குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) மேம்படுத்துதல் -கேதன் ரெட்டி, சுபாஷ் எஸ்.

 சரக்கு மற்றும் சேவை வரியின் (GST 2.0) வாக்குறுதிகளும் சவால்களும்


இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small, and Medium Enterprises (MSMEs)) பொருளாதாரத்தின் இயந்திரமாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன மற்றும் உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.


MSME துறை சுமார் 15.5 கோடி மக்களை வேலைக்கு அமர்த்துகிறது மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% பங்களிக்கிறது. இது இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.


எனினும், பல MSME-கள் முறையான நிதியைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் மற்றும் ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொள்வதால் அவை நீடிப்பதற்காக போராடுகின்றன.


இந்திய ஏற்றுமதிகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் முடிவு மேலும் அழுத்தத்தைச் சேர்த்துள்ளது, பல MSMEs-யின் அடிப்படைக் கட்டமைப்பை அச்சுறுத்துகிறது. இந்த வரிகள் இந்திய MSMEs-யின் உலகளாவிய போட்டித்தன்மையைக் குறைக்கலாம்.


MSME-கள் பல அடுக்கு GST வரி அடுக்குகளால் (5%, 12%, 18% மற்றும் 28%) சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டன. இந்த சூழ்நிலையில், சமீபத்திய GST சீர்திருத்தங்கள் துறைக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளன.


இந்தியாவின் ஏற்றுமதியில் MSME-க்கள் 45%-க்கும் அதிகமாக பங்களிக்கின்றன. மேலும், அவை வாகனம், நெசவு மற்றும் தோல் போன்ற துறைகளுக்கு முக்கியமானவை. 50% அமெரிக்க கட்டணங்கள் அவர்களுக்கு கூடுதல் செலவுகளைச் சேர்ப்பதால் GST விகித மாற்றங்கள் சரியான நேரத்தில் வருகின்றன.


தலைகீழ் வரி அமைப்பு (inverted duty structure) போன்ற சிக்கல்களை சரிசெய்வதே GST சீர்திருத்தங்களின் நோக்கமாகும் அங்கு உள்ளீடுகள் இறுதி பொருட்களை விட அதிக வரிகளை கொண்டுள்ளன. இது சமீபத்திய வரி விதிப்புகள் இருந்தபோதிலும் MSME-கள் போட்டித்தன்மையுடன் இருக்க உதவுகிறது.


இணக்கத்தை எளிதாக்குதல்


தற்போதைய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் ஒரு நேர்மறையான அம்சம், இணக்கச் சுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாகும். இது MSME-களுக்கு ஒரு பெரிய சவாலாகும். GST பதிவை எளிமைப்படுத்துவது சிறிய முறைசாரா நிறுவனங்களை முறையான துறைக்குள் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அத்தியாவசிய மற்றும் தகுதிவாய்ந்த பொருட்களுக்கு 5% மற்றும் நிலையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18% என இரண்டு அடுக்கு GST கட்டமைப்பிற்கு மாறுவது MSME-களுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும். சிறிய, குறைந்த ஆபத்துள்ள வணிகங்களுக்கான விரைவான செயலாக்கம் சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு படியாகும். இருப்பினும், இந்த நடவடிக்கைகளின் வெற்றி இந்த நிறுவனங்களின் டிஜிட்டல் திறன்களைப் பொறுத்தது.


மாற்றங்கள் சாதகமானவையாக இருந்தாலும், அவை அனைத்து பங்குதாரர்களுக்கும் சமமாக பயன் அளிக்காது என்ற கவலைகள் உள்ளன. உதாரணமாக, அனைத்து ஜிஎஸ்டி திருத்தங்களும் தயாரிப்பு சார்ந்தவையாகும் மற்றும் நுகர்வோருக்கு உதவக்கூடும். இதுவே காற்றழுத்திப் பொறிகள் (compressors), திரைகள் (displays) போன்ற கூறுகளை உற்பத்தி செய்யும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு மேம்பட்ட தொழில்துறை ஒருங்கிணைவை உருவாக்கும்.


செலவு அழுத்தங்கள்


MSME-க்கள் பலவீனமான பேரம் பேசும் சக்தியைக் கொண்டுள்ளன. எனவே பெரிய நிறுவனங்களால் ஏற்படும் கூடுதல் செலவுகளை அவை ஏற்க வேண்டியிருக்கும். மேலும், தயாரிப்பு சார்ந்த சீர்திருத்தங்கள் அனைத்து 6.3 கோடி MSME-களும் பலன்களைப் பெறாது என்பதைக் குறிக்கிறது. MSME-களுக்கு மற்றொரு பெரிய பிரச்சனை உள்ளீட்டு வரிக் கடன் (input tax credit) ஆகும். அவர்கள் அதைப் பெறுவதில் நீண்ட தாமதங்களை எதிர்கொள்கின்றனர் மற்றும் பெரும்பாலும் தாமதமான பணம் செலுத்துவதில் சிரமப்படுகிறார்கள்.


இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் MSME-களின் செயல்பாட்டு மூலதனத்தைப் பாதிக்கின்றன. இதனால் அவர்களில் பலர் அத்துறையில் நீடிப்பது கடினம். GST சீர்திருத்தங்கள் GST விகிதங்களைக் குறைத்துள்ளன மற்றும் பல தயாரிப்புகளுக்கான உள்ளீட்டு வரிக் கடனையும் (input tax credit) நீக்கியுள்ளன.


குறைந்த GST விகிதங்களின்கீழ் உள்ளீட்டு வரி வரவை விலக்குவது அல்லது கட்டுப்படுத்துவது, MSME-களின் இயக்கச் செலவுகளை அதிகரிப்பதன் மூலம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த அதிக செலவுகள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டால், தற்போதைய நடவடிக்கைகளின் பலன்கள் முழுமையாக உணரப்படாமல் போகலாம்.


எனவே, MSME-களுக்கு அவற்றின் கட்டமைப்பு சவால்களை நிவர்த்தி செய்யும் இலக்கு சீர்திருத்தங்களுக்கான அவசரத் தேவை உள்ளது. GST 2.0 சீர்திருத்தங்கள் ஒரு நேர்மறையான படியாக இருந்தாலும், MSME துறையை உண்மையிலேயே வலுப்படுத்த அதிக முயற்சிகள் தேவை.


ரெட்டி ஐஐஎம்-ராய்ப்பூரில் பொருளாதாரத் துறையின் உதவிப் பேராசிரியராக உள்ளார்; சுபாஷ் ஐஐடி-மெட்ராஸில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share:

இது பணவீக்க இலக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமா? -ராஜீவ் குமார் & சம்ரிதி பிரகாஷ்

 ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களைவிட, அரசாங்கத்தின் கவனமான செலவினங்களால் நிலையான பணவீக்கம் பராமரிக்கப்படுகிறது.


2016ஆம் ஆண்டில் இந்தியா அதிகாரப்பூர்வமாக பணவீக்க இலக்கு (inflation targeting (IT)) கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது. இது 2014-ஆம் ஆண்டில் உர்ஜித் படேல் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அரசாங்கத்திற்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் (RBI) இடையேயான 2015-ஆம் ஆண்டு பணவீக்க இலக்குகளை மையமாகக் கொண்ட பணவீக்கக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee (MPC)) யோசனையை முதன்முதலில் 2013-ஆம் ஆண்டில் நீதிபதி BN ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான நிதித்துறை சட்டமன்ற சீர்திருத்த ஆணையம் (Financial Sector Legislative Reforms Commission (FSLRC)) பரிந்துரைத்தது.


2016 முதல், ரிசர்வ் வங்கி பணவீக்க இலக்கை 4 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இது ±2 சதவீத சகிப்புத்தன்மை வரம்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த அணுகுமுறை இந்தியப் பொருளாதாரத்திற்கு பொருந்துமா என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா பணவீக்கத்தை இலக்காகக் கொள்ள வேண்டுமா என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் நிதியமைச்சர் அவர்கள் கௌடில்யா பொருளாதார மாநாட்டில் வளர்ச்சி இலக்கை 8 சதவீதமாக உயர்த்திய நிலையில், பணவீக்க இலக்கு சிறந்த கொள்கை கருவியாக உள்ளதா என்பதை மறுபரிசீலனை செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.

ரெப்போ பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதா?


ரெப்போ விகிதத்தை சரிசெய்தல் மற்றும் அவ்வப்போது திறந்த சந்தை செயல்பாடுகள் (Open Market Operations (OMOs)) மூலம் பணப்புழக்கத்தை நிர்வகித்தல் ஆகியவை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய கருவிகளாகும். இருப்பினும், பணவீக்க இலக்கு தொடங்கியதிலிருந்து ஒரு எளிய பகுப்பாய்வு, ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கும் இடையே மிகவும் பலவீனமான (-0.43) தொடர்பைக் காட்டுகிறது (விளக்கப்படத்தைப் பார்க்கவும்), இது பணவியல் கொள்கை வரையறுக்கப்பட்ட தாக்கத்தையே கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.













இது அறியப்பட்ட ஒரு சிக்கலை எடுத்துக்காட்டுகிறது.  இந்தியாவில் பணவியல் கொள்கை எப்போதும் நோக்கம் கொண்டதாக செயல்படாது. ரெப்போ விகிதத்தைக் குறைப்பது வங்கி கடன் விகிதங்களைக் குறைக்கவோ அல்லது நுகர்வோருக்குக் கிடைக்கும் பணத்தை அதிகரிக்கவோ அவசியமில்லை. பணவியல் கொள்கையின் முக்கியக் கருவி பணவீக்கத்துடன் மிகவும் பலவீனமான தொடர்பைக் கொண்டிருந்தால், முழு 'பணவீக்க இலக்கு' (‘Inflation Targeting’) அமைப்பின் செயல்திறன் கேள்விக்குரியது.


ஒரு பின்னடைவு பகுப்பாய்வு, நுகர்வோர் விலைக் குறியீடு (consumer price index (CPI)) பணவீக்கத்தில் சுமார் 73% மாற்றங்கள் உணவு விலைகளால் ஏற்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இது ஆச்சரியமல்ல. ஏனெனில், உணவு நுகர்வோர் விலைக் குறியீட்டில் (CPI) 46% ஆகும். இங்கே முக்கியப் பிரச்சினை, பணவியல் கொள்கை உணவு பணவீக்கத்தைக் கூட பாதிக்குமா என்பதுதான். நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டிற்கும் ரெப்போ விகிதத்திற்கும் இடையிலான தொடர்பு -0.19 ஆக இருந்தது. எனவே, உணவு பணவீக்கத்தில் ரெப்போ விகிதத்தின் எந்த தாக்கத்தையும் எதிர்பார்ப்பது உண்மைக்கு மாறானது.


இந்தியாவில் உணவுப் பணவீக்கம் முக்கியமாக கட்டமைப்பு சிக்கல்கள் மற்றும் விநியோக சிக்கல்களால் ஏற்படுகிறது. உணவுத் தேவை பெரிதாக மாறாது, ஆனால் பருவமழை, விநியோகச் சங்கிலி தாமதங்கள், தளவாடங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற விவசாயக் கொள்கைகளால் விலைகள் பாதிக்கப்படுகின்றன.


பொருளாதார ஆய்வு (2025) ஒரு சில பயிர்கள் உணவுப் பணவீக்கத்தின் பெரும்பகுதியை இயக்குகின்றன என்பதைக் காட்டுகிறது. தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை நீக்குவது உணவுப் பணவீக்கத்தை கிட்டத்தட்ட 2% குறைக்கலாம். உணவுப் பணவீக்கத்தைக் குறைக்க, சேமிப்பு, உணவு பதப்படுத்துதல், குளிர்பதனச் சங்கிலிகள் மற்றும் வானிலை பாதிப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவுக்கு அதிக முதலீடு தேவை போன்றவை பணவியல் கொள்கை சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகளாக உள்ளது.


பணவீக்க இலக்கு அமைப்பின் ஆதரவாளர்கள், 2016ஆம் ஆண்டு முதல் பணவீக்கம் ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது என்பதைக் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், ரெப்போ விகித மாற்றங்கள் காரணமாகவும், ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை காரணமாகவும் இது குறைவாக உள்ளது. பணவீக்கத்தை ஒரு இலக்கு வரம்பிற்குள் வைத்திருப்பதற்கான அதன் சட்டப்பூர்வ உறுதிப்பாடு எதிர்பார்ப்புகளை நிலையானதாக வைத்திருக்கிறது.


இதற்கிடையில், அரசாங்கம் நிதிகளை கவனமாக நிர்வகித்து, பற்றாக்குறைகளைக் கட்டுக்குள் (தொற்றுநோய் காலத்தில் தவிர) மற்றும் நியாயமான debt-to-GDP விகிதத்தைப் பராமரித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தி, குறைந்த பணவீக்க எதிர்பார்ப்புகளின் நேர்மறையான சுழற்சியை உருவாக்கியுள்ளன.

மற்ற நாடுகள் அதை எப்படி செய்கின்றன


உலகின் மூன்று பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை கடுமையான பணவீக்க இலக்கைப் பின்பற்றுவதில்லை. அமெரிக்க பெடரல் ரிசர்வ் இரண்டு முக்கிய இலக்குகளைக் கொண்டுள்ளது: விலைகளை நிலையாக வைத்திருப்பது மற்றும் அதிகபட்ச வேலைவாய்ப்பை ஆதரித்தல். சீனாவின் பணவியல் கொள்கை வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் நிதி நிலைத்தன்மை உள்ளிட்ட பல இலக்குகளைக் கொண்டுள்ளது. ஜப்பான் வங்கி விலை நிலைத்தன்மை மற்றும் நிதி அமைப்பு நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், நிறைய நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுகிறது.


யூரோ பகுதியில் உள்ள நாடுகளைப் போலவே சில நாடுகளும் பணவீக்க இலக்கைப் பின்பற்றுகின்றன. ஆனால், அவற்றின் நிலைமை இந்தியாவிலிருந்து வேறுபட்டது. இங்கிலாந்தில், உணவு மற்றும் பானங்கள் மக்களின் செலவினங்களில் 9% ஆகும். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இது 17% ஆகும். எனவே, உணவு விலைகள் ஒட்டுமொத்த பணவீக்கத்தில் குறைவான விளைவைக் கொண்டுள்ளன. இந்தியாவில், CPIயில் 46% உணவு சார்ந்த பகுதிகள் உள்ளன. எனவே, இவை உணவு விலை மாற்றங்கள் பணவீக்கத்தை கடுமையாக பாதிக்கின்றன. இது பணவீக்க இலக்கை இந்தியாவிற்கு குறைவாக பொருத்தமாக்குகிறது. அதற்குப் பதிலாக, கொள்கைகள் உணவு விநியோகச் சங்கிலியில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.



நிதிக் கொள்கை நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) விதிகளால் வரையறுக்கப்பட்டுள்ளதால், பணவியல் கொள்கை இப்போது பெரிய பங்கை வகிக்க வேண்டியிருக்கலாம். குறிப்பாக, வேலைவாய்ப்பைக் கண்காணித்தல் மற்றும் ஆதரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன, பல பெரிய பொருளாதாரங்கள் பணவீக்கத்தை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுடன் சமநிலைப்படுத்தும் நெகிழ்வான அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றன. எனவே இது அசாதாரணமானது அல்ல.


முன்னோக்கி செல்லும் வழி


இந்தியாவின் பணவீக்க இலக்கு கொள்கை எதிர்பார்ப்புகளை நிர்வகிக்க உதவுகிறது. ஆனால், அதன் வரம்புகள் தெளிவாகி வருகின்றன. குறிப்பாக, அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டியிருக்கும்போது, பணவீக்கத்தை பெருமளவில் இயக்கும் உணவு விலைகளை பணவியல் கொள்கையால் எளிதில் கட்டுப்படுத்த முடியாது. அதே நேரத்தில், வேலையின்மை வளர்ச்சி, அதிக இளைஞர் வேலையின்மை மற்றும் பயன்படுத்தப்படாத திறன் போன்ற பிரச்சினைகளுக்கு அதிகக் கவனம் தேவை.


இந்தியா நிதிசார் ஒழுங்குமுறையை உட்புகுத்தும் வளர்ச்சியுடன் சமநிலைப்படுத்த முயற்சிக்கும்போது, இந்தியாவின் கட்டமைப்புச் சூழலுக்கும் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) நோக்கங்களுக்கும் பணநிலையியல் கொள்கை சிறந்த முறையில் பொருந்துமா என்பதை ஆராய, RBI (ரிசர்வ் வங்கியின்) செயல்பாட்டை இரட்டை அல்லது தாற்காலிக கொள்கைச் சட்டப் படிவத்திற்கு விரிவுபடுத்தலாமா என்று கேட்க வேண்டிய அவசியம் உள்ளது.


ராஜீவ் தலைவர், மற்றும் சம்ரிதி பஹ்லே இந்தியா அறக்கட்டளையின் ஆராய்ச்சி கூட்டாளி.



Original article:

Share:

‘காலநிலை இலக்குகளை அடையத் தவறுவது பன்முக செயல்முறைகளை பொருத்தமற்றதாக மாற்றாது’: COP ஏன் முக்கியமானது? -வைபவ் சதுர்வேதி

 COP30 மாநாட்டிற்கு முன்பு, இந்த மாநாடு ஏன் இன்னும் முக்கியமானது என்பதை ஒரு காலநிலை நிபுணர் விளக்குகிறார். இதில் அமெரிக்கா விலகியிருந்தாலும், 1.5°C இலக்கு மீறப்படும் நிலையில், UNFCCC அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களை காலநிலை ஆர்வலர்கள் கோருகின்றனர்.


COP30 மாநாடு  நவம்பர் 10 முதல் 21 வரை பிரேசிலின் பெலெமில் நடைபெறும். இந்த வருடாந்திர காலநிலை உச்சிமாநாடு, காலநிலை மாற்றத்தின் விளைவுகள் முன்னெப்போதையும் விடக் கடுமையாக இருக்கும் நேரத்தில், 1.5°C இலக்கு எட்ட முடியாததாகத் தெரிகிறது. மேலும், இது அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியிருக்கும் நேரத்தில் வருகிறது.


காலநிலை மாற்றம் குறித்த நாடுகளுக்கிடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change (IPCC))  ஏழாவது மதிப்பீட்டு அறிக்கையின் ஆசிரியரும் காலநிலை ஆராய்ச்சியாளருமான அலிந்த் சௌஹானிடம், COP மாநாடுகள் ஏன் முக்கியம், உலகம் ஏன் 1.5°C இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.


COP30 மாநாட்டை நடத்தும் பிரேசில், இதை "நடவடிக்கை மற்றும் செயலாக்கம் சார்ந்த COP" (“COP of action and implementation”) என்று அழைத்துள்ளது. அதாவது உண்மையான தீர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு உச்சிமாநாடு இது என்று அறிவித்துள்ளது. உமிழ்வு இலக்குகள் போன்ற பெரிய அறிவிப்புகளில் கவனம் செலுத்திய முந்தைய COP மாநடுகளைப் போலல்லாமல், இது நடைமுறை மற்றும் சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.



இதற்கு ஒரு உதாரணம் புதிய கூட்டு அளவீட்டு இலக்கு (New Collective Quantified Goal (NCQG)) ஆகும். COP29-ல், வளர்ந்த நாடுகள் 2035-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு $100 பில்லியனில் இருந்து ஆண்டுக்கு $300 பில்லியனாக காலநிலை நிதியை அதிகரிப்பதாக உறுதியளித்தன. இருப்பினும், வளரும் நாடுகள் இந்தத் தொகை இன்னும் போதுமானதாக இல்லை என்று கூறுகின்றன. இருப்பினும், பிரேசில் தலைமை இந்த விவாதத்தை மீண்டும் தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.


அதற்குப் பதிலாக, வளரும் நாடுகளுக்கு இடையே $300 பில்லியனை எவ்வாறு நியாயமாக விநியோகிப்பது, தணிப்பு மற்றும் ஏற்புத்தன்மைக்கு (mitigation and adaptation) எவ்வளவு செலவிடப்பட வேண்டும், இந்த நிதியிலிருந்து சிறந்த முடிவுகளை எவ்வாறு பெறுவது போன்ற முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துதல், புதிய இலக்குகள் அல்லது வாக்குறுதிகளை மட்டும் நிர்ணயிப்பது மட்டுமல்லாமல், உண்மையான நடவடிக்கை மற்றும் செயல்படுத்தலை அடைவதே முக்கிய குறிக்கோளாக உள்ளது.


2035ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் காலநிலை நிதியில் $1.3 டிரில்லியன் திரட்டுவதற்கான ஒரு திட்ட வரைவை உருவாக்கவும் தலைமை  திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் "பாகு முதல் பெலெம் வரை 1.3 டன் திட்ட வரைவு" (“Baku to Belém Roadmap to 1.3T”) என்று அழைக்கப்படுகிறது. இது COP30  மாநாட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.


COP30, அமேசான் மழைக்காடுகளின் நுழைவாயிலான பெலெமில் நடைபெறும். அமேசான் காடுகளை பாதுகாப்பதிலும், இந்த இலக்கை அடைய எந்த வகையான அமைப்பு அல்லது திட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளது.


வளரும் நாடுகள் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CBAM என்பது இரும்பு, எஃகு, சிமென்ட், அலுமினியம் மற்றும் உரங்கள் போன்ற இறக்குமதிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பசுமை இல்ல வாயு (GHG) அளவை அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையாகும். ஜூன் மாதம் ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற ஆண்டின் நடுப்பகுதியில் நடந்த காலநிலை கூட்டத்தின் போது நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து இந்த விவாதங்கள் மீண்டும் தொடங்கும்.


வளரும் நாடுகள் CBAM என்பது உண்மையில் ஒரு மறைக்கப்பட்ட வரி, இது ஐரோப்பிய ஓன்றியம் உடனான தங்கள் வர்த்தகத்தைக் குறைக்கும் என்று வாதிடுகின்றன. அவர்களில் சிலர் வரலாற்று ரீதியாக பெரும்பாலான காலநிலை சேதத்தை ஏற்படுத்திய நாடுகள் மீது எதிர் வரியை உருவாக்க பரிந்துரைத்துள்ளனர்.


வரவிருக்கும் COP30 மாறிவிட்ட உலகளாவிய அரசியல் சூழ்நிலையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகி, இந்தியா போன்ற நாடுகள் மீதும், ஐரோப்பா மற்றும் ஜப்பானில் உள்ள அதன் நட்பு நாடுகள் மீதும் கூட வரிகளை விதித்துள்ளது. இது நாடுகளிடையே நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளது மற்றும் நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கியுள்ளது, இது காலநிலை பேச்சுவார்த்தைகளை மிகவும் கடினமாக்குகிறது.


COP போன்ற சர்வதேசக் கூட்டங்கள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. உண்மையில், இதுபோன்ற சூழ்நிலைகளில், COP தலைமைத்துவத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகிறது. உச்சிமாநாட்டின் முக்கிய கருப்பொருள் மற்றும் சரியான செயல்முறைறையை வடிவமைக்க தலைமைத்துவம் உதவுகிறது. இறுதி முடிவைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அது நேர்மறையான ஆற்றலை உருவாக்கி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும். COP அமைப்பு தனது தலைமைத்துவத்தைக் செயல்படுத்தும்போதும், ​​நாடுகளை ஒன்றிணைக்கும்போதும் ​​மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு பலம் சேர்க்கும்போதும் இது நிகழ்கிறது. இது காலநிலை விவாதங்களை வேறு இடங்களில் நடக்கும் பெரிய அரசியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. அதிர்ஷ்டவசமாக, பிரேசில் தலைமைத்துவம் இதுவரை இதைச் சிறப்பாகச் செய்து வருகிறது.


இதேபோல், புவி வெப்பமடைதல் அல்லது காலநிலை நிதி இலக்குகளை அடையத் தவறியது இந்த சர்வதேச கூட்டங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்காது. எந்தவொரு பேச்சுவார்த்தையாளரும் இந்த செயல்முறையை கைவிட மாட்டார்கள். காலநிலை ஆர்வலர்கள் தவறவிட்ட இலக்குகளுக்கு உணர்ச்சிபூர்வமாக எதிர்வினையாற்றலாம். ஆனால், பேச்சுவார்த்தையாளர்கள் அமைதியாக இருக்கவும் அத்தகைய சவால்களைக் கையாளவும் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டில் ஒட்டிக்கொண்டு, காலநிலை நிதியை அதிகரிக்க தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். எடுத்துக்காட்டாக, காலநிலை நிதியை அதிகரிப்பதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சீர்திருத்தத்திற்கான தெளிவான தேவை உள்ளது. ஏனெனில், பெரிய முடிவுகள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை. இரண்டு நாடுகள்கூட உடன்படவில்லை என்றாலும், எந்த முடிவும் எடுக்க முடியாது. UNFCCC ஒருமித்த முறையைப் பின்பற்றுகிறது. அதாவது ஒவ்வொரு நாடும் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஒரு முடிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வழியில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு முடிவைத் தடுக்க அல்லது வீட்டோ உரிமையை பயன்படுத்தும் அதிகாரம் உள்ளது.


இருப்பினும், COP என்பது பெரிய முடிவுகளை எடுப்பது மட்டுமல்ல. இந்தக் கூட்டங்களின்போது நடைபெறும் விவாதங்களும், நாடுகளும் தனியார் நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் வடிவமைக்கின்றன.


எனவே, COP-ல் ஒரு பெரிய முடிவை எட்டுவது மட்டுமே முக்கியமான முடிவு அல்ல. உதாரணமாக, எரிவாயு மற்றும் எண்ணெய் வெளியேற்றத்திற்கான குறிப்பிட்ட இலக்குகளை COP இன்னும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், இந்தப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பல வளைகுடா நாடுகளை தங்கள் பொருளாதாரங்களை பன்முகப்படுத்த ஊக்குவித்துள்ளன. விரைவில் அல்லது பின்னர், அத்தகைய உமிழ்வு இலக்குகள் தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.


COP-ன் உண்மையான சக்தி அங்குதான் உள்ளது. அங்கு நடைபெறும் விவாதங்கள், உலக நடவடிக்கை எடுக்கும் திசையை நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் காட்டுகின்றன. இந்த விவாதங்கள் தீவிரமாகி வருவதை அவர்கள் கண்டவுடன், அவர்கள் தங்கள் எதிர்கால நலன்களைப் பாதுகாக்க தங்கள் நடவடிக்கைகளை சரிசெய்யத் தொடங்குகிறார்கள்.


1.5°C இலக்கு, நாடுகள் புவி வெப்பமடைதலை தீவிரமாகக் கருதுவதையும், அதிக வெப்பநிலை வரம்பை இலக்காகக் கொள்ளாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. இந்த இலக்கைக் கைவிடுவது, காலநிலை மாற்றம் குறித்து உலகம் எப்படி நினைக்கிறது என்பதை மாற்றும். மேலும், இது உலகளாவிய அளவில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


அதனால்தான், புவி வெப்பமடைதல் 1.5°C-ஐத் தாண்டினாலும், காலநிலை மாற்றத்திற்கான நாடுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) இலக்கை விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக தற்காலிக இலக்கைவிட அதிகமாகச் செல்வதை (overshoot) அனுமதிக்க பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. இதன் பொருள், உலக சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் — எடுத்துக்காட்டாக, 1.7 டிகிரி செல்சியஸ் ஆக ஒரு காலக்கட்டத்திற்கு உயர்ந்து, பின்னர் இலக்கிற்கு கீழே சென்றுவிடுகிறது என்று அர்த்தம். இது காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் (GHG emissions) விரைவாக குறைக்கப்பட்டால் நிகழலாம்.


வைபவ் சதுர்வேதி எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலில் (CEEW) மூத்த உறுப்பினராக உள்ளார்.



Original article:

Share:

உலக வர்த்தக அமைப்பின் (WTO) தேசிய நடத்துமுறைக் கொள்கை (national treatment principle) என்பது என்ன? -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் நடவடிக்கைகள் தேசிய நடத்துமுறைக் கொள்கை (national treatment principle) உட்பட பல உலக வர்த்தக அமைப்பு (WTO) கடமைகளை மீறுகின்றன என்று தெரிவித்தது. மேலும், தடைசெய்யப்பட்ட இறக்குமதி மாற்று மானியங்களாகவும் கருதப்படுகின்றன. இந்தக் கொள்கைகள் இந்தியாவின் உள்நாட்டு மின்சார வாகனங்கள் (EV) தொழிலுக்கு நியாயமற்ற முறையில் பயனளிப்பதாகவும், சீனாவின் வணிக நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அமைச்சகம் கூறியதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.


கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட ஐந்து வருட மோதலுக்குப் பிறகு இருநாட்டு உறவுகளை இயல்பாக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, பெய்ஜிங் தனது மின்சார வாகன ஏற்றுமதியை இந்தியாவிற்கு அதிகரிக்க முயற்சிக்கும் நிலையில் இந்தப் புகார் வந்துள்ளது. இந்தியாவின் தானியங்கி வாகனச் சந்தையின் அளவைக் கருத்தில் கொண்டு, சீன மின்சார வாகன உற்பத்தியாளர்கள் இதை வெளிநாட்டு விற்பனையை அதிகரிக்க ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதுகின்றனர்.


உள்நாட்டு அதிகப்படியான திறன், குறைந்து வரும் லாபம் மற்றும் கடுமையான விலைப் போட்டியை எதிர்கொண்டு, BYD போன்ற சீன மின்சார வாகன (EV) தயாரிப்பாளர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் (EU) உள்ள வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய அதிகளவில் முயற்சித்து வருகின்றனர்.


சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடாகும். 2024-25 ஆம் ஆண்டில், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 14.5% குறைந்து 14.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதே காலகட்டத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி 11.5% அதிகரித்து 113.45 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை 99.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.


உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில், மின்சார வாகனக் கொள்கை மற்றும் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production-Linked Incentive (PLI)) திட்டம் ஆகியவை அடங்கும்.


உங்களுக்குத் தெரியுமா? 


உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) நாடுகளுக்கு இடையிலான வர்த்தக விதிகளை நிர்வகிக்கும் ஒரே சர்வதேச அமைப்பாகும்.


இது 1995-ல் நிறுவப்பட்டது. உலக வர்த்தக அமைப்பு (WTO) அதன் 164 உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. மேலும் அதன் விதிகளின்படி, அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்தின் பேரில் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், எந்தவொரு உறுப்பினரும் வீட்டோவைப் பயன்படுத்தலாம்.

இது தடையில்லா வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உறுப்பு நாடுகளால் விவாதிக்கப்பட்டு கையெழுத்திடப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.


உலக வர்த்தக அமைப்பு, நாடுகளுக்கு வர்த்தக விதிகளைப் பேச்சுவார்த்தை நடத்தவும் பொருளாதார மோதல்களைத் தீர்க்கவும் ஒரு மன்றத்தையும் வழங்குகிறது. அமைச்சரவை மாநாடு என்பது உலக வணிக அமைப்பின் உயர் முடிவெடுக்கும் அமைப்பாகும் (top decision-making body). மேலும், பொதுவாக ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் கூடுகிறது.


உலக வர்த்தக அமைப்பின் (WTO) அனைத்து உறுப்பினர்களும் அமைச்சரவை மாநாட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்கள் எந்தவொரு பலதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களின் கீழும் உள்ள அனைத்து விஷயங்களிலும் முடிவுகளை எடுக்க முடியும்.



Original article:

Share:

ஜிஎஸ்டி குறைப்புகளும், இப்போது இந்தியாவுக்குத் தேவையான மிகப்பெரிய சீர்திருத்தங்களும் -சுர்ஜித் எஸ் பல்லா, ராஜேஷ் சுக்லா

 வரி சீர்திருத்தம் என்பது அரசாங்கம் இதில் பெரியளவில் கட்டமைப்பு மாற்றங்களில் தீவிரமாக இருப்பதைக் காட்டுகிறது என்று பலர் நம்புகிறார்கள். அத்தகைய சீர்திருத்தங்கள் நடந்தால் மட்டுமே இந்தியா ஒரு வளர்ந்த நாடு எனும் விக்ஸித் பாரத்தை அடைய சரியான கொள்கைகளைக் கொண்டிருக்கும்.


செப்டம்பர் 22-ம் தேதி அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு, பெரும்பாலான நுகர்வுப் பொருட்களின் மீதான வரிகளை தீவிரமாகக் குறைப்பதில் காட்டிய துணிச்சலுக்காக கிட்டத்தட்ட உலகளவில் பாராட்டப்பட்டது. இந்த வரி குறைப்பு பெரியதாக இருந்தாலும், அடுத்த 12 மாதங்களுக்கு ரூ.1 டிரில்லியன் நிகர வரி இழப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்று அதிகாரப்பூர்வமாகவும், பெரும்பாலான ஆய்வாளர்களாலும் மதிப்பிடப்பட்டுள்ளது.


அலகு-நிலையின் (unit-level) அடிப்படையில், தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSS) 2022-23 நுகர்வுத் தரவைப் பயன்படுத்தி, சீர்திருத்தத்திற்கு முன் பயனுள்ள GST வரி விகிதம் (நுகர்வு செலவினத்தால் வகுக்கப்பட்ட ஒவ்வொரு நுகர்வுப் பொருளிலிருந்தும் GST வருவாய் என வரையறுக்கப்படுகிறது) 11 சதவீதமாகவும், சீர்திருத்தத்திற்குப் பிறகு 6.2 சதவீதமாகவும் இருந்தது. இந்த  முடிவு 2022-23-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் குறித்த மக்கள் ஆராய்ச்சியின் (PRICE) ICE 360 கணக்கெடுப்பின் பகுப்பாய்வாலும் ஆதரிக்கப்படுகிறது. வரி குறைப்பு குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் நிபுணர் கருத்துகளிலிருந்து (இனிமேல் நிபுணர்கள்) எங்கள் முடிவுகளில் மிகப்பெரிய வேறுபாடு இருந்ததால், இந்த விரிவான இரண்டு-கணக்கெடுப்பு பகுப்பாய்வையும் நாங்கள் கவனமாக பகுப்பாய்வு செய்தோம். நிபுணர்கள் ரூ. 1 டிரில்லியன் அடிப்படை இழப்பு (base-case loss) என்று பரிந்துரைக்கின்றனர். இது சீர்திருத்தத்திற்கு முந்தைய எதிர்பார்ப்பான ரூ. 23 டிரில்லியன் GST வசூலில் அரை சதவீதத்திற்கும் குறைவானது [2025-26-ல் 209 டிரில்லியன் தனியார் இறுதி நுகர்வு செலவின் (PFCE) 11 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது]. நமது 10 டிரில்லியன் ரூபாய் இழப்பின் முடிவு, நிபுணர்களால் பெறப்பட்ட முடிவின் சுமார் 10 மடங்கு ஆகும். பழைய கௌபாய் திரைப்படக் கோட்பாட்டில் சொல்வது போல, “இந்த நகரம் நம் இருவருக்கும் போதாது” என்று பொருள், அதாவது நிபுணர்கள் பெரும்பாலும் சரியாக இருக்கலாம் அல்லது நாங்கள் பெரும்பாலும் சரியாக இருக்கலாம் — இருவரும் ஒரே மாதிரி இருக்க முடியாது!


எங்கள் மதிப்பீட்டை நாங்கள் எவ்வாறு பெற்றோம்? சமீபத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI)-தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSS) மாநாட்டில், அலகு-நிலை NSS கணக்கெடுப்புகள் கொள்கை வகுப்பதில் எவ்வாறு உதவ முடியும் என்ற முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது. அலகு-நிலையின் தரவுகளின் விரிவான பகுப்பாய்வை பயன்படுத்தாமல் எங்கள் பகுப்பாய்வு சாத்தியமில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSS) 2022–23 நுகர்வு கணக்கெடுப்பிலிருந்து வீட்டு அளவிலான நுகர்வு தரவு, 37 நுகர்வு வகைகளில் 364 நுகர்வு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரிக்கு (GST) முந்தைய மற்றும் பிந்தைய வரி விகிதங்களுடன் பொருந்தியது. செப்டம்பர் 2025-ல் GST குழு, PIB மற்றும் பிற நம்பகமான ஆதாரங்களால் வெளியிடப்பட்ட வரி விகிதங்கள் பெறப்பட்டன. வீட்டு நுகர்வானது சந்தை-வாங்கிய நுகர்வு (வீட்டு உற்பத்தியைத் தவிர்த்து) என வரையறுக்கப்பட்டது.


வரி குறைப்பு முற்போக்கானது என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, மொத்த நுகர்வில் 43 சதவீதமாக இருக்கும் உணவு மீதான பயனுள்ள வரி விகிதம் (effective tax rate (ETR)), 9.5 சதவீதத்திலிருந்து 3.4 சதவீதமாகக் குறைகிறது. இது, நுகர்வில் 11% ஆக இருக்கும் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு, பயனுள்ள வரி விகிதம் (ETR) 12.4% இலிருந்து 4.8% ஆகக் குறைகிறது. மொத்த நுகர்வில் 15% ஆக இருக்கும் வீட்டு சேவைகளுக்கு, பயனுள்ள வரி விகிதம் (ETR) 39.5%-லிருந்து 11.3% ஆகக் குறைகிறது.


2025-26 ஆம் ஆண்டிற்கான பகுப்பாய்வு மற்றும் முன்னறிவிப்புக்காக, கடந்த மூன்று ஆண்டுகளில் நுகர்வு முறை மாறவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். PFCE மற்றும் GDP போன்ற அனைத்து மாறிகளையும் 2025-26 ஆகக் கணிப்பது GST வசூலில் ரூ.23 டிரில்லியனை அளிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டிற்கான NSS மற்றும் தனியார் இறுதி நுகர்வு செலவின் (Private final consumption expenditure (PFCE)) ICE கணக்கெடுப்பு பரிந்துரைக்கப்பட்டபடி, புதிய பயனுள்ள GST வரி விகிதம் 6.2 சதவீதமாக இருந்தால், வரிக் குறைப்புக்குப் பிந்தைய வருவாய் தோராயமாக ரூ.13 டிரில்லியனாக (062*209 = 13 எனப் பெறப்பட்டது) இருக்கும். எனவே, திட்டமிடப்பட்ட வரி இழப்பு ரூ.23 டிரில்லியனை கழித்தல் மூலம் ரூ.13 டிரில்லியனை அடைகிறது. இது ரூ.10 டிரில்லியனுக்கு சமமாகும்.


வரி இழப்பு குறித்த நிபுணர்களின் நம்பிக்கையான மதிப்பீட்டிற்கான காரணம் என்னவென்றால், வரி குறைப்பு விளைவுகள் அனைத்தும் வெளிப்படுவதற்கு அவர்கள் அனுமதிக்கிறார்கள். குறைந்த வரிகள் அதிக நுகர்வு மற்றும் சிறந்த இணக்கத்திற்கு வழிவகுக்கும் என்பது அவர்களின் வாதமாகும். இது, சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருவாயை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது சரியானதா? வரி குறைப்பு GST-க்குப் பிந்தைய வரி வருமானத்தில் ரூ.10 டிரில்லியன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று பொருளாதாரம் 101 (Econ) குறிப்பிடுகிறது. இந்தப் பணம் அரசாங்கத்திற்கு வீணாகச் செலவழிப்பதற்குப் பதிலாக, அது தனியார் தனிநபர்களால் "திறமையாக" செலவிடப்படும். வருமானத்தில் இந்த அதிகரிப்பு நுகர்வு மற்றும் சேமிப்பு இரண்டிற்கும் ஒதுக்கப்படும், தோராயமாக 50-50 விகிதத்தில் (நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அதிக சேமிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளனர்). எனவே, நுகர்வு அதிகரிப்பு சுமார் ரூ.5 டிரில்லியனாக இருக்க வாய்ப்புள்ளது, இது 6.2 சதவீத நுகர்வு வரி விகிதத்துடன் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருவாயில் ரூ.0.31 டிரில்லியன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதை ரூ.13 டிரில்லியனின் அடிப்படை நிலையோடு சேர்த்தால் ரூ.13.3 டிரில்லியன் நிகர வரி வசூல் கிடைக்கும். இது, புதிய முறையில் உள்ளீட்டு வரி வரவு வழங்கப்படாததால் ரூ.1 டிரில்லியன் சேர்க்கப்பட்டால் ரூ.14.3 டிரில்லியன் கிடைக்கும். இது இன்னும் அரசாங்கம் மற்றும் நிபுணர்களால் செய்யப்பட்ட மதிப்பீட்டைவிட கிட்டத்தட்ட ரூ.9 டிரில்லியன் குறைவாகும்.


உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு, பணவீக்க வரி என்பது (குளிர்ச்சியான) ஆறுதலின் ஒரு ஆதாரமாகும். இருப்பினும், உலகம் மாறிவிட்டது, மாறிக்கொண்டே இருக்கிறது. பணவீக்கம் குறைந்து வருவதால் (இந்தியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும்) தற்போதைய மற்றும் எதிர்கால பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (nominal GDP) வளர்ச்சி குறைந்து வருகிறது என்பது ஒரு பாதுகாப்பான கருத்துகணிப்பாகும். மக்கள்தொகை, செயற்கை நுண்ணறிவு, குறிப்பாக சேவைகளில் உற்பத்தித்திறன் அதிகரிப்பு, அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்றத் தன்மை, படித்த தொழிலாளர்களின் உலகளாவிய விநியோகத்தில் கடுமையான அதிகரிப்பு காரணமாக உண்மையான ஊதிய உயர்வு இல்லாதது போன்றவை உள்ளன. உங்கள் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும், ஆனால் பணவீக்கம் சீராக குறைந்து வருகிறது என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள். பொதுவாக, இது குறைந்த பணவீக்க பொறி என்று அழைக்கப்படுவதை உருவாக்குகிறது. இவை அனைத்தும் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வு வளர்ச்சி ஒற்றை இலக்கத்தில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, வரி வருவாய் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருக்கும்.


சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறைப்பு ஒரு மோசமான கொள்கை நடவடிக்கையா? இல்லை. இந்திய வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முக்கியமான காரணிகளில் ஒன்று மிக உயர்ந்த வரி-சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் என்று என்று சுர்ஜித் தொடர்ந்து வாதிட்டு வருகிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வரி வசூலுக்கு அழுத்தம் கொடுப்பது குறைபாடுடையது. இது, சாத்தியமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் குறைக்க வழிவகுக்கிறது. இருப்பினும், IMF நிபுணர்கள், மூத்த இந்திய நிதி வல்லுநர்கள், உயர் அரசு அதிகாரிகள் மற்றும் RBI உட்பட இந்த விமர்சகர்கள் யாரும் இந்தியாவின் சராசரி வரி-சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் மிக அதிகமாக உள்ளது. இது சுமார் 18–19% என்பதை சுட்டிக்காட்டவில்லை. இதற்கு நேர்மாறாக, கிழக்கு ஆசிய பொருளாதாரங்களுக்கான சராசரி சுமார் 13% ஆகவும், சீனாவிற்கு சுமார் 15% ஆகவும் உள்ளது. குறைந்த வரி விகிதம் அதிக வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனுக்கு உதவுகிறது. பிப்ரவரி வருமான வரி குறைப்புடன் ஜிஎஸ்டி குறைப்பு இந்தியாவின் வரி-சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை சுமார் 15.5-16.5 சதவீதமாகக் குறைக்க வாய்ப்புள்ளது. இது சீனாவின் நிலைக்கு அருகில் உள்ளது. இந்தக் காரணத்திற்காகவே, இது மிகவும் நேர்மறையான நடவடிக்கையாகும்.


வரி குறைப்பு அறிவிப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடி, பெரிய ஊக்கத்திற்கான முக்கிய காரணமாக வர்த்தக பதட்டடங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை தெளிவாகக் குறிப்பிடுவதில் கவனம் செலுத்தினார். பிரதமர் இப்போது குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம் என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும். வர்த்தகம், வரி மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்களிலும் அரசாங்கம் செயல்பட வேண்டும். சுயசார்பு மட்டுமே வளர்ச்சியை உந்துவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) அடைவதற்கு இன்னும் போதுமானதல்ல. வரி சீர்திருத்தம் அரசாங்கத்தின் பெரிய கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான நோக்கத்தைக் குறிக்கிறது என்று பலர் நம்புகிறார்கள். அத்தகைய சீர்திருத்தங்கள் நடந்தால் மட்டுமே வளர்ந்த இந்தியாவை அளவிடுவதற்கு இந்தியா சரியான கொள்கைகளைப் பெறும்.


இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ வீட்டு வருமான கணக்கெடுப்புக்கான தொழில்நுட்ப நிபுணர் குழுவின் தலைவராக பல்லா உள்ளார். சுக்லா PRICE-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.



Original article:

Share:

சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) உலக பாதுகாப்பு மாநாடு-2025-ன் 10 முக்கிய அம்சங்கள் -குஷ்பூ குமாரி

 தற்போதைய நிகழ்வு : 


சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) உலகப் பாதுகாப்பு மாநாடு ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை நடத்தப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில், இது அக்டோபர் 9 முதல் 15 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் நடைபெற்றது. 1,400க்கும் மேற்பட்ட உறுப்பினர் அமைப்புகளைக் கொண்ட இந்த மாநாடு, சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) உறுப்பினர் அமைப்புகளுக்கு இயற்கைப் பாதுகாப்பில் உள்ள மிக முக்கியமான பிரச்சினைகளை ஜனநாயக ரீதியாகத் தீர்மானிக்கவும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. இது நமது மனிதகுலத்தின் பூமியுடனான உறவை வழிநடத்த உதவும்.


முக்கிய அம்சங்கள் :


1. இந்தியாவின் ‘சிவப்புப் பட்டியல்’ அமைப்பு (India’s ‘Red List’ system) : தேசிய அளவிலான ஐந்தாண்டு (2025-2030) மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதலை இந்தியா வெளியிட்டது. இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு நிலையை துல்லியமாக பிரதிபலிக்கும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த, பங்கேற்பு மற்றும் மேம்படுத்தக்கூடிய ‘சிவப்புப் பட்டியல்’ அமைப்பை நிறுவுவதே இதன் முக்கிய நோக்கமாகும். நாடு முழுவதும் 7,000 வகையான தாவரங்கள் மற்றும் 4,000 வகையான விலங்கினங்கள் உட்பட சுமார் 11,000 இனங்கள் அழிந்துவரும் அபாயத்தை மதிப்பிடுவதன் மூலம் ‘தேசிய சிவப்புப் பட்டியல்’ (national red list) தயாரிக்கப்படும்.


2. இந்தியாவின் முதல் கடல்சார் பாதுகாப்பு காப்பகம் : தமிழ்நாட்டின் பாக் விரிகுடாவில் உள்ள இந்தியாவின் முதல் கடல்சார் பாதுகாப்பு காப்பகத்தை கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பிற்கான உலகளாவிய மாதிரியாக அங்கீகரிக்க ஒரு தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


3. உயிரினங்கள் உயிர்வாழ்வு ஆணையத்தின் (SSC) புதிய தலைவர் : இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் (Wildlife Trust of India (WTI)) நிறுவனர் விவேக் மேனன், உயிரினங்கள் உயிர்வாழ்வு ஆணையத்தின் (Species Survival Commission (SSC)) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்தப் பதவியை வகிக்கும் முதல் ஆசியர் (first Asian) என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பல்லுயிர் மற்றும் உயிரினப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) செயலகத்திற்கு ஆலோசனை வழங்கும் உலகளாவிய அமைப்பின்கீழ் உள்ள ஏழு நிபுணர் ஆணையங்களில் உயிரினங்கள் உயிர்வாழ்வு ஆணையம் (SSC) ஒன்றாகும். IUCN-ன் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்புப் பட்டியலைத் தயாரிப்பதில் ஆணையமும் அதன் சிறப்புக் குழுக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


4. தேசிய பூங்காக்களில் புதுமைக்கான சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) விருது : காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தின் இயக்குநரான சோனாலி கோஷ், தேசிய பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதி நிலைத்தன்மையில் புதுமைக்கான மதிப்புமிக்க WCPA-கென்டன் மில்லர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வனவிலங்குப் பகுதி பாதுகாப்பிற்கு புதுமையான பங்களிப்புகளைச் செய்த தனிநபர்களை அங்கீகரிக்கும் உலகளாவிய அமைப்பான பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையத்தால் (World Commission on Protected Areas (WCPA)) IUCN உலக பாதுகாப்பு மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.


5. காலநிலை கூட்டமைப்புகளாக காட்டு விலங்குகள் : காலநிலை மாற்றத்தை சமாளிக்க இயற்கை தீர்வுகளை செயல்படுத்துவதில் சுற்றுச்சூழல் அமைப்புகளில் காட்டு விலங்குகளின் பங்கை அங்கீகரிக்க ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச சமூகம் வனவிலங்குகளை எவ்வாறு பார்க்கிறது என்பதில் இது ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. விலங்குகள் இப்போது பாதுகாப்பு தேவைப்படும் உயிரினங்களாக மட்டுமல்லாமல், பூமியின் மீள்தன்மையின் முக்கிய முகவர்களாகவும் பார்க்கப்படுகின்றன.


6. அபுதாபி நடவடிக்கைக்கான அழைப்பு-2025 : சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) அவை, அபுதாபி நடவடிக்கைக்கான அழைப்பை வெளியிட்டது. இது "இயற்கையை மதிக்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு நியாயமான உலகம்" என்ற சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) தொலைநோக்கு பார்வையை அமைக்கும் 20 ஆண்டு இராஜதந்திர தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டுகிறது.


அடுத்த 20 ஆண்டுகளில், உலக இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பரந்துவற்றையும் பல்வகைபட்ட தன்மையையும் காப்பாற்ற உலகெங்கும் உள்ள சமூகங்களை பாதிப்பது, ஊக்குவிப்பது மற்றும் உதவுவதே IUCN–ன் நோக்கம் என்று அறிவித்துள்ளது. மேலும், “இயற்கை 2030: ஒரே இயற்கை, ஒரே எதிர்காலம்” என்ற தலைப்பில் 2026-2029 காலக்கட்டத்திற்கான நான்கு ஆண்டு திட்டமும், அதன் செயலாக்கத் திட்டத்தை வரையறுத்து ஏற்றுக்கொண்டது.


7. தீர்மானம் 42 : முதன்முறையாக, IUCN உறுப்பினர்கள் புதைபடிவ எரிபொருள் விநியோக பக்க நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் 42-ஐ ஏற்றுக்கொண்டனர். நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை நியாயமான முறையில் படிப்படியாக நிறுத்துவது குறித்த வழிகாட்டுதலைக் கோரி, உலக வனவிலங்கு நிதியம் (World Wildlife Fund) மற்றும் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்த முன்முயற்சியால் (Fossil Fuel Non-Proliferation Treaty Initiative) ஆதரிக்கப்பட்டது.


8. தீர்மானம் 108 : முதல் முறையாக, சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) அவை, செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் காட்டு விலங்குகளின் வணிக வர்த்தகத்தை நிர்வகிக்க நாடுகளுக்கு உதவ அவசரமாகத் தேவையான உலகளாவிய வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரும் தீர்மானம் 108-ஐ ஏற்றுக்கொண்டது. வனவிலங்கு செல்லப்பிராணி வர்த்தகம் பல்லுயிர், விலங்கு நலன், மனித மற்றும் விலங்கு ஆரோக்கியம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு பெருகிவரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதால், அதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை இது அங்கீகரிக்கிறது.


9. பழங்குடி மக்கள் மற்றும் இயற்கையின் முதல் உலக உச்சி மாநாடு : இந்த உச்சிமாநாட்டை, சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN), சர்வதேச பல்லுயிர் பன்முகத்தன்மை மன்றம் (International Indigenous Forum on Biodiversity (IIFB)) மற்றும் IUCN பழங்குடி மக்கள் அமைப்பு (Indigenous Peoples’ Organisation (IPO)) உறுப்பினர்கள் கூட்டாகக் கூட்டினர். அக்டோபர் 8-10 வரை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முதல் உச்சி மாநாடு, ஒரு சக்திவாய்ந்த திருப்புமுனையைக் குறிக்கிறது. இதில் பழங்குடி மக்கள் புற பங்குதாரர்கள் அல்ல, மாறாக பூமியில் வாழ்வின் சரியான பொறுப்பாளர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.


10. IUCN உலக பாரம்பரியக் கண்ணோட்டம் 2025 : IUCN 4-வது உலக பாரம்பரியக் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டது. இது காலநிலை மாற்றம் 43 சதவீத இயற்கை உலக பாரம்பரியக் களங்களை அச்சுறுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியது. காலநிலை மாற்றம், ஆக்கிரமிப்பு இனங்கள் மற்றும் நோய்கள் தீவிரமடைவதால், 2020-ம் ஆண்டில் 62 சதவீதமாக இருந்த இயற்கை உலக பாரம்பரியக் களங்களில் 57 சதவீதமே இப்போது நேர்மறையான பாதுகாப்புக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன என்பதை அது வெளிப்படுத்தியது.

சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) பற்றி


1948-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட IUCN, இயற்கையைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் சர்வதேச அமைப்புகளில் ஒன்றாகும். அப்போதிருந்து, இயற்கையின் ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படும் அரசாங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் (non-governmental organisations (NGO)) மற்றும் பழங்குடி மக்களை ஒன்றிணைக்கும் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது. இன்று, இது 160 உறுப்பு நாடுகளையும் நூற்றுக்கணக்கான குடிமை சமூகக் குழுக்களையும் உள்ளடக்கியது. அவை சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன.


இது ஏழு நிபுணர் ஆணையங்களைக் கொண்டுள்ளது. அவை, 


1. கல்வி மற்றும் தொடர்பு ஆணையம்

2. சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூகக் கொள்கை ஆணையம்

3. சுற்றுச்சூழல் மேலாண்மை ஆணையம்

4. உயிரினங்கள் உயிர்வாழ்வு ஆணையம்

5. சுற்றுச்சூழல் சட்டம் குறித்த உலக ஆணையம்

6. பாதுகாக்கப்பட்ட பகுதிகள் குறித்த உலக ஆணையம்

7. காலநிலை நெருக்கடி ஆணையம்


டுகாங் (Dugong) பற்றி


கடல் பசு என்றும் அழைக்கப்படும் டுகாங் (Dugong dugon), ஒரு தாவர உண்ணி பாலூட்டி ஆகும். அவை, மூன்று மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. சுமார் 300 கிலோகிராம் எடை கொண்டவை. மேலும், அவை சுமார் 65 முதல் 70 ஆண்டுகள் வரை வாழும், கடல் புல்லை மேய்ந்து, சுவாசிக்க கடல் மேற்பரப்புக்கு வருகின்றன.


அவை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகின்றன. மேலும் இந்தியாவில், மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடா, பாக் விரிகுடா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகின்றன.


டுகாங்ஸ், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக்கூடியதாக பட்டியலிடப்பட்டுள்ளன.


இது அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES)) இணைப்பு-I-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இது உயிரினங்கள் மற்றும் அதன் பாகங்களின் வர்த்தகத்தை தடை செய்கிறது.



Original article:

Share: