பிளாக்செயின் தொழில்நுட்பம் போலித்தகவல்களை எவ்வாறு திறம்பட எதிர்கொள்ளும்? தேவைப்படாத வணிகத் தகவல்தொடர்புகளுக்கு எதிராக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் என்ன? ஏற்கனவே எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் தேவையற்ற அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருந்ததா? தொந்தரவு செய்யாத பதிவு என்றால் என்ன?
போலித்தகவல்களை எதிர்த்துப் போராடுவதில் டிராயின் பங்கு என்ன?
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India (TRAI)) தொலைத்தொடர்புத் துறையை ஒழுங்குபடுத்துகிறது. இதன் முக்கியப் பணி, போலித்தகவல்களின் அதிகாரப்பூர்வ வார்த்தையான தேவையற்ற வணிகத் தொடர்புகளை (Unsolicited Commercial Communications (UCC)) கட்டுப்படுத்துவதாகும். 2007ஆம் ஆண்டில், டிராய் தொந்தரவு செய்யாத (do-not-disturb (DND)) பதிவேட்டை உருவாக்கியது. இது வாடிக்கையாளர் விருப்பங்களைப் பின்பற்றுமாறு தொலைபேசி விளம்பர அழைப்புகளை கட்டாயப்படுத்துகிறது. குறிப்பாக, இது வணிக அழைப்புகளுக்குப் பொருந்தும்.
ஒரு வாடிக்கையாளர் தொந்தரவு செய்யாத (do-not-disturb (DND)) பதிவேட்டில் சேர்ந்தால், அவர்கள் எந்த போலித்தகவல் அழைப்புகள் அல்லது குறுஞ் செய்திகளையும் (Short Message Service (SMS)) பெறக்கூடாது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒரு வெளிப்புற நிறுவனத்துடன் இணைந்து தொந்தரவு செய்யாத (do-not-disturb (DND)) பதிவேட்டு செயலியை உருவாக்கியது. இந்த செயலி வாடிக்கையாளர்கள் தங்கள் DND விருப்பங்களைப் பதிவுசெய்து புகார்களை பதிவுசெய்ய அனுமதிக்கிறது. தொலைத்தொடர்பு வணிக தொடர்பு வாடிக்கையாளர் விருப்ப ஒழுங்குமுறை (Telecom Commercial Communication Customer Preference Regulation (TCCCPR)) 2018-ன் கீழ், DND-பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்ட தொலைபேசி விளம்பரதரர்கள் எச்சரிக்கைகளைப் பெறுவார்கள். அவர்களுக்கு போதுமான எச்சரிக்கைகள் கிடைத்தால், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு செய்திகளை அனுப்புவதிலிருந்து அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
தொந்தரவு செய்யாத பதிவேட்டு (do-not-disturb (DND)) செயலியை டிராய் பராமரிப்பதில்லை. 2022 முதல் சிறிது காலம் அந்த செயலி செயல்பாட்டில் இல்லை. பயனர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் செய்திகளைப் புகாரளிக்க வேண்டிய குறுஞ் செய்தி அறிக்கையிடல் அமைப்பு இருந்தது. இருப்பினும், செயல்முறையை எளிதாக்க டிராய் நடவடிக்கை எடுத்தது. 2024ஆம் ஆண்டில், அனைத்து தொலைத்தொடர்பு வழங்குநர்களும் தங்கள் பயன்பாடுகளில் DND அறிக்கையிடலைச் சேர்க்க வேண்டும் என்று டிராய் கேட்டுக் கொண்டது.
பிளாக்செயின் என்ன பங்கு வகிக்கிறது?
அதிக எண்ணிக்கையிலான போலித்தகவல் செய்திகளை எதிர்த்துப் போராட, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (டெல்கோக்கள்) ஒரு விதியை அறிமுகப்படுத்தியது. இந்த விதியின்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (டெல்கோக்கள்) பகிர்ந்தளிக்கப்பட்ட பேரேடு (distributed ledger) என்றும் அழைக்கப்படும் பிளாக்செயின் பேரேடைப் பயன்படுத்த வேண்டும். பேரேடு அங்கீகரிக்கப்பட்ட குறுஞ் செய்தி அனுப்புநர்களின் தகவல்களைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட பட்டியலைச் சேமிக்கிறது. டெல்கோக்கள் சில செய்தி வடிவங்களையும் அங்கீகரிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, “உங்கள் OTP 433212” போன்ற ஒரு முறை கடவுச்சொல் (One Time PasswordOTP)) செய்தி, பிளாக்செயினில் “உங்கள் OTP” என எண்ணுக்கு இடமளித்து சேமிக்கப்படும். இந்தச் செய்திகள் தொலைபேசி எண்களிலிருந்து அல்ல, அனுப்புநர் ஐடிகளிலிருந்து அனுப்பப்பட வேண்டும்.
போலித்தகவல் குறுஞ்செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான உலகின் மிகக் கடுமையான விதிகளில் இதுவும் ஒன்று. பிளாக்செயின் தொழில்நுட்பம் "மாறாத தன்மையை" உறுதி செய்கிறது. அதன்படி, ஒரு பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஒரே தரவின் நம்பகமான மற்றும் சேதப்படுத்த முடியாத பதிப்பு உள்ளது. 2018 விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, போலித்தகவல் விலக்கு தரவுத்தளத்தைப் பராமரிக்க பிளாக்செயினைப் பயன்படுத்துவது குறித்து விவாதம் நடந்தது. அந்த நேரத்தில், கிரிப்டோகரன்சிகளை தாண்டி பிளாக்செயின் பற்றி நிறைய செய்திகள் இருந்தன.
2024 ஆம் ஆண்டில், செய்திகளின் "கண்டறிதலை" உறுதி செய்வதற்காக விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. ஒரு குறுஞ்செய்தியை அனுப்புவதற்கு முன் ஒரு செய்தியை யார் அனுப்பினார்கள் என்பதற்கான முழு பதிவையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அமைப்பில் உள்ள ஒரு பெரிய குறைபாட்டை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாக்செயின் அமைப்புகளில் எவரும் பதிவுசெய்து, ஏற்கனவே உள்ள பாதுகாப்புகள் இருந்தபோதிலும் மோசடி அல்லது போலித்தகவல் செய்திகளை அனுப்ப இது அனுமதித்தது. இந்த விதிகள் அடுத்த ஆண்டு இன்னும் கடுமையாக்கப்படும் என்று லஹோட்டி கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருந்ததா?
தங்கள் DND விருப்பங்களைப் பதிவு செய்தவர்களுக்கு, விதிகளைப் பின்பற்றும் முறையான வணிகங்களிலிருந்து வரும் தகவல்தொடர்புகள் குறைந்திருக்கலாம். இருப்பினும், போலித்தகவல் மாறிக்கொண்டே இருக்கிறது. டிஜிட்டல் மயமாக்கலின் எழுச்சி வணிகச் செய்தி அனுப்புதல் மற்றும் அழைப்பிற்கு எதிரான பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்கான ஊக்கத்தொகைகளை அதிகரித்துள்ளது. மோசடி அழைப்புகளின் புதிய அலை உருவாகியுள்ளது. சைபர் குற்றவாளிகள் இந்தியர்களை நிதி மோசடிகளில் ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இந்த மோசடிகளில் பல, 10 இலக்க தொலைபேசி எண்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இது போலித்தகவல் எதிர்ப்பு விதிகளைச் செயல்படுத்துவதை கடினமாக்குகிறது.
சர்வதேச எண்களிலிருந்து வரும் போலித்தகவல் மற்றும் மோசடி அழைப்புகளின் பிரச்சனையும் உள்ளது. இந்த எண்களை இணையவழி ஒலி நெறிமுறை (online Voice over Internet Protocol (VoIP)) வழங்குநர்களிடமிருந்து வாடகைக்கு எடுக்கலாம். ஆனால், அவை முறையான சர்வதேச அழைப்புகளைப் போலவே இருக்கும்.
போலித்தகவலை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுத்துள்ள பிற நடவடிக்கைகள் என்ன?
தொலைத்தொடர்புத் துறை ( Department of Telecommunications (DoT)), சஞ்சார் சாதி தளத்தை (Sanchar Saathi portal) தொடங்கியுள்ளது. இந்த தளத்தில் சக்சு (Chakshu) என்ற அறிக்கையிடல் தளம் உள்ளது. "சந்தேகத்திற்குரிய மோசடி" (suspected fraudulent) அழைப்புகள் மற்றும் செய்திகளின் புகார்களை ஏற்க, சட்ட அமலாக்கத்துறை, வங்கிகள் மற்றும் பிறருடன் DoT இணைந்து செயல்படுகிறது. அங்கீகரிக்கப்படாத தொலைபேசி விளம்பரதாரர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுடன் இணைக்கப்பட்ட பல எண்களையும் அவர்கள் ரத்து செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான இணைய போக்குவரத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க, புதுடெல்லியில் தொலைத்தொடர்பு பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை தொலைத்தொடர்புத் துறை அமைத்துள்ளது.
இதற்கிடையில், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை "சந்தேகத்திற்குரிய போலித்தகவல்" (Suspected Spam) என்று பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளன. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. ஏர்டெல், ஸ்மார்ட்போன்களில் சர்வதேச அழைப்புகளின் தகவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளது.