புதைபடிவ எரிபொருள்கள் மீதான டிரம்பின் கவனத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -ரிச்சா மிஸ்ரா

 புதைபடிவ எரிபொருள் மீண்டும் வேகம் பெற்று வருவதால், எண்ணெய் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. இது இந்தியா போன்ற நாடுகளுக்கு பயனளிக்கும்.


இதை டிரம்ப் விளைவு (Trump effect) என்றோ தூய இராஜதந்திர மாற்றம் (pure strategy shift) என்றோ அழைத்துக் கொள்ளுங்கள், ஆனால் புதைபடிவ எரிபொருள் மீண்டும் வருகிறது. முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இப்போது தங்கள் முதலீட்டுத் திட்டங்களைத் திருத்த விரும்புகின்றன. அவர்களின் கவனம் ஆய்வு மற்றும் உற்பத்தியில் உள்ளது.


இந்த நடவடிக்கையை மேற்கொண்ட சமீபத்திய நிறுவனம் BP ஆகும். பிப்ரவரி 26 அன்று, BP ஒரு "அடிப்படையில் மீட்டமைக்கும் உத்தியை" (fundamentally reset strategy) அறிவித்தது. இந்த உத்தி எண்ணெய் மற்றும் எரிவாயுவில் முதலீட்டை அதிகரிப்பது, அதன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கான வணிகத்தை சீரமைப்பது மற்றும் ஆற்றல் மாற்றத்தில் ஒழுக்கமான முதலீடுகளைச் செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.


எண்ணெய் நிறுவனங்களின் இந்த மறுசீரமைப்பு ஆற்றல் மாற்ற செயல்முறையை மெதுவாக்குமா? காலநிலை வாக்குறுதிகளுக்கு என்ன நடக்கும்?


டிரான்ஸ்வர்சல் கன்சல்டிங்கின் (Transversal Consulting) தலைவர் எலன் ஆர். வால்ட், "புதைபடிவ எரிபொருள் தொழில் ஒருபோதும் மறைந்துவிடவில்லை. உலகளாவிய எரிசக்தி அமைப்பில் இது எப்போதும் முக்கியமானது" ஆகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மாற்றத்தில் கவனம் செலுத்தப்பட்டபோதும், எண்ணெய் மற்றும் எரிவாயு லாபகரமாகவே இருந்தன".


அவர் மேலும் குறிப்பிட்டதாவது, "தவறான கணிப்புகளை நம்பியதால், 2030-ம் ஆண்டுக்குப் பிறகு புதைபடிவ எரிபொருள்கள் லாபகரமாக இருக்காது என்று மக்கள் தவறாக நம்பினர். இப்போது 2025-ம் ஆண்டு என்பதால், புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் தேவை என்பதை அவர்கள் உணர்ந்து, அதைப் பகிரங்கமாகச் சொல்வதில் மிகவும் வெளிப்படையாக இருக்கிறார்கள்".


ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து உலகம் பாரிஸ் ஒப்பந்த காலத்திலிருந்து ஒரு புதிய கட்டத்திற்கு நகர்ந்து வருவதாக ராபிடன் எரிசக்தி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பாப் மெக்னலி கூறுகிறார். அத்பர் டிரம்பின் தேர்தல், காங்கிரஸின் குடியரசுக் கட்சி கட்டுப்பாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனியில் தேர்தல்கள் மூலம் இந்த மாற்றம் துரிதப்படுத்தப்படுகிறது.


"வரலாற்றாசிரியர்கள் 2015-2022 காலகட்டத்தை விரைவான கார்பன் நீக்கத்தில் நம்பிக்கைகள் மற்றும் முதலீட்டிற்கான உச்சக்கட்டமாகப் பார்ப்பார்கள். வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தன, எனவே மூலதனம் மலிவானது. பணவீக்கம் ஒரு கவலையாக இல்லை. பெரிய போர்கள் எதுவும் இல்லை, எண்ணெய் விலைகள் குறைவாக இருந்தன. டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தைத் தவிர, பெரும்பாலான உலக அரசாங்கங்கள் ஆக்கிரமிப்பு காலநிலை நடவடிக்கையை ஆதரித்தன. இதன் மிக முக்கியமான காரணி என்னவென்றால், உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன விநியோகச் சங்கிலிகளில் சீனாவின் ஆதிக்கத்திற்கு சிறிய எதிர்ப்பு இருந்தது," என்று அவர் நினைவு கூர்ந்தார்.


ஆனால், அந்தக் காரணிகள் ஒவ்வொன்றும் காலவரையின்றி மாறிவிட்டன என்று அவர் கூறினார். "முதலீட்டாளர்களும் நிறுவனங்களும் நகர்கின்றன. இந்தியா போன்ற நாடுகளும் சரிசெய்ய வாய்ப்புள்ளது. விரைவான கார்பன் நீக்கம் ஒரு நியாயமான பொருளாதார மற்றும் அரசியல் செலவில் ஒரு யதார்த்தமான இலக்காக இருந்ததா என்பதை நாம் விவாதிக்கலாம். இருப்பினும், AI தரவு மையங்களுக்கான தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது போன்ற புதிய கவலைகள் மற்றும் முன்னுரிமைகளில் உலகம் இப்போது கவனம் செலுத்துகிறது."


புதைபடிவ எரிபொருள் வணிகம் நிச்சயமாக மீண்டும் வருகிறது.


NT-Live/NinjaTrader Group, LLC-ன் மூத்த பொருளாதார நிபுணர் டிரேசி சுசார்ட், "பல காரணங்களுக்காக யதார்த்தமான உறுதிப்பாடான இறுதியாக உருவாகிறது என்று நான் நம்புகிறேன்" என்றார். ரஷ்யா-உக்ரைன் போர் ஐரோப்பா ரஷ்ய எரிவாயுவை எவ்வளவு நம்பியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று அவர் விளக்கினார். இது எரிசக்தி பற்றாக்குறையை ஏற்படுத்தியது மற்றும் நாடுகள் தங்கள் எரிசக்தி முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வைத்தது. இதன் விளைவாக, விநியோக இடையூறுகளைத் தவிர்க்க பல நாடுகள் இப்போது நம்பகமான எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்துகின்றன. புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து இடைப்பட்ட மின்சாரத்தைப் போலல்லாமல், அடிப்படை சுமை சக்தியை வழங்குவதால், புதைபடிவ எரிபொருள்கள் நிலைத்தன்மைக்கு இன்னும் தேவைப்படுகின்றன. பல புதுப்பிக்கத்தக்க திட்டங்கள் பொருளாதார ரீதியாக சாத்தியமற்றவை மற்றும் அதிக அரசாங்க மானியங்கள் தேவைப்படுகின்றன.


வளர்ச்சிக்கான நிர்பந்தங்கள்


ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரிக்கான தேவை அதிகரித்து வருகிறது. எஃகு, சிமென்ட் மற்றும் இரசாயனங்கள் போன்ற துறைகள் ஹைட்ரோகார்பன்களை நம்பியுள்ளன. இதற்கான மாற்றுத் தீர்வுகள் இன்னும் விலை உயர்ந்தவை அல்லது வளர்ச்சியடையாதவையாக உள்ளன. அதிக எரிசக்தி செலவுகள் மற்றும் நம்பகத்தன்மையற்ற விநியோகம் வாக்காளர்களின் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் கொள்கை மாற்றங்களை பாதித்துள்ளது. இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் இப்போது ஒரு சமநிலையான அணுகுமுறையின் அவசியத்தைக் காண்கிறார்கள். சில சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகம் (ESG) நிதிகள் இப்போது இயற்கை எரிவாயுவை "மாற்று எரிபொருளாக" (transition fuel) சேர்க்கின்றன.


இதன் பொருள் காலநிலை ஆதரவாளர்கள் மிகவும் யதார்த்தமானவர்களாக மாறுவார்கள் என்று அர்த்தமா?


"காலநிலை ஆர்வலர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நடைமுறை மாற்றக் கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும். இந்தக் கொள்கைகளில் அணுசக்தி, இயற்கை எரிவாயு மற்றும் கார்பன் பிடிப்பு ஆகியவை அடங்கும்," என்று அவர் மேலும் கூறினார்.


மிக முக்கியமாக, இந்தியா போன்ற நாடுகளுக்கு, முக்கிய கவலை எரிசக்தி பாதுகாப்பு ஆகும். இதற்கு, தெளிவான உத்தியை உருவாக்க அவர்கள் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள்.


"இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தை என்பதால் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மேற்கத்திய நாடுகள் இந்தியாவை ஒரு பசுமைக்கான செயல்திட்டத்தை நோக்கித் தள்ள முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த முயற்சியில் சோர்வுக்கான அறிகுறிகள் ஏற்கனவே காணப்படுகின்றன."


எண்ணெய் விலைகள் தற்போது குறைந்து வருகின்றன. இருப்பினும், கேள்வி என்னவென்றால், இது எவ்வளவு காலம் நீடிக்கும்?

“எண்ணெய் விலைகள் ஏற்கனவே குறைந்து வருவதைக் காண்கிறோம். ஆனால், விலைகள் மிகக் குறைவாக இருந்தால், அது அமெரிக்க ஷேல் உற்பத்தியாளர்களுக்கு (US shale producers) ஒரு பிரச்சனையாக இருக்கும். "ஷேல் உற்பத்திக்கான சராசரி லாபமற்ற விலை சுமார் $65 ஆகும். இருப்பினும், இது பிராந்தியத்திற்கு மாறுபடும். டிரம்ப் நிர்வாகம் விரும்புவது போல் எண்ணெய் நீண்ட காலத்திற்கு $50-ல் இருந்தால், உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும். இது இறுதியில் மீண்டும் அதிக விலைக்கு வழிவகுக்கும்," என்று அவர் கூறினார்.


"இந்தியாவைப் பொறுத்தவரை, வளர்ந்து வரும் நுகர்வு குறைந்த விலையில் விரும்பத்தக்கது. உள்நாட்டு எண்ணெய் துறையில் அதிக முதலீட்டை ஈர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது நல்ல செய்தி. இது விதிமுறைகளை தளர்த்தி, ஆய்வுக்காக முன்னர் தடைசெய்யப்பட்ட பகுதிகளைத் திறந்து வருகிறது. முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்க ஊக்கத்தொகைகளை வழங்கி எண்ணெய் வயல்கள் சட்டத்தை திருத்தி வருகிறது.


உற்பத்தியில் அதிகரிப்பு (Output ramp-up)


"இந்த ஆண்டு ஜனவரியில், BP நிறுவனம் எண்ணெய் உற்பத்தியை 44 சதவீதம் அதிகரிக்க உறுதியளித்தது. இந்தியாவின் மிகப்பெரிய கடல்சார் வயலான மும்பை ஹையிலிருந்து எரிவாயு உற்பத்தியை 89 சதவீதம் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துடன் (Oil and Natural Gas Corporation (ONGC)) ஒரு பத்தாண்டு கால ஒப்பந்தத்தின் மூலம் நடக்கும்."


மார்ச் 10 அன்று, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்ததாவது, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியையும் அவர்கள் ஊக்குவித்து வருகின்றனர். அரசாங்கமும் பொதுத்துறை நிறுவனங்களான (Public Sector Undertaking (PSU)) எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் (Oil Marketing Companies (OMCs)) எரிபொருள் விலை நிர்ணயப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் தாக்கத்தையும் அவர்கள் சமாளித்து, நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கவும் பணியாற்றி வருகின்றனர். கூடுதலாக, எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் நிகர-பூஜ்ஜிய நிலையை அடைவதற்கான இலக்குக்கான தேதிகளை அறிவித்து, தங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளன.


ஒட்டுமொத்தமாக, தற்போதைய சூழ்நிலை இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இது இந்தியா தனது எரிசக்தி விநியோகத்தை நிலைப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதே நேரத்தில், புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.



Original article:

Share:

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இருதரப்பு உறவுகள் -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிலை : இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இருதரப்பு தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான (Free Trade Agreement (FTA)) 10-வது சுற்று பேச்சுவார்த்தையை மார்ச் 10, 2025 அன்று தொடங்குகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உயர்மட்டத் தலைமை தெளிவான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.


முக்கிய அம்சங்கள் :


1. முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் சிக்கல்கள் இருக்கும் அதே வேளையில், அமெரிக்காவால் தொடங்கப்பட்ட உலகளாவிய வரிப் போர், சமீபத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரிகளுக்கான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் மற்றும் கார்பன் வரி விஷயங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெகிழ்வுத்தன்மை ஆகியவை இந்த சுற்றில் பேச்சுவார்த்தைகளை முன்னோக்கித் தள்ளக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.


2. மார்ச் 10 முதல் மார்ச் 14 வரை பிரஸ்ஸல்ஸில் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும். இரு தரப்பினருக்கும் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) மற்றும் பிற ஆணையர்கள் கடந்த மாதம் இந்தியாவிற்கு முழு உறவு குறித்த விரிவான விவாதங்களுக்கு வருகை தந்தனர்.


3. இருதரப்பு பொருட்களுக்கான வர்த்தகம் மொத்தம் $190 பில்லியன் ஆகும். இது, அமெரிக்காவைப் போலவே ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவிற்கு ஒரு முக்கியமான சந்தையாகும். அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (Bilateral Trade Agreement (BTA)) எதை உள்ளடக்கும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை உள்ளது. இருப்பினும், தற்போதைய கட்டத்தில் 2022 முதல் ஐரோப்பிய ஒன்றியம் (EU) உடனான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.


4. விவசாயத்தில், பாலாடைக்கட்டி (cheese) மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் (skimmed milk powder) மீதான சுங்க வரிகளை இந்தியா குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கிறது. வரி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைக் கட்டமைப்பு இந்திய விவசாயிகள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களுக்கு பெரும் தடையாக இருக்கும்.


5. ஒயின்கள் மீதான வரிகளை இந்தியா 150% இலிருந்து 30-40% ஆகக் குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் (EU) விரும்புகிறது. ஆஸ்திரேலியாவுடனான அதன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா ஏற்கனவே 50% வரிகளை வழங்கியுள்ளது. மேலும், இது EU-க்கு மீண்டும் வழங்கப்படலாம்.


உங்களுக்குத் தெரியுமா? :


1. ஐரோப்பிய ஒன்றியம் தொலைதூர ஆன்லைன் சேவை வழங்கலில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்தியாவை தரவு-பாதுகாப்பான நாடாக (data-secure country) அது அங்கீகரிக்கவில்லை. இது தரவு ஓட்டங்களை (data flows) கட்டுப்படுத்துகிறது. இந்தியாவின் வங்கி, சட்டம், கணக்கியல், தணிக்கை மற்றும் நிதி சேவைகள் துறைகளுக்கு அதிக அணுகலை ஐரோப்பிய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.


2. இந்தப் பழைய சிக்கல்களுக்கு கார்பன் எல்லை சரிசெய்தல் வழிமுறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) அல்லது கார்பன் வரி (carbon tax) மூலம் புதியவை சேர்க்கப்பட்டுள்ளன. கார்பன் எல்லை சரிசெய்தல் வழிமுறையின் (CBAM) கடமைகளில் இருந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்குமாறு இந்தியா கேட்டுள்ளது. 2-வது வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (Trade and Technology Council (TTC)) கூட்டத்தில், CBAM காரணமாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.



Original article:

Share:

தொகுதி மறுவரையறை விவாதம்: தற்போதைய மக்களவைப் பங்கீடு மாறாதிருக்கட்டும் -யோகேந்திர யாதவ்

 இந்திய ஒன்றியத்தின் அடிப்படையில் (foundation) உள்ளடக்கியுள்ள கூட்டாட்சி ஒப்பந்தத்தை மதிக்க இதுவே சிறந்த வழியாக இருக்கும்.


தொகுதி மறுவரையறை என்பது இன்று இந்திய ஒன்றியத்திற்கு தேவைப்படும்  கடைசி விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தொகுதி மறுவரையறையை இன்னும் 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு பிராந்தியத்தின் நலனைப் பாதுகாப்பது மட்டுமல்ல. இது தேசிய ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்துவதாகும். நாடாளுமன்ற இடங்களை மறு ஒதுக்கீடு செய்வதை நிரந்தரமாக முடக்குவது சாத்தியமான சவால்களுக்கு எதிராக இந்திய ஒன்றியத்தைப் பாதுகாக்க உதவும். இந்திய ஒன்றியத்தின் அடிப்படையில் (foundation) உள்ளடக்கியுள்ள "கூட்டாட்சி ஒப்பந்தத்தை" (federal contract) மதிப்பதற்கான சிறந்த வழி, தற்போதைய மக்களவைத் தொகுதி இடங்களின் பகிர்வு நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது என்று கருத வேண்டும். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் மாற்றக்கூடாத ஒரு புனிதமான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தமாக கருதுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.


இது ஒரு வலுவான மற்றும் சற்றே எதிர்பாராத அசாதாரண கூற்றானது, தொகுதி மறுவரையறையை எதிர்ப்பவர்கள் பொதுவாக நிரந்தர முடக்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதில்லை. அவர்களின் வழக்கு பொதுவாக "மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை" (population control) அடைவதில் சில மாநிலங்களின் வெற்றியை மையமாகக் கொண்டுள்ளன. ஒரு மறைமுகமான ஆனால் மாற்ற முடியாத "கூட்டாட்சி ஒப்பந்தம்" (federal contract) பற்றிய யோசனை இந்திய விவாதங்களில் அடிக்கடி விவாதிக்கப்படுவதில்லை. இத்தகைய கூற்று, இயற்கையாகவே, கடுமையான கேள்விகள் மற்றும் ஆட்சேபனைகளை விளைவிக்கும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எழுத்துக்கும், அடிப்படைக்கும் எதிரானது அல்லவா? இந்தியாவின் குடியரசு தொடங்கி 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது கூட்டாட்சி ஒப்பந்தத்தை ஏன் எழுப்ப வேண்டும்? இவை தெளிவான பதில்கள் கிடைக்க எழுப்பப்படும் முக்கியமான கேள்விகள் ஆகும்.


இதற்கான சிக்கலை தெளிவுபடுத்துவதன் மூலம் தொடங்குவோம். தற்போதைய விவாதம் தொகுதிகளின் புதிய "எல்லை மறுவரையறை" (delimitation) ஒரு பகுதியில் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வதோ அல்லது எந்த மாநிலத்துக்கும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ வழக்கமான நடைமுறையில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. இது கூட்டாட்சி சமநிலையைப் பாதிக்காது. 50 ஆண்டுகளுக்கு முன்பு முடக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இடங்களை மறுபகிர்வு செய்வதுதான் உண்மையான பிரச்சினையாக உள்ளது. இந்த விவாதமானது முடக்கத்தை நீக்குவதா, நீட்டிப்பதா அல்லது நிரந்தரமாக்குவதா என்பது பற்றியது.


வழக்கமான திருத்தத்தின் மூலம் உண்மையான அரசியலமைப்பு விதி ஒரு கொள்கையின் அடிப்படையில், "ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு" (one person, one vote, one value) என்பதை அங்கீகரிக்க வேண்டும். ஒரு சட்டமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான நபர்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதை இந்த ஜனநாயகக் கோட்பாடு கட்டாயமாக்குகிறது. எண்ணிக்கை மிகவும் வித்தியாசமாக இருந்தால், பெரிய தொகுதிகளில் ஒரு வாக்கின் மதிப்பு சிறிய தொகுதிகளைவிட குறைவாக இருக்கும். உதாரணமாக, மக்களவையில் 32 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுத்தாலும், கேரளாவில் 18 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளனர். எனவே, கேரளாவில் ஒரு வாக்காளரின் மதிப்பு உத்திரப்பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் மதிப்பைவிட இரு மடங்கு அதிகம். இதற்கு வேறு வலுவான பரிசீலனைகள் இல்லையென்றால் சரிசெய்யப்பட வேண்டும். மக்கள்தொகையில் உள்ள பங்கைவிட மக்களவையில் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட சிறிய மாநிலங்களில் (கோவா மற்றும் அருணாச்சலத்தில் ஒரு இருக்கைக்கு 8 லட்சத்திற்கும் குறைவானது) இந்த கொள்கையிலிருந்து விலகுவதற்கு அரசியலமைப்பு வழிவகை செய்துள்ளது. இந்த நிகழ்வுகளில், "சமச்சீரற்ற கூட்டாட்சி" (asymmetrical federalism) கொள்கை, ஒரு கூட்டமைப்பின் பல்வேறு பிரிவுகளுக்கான சிறப்பு அரசியலமைப்பு பாதுகாப்புகள், சாதாரணமாக ஜனநாயகக் கொள்கையை மீறி அனுமதிக்கப்பட்டன.


இந்த விதிவிலக்கு இப்போது அனைவருக்கும் பொருந்த வேண்டும் என்பதே எனது வாதம். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் முன்னறிவிக்காத மற்றும் கணிக்க முடியாத ஒரு யதார்த்தத்தை இது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கை வெற்றி பெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்பது பற்றியது அல்ல. பிறப்பு விகிதங்களும் இறப்பு விகிதங்களும் மக்கள்தொகை மாற்றத்தின் பெரிய வடிவங்களைப் பின்பற்றுகின்றன. இந்த வடிவங்களில், பணக்கார மாநிலங்களும் சமூகக் குழுக்களும் மக்கள்தொகையில் விரைவான சரிவை அனுபவிக்கின்றன. இதற்கு அரசாங்கங்கள் பெருமை சேர்ப்பது துல்லியமாக இருக்காது. கூடுதலாக, எந்தவொரு ஏழை அல்லது பின்தங்கிய குழுவிற்கும் எதிராக வாதிட இந்த பகுத்தறிவைப் பயன்படுத்தலாம் என்ற கூற்றுடன் எனது வாதம் வேறுபட்டது.


அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, இந்தியா மூன்று முக்கியப் பிரிவுகளை எதிர்கொண்டுள்ளது. அவை கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் போன்றவை ஆகும். இந்தப் பிரிவுகள், குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் ஆழமாக வளர்ந்துள்ளன. இப்போது, ​​புதிய தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற இடங்களை மறு ஒதுக்கீடு செய்வது நான்காவது பிரிவை உருவாக்கக்கூடும். இந்தப் புதிய பிரிவு தற்போதுள்ள மூன்றோடு இணையக்கூடும். இதனால், இவற்றை மோசமாக்கும். இதன் விளைவாக, அது தேசிய ஒற்றுமையை பலவீனப்படுத்தக்கூடும். இந்தியாவின் நீண்டகால எதிர்காலத்தைப் பாதுகாக்க, புதிய ஒன்றை உருவாக்குவதில் அல்ல, தற்போதுள்ள மூன்று பிரிவுகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால்தான் தொகுதி மறுவரையறையை முடக்குவது முன்மொழியப்படுகிறது.


முதல் கலாச்சாரப் பிழைக்கோடு பிராந்தியங்களுக்கு இடையிலான வேறுபாடாகும். இந்தி பேசும் மாநிலங்கள் வட இந்தியாவில் இருந்தன. இந்தி பேசாத மாநிலங்கள் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் இருந்தன. இந்த வேறுபாடு ஆரம்பத்திலிருந்தே இருந்தது மற்றும் பிரிவினைக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்தது. ஆனால், மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கையையும், இந்தி மட்டுமே அதிகாரப்பூர்வ மொழியாக திணிக்கப்படாமல் இருப்பதையும் நமது அரசியல் தலைமை ஒப்புக்கொள்வதன் மூலம், இது ஒரு பிரிவாக மாற அனுமதிக்கவில்லை. கடந்த முப்பதாண்டுகளாக பொருளாதார வளர்ச்சியின் முறை தென்மேற்கு இந்தியாவிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவிற்கும் இடையே ஒரு வெளிப்படையான சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளது. சுவாரஸ்யமாக, மொழியியல் பிரிவினையைப் பெறும் பகுதிகள் இந்தப் பொருளாதாரப் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.


இறுதியாக, பாஜகவின் எழுச்சியுடன், ஒரு புதிய அரசியல் பிரிவு உருவாகியுள்ளது. இந்தப் பிரிவு, பாஜக மேலாதிக்கமாக இருக்கும் வட இந்திய மாநிலங்களுக்கும், அதன் செல்வாக்கு பலவீனமாக உள்ள பிற மாநிலங்களுக்கும் இடையிலானது. இந்த மாநிலங்களில் கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா ஆகியவை அடங்கும். இங்கு பாஜக வலுவான போட்டியை எதிர்கொள்கிறது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை அடங்கும். இங்கு பாஜக ஒரு சிறிய பங்களிப்பாரராக உள்ளது. இப்போது, ​​இந்த மூன்று குறைபாடுகளும் முழுமையாக ஒத்துப்போவதில்லை, ஆனால் இந்தி மொழி பேசும் பகுதியும் தென்னிந்திய மாநிலங்களும் எப்போதும் மூன்று குறைபாடுகளின் எதிர் பக்கங்களில் உள்ளன.


தொகுதி மறுவரையறையின் உண்மையான ஆபத்து என்னவென்றால், அது ஒரு புதிய பிழையை உருவாக்கி, ஏற்கனவே உள்ள முறையை வலுப்படுத்தக்கூடும். மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜேமி ஹின்ட்சன் ஆகியோரின் பகுப்பாய்வு, 2026-ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை இடங்கள் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த நிலையில், தென்னிந்திய மாநிலங்கள் இடங்களை இழக்கும்: கேரளா (எட்டு குறைவு), தமிழ்நாடு (எட்டு குறைவு), ஆந்திரா மற்றும் தெலுங்கானா (எட்டு இழப்பு), மற்றும் கர்நாடகா (இரண்டு குறைவு). இந்தி அல்லாத பிற மாநிலங்களும் இழக்கும்: மேற்கு வங்கம் (நான்கு குறைவு), ஒடிசா (மூன்று குறைவு), மற்றும் பஞ்சாப் (ஒரு குறைவு).


வட இந்திய இந்தி பேசும் மாநிலங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். உத்தரப் பிரதேசம் 11 இடங்களையும், பீகார் 10 இடங்களையும், ராஜஸ்தான் 6 இடங்களையும், மத்தியப் பிரதேசம் 4 இடங்களையும் கூடுதலாகப் பெறும். இது இந்தி மற்றும் இந்தி பேசாத மாநிலங்களுக்கு இடையேயான சமநிலையை சீர்குலைக்கக்கூடும். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களுடன் இது பொருந்தும்.


ஏற்கனவே 543 இடங்களில் 226 இடங்களைக் கொண்ட "இந்தி மையப்பகுதி" (Hindi heartland), இப்போது 259 இடங்களைக் கொண்டிருக்கும், கிட்டத்தட்ட இது பெரும்பான்மை ஆகும். தற்போது 132 இடங்களைக் கொண்ட தென் மாநிலங்கள், பெரிய அரசியலமைப்பு மாற்றங்களைத் தடுக்கும் திறனை இழக்க நேரிடும்.


இது இந்திய ஒன்றியத்தில் ஆதிக்கமற்ற தன்மைக்கும், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற கருத்துக்கும் எதிரானது. இந்தக் கொள்கைகள் நமது அரசியலமைப்பின் திறவுகோலாகும். அவற்றை மதிப்பது என்பது ஒரு சமூக ஒப்பந்தத்தை, ஒரு கூட்டாட்சி ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாகும். இந்தியா என்பது எழுதப்பட்ட ஒப்பந்தத்துடன் கூடிய ஒரு பொதுவான "ஒன்றாக வரும்" (coming together) கூட்டமைப்பு அல்ல. நாம் ஒரு "ஒன்றாக உயர்த்திப் பிடிக்கும்" (holding together) கூட்டமைப்பு ஆகும். இந்த ஒப்பந்தம் மறைமுகமாக ஆனால் அவசியம். இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது இரண்டு உரிமைகோரல்களை நிரந்தரமாக முடிக்கும். மக்கள் தொகை அடிப்படையிலான அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டாட்சியானது வளங்களில் வரி பங்களிப்பின் அடிப்படையிலான பங்கு. இந்தி பேசும் மற்றும் இந்தி அல்லாத மாநிலங்கள் ஒரு பகுதியில் தோல்வியடையக்கூடும். ஆனால், மற்றொரு பகுதியில் ஆதாயம் பெறலாம். குறுகிய கால தேர்தல் ஆதாயங்களுக்கு அப்பால், இந்த ஒப்பந்தத்தில் ஒரு தேசிய ஒருமித்த கருத்து, பார்த்தா சாட்டர்ஜி அழைப்பது போல, ஒரு "நியாயமான குடியரசு"க்கு நம்மை நெருக்கமாக நகர்த்தும். இது இந்தியக் குடியரசின் முக்கிய கொள்கையாகும்.


யாதவ், ஸ்வராஜ் இந்தியா உறுப்பினராகவும், பாரத் ஜோடோ அபியானின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.



Original article:

Share:

மார்ச் 1, 2024 அன்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய அறிவுரை ஏன் திரும்பப் பெறப்பட்டது? -பிரியா குமாரி சுக்லா

 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, மார்ச் 1, 2024 அன்று, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. "சோதனைக்கு உட்பட்டவை" (under-testing) அல்லது "நம்பகமற்றவை" (unreliable) என்று கருதப்படும் சேவைகளைத் தொடங்குவதற்கு முன் அரசாங்க ஒப்புதலைப் பெறுமாறு செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் கேட்டுக் கொண்டது. இருப்பினும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு அமைச்சகம் இந்த விதியை திரும்பப்பெற்றது.


முக்கிய அம்சங்கள்:


• மார்ச் 7, 2024 அன்று, ஆலோசனை வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் நாஸ்காம் பதிலளித்தது. நாஸ்காம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பத் துறை குழுவாகும். மேலும், மெட்டா, கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் பிற மென்பொருள் நிறுவனங்கள் (software as a service (SaaS)) தகவல் தொழில்நுட்ப  அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, ஆலோசனையின் வரம்பைக் கட்டுப்படுத்த பொருந்தக்கூடிய விதிமுறைகளை தளர்த்துதல், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் அரசாங்க அனுமதியைப் பெறுவதற்கான சர்ச்சைக்குரிய தேவையை நீக்குதல் மற்றும் இணக்கத்தின் காரணமாக நிறுவனங்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் நிலை அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய அவசியத்தைக் கைவிடுதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன.



• இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்களைப் பெற்ற பிறகு, அரசாங்கம் தனது அணுகுமுறையை மாற்றியது. மார்ச் 15, 2024 அன்று, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு திருத்தப்பட்ட ஆலோசனையை வெளியிட்டது. தொழில்துறை அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அது மாற்றங்களைச் செய்தது. "சோதனைக்கு உட்படுத்தப்படாத, நம்பகத்தன்மையற்ற" செயற்கை நுண்ணறிவு சேவைகளைத் தொடங்குவதற்கு அரசாங்க அனுமதி தேவை என்ற விதியை அமைச்சகம் நீக்கியது. மேலும், ஆலோசனையின் நோக்கத்தை சில இடைத்தரகர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தியது. கூடுதலாக, நிறுவனங்கள் நிலை அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய தேவையையும் அது நீக்கியது.


• ஆலோசனையின் வார்த்தைகள் தெளிவாக இல்லை என்றும் பயனர்களுக்கு கூடுதல் தகவல்களை வழங்குவதற்கான அதன் இலக்கை அடையவில்லை என்றும் நாஸ்காம் அரசாங்கத்திடம் கூறியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மாற்றங்களைச் செய்தது. "சோதனைக்கு உட்பட்ட, நம்பகத்தன்மையற்ற" செயற்கை நுண்ணறிவு சேவைகளைத் தொடங்க அனுமதி கோரும் விதியை அது நீக்கியது. நிறுவனங்கள் நிலை அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய தேவையையும் நீக்கியது.


உங்களுக்குத் தெரியுமா?


• மார்ச் 1, 2024 அன்று, கூகுள் மற்றும் OPEN AI போன்ற புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. இது புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தும் தளங்களுக்கும் பொருந்தும். அவர்களின் சேவைகள் இந்திய சட்டங்களின் கீழ் சட்டவிரோத பதில்களை உருவாக்கவோ அல்லது தேர்தல்களின் நேர்மைக்கு தீங்கு விளைவிக்கவோ கூடாது என்று அந்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


• பெரிய மொழி மாதிரிகள் (large language models (LLMs)) உட்பட "சோதனைக்கு உட்படுத்தப்படாத" அல்லது "நம்பகமற்ற" செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை வழங்கும் தளங்கள், அவற்றை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கு முன்பு ஒன்றிய அரசிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI)-உருவாக்கிய வெளியீடு தவறானதாகவோ அல்லது நம்பகத்தன்மையற்றதாகவோ இருக்கலாம் என்பதையும் அவை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.


• வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் உட்பட சில புத்தொழில் நிறுவனங்கள், இந்த ஆலோசனையை விமர்சித்தன. இது வளர்ந்து வரும் தொழில்துறையை பாதிக்கக்கூடிய ஒழுங்குமுறை மீறல் என்று கூறின Perplexity AI-ன் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், இது "இந்தியாவின் மோசமான நடவடிக்கை" என்று கூறினார். அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஆண்ட்ரீசென் ஹொரோவிட்ஸின் கூட்டாளியான மார்ட்டின் காசாடோ, இதை "புதுமைக்கு எதிரான" மற்றும் "மக்கள் விரோதமானது" என்றும் அழைத்தார்.



Original article:

Share:

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் -அனாமிகா அஜய், சுரஜிதா துருக்

 இந்தியாவின் வேளாண் உணவு முறைகள் பெண்களின் ஊதியம் மற்றும் ஊதியம் இல்லாத உழைப்பை பெரிதும் நம்பியிருப்பதாக தேசிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த அமைப்புகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, வேளாண் காடுகள் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை அடங்கும்.


நிறுவனங்கள் பெண்களின் நேரத்தை கட்டுப்படுத்துகின்றன, இது அவர்களின் உற்பத்தித்திறனைப் பாதிக்கிறது. உற்பத்தி வளங்களை அணுகுவதிலும் கட்டுப்படுத்துவதிலும் பெண்கள் தடைகளை எதிர்கொள்கின்றனர். விவசாய உள்ளீடுகள் மற்றும் அறிவியல் அறிவுக்கான அணுகல் பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. நிறுவனத் தடைகள் பெண்கள் விவசாய முடிவுகளை எடுக்கும் திறனைக் குறைக்கின்றன. பாலின ஏற்றத்தாழ்வுகள் சாதி மற்றும் வர்க்கத்துடன் இணைந்து தீர்மானிக்கிறது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உழைப்பும் அதிகாரமும் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்பதைப் பாதிக்கிறது. பெண்களுக்கு உழைப்பு மிகுந்த, குறைந்த ஊதியம் தரும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்தத் துறையில் பெரும்பாலான தொழில்நுட்ப தலையீடுகள் ஆண்களின் வேலை திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன என்பதற்கான சான்றுகள் காட்டுகின்றன. உண்மையில், இயந்திரமயமாக்கல் இந்தத் துறைகளில் பெண்கள் தங்கள் ஊதிய வேலையை இழக்க வழிவகுத்துள்ளது. பெண்களின் பணிச்சுமையைக் குறைக்க தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்படும்போது, ​​அது அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வழிவகுக்கிறது.


கடந்த 10 ஆண்டுகளில், எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, பெண் விவசாயிகள் மற்றும் மீன் தொழிலாளர்களுக்கு பாலினப் பிரிவினையை நீக்குவதோடு மட்டுமல்லாமல், பெண்களின் உற்பத்தித்திறன், முடிவெடுத்தல் மற்றும் அவர்களின் நேரத்தின் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை அணுகுவதற்கு உதவுகிறது. இந்த அறக்கட்டளை, ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பழங்குடி சமூகங்களுடன் இணைந்து சிறு தினை விவசாயத்தை புதுப்பிக்க பணியாற்றி வருகிறது. இது இப்பகுதியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்மையை சமாளிக்க உதவுகிறது. சிறு தினை விவசாயத்தில், ஆண்கள் வேலை, வளங்கள், தொழில்நுட்பம் மற்றும் நிதி குறித்து பெரும்பாலான முடிவுகளை எடுக்கிறார்கள். பெண்களுக்கு குறைந்த மதிப்புள்ள பணிகள் வழங்கப்படுகின்றன.


டிராக்டர்கள் ஆண்பால் சக்தியின் அடையாளமாகக் காணப்படுகின்றன, மேலும் ஆண்கள் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த விவசாய இயந்திரங்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கு குடும்பங்கள் முன்னுரிமை அளிப்பதில்லை. பெண்களுக்கு பொதுவாக களையெடுத்தல், கதிரடித்தல், உமி நீக்குதல் மற்றும் பொடியாக்குதல் போன்ற நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் உடல் ரீதியாக தேவைப்படும் பணிகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், பெண்கள் தகவல், தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களை அணுக அனுமதிப்பது மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம், பெண்கள் ஆணாதிக்க ஒரே மாதிரியான சிந்தனைகளை உடைத்து வெளியே வருகின்றனர்.


மீன்பிடித் துறையிலும் பெண்கள் பல சவால்களைச் சந்தித்துள்ளனர். பெரிய இயந்திரமயமாக்கப்பட்ட கப்பல்கள் மற்றும் இழுவைப் படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பெண்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். புதிய மையப்படுத்தப்பட்ட துறைமுகங்கள் மற்றும் தரையிறங்கும் மையங்கள் அவர்களின் கிராமங்களிலிருந்து வெகு தொலைவில் கட்டப்பட்டன. இது ஆண்களுக்கு சம்பாதிக்க அதிக வாய்ப்புகளை வழங்கியது. ஆனால், பெண்கள் மீன் பதப்படுத்துதல், உலர்த்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற கடினமான வேலைகளைச் செய்தனர்.


இந்த துறைமுகங்களில் அதிக அளவில் கொள்முதல் செய்பவர்கள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகர்கள் அதிகமாக இருப்பதால், சிறிய அளவிலான பெண் விற்பனையாளர்கள் ஏலதாரர்கள் மற்றும் மீன் விற்பனையாளர்கள் என ஒதுக்கப்பட்டுள்ளனர். ஒரு மீன் விற்பனையாளருக்கு, குறைந்தளவில் மீன் கிடைப்பது கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தெருவோர வியாபாரிகள் சிறிய அளவிலான மீன்களை வாங்கக்கூட சிரமப்படுகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, ​​அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.800க்கு மேல் வருமானம் கிடைப்பதில்லை. இந்த வருமானத்தில் பெரும்பகுதி பயணம் மற்றும் கடன்களை அடைப்பதற்காக செலவிடப்படுகிறது. பெண் விற்பனையாளர்களுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்று, தகவல் பரிமாற்றமாகும். மீன் எங்கே கிடைக்கிறது, எந்த சந்தைகளில் விற்க வேண்டும், அல்லது சிறந்த வணிக மாதிரிகளை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற போதுமான விவரங்கள் அவர்களிடம் இல்லை.


பெண் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வழங்குவது அவர்களின் பணியை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை உதவியுள்ளது. அவர்கள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், ஹெல்ப்லைன்கள் மற்றும் ஆடியோ ஆலோசனைகளை வழங்கினர். இணையத்தைப் பயன்படுத்துதல், டிஜிட்டல் பணம் செலுத்துதல், சரக்கு மேலாண்மை மற்றும் ஆன்லைன் வணிகம் ஆகியவற்றிலும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சிறிய மாற்றங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான அணுகலும் சிறு அளவிலான மீன் தொழிலாளர்களின் வேலையை பெரிதும் மேம்படுத்தியுள்ளன. அவர்கள் இப்போது சவால்களை சிறப்பாகக் கையாளவும், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு எளிதாகத் தகவமைத்துக் கொள்ளவும் முடியும்.


பாலினம் சார்ந்த தொழில்நுட்பங்கள் பெண்கள் தடைகளைத் தாண்டிச் சென்று சுயாதீனமான தேர்வுகளைச் செய்ய உதவுகின்றன. இருப்பினும், ஆணாதிக்கம் வலுவாகவும் மாற்றுவதற்கு கடினமாகவும் உள்ளது. பாலினம் சார்ந்த தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதோடு, ஆண்கள், குடும்பங்கள், சமூகங்கள், சந்தை மற்றும் அரசு ஆகியவற்றைப் பொறுப்பேற்க வைக்கும் ஒரு செயல்படுத்தும் சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும்.


MSSRF-ல் அஜய் முதன்மை விஞ்ஞானி, துருக் பாலின மேம்பாட்டு ஆய்வாளர்.



Original article:

Share:

விரைவு வர்த்தகத்தின் (quick commerce) எழுச்சிக்குப் பின்னால் இருப்பது என்ன? -சப்தபர்ணோ கோஷ்

 டார்க் ஸ்டோர்கள் என்றால் என்ன, அவை Q-வணிகத்தை எவ்வாறு எளிதாக்குகின்றன? இந்த டிஜிட்டல் தளங்களில் வணிக அனுபவத்தை மேம்படுத்த வாடிக்கையாளர் தரவு எவ்வாறு உதவுகிறது?


கோவிட்-19 ஊரடங்கின் போது மக்களுக்கு விரைவான டெலிவரி தேவைப்பட்டபோது, ​​விரைவு வர்த்தகம் முதலில் பயனுள்ளதாக மாறியது. குறிப்பாக, இந்தியாவின் நகரங்களில் ஊரடங்கு முடிந்த பிறகும், விரைவு வர்த்தகம் (quick commerce) தொடர்ந்து வளர்ந்து மக்கள் பொருட்களை வாங்கும் முறையை மாற்றியது.


விரைவான வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது?


விரைவு வர்த்தகம் (Q-commerce) என்பது ஒரு வகையான மின் வணிகமாகும். இது தயாரிப்புகளை மிக விரைவாக, பொதுவாக 10 முதல் 20 நிமிடங்களுக்குள் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த விரைவான விநியோகத்தை சாத்தியமாக்க, நிறுவனங்கள்  விநியோக மையங்களைப் பயன்படுத்துகின்றன.


டார்க் கடைகள் என்பவை ஆன்லைன் ஆர்டர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கிடங்குகள். வாடிக்கையாளர்கள் அங்கு நேரில் ஷாப்பிங் செய்ய முடியாது. விரைவான டெலிவரிகளை உறுதி செய்வதற்காக இந்தக் கடைகள் வாடிக்கையாளர்களுக்கு அருகில் அமைந்துள்ளன.


பாரம்பரிய சில்லறை விற்பனைக் கடைகள் அல்லது நவீன பல்பொருள் அங்காடிகளைப் போலல்லாமல், விரைவு வர்த்தகம் (இது ஒரு மொபைல் செயலி மூலம் செயல்படுகிறது) அதன் சேவைகளை மேம்படுத்த வாடிக்கையாளர் தரவைப் பயன்படுத்துகிறது. இந்தத் தரவு அவர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை வழங்க உதவுகிறது. தேவையின் அடிப்படையில் அவர்களின் பங்குகளை சிறப்பாக நிர்வகிக்கவும் இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட பருவங்களில் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமாக இருக்கும் தயாரிப்புகளை எப்போது சேமித்து வைக்க வேண்டும் என்பதை அவர்களால் கணிக்க முடியும்.


வணிகக் குறிகளுக்கு (Brand) இதில் என்ன இருக்கிறது?


ஐஐஎம் அகமதாபாத்தில் உள்ள போக்குவரத்து மற்றும் தளவாட மையத்தின் ஆய்வில், விரைவான வர்த்தகம் சில்லறை விற்பனையாளர்களுக்கு நுகர்வோர் மத்தியில் அவர்களின் பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் உதவுகிறது என்று கூறுகிறது.


EY-பார்த்தெனனின் (EY-Parthenon) நுகர்வோர் தயாரிப்பு மற்றும் சில்லறை விற்பனைத் துறையின் தலைவரும் தேசியத் தலைவருமான ஆங்ஷுமன் பட்டாச்சார்யா, பொதுவாக ஒரு குறிப்பிட்ட வயது மற்றும் பொருளாதார பின்னணியைச் சேர்ந்த குறைந்த விலை தொழிலாளர்கள் கிடைப்பது இந்தியாவில் விரைவான வர்த்தகத்தின் வளர்ச்சி மற்றும் செயல்திறனில் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்று குறிப்பிட்டார்.


விரைவான வர்த்தகத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம், நுகர்வோருக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான தயாரிப்புத் தேர்வுகள் ஆகும். பெரிய அளவிலான செயல்பாடுகள் விரைவான வர்த்தக தளங்களுக்கு செலவு நன்மையை அளிக்கின்றன என்றும் பட்டாச்சார்யா விளக்கினார். உதாரணமாக, ஒரு நிறுவனம் உறைந்த அல்லது குளிரூட்டப்பட்ட பொருட்களை விற்க விரும்பினால், அவர்கள் உள்ளூர் கடையில் ஒரு உறைவிப்பான் வைக்க வேண்டும். இது மிகவும் விலை உயர்ந்தது. விரைவான வர்த்தக தளங்கள் பெரிய அளவிலான செயல்பாடுகள் மூலம் இந்த செலவைக் குறைக்கின்றன.


நாம் எப்படி தாமதமாக பொருட்களை  வர்த்தகம் செய்தோம்?


ஆலோசனை நிறுவனமான நீல்சென்ஐக்யூ (NeilsenIQ) நடத்திய ஆய்வில், நகர்ப்புற நுகர்வோரில் 41% பேர் நவீன வர்த்தகத்தை விரும்புகிறார்கள், 25% பேர் பொது வர்த்தகத்தை விரும்புகிறார்கள், 22% பேர் மின் வணிகத்தைத் தேர்வு செய்கிறார்கள், 12% பேர் விரைவான வர்த்தகத்தை விரும்புகிறார்கள்.


மற்றொரு ஆலோசனை நிறுவனமான டெலாய்ட் (Deloitte), பெரிய FMCG தயாரிப்புகள் தங்கள் மொத்த மின் வணிக விற்பனையில் விரைவான வர்த்தக விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விரைவான வர்த்தகம் இப்போது அவர்களின் ஆன்லைன் விற்பனையில் சுமார் 35% ஆகும்.


2024ஆம் ஆண்டு டெலாய்ட் நுகர்வோர் கணக்கெடுப்பு, உணவு மற்றும் பானங்களை வாங்கும்போது பாரம்பரிய மின் வணிகத்தைவிட விரைவான வர்த்தகத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. ஏனெனில் இதுபோன்ற கொள்முதல்கள் பெரும்பாலும் உந்துதலின் பேரில் அல்லது உடனடித் தேவைகளுக்காக செய்யப்படுகின்றன. இருப்பினும், வீடு, அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் போன்ற தயாரிப்புகளுக்கு, மக்கள் மின் வணிகத்தை விரும்புகிறார்கள். ஏனெனில், இவை பொதுவாக திட்டமிடப்பட்ட கொள்முதல்கள் ஆகும்.


பல்பொருள் அங்காடிகள் போன்ற நவீன வர்த்தகம், அனைத்து வகையான தயாரிப்புகளுக்கும் மிகவும் விரும்பப்படும் தேர்வாகவே உள்ளது. ஏனெனில் நுகர்வோர் மாதாந்திர மளிகைப் பொருட்களுக்கு பெரிய அளவுகள் கிடைப்பது, சிறந்த விலைகள் மற்றும் அதிக தள்ளுபடிகள் ஆகியவற்றை விரும்புகிறார்கள்.


மற்றொரு முக்கியமான காரணி, இலவச டெலிவரி பெற தேவையான குறைந்தபட்ச இறக்குமதி செலவினம் ஆகும். பட்டாச்சார்யாவின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் ஒரு சிறிய வசதிக் கட்டணத்தை செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பெரும்பாலான சில்லறை விற்பனைக் கடைகள் இரவு 8 மணிக்குள் மூடப்படும் என்று அவர் விளக்கினார். எனவே, இரவு 10 மணிக்குள் ஒருவருக்கு ஏதாவது தேவைப்பட்டால், விரைவான வர்த்தகம் மட்டுமே ஒரே வழி. 


சிறிய ஆர்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்குப் பதிலாக, இந்த தளங்கள் சரியான கலவையான தயாரிப்புகள், பிரீமியம் பிராண்டுகள் மற்றும் அவற்றின் சொந்த வணிக அடையாளங்களை வழங்குவதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்றும் EY-பார்த்தனான் தலைவர் குறிப்பிட்டார். மனிதவளம் மற்றும் வாகன பயன்பாட்டில் செயல்திறனை மேம்படுத்துவதும் லாபத்திற்கு முக்கியமாகும் என்றும் அவர் கூறினார்.


இந்திய விரைவு வர்த்தக சந்தை தற்போது $3.34 பில்லியன் மதிப்புடையது. இது 2029ஆம் ஆண்டுக்குள் $9.95 பில்லியனாக வளரும் என்று கிராண்ட் தோர்டன் பாரத் (Thorton Bharat) தெரிவித்துள்ளது. 2024 நிதியாண்டில் சந்தை 76% வளர்ச்சியடைந்தது.


நிதிச் சேவை நிறுவனமான மோதிலால் ஓஸ்வாலின் தனி அறிக்கை, Zomato-வுக்குச் சொந்தமான Blinkit, 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 46% சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறது. Zepto 29% பங்கையும், Swiggy Instamart 25% பங்கையும் வைத்திருந்தது.


பாரம்பரிய சில்லறை விற்பனையாளர்கள் பற்றி என்ன?


இந்தியா முழுவதும் உள்ள வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (Fast-Moving Consumer Goods (FMCG)) பங்குதாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு சாரா நிறுவனங்கள், அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகக் கூட்டமைப்பு (All-India Consumer Products Distribution Federation (AICPDF)) உடன் இணைந்து, சமீபத்தில் இந்திய போட்டி ஆணையத்தில் (Competition Commission of India (CCI)) புகார் அளித்துள்ளன. பிளிங்கிட், ஜெப்டோ மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆகிய மூன்று விரைவு வர்த்தக நிறுவனங்கள் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


விநியோகஸ்தர்கள் மன்றம், அதிக விலை நிர்ணயம் மற்றும் அதிக தள்ளுபடி குறித்து கவலைகளை எழுப்பியது. போட்டியாளர்களை சந்தையிலிருந்து வெளியேற்றுவதற்காக ஆன்லைன் தளங்கள் தயாரிப்பு விலைகளை விலையை குறைவாக நிர்ணயிப்பதாக அவர்கள் கூறினர். இதை அடைந்த பிறகு, தளங்கள் தங்கள் இழப்புகளை மீட்டெடுக்க விலைகளை உயர்த்துகின்றன.


இந்த தளங்கள் துணிகர முதலீட்டாளர்கள் அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான நிதி ஆதரவைக் கொண்டுள்ளன என்றும், இது அவர்களுக்கு ஒரு நன்மையை அளிக்கிறது என்றும் மன்றம் குறிப்பிட்டது. கூடுதலாக, வாடிக்கையாளர் இருப்பிடம், சாதன வகை அல்லது வாங்கும் பழக்கம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வெவ்வேறு விலைகளைப் பயன்படுத்துவதற்கு பயன்பாட்டுத் தரவைப் பயன்படுத்துவதாக தளங்கள் குற்றம் சாட்டப்பட்டன.


பாரம்பரிய சில்லறை விற்பனையாளர்கள் போட்டியிட போராடுவதாகவும், இதனால் மில்லியன் கணக்கான சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் கூட்டமைப்பு எச்சரித்தது.


தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான பி.எம். கணேஷ்ராம், கூறுகையில், பாரம்பரிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் இரண்டும் வணிகம் செய்ய சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கும் வேலைகளுக்கும் பாரம்பரிய சில்லறை விற்பனையை நம்பியிருப்பதால் இது முக்கியமானது என்றார். பாரம்பரிய சில்லறை விற்பனை பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வேறு வேலைகள் கிடைப்பது கடினமாக இருக்கும், ஏனெனில் அவர்களில் பலருக்கு போதுமான கல்வியறிவு இல்லாமல் இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.



Original article:

Share:

BioE3 திட்டம் என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 ஆய்வகத்தில் புரதங்களை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிக்கு நிதியளிக்க உயிரி தொழில்நுட்பத் துறை திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள வீடுகளில் உணவுமுறையை மேம்படுத்துவதே இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும். அரசாங்கத்தால் சமீபத்தில் தொடங்கப்பட்ட BioE3 முயற்சியின் கீழ் இந்த நிதி வழங்கப்படும்.


முக்கிய அம்சங்கள்:


• உண்மையான புரத மூலங்களைப் போலவே சுவை மற்றும் புரத கட்டமைப்பில் இருக்கும் "ஸ்மார்ட் புரதங்களை" உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்தப் புரதங்கள் இயற்கை புரதங்களைப் போலவே இருக்கும். உணவு ஆதாரங்களை காலநிலைக்கு ஏற்றவாறு மாற்றுவதே இதன் நோக்கமாகும்.


• உயிரி தொழில்நுட்பத் துறை, ஆராய்ச்சி மானியங்களுக்கு விண்ணப்பிக்க விஞ்ஞானிகளை அழைத்துள்ளது. இந்த புரதங்களை உருவாக்குவதற்கும் பெரிய அளவிலான உற்பத்தியில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும். புரதங்களை பாதுகாப்பாகவும், குறைவாகவும், திறமையாகவும் தயாரிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.


• புரதங்களை உற்பத்தி செய்வதற்கான மூன்று முறைகளில் இந்தத் துறை அதிக கவனம் செலுத்தும்.


• முதல் முறை நொதித்தல் (fermentation) மூலம் பெறப்பட்ட புரதங்கள் ஆகும். அவை நுண்ணுயிரிகளிலிருந்து வருகின்றன. சில வகையான பாசிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் இந்த புரதங்களை உருவாக்க முடியும். இந்த புரதங்களை இறைச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். குறைந்த விலை உயிரி உற்பத்தி செயல்முறைகளை உருவாக்குவதே முக்கிய சவாலாகும். இந்த செயல்முறைகள் புரத உற்பத்தியை மலிவு விலையில் வழங்க வேண்டும். அவை வணிக ரீதியான நம்பகத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும்.


• துறை ஆவணத்தின்படி, இந்த முறையில் ஆராய்ச்சி செய்வது, நொதித்தலுக்கான மறுசீரமைப்பு நுண்ணுயிர் அமைப்புகளை வடிவமைத்து மேம்படுத்துதல், அதிக மகசூலுக்கான பாதைகளை ஒழுங்குபடுத்துதல், திரிபு உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் துணை தயாரிப்புகளைக் குறைக்கவும் மரபணு திருத்தத்தைப் பயன்படுத்துதல் மற்றும் ஒவ்வாமை மற்றும் நச்சுகளை அகற்ற செயல்முறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். குளுக்கோசுக்குப் பதிலாக விவசாய துணை தயாரிப்புகள் அல்லது பிற ஆதாரங்களை கருத்தரித்தல் செயல்முறைக்கு பயன்படுத்தக்கூடிய செயல்முறைகளை உருவாக்குவதிலும் இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்தும்.


உங்களுக்குத் தெரியுமா?


• BioE3 கொள்கையின் குறிக்கோள் ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்குவதாகும். இந்தத் திட்டம் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்ற உதவும். இது உயிரி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான புதிய ஆராய்ச்சியையும் ஆதரிக்கும்.


• உயிரி உற்பத்தியை ஆதரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளை BioE3 கொள்கை வழங்குகிறது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் உயிரி உற்பத்தியை மேம்படுத்துவதை (‘Fostering High Performance Biomanufacturing’) இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


• மேம்படுத்தப்பட்ட செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றிற்கான உயிரி உற்பத்தி செயல்முறையில் புரட்சியை ஏற்படுத்துவதையும், உயிரியல் அடிப்படையிலான உயர் மதிப்பு தயாரிப்புகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியையும் துரிதப்படுத்துவதையும் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.


• 2023-24-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதிநிலை அறிகையில் இந்தியாவின் பசுமை வளர்ச்சி தொலைநோக்குப் பார்வையை BioE3 கொள்கை ஆதரிக்கிறது. இது பிரதமரின் “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை முயற்சியை” (‘Lifestyle for Environment (LiFE)) பின்பற்றுகிறது. இது நிலைத்தன்மைக்கான கூட்டு முயற்சியை ஊக்குவிக்கிறது.


• இந்தியாவை 'நிகர-பூஜ்ஜிய' கார்பன் பொருளாதாரமாக மாற்றும் பிரதமரின் இலக்கை இந்தக் கொள்கை ஆதரிக்கிறது. 2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிகையில் உயிரி உற்பத்தி மற்றும் உயிரி ஃபவுண்டரி முயற்சியை ஒரு திட்டமாக அரசாங்கம் அறிவித்தது.



Original article:

Share:

ஓர் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) சட்டங்களின் சோதனை -பிரபாஷ் ரஞ்சன்

 அமெரிக்காவும் இந்தியாவும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பதால், அவர்களின் இருதரப்பு வர்த்தகம் WTO சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுடன் ஒத்துப்போக வேண்டும். அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியக் கூடாது.


பிப்ரவரி 13, 2025 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க குறுகிய பயணத்தின் போது, ​​இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் பல துறைகளை உள்ளடக்கும் மற்றும் 2025ஆம் ஆண்டு  இலையுதிர்காலத்தில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வல்லுநர்கள் கட்டணங்கள் மற்றும் வர்த்தக அளவைக் கணக்கிடுவதில் கவனம் செலுத்துகின்றனர். 


இருப்பினும், சர்வதேச வர்த்தக சட்டத்தின் கண்ணோட்டத்தில் இந்த வளர்ச்சியைப் புரிந்துகொள்வதும் முக்கியம். சர்வதேச வர்த்தக சட்டத்தின் பெரும்பகுதி, கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தத்தில் (General Agreement on Tariffs and Trade (GATT)) எழுதப்பட்டுள்ளது மற்றும் உலக வர்த்தக அமைப்பால் (World Trade Organization (WTO)) நிர்வகிக்கப்படுகிறது.


அமெரிக்காவும் இந்தியாவும் WTO-வின் உறுப்பினர்கள். இதன் பொருள் அவர்களின் வர்த்தக ஒப்பந்தங்கள் WTO விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதன் காரணமாக, அவற்றுக்கிடையே முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) மிகவும் முக்கியமானது.


தற்போது, ​​BTA எதை உள்ளடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பிப்ரவரி 13 அன்று வெளியான அமெரிக்க-இந்திய கூட்டுத் தலைவர்கள் அறிக்கையில் பல துறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (Bilateral Trade Agreement (BTA)) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.


இந்த ஒப்பந்தம் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)) என்று அழைக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், ஒப்பந்தத்தின் உள்ளடக்கம்தான் முக்கியமானது, அதன் பெயர் அல்ல.


சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்


WTO அமைப்பு மிகவும் விருப்பமான நாடு (most favoured nation (MFN)) கொள்கையில் செயல்படுகிறது. இது வர்த்தக நாடுகளுக்கு இடையே பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. எனவே, சில நாடுகளுக்கு முன்னுரிமை அணுகலை வழங்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA)  MFN விதியை மீறுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் நாடுகள் இன்னும் FTAகளை நிறுவ முடியும்.


இந்த நிபந்தனைகளில் ஒன்று, GATT-ன் பிரிவு XXIV.8(b)-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. FTA-க்குள் "கணிசமான அனைத்து வர்த்தகத்திற்கும்" சுங்க வரிகள் மற்றும் பிற வர்த்தகத் தடைகளை உறுப்பினர் நாடுகள் அகற்ற வேண்டும். ஒப்பந்தத்தில் "கணிசமான அனைத்து வர்த்தகம்" என்ற சொல் வரையறுக்கப்படவில்லை என்றாலும், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தின் மிக உயர்ந்த சதவீதத்தை FTA உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


உலகளாவிய வர்த்தகத்தில் ஒரு முக்கிய விதியான MFN (மிகவும் விரும்பத்தக்க நாடு) கொள்கைக்கு FTAக்கள் (சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்) விதிவிலக்காக இருப்பதால் இந்த விதி உள்ளது. FTAக்கள் இந்த விதியை மீறுவதால், அவை கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் எளிதில் அனுமதிக்கப்படக்கூடாது.


இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் வகையில் அது இரு நாடுகளுக்கும் இடையிலான கிட்டத்தட்ட அனைத்து வர்த்தகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இது உலக வர்த்தக அமைப்புக்கும் (WTO) தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் உண்மையில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பயனளிக்குமா என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து மக்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன.


சட்டப்படி, இந்தியாவும் அமெரிக்காவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தயாரிப்புகளுக்கு மட்டுமே வரிகளை (இறக்குமதி வரிகள்) குறைத்தால், மற்ற நாடுகளுக்கு அதே நன்மையை வழங்காமல், அது WTO விதிகளை மீறும்.


இடைக்கால ஒப்பந்தங்கள், செயல்படுத்தும் பிரிவு


இந்தியாவும் அமெரிக்காவும் சில பொருட்களுக்கு WTO விதிகளை மீறாமல் 'இடைக்கால ஒப்பந்தம்' ('interim agreement.') என்று அழைப்பதன் மூலம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை (BTA) உருவாக்க முடியும். இந்த ஒப்பந்தம் பின்னர் ஒரு முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு (FTA) வழிவகுக்கும். FTAக்கள் இறுதி செய்யப்படுவதற்கு நேரம் எடுக்கும் என்பதால், GATT-ன் பிரிவு XXIV, நாடுகள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரை, FTA-ஐ நோக்கிய ஒரு படியாக 'இடைக்கால ஒப்பந்தங்களில்' கையெழுத்திட அனுமதிக்கிறது.


முதலாவதாக, GATT இன் பிரிவு XXIV.5-ன் கீழ், சுதந்திர வர்த்தகப் பகுதியை உருவாக்குவதற்கு அவசியமானால், நாடுகள் ‘இடைக்கால ஒப்பந்தத்தில்’ நுழையலாம். இரண்டாவதாக, இந்த ‘இடைக்கால ஒப்பந்தம்’ ஒரு நியாயமான காலக்கெடுவுக்குள் FTA-ஐ நிறுவுவதற்கான திட்டம் அல்லது அட்டவணையை உள்ளடக்கியிருக்க வேண்டும். இது பொதுவாக 10 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


எவ்வாறாயினும், இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்காலத்தில் உண்மையான FTAவில் கையெழுத்திட விரும்பினால் மட்டுமே முன்மொழியப்பட்ட BTA-ஐ 'இடைக்கால ஒப்பந்தமாக' அறிவிக்க வேண்டும். MFN-சீரற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மறைத்து நேரத்தை வாங்குவதற்கு மட்டுமே 'இடைக்கால ஒப்பந்தம்' அணுகுமுறையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கலாம்.  ஆனால், சட்டப்பூர்வமாக பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.


WTO சட்டம் 'செயல்படுத்தும் பிரிவு' எனப்படும் மிகவும் விரும்பப்படும் நாடு (MFN) கொள்கைக்கு விதிவிலக்கு அளிக்கிறது. இது WTO நாடுகள் வரிகளைக் குறைப்பதன் மூலம் வளரும் நாடுகளின் தயாரிப்புகளுக்கு சிறந்த சந்தை அணுகலை வழங்க அனுமதிக்கிறது. இருப்பினும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் (இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் அல்லது BTA) இந்த பிரிவின் கீழ் பொருந்துவதாகத் தெரியவில்லை.


இந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தயாரிப்புகள் மீதான வரிகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன. அமெரிக்க தயாரிப்புகள் மீதான வரிகளைக் குறைப்பதற்கான இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகளை அமெரிக்கா பாராட்டுவதாகவும் கூட்டு அறிக்கை குறிப்பிடுகிறது. இது அமெரிக்க தயாரிப்புகளுக்கு இந்தியா சிறந்த சந்தை அணுகலை வழங்குகிறது என்பதைக் காட்டுகிறது, இது வளரும் நாடுகளுக்கு பயனளிக்கும் நோக்கில் 'செயல்படுத்தும் பிரிவு' நோக்கத்திற்கு எதிரானது.


WTO சட்டத்தை மதிப்பது


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 'பரஸ்பர வரிகள்' (‘reciprocal tariffs’) என்ற யோசனையின் அர்த்தம், அமெரிக்கப் பொருட்கள் மீது மற்ற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு இணையாக அமெரிக்கா தனது வரிகளை உயர்த்தும் என்பதாகும். இருப்பினும், இது இரண்டு முக்கியமான WTO கொள்கைகளுக்கு எதிரானது:


1. மிகவும் விரும்பப்படும் நாடு (MFN): இந்தக் கொள்கையின் பொருள் நாடுகள் தங்கள் அனைத்து வர்த்தக நாடுகளையும் சமமாக நடத்த வேண்டும் என்பதாகும்.


2. சிறப்பு மற்றும் வேறுபட்ட நடைமுறை (Special and Differential Treatment (S&DT)): இது வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளைவிட குறைவாக தங்கள் வரிகளைக் குறைக்க அனுமதிக்கிறது.


அமெரிக்கா 'பரஸ்பர வரிகள்' அணுகுமுறையைப் பின்பற்றினால், வாக்குறுதியளிக்கப்பட்டதைவிட அதிக வரிகளை வசூலிக்கக்கூடாது என்ற WTO-விற்கான அதன் உறுதிப்பாட்டையும் அது மீறும்.


நியாயமான உலகளாவிய வர்த்தக விதிகளை ஆதரிக்கும் இந்தியா போன்ற நாடுகள், WTO கொள்கைகளை பலவீனப்படுத்தும் எந்த மாற்றங்களையும் கடுமையாக எதிர்க்க வேண்டும். வரவிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் (BTA பேச்சுவார்த்தைகள்) இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டையும், அமெரிக்க அழுத்தத்திலிருந்து WTO விதிகளைப் பாதுகாக்கும் திறனையும் சோதிக்கும்.


பிரபாஷ் ரஞ்சன், ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளி, சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தக சட்டங்களுக்கான மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குனர் ஆவார். 



Original article:

Share: