருந்தவில்லை . ஆண்டு முழுவதும் பலவீனமான தேவை மற்றும் சுருங்கி வரும் நடுத்தர வர்க்கம் குறித்து அவர்கள் கவலைப்பட்டனர். நான்காவது காலாண்டில் முதலீடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் நிலைத்தன்மை குறித்தும் கேள்விகள் உள்ளன. சமீபத்திய தரவுகளின்படி மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 9.4 சதவீதமாக வளர்ந்தது.


குறுகிய கால எதிர்பார்ப்பு தெளிவாக இல்லை. வரும் காலாண்டுகளில் பொருட்களின் குறைந்த விலைகள் பணவீக்கத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சில நிபுணர்கள் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை காரணமாக முதலீடு குறையக்கூடும் என்று கருதுகின்றனர். இருப்பினும், அரசாங்கம் வரி குறைப்புகளை வழங்கினால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தால், அது மக்கள் அதிகமாகச் செலவிட உதவும். ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee) வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. பணவீக்கம் மத்திய வங்கியின் இலக்குகளின் அளவுகளுக்கு ஏற்ப இருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு வலுவான வளர்ச்சிக்கான நம்பிக்கைகள் குறைவாகவே உள்ளன. 2025-26-ஆம் ஆண்டில் பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது. மேலும், சில நிபுணர்கள் இது 6.2% முதல் 6.5%வரை இருக்கும் என்று கருதுகின்றனர். எனினும், முதலீடுகளின் கணிசமான முன்னேற்றத்தின் நிலைத்தன்மை குறித்து கேள்விகள் உள்ளன.


Original article:
Share: