கச்சத்தீவின் உரிமை தொடர்பாக நீண்டகாலமாக இருந்து வந்த சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு பிரிவது முறைப்படுத்தப்பட்டது. இரு நாடுகளும் தங்கள் கடல் எல்லைகளை உறுதிப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் முயன்ற நேரத்தில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், 1976ஆம் ஆண்டில், இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது, இது மீன்பிடி உரிமைகள் மற்றும் இந்திய மீனவர்களுக்கான அணுகல் ஆகியவற்றை மேலும் விவரிக்கிறது, இது 1974 ஒப்பந்தத்தின் இயக்கவியலை மாற்றியது.
இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இராஜதந்திர ரீதியானவை, பரந்த கடல்சார் நலன்களுக்காக பிராந்திய உரிமைகோரல்களை வர்த்தகம் செய்தல் மற்றும் பிராந்தியத்தில் இந்தியாவின் இராஜதந்திர நலன்களுடன் அணிசேர்தல் ஆகியவையாக இருந்தன. இந்த வரலாற்று நகர்வுகள் உள்ளூர் மீனவர்களின் உரிமைகள் மற்றும் இந்தியாவின் பிராந்திய சலுகைகள் மீதான அவற்றின் தாக்கம் குறித்த விவாதத்தைத் தொடர்ந்து தூண்டுகின்றன.
முதலில் கச்சத்தீவு என்றால் என்ன?
கச்சத்தீவு, இலங்கையின் கடல் எல்லைக் கோட்டிற்குள் கடலில் உள்ள 285 ஏக்கர் நிலப்பரப்பு ஆகும். இது, இந்தியக் கடற்கரையிலிருந்து தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 33 கிமீ தொலைவிலும், இலங்கையின் டெல்ஃப்ட் (Delft) தீவின் தென்மேற்கிலும் அமைந்துள்ளது. சில அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, 14ஆம் நூற்றாண்டின் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து உருவான இந்த சிறிய, தரிசு தீவு, 1.6 கிமீ நீளம் மற்றும் 300 மீட்டர் அகலம் கொண்டது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, சென்னை மாகாணத்தில் ராமநாதபுரத்தில் 1795 முதல் 1803 வரை ஜமீன்தாரியாக இருந்த ராமநாதபுரம் ராஜாவின் கட்டுப்பாட்டில் தீவு இருந்தது. தீவில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் தேவாலயம் ஆண்டு விழாவிற்கு இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து பக்தர்கள் பங்கேற்பர்.
1974 இல் தீவுக்கு என்ன நடந்தது?
கச்சத்தீவை இலங்கையின் எல்லைக்குள் வைத்து ஒரு கணக்கெடுப்பின் பின்னர், இந்தியாவும் இலங்கையும் குறைந்தது 1921 முதல் கச்சத்தீவை உரிமை கொண்டாடி வந்தன. ராமநாதபுரம் அரசின் தீவின் உரிமையை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் இந்தியக் குழு இதை எதிர்த்துப் போராடியது. இந்த சர்ச்சைக்கு தீர்வு காண முடியவில்லை, சுதந்திரத்திற்குப் பிறகும் அது தொடர்ந்தது.
1974 ஆம் ஆண்டு, இந்திரா பிரதமராக இருந்தபோது, இரு அரசாங்கங்களும், ஜூன் 26 அன்று கொழும்பிலும், ஜூன் 28ஆம் தேதி புது தில்லியிலும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இதன் மூலம் கச்சத்தீவு இலங்கைக்குச் சென்றது, ஆனால் இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் "ஓய்வெடுத்துக் கொள்ளவும், வலைகளை உலர்த்துதல் போன்ற பணிகளைச் செய்யவும் மற்றும் வருடாந்திர புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்துக் கொள்ளவும்,” அனுமதி வழங்கப்பட்டது.
"இந்திய மீனவர்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கச்சத்தீவுக்குச் செல்வதற்கான அணுகல் உண்டு, மேலும் இந்த நோக்கங்களுக்காக இலங்கை பயண ஆவணங்கள் அல்லது விசாவைப் பெற வேண்டிய அவசியமில்லை" என்று ஒப்பந்தம் கூறுகிறது. ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ன் கீழ், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெற்ற தகவலின்படி, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மத்திய அரசின் முடிவுக்கு, அப்போது மு.கருணாநிதி தலைமையிலான தமிழக தி.மு.க அரசு அமைதியாக ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு மாற்றப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அப்போதைய வெளியுறவு அமைச்சர் கேவல் சிங்குக்கும் கருணாநிதிக்கும் இடையே நடந்த சந்திப்பின் அறிக்கையில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்ட பதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அண்ணாமலையின் கூற்றுப்படி, கருணாநிதி "இந்த முடிவின் ஒரு பகுதியாக இருந்தார்" என்றும் மேலும் "முடிவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க முடியுமா" என்று மட்டுமே கேட்டார்.
ஆனால், கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக 1974-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முதல்வர் கருணாநிதி முயன்றார். ஆனால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க அதை ஏற்க மறுத்துவிட்டதாக தமிழ்நாடு சட்டமன்றப் பதிவுகள் காட்டுகின்றன.
1976 இல் என்ன நடந்தது?
ஜூன் 1975 இல், இந்திரா காந்தி அவசரநிலையை கொண்டு வந்தார் மற்றும் ஜனவரி 1976 இல் திரு.மு.கருணாநிதி தலைமையிலான அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதன்பிறகு, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுச் செயலர்களுக்கு இடையே பல கடிதங்கள் பரிமாறப்பட்டன, மேலும் கச்சத்தீவு பிரச்சினையில் நிர்வாக உத்தரவுகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது.
பேச்சுவார்த்தைகள் மற்றும் உத்தரவுகள் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லையை கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள ‘வாட்ஜ் பேங்க்’ (Wadge Bank) எனப்படும் கடல்சார் இணைப்பின் மீது இந்தியாவிற்கு இறையாண்மையை வழங்குவதன் மூலம் தீர்க்கப்பட்டது. வாட்ஜ் பேங்க் கன்னியாகுமரியின் தெற்கே அமைந்துள்ளது, மேலும் இது 76°.30’ E முதல் 78°.00 E தீர்க்கரேகை மற்றும் 7°.00 N முதல் 8° 20’ N அட்சரேகை வரையில் 4,000-சதுர மைல் பரப்பளவைக் கொண்டதாக இந்திய மீன்வளக் கணக்கெடுப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது உலகின் வளமான மீன்பிடி தளங்களில் ஒன்றாகும், மேலும் கச்சத்தீவை விட கடலின் மிகவும் இராஜதந்திர பகுதியில் உள்ளது. கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள இந்தப் பகுதி தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியத்துவம் வாய்ந்தது.
மார்ச் 1976இல் இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம், "வாட்ஜ் பேங்க் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்ளது, மேலும் அந்த பகுதி மற்றும் அதன் வளங்கள் மீது இந்தியாவுக்கு இறையாண்மை உரிமை உண்டு" மற்றும் "இலங்கையின் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் இந்தக் கப்பல்களில் இருப்பவர்கள் வாட்ஜ் பேங்கில் மீன்பிடிக்கக் கூடாது" எனக் கூறுகிறது.
எவ்வாறாயினும், "இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில்", இந்தியாவால் உரிமம் பெற்ற இலங்கை படகுகள் வாட்ஜ் பேங்கில் "இந்தியா தனது பிரத்யேக பொருளாதார மண்டலத்தை நிறுவிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மீன்பிடிக்கலாம்" என்று இந்தியா ஒப்புக்கொண்டது". ஆனால் ஆறு இலங்கை மீன்பிடி கப்பல்களுக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை, மேலும் வாட்ஜ் பேங்கில் அவற்றின் மீன்பிடிப்பு எந்த வருடத்திலும் 2,000 டன்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
மூன்று வருட காலப்பகுதியில் இந்தியா "வாட்ஜ் பேங்கை பெட்ரோலியம் மற்றும் பிற கனிம வளங்களுக்காக ஆய்வு செய்ய முடிவு செய்தால்", இலங்கை படகுகள் "இந்த மண்டலங்களில் மீன்பிடி நடவடிக்கையை நிறுத்தும்...”. இது இந்த மண்டலங்களில் ஆய்வு தொடங்கும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்” என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களுக்குப் பிறகு என்ன நடந்தது?
1970களில் கவனம் செலுத்துவது பிராந்திய எல்லைகள் மீதான போட்டி உரிமைகோரல்களைத் தீர்ப்பதில் இருந்தது. இது கச்சத்தீவை இலங்கைக்கும் மற்றும் வளங்கள் நிறைந்த வாட்ஜ் பேங்கை (Wadge Bank) இந்தியாவுக்கும் வழங்கும் ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்தது.
1990களில், வாட்ஜ் பேங்கின் கிழக்கே உள்ள பால்க் ஜலசந்தி, இந்தியப் பகுதியில் வலுவான அடிமட்ட இழுவை மீன்பிடி இழுவைப்படகுகளின் (bottom-trawl fishing trawlers) பெருக்கத்தைக் கண்டது. அந்த நேரத்தில் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தது. கடல் பிராந்தியத்தில் அதன் கடற்படை பெரிய அளவில் இருக்கவில்லை. இந்திய மீன்பிடி படகுகள் இந்த நேரத்தில் மீன்பிடிக்க இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவது வழக்கம்.
1991 ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக சட்டமன்றம் கச்சத்தீவை மீட்டெடுக்கவும், இந்திய தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்கவும் கோரியது. ஆனால், அந்த நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக இலங்கையுடன் கோரிக்கையை பின்பற்ற முடியவில்லை.
2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு நிலைமை மாறியது. இந்திய மீனவர்கள் கடல் வளம் குறைந்ததால் இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ந்து அத்துமீறி நுழைந்ததால், இலங்கை கடற்படையினர் கைது செய்து, நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளை அத்துமீறி அழித்துள்ளனர். இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் மீண்டும் எழுந்தன.
இந்திய தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இலங்கை எவ்வாறு பதிலளித்தது?
கச்சத்தீவு தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்சினையுடன் கச்சத்தீவின் நிலையை இணைக்க இலங்கை மறுத்துவிட்டது.
இலங்கை அரசின் அமைச்சரவையின் அமைச்சர் ஒருவர் திங்களன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ”இந்த இரண்டு பிரச்சினைகளையும் இணைப்பது பொருத்தமற்றது மற்றும் தவறானது. ஏனெனில், இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினை அவர்கள் இந்திய கடற்பகுதிக்கு வெளியே மீன்பிடிக்க அவர்கள் பயன்படுத்தும் அடிமட்ட விசைப்படகுகள் பற்றியது. இது சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி சட்டவிரோதமானது” என்றார்.
“இந்தப் பெருங்கடல் பகுதி முழுவதிலும் கடல் வளங்கள் பெருமளவில் சுரண்டப்படுவதும், அழிவதும் நிகழும்போது, இந்தியத் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான இந்த இழுவைப் படகுகளால் பாதிக்கப்படுவது முஸ்லிம்களோ சிங்கள மீனவர்களோ அல்ல, இலங்கைத் தமிழ் மீனவர்களே” என்று இலங்கை அமைச்சர் கூறினார்.
மேலும் இந்த விவகாரம் எப்படி உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது?
2008ஆம் ஆண்டு, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அரசியல் சட்ட திருத்தம் இல்லாமல் வேறு நாட்டிற்கு வழங்க முடியாது என்றும் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 1974 ஒப்பந்தம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மற்றும் வாழ்வாதார விருப்பங்களை பாதித்தது என்று ஜெயலலிதா வாதிட்டார்.
2011-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பிறகு, இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். 2012ல், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனது மனுவை விரைவுபடுத்துமாறு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆகஸ்ட் 2014 இல், அப்போதைய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, இந்த விவகாரம் முடிக்கப்பட்டுவிட்டதாகவும், கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கு "போர்" தேவைப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். “1974ல் ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு சென்றது. இன்று அதை எப்படி திரும்பப் பெற முடியும்? கச்சத்தீவை மீட்க வேண்டுமென்றால், அதை மீட்க போர் தொடுக்க வேண்டும்” என்றார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இப்போது மீண்டும் பிரச்சினை தலைதூக்கியுள்ளதால், இனி என்ன நடக்கும்?
பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க தலைமை, இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்ததாகக் கூறி காங்கிரஸ் மற்றும் தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர். “இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை வலுவிழக்கச் செய்வதே 75 ஆண்டுகளாக காங்கிரஸின் செயல்பாடுகள்” என்றும், “தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்க தி.மு.க எதுவும் செய்யவில்லை” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தல் பிரச்சாரப் பேச்சுக்கள் ஒருபுறம் இருக்க, இந்தியாவிற்கான தீவை மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்திய அரசாங்கம் எந்தவொரு உறுதியான நகர்வையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கேட்டதற்கு, திங்களன்று ஜெய்சங்கர், "இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது" என்று கூறினார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தமிழ் வம்சாவளி அமைச்சரான ஜீவன் தொண்டமான், ”கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் பெறப்படவில்லை” என இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
“இலங்கையுடனான நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை இயற்கையானது மற்றும் ஆரோக்கியமானது. இதுவரை, கச்சத்தீவு அதிகாரங்களை இந்தியாவிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இந்தியாவிடம் இருந்து இதுவரை அப்படி ஒரு கோரிக்கை பெறப்படவில்லை. அப்படி தொடர்பு இருந்தால், வெளியுறவு அமைச்சகம் அதற்கு பதில் அளிக்கும்'' என்று ஜீவன் தொண்டமான் கூறினார்.
Original article: