புகையிலை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு அரசின் நிகழ்ச்சி நிரலில் ஏன் இடம் பெற வேண்டும்? -ரிதம் கவுல்

 புகையிலை பயன்பாடு குறித்த ஒரு புதிய பகுப்பாய்வு, 2022-ஆம் ஆண்டு முதல் 2050-ஆம் ஆண்டு வரை, வயது மற்றும் பாலினத்தால் வகைப்படுத்தப்பட்ட 204 நாடுகளின் சுகாதாரச் சுமை குறித்த ஆழமான கணிப்புகளை வழங்குகிறது. 


உலகளவில் புகையிலை புகைத்தலின் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதன் மூலம், புகைபிடிக்கும் பாதிப்பை தற்போதைய அளவிலிருந்து எல்லா இடங்களிலும் 5% குறைப்பதன் மூலம், ஆயுட்காலம் அதிகரிக்கும் மற்றும் 2050-ஆம் ஆண்டுக்குள் மில்லியன் கணக்கான அகால மரணங்களைத் தடுக்கும் என்று தி லான்செட் பொது சுகாதார இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்ட உலகளாவிய நோய், காயங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் (Global Burden of Disease, Injuries and Risk Factors (GBD)) புகையிலை முன்கணிப்பு ஒத்துழைப்பாளர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புகைபிடிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவது மக்களுக்கு கணிசமான சுகாதார நன்மைகளை வழங்கக்கூடும் என்று உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் நீண்ட காலமாக கூறி வந்ததை ஆசிரியர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர். ஆசிரியர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு  கவனம் செலுத்தினர். 


தற்போதைய நிலைகளின் அடிப்படையில், உலகளாவிய ஆயுட்காலம் 2050-ஆம் ஆண்டில் 78.3 ஆண்டுகளாக உயரக்கூடும் என்று ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். இது 2022-ஆம் ஆண்டில் 73.6 ஆண்டுகளாக இருந்தது. இருப்பினும், புகையிலை புகைத்தல் தற்போதைய மட்டத்திலிருந்து 2050-ஆம் ஆண்டில் 5% என்ற விகிதத்திற்கு படிப்படியாகக் குறைந்தால், இதன் விளைவாக ஆண்களில் ஒரு வருடம் கூடுதல் ஆயுட்காலம் மற்றும் பெண்களில் 0.2 ஆண்டுகள் கூடுதல் ஆயுட்காலம் ஏற்படும். 


2023-ஆம் ஆண்டு புகையிலை புகைத்தல் அகற்றப்பட்ட ஒரு சூழ்நிலையில், இது 2050-ஆம் ஆண்டில் ஆண்களிடையே 1.5 கூடுதல் ஆண்டுகள் மற்றும் பெண்களிடையே 0.4 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் ஏற்படக்கூடும்.  இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், மில்லியன் கணக்கான அகால மரணங்களும் தவிர்க்கப்படும். 


புகைபிடித்தல், உலகளவில் தடுக்கக்கூடிய மரணம் மற்றும் உடல்நலக் குறைவுக்கு ஒரு முன்னணி ஆபத்து காரணியாகும். கடந்த 30 ஆண்டுகளில் புகைபிடிக்கும் விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், வீழ்ச்சியின் வேகம் மாறுபடுகிறது மற்றும் பல நாடுகளில் குறைந்துள்ளது. 


புற்றுநோய்கள், இஸ்கிமிக் இதய நோய் மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் ஆகியவை புகைபிடிப்பதால் ஏற்படும் அகால மரணங்களுக்கு முக்கிய காரணங்கள் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 


பல நாடுகள் வரும் ஆண்டுகளில் புகைபிடிக்கும் விகிதங்களை 5% க்கும் குறைவாக குறைக்க லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளன. எவ்வாறாயினும், இந்த இலக்குகளை அடைவதற்கான நிரூபிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் தலையீடுகளை விரிவுபடுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் இன்னும் குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். 


உலகெங்கிலும் புகைபிடிப்பதைக் குறைப்பதற்கும், இறுதியில் அகற்றுவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகளில் நாம் வேகத்தை இழக்கக்கூடாது. புகைபிடிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் மில்லியன் கணக்கான அகால மரணங்களைத் தவிர்க்க முடியும் என்பதை இந்த கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன" என்று சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் ஸ்டீன் எமில் வோல்செட் கூறினார். 


புதிய பகுப்பாய்வு 2022-ஆம் ஆண்டு முதல் 2050-ஆம் ஆண்டு வரை வயது மற்றும் பாலினத்தால் வகைப்படுத்தப்பட்ட 204 நாடுகளுக்கான சுகாதாரச் சுமை குறித்த ஆழமான கணிப்புகளை வழங்குகிறது. அனைத்து நாடுகளுக்கும் மற்றும் அனைத்து காரணங்களுக்கும், அத்துடன் 365 நோய்கள் மற்றும் காயங்களுக்கும் புகைபிடித்தலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை விரிவாக முன்னறிவிக்கும் முதல் ஆய்வு இதுவாகும். ஆய்வு செய்யப்பட்ட முக்கிய அளவீடு அல்லது இயர்ஸ் ஆஃப் லைஃப் லாஸ்ட், அகால மரணங்களின் அளவீடு, ஒவ்வொரு இறப்பையும் மரண வயதில் மீதமுள்ள ஆயுட்காலம் மூலம் கணக்கிடுகிறது. 


2050-ஆம் ஆண்டு ஆண்டளவில் நாடுகள் புகைபிடிக்கும் விகிதங்களை 5% ஆகக் குறைக்கும் சூழ்நிலையில், எதிர்கால சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது 876 மில்லியன் குறைவான வாழ்க்கை இருக்கும். 2050-ஆம் ஆண்டில் ஆயுட்காலம் ஆண்களில் 77.1 ஆண்டுகளாகவும் பெண்களில் 80.8 ஆண்டுகளாகவும் இருக்கும். ஆண்களிடையே ஆயுட்காலத்தின் மிகப்பெரிய ஆதாயங்கள் கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும், 1.2 முதல் 1.8 கூடுதல் ஆண்டுகள் ஆயுட்காலம் பெறப்படும். பெண்களிடையே, ஆயுட்காலம் கிழக்கு ஆசியா, உயர் வருமானம் கொண்ட வட அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் மிகவும் அதிகரிக்கும், 0.3 முதல் 0.5 கூடுதல் ஆண்டுகள் வரை அதிகரிக்கும். 


2023-ஆம் ஆண்டில் உலகளவில் புகைபிடித்தல் முடிவடைந்திருக்கும் சூழ்நிலையில், எதிர்கால சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது 2050-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2.04 பில்லியன் இழப்புகளைத்  தவிர்க்க முடியும் என்று மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், 2050-ஆம் ஆண்டில் ஆண்களுக்கு 77.6 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 81 ஆண்டுகள் ஆயுட்காலம் இருக்கும்.




Original article:

Share:

நிதி சேர்க்கையின் புதிய சகாப்தம் - ஷாம்பவி சௌத்ரி

 முன்னோக்கிச் செல்லும்போது, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கும் வகையில் திட்டங்கள் குறிப்பாக வடிவமைக்கப்பட வேண்டும். 


நிதிச் சேவைகளுக்கான அணுகல் ஒரு அடிப்படைத் தேவையாகும். இது சமூக மற்றும் பொருளாதாரத்தை வலுவாக வழங்குகிறது. குறிப்பாக, நீண்ட காலமாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, பெண்களுக்கு ஆகும். குறிப்பாக, கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில், நிதிச் சேவைகளை அணுகுவது என்பது தொலைதூரக் கனவாகவே உணரப்படுகிறது.


உலக அளவில் வங்கி கணக்கு இல்லாத  நபர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள் ஆவார். இந்தியாவில், பெண்களுக்கான நிதி உள்ளடக்கம் மேம்பட்டுள்ளது. தற்போது ​​15 முதல் 49 வயதுடைய பெண்களில் 79 சதவீதம் பேர் தங்கள் பெயரில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இருப்பினும், முழுமையான நிதி உள்ளடக்கத்தை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.


அரசு முயற்சிகளின் பங்கு 


வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana(PMJDY)) அறிமுகம் முக்கிய பங்கு வகித்தது. இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இது, 2015-ஆம் ஆண்டில் 147.2 மில்லியனிலிருந்து 2022-ஆம் ஆண்டில் 462.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. 


இதில் 55.59 சதவீத வங்கி கணக்குகள் பெண்களால் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நேரடி வங்கிப் பரிமாற்றம் (direct bank transfers), பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana) போன்ற திட்டங்களும் பெண்களின் வங்கி கணக்கு தொடங்குவதற்கு உதவியுள்ளன. 


மேலும், நிதி உருவாக்கம், சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் அடிப்படை நிதி மேலாண்மை பற்றி பெண்களுக்கு கல்வி கற்பதற்கான கல்விக்கான நிதி முயற்சிகள் முக்கிய கருவியாக உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதில் குறுநிதி நிறுவனங்கள் (Microfinance institutions) மற்றும் சுய உதவிக் குழுக்கள் (Self-Help Groups) முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் பெண் தொழில்முனைவோருக்கு சிறிய கடன்களை வழங்குகின்றன. அவை தங்கள் தொழில்களைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த உதவுகின்றன. 


டிஜிட்டல் பேமெண்ட் இன்டெக்ஸ் (Digital public infrastructure (DPI)) -களின் பங்கு 


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, குறிப்பாக ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)), நிதி சேர்க்கை நிலப்பரப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மத்தியில் UPI இன் பயன்பாடு விகிதமும் மேல்நோக்கிய போக்கைக் கண்டுள்ளது. இருப்பினும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. தற்போது, ​​30 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் UPI பயன்படுத்துகின்றனர். இலக்கு கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை நாம் கணிசமாக உயர்த்த வேண்டும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் அடுத்த கட்டம், பின்தங்கிய பெண்களுக்கு நிதி சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.


சுற்றுச்சூழல் பொறுப்பு 


நிதி கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சி அவசியம். இந்த திட்டங்கள் நிதிச் சேவைகளை பெண்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பல்வேறு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளால் வழங்கப்படும் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி தனியார் துறை புதுமைகளை உருவாக்க முடியும். இது பாலின அடிப்படையிலான நிதி உள்ளடக்கத்தை குறிவைக்கும் தயாரிப்புகளை உருவாக்க அவர்களை நிலைநிறுத்துகிறது.


முடிவு 


பெண்களின் நிதி உள்ளடக்கம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது, ​​கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களைச் சேர்க்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக, நிதி நிறுவனங்கள் பாலின-உணர்திறன் கடன் வழங்கும் (gender-sensitive lending) நடைமுறைகளை பின்பற்றலாம். 


பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பொருட்களையும் வழங்க வேண்டும். இது பெண்கள் நிதி அதிகாரத்தை அடையக்கூடிய உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும். பொது மற்றும் தனியார் துறைகளின் தொடர்ச்சியான முயற்சிகளால், அதிகமான பெண்கள் நிதி ரீதியாக அதிகாரம் பெறுவார்கள்.




Original article:

Share:

அதிக வெற்றிக்கு எத்தனால் கலவையை மேம்படுத்த வேண்டிய தருணம் - ரவி குப்தா

 ஒன்றிய அரசின், மாறும் எத்தனால் கொள்கை (dynamic ethanol policy) பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட வேகத்தை உருவாக்க வேண்டும். 


இந்தியா ஒரு காலத்தில் சவாலான சர்க்கரை சுழற்சியை எதிர்கொண்டது. உபரி உற்பத்தியின் போது, ​​மலிவான சர்க்கரையை ஏற்றுமதி செய்தது. மாறாக, பற்றாக்குறை காலங்களில், அது விலை உயர்ந்த சர்க்கரையை இறக்குமதி செய்தது. இந்த நிலைமை கருவூலத்திற்கு சுமையை ஏற்படுத்தியது மற்றும் குறிப்பிடத்தக்க கரும்பு நிலுவைத் தொகைக்கு வழிவகுத்தது. இருப்பினும், ஒரு புதுமையான எத்தனால் கலவை கொள்கை இந்த சுழற்சியை சிறப்பாக மாற்றியுள்ளது.


புதிய திட்டம் பல முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. முதலில், இது எத்தனால் மூலப்பொருட்களுக்கு ஒரு நிலையான விலையை நிர்ணயிக்கிறது. இரண்டாவதாக, இது ஒரு கட்டாய எத்தனால் கலப்புத் தேவையை அமைக்கிறது. மூன்றாவதாக, இந்த திட்டத்தின் புதிய ஆணையின்படி எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எத்தனாலை வாங்குவதை இது உறுதி செய்கிறது. நான்காவதாக, வழங்கப்பட்ட அளவுகளுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இறுதியாக, எரிபொருள் எத்தனாலின் உற்பத்தி திறனை அதிகரிக்க வட்டி மானியத் திட்டங்களை வழங்குகிறது.


எத்தனால் கலக்கும் திட்டத்தின் (EBP) கீழ் எத்தனால் கொள்முதல் மற்றும் கலவை 2013-14 ஆண்டில் எத்தனால் விநியோகம் (நவம்பர் தொடங்கி) 38 கோடி லிட்டரிலிருந்து 2023-24 ஆண்டில் (செப்டம்பர் நடுப்பகுதி வரை) 575 கோடி லிட்டராக வளர்ந்தது. 2013-14 ஆண்டில் 1.53% ஆக இருந்த எத்தனால் கலப்பு சதவீதமும் 2023-24 ஆண்டில்(செப்டம்பர் நடுப்பகுதி வரை) 13.6% ஆக அதிகரித்துள்ளது.


சர்க்கரைத் தொழில் மேம்பட்டு, கரும்பு விவசாயம் மற்றும் பதப்படுத்துதலில் மிகவும் திறமையானது. இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவியது மற்றும் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்த அனுமதித்தது. 2023-24-ஆம் ஆண்டின் இறுதிக்குள் விவசாயிகளின் செலுத்தப்படாத நிலுவைத் தொகை 4% க்கும் கீழ் மிகக் குறைந்த அளவிலேயே குறைந்துள்ளது. எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்துறையின் முயற்சிகள், சாதகமான கொள்கைகளால் ஆதரிக்கப்படுகின்றன. 


எத்தனால் கலப்படத்தின் சதவீதத்தின் அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க நாடு உதவுகிறது. சுமார் பத்தாண்டுகளில் இருந்து ஜூலை 2024 வரை, 17.3 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் இந்தியா ₹99,014 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளது. அடுத்த ஆண்டு 20% எத்தனால் கலப்படத்தை நாடு அடைய உள்ளது.


ஜிஎஸ்டி குறைப்பு


எத்தனால் விநியோகத்தை அதிகரித்த பிறகு, அதற்கான தேவைக்கு கவனம் செலுத்த வேண்டும். நெகிழ்வு எரிபொருள்(Flexi fuel) கார்கள் ஒரு தீர்வாகும். மேலும், இந்த கார்களை போட்டித்தன்மையுடன் மாற்ற ஜிஎஸ்டி குறைப்பு தேவைப்படுகிறது. கூடுதலாக, 20% எத்தனால் கலப்புக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். 


அடுத்த கட்டமாக கரும்பு விலையை சர்க்கரை ஆலை வருவாயுடன் இணைப்பது. சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை (Minimum Selling Price (MSP)) அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இது முதலில் ஜூன் 2018-ஆம் ஆண்டில் கிலோவுக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 2019-ஆம் ஆண்டில்  ரூ.31/கிலோவாக திருத்தப்பட்டது. அப்போதிருந்து, இந்த திருத்தம் அப்படியே உள்ளது. உண்மையான உற்பத்தி செலவுகள் மற்றும் உயரும் கரும்பு விலைகளை பிரதிபலிக்கும் வகையில் குறைந்தபட்ச விற்பனை விலையை (Minimum Support Price (MSP)) புதுப்பிக்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டுக்கான எத்தனால் மற்றும் 2024-25-ஆம் ஆண்டில்  பி-மொலாசஸ் (B-molasses) மற்றும் கரும்பு சாற்றுக்கான எத்தனால் விலைகளும் அறிவிக்கப்பட வேண்டும். 


எத்தனாலுக்கு நிலையான திசைதிருப்பலை ஊக்குவிப்பதன் மூலம் சர்க்கரை மற்றும் அதனுடன் இணைந்த விவசாயத் துறைகளுக்கு ஒன்றியம் ஆதரவு அளித்துள்ளது. இந்த அணுகுமுறை சர்க்கரை விலையை ஆதரிக்கவும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் சர்க்கரை கிடைப்பதில் ஏற்ற இறக்கத்தை குறைக்கவும் உதவியது. இருப்பினும், 2023-24 நிதியாண்டில், கரும்பு உற்பத்தி மதிப்பீடுகள் குறைவாக இருப்பதால், சர்க்கரையிலிருந்து எத்தனால் மாற்றுவதை தற்காலிகமாக கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது.


இதற்கான, பங்குகள் இப்போது வசதியாக உள்ளது. இதன் விளைவாக, 2024-25 நிதியாண்டில் எத்தனால் மீதான கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியுள்ளது. இது மாறும் கொள்கை உருவாக்கத்தை நிரூபிக்கிறது.


கூடுதலாக, தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கி மாறுவது முக்கியம். இந்த பகுதியில் ஒன்றியம் கவனம் செலுத்துகிறது. எத்தனால் கொள்கை பல ஆண்டுகளாக அது உருவாக்கிய வேகத்தில் தொடர்ந்து உருவாக்க வேண்டும்.


 ரவி குப்தா, சர்க்கரைத் தொழிலில் நிபுணராகவும், பல தொழில் சங்கங்களில் உறுப்பினர்.




Original article:

Share:

இந்தியாவிற்கு ஈரான், இஸ்ரேலை காட்டிலும் அரபு நாடுகளின் அமைதி முக்கியமானது -சி.ராஜா மோகன்

 மிதவாத அரபு நாடுகளின் வெற்றியானது, நாடுகளில் இந்தியாவின் நலன்களுக்கு முக்கியமானது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மொத்தப் போரின் பேரழிவுகரமான மாற்றைத் தடுக்க இந்தியா இந்த நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.


ஈரானும் இஸ்ரேலும் மத்திய கிழக்கில் ஒரு ஆபத்தான பிராந்திய போரை உருவாக்க அச்சுறுத்தும் நிலையில், இந்த மோதலால் பாதிக்கப்பட்டுள்ள அரபு நாடுகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய நிலைமை குறித்த இந்திய விவாதங்களில் அவர்களின் கவலைகள் பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கீழ் வளர்ந்த அரபு நாடுகள் உலகத்துடனான வலுவான ஈடுபாட்டுடன், அரபு நாடுகளின் கருத்துக்களுக்கு பொதுமக்களின் இந்த உணர்திறன் குறைவான வெளிப்பாடாக உள்ளது. 


இன்று, ஈரான் மற்றும் இஸ்ரேல் இரண்டும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க மற்றும் உணர்ச்சிமிக்க அரசியல் ஆதரவைப் பெறுகின்றன. இந்த நாடுகள் இந்தியாவின் கவனத்தை அதிகம் கவர்ந்துள்ள நிலையில், அரேபிய தீபகற்பத்தில் இந்தியா கொண்டிருக்கும் அதே அளவு ஆர்வமும் இரண்டு நாடுகளுக்கும் இல்லை.


மத்திய கிழக்கில் உள்ள அனைத்து முக்கிய சக்திகளுடனும் இந்தியா நல்லுறவைப் பின்பற்ற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கூட்டணி நாடுகள் ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான பலன்களை வழங்குகிறார்கள். இருப்பினும், மத்திய கிழக்கில் இந்தியாவின் நலன்களை ஆராயும்போது, ​​அரேபியர்களுடன் இந்தியாவின் உறவுகளின் முக்கியத்துவம் தெளிவாகிறது. 


அரபு நாடுகள் அதன் அதிக மக்கள்தொகை கொண்டுள்ளது. இது 23 நாடுகளில் கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இது சுமார் 10 மில்லியன் மக்களைக் கொண்ட இஸ்ரேல் மற்றும் 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஈரானைக் காட்டிலும் மிகப் பெரியதாக உருவாகிறது. இந்த அரபு நாடுகள் வர்த்தகம், தொழில்நுட்பம், அரசியல் மற்றும் இராஜதந்திரத்திற்கான முக்கிய சந்தையாக உள்ளது.

 

அரேபிய நாடுகளில், அரேபிய தீபகற்பம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இது இந்தியாவுடன் வரலாற்று உறவுகளையும், ஆழமான மத தொடர்பையும் கொண்டுள்ளது. கூடுதலாக, இது குறிப்பிடத்தக்க நிதி ஆற்றலைக் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் வர்த்தக உறவுகள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரேபியாவில் உள்ள பெரிய செல்வந்தர்களான இந்தியர்கள் இந்த உறவை மேலும் வலுப்படுத்துகிறார்கள். மேலும், மிதவாத இஸ்லாத்தை மேம்படுத்துவதற்கான அரேபியாவின் முயற்சிகள், உள்நாட்டிலும் பிராந்திய அளவிலும் இந்திய துணைக்கண்டத்தில் அரசியலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.


ஈரானுடனான இந்தியாவின் உறவுகள் அரேபியாவைப் போலவே பழமையானவை மற்றும் நாகரீகம் சார்ந்தவையாகக் கருதப்படுகிறது. உண்மையில், புவியியல் ரீதியாக, ஈரான் அரேபியாவை விட துணைக் கண்டத்திற்கு சற்று நெருக்கமானது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான அதன் எல்லைகள் தெற்காசிய புவிசார் அரசியலின் ஒரு மாறும் பகுதியாக அமைகின்றன. 


உள் ஆசிய பிராந்தியங்களுக்கு இந்தியாவின் பாலமாக சேவை செய்வதற்கும், பாகிஸ்தானாக மாறியுள்ள அரசியல் தடையை கடந்து செல்வதற்கும் ஈரானின் புவியியல் திறன் தெஹ்ரானை வளர்ப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க இராஜதந்திர சக்திகளை அர்ப்பணித்துள்ளது. ஹைட்ரோகார்பன் வல்லரசாக, ஈரானிடம் அதிக அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உள்ளது. இது ஒரு மேலாதிக்க பிராந்திய சக்தியாக மாறுவதற்கான இயற்கை வளங்களையும் அரசியல் விருப்பத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும், ஈரானின் லட்சியங்களும் சில சிக்கல்களுக்கு வழிவகுத்தன.


ஈரானுடன் முழுமையாக ஒத்துழைக்கும் இந்தியாவின் திறன் குறைவாகவே உள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ஈரானின் தொடர்ச்சியான மோதலும் அதன் விளைவாக ஏற்பட்ட பல தடைகளும் இதற்குக் காரணம். கூடுதலாக, ஈரானின் பிராந்திய உரிமை கோரல்கள் மற்றும் புரட்சிகர மத சித்தாந்தம் அதன் அரபு அண்டை நாடுகளுடன் மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய சர்வதேசவாதத்தால் இந்தியாவும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. 


முடியாட்சி அகற்றப்பட்டு 1979-ஆம் ஆண்டில் ஈரான் இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது அரேபிய தீபகற்பத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கை அதன் சித்தாந்தத்திற்கு இணங்க மறுசீரமைப்பதற்கான தெஹ்ரானின் பார்வையானது, வளைகுடா ஆட்சிகளின் அச்சுறுத்தல் உணர்வுகளில் அதை ஒரு மனித பிரச்சனையை ஆராய சவாலாக ஆக்குகிறது.


பிராந்திய நாடுகளின் முதன்மையை ஈரான் பின்தொடர்வது தெஹ்ரானின் செல்வாக்கை வளர்ப்பதற்காக அரபு நாடுகளின் பினாமிகளை உருவாக்குவதைக் கண்டுள்ளது. இதேபோன்ற கொள்கைகளுக்காக பாகிஸ்தானை விமர்சிப்பதில் இந்தியா தீவிரமாக இருந்தால், அரபு நாடுகளில் ஈரானின் எதிர்மறையான பங்கு மற்றும் தேசத்திற்கு அப்பாற்பட்ட உரிமைகோரல்கள் குறித்து அது மௌனமாக உள்ளது. 


இந்த நிலைமை, டெல்லியின் பாசாங்குத்தனம் அல்லது இரட்டை நிலைப்பாடு பற்றியது அல்ல. மாறாக அரசாங்கங்கள் தங்கள் பொது அறிக்கைகளில் எதிர்கொள்ளும் நடைமுறைக் கட்டுப்பாடுகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. எவ்வாறாயினும், இது நமது வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பிராந்தியத்தில் ஈரானின் பங்கு பற்றி நேர்மையான விவாதத்தை நடத்துவதைத் தடுக்கக்கூடாது.


1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கியதிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ஈடுபாடு சீராக விரிவடைந்துள்ளது. காங்கிரஸ் அரசாங்கங்களைப் போல் அல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இஸ்ரேலுடனான உறவை ஏற்றுக்கொண்டு, அதன் முக்கியத்துவத்தை மேம்படுத்துகிறது. பல்வேறு துறைகளில், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தளங்களில் இந்தியாவின் முக்கிய கூட்டணி நடாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது. 


இந்தியா டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு நெருக்கமாக வளர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் உலகளவில் நல்லெண்ணத்தை இழந்துள்ளது. இந்தச் சரிவில் மேற்கத்திய நாடுகளும் அடங்கும். பெரும்பாலும் காசா மற்றும் மேற்கு பிராந்தியங்களில் அதன் கடுமையான கொள்கைகள் மற்றும் பாலஸ்தீனிய அரசமைப்பில் சமரசம் செய்ய மறுத்ததன் காரணமாகும். அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் சமமற்ற பதிலடி மற்றும் முழுமையான பாதுகாப்பிற்கான அதன் கோரிக்கை பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அதன் அரசியல் தளத்தை இழந்துள்ளது. அதன் கடுமையான இராணுவ நடவடிக்கைகள் யூத அரசுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் ஆதாயங்களை அளிக்கவில்லை.


இந்த நிலைமை இஸ்ரேலுக்கு எதிரான தெஹ்ரானின் நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது மற்றும் நாடுகளின் தலைமைக்கான அதன் உரிமைகோரலை வலுப்படுத்தியுள்ளது. நாடுகளின் நெருக்கடிகளுக்கு நியாயமான தீர்வுகளை தேடும் அரபு நாடுகளையும் பலவீனப்படுத்தியுள்ளது. ஈரானின் வளர்ந்து வரும் செல்வாக்கு, அதன் சாத்தியமான அணுசக்தி திறன்கள் மற்றும் அமெரிக்க கொள்கைகளை மாற்றியமைக்கும் வகையில், சில வளைகுடா அரபு நாடுகள் இஸ்ரேலுடனான அரசியல் உறவுகளை இயல்பாக்கியுள்ளன. அவர்கள் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் இராணுவப் பகுதிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளனர்.


2020-ஆம் ஆண்டின் ஆபிரகாம் உடன்படிக்கைகள் (Abraham Accords) இஸ்ரேலுடனான ஆழமான ஈடுபாடு பாலஸ்தீனிய அரசியல் செயல்பாடுகளுக்கு இடமளிக்கும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜோ-பிடன் நிர்வாகத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும் இது நடக்கவில்லை.


தங்கள் நிலையற்ற பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்த, வளைகுடா அரேபியர்கள் ஈரானுடன் பொதுவான நிலையைக் கண்டறிய முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பெரிய அளவில் முன்னேறவில்லை. ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான சமீபத்திய ஒப்பந்தத்திற்குப் பிறகும் இந்த முயற்சி பெரியளவில் பலனளிக்க வில்லை. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர், "பிராந்திய மாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நியமிக்கப்பட்ட பயங்கரவாத குழுக்கள், மதவாத மற்றும் பிற ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானின் வெளிப்படையான ஆதரவு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council(GCC)) உடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு தடையாக உள்ளது" என்று கூறினார்.


இன்று அரேபியாவிற்கும், பாரசீகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் ஆழமானவை. கருத்தியல் மற்றும் கட்டமைப்பு ரீதியானவை ஆகும். அவை, எந்த நேரத்திலும் விரைவில் கட்டமைக்க வாய்ப்பில்லை. பாலஸ்தீன பிரச்சினையில் அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வேறுபாடு சமீப ஆண்டுகளில் இணைப்புக்கு மிகவும் இணக்கமானதாகத் தோன்றுகிறது. ஆனால் பாலஸ்தீனத்திற்கான தனிநாடு மற்றும் இறுதி அரபு-இஸ்ரேலிய நல்லிணக்கம் குறித்த அந்த மாபெரும் ஒப்பந்தம் நம்பகமில்லாததாக உள்ளது. இந்தியா அதன் பங்கிற்கு, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் அரபு நாடுகளின் உறவுகளை இயல்பாக்குவதற்கு முழு அரசியல் ஆதரவை வழங்க வேண்டும். 


இந்தியாவின் செழிப்பு ஒரு மத்திய கிழக்கு நாடுகளுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. அது அமைதியான, பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட, அதன் மத மிதவாதத்தில் பாதுகாப்பாக உள்ளது. மேலும், ஒருபுறம் துணைக் கண்டத்திற்கும், மறுபுறம் மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு பாலமாக மாறுகிறது. இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கு மிதவாத அரபு அரசுகளின் வெற்றி முக்கியமானது என்றால், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒரு முழுமையான போரின் பேரழிவுகரமான மாற்றைத் தடுப்பதில் இந்தியா அரபு நாடுகளுடன் கைகோர்க்க வேண்டும்.




Original article:

Share:

சென்னையில் நடந்த இந்திய விமானப் படை நிகழ்வில் 5 பேர் உயிரிழப்பு : வெப்பம் எப்போது ஆபத்தானதாக மாறும்? அதை எவ்வாறு சமாளிப்பது?

 சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை நடத்திய நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்ததற்கு கடும் காய்ச்சலே காரணம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களுக்கு ஈரப்பதமும் (Humidity) ஒரு முக்கிய காரணியாகும். 


அக்டோபர் 6, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த இந்திய விமானப்படை நடத்திய நிகழ்ச்சிக்குப் பிறகு ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தனர். இந்த நிகழ்விற்காக மெரினா கடற்கரையில் சுமார் 1.2 மில்லியன் பார்வையாளர்கள் மக்கள் வெள்ளத்தில் கூடியிருந்தனர்.


திங்களன்று, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அதிக வெப்பநிலையால்" இறப்புகள் ஏற்பட்டதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில அரசு மற்றும் நகரின் நகராட்சி அமைப்பு "தவறான நிர்வாகம்" (maladministration) மற்றும் மோசமான போக்குவரத்து (poor traffic) ஏற்பாடுகளை செய்ய தவறியதாக விமர்சித்தனர்.


போலீஸ் அதிகாரி ஒருவர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, “150-க்கும் மேற்பட்டோர் அவர்கள் எதிர்கொள்ளும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தத்தால் நகரின் பல்வேறு பகுதிகளில் முதலுதவி பெற்றுள்ளனர். இதில், ஒரு மரணம் கடற்கரையிலும், மற்றொரு மரணம் நேப்பியர் பாலத்திற்கு அருகிலும் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மற்றவர்கள் வீடு திரும்பும் வழியில் வெவ்வேறு இடங்களில் இறந்தனர். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெரிசலான சூழ்நிலையால்  இல்லை.


வெப்பம் எப்போது மனிதர்களுக்கு ஆபத்தானதாக மாறுகிறது?, தடுக்க என்ன செய்ய முடியும்? 


வெப்பம் எப்போது ஆபத்தானதாக மாறும்? 


36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தபோதிலும், கடற்கரையில் தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் எளிதில் கிடைக்கவில்லை என்று இந்திய விமானப் படை (IAF) நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 


பல காரணிகளால் கடந்த காலங்களில் இதேபோன்ற இறப்புகள் அல்லது வெப்ப காரணமாக பக்கவாதம் ஏற்பட்டுள்ளன. ஏப்ரல் 2023-ஆம் ஆண்டில், நவி மும்பையில் ஒரு திறந்தவெளியில் நடைபெற்ற அரசு விருது விழாவின் போது 13 பேரின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது. அப்போதும் அதிகபட்ச வெப்பநிலை 30-35 டிகிரி செல்சியஸ் வரம்பை ஒட்டியே இருந்தது. 


இருப்பினும், கொடிய நிலைமைகளுக்கு வெப்பநிலை மட்டும் காரணமல்ல. இது உண்மையில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதத்தின் கலவையாகும். இது வெட் -பல்ப் வெப்பநிலை  (wet-bulb temperature (WBT)) என்று குறிப்பிடப்படுகிறது. காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் மனித வியர்வையை ஆவியாக்குவதை கடினமாக்குகிறது. இதன் விளைவாக, உடல் குளிர்ச்சியடைய கடினமாகிறது. இதனால் உட்புற வெப்பநிலை கடுமையாக உயரும். இது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும்.


அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள வெளிப்புறப் பகுதியில், நீண்ட நேரம் செலவிடுவது உடலை மேலும் பாதிக்கலாம். சென்னையில் எதிர்பாராதவிதமாக மக்கள் கூட்டத்தை விட்டு வேகமாக வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களின் நடமாட்டத்தை நிர்வகிக்க நிர்வாகம் தயாராக இல்லை. மேலும், மெட்ரோ மற்றும் இரயில் நிலையங்கள் மற்றும் கடற்கரைக்கு அருகிலுள்ள சாலைகள், குறுகிய நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான போக்குவரத்து சேவைகளை ஒழுங்குமுறைப் பயன்படுத்த முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.


ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024 அன்று சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் 92வது இந்திய விமானப் படை (IAF) தினத்திற்கான விமான கண்காட்சிக்கு, வேளச்சேரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இது போன்ற நிகழ்வு, நவி மும்பையில், திறந்த, நிழலற்ற தரையில் வெப்பத்தை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது மற்றும் உடல் உழைப்பு போன்ற காரணிகள் நீண்ட தூர பயணம் நிலைமையை பாதித்தது. சென்னையிலும் இதே போன்ற காரணிகள் இருந்தன.


பொது நிகழ்வுகளில் வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதத்தை எவ்வாறு கையாள வேண்டும்? 


இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடும் நபர்கள், தாகம் இல்லாவிட்டாலும், நீரேற்ற அளவைப் பராமரிக்க லஸ்ஸி, எலுமிச்சை நீர், மோர் அல்லது ORS போன்ற திரவங்களை நீரேற்றத்துடன் குடிப்பது அவசியம். ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்ற பானங்கள் ஒரு நபரின் நீரிழப்பை ஏற்படுத்தும் மற்றும் அத்தகைய நேரங்களில் தவிர்க்கப்பட வேண்டும். 


எடை குறைந்த, வெளிர் நிற, தளர்வான மற்றும் நுண்துளைகள் கொண்ட பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். நீண்ட நேரம் சூரிய ஒளியைத் தவிர்ப்பதும், முடிந்தவரை நிழலின் கீழ் நிற்பதும் முக்கியம். பாதுகாப்புக்காக கண்ணாடி மற்றும் குடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். 


புனேவின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்களில் (Indian Institute of Science Education and Research Bhopal (IISER)) பூமி மற்றும் காலநிலை அறிவியல் துறையில் பணிபுரியும் காலநிலை விஞ்ஞானி ஜாய் மெர்வின் மான்டெய்ரோ, ஈரமான வெப்பநிலை பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் காலநிலை மாற்றம் மற்றும் உயரும் வெப்பநிலை குறித்து கவனம் செலுத்துகின்றன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதினார். 


உலகளாவிய காலநிலை மாற்றம் ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக உள்ளது. வெப்ப அலைகள் தொடர்பான சம்பவங்களைத் தடுக்க, பாதிப்பை அதிகரிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்வது அவசியம். இந்தப் புரிதல் உள்ளூர் மக்கள் மீது பொறுப்புணர்வை ஏற்றுகிறது. அவர்கள் சிறந்த சுகாதார வசதிகளை வழங்க வேண்டும். முதியவர்கள் மற்றும் இருதய நோய் உள்ள நபர்களையும் அவர்கள் பாதுகாக்க வேண்டும். மேலும், மக்களிடையே நீரிழிவு நோயைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாக்க போதுமான நிர்வாக ஏற்பாடுகள் அவசியம்.




Original article:

Share:

இயற்பியல் மற்றும் அமைதி போன்ற துறைகளில் நோபல் பரிசு வென்றவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? -ரிஷிகா சிங்

 நோபல் பரிசுகளுக்கு யார் பரிந்துரைகளை அனுப்பலாம்? வெற்றியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? ஸ்வீடன் மற்றும் நார்வேயைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏன் இதில் ஈடுபட்டுள்ளன?  


இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் 2024-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் விருது (Sveriges Riksbank Prize) அக்டோபர் 14-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. 


இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், குடிமை உரிமைகள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போன்ற வரலாற்றில் மிகவும் நோபல் பரிசு பெற்றவர்கள் ஆவார். இதில், மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும் ஒருபோதும் விருது வழங்கப்படவில்லை. 


குறிப்பிடும் விதமாக, அடோல்ஃப் ஹிட்லர் ஒருமுறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஸ்வீடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்டார். இது "நகைச்சுவை விமர்சனம்" (satiric criticism) என்று அதிகாரப்பூர்வ நோபல் வலைத்தளம் (official Nobel website) தெரிவித்துள்ளது. ஆனால், தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை எவ்வாறு நடைபெறுகிறது? வெற்றியாளர்களை யார் தேர்வு செய்கிறார்கள்? என்பதை விரிவாக காண்போம். 


நோபல் பரிசுக்கு  நபர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?


முதல் கட்டம் நியமத்திற்கான பரிந்துரைகள் அடங்கும். இவற்றில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அதே பிரிவில் முன்னாள் நோபல் பரிசு பெற்றவர்கள் போன்ற பரந்த அளவிலான நபர்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க தகுதியுடையவர்கள். ஒவ்வொரு விருதுக்கும், பரிந்துரைகளை சமர்ப்பிக்க தகுதியானவர்கள் யார் என்பதை நோபல் குழு (Nobel Committee) முடிவு செய்கிறது. 


ஒவ்வொரு ஆறு விருதுகளுக்கும் தகுதிக்கான அளவுகோல் மற்றும் செயல்முறை சற்று வேறுபடுகின்றன. உதாரணமாக, மாநிலத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்றங்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதிப் பரிசுக்கு தகுதியான நபர்களை பரிந்துரைக்கலாம். மேலும், ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொடர்புடைய பாடங்களின் பேராசிரியர்கள் பொருளாதார பரிசுக்கு நபர்களை பரிந்துரைக்கலாம்.


பொதுவாக, ஆறு நோபல் பரிசுகளில் ஒவ்வொன்றுக்கும் தேர்வு செய்யும் நோபல் குழு உள்ளது. இந்தக் குழுக்கள் ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் பொறுப்பான நிறுவனங்களால் (institutions) நியமிக்கப்படுகின்றன. இந்த நோபல் குழு நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து தகுதியான நபர்களின் குறுகிய பட்டியலை உருவாக்குகிறது. இது நோபல் நிறுவனத்தின் நிரந்தர ஆலோசகர்களால் இந்த பட்டியலை சிறந்த முறையில் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. 


இந்த மதிப்பாய்வானது, அவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்த நிபுணர்களாக உள்ளதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. குழுவின் நிபுணர்கள் மூலம் அறிக்கைகள் பின்னர் வழங்கப்படுகின்றன. மேலும், நோபல் குழு பரிந்துரைக்கப்பட்ட முதன்மை நபர்களை பற்றி விவாதிக்கின்றன. இதில், அக்டோபரில் வெற்றியாளரை அறிவிப்பதற்கு முன்பு குழு செப்டம்பரில் ஒரு முடிவை எட்டுகிறது. இதற்கான இலக்கு ஒருமித்த கருத்து என்றாலும், அது சாத்தியமில்லை என்றால், ஒரு எளிய பெரும்பான்மை வாக்கு வெற்றியாளரை நோபல் பரிசுக்கு தீர்மானிக்கப்படுகிறது. 


நோபல் பரிசுகளை வழங்குவதற்கு பல நிறுவனங்களின் பொறுப்பு : ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் (Royal Swedish Academy of Sciences awards) விருதுகள் இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகளை வழங்குகிறது. ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் (Karolinska Institute) உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை வழங்குகிறது. ஸ்வீடிஷ் அகாடமி (Swedish Academy) இலக்கியத்திற்கான நோபல் பரிசை கையாளுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவால் வழங்கப்படுகிறது. ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் (Royal Swedish Academy of Science) பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை வழங்குகிறது. 


இந்த நிறுவனங்கள் மட்டும் ஏன் இதில் ஈடுபட்டுள்ளன?


ஸ்வீடனில் பிறந்த  ஆல்பிரட் நோபல் என்பவர்தான் நோபல் பரிசு உருவாகுவதற்கு காரணமானவர் ஆவார். அவர் ஒரு கண்டுபிடிப்பாளர் மற்றும் விஞ்ஞானி ஆவார். அவர் 300-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்திருந்தார். இதில் மிகவும் பிரபலமானது டைனமைட் (dynamite) ஆராய்ச்சியாகும். அவரது வாழ்க்கையின் முடிவில், ஆல்பிரட் நோபல் தனது கண்டுபிடிப்புகளிலிருந்து ஒரு பெரியளவில் தனிப்பட்ட முறையில் செல்வத்தை உருவாக்கினார். 


அவற்றின் கண்டுபிடிப்புகள் பல போரில் பயன்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில், தனிப்பட்ட முறையில் சேர்த்த செல்வத்தை பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்க இந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசுகள் 1901-ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டன.


நோபலுக்கு அறிவியலில் ஆர்வம் இருப்பது அனைவரும் அறிந்ததே என்றாலும், அவர் இலக்கியம் மற்றும் தத்துவத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். நோபல் வலைத்தளத்தின்படி, அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது தனிப்பட்ட நூலகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட தொகுப்புகள் இருந்தன. பெரும்பாலும் இவை அசல் மொழிகளில் புனைகதை ஆகும். அத்துடன், 19-ம் நூற்றாண்டின் முக்கிய எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், இறையியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் பிற விஞ்ஞானிகளின் படைப்புகள் இதில் அடங்கும். குறிப்பாக, அமைதிக்கான நோபல் பரிசை நிறுவ அவரை வழிநடத்தியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 


பொருளியல் பரிசு 1968-ஆம் ஆண்டில் ஸ்வீடனின் மத்திய வங்கியான ஸ்வெரிகெஸ் ரிக்ஸ்பேங்கால் (Sveriges Riksbank) ஆல்பிரட் நோபலின் நினைவாக நிறுவப்பட்டது. இது வங்கியின் 300-வது ஆண்டு நிறைவைக் கௌரவிக்கும் வகையில் 1968-ஆம் ஆண்டில் நோபல் அறக்கட்டளைக்கு வங்கி வழங்கிய நன்கொடையிலிருந்து உருவாக்கப்பட்டது. 


ஸ்வீடன் நாடாளுமன்றம் அமைதிக்கான நோபல் பரிசை ஏன் வழங்குகிறது?


இதற்கான சரியான விளக்கம் இல்லை என்று நோபல் வலைத்தளம் கூறுகிறது.  இருப்பினும், நார்வே நோபல் குழுவின் முன்னாள் செயலாளரும், நோபல் நிறுவனத்தின் இயக்குநருமான கீர் லண்டெஸ்டாட், அமைதிக்கானப் நோபல் பரிசு ஏன் ஒரு நார்ர்வே குழுவால் வழங்கப்பட வேண்டும். மற்ற பரிசுகள் ஸ்வீடிஷ் குழுக்களால் கையாளப்பட வேண்டும் என்பதற்கு நோபல் விளக்கம் அளிக்கவில்லை என்று எழுதினார். 


பல கோட்பாடுகள் இதை விளக்க முயற்சிக்கின்றன. இதில், ஒரு சாத்தியக்கூறு என்னவென்றால், 1905-ஆம் ஆண்டு வரை, நார்வே ஸ்வீடனுடன் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக  இருந்தது (ஆல்பிரட் நோபல் 1896-ல் இறந்தார்). கூடுதலாக, அறிவியல் பரிசுகள் ஸ்வீடனின் மிகவும் திறமையான குழுக்களால் வழங்கப்பட்டதால், அமைதிக்கானப் பரிசை நார்வே கையாள்வது அர்த்தமுள்ளதாக இருந்தது. 1890-ஆம் ஆண்டுகளில் சர்வதேச சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வுகளில் நார்வே நாடாளுமன்றத்தின் வலுவான ஆர்வத்தை நோபல் அறிந்திருக்கலாம். அவர் ஸ்வீடனை விட நார்வேயை அமைதி சார்ந்த மற்றும் ஜனநாயக நாடாக கூட பார்த்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.




Original article:

Share:

செம்மொழிகள் (Classical languages) -ரோஷினி யாதவ்

 ஒன்றிய அமைச்சரவை "செம்மொழி" என்ற அங்கீகாரத்தை மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி மொழிகளுக்கு வழங்கி உள்ளது. செம்மொழிகள் என்றால் என்ன? ஒரு மொழிக்குரிய  “செம்மொழி” தகுதிப்பாடு என்ன? செம்மொழிக்கும் அலுவல் மொழிகளுக்கும் என்ன வித்தியாசம்?  


மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு 'செம்மொழி' அந்தஸ்து வழங்க ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்தது. இது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குகிறது. இந்த முடிவு இந்த மொழிகளின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


(1) செம்மொழிகள் இந்தியாவின் பண்டைய மற்றும் ஆழமான கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாக கருதப்படுகின்றன. அவர்கள் அந்தந்த சமூகங்களின் வளமான வரலாறு, இலக்கியம் மற்றும் மரபுகளைப் பாதுகாக்கிறார்கள்.  இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார நிலப்பரப்பின் மொழியியல் மைல்கற்களை கௌரவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் மொழிகளுக்கு இந்த அந்தஸ்தை வழங்குகிறது.  


(2) அக்டோபர் 2004-ல், ஒன்றிய அரசு மொழிகளின் புதிய வகையை "செம்மொழிகள்" என்று உருவாக்க முடிவு செய்தது. அக்டோபர் 12 2004-ஆம் ஆண்டு, தமிழ் அதன் உயர் பழமை மற்றும் வளமான இலக்கிய பாரம்பரியம் காரணமாக "செம்மொழி" (classical language) அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்திய மொழியானது. 


(3) நவம்பர் 2004-ல், செம்மொழி அந்தஸ்து வழங்க முன்மொழியப்பட்ட மொழிகளின் தகுதியை ஆராய சாகித்ய அகாதமியின் கீழ் கலாச்சார அமைச்சகத்தால் மொழியியல் வல்லுநர்கள் குழு (Linguistic Experts Committee (LEC)) அமைக்கப்பட்டது.  


(4) இந்த ஆண்டு ஜூலை 25-அன்று, மொழியியல் வல்லுநர்கள் குழு செம்மொழி அந்தஸ்துக்கான அளவுகோல்களை திருத்தியது மற்றும் பின்வரும் மொழிகளை செம்மொழிகளாகக் கருத பரிந்துரைத்தது. மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி.  செம்மொழி அந்தஸ்தை அடைய, ஒரு மொழி இந்தியாவில் கலாச்சார அமைச்சகம் (Ministry of Culture in India) போன்ற அமைப்புகளால் கோடிட்டுக் காட்டப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும். 


பொதுவான அளவுகோல்கள்: 


(i) பழமை (Antiquity): மொழி நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்க வேண்டும். அதன் ஆரம்பகால நூல்கள் அல்லது இலக்கிய மரபுகள் குறைந்தது 1,500 முதல் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வேண்டும்.

 

(ii) வளமான இலக்கிய மரபு (Rich literary tradition): ஒரு மொழி அதன் கலாச்சார, அறிவார்ந்த அல்லது வரலாற்று முக்கியத்துவத்திற்காக மிகவும் மதிக்கப்படும் விரிவான இலக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டும். அறிவு நூல்கள், குறிப்பாக உரைநடை உரைகள், கவிதை மற்றும் கல்வெட்டுகள் இருக்க வேண்டும்.


(iii) சுதந்திரமான மரபு:மொழி அதன் தற்போதைய வடிவத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். அதன் கிளைகளின் பிற்கால வடிவங்களிலிருந்து இது வேறுபட்டிருக்கலாம். வெளிப்புற தாக்கங்களிலிருந்து விடுபட்ட அதன் சொந்த இலக்கிய மரபுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

 

(6) உள்துறை அமைச்சகம் ஆரம்பத்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியது. பின்னர், கலாச்சார அமைச்சகம் மேலும் செயல்படுத்தல்கள் மற்றும் எதிர்கால அங்கீகாரங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 


(7) "செம்மொழி" என்ற அந்தஸ்து மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி ஆகியவற்றிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இது அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட செம்மொழிகளின் மொத்த எண்ணிக்கையை 11 ஆகக் கொண்டுவருகிறது. முன்னதாக, தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), கன்னடம் (2008), தெலுங்கு (2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா (2014) ஆகிய ஆறு மொழிகள் மட்டுமே  செம்மொழி அந்தஸ்தைப் பெற்றிருந்தன. 

 

(8) மொழிகளுக்கான 'செவ்வியல்' குறிச்சொல்லின் நன்மைகள் 


(i) மொழிகளுக்கான "செம்மொழி" அந்தஸ்து அவற்றின் அந்தஸ்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், இந்த மொழிகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான முயற்சிகளை எளிதாக்குகிறது. நவீன உலகில் அவற்றின் தொடர்ச்சியான பொருத்தத்தை உறுதி செய்கிறது.  


  (ii) டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்ற சமகால சவால்களை எதிர்கொள்ள செம்மொழி அந்தஸ்து ஒரு மொழிக்கு உதவும்.  


(iii) செம்மொழி அந்தஸ்து கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொழிகளின் பண்டைய நூல்களைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற பணிகள் காப்பகப்படுத்துதல், மொழிபெயர்ப்பு, வெளியீடு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் வேலைகளை உருவாக்கும். 


(iv) செம்மொழிகளை மேம்படுத்த கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்காக 2020-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்க்கவும், தமிழில் பாடங்களை நடத்தவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. 


  (1) மராத்தி: நவீன மராத்தி மகாராஷ்டிர பிராகிருதத்திலிருந்து வந்தது. மகாராஷ்டிர பிராகிருதம் மேற்கு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இது சத்வஹானர்களின் ஆட்சி மொழியாக இருந்தது. சில மராத்தி அறிஞர்கள் இது முதல் பிராகிருத மொழி என்று கூறுகிறார்கள். மற்றவர்கள் இதற்கு உடன்படவில்லை. மகாராஷ்டிர பிராகிருதத்தின் பழமையான சான்றுகள் கிமு 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இது புனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வெட்டு. நவீன மராத்தியின் ஆரம்பகால சான்றுகள் கிபி 739-ல் உள்ளன.  இது சதாராவில் கிடைத்த செப்புத்தகடு கல்வெட்டு.


(2) பெங்காலி & அஸ்ஸாமி: இந்த மொழிகள் மாகதி பிராகிருதத்திலிருந்து வந்தவை. மகதி பிராகிருதம் கிழக்கு இந்தியாவில் பிரபலமானது. இது மகத நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இருந்தது. இந்த மொழிகள் எப்போது தோன்றின என்பதில் அறிஞர்கள் உடன்படவில்லை. 6-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலான தேதிகளை அறிஞர்கள் முன்வைத்தனர். அது தற்போதைய வடிவத்தில் அடையாளம் காணப்பட்டது.


(3) பிராகிருதம்: ஒரு பிராகிருத மொழி இல்லை. இது தொடர்புடைய இந்தோ-ஆரிய மொழிகளின் குழுவாகும். இவை சாதாரண மக்களின் மொழிகளாக இருந்தன. சமஸ்கிருதம் உயர் சாதியினர் மற்றும் உயர் இலக்கியங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. 


வரலாற்றாசிரியர் ஏ எல் பாஷாம் தி வொண்டர் தட் வாஸ் இந்தியா (The Wonder that was India 1954  என்ற புத்தகத்தில், "புத்தரின் காலத்தில் மக்கள் சமஸ்கிருதத்தை விட மிகவும் எளிமையான மொழிகளைப் பேசினர் என்றும், இவை பிராகிருதங்கள், அவற்றில் பல பேச்சுவழக்குகள் சான்றளிக்கப்பட்டுள்ளன என்றும், இந்த வட்டார மொழிகள் கிமு முதல் மில்லினியத்தில் பிரபலமான ஹீட்டோரோடாக்ஸ் மதங்களால் பயன்படுத்தப்பட்டன என்று குறிப்பிட்டார்.


(4) பாலி: பாலி மாகதி பிராகிருதம் என்று கருதப்பட்டது. 'பாலி' என்றால் "கோடுகள் அல்லது தொடர்". இது பாலி பௌத்த நூல்களின் மொழியாக இருப்பதைக் குறிக்கிறது. சில நவீன அறிஞர்கள் பாலி பல பிராகிருத மொழிகளின் கலவை என்று நினைக்கிறார்கள். இவை மேற்கத்திய பேச்சுவழக்குகளை உள்ளடக்கியிருக்கலாம். கலவை பின்னர் பகுதி சமஸ்கிருதமயமாக்கப்பட்டது.


பாலி என்பது தேரவாத பௌத்த நியதியின் மொழி. பாலி நியதி மூன்று வகைகளைக் கொண்டுள்ளது அல்லது பிடகா (கூடை அல்லது தொகுப்பு). ஒன்றாக, இது திபிடகா ("மூன்று கூடைகள்") என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் அடங்கும்:


(i) வினய பிடகா: "ஒழுக்கத் தொகுப்பு". இது பௌத்த சங்கத்திற்கான (துறவற அமைப்பு) விதிகளைக் கையாள்கிறது.


(ii) சுத்த பிடகா: "சொல்லும் தொகுப்பு". இது மிகப்பெரிய தொகுப்பு. புத்தரின் சொற்பொழிவுகள் மற்றும் பிரசங்கங்கள் உள்ளன. இதில் சில சமயக் கவிதைகளும் உண்டு.


(iii) அபிதம்ம பிடகா: இந்த தொகுப்பு பௌத்த தத்துவத்தை இன்னும் விரிவாக விளக்குகிறது.


தேரவாத பௌத்தம் இந்தியாவில் வீழ்ச்சியடைந்தது. ஆனால் பாலி மற்ற நாடுகளில் மத மொழியாகவே பிழைத்து வந்தது. அவை இலங்கை, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போடியா. தேரவாத பௌத்தம் இந்த இடங்களில் தொடர்ந்து செழித்து வளர்ந்தது.


தேசிய மொழி, அலுவல் மொழி மற்றும் எட்டாவது அட்டவணை


(1) இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மொழிகளும் 270 தாய்மொழிகளும் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் இந்தியாவின் "தேசிய மொழி" என்று குறிப்பிடவில்லை.


(2) உத்தியோகபூர்வ மொழி: பிரிவு 343, பிரிவு 1 "யூனியனின் அதிகாரப்பூர்வ மொழி தேவநாகரி எழுத்துக்களில் இந்தி இருக்க வேண்டும்" என்று கூறுகிறது. "யூனியனின் உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எண்களின் வடிவம் இந்திய எண்களின் சர்வதேச வடிவமாக இருக்கும்" என்றும் அது கூறுகிறது. ஆங்கிலமும் ஹிந்தியும் ஒன்றிய அரசின் இரண்டு அலுவல் மொழிகளாகும் 


343(2) அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பிறகு 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்த அனுமதித்தது. அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 இல் தொடங்கியது.


பிரிவு 343(3) 15 ஆண்டு காலத்திற்குப் பிறகு ஆங்கிலம் அல்லது தேவநாகரி எண்களைப் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்க அனுமதிக்கிறது.


ஜனவரி 26, 1965 அன்று, அலுவல் மொழிகள் சட்டம், 1963 இன் பிரிவு 3 நடைமுறைக்கு வந்தது. இது 15 ஆண்டு காலத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகவும் பாராளுமன்றத்திலும் ஆங்கிலம் தொடர அனுமதித்தது.


(3) இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை: பிரிவுகள் 344(1) மற்றும் 351 எட்டாவது அட்டவணையைக் குறிப்பிடுகின்றன. எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன: (1) அசாமிஸ், (2) பெங்காலி. (3) குஜராத்தி. (4) இந்தி. (5) கன்னடம்; (6) காஷ்மீரி; (7) கொங்கனி; (8) மலையாளம்; (9) மணிப்பூரி; 10) மராத்தி; (11) நேபாளி; (12) ஒரியா; (13) பஞ்சாபி, (14) சமஸ்கிருதம், (15) சிந்தி, (16) தமிழ், (17) தெலுங்கு, (18) உருது, (19) போடோ; (20) சந்தாலி; (21) மைதிலி; மற்றும் (22) டோக்ரி.


இவற்றில் 14 மொழிகள் முதலில் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன. சிந்தி மொழி 1967-ல் சேர்க்கப்பட்டது. 1992-ஆம் ஆண்டில் கொங்கனி, மணிப்புரி மற்றும் நேபாளி ஆகிய மூன்று கூடுதல் மொழிகள் சேர்க்கப்பட்டன. போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சந்தாலி ஆகியவை 2004-ல் சேர்க்கப்பட்டன.




Original article:

Share: