உலகின் நான்காவது வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது. அதே நேரத்தில், தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற இரண்டு பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. இந்தியா உலகளாவிய தலைவராக மாற முயற்சிக்கும்போது, காலநிலை மாற்றத்தின் அவசரப் பிரச்சினையையும் அது சமாளிக்க வேண்டும்.
நாடு முழுவதும் அடிக்கடி நிகழும் வெப்ப அலைகள் மற்றும் கனமழை, காலநிலை மாற்றம் எதிர்கால அச்சுறுத்தல் அல்ல என்பதைக் காட்டுகிறது. இது ஏற்கனவே மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. இப்போது பெரிய கேள்வி என்னவென்றால்: இந்தியா தனது காலநிலை இலக்குகளை அடைவதோடு, அதன் பொருளாதாரத்தையும் எவ்வாறு தொடர்ந்து வளர்க்க முடியும்? நிலக்கரியை நம்பியிருக்கும் பகுதிகளுக்கு இது மிகவும் கடினம். ஏனெனில், அவை பொருளாதாரம் வளர உதவியுள்ளன. ஆனால் இப்போது நாடு தூய்மையான எரிசக்திக்கு மாறும்போது பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிலக்கரி சமன்பாடு
உலகிலேயே புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் நிலக்கரி இன்னும் முக்கிய எரிசக்தி ஆதாரமாக உள்ளது. இது நாட்டின் மொத்த ஆற்றலில் சுமார் 55% மற்றும் நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 74% நிலக்கரி மூலம் பெறப்படுகிறது.
2024–25 நிதியாண்டில், இந்தியா முதல் முறையாக 1 பில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரியை உற்பத்தி செய்தது. இது முந்தைய ஆண்டு உற்பத்தியைவிட 5% அதிகம். இந்த சாதனை நிலக்கரி இறக்குமதியை 8.5% குறைந்தது, மேலும், இந்தியா ரூ.42,315 கோடி அந்நிய செலாவணியைச் சேமித்தது மற்றும் நிலக்கரித் துறை ரூ.70,000 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டியது போன்ற பல நன்மைகளுக்கு வழிவகுத்தது.
நிலக்கரிச் சுரங்கம் சுமார் 2.4 லட்சம் (240,000) பேருக்கு நேரடியாக வேலைகளை வழங்குகிறது மற்றும் பலருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது. குறிப்பாக நிலக்கரி நிறைந்த பகுதிகளில் இந்தியா 220 GW-க்கும் அதிகமான வலுவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்கியுள்ள போதிலும், நாட்டின் நிலையான மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலக்கரி இன்னும் அவசியம். இந்தியா தூய்மையான எரிசக்தியை நோக்கி நகர்ந்தாலும், வளர்ந்து வரும் தொழில்துறை தேவையை பூர்த்தி செய்ய 2032ஆம் ஆண்டுக்குள் 90 GW நிலக்கரி மின்சாரத்தை கூடுதலாக சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், நிலக்கரி உற்பத்தியில் இந்த சாதனை, இந்தியா எதிர்காலத்திற்கான திட்டமிடலைத் தொடங்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது. பல ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சியை ஆதரித்து வரும் நிலக்கரி மாவட்டங்கள், மிகவும் நிலையான மற்றும் நியாயமான பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். 2015ஆம் ஆண்டு முதல், மாவட்ட கனிம அறக்கட்டளைகள் (District Mineral Foundations (DMFs)) நிலக்கரியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்கு (DMF) உதவி வருகின்றன. ஆனால், இந்த மாவட்ட கனிம அறக்கட்டளைகளுக்கு நீண்டகால திட்டம் இல்லை. குறிப்பாக, எதிர்கால சந்ததியினரைக் கருத்தில் கொண்ட திட்டம் எதுவும் இல்லை. கனடா (ஆல்பர்ட்டா) மற்றும் அமெரிக்கா (அலாஸ்கா) போன்ற நாடுகளில் சுரங்கம் முடிந்த பிறகு சமூகங்களுக்கு உதவ இப்போது பணத்தைச் சேமிக்கும் நிதி உள்ளது. இது போன்ற திட்டத்தை இந்தியா அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் நிலக்கரி வளம் மிக்க மாவட்டங்களுக்கு குறுகியகால உதவியைவிட நீண்ட காலத்திட்டங்கள் தேவை. வரிச் சலுகைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பழைய சுரங்கப் பகுதிகளுக்கான புதிய பயன்பாடுகள் மூலம் அவர்களுக்கு முழுமையான ஆதரவு தேவை. தற்போது, இந்தப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy (RE)) திறன் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான தொழிற்சாலைகள் மிகக் குறைவு. முதல் 15 சூரிய கூறு தொழிற்சாலைகளில் எதுவும் இந்தப் பகுதிகளில் இல்லை. இதன் காரணமாக, கிழக்கு மற்றும் மத்திய இந்தியா பின்தங்கியுள்ளது. அதே நேரத்தில் ,தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வேலைவாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் வளர்ந்து வருகின்றன.
இந்தியாவின் நிலக்கரி இருப்புக்களில் சுமார் 77% மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா முழுவதும் உள்ள 35 மாவட்டங்களில் காணப்படுகின்றன. இந்த மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மின்சாரம் வழங்க உதவியுள்ளன. ஆனால், இன்னும் வறுமை மற்றும் வளர்ச்சியின்மையை எதிர்கொள்கின்றன. இந்த மாநிலங்களில் நிலக்கரி சார்ந்த பல பகுதிகள் ஏழைகள் மற்றும் பெரிய பழங்குடி மக்களைக் கொண்டுள்ளன. இந்தப் பகுதிகள் தங்கள் வருமானத்திற்காக நிலக்கரியைச் சார்ந்துள்ளன, மேலும் தூய்மையான ஆற்றலுக்கு மாறும்போது அவை நியாயமாக நடத்தப்பட வேண்டும்.
இந்த மாவட்டங்கள் ஒரு எரிசக்தி மூலத்திலிருந்து இன்னொரு எரிசக்தி மூலத்திற்கு தாங்களாகவே மாற முடியாது. இந்த மாற்றம் ஒரு பெரிய, திட்டமிடப்பட்ட அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த பகுதிகளை பசுமை எரிசக்தியை மட்டும் மையமாகக் கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களாக (SEZ) மாற்றுவது ஒரு நல்ல யோசனையாகும்.
2005ஆம் ஆண்டு இந்தியாவின் SEZ கொள்கை பெரும்பாலும் IT துறைக்கு உதவியது. ஆனால், உற்பத்திக்கு, குறிப்பாக சுரங்கம் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கு உதவவில்லை. பழைய சுரங்க நிலங்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்களுக்கான இடங்களாக மாற்றுவது நீண்டகால வேலைகளை உருவாக்கலாம், புதிய நிலங்களை வாங்க வேண்டிய அவசியத்தைக் குறைக்கலாம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம். மற்ற நாடுகள் இதை வெற்றிகரமாகச் செய்துள்ளன. மேலும், இந்தியா அதன் தேவைகளின் அடிப்படையில் அதன் சொந்த திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.
சுரங்க மூடல்கள் மற்றும் திறன் மாற்றத்தை நிர்வகித்தல்
நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் அவற்றின் பயன்பாடு முடியும் தருவாயில் இருப்பதால், அவற்றை மூடுவதற்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். அவற்றை மூடுவது பயனுள்ள பாடங்களைக் கற்பிக்கக்கூடும். ஆனால், இந்தியா அதன் சொந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த செயல்முறை சுற்றுச்சூழல், மக்களின் சுகாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பாதிக்கிறது. நிலக்கரி தாங்கும் சட்டம், சுரங்க மூடல் வழிகாட்டுதல்கள், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (RFCTLARR) Act) சட்டம் (2013) மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சில சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஏற்கனவே உள்ளன. இருப்பினும், பொது நலனுக்காக நிலத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு இவை சிறந்த மற்றும் தெளிவான திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
அதே நேரத்தில், வளர்ந்து வரும் தொழில்களில் வேலைகளைக் கண்டறிய மக்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். வேலை மாற்றங்கள் சீராக இருக்க வேண்டும், பயிற்சி மற்றும் கல்வி ஒவ்வொரு பிராந்தியத்தின் பசுமை ஆற்றலில் மட்டுமல்லாமல், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேவைகள் போன்ற பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அளவுகளில் நீதி
இந்தியாவின் தூய்மையான எரிசக்தியை நோக்கிய நகர்வை, பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையேவும், இந்தியாவிற்குள் பணக்கார மற்றும் ஏழை பகுதிகளுக்கு இடையேவும், பணக்கார மற்றும் ஏழை மக்களுக்கு இடையேவும், இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் இடையே என பல்வேறு கோணங்களில் இருந்து பார்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் பிராந்தியங்களின் வெவ்வேறு பொறுப்புகள் மற்றும் திறன்களைக் கொள்கைகள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் பிராந்தியங்களின் வெவ்வேறு திறன்கள் மற்றும் பொறுப்புகளைக் கொள்கைகள் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, இந்த மாற்றத்தை நியாயமாக நிர்வகிக்க ஜார்க்கண்ட் ஏற்கனவே ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. மற்ற மாநிலங்களும் இதைச் செய்ய வேண்டும் மற்றும் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், இழந்த வருமானத்தை மாற்றுவதற்கான வழிகள் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக தொழில்களை வளர்ப்பதற்கான உள்ளூர் திட்டங்களை உள்ளடக்க வேண்டும்.
மாற்றத்திற்கு நிதியளித்தல்
காலநிலை நிதி மிகவும் முக்கியமானது. இந்தியாவில், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதிகள், இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) மற்றும் மாவட்ட கனிம அறக்கட்டளைகள் (DMF) போன்ற உள்ளூர் பண ஆதாரங்கள் மிகவும் நம்பகமானவை மற்றும் நிர்வகிக்க எளிதானவை. கடந்த 10 ஆண்டுகளில், CSR சுமார் USD 17 பில்லியனை பங்களித்துள்ளது. மேலும், DMFகள் சுமார் USD 11 பில்லியனை பங்களித்துள்ளன.
இருப்பினும், ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், DMF பணத்தில் 56% பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பணம் முறையாகப் பயன்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் பரிமாற்றங்கள் மற்றும் கலப்பு நிதி (பொது மற்றும் தனியார் நிதியின் கலவை) போன்ற கருவிகளுடன் இணைக்கப்பட்டால், அது உள்ளூர் வளர்ச்சி மற்றும் காலநிலை இலக்குகளை இயக்க உதவும்.
16வது நிதி ஆணையம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளில் மாநிலங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதோடு அரசாங்க நிதி பரிமாற்றங்களை இணைப்பதன் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
உலகளாவிய நிதியும் அவசியம். எடுத்துக்காட்டாக, COP26 காலநிலை உச்சிமாநாட்டில் ஆதரிக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் Just Energy Transition plan, சர்வதேச ஆதரவு எவ்வாறு உதவ முடியும் என்பதைக் காட்டுகிறது. இந்தியாவிற்கும் இதேபோன்ற உலகளாவிய உதவி தேவைப்படும்.
இந்தியாவின் புதிய காலநிலை நிதி அமைப்பு முதலீடுகளை சிறப்பாக வழிநடத்தும். இந்த அமைப்பு துறை சார்ந்த கொள்கைகளுடன் இணைக்கப்பட்டால், அது காலநிலைக்கு ஏற்ற வளர்ச்சியை தேசிய திட்டத்தின் வலுவான பகுதியாக மாற்ற உதவும்.
முன்னோக்கிய பாதை
2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய இந்தியா ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைய (Viksit Bharat), நாடு இன்று அதன் எரிசக்தி மாற்றங்களை கவனமாக நிர்வகிக்க வேண்டும். இந்த மாற்றம் நான்கு முக்கிய பகுதிகளை சமநிலைப்படுத்த வேண்டும். மேலும் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த மாற்றத்தை வழிநடத்த மாநில அரசுகள் மிகவும் பொருத்தமானவை என்பதால், அவற்றுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் உள்ளூர் மக்களை ஒன்றிணைக்கலாம், நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் திட்டமிடலாம் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ற புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். இந்த மாற்றத்திற்கான திட்டமிடல் இப்போது மிகவும் முக்கியமானது. இந்தியாவின் நிலக்கரி வளமுள்ள மாவட்டங்கள் பல ஆண்டுகளாக நாட்டிற்கு மின்சாரம் வழங்க உதவியுள்ளன. இப்போது, இந்த பகுதிகள் தங்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஆதரிக்கப்பட வேண்டும்.
பாஸ்கர் வீரா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மூத்த உறுப்பினராக உள்ளார். மேலும், புவியியல் துறையில் அரசியல் பொருளாதாரத்தை கற்பிக்கிறார். சசி ஆர் சிங் அதே துறையில் ஒரு ஆராய்ச்சியாளராக உள்ளார். மேலும், நில பயன்பாடு, நியாயமான எரிசக்தி மாற்றம் மற்றும் நிலக்கரி வளமுள்ள மாநிலங்களில் பொருளாதார பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்.
Original article: