முக்கிய அம்சங்கள் :
சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் நடவடிக்கைகள் தேசிய நடத்துமுறைக் கொள்கை (national treatment principle) உட்பட பல உலக வர்த்தக அமைப்பு (WTO) கடமைகளை மீறுகின்றன என்று தெரிவித்தது. மேலும், தடைசெய்யப்பட்ட இறக்குமதி மாற்று மானியங்களாகவும் கருதப்படுகின்றன. இந்தக் கொள்கைகள் இந்தியாவின் உள்நாட்டு மின்சார வாகனங்கள் (EV) தொழிலுக்கு நியாயமற்ற முறையில் பயனளிப்பதாகவும், சீனாவின் வணிக நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அமைச்சகம் கூறியதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட ஐந்து வருட மோதலுக்குப் பிறகு இருநாட்டு உறவுகளை இயல்பாக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, பெய்ஜிங் தனது மின்சார வாகன ஏற்றுமதியை இந்தியாவிற்கு அதிகரிக்க முயற்சிக்கும் நிலையில் இந்தப் புகார் வந்துள்ளது. இந்தியாவின் தானியங்கி வாகனச் சந்தையின் அளவைக் கருத்தில் கொண்டு, சீன மின்சார வாகன உற்பத்தியாளர்கள் இதை வெளிநாட்டு விற்பனையை அதிகரிக்க ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதுகின்றனர்.
உள்நாட்டு அதிகப்படியான திறன், குறைந்து வரும் லாபம் மற்றும் கடுமையான விலைப் போட்டியை எதிர்கொண்டு, BYD போன்ற சீன மின்சார வாகன (EV) தயாரிப்பாளர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் (EU) உள்ள வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய அதிகளவில் முயற்சித்து வருகின்றனர்.
சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடாகும். 2024-25 ஆம் ஆண்டில், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 14.5% குறைந்து 14.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதே காலகட்டத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி 11.5% அதிகரித்து 113.45 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை 99.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.
உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில், மின்சார வாகனக் கொள்கை மற்றும் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production-Linked Incentive (PLI)) திட்டம் ஆகியவை அடங்கும்.
உங்களுக்குத் தெரியுமா?
உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) நாடுகளுக்கு இடையிலான வர்த்தக விதிகளை நிர்வகிக்கும் ஒரே சர்வதேச அமைப்பாகும்.
இது 1995-ல் நிறுவப்பட்டது. உலக வர்த்தக அமைப்பு (WTO) அதன் 164 உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. மேலும் அதன் விதிகளின்படி, அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்தின் பேரில் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், எந்தவொரு உறுப்பினரும் வீட்டோவைப் பயன்படுத்தலாம்.
இது தடையில்லா வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உறுப்பு நாடுகளால் விவாதிக்கப்பட்டு கையெழுத்திடப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பு, நாடுகளுக்கு வர்த்தக விதிகளைப் பேச்சுவார்த்தை நடத்தவும் பொருளாதார மோதல்களைத் தீர்க்கவும் ஒரு மன்றத்தையும் வழங்குகிறது. அமைச்சரவை மாநாடு என்பது உலக வணிக அமைப்பின் உயர் முடிவெடுக்கும் அமைப்பாகும் (top decision-making body). மேலும், பொதுவாக ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் கூடுகிறது.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) அனைத்து உறுப்பினர்களும் அமைச்சரவை மாநாட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்கள் எந்தவொரு பலதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களின் கீழும் உள்ள அனைத்து விஷயங்களிலும் முடிவுகளை எடுக்க முடியும்.