இணைய சேவைகளை அணுக செயலிகளைப் (apps) பயன்படுத்துவது பயனர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்காது. செயலிகள் மீதான தீவிர கவனம் முன்பு பயனர்களுக்கு அதிகமாக இருந்தது, இப்போது அது வணிகங்களுக்கும் அதிகமாக உள்ளது.
இணையம் ஒரு பரவலாக்கப்பட்ட வழியில் வளர உருவாக்கப்பட்டது. இணைக்கப்பட்ட ஒவ்வொரு இயந்திரமும் ஒரு சேவைக்கு யாருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். இணைய நெறிமுறை (internet protocol (IP)) முகவரிகளை ஒதுக்குதல் மற்றும் .com, .org மற்றும் .net போன்ற உயர்மட்ட தளங்களுக்கான (top-level domains) ரூட் சேவையகங்களை (root servers) நிர்வகித்தல் போன்ற அடிப்படை செயல்பாடுகளைத் நிர்வகிக்க கட்டுப்பாட்டாளர்கள் இல்லை. யார் வேண்டுமானாலும் இணையத்தில் இணைந்து சேவையை பயன்படுத்தலாம்.
இது 1990கள் மற்றும் 2000களில் வேகமான வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மின்னஞ்சல், வலைத்தளங்கள் போன்ற சேவைகள் பிரபலமடைந்தன. தகவல் பகிர்வு மற்றும் மின் வணிகத்தை அனுமதித்தது. ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட முதலில், யாஹூ வலைத்தளங்களை வகை வாரியாக பட்டியலிட்டது. ஆனால் வலைத்தளங்கள் பெருகியதால், தேடல்களுடன் பொருந்தக்கூடிய பக்கங்களைக் கண்டுபிடிப்பதற்கான விரைவான வழியாக கூகுள் உருவாக்கப்பட்டது.
சீடிங் கட்டுப்பாடு (Ceding control)
முதலில், மொபைல் சாதனங்கள் பிரபலமடைந்தன. பின்னர், ஆப்பிள் ஐபோனை அறிமுகப்படுத்தியபோது சிறிய திரைகளில் எளிதாகப் பார்க்கும் வகையில் இணையதளங்கள் மாற்றியமைக்கத் தொடங்கின. ஆப்பிள், அதன் சஃபாரி உலாவிக்கான வலை (Safari browsers) பயன்பாடுகளை உருவாக்க மென்பொருள் வல்லுநர்களை ஊக்குவித்தது. ஆனால் உருவாக்குபவர்கள் கூடுதல் கட்டுப்பாட்டையும் இந்த சாதனங்களுக்கான சொந்த செயலிகளை உருவாக்கும் திறனையும் விரும்பினர். எனவே, ஆப்பிள் மூன்றாம் தரப்பு பிறப்பிட குறியீட்டை (third-party native code) அனுமதிக்கும் வகையில், ஜூலை 10, 2008 அன்று ஆப் ஸ்டோரை (App Store) அறிமுகப்படுத்தியது.
செயலி (Apps) என்பது மொபைல் போன்களில் இயங்கும் கணினி செயல்நிரல் (programme). தொலைபேசிகளில் நம்பத்தகாத மென்பொருளை இயக்குவது ஒரு பெரிய பாதுகாப்பு அபாயமாகும். செயலிகள் பாதிப்புகளைப் பயன்படுத்தி சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம். ரிமோட் தாக்குதல்களுக்கு இந்த ஆபத்து இல்லை. இயங்கும் மென்பொருளை பாதுகாப்பானதாக்க 2009இல் சொந்த வாடிக்கையாளர் (Native Client) என்ற சாண்ட்பாக்ஸை (sandbox) கூகுள் உருவாக்கியது. ஆனால் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், செயலிகள் இன்னும் ஆபத்தான பயன்பாடுகளை அனுமதிக்கின்றன.
கிளையன்ட்-சைட் கம்ப்யூட்டிங்கிற்கான (client side computing) பாதுகாப்பான மொழியாக ஜாவாஸ்கிரிப்டைக் (javascript) காண வலை தரநிலைகள் மாற்றப்பட்டன. உலாவிகள் (browsers) ஜாவாஸ்கிரிப்டை ஆதரிக்கின்றன. இது பயனர்களின் கணினிகளில் நம்பகத்தன்மை இல்லாத மென்பொருளை இயக்குவதற்கான தரநிலையாக மாற்றியது. ஜாவாஸ்கிரிப்ட் ஒரு நல்ல சாண்ட்பாக்ஸை வழங்கியது. இந்த சாண்ட்பாக்ஸ் (sandox) பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைத்தது. குறைந்த அபாயத்துடன் நம்பமுடியாத இணையதளங்களைப் பார்வையிட இது மக்களை அனுமதித்தது. காலப்போக்கில், ஜாவாஸ்கிரிப்ட் மிகவும் பாதுகாப்பானதாக மாறியது.
இருப்பினும், நிறுவனங்கள் செயலிகளை (apps) விரும்புகின்றன. செயலிகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் கோடிகணக்கான சாதனங்களில் தங்கள் சொந்த குறியீட்டை இயக்க அனுமதித்தன. உலாவி (browser) மூலம் வலை சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பயனர்கள் தங்கள் செயலிகளைப் பதிவிறக்க அவர்கள் ஊக்குவித்தனர். வலைத்தளங்களை விட செயலிகள் மிகவும் "அதிவேக" அனுபவத்தை வழங்குவதாக நிறுவனங்கள் கூறின. ஆனால், இந்த அனுபவத்தைப் பெற, பயனர்கள் தங்கள் உரைச் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இருப்பிடம் மீதான கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. விளம்பரத் தடுப்பு போன்ற வலை உலாவிகளின் (web browser) பாதுகாப்பு அம்சங்களையும் அவர்கள் இழந்தனர்.
ஆப்பிள் ஆப் ஸ்டோர் (apple app store) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற ஆப் ஸ்டோர்கள், செயலி பாதுகாப்பு குறித்து பயனர்களுக்கு உறுதியளிக்க முயற்சித்தன. இருப்பினும், இந்த பிளே ஸ்டோர்களில் தீம்பொருள், நிதி மோசடி மற்றும் தனியுரிமை மீறல்கள் நடப்பதாக செய்தித்தாள்களில் அடிக்கடி செய்திகள் வருகின்றது. நம்பத்தகாத செயலிகளால் பல பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். உருவாக்குபவர்கள் இந்த வழிமுறைகளில்பயன்பாடுகளை எளிதாக வெளியிடலாம், தீங்கு விளைவிக்கும் செயலிகளை நிறுவுவதற்கு பயனர்களை நம்பவைக்கும். ஏனெனில் அவை பாதுகாப்பானவை என்று கடைகள் கூறுகின்றன.
மக்கள் மற்றும் வணிகர்கள் இருவரும் செயலிகளை தீவிரமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால் இப்போது, ஆப் ஸ்டோர்களில் 15% முதல் 30% வரை வரி போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய வரிவிதிப்பின் காரணமாக வணிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்.
தங்கள் அதிகாரத்தை நியாயமற்ற முறையில் பயன்படுத்தியதற்காக கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக உலகளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்திற்கு எபிக் கேம்ஸ் வென்றபோதும், ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து தடை செய்தது. கூகுள் நிறுவனம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக இந்தியாவில் ஒரு வழக்கில் தோல்வியடைந்து ₹1,337 கோடி அபராதம் விதித்தது. ஆனால் பின்னர் கூகுள் பயனர் தேர்வு பில்லிங் User (Choice Billing) என்ற புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியது.
உக்கிரமான போர்
வணிகங்களுக்கும் ஆப் ஸ்டோர்களுக்கும் இடையிலான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. ஆப் ஸ்டோர்கள் செயலிகளுக்கான கட்டணங்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை எளிதில் விட்டுவிடுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சேவைகளுக்கு இணைய உலாவிகளைப் பயன்படுத்துவதற்கு வணிகங்கள் மீண்டும் மாற விரும்பவில்லை. பயன்பாட்டு வரிகள் இல்லாத ஆப் ஸ்டோர்களை அவர்கள் விரும்புகிறார்கள். சிலர், இந்தியா, தனது சொந்த ஆப் ஸ்டோரை உருவாக்க பரிந்துரைக்கின்றனர். அதில் தேசிய உணர்வு பிரதிபலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.
ஆப் ஸ்டோர்கள், வணிகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு இடையிலான விளைவு எதுவாக இருந்தாலும், இணைய சேவைகளை அணுக செயலிகளைப் பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இல்லை என்பதை பயனர்கள் உணர வேண்டும். "அதிகமான" (“immersive”) அனுபவம் முன்பு பயனர்களுக்கு அதிகமாக இருந்தது. இப்போது, அது வணிகங்களுக்கு அதிகமாக உள்ளது. இறுதியில், ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரண்டும் ஆப் ஸ்டோர்களைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது.
சுஷாந்த் சின்ஹா, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் (University of Michigan) கணினி அறிவியலில் பி.எச்.டி முடித்து, தற்போது இந்திய சட்டத்திற்கான தேடுபொறியான இந்தியன் கனூன் வலைத்தளத்தை (Indian Kanoon website) நடத்தி வருகிறார்.