கிராமங்களில் சொத்து அட்டைகளை வழங்கும் SVAMITVA திட்டம் என்றால் என்ன? இதனால் யார், எப்படி பயன்பெறுகிறார்கள்? -ஹரிகிஷன் சர்மா

 கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் வரைபட (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas (SVAMITVA)) திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டவுடன், ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க முடியும் என்று கூறினார்.


காணொளிக் காட்சி மூலம் 50,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து அட்டைகள் விநியோகிக்கப்பட்ட நிகழ்வில் பிரதமர் பேசினார். இதுவரை கிராமங்களில் உள்ள 2.25 கோடி மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தங்கள் வீடுகளுக்கான சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

SVAMITVA திட்டம் என்றால் என்ன, அதன் மூலம் யார் பயனடைகிறார்கள்? இது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? 




 SVAMITVA திட்டம் என்றால் என்ன? 


SVAMITVA என்பது கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராமங்களை ஆய்வு செய்தல் மற்றும் வரைபடமாக்குதல் என்பதாகும். கிராமங்களில் வீடுகளை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு “உரிமைகளின் பதிவை” (record of rights) வழங்குவதையும் அவர்களுக்கு சொத்து அட்டைகளை வழங்குவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


ட்ரோன்களைப் பயன்படுத்தி அனைத்து கிராமப்புற சொத்துக்களையும் கணக்கெடுத்து ஒவ்வொரு கிராமத்திற்கும் புவியியல் தகவல் அமைப்பு (Geographic information system (GIS)) அடிப்படையிலான வரைபடங்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


இந்தத் திட்டம் பிரதமர் மோடியால் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24, 2020 அன்று தொடங்கப்பட்டது.


சொத்து அட்டைகள் விநியோகம் அக்டோபர் 11, 2020 அன்று தொடங்கப்படது.


SVAMITVA சொத்து அட்டையின் நன்மை என்ன? 


SVAMITVA திட்டம் கிராமப்புற மக்களுக்கு பல வழிகளில் பயனளிப்பதாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கூறியுள்ளது. முதலாவதாக, கிராமப்புற குடும்பங்கள் கடன்கள் மற்றும் பிற நிதி சலுகைகளைப் பெறுவதற்கு தங்கள் சொத்தை நிதிச் சொத்தாகப் பயன்படுத்த இது அனுமதிக்கிறது.


"சட்ட ஆவணங்களைப் பெற்ற பிறகு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சொத்துக்களின் அடிப்படையில் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். இந்தப் பணத்தைக் கொண்டு, அவர்கள் கிராமத்தில் சிறு தொழில்களைத் தொடங்கியுள்ளனர். இவர்களில் பலர் சிறு மற்றும் நடுத்தர விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, இந்த சொத்து அட்டைகள் பொருளாதாரப் பாதுகாப்பிற்கான பெரிய உத்தரவாதமாக மாறியுள்ளன" என்று பிரதமர் மோடி சனிக்கிழமை குறிப்பிட்டார்.


இரண்டாவதாக, கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் வரைபட (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas (SVAMITVA)) திட்டம் சொத்து வரியை நிர்ணயிக்க உதவுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலங்களில் உள்ள கிராம பஞ்சயத்துகள் நேரடியாக வரிகளை வசூலிக்க முடியும். சொத்து அட்டைகள் சந்தையில் நிலப் பகுதிகளின் பணப்புழக்கத்தையும் அதிகரிக்கின்றன. இது கிராமத்திற்கு நிதிக் கடன் கிடைப்பதை அதிகரிக்க உதவுகிறது.


கிராமப்புற திட்டமிடலுக்கான துல்லியமான நிலப் பதிவுகளை உருவாக்கவும் இந்த திட்டம் உதவுகிறது. அனைத்து சொத்து பதிவுகள் மற்றும் வரைபடங்கள் கிராமப் பஞ்சாயத்து மட்டத்தில் கிடைக்கின்றன. இது கிராம வரிவிதிப்பு, கட்டுமான அனுமதிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவுகிறது.


SVAMITVA திட்டத்தை செயல்படுத்துவது ஒரு சொத்து அட்டையை உருவாக்குவதற்கான பல கட்ட செயல்முறையைப் பின்பற்றுகிறது. இது இந்திய சர்வே  (Survey of India (SoI)) மற்றும் அந்தந்த மாநில அரசாங்கங்களுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் தொடங்குகிறது. தேசிய நிலப்பரப்பு தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு SoI அமைப்பு பொறுப்பாகும். இது நிலப்பரப்பு வரைபடத்திற்கு ட்ரோன்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான வாகனங்கள் (Unmanned Air Vehicles (UAV)) போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. 


புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, தொடர்ச்சியாக செயல்படும் குறிப்பு அமைப்பு (Continuously Operating Reference System (CORS)) அமைக்கப்படுகிறது. CORS நெட்வொர்க் என்பது குறிப்பு நிலையங்களின் அமைப்பாகும். இது நீண்டதூர, உயர்-துல்லிய நெட்வொர்க் நிகழ்நேர இயக்கவியல் (Real-Time Kinematic) நிலைப்படுத்தல் திருத்தங்களை அணுக அனுமதிக்கும் ஒரு மெய்நிகர் அடிப்படை நிலையத்தை வழங்குகிறது. நெட்வொர்க் தரை கட்டுப்பாட்டுப் புள்ளிகளை நிறுவ உதவுகிறது. துல்லியமான புவி-குறிப்பு, தரை மெய்ப்பு அளவை (ground truthing) மற்றும் நில எல்லை நிர்ணயம் ஆகியவற்றிற்கு இது முக்கியமானது.


அடுத்த கட்டமாக கணக்கெடுப்புக்காக கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, சொத்து மேப்பிங் செயல்முறை குறித்து குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கிராமத்தின் மக்கள் வசிக்கும் பகுதி (அபாடி) குறிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு கிராமப்புற சொத்தும் சுண்ணாம்புக் கற்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த பகுதிகளின் பெரிய அளவிலான வரைபடத்திற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.


அபாடி நிலம் (Abadi land) என்றால் என்ன?


அபாடி நிலம் என்பது ஒரு கிராமத்திற்குள் வசிக்கும் அல்லது குடியிருப்புப் பகுதியைக் குறிக்கிறது, பொதுவாக வீடுகள் மற்றும் பிற கட்டமைப்புகள் உள்ள பகுதி.


ட்ரோன் படங்களைப் பயன்படுத்தி, 1:500 அளவில் ஒரு GIS தரவுத்தளம் உருவாக்கப்படுகிறது. கிராம் மஞ்சித்ரா (Gram Manchitra) எனப்படும் கிராம வரைபடங்களும் வரையப்படுகின்றன. வரைபடங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, ஒரு தரை சரிபார்ப்பு செயல்முறை பின்பற்றப்படுகிறது. ட்ரோன் கணக்கெடுப்பு குழுக்கள் வரைபடங்களை சரிபார்த்து, தேவைப்பட்டால் திருத்தங்களைச் செய்கின்றன. இந்த கட்டத்தில், மோதல்கள் அல்லது தகராறுகளைத் தீர்ப்பதற்கான செயல்முறை நிறைவடைகிறது.


சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு, இறுதி சொத்து அட்டைகள் அல்லது உரிமைப் பத்திரங்கள், "சம்பட்டி பத்ரக்" (Sampatti Patrak) என்று அழைக்கப்படுகின்றன. பின்னர் இந்த அட்டைகள் கிராம வீட்டு உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் அல்லது அச்சு நகல்களாக வழங்கப்படுகின்றன.


2020ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் முதலில் ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் சுமார் 1 லட்சம் கிராமங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. 2023-24 நிதியாண்டின் இறுதிக்குள் நாட்டில் உள்ள 6.62 லட்சம் கிராமங்களை சேர்ப்பதே இலக்காக இருந்தது.


இலக்கு வைக்கப்பட்ட கிராமங்களில் 92%-ஐ உள்ளடக்கிய 3.17 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், திரிபுரா, கோவா, உத்தரகண்ட் மற்றும் ஹரியானாவில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பல யூனியன் பிரதேசங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.


அமைச்சகத்தின் கூற்றுப்படி, மொத்தம் 67,000 சதுர கி.மீ கிராமப்புற அபாடி நிலம் (Abadi land) கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.132 லட்சம் கோடி, இது இந்த முயற்சியின் பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


இப்போது, SVAMITVA திட்டத்தின் வெற்றியை உலக அளவில் காட்சிப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மார்ச் 2025-ல், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்  வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, இந்தியாவில் நில நிர்வாகம் குறித்த சர்வதேச கருதரங்கத்தை (International Workshop on Land Governance) நடத்தவுள்ளது. இந்தப் கருத்தரங்கத்தில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து 40 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். 


இந்தக் கருத்தரங்கம் சிறந்த நடைமுறைகள் மற்றும் மேம்பட்ட ட்ரோன் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உலகளவில் இதே போன்ற முயற்சிகளுக்கான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். மே 2025-ல், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வாஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி நில நிர்வாக மாநாட்டில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சாதனைகளை முன்னிலைப்படுத்துவதும், மற்ற நாடுகள் இந்த மாதிரியை ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். ஜனவரி 17 அன்று அமைச்சகத்தின் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.




Original article:

Share: