இந்தியாவின் சவால்: சீனாவுடனான உறவுகளை சமநிலைப்படுத்துதல் -ஹேப்பிமோன் ஜேக்கப்

 சீனாவுடனான இந்தியாவின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாது. சீனா நமக்கு ஒரு முக்கியமான இராஜதந்திர சவாலாக இருக்கும்.


கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய ஃபிளாஷ்பாயிண்ட் பகுதிகளில் படைகளை விலக்குவது மற்றும் 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய ரோந்து முறைகளை மீண்டும் தொடங்குவது குறித்து கவனம் செலுத்தும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அக்டோபர் 21 ஒப்பந்தம் உண்மையில் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான படைகளை விலக்கிக் கொள்ளும் செயல்முறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டு கோடையில் தொடங்கிய எல்லைப் போட்டியின் பெரும்பகுதியை கவனித்துக்கொள்கிறது. சீனாவுடனான எந்தவொரு எல்லை ஒப்பந்தமும் நேர்மறையானது. ஆனால், எந்தவொரு ஒப்பந்தமும் தேவையற்ற சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் இந்தியாவின் நிலத்தை சீனா தொடர்ந்து எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும்.


கடந்த ஆண்டு அக்டோபர் ஒப்பந்தம் பெரும்பாலும் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு தற்காலிக நிவாரணமாக பார்க்கப்படுகிறது. மாறாக, 2020ஆம் ஆண்டு எல்லை மோதலுக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புவதில்லை. இது ஒரு சரியான ஒப்பந்தம் அல்ல. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அது தேவைப்பட்டது.  இந்த ஒப்பந்தம் தற்காலிகமானது என்றால், மேலும் மோதல்களும் முட்டுக்கட்டைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவுடன் எல்லைத் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதை சீனா தொடர்ந்து தவிர்க்கும். இந்த நடத்தை சீனாவின் வளர்ந்து வரும் சக்தியிலிருந்தும், இந்தியாவுடன் ஒப்பிடும்போது அது தன்னை எவ்வாறு கருதுகிறது என்பதிலிருந்தும் வெளிப்படுகிறது. சீனா தன்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறது மற்றும் இந்தியா அதை ஏற்றுக்கொள்ளும் என்றும்  எதிர்பார்க்கிறது


அக்டோபர் ஒப்பந்தத்தை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பரிசீலிப்பது முக்கியம். பல காரணங்களுக்காக சீனா இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும். முதலாவதாக, சீனா இந்தியாவை ஒரு சமமான நாடாகப் பார்க்கவில்லை. குறிப்பாக, சீனாவின் சக்தி இந்தியாவைவிட மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்த அதிகார வேறுபாடு பிராந்தியத்தில் சமநிலையை சீர்குலைத்துள்ளது. சீனாவும் இந்தியாவை நோக்கி பிராந்திய இலக்குகளைக் கொண்டுள்ளது. இது அவர்களின் உறவை மேலும் சிக்கலாக்குகிறது. இந்தக் காரணிகளைப் பார்க்கும்போது, ​​சீனாவுடனான இந்தியாவின் பிரச்சினை விரைவில் நீங்காது என்பது தெளிவாகிறது. சீனா இந்தியாவிற்கு ஒரு முக்கிய பிரச்சினையாகத் தொடரும். குறுகிய இடைவெளிகள் பிரச்சினையைத் தீர்க்கும் என்று நினைப்பது நடைமுறைக்கு மாறானது.


 இங்கு விவாதிக்கப்படும் காரணிகள் கொள்கை வகுப்பாளர்களையும் மற்றும் உயர் அதிகாரிகளையும் மூன்று முக்கிய முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். முதலாவதாக, சீனாவை சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. அது ஏற்கனவே தாமதமாகிவிட்டாலும் கூட, சீனாவின் வளர்ந்து வரும் சக்தியைச் சமாளிக்க இந்தியா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


சீனாவின் சவாலை எதிர்கொள்ள உள்நாட்டு சமநிலை என்பது குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் இராணுவ மாற்றங்களைச் செய்வதாகும். வெளிப்புற சமநிலை என்பது இந்தியா இந்த சவாலை நிர்வகிக்க உதவும் கூட்டாளர்களைக் கண்டுபிடிப்பதையும் கூட்டணிகளை உருவாக்குவதையும் உள்ளடக்கும். சீனாவை மட்டும் கையாளும் இந்தியாவின் திறன் பலவீனமடைந்து வருவதாகவும், புதிய கூட்டாளிகள் தேவை என்றும் இந்திய அதிகாரிகள் இப்போது நம்புகிறார்கள்.


சீனாவை சமநிலைப்படுத்த, இந்தியா சரியான கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். சிறந்த முடிவுகளுக்காக கொள்கைகளை சரிசெய்ய வேண்டும். மேலும், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாக்குறுதிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். சீனாவை சமநிலைப்படுத்துவதற்கு அமெரிக்காதான் சிறந்த தேர்வாகும். ஆனால், அமெரிக்காவை அதிகமாக நம்பியிருப்பது ஆபத்துகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஆதரவை அதிகம் சார்ந்து இல்லாமல் அல்லது சீனாவுடன் மோதலை ஏற்படுத்தாமல்,  சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை சீனாவின் உலகளாவிய செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் குறிக்கோளுடன் இந்தியா சமநிலைப்படுத்த வேண்டும்.

இந்திய அதிகாரிகளிடையே எட்டக்கூடிய ஒரு முடிவு என்னவென்றால், இந்தியா இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்க சக்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான காரணம் எளிமையானது. சீனாவை சவால் செய்ய இந்தியாவிடம் போதுமான பலம் இல்லை. அவ்வாறு செய்ய முயற்சிப்பது அதிக எல்லை மோதல்களுக்கு வழிவகுக்கும். சீனா ஒரு முக்கியமான வர்த்தக நட்பு நாடு ஆகும். மேலும், சீனாவை எதிர்கொள்ள மற்ற நாடுகளை நம்பியிருப்பது எதிர்பாராத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சீனாவின் ஆதிக்கத்துடன் வாழ்வது என்பது தெற்காசியாவில் இந்தியாவை இரண்டாம் நிலை சக்தியாக ஏற்றுக்கொள்வது மற்றும் சீனா இந்தியப் பெருங்கடலை அதிகமாகக் கட்டுப்படுத்த அனுமதிப்பது மற்றும் சீனாவை கோபப்படுத்தும் செயல்களைத் தவிர்ப்பது என்பதாகும்.


மூன்றாவது முடிவு முதல் இரண்டையும் இணைக்கிறது. நாட்டின் சக்தி வளரும் வரை காத்திருப்பது மற்றும் சீனா பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்று நம்புவது போன்றது ஆகும். பதட்டங்களைத் தணிக்க வர்த்தகத்தை நம்புவது மற்றும் சீனாவை மறைமுகமாக சமநிலைப்படுத்த கூட்டாளர்களைக் கண்டுபிடிப்பது ஆகியவை இதில் அடங்கும்.


இந்த மூன்று விருப்பங்களில் இந்தியா எதைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது? சிறிய உள் அல்லது வெளிப்புற சமநிலை மற்றும் வளர்ந்து வரும் மற்றும் ஆக்ரோஷமான வல்லரசைச் சமாளிப்பதற்கான தெளிவான உத்தி இல்லாத சீனா ஆதிக்கம் செலுத்தும் பிராந்தியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? அல்லது சீனாவை சமநிலைப்படுத்துவதற்கான வழிகள், வழிமுறைகள் மற்றும் கூட்டாளர்களை இந்தியா தீவிரமாகத் தேடுகிறதா?


இந்த முயற்சியானது, இந்தியாவிற்கு இப்போதும் எதிர்காலத்திலும் ஒரு முக்கிய முடிவாகும். நாம் எடுக்கும் தேர்வு நமது எதிர்கால கொள்கைகள், உத்திகள் மற்றும் செயல்களை வடிவமைக்கும்.  மேலும்,  அது விளைவுகளை ஏற்படுத்தும்.


பலவீனமான நாடுகள் வலுவானவற்றை சமநிலைப்படுத்த பல வழிகளைக் கொண்டுள்ளன என்பதை வரலாறு காட்டுகிறது. பலவீனமான நாடு செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு, அதிகாரம் நியாயமற்ற முறையில் தனக்கு எதிராக சாய்ந்திருக்கும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதுதான். நாம் மீண்டும் அந்தத் தவறைச் செய்வோமா?


ஹேப்பிமோன் ஜேக்கப், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கற்பிக்கிறார் மற்றும் இந்தியாவின் உலக இதழின் (INDIA’S WORLD ) ஆசிரியராக உள்ளார்.




Original article:

Share:

வளர்ந்த இந்தியாவிற்கு, சுகாதாரத்தில் கவனம் செலுத்துங்கள் -கே.ஸ்ரீநாத் ரெட்டி

 இந்தியா தனது டிஜிட்டல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பை, மேம்பட்ட மருத்துவமனை பராமரிப்பை உள்ளடக்கிய பொது நிதியுதவி பெற்ற சுகாதார காப்பீட்டுத் திட்டங்களுடன் இணைக்க வேண்டும்.


2047-ஆம் ஆண்டுக்குள் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு, ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட மக்கள்தொகையை உருவாக்கும் இலக்குடன் பின்னிப் பிணைந்துள்ளது. சுகாதாரத்திற்கான தற்போதைய சவால்கள் 2025ஆம் ஆண்டில் தொடர்ந்து கவனம் செலுத்த அழைப்பு விடுத்தாலும், புதிதாக உருவாகி வரும் மற்றும் எதிர்பார்க்கப்படும் எதிர்கால அச்சுறுத்தல்கள் இப்போதிருந்தே எதிர்கொள்ளப்பட வேண்டும். மக்கள் தொகை அளவில் சுகாதார மேம்பாடு மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றிற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றாலும், நோயறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை திறமையான மற்றும் சமமான முறையில் வழங்குவதன் மூலம் தனிநபர்களின் சீர்குலைந்த ஆரோக்கியத்தை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். 2047ஆம் ஆண்டுக்குள் வலுவான மற்றும் சுறுசுறுப்பான சுகாதார அமைப்பை நாம் விரும்பினால், 2025ஆம் ஆண்டிலேயே அதைக் கட்டமைக்கத் தொடங்க வேண்டும். அதன் வளர்ச்சி இரண்டு முக்கிய கூறுகளான பணம் மற்றும் திறமையான மக்கள் மூலம் ஆதரிக்கப்பட வேண்டும்.


2047ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ( universal health coverage (UHC)) அடைய, நமது சுகாதார அமைப்புகள் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அதிக பொது நிதி தேவைப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அளவுகளில் இதற்கு நிதியுதவி  அதிகரிக்கப்படுகின்றன.


UHC-க்கு, நாம் இரண்டு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். அவை, நிதிப் பாதுகாப்பு மற்றும் சேவை பாதுகாப்பு. நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவைகள் அனைத்து குடும்பங்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பரந்த அளவிலான தரமான பராமரிப்பை வழங்க வேண்டும்.

இதன் பொருள், இந்தியா முழுவதும் சமமாக பரவியுள்ள பல திறன் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் நமக்குத் தேவை. மிகவும் திறமையான மருத்துவர்களின் பற்றாக்குறை இருப்பதால், இந்த இடைவெளியை நிரப்ப நேரம் எடுக்கும் என்பதால், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதே உடனடி முன்னுரிமை.

 

ஆயுஷ்மான் பாரத் இயக்கம் வலுவான மற்றும் நியாயமான சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கான முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் மேம்பட்ட முதன்மை பராமரிப்பு, சிறந்த சுகாதார வசதிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் முதியோர் குழுக்களுக்கான நிதி உதவி மற்றும் அமைப்பின் பல்வேறு பகுதிகளை இணைக்க டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பத்திற்கான உந்துதல் ஆகியவை அடங்கும். இப்போது, ​​நாட்டை ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி நகர்த்த இந்த கூறுகளை நாம் இணைக்க வேண்டும். நோய் கண்காணிப்பை வழங்குவதன் மூலமும், சுகாதார திட்டங்களின் வெற்றியை அளவிடுவதன் மூலமும் டிஜிட்டல் சுகாதார இயக்கம் இந்த முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 


இந்தியாவில் சுகாதார குறிகாட்டிகள் மாவட்டங்கள், மாநிலங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் பாலினங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. தேசிய அளவிலான தரவு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டாலும், மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளிலிருந்து விரிவான உள்ளூர் தரவு நமக்குத் தேவை. இந்தத் தரவு சான்றுகள் சார்ந்த, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற, செலவு குறைந்த, கலாச்சார ரீதியாக உணர்திறன் மற்றும் நியாயமான செயல்களை வழிநடத்த வேண்டும். இதை அடைய, தற்போதைய சிதறிய தரவு அமைப்புகளை துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக இணைக்க வேண்டும்.


நோய்கள் வேகமாக மாறி வருவதால் இந்தத் தரவு மிகவும் முக்கியமானது. தொற்றா நோய்கள் (Non-communicable diseases (NCDs)) மற்றும் மனநலப் பிரச்சினைகள் இப்போது தொற்று நோய்களைவிட அதிக தீங்கு விளைவிக்கின்றன. தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன, மேலும் மூன்றில் இரண்டு பங்கு இறப்புகளுக்கு வழிவகுக்கும், அவற்றில் பல, மக்களின் மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட ஆண்டுகளில் நிகழ்கின்றன.


நோய்கள் மற்றும் அவற்றின் ஆபத்து காரணிகள் பற்றிய தரவு நமக்குத் தேவை‘. அவை எவ்வளவு பொதுவானவை மற்றும் காலப்போக்கில் அவை எவ்வாறு மாறுகின்றன என்பதை பொறுத்தது. இதில் தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் (NCDs) இரண்டும் அடங்கும். தற்போது, ​​NCDகள் மற்றும் அவற்றின் ஆபத்து காரணிகள் வரையறுக்கப்பட்ட பிராந்திய ஆய்வுகளில் மட்டுமே ஆய்வு செய்யப்படுகின்றன. தொற்று நோய்களுக்கு, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (Integrated Disease Surveillance Programme (IDSP)) தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்கள் மூலம் சில தரவுகளை சேகரிக்கிறது. இருப்பினும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் (விலங்கியல் நோய்கள் (zoonotic diseases)) வேகமாக அதிகரித்து வருவதால், நமக்கு இன்னும் விரிவான மற்றும் நிகழ்நேர கண்காணிப்புத் தேவை.


புதிய நுண்ணுயிர் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, நுண்ணுயிர் எதிர்ப்பு (antimicrobial resistance (AMR)) கண்காணிக்க கழிவு நீர் கண்காணிப்பு போன்ற முறைகளை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் நீரால் பரவும் நோய்களை அதிகரித்து, நோய்க்கிருமிகளால் பரவும் நோய்களைப் பரப்புகிறது. இது வலுவான மற்றும் மிகவும் கவனமாக கண்காணிப்பு அமைப்புகளை அவசியமாக்குகிறது.


விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய விலங்கியல் நோய்கள், உள்ளூர் பாதிப்புகள் முதல் உலகளாவிய தொற்றுநோய்கள் வரை அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதைச் சமாளிக்க, காட்டு விலங்குகள், பண்ணை விலங்குகள், செல்லப்பிராணிகள் மற்றும் குடியேறிய மற்றும் புலம்பெயர்ந்த மனித குழுக்களில் உள்ள நுண்ணுயிரிகளை நாம் கண்காணிக்க வேண்டும். "One Health" அணுகுமுறை, பல்வேறு இனங்கள் மற்றும் பகுதிகளிலிருந்து இந்தத் தரவை இணைப்பதை வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை போன்ற காலநிலை மாற்றங்கள் நோய் பரவலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்கிறது. தொற்று நோய்களைக் கண்காணித்து புரிந்துகொள்வதற்கு பெரிய தரவுகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.


நோயாளி பராமரிப்புக்கு திறமையான தரவு அமைப்புகள் தேவை. ஒரே மருத்துவமனைக்குள்ளும் கூட, வெவ்வேறு நோயறிதல் மற்றும் சிகிச்சை தரவுகளை இணைக்க வேண்டும். நோயாளிகள் ஒரு சுகாதார நிலையத்திலிருந்து இன்னொரு சுகாதார நிலையத்திற்கு மாறும்போது, ​​தரவு பரிமாற்றமின்மை மற்றும் முக்கியமான தகவல்களின் மோசமான ஒருங்கிணைப்பு ஆகியவை நோயறிதலை கடினமாக்குவதோடு சிகிச்சை முடிவுகளையும் பாதிக்கலாம். இது நோயாளிகள் தங்கள் உடல்நலம் குறித்த தகவல்களை முழுமையாகப் பெறும் உரிமையையும் மறுக்கிறது.


அரசாங்கத்தால் நடத்தப்படும் பொது சுகாதார அமைப்புகளில் டிஜிட்டல் சுகாதார திட்டம் சேர்க்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான தனியார் சுகாதார வசதிகள் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது இந்தியாவின் சுகாதார அமைப்பில் இடைவெளியை ஏற்படுத்துகிறது. இது பொதுமக்களுக்கு மலிவு மற்றும் சரியான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதை பாதிக்கிறது மற்றும் தனிப்பட்ட நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.


PMJAY போன்ற அரசு நிதியளிக்கும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மருத்துவமனை பராமரிப்பில் கவனம் செலுத்தும் மாநில காப்பீட்டுத் திட்டங்களுடன் ஆரம்ப சுகாதார சேவையை இணைக்க இந்தியா தனது டிஜிட்டல் பலங்களைப் பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் தரவு அமைப்புகள் பொது மற்றும் தனியார் சுகாதாரத் தகவல் மற்றும் பரிந்துரை அமைப்புகளை இணைக்க வேண்டும். இது தொடர்புடைய நோயறிதல் மற்றும் சிகிச்சை கருவிகளை உருவாக்க பெரிய இந்திய தரவுத் தொகுப்புகளை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு முறைகளை அனுமதிக்கும். பாதிப்புகள் அல்லது திட்ட சிக்கல்களின்போது சுகாதாரப் பிரச்சினைகளைப் புகாரளிப்பது போன்ற சமூக ஈடுபாட்டை டிஜிட்டல் வழிமுறைகள் மூலமாகவும் ஆதரிக்க முடியும். இவை 2025ஆம் ஆண்டில் நமது சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் டிஜிட்டல் மாற்றத்தைத் தூண்டுமா?


கே.ஸ்ரீநாத் ரெட்டி, எழுத்தாளர் மற்றும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PHFI) மற்றும் பல்ஸ் டு பிளானட் (Pulse to Planet) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். 




Original article:

Share:

வெளிப்புற அந்நிய நேரடி முதலீடு (Outward Foreign Direct Investment (OFDI)) என்றால் என்ன? - ரோஷினி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :  


1. 2023-ம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின்படி, மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு (overseas direct investment) $32.29 பில்லியனாக இருந்தது.


2. வெளிநாட்டு நேரடி முதலீடு (Overseas direct investment) என்பது பட்டியலிடப்படாத பங்கு மூலதனத்தைப் பெறுவதையோ அல்லது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சங்க ஒப்பந்தத்தில் சேருவதையோ குறிக்கிறது. பட்டியலிடப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 10 சதவீதம் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்வதும் இதில் அடங்கும். கூடுதலாக, பட்டியலிடப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாக முதலீடு இருக்கும்போது கட்டுப்பாட்டுடன் முதலீடு செய்வதும் இதில் அடங்கும்.


3. வெளிப்புற அந்நிய நேரடி முதலீடு (Outward Foreign Direct Investment (OFDI)) மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. அவை, பங்கு (equity), கடன்கள் (loans) மற்றும் உத்தரவாதம் (guarantees) வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில், ஈக்விட்டி வடிவில் உள்ளூர் நிறுவனங்களின் வெளிநாட்டு அந்நிய நேரடி முதலீடு 12.69 பில்லியன் டாலராக இருந்தது. இது, 2023-ம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட 9.08 பில்லியன் டாலரை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 


4. இந்திய நிறுவனங்கள் விடுதிள், கட்டுமானம், உற்பத்தி, விவசாயம், சுரங்கம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்கின்றன. வெளிநாட்டு நேரடி முதலீடு (ODI) மூலம் மொத்த நிதிக்கான உறுதிமொழிகளைச் செய்த நாடுகளில் சிங்கப்பூர், அமெரிக்கா, UK, UAE, சவுதி அரேபியா, ஓமன் மற்றும் மலேசியா ஆகியவை அடங்கும்.


5. கூட்டு முயற்சிகள் (joint ventures (JV)) மற்றும் முழுமையாக சொந்தமான துணை நிறுவனங்களில் (wholly owned subsidiaries (WOS)) வெளிநாட்டு முதலீடுகள் இந்திய தொழில்முனைவோருக்கு உலகளாவிய வணிகத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய வழிகளாகக் கருதப்படுகின்றன.


6. கூட்டு முயற்சிகள் இந்தியா மற்ற நாடுகளுடன் பொருளாதார ரீதியாக ஒத்துழைப்பதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகின்றன. அவை தொழில்நுட்பம் மற்றும் திறன்களை மாற்ற உதவுகின்றன. அவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் (research and development (R&D)) முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கின்றன. கூட்டு முயற்சிகள் ஒரு பெரிய உலகளாவிய சந்தைக்கான அணுகலை வழங்குகின்றன. அவை பிராண்ட் பிம்பத்தை மேம்படுத்தவும் வேலைகளை உருவாக்கவும் உதவுகின்றன. கூடுதலாக, அவை இந்தியா மற்றும் தலைமைதாங்கிய நாடு இரண்டிலிருந்தும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன.


7. அவை வெளிநாட்டு வர்த்தகத்திற்கு முக்கியமானவை. அவை இந்தியாவிலிருந்து ஆலை, இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்கின்றன. அவை அந்நிய செலாவணி வருவாயையும் கொண்டு வருகின்றன. இதில் ஈவுத்தொகை வருவாய், ராயல்டி, தொழில்நுட்ப அறிவு கட்டணம் மற்றும் அத்தகைய முதலீடுகளிலிருந்து பிற விநியோகங்கள் ஆகியவை அடங்கும்.




உங்களுக்குத் தெரியுமா?


1. அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI)) என்பது ஒரு நிறுவனம் மற்றொரு நாட்டில் ஒரு வணிகத்தின் கட்டுப்பாட்டு உரிமையைப் பெறும் முதலீட்டைக் குறிக்கிறது. இதன் பொருள் வெளிநாட்டு நிறுவனங்கள் பிற நாடுகளில் உள்ள வணிகங்களின் அன்றாட நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளன.


2. இந்தியா இரண்டு வழிகளில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுகிறது:  அவை,


(a) தானியங்கி வழி (Automatic route) : இந்த வழியின் கீழ், ஒரு வெளிநாட்டவர் அல்லது இந்திய நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI), முன் ஒப்புதல் தேவையில்லை. அந்நிய நேரடி முதலீட்டுக்கு (FDI) இந்திய அரசாங்கத்திடமிருந்தும் ஒப்புதல் தேவையில்லை. 


(b) அரசு வழித்தடம் (Government route) : இந்த வழித்தடத்தின் கீழ், அரசாங்கத்தின் ஒப்புதல் கட்டாயமாகும்.



Original article:

Share:

இந்தியாவுக்குத் தேவையான சீர்திருத்தங்களும் நலன்களும் -அசோக் குலாட்டி

 MSP கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இலவச உணவு, மின்சாரம் அல்லது அதிக மானிய விலையில் உரங்கள் அல்லது லாட்லி பெஹ்னா என்ற பெயரில் செலவுக்குப் பணம் (Pocket Money) வழங்குவது அடிமட்டத்திலிருந்து ஒரு போட்டியாகும்.


வேளாண் உற்பத்திகள் அல்லது உள்ளீடுகளின் விலை மற்ற பொருட்களின் விலை நிர்ணயம் போன்றது. அங்காடிப் பொருளாதாரத்தில் தேவை மற்றும் விநியோகம் தடையற்ற செயல்பாட்டால் அவை தீர்மானிக்கப்படுகின்றன. பல நேரங்களில், விலைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் தலையிடுகின்றன. இது அமைப்பை சீர்குலைத்து திறமையின்மையை ஏற்படுத்தும். இதன் பொருள் அரசாங்கங்களுக்கு இதில் பங்கு இருக்கக்கூடாது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. சந்தைகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதே அவர்களின் முக்கியப் பங்காக இருக்க வேண்டும். அதற்காக, அவர்கள் தகவல் சமச்சீர் (information symmetry) மற்றும் நேரடி உள்கட்டமைப்பில் (physical infrastructure) முதலீடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான விலைப் பரவலைக் குறைக்கும் நிறுவன கண்டுபிடிப்புகள் மூலம் திறமையான மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குவதில் அவர்கள் முதலீடு செய்யலாம். அவை எதிர்கால சந்தைகள் மற்றும் ஆபத்தைக் குறைக்க முயற்சிக்கும் விருப்பங்களை மேம்படுத்த உதவலாம். மேலும், கடந்த ஆண்டு விலைகளை அடிப்படையாகக் கொள்வதை விட, எதிர்கால விலைகள் என்னவாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு பயிர் நடவுக்கான முடிவுகளை எடுக்க விவசாயிகளுக்கு உதவலாம். இது 1991 சீர்திருத்தங்கள் தொடர்பாக இந்தியா தேர்ந்தெடுத்த முன்னோக்கிய சூழ்நிலையுடன் நன்கு ஒத்துப்போகிறது. 


மன்மோகன் சிங்கின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்று, தொழில்துறை கொள்கையை அரசாங்கக் கட்டுப்பாடுகள் மற்றும் உரிம ராஜ்-லிருந்து  (Licence Raj) விடுவித்தது, மாற்று விகிதத்தை (exchange rate) விடுவித்தது, இறக்குமதி வரிகளைப் படிப்படியாகக் குறைத்து வர்த்தகத்தைத் திறந்து விட்டது. இது இந்தியாவுக்கு ஒரு புதிய வழியைக் கொடுத்தது. விவசாயம் என்பது மாநில விவகாரம் என்று நினைத்து அவர் விவசாயத்தைத் தொடவில்லை. யூரியா விலையை ஒரே நேரத்தில் 30 சதவீதம் உயர்த்த மன்மோகன் சிங் முயன்றார். ஏனென்றால், செலவுகள் அதிகரித்து வரும் போது யூரியா விலையை நீண்ட காலத்திற்கு முடக்கி வைப்பது நியாயமற்றது என்று அவர் உணர்ந்தார். தங்கள் வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரும் அதை எதிர்த்தனர். 


தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியபோது பல ஆர்வலர்கள் கூறியது போல, விவசாயம் உண்மையிலேயே ஒரு மாநிலப் பகுதியாக இருந்தால், குறைந்தபட்ச ஆதரவு விலைகளை (minimum support prices (MSP)) சட்டப்பூர்வமாக்குமாறு அவர்கள் ஏன் ஒன்றியத்திடம் கேட்கிறார்கள்? குறைந்தபட்ச ஆதரவு விலைகளை சட்டப்பூர்வமாக்க விரும்பும் மாநிலங்கள் விளைவுகளைத் தீர்மானித்து அதை அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைகள் உட்பட விவசாய சந்தை சீர்திருத்தங்களை ஒன்றிய அரசு மாநிலங்களிடமே விட்டுவிட வேண்டும். 


1965 ஜனவரியில் வேளாண் விலை ஆணையம் (Agricultural Prices Commission (APC)) உருவாக்கப்பட்டதன் மூலம் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையை அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பு முக்கியமாக கோதுமை மற்றும் அரிசியில் கவனம் செலுத்தியது. ஏனெனில், இந்தியா அடிப்படை உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டது. 1960-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், PL-480-ன் கீழ் அமெரிக்காவிலிருந்து 10 மில்லியன் டன் (MT) கோதுமையை இந்தியா இறக்குமதி செய்து, அதன் தொகையை ரூபாயில் செலுத்தியது. உலக சந்தைகளில் இருந்து உணவை வாங்குவதற்கு இந்தியாவுக்கு போதுமான அந்நியச் செலாவணி இல்லை. 


அரசியல் சூழ்நிலைகளுடன் அமெரிக்காவானது உணவுக்கான உதவியை வழங்கியது. 1965-ம் ஆண்டில், அமெரிக்க-வியட்நாம் போரின் போது வியட்நாமை ஆதரித்து இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, அதிபர் லிண்டன் ஜான்சன் இந்தியாவிற்கான உணவு ஏற்றுமதிகளை 72 மணி நேரம் நிறுத்தினார். 1966-ம் ஆண்டில், மெக்சிகோவிலிருந்து 18,000 டன் அதிக மகசூல் தரும் கோதுமை விதைகளை இந்தியா இறக்குமதி செய்தது, இது பசுமைப் புரட்சிக்கு (Green Revolution) வழிவகுத்தது. இந்தச் சூழல் கோதுமை மற்றும் நெல்லுக்கான MSP கொள்கையை அறிமுகப்படுத்த வழிவகுத்தது. 1965-ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 500 மில்லியனாக இருந்தது.


இன்று, இந்தியா 1960-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்ததை விட மிகவும் வித்தியாசமான சூழ்நிலையில் உள்ளது. 1.43 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும், இந்தியா 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இலவசமாக கோதுமை மற்றும் அரிசியை (ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ) வழங்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) இடையக இருப்பு தேவைகளை (buffer stock requirements) விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக அரிசி இருப்புகளை வைத்திருக்கிறது. 


குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP) கீழ் பயிர்களின் பட்டியல் காலப்போக்கில் வளர்ந்துள்ளது. முக்கியமாக, அரசியல் அழுத்தங்கள் காரணமாக இவை அமைந்துள்ளது. MSP-கள் குறிப்பு விலைகளாக (reference prices) இருக்க வேண்டும். ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே அரசாங்கம் பயிர்களை வாங்கும். இருப்பினும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் திறந்தவெளி கொள்முதல் நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. இது பயிர் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்தது. பெரும்பாலும் இலவச மின்சாரம் மற்றும் அதிக மானிய விலை உரங்கள் காரணமாக, அதிகப்படியான அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இது நிலத்தடி நீர் குறைவு, மண் சரிவு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது, இது சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.


முழு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கட்டமைப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உரங்கள், மின்சாரம் போன்ற முக்கிய உள்ளீடுகள் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதை ஒரு சட்ட அமைப்பாக மாற்றுவதில் அல்ல. நில குத்தகை சந்தைகளில் தொடங்கி நிலச் சந்தைகளும் திறக்கப்பட வேண்டும். 


மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிலச் சந்தை, உள்ளீடுகள் மற்றும் சில வெளியீடுகளின் (அரிசி மற்றும் கோதுமை போன்றவை) கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் பெரிய அளவிலான கொள்முதல் ஆகியவை திறமையின்மையை ஏற்படுத்துகின்றன. பிரச்சினையின் ஒரு பகுதி பொது விநியோக முறையிலிருந்து வருகிறது. இது கிட்டத்தட்ட 57% மக்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசியை வழங்குகிறது. கடந்த பத்தாண்டில் 248 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் இது நிகழ்ந்துள்ளது. இது ஒரு சுழற்சி முறையாக மாறியுள்ளது. இலவச தானியங்களை விநியோகிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதால், இந்த முறையை ஆதரிக்க ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 மில்லியன் டன் தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும்.


நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இருவருக்கும் உணவு முறையின் பெரும்பகுதியை இந்தியா டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இது உண்மையிலேயே ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு நேரடி பணப் பரிமாற்றங்களை (direct cash transfers) வழங்குவதை மிகவும் திறமையானதாகவும் செலவு குறைந்ததாகவும் ஆக்குகிறது. மிகவும் ஏழைகளுக்கு பெரிய மானியங்கள் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு குறைவான உதவி தேவை. 


விவசாயிகளுக்கான உள்ளீட்டு மானியங்கள் அவர்கள் விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பளவின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், உணவு விலைகள் மற்றும் உரங்கள் மற்றும் மின்சாரம் போன்ற உள்ளீடுகளின் விலைகள் விடுவிக்கப்பட வேண்டும். இந்த அணுகுமுறையிலிருந்து கிடைக்கும் சேமிப்புகளை விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி, திறன்கள், நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை மற்றும் சாலைகள் மற்றும் சந்தைகள் போன்ற கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தலாம்.


2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற இந்தியாவின் கனவை நனவாக்க சீர்திருத்தங்கள் தேவை. இலவச உணவு, மின்சாரம், அதிக மானிய விலையில் உரங்கள் அல்லது லாட்லி பெஹ்னா போன்ற திட்டங்களின் கீழ் பாக்கெட் பணத்தை வழங்குவது போன்ற போட்டி நிறைந்த மக்கள்தொகை உள்ள நாட்டில் தீங்கு விளைவிக்கும். இது உண்மையான நலன்சார்ந்தவை அல்ல. அடிமட்டத்திற்கான ஒரு நிலையாகும். மாறாக, இது வாக்குகளுக்காக மக்களுக்கு லஞ்சம் கொடுக்கும் ஒரு வடிவமாகப் பார்க்கப்படுகிறது.


குலாட்டி ICRIER -ல் சிறப்பு பேராசிரியர் ஆவார். 




Original article:

Share:

தற்கொலைக்குத் தூண்டுதல் குற்றச்சாட்டுகளை 'இயந்திரத்தனமாக' பயன்படுத்தக்கூடாது : உச்ச நீதிமன்றம் கூறியது என்ன, ஏன்? - அஜய் சிஹ்னா கற்பூரம்

 தற்கொலைக்குத் தூண்டும் குற்றச்சாட்டிற்குத் தேவையான கூறுகள் என்ன? இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த தரநிலை என்ன?


வியாழக்கிழமை அன்று, இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code (IPC)), 1860-ன் பிரிவு 306-ன் கீழ் தற்கொலைக்கு தூண்டுதல் தொடர்பான வழக்குகள் குறித்து புலனாய்வு முகமைகள் (investigation agencies) மற்றும் நீதிமன்றங்களிடையே (courts) விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.


நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் கே வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, "பிரிவு 306 இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் இந்த நீதிமன்றம் வகுத்துள்ள சட்டம் குறித்து புலனாய்வு முகமைகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது. இது எந்த அடிப்படையும் இல்லாத வழக்குத் தொடரால் மக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்கும்" என்று நீதிமன்றம் கூறியது.


நிர்ணயிக்கப்பட்ட வரம்பு பூர்த்தி செய்யப்பட்ட உண்மையான வழக்குகளில் தொடர்புடையவர்கள் தப்பிக்கக்கூடாது என்றும் அது மேலும் கூறியது. இருப்பினும், இறந்தவரின் துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினரின் உடனடி உணர்ச்சிகளை அமைதிப்படுத்துவதற்காக மட்டுமே தனிநபர்களுக்கு எதிராக இந்த விதியை (S.306 IPC/S.108 BNS) பயன்படுத்தக்கூடாது.


வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நபரின் தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வங்கி மேலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கும் போது உச்ச நீதிமன்றம் இந்த அறிக்கையை வெளியிட்டது. 


தற்கொலைக்குத் தூண்டும் குற்றச்சாட்டுக்கு என்னென்ன கூறுகள் தேவை? இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தை எவ்வாறு அடைந்தது? இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்கான தரநிலையை நீதிமன்றங்கள் நிறுவியுள்ளனவா?


குற்றவியல் சட்டத்தில் தற்கொலைக்கு தூண்டுதல் 


"தூண்டுதல்" என்ற சொல் IPC-ன் பிரிவு 107-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. இது பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Sanhita(BNS)) இன் பிரிவு 45-ஐப் போன்றது. 


ஒரு நபர் ஒரு செயலைச் செய்வதற்கு உடந்தையாக இருந்தால், அவர் (i) எந்தவொரு நபரையும் அந்த செயலைத் செய்யத் தூண்டினால், அல்லது (ii) அந்தக் செயலைச் செய்வதற்கான சதியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் ஈடுபட்டால், அல்லது (iii) வேண்டுமென்றே, ஏதேனும் செயல் அல்லது சட்டவிரோதமான செயலைச் செய்வதன் மூலம் வேண்டுமென்றே நடவடிக்கைக்கு உதவுதல் மூலம், அந்த விஷயத்தைச் செய்ய உதவுகிறார். 


தற்கொலையைத் தூண்டுவதை நிரூபிக்க, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்தவரை தற்கொலைக்கு நேரடியாக ஊக்குவித்தார் அல்லது உதவினார் என்பதைக் காட்ட வேண்டும். தற்கொலைக்கு தூண்டியதற்காக, பிரிவு 306 IPC (பிரிவு 108 BNS)-ன் கீழ், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.


இந்தியாவில் குற்றம் குறித்த, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஆண்டு அறிக்கை (National Crime Records Bureau’s annual report), தற்கொலைக்குத் தூண்டுதல் (பிரிவு 306 IPC) வழக்குகளில் தண்டனை விகிதம் 2022-ல் 17.5% ஆக இருந்தது என்பதைக் காட்டுகிறது. இது கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவாகும். இதை ஒப்பிடுகையில், IPC-ன் கீழ் உள்ள அனைத்து குற்றங்களுக்கும் ஒட்டுமொத்த தண்டனை விகிதம் 69.8% ஆகும். தற்கொலைக்குத் தூண்டுதல் உட்பட கைது செய்யக்கூடிய குற்றங்களுக்கு, தண்டனை விகிதம் 54.2% ஆகும். கைது செய்யக்கூடிய குற்றங்கள் என்பது பிடி வாரண்ட் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றங்கள் ஆகும்.


காவல்துறையினர் முன்வைத்த தகவல்களின்படி, இறந்த நபர் அக்டோபர் 11, 2022 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக குற்றம் சாட்டப்பட்ட வங்கி மேலாளரால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி ஒரு தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றார். இந்த தகவலின் அடிப்படையில், வங்கி மேலாளர் மீது IPC பிரிவு 306-ன் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 


விசாரணை முடிந்ததும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 28, 2023 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 306-ன் கீழ் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. வங்கி மேலாளர் இந்த முடிவை ஏற்கவில்லை மற்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். பிரிவு 107-ன் கீழ் தூண்டுதலுக்கான நிபந்தனைகள் இந்த வழக்கில் இல்லை என்று அவர் வாதிட்டார்.


இருப்பினும், ஜூலை 25, 2023 அன்று உயர் நீதிமன்றம் மனுவை நிராகரித்து விசாரணையைத் தொடர அனுமதித்தது. தற்கொலைக் குறிப்பில் இறந்தவர் "விண்ணப்பதாரர், பலமுறை துன்புறுத்தப்பட்டதாக தெளிவாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால், வங்கி மேலாளருக்கு எதிராக ஒரு முதன்மை வழக்கு உள்ளது. மேலும், கடன் வசூலிப்பதாகக் கூறி தற்போதைய விண்ணப்பதாரரால் இறந்தவர் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டார்" என்று அது கூறியது. 


செப்டம்பர் 2023-ம் ஆண்டில், வங்கி மேலாளர் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் இரண்டையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார். நீதிபதிகள் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டது. 


இந்த ஆண்டு ஜனவரி 15 அன்று, உச்ச நீதிமன்றம் வங்கி மேலாளரை விடுவித்தது, இதுபோன்ற வழக்குகளை அன்றாட வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு நடைமுறையில் பார்க்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும் "மிகைப்படுத்தல்கள் மற்றும் முறைசாரா பரிமாற்றங்கள் எதுவும் இல்லாமல் தற்கொலை செய்வதற்கான தூண்டுதலாகக் கருதப்படக்கூடாது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 


இதுபோன்ற வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களின் அணுகுமுறையையும் நீதிமன்றம் விமர்சித்தது, "விசாரணை முகமைகள் IPC பிரிவு 306-ஐ முற்றிலும் புறக்கணித்திருந்தாலும் கூட, குற்றச்சாட்டுகளை இயந்திரத்தனமாக வடிவமைக்க நீதிமன்றம் 'சாதகமான' அறிகுறியைப் பின்பற்றக்கூடாது" என்று கூறியது. 


அக்டோபர் 2024-ம் ஆண்டில், தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்கொலையால் இறந்த ஒரு விற்பனையாளரின் சம்பந்தப்பட்ட வழக்கு இது. அவரது நிறுவனத்தில் மூத்த அதிகாரிகளால் அவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்யுமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். பணியிடம் தொடர்பான தற்கொலை வழக்குகளில் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் "தேவையற்ற வழக்குகளை" தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, இறந்தவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் அதிகாரப்பூர்வ உறவு (முதலாளிக்கும் ஊழியருக்கும் இடையே) இருக்கும் வழக்குகளில் ஆதாரத்திற்கான தடை அதிகமாக இருக்கும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலைக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று கருதியதற்கான ஆதாரங்களை நீதிமன்றங்களும் வழக்குத் தொடரும் நிறுவனங்களும் சரிபார்க்க வேண்டும், தற்கொலைக்குத் தூண்டியதற்காக ஒருவரைத் தண்டிக்க குற்றம் சாட்டப்பட்டவரால் "நேரடி மற்றும் எச்சரிக்கையான ஊக்கம் / தூண்டுதல்" இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 

நேரடி ஆதாரங்களுக்கான தேவை மற்ற உச்சநீதிமன்ற வழக்குகளிலும் காணப்படுகிறது. எம் மோகன் vs மாநில அரசு  (M Mohan vs The State) 2011 வழக்கில், தற்கொலைக்குத் தூண்டியதை நிரூபிப்பதற்கு IPC பிரிவு 306-ன் கீழ் உச்ச நீதிமன்றம் உயர் தரத்தை நிர்ணயித்தது. அதற்கு குறிப்பிட்ட நோக்கம் தேவைப்பட்டது. "இறந்தவரை தற்கொலைக்கு இட்டுச் செல்லும் ஒரு செயல் அல்லது நேரடிச் செயல் தேவை" என்று நீதிமன்றம் கூறியது. இந்தச் செயல் இறந்தவரை தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதும் நிலைக்குத் தள்ளும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்."


உதே சிங் vs ஹரியானா மாநிலம் (Ude Singh vs State of Haryana) 2019 வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த தரநிலையை உறுதி செய்தது. ஒருவரை தற்கொலைக்குத் தூண்டும் நேரடி அல்லது மறைமுக செயல்களுக்கான ஆதாரம் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர், அவர்களின் செயல்கள் மற்றும் தொடர்ச்சியான நடத்தை மூலம், இறந்தவர் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைக்கும் சூழ்நிலையை உருவாக்கினால், வழக்கு IPC பிரிவு 306-ன் கீழ் வரலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.




Original article:

Share:

புவிசார் குறியீடு (புவிசார் குறியீடு) திட்டம் (Geographical Indication (GI) scheme) என்றால் என்ன? - குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்


1. ஜனவரி 26 அன்று ஜனாதிபதியின் "அட் ஹோம்" நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்களைக் காண்பிக்கும் தனித்துவமான பரிசுகளும் அடங்கும். போச்சம்பள்ளி இகாட் துணி பென்சில் பை (தெலுங்கானா), எட்டிகொப்பகா மர பொம்மைகள் (ஆந்திரப் பிரதேசம்), கஞ்சிஃபா ஆர்ட் ஃப்ரிட்ஜ் காந்தம் (கர்நாடகா), காஞ்சிபுரம் பட்டுப் பை (தமிழ்நாடு) மற்றும் திருகு-பைன் நெய்த புக்மார்க் (கேரளா) ஆகியவை இதில் அடங்கும். அனைத்து பொருட்களும் ஆந்திராவில் இருந்து கலம்காரி வடிவங்களுடன் ஒரு மூங்கில் பெட்டியில் வழங்கப்படுகின்றன.






  



  

2. உள்ளூர் கலைகளை நிபுணத்துவத்தை முன்னிலைப்படுத்துவதே இதன் குறிக்கோள் என்று அழைப்பிதழ் கூறுகிறது. இது அரசாங்கத்தின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (One District One Product(ODOP)) மற்றும் புவியியல் குறியீடு (Geographical  Indication(GI)) திட்டங்களில் இடம்பெறும் தயாரிப்புகள் மூலம் செய்யப்படும். இது புவியியல் உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சி என்று வட்டாரங்கள் கூறுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


1. பொருட்களின் புவியியல் குறியீடுகள் (Geographical Indications (GI)) என்பது ஒரு தயாரிப்பானது தோன்றிய இடத்தைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட புவியியல் வட்டாரம், பிராந்தியம் அல்லது நாட்டில் அதன் தோற்றம் என்ற உண்மையின் காரணமாக தரம் மற்றும் தனித்துவத்தின் உத்தரவாதத்தை வெளிப்படுத்துவதால் இத்தகைய குறிச்சொற்கள் வழங்கப்படுகின்றன. 


2. இந்தியாவில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை, புவியியல் குறியீடுகளை (Geographical Indications (GI)) வழங்குகிறது.


3. ஒரு புவிசார் குறியீடு (GI) பதிவு ஒரு பிராந்தியத்துக்கு வழங்கப்படுகிறது. ஒரு வர்த்தகருக்கு அல்ல. ஆனால், ஒரு தயாரிப்பு பதிவைப் பெற்றவுடன், தயாரிப்பை கையாளும் வர்த்தகர்கள் அதை GI லோகோவுடன் விற்க விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட புவிசார் குறியீடு எண் (unique GI number) ஒதுக்கப்படுகிறது. 


4. ஒரு அங்கீகரிக்கப்படாத வர்த்தகர் அந்தப் பெயரில் தயாரிப்பை விற்க முயற்சித்தால், அவர்கள் மீது வழக்குத் தொடரலாம். இது பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் (Geographical Indications of Goods (Registration and Protection) Ac), 1999 -ன் கீழ் செய்யப்படுகிறது.




Original article:

Share:

ஆப்கானிஸ்தான் மீதான இந்தியாவின் முக்கிய அக்கறைகள் என்ன? - குஷ்பு குமாரி

 1. ஒரு கால் நூற்றாண்டுக்குப் பிறகு, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கடந்த வாரம் துபாயில் மூத்த இந்திய இராஜதந்திரிகளின் (senior Indian diplomats) குழுவிற்கு தலைமை தாங்கினார். அவர்கள் இரண்டாவது தாலிபான் ஆட்சியின் வெளியுறவுச் செயலாளர் அமீர் கான் முட்டாகியுடன் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தினர்.


2. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அஷ்ரப் கானி அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் காபூலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்களுடன் இந்தியாவின் "கவனமான ஈடுபாட்டின்" (cautious engagement) முன்னேற்றத்தின் உச்சக்கட்டமாக இந்த சந்திப்பு இருந்தது. 


3. ஆகஸ்ட் 31, 2021 அன்று, கடைசி அமெரிக்க இராணுவ விமானம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, காபூலில் உள்ள புதிய ஆட்சியாளர்களின் வேண்டுகோளின் பேரில், இந்தியா தலிபான்களுடன் தனது முதல் அதிகாரப்பூர்வ தொடர்பை (official contact) மேற்கொண்டது. 


4. இன சிறுபான்மையினருக்கு குறைந்த பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை என்று தாலிபான் அறிவித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா ஒரு "உள்ளடக்கிய அரசாங்கத்திற்கு" அழைப்பு விடுத்தது. இதில், இந்தியாவிற்கு "உடனடி அண்டை நாடு மற்றும் ஆப்கானிய மக்களுக்கு ஒரு நண்பன்" என்ற முறையில் இந்த நிலைமை தனக்கு "நேரடி அக்கறை" (direct concern) என்று இந்தியா கூறியது.


5. டிசம்பர் 2021-ம் ஆண்டில், இந்தியா 1.6 டன் அத்தியாவசிய மருந்துகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. ஆளும் ஆட்சியை ஆப்கானிஸ்தான் மக்களிடமிருந்து பிரிக்க இந்தியா ஒரு அரசியல் முடிவை எடுத்ததை இது காட்டுகிறது. இது தலிபான்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் திறந்தது.


6. டிசம்பர் 2022-ம் ஆண்டில், பல்கலைக்கழகங்களில் பெண்கள் மீதான தடை குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. மேலும், ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்திற்கான அழைப்பை புதுப்பித்தது. 


7. அக்டோபர் 2023-ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் பணியை முற்றிலும் நிறுத்தியது. வளங்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையே இதற்குக் காரணம் ஆகும். "ஆப்கானிஸ்தானின் சிறந்த நலன்களுக்கு சேவை செய்ய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய" இது தவறிவிட்டது.


8. முக்கிய தலிபான் தலைவர்களுடனான உரையாடல்களில், தலிபான்கள் "ஈடுபடத் தயாராக உள்ளனர்" என்ற உணர்வை இந்திய அதிகாரிகள் பெற்றுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப தலிபான்கள் உதவியை எதிர்பார்க்கின்றனர். 

7. ஆப்கானிஸ்தானில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வரும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளைவிட, இந்தியா பின்வாங்க விரும்பவில்லை.


8. தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைமை நிறைய மாறிவிட்டது. ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான ஈரான் பெரிதும் பலவீனமடைந்துள்ளது. ரஷ்யா தற்போது அதன் சொந்தப் போரில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகளுக்காக அமெரிக்கா காத்திருக்கிறது.


9. இந்தியாவானது இதன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அதிகாரப்பூர்வ ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டிய நேரம் இது என்று இப்போது முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அதன் பல ஆண்டு முதலீட்டைப் பாதுகாக்க வேண்டியது இதன் முக்கியம் ஆகும். இந்தியாவின் முக்கிய கவலையானது பாதுகாப்பு. ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் இருந்து எந்த இந்திய எதிர்ப்பு பயங்கரவாதக் குழுவும் செயல்பட அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


1. ஆப்கானிஸ்தானின் புவிசார் அரசியல் முக்கியத்துவமானது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அப்பால் நீண்டுள்ளது. இது ஒரு பல இனக்குழுக்களைக் கொண்ட ஒரு நிலத்தால் சூழப்பட்ட நாடு. அதன் இருப்பிடம் உலக அரசியலில் அதை முக்கியமானதாக ஆக்குகிறது. இது மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிற்கு அருகில் உள்ளது. இந்த தனித்துவமான இருப்பிடம் உலகளாவிய மற்றும் பிராந்திய சக்திகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


2. 19ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் ஒரு இடையக மண்டலமாக (buffer zone) இருந்தது. இது ஜாரிச ரஷ்யாவிற்கும், ஏகாதிபத்திய பிரிட்டனுக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. பனிப்போரின்போது, ​​ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான போட்டியின் மையப் புள்ளியாக மாறியது. 9/11-க்குப் பிறகு, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்", ஆப்கானிஸ்தான் மீண்டும் புவிசார் அரசியலில் முக்கியத்துவத்தைப் பெற்றது. உலகளாவிய சக்திகள் தங்கள் சொந்த தேசிய நலன்களுக்கு சேவை செய்ய ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தின.


3. ஆனால், இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு பழமையானது. இது சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையதாகும். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த உறவின் அடித்தளம் ஜனவரி 4, 1950 அன்று கையெழுத்திடப்பட்ட நட்பு ஒப்பந்தம் (Treaty of Friendship) ஆகும்.


4. இந்தியா ஆப்கானிஸ்தானை நோக்கிய தனது கொள்கையை கவனமாக உருவாக்கியுள்ளது. அதன் தேசிய நலன்களை ஆப்கானிஸ்தான் மக்களின் தேவைகளுடன் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனநாயக மதிப்புகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியா வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.


5. 1990-ம் ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (Inter-Services Intelligence(ISI)) ஆதரவு அளித்தது. 1999-ம் ஆண்டுகளில் காந்தஹாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC814 கடத்தப்பட்ட பிறகு நிலைமை இன்னும் மோசமடைந்தது.


6. இருப்பினும், 2001-ம் ஆண்டில் ஜனநாயகம் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டபோது இருநாட்டின் உறவு மேம்பட்டது. இதில், ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானின் அதிபரானார். ஆப்கானிஸ்தானின் மறுகட்டமைப்பில் இந்தியா மீண்டும் ஈடுபட்டது. உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் கவனம் செலுத்தியது.




Original article:

Share: