மார்ச் 1, 2024 அன்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய அறிவுரை ஏன் திரும்பப் பெறப்பட்டது? -பிரியா குமாரி சுக்லா

 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, மார்ச் 1, 2024 அன்று, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. "சோதனைக்கு உட்பட்டவை" (under-testing) அல்லது "நம்பகமற்றவை" (unreliable) என்று கருதப்படும் சேவைகளைத் தொடங்குவதற்கு முன் அரசாங்க ஒப்புதலைப் பெறுமாறு செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் கேட்டுக் கொண்டது. இருப்பினும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு அமைச்சகம் இந்த விதியை திரும்பப்பெற்றது.


முக்கிய அம்சங்கள்:


• மார்ச் 7, 2024 அன்று, ஆலோசனை வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் நாஸ்காம் பதிலளித்தது. நாஸ்காம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பத் துறை குழுவாகும். மேலும், மெட்டா, கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் பிற மென்பொருள் நிறுவனங்கள் (software as a service (SaaS)) தகவல் தொழில்நுட்ப  அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, ஆலோசனையின் வரம்பைக் கட்டுப்படுத்த பொருந்தக்கூடிய விதிமுறைகளை தளர்த்துதல், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் அரசாங்க அனுமதியைப் பெறுவதற்கான சர்ச்சைக்குரிய தேவையை நீக்குதல் மற்றும் இணக்கத்தின் காரணமாக நிறுவனங்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் நிலை அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய அவசியத்தைக் கைவிடுதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன.



• இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்களைப் பெற்ற பிறகு, அரசாங்கம் தனது அணுகுமுறையை மாற்றியது. மார்ச் 15, 2024 அன்று, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு திருத்தப்பட்ட ஆலோசனையை வெளியிட்டது. தொழில்துறை அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அது மாற்றங்களைச் செய்தது. "சோதனைக்கு உட்படுத்தப்படாத, நம்பகத்தன்மையற்ற" செயற்கை நுண்ணறிவு சேவைகளைத் தொடங்குவதற்கு அரசாங்க அனுமதி தேவை என்ற விதியை அமைச்சகம் நீக்கியது. மேலும், ஆலோசனையின் நோக்கத்தை சில இடைத்தரகர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தியது. கூடுதலாக, நிறுவனங்கள் நிலை அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய தேவையையும் அது நீக்கியது.


• ஆலோசனையின் வார்த்தைகள் தெளிவாக இல்லை என்றும் பயனர்களுக்கு கூடுதல் தகவல்களை வழங்குவதற்கான அதன் இலக்கை அடையவில்லை என்றும் நாஸ்காம் அரசாங்கத்திடம் கூறியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மாற்றங்களைச் செய்தது. "சோதனைக்கு உட்பட்ட, நம்பகத்தன்மையற்ற" செயற்கை நுண்ணறிவு சேவைகளைத் தொடங்க அனுமதி கோரும் விதியை அது நீக்கியது. நிறுவனங்கள் நிலை அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய தேவையையும் நீக்கியது.


உங்களுக்குத் தெரியுமா?


• மார்ச் 1, 2024 அன்று, கூகுள் மற்றும் OPEN AI போன்ற புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. இது புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தும் தளங்களுக்கும் பொருந்தும். அவர்களின் சேவைகள் இந்திய சட்டங்களின் கீழ் சட்டவிரோத பதில்களை உருவாக்கவோ அல்லது தேர்தல்களின் நேர்மைக்கு தீங்கு விளைவிக்கவோ கூடாது என்று அந்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


• பெரிய மொழி மாதிரிகள் (large language models (LLMs)) உட்பட "சோதனைக்கு உட்படுத்தப்படாத" அல்லது "நம்பகமற்ற" செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை வழங்கும் தளங்கள், அவற்றை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கு முன்பு ஒன்றிய அரசிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI)-உருவாக்கிய வெளியீடு தவறானதாகவோ அல்லது நம்பகத்தன்மையற்றதாகவோ இருக்கலாம் என்பதையும் அவை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.


• வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் உட்பட சில புத்தொழில் நிறுவனங்கள், இந்த ஆலோசனையை விமர்சித்தன. இது வளர்ந்து வரும் தொழில்துறையை பாதிக்கக்கூடிய ஒழுங்குமுறை மீறல் என்று கூறின Perplexity AI-ன் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், இது "இந்தியாவின் மோசமான நடவடிக்கை" என்று கூறினார். அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஆண்ட்ரீசென் ஹொரோவிட்ஸின் கூட்டாளியான மார்ட்டின் காசாடோ, இதை "புதுமைக்கு எதிரான" மற்றும் "மக்கள் விரோதமானது" என்றும் அழைத்தார்.



Original article:

Share: