பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு எவ்வாறு பங்களிக்கின்றன? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


பணிகள் ஏன் முன்கூட்டியே முடிக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த வாரம் இந்தத் திட்டம் குறித்து முதன்முதலில் அறிக்கை செய்த NPR, இந்த நிச்சயமற்ற தன்மையைக் குறிப்பிட்டது.


நாசா அசோசியேட்டட் பிரஸ் (AP)-க்கு மின்னஞ்சல் அனுப்பிய அறிக்கையில், பணிகள் “அவற்றின் முதன்மையான பணிக்கு அப்பாற்பட்டவை” (beyond their prime mission) என்று கூறியது. “குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி நிரல் மற்றும் வரவு-செலவு திட்ட முன்னுரிமைகளுடன் ஒத்துப்போக” (to align with the President’s agenda and budget priorities) பணிகள் நிறுத்தப்படுவதாக அவர்கள் கூறினர். இருப்பினும், இந்த செயற்கைக்கோள்கள் உலகில் உள்ள வேறு எந்த பணியை விடவும், அவை இயக்கப்பட்டாலும் அல்லது திட்டமிடப்பட்டாலும், இன்னும் அதிக உணர்திறன் மற்றும் துல்லியமானவை என்று நிபுணர்கள் வாதிட்டனர்.


OCOக்கள் பூமிக்கான பிரத்யேக தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள்களின் வரிசையாகும். காலநிலை மாற்றத்தின் சிறப்பியல்புகளை நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில், விண்வெளியில் இருந்து வளிமண்டல CO2-ஐ கண்காணிக்க அவை வடிவமைக்கப்பட்டன.


இந்தத் தொடரின் முதல் பணி, OCO என அழைக்கப்பட்டது. பிப்ரவரி 2009-ல் ஏவப்பட்ட உடனேயே தோல்வியடைந்தது. மாற்று செயற்கைக்கோள், OCO-2, ஜூலை 2014-ல் ஏவப்பட்டது. இது செலவுகளைக் குறைக்கவும், அட்டவணையைக் குறைக்கவும், செயல்திறன் தாக்கங்களைக் கட்டுப்படுத்தவும் உண்மையான OCO வடிவமைப்பைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டது.


செயற்கைக்கோள் வளிமண்டல CO2-ஐ அளவிடுகிறது. CO2 எங்கிருந்து வருகிறது, எங்கு உறிஞ்சப்படுகிறது என்பதையும் இது அடையாளம் காண முடியும். ஒளிச்சேர்க்கையின் போது மங்கலான "பளபளப்பு" (glow) தாவரங்கள் வெளியிடுவதைக் கண்டறிவதன் மூலம் பயிர்கள் மற்றும் அவற்றின் வளரும் பருவங்களையும் இந்த பணி கண்காணிக்கிறது.


2019-ம் ஆண்டில், CO2 கண்காணிப்புகளை மேம்படுத்துவதற்காக OCO-3 எனப்படும் மூன்றாவது பணி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்பப்பட்டது. OCO-2 திட்டத்தின் உதிரி பாகங்களைப் பயன்படுத்தி OCO-3 உருவாக்கப்பட்டது.


அறிக்கையின்படி, அமெரிக்க அரசாங்கம் இப்போது OCO-2 மற்றும் OCO-3 செயற்கைக்கோள்களை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


OCO பயணங்களுக்கு முன்பு, விஞ்ஞானிகள் வளிமண்டல CO2-ஐ முக்கியமாக பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி அளவிட்டனர். இந்த முறை முழுமையான உலகளாவிய படத்தைக் கொடுக்கவில்லை. OCO பயணங்கள் அதை மாற்றின.


CO2 ஒரு சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயு. இது புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமாகும். OCO திட்டங்களின் தரவு, உமிழ்வு குறைப்பு முயற்சிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை அளவிட விஞ்ஞானிகளுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் உதவுகிறது. இது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பயனுள்ள உத்திகளை உருவாக்கவும் உதவுகிறது.


OCO திட்டங்களின் அறிவியல் புரிதலையும் விரிவுபடுத்தியுள்ளன. அவை சில எதிர்பாராத கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன.


உதாரணமாக, வளிமண்டலத்திலிருந்து அதிக அளவு CO2-ஐ அகற்றுவதன் மூலம் வெப்பமண்டல மழைக்காடுகள் பூமியின் நுரையீரலாகச் செயல்படுகின்றன என்று பல காலக்கட்டங்களாக நம்பப்பட்டது. இருப்பினும், OCO-2 இன் தரவு, வடக்கு அரைக்கோளத்தின் உயர் அட்சரேகைகளில் உள்ள ஊசியிலையுள்ள காடுகள் அல்லது டைகாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இது, CO2-ஐ உறிஞ்சுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வெளிப்படுத்தின.


காடுகள் போன்ற இயற்கை கார்பன் மூழ்கிகள் கார்பன் உமிழ்ப்பான்களாக மாறக்கூடும் என்பதையும் தரவு வெளிப்படுத்தியது. இது வறட்சி அல்லது காடழிப்பு காரணமாக நிகழலாம்.


செயற்கைக்கோள்களை வடிவமைத்து ஏவுவதற்கு செலவிடப்படும் பணத்துடன் ஒப்பிடும்போது OCO-களை விண்வெளியில் வைத்திருப்பதற்கான செலவு மிகக் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா? :


பசுமை இல்ல வாயுக்கள் (GHG) என்பது பூமியின் வளிமண்டலத்தில் வெப்பத்தை ஈர்க்கும் வாயுக்கள் ஆகும். சூரியன் குறுகிய அலை கதிர்வீச்சு அல்லது சூரிய ஒளியை அனுப்புகிறது, இது வளிமண்டலத்தின் வழியாகச் சென்று பூமியின் மேற்பரப்பால் உறிஞ்சப்படுகிறது. இதனால் வளிமண்டலத்தின் மேற்பரப்பை வெப்பமாக்குகிறது. இருப்பினும், இந்த சூரிய ஒளியில் சில மேற்பரப்பில் இருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சு அல்லது வெப்பமாக பிரதிபலிக்கிறது, இது நீண்ட அலைநீளம் கொண்டது.


கார்பன் டை ஆக்சைடு (CO₂) மற்றும் மீத்தேன் (CH₄) போன்ற பசுமை இல்ல வாயுக்கள் குறுகிய அலை கதிர்வீச்சை உறிஞ்ச முடியாது. ஆனால் அவை அகச்சிவப்பு கதிர்வீச்சைப் பிடிக்க முடியும். ஏனென்றால், ஆக்ஸிஜன் அல்லது நைட்ரஜன் மூலக்கூறுகளைப் போலல்லாமல், CO₂ மற்றும் CH₄ மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டுள்ளன. இந்த அமைப்பு அவற்றை பல வழிகளில் நீட்டவும், வளைக்கவும், திருப்பவும் அனுமதிக்கிறது. இதனால் அவை வெப்பத்தை ஈர்க்க உதவுகின்றன.



Original article:

Share:

பெண்களின் தொழிலாளர்வள பங்கேற்புக்கு பாலினம் எவ்வாறு முதன்மைத் தடையாக உள்ளது? -ரிதுபர்ணா பட்கிரி

 கடுமையான தொழிலாளர் அட்டவணைகள் மற்றும் ஊதிய இடைவெளிகள் போன்ற கட்டமைப்புத் தடைகளுக்கு மேலதிகமாக, பாலினம் பற்றிய கருத்துக்கள் தொழிலாளர் தொகுப்பில், குறிப்பாக நீல மற்றும் சாம்பல் பட்டை பணியாளர்களில் பெண்களின் பங்கேற்பைத் தடுக்கின்றன. இதை நிவர்த்தி செய்ய எந்த வகையான கொள்கை தலையீடுகள் உதவும்?


இந்த வாரம் இந்தியா 79-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில், உள்ளடக்கிய வளர்ச்சியை (inclusive growth) நோக்கிய நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரமாகும். பல ஆண்டுகளாக, தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்கேற்பு உருவாகியுள்ளது. இருப்பினும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் போன்ற பிராந்தியங்களுக்கு இடையே பங்கேற்பு வேறுபடுகிறது என்பதை தரவு காட்டுகிறது. இதில் நீல மற்றும் சாம்பல் பட்டை பணியாளர்கள் (blue- and grey-collar jobs) மற்றும் கிக் தொழிலாளர்கள் அடிப்படையிலான வேலைவாய்ப்பு போன்ற வேலை (gig-based employment) வகையைப் பொறுத்தும் மாறுபடும்.


பணியிடத்தில் பெண்களின் பங்கேற்பு


இந்தியாவில், முதுமை (old age), ஊனமுற்றோர் (disability) மற்றும் சட்டப்பூர்வ வேலை செய்யும் வயதுடைய நபர்கள் வேலை செய்வதைத் தடுக்கும் பிற காரணங்களால் தொழிலாளர் பங்களிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால், தெளிவான பாலின இடைவெளியும் உள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National Sample Survey Office (NSSO)) நடத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) 2022-2023-ன் படி, 10 பேரில் 8 ஆண்கள் தொழிலாளரின் ஒரு பகுதியாக உள்ளனர். இதை ஒப்பிடுகையில், 10 பேரில் 4 பேர் பெண்கள் மட்டுமே இதில் பங்கேற்கின்றனர்.


இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் இதேபோன்ற வருமானம் மற்றும் வளர்ச்சி நிலைகளைக் கொண்ட பிற நாடுகளைவிட இன்னும் குறைவாகவே உள்ளது. இதன் பொருள், பெண்கள் தொழிலாளர் வகையில் பெரிதும் குறைவாகவே உள்ளனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணக்கிடப்படாத வழிகளில், பலர் இன்னும் வேலை செய்கிறார்கள். இந்த இடைவெளி கிராமப்புற இந்தியாவில் அல்லது குறைந்த கல்வியறிவு பெற்ற பெண்கள் மத்தியில் மட்டுமல்ல. பட்டதாரி அல்லது உயர்நிலை பட்டம் பெற்றவர்கள் உட்பட நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள்கூட பெரும்பாலும் பணியிடத்திற்கு வெளியே இருக்கிறார்கள்.


நீல மற்றும் சாம்பல் பட்டை பணியாளர்களின் பெண்கள்


எந்தவொரு வேலையிலும் தொழில்முறைமயமாக்கல் (professionalised) என்பது பொதுவாக ஆண்களுக்கு பெண்களைவிட சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்புகள் இருப்பதைக் குறிக்கிறது. இது நீல மற்றும் சாம்பல் பட்டை பணியாளர்களில் (Blue- and grey-collar jobs) குறிப்பாக உண்மை. PLFS 2022-2023-ன் படி, நீல மற்றும் சாம்பல் பட்டை பணியாளர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் நிதியாண்டு 2020-21-ல் 16 சதவீதத்திலிருந்து நிதியாண்டு 2023-24-ல் 19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது சில முன்னேற்றத்தைக் காட்டினாலும், இதற்கான விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது.


நீல மற்றும் சாம்பல் பட்டை பணியாளர்களில் சில்லறை விற்பனை, கட்டுமானம், தளவாடங்கள், உற்பத்தி, பராமரிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற தொழில்களை உள்ளடக்கிய கைமுறை அல்லது தொழில்நுட்ப வேலைகள் (manual or technical work) அடங்கும். இவை பெரும்பாலும் உடல் உழைப்பை உள்ளடக்கியது. தொழில்நுட்ப அல்லது இயந்திர திறன்கள் தேவைப்படுகின்றன. மேலும், மக்கள் பொதுவாக தொழில் பயிற்சி (vocational training) மற்றும் பயிற்சிகள் (apprenticeships) மூலம் இந்த திறன்களைப் பெறுகிறார்கள். வேலை பெரும்பாலும் தொழிற்சாலைகள், பட்டறைகள் மற்றும் கட்டுமானத் தளங்கள் போன்ற வெளிப்புறங்களில் செய்யப்படுகிறது.


Indeed-ன் 2025 கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் நீல மற்றும் சாம்பல் பட்டை பணியாளர் குழுவில் பெண்கள் ஐந்து வேலைகளில் ஒன்றை மட்டுமே வைத்திருக்கிறார்கள். இதேபோல், Quess Corp Ltd உடன் இணைந்து, நீல மற்றும் சாம்பல் பட்டை பணியாளர்குழுவில் பெண்களின் நிலை 2025 என்ற தலைப்பில் Udaiti அறக்கட்டளையின் அறிக்கை, இந்தத் துறையில் முறையான தடைகள் மற்றும் உடனடி கொள்கை தலையீடுகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


கட்டமைப்புத் தடைகள்


பெண்களுக்கு சட்டத்தின் கீழ் சம உரிமைகள் இருந்தாலும், நடைமுறையில் அவர்கள் தொழிலாளர் பங்கேற்பில் தொடர்ந்து தடைகளை எதிர்கொள்கின்றனர். இந்தத் தடைகளில் பெரும்பாலானவை கட்டமைப்பு ரீதியானவை. கடுமையான பணி அட்டவணைகள், ஊதிய சமத்துவமின்மை, வரையறுக்கப்பட்ட பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள், டிஜிட்டல் திறன்கள் இல்லாமை, போதுமான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் குடும்ப மற்றும் குழந்தை பராமரிப்பு பொறுப்புகள் அனைத்தும் நீல மற்றும் சாம்பல் பட்டைப் பணியாளர்களில் பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் பங்கேற்பதைத் தடுக்கின்றன.


இந்த வேலைகளில் பலவற்றிற்கு நிலையான மற்றும் நீண்ட வேலை நேரம் தேவைப்படுகிறது. குடும்பங்கள் பெரும்பாலும் பெண்கள் இதுபோன்ற வேலைகளை எடுப்பதைத் தடுக்கின்றன. மேலும், வீட்டு வேலைகளை ஊதிய வேலையுடன் சமநிலைப்படுத்துவது பெண்களை பாதகமாக ஆக்குகிறது. 


பெண்கள் பணியிடத்தில் ஊதிய இடைவெளிகளையும் எதிர்கொள்கின்றனர்.  இந்த சமத்துவமின்மை சில பெண்களை பணியிடத்தைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்துகிறது. பாலின ஊதிய இடைவெளியில் உள்ள வேறுபாடு ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பிரச்சினையாகவே உள்ளது. இது தொழிலாளர் சந்தைகளில் தீவிரமாக வேரூன்றிய நியாயமற்ற தன்மையைக் காட்டுகிறது. தொழிலாளர் புள்ளிவிவர பணியகத்தின்படி, 2024-ம் ஆண்டு நிலவரப்படி, ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் உலகளவில் பெண்கள் $0.83 சம்பாதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இது 17 சதவீத ஊதிய இடைவெளியைக் காட்டுகிறது.


பாலினம் முதன்மையான தடையா?


இந்தியாவின் நீலம் மற்றும் சாம்பல் பட்டை பணியாளர்களில் பெண்கள் ஆண்களின் ஊதியத்தில் சுமார் 70 சதவீதத்தை மட்டுமே சம்பாதிக்கிறார்கள் என்று உதைதி அறக்கட்டளை அறிக்கை (Udaiti Foundation report) வெளிப்படுத்துகிறது. இந்த பெண்களில் பாதி பேர் தங்கள் ஊதியத்தில் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் 80 சதவீதம் பேர் மாதத்திற்கு 2,000-க்கும் குறைவாகவே சேமிக்கிறார்கள் அல்லது பல சந்தர்ப்பங்களில் எதையும் சேமிக்கவில்லை.


குறைந்த ஊதியம் மட்டுமே பிரச்சனை அல்ல. மோசமான வேலை-வாழ்க்கை சமநிலை, ஆண் ஆதிக்க பணியிட கலாச்சாரங்கள், மரியாதை மற்றும் அங்கீகாரம் இல்லாதது ஆகியவையும் பெண்களை இந்த வேலைகளை விட்டு வெளியேற வைக்கின்றன. ஒரு வருடத்திற்கும் குறைவான பணி அனுபவம் உள்ள 52 சதவீத பெண்கள் அடுத்த 12 மாதங்களுக்குள் வேலையைவிட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. குறைந்த ஊதியம் மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் காரணமாக, பெண்களுக்கு அத்தகைய வேலைகளைத் தொடர குறைந்தபட்ச உந்துதல் அல்லது ஊக்கத்தொகைகள் போன்ற சிறிய காரணத்தை அளிக்கின்றன.


ஆனால், முதன்மைத் தடையாக பாலினம் தொடர்கிறது. பெண்கள் உடல் ரீதியாகவும் கடினமாகவும் உழைக்க முடியாது என்று பலர் நம்புகிறார்கள். இதன் காரணமாக, முதலாளிகள் அவர்களை வேலைக்கு அமர்த்த தயங்குகிறார்கள். சில முதலாளிகள் பெண்கள் குடும்பம் மற்றும் குழந்தை பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறார்கள். எனவே அவர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தவிர்க்கிறார்கள். மிக முக்கியமாக, பல முதலாளிகள் மகப்பேறு சலுகைகள் மற்றும் பிற உரிமைகளை வழங்க விரும்பவில்லை. எனவே அவர்கள் குறைவான பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.


கிக் பொருளாதாரத்தின் எழுச்சி


கிக் அடிப்படையிலான தளப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாலின வேறுபாடுகளை அதிகரித்துள்ளது. ஓட்டுதல் மற்றும் ஒப்படைப்பு போன்ற பல தள வேலைகள் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. இந்த வேலைகள் பெரும்பாலும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாகவோ அல்லது சமூகரீதியாக பொருத்தமற்றதாகவோ காணப்படுகின்றன. சமூகக் களங்கம் பெண்கள் அத்தகைய வேலையை மேற்கொள்வதைத் தடுக்கிறது.


உமா ராணி போன்ற பொருளாதார நிபுணர்களின் ஆராய்ச்சி, கிக் தொழிலாளர்களின் தளங்கள் ஏற்கனவே உள்ள பாலின சார்புகளை வலுப்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது. அவர்கள் பெரும்பாலும் தங்களை நெகிழ்வானவர்களாகவும் அதிகாரம் அளிப்பவர்களாகவும் விளம்பரப்படுத்துகிறார்கள். இருப்பினும், பெண்கள் வீட்டு உதவி அல்லது பார்லர் சேவைகள் போன்ற குறைந்த ஊதியம் பெறும் கிக் வேலைகளில் முடிவடைகிறார்கள். மறுபுறம், ஆண்கள் டெலிவரி அல்லது போக்குவரத்தில் அதிக ஊதியம் பெறும் வேலைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.


பொது இடங்கள் குறிப்பாக இரவில் பெண்களுக்கு குறைவாகவே அணுகக்கூடியதாக உள்ளது. தளம் சார்ந்த வேலைகள் (Platform-based work) பெரும்பாலும் நடமாட்டத்தை சார்ந்துள்ளது. இது வரலாற்று ரீதியாக இந்தியப் பெண்களின் பணியிடப் பங்களிப்பை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையை ஷில்பா பட்கே, சமீரா கான் மற்றும் ஷில்பா ரனாடே போன்ற அறிஞர்கள் தங்கள் Why Loiter?: Women and Risk on Mumbai Streets (2011) என்ற புத்தகத்தில் ஆய்வு செய்துள்ளனர்.


நகரங்களில் பயணம் செய்யும்போது ஏற்படும் பாலின ரீதியான அனுபவங்கள் பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிஞர்கள் காட்டியுள்ளனர். போக்குவரத்து சமத்துவமின்மை சாதி மற்றும் வறுமையுடன் குறுக்கிடுகிறது. ஏனெனில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் போக்குவரத்து இணைப்பு குறைவாக உள்ள புறப் பகுதிகளில் வசிப்பதால் கூடுதல் தடைகளை எதிர்கொள்கின்றனர்.


பிராந்திய மற்றும் அடையாள அடிப்படையிலான வேறுபாடுகள்


பிராந்தியம் மற்றும் அடையாளத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 2.9 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று PLFS அறிக்கை காட்டுகிறது. இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி நீல மற்றும் சாம்பல் பட்டைப் பணியாளர்களின் துறையில் வேலை கிடைக்காத படித்த கிராமப்புற பெண்களால் இயக்கப்படுகிறது. இது பெரும்பாலும் டிஜிட்டல் திறன்கள் மற்றும் தொழில் பயிற்சி இல்லாததால் ஏற்படுகிறது.


பொருளாதார வளர்ச்சியின் காலகட்டத்தில் பெண்கள் விலகுவதைவிட பொருத்தமான வேலைகள் இல்லாததே பெண் பணியாளர்களின் பங்கேற்பு குறைவதற்குக் காரணம் என்று சோனால்டே தேசாய் ”தி பாரடாக்ஸ் ஆஃப் டிக்ளினிங் பெண் பணி பங்கேற்பு விகிதங்களைக் கொண்டுள்ளனர் (2019)” (Paradox of Declining Female Work Participation in an Era of Economic Growth) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.


உயர் சாதி பெண்கள் வரலாற்று ரீதியாக தொழிலாளர் தொகுப்பில், குறிப்பாக நீல மற்றும் சாம்பல் பட்டைப் பணியாளர்களில் குறைந்த பங்கேற்பு விகிதங்களைக் கொண்டிருந்தனர். ஏனெனில், குறிப்பாக இந்தத் துறைகளில் ஊதியம் பெறும் வேலை, பெரும்பாலும் குறைந்த தரநிலையாகக் கருதப்படுவதால், குடும்பங்கள் பெண்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்வதைத் தடுக்கின்றன. முஸ்லிம் உயர்சாதிப் பெண்களும் இதேபோன்ற கலாச்சாரத் தடைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, அவர்களின் தொழிலாளர் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.


இதற்கு நேர்மாறாக, கீழ்நிலை சாதிகளைச் சேர்ந்த பெண்கள் பொதுவாக அதிக தொழிலாளர் தொகுப்பில் பங்கேற்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் முறைசாரா, குறைந்த திறமையான மற்றும் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் வேலை செய்கிறார்கள். இது சாதி மற்றும் பாலினம் காரணமாக அவர்களின் அடுக்கு குறைபாடுகளைக் காட்டுகிறது. பல ஆராய்ச்சியாளர்கள் இந்த முறையை ஆய்வு செய்துள்ளனர். ”கிராமப்புற இந்தியாவில் பெண்களின் நிலை, சாதி மற்றும் நேர ஒதுக்கீடு” (2013) (Status, Caste, and the Time Allocation of Women in Rural India) என்ற புத்தகத்தில் முகேஷ் ஈஸ்வரன், பாரத் ராமசாமி மற்றும் விலிமா வாத்வா ஆகியோரும், Caste, Religion and the Labour Force Participation of Women: Evidence from India (2023) என்ற புத்தகத்தில் முஸ்னா பாத்திமா ஆல்வியும் இதில் அடங்குவர்.


அருண் குமார் பைர்வா மற்றும் ஜாதவ் சக்ரதர் ஆகியோரின் ஆய்வு, இந்திய சேவைத் துறையில் சாதி இணைப்பு மற்றும் உயர் அதிகார வேலைகளுக்கான அணுகல் (2024), உயர் அதிகார பதவிகளைப் பெறுவதில் கீழ் மற்றும் உயர் சாதிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டுகிறது.


இந்தச் சவால்களைத் தணிக்க, கட்டமைப்பு, கலாச்சார மற்றும் பொருளாதாரத் தடைகளை நிவர்த்தி செய்யும் பன்முக உத்தி அவசியம். குறைந்தபட்ச ஊதியத்தை செயல்படுத்துவதும் அமல்படுத்துவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளிகளைக் குறைக்க உதவும். மேலும், வேலைவாய்ப்புக் கொள்கைகளில் குழந்தை பராமரிப்பு மற்றும் மகப்பேறு செலவுகளும் சேர்க்கப்பட வேண்டும். இதனால் பெண்கள் அதிக வேலை செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்.


பல பணியிடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் போதுமான வெளிச்சம் போன்ற அடிப்படை நடவடிக்கைகள் இல்லாததால், பாதுகாப்பு மற்றொரு முக்கிய கவலையாக உள்ளது. எனவே, பணியிட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், போதுமான சுகாதாரம், குழந்தை பராமரிப்பு வசதிகள் மற்றும் பெண்களுக்கு ஏற்ற வசதிகளை வழங்குதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும்.


பெண்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிடம் வழங்குவது நிறுவனங்கள் அதிக பெண் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள உதவும். கொள்கை அளவில், பெண்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில், தொழில் மற்றும் திறன் சார்ந்த பயிற்சியில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். பயிற்சி பெற்ற பெண்களை பொருத்தமான வேலைகளுடன் இணைக்க சிறந்த அமைப்புகளும் இருக்க வேண்டும். இது சரியான திசையில் ஒரு படியாக இருக்கும்.


மேலும், பல துறைகளில், களப்பணியாளர்களிடம் குறைகளைத் தீர்க்க முறையான அமைப்புகள் இல்லை. இதுபோன்ற வழிமுறைகளை அமைப்பது, பணியிடப் பிரச்சினைகளைப் புகாரளிக்கும்போது பெண்கள் பாதுகாப்பாக உணர வைக்கும். இது அவர்களின் கவலைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்கும்.


பணியமர்த்தல் செயல்முறைகள் மிகவும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். வாய்மொழி அல்லது குறிப்பு அடிப்படையிலான ஆட்சேர்ப்பை நம்பியிருப்பது பெரும்பாலும் பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுக்கிறது. இறுதியாக, தொழிலாளர் சட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இந்தச் சட்டங்கள் முறையான ஒப்பந்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். இது பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான பிற முயற்சிகளை ஆதரிக்கும்.


நைலா கபீர் (வளங்கள், நிறுவனம், சாதனைகள்: பெண்கள் அதிகாரமளிப்பதை அளவிடுவது குறித்த பிரதிபலிப்புகள், 1992), அஷ்வினி தேஷ்பாண்டே (முக்கியமான விதிமுறைகள்: வருமான உருவாக்கம், செலவு சேமிப்பு மற்றும் இந்தியாவில் ஊதியம் பெறாத வீட்டுப் பொறுப்புகளுக்கு இடையே பெண்களின் பணியின் விநியோகத்தை ஆராய்தல், 2024), மற்றும் தேவகி ஜெயின் (வேலையை மதிப்பிடுதல்: ஒரு அளவீடாக நேரம், 1996) போன்ற அறிஞர்கள், நிறுவனம், கண்ணியம் மற்றும் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய வேலைவாய்ப்பு பற்றிய பரந்த பார்வையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டனர்.


பெண்களின் பணியை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அப்போதுதான் பணியிடத்தில் பாலின இடைவெளியைக் குறைப்பதை நோக்கி நாம் நகர முடியும்.


ரிதுபர்ண பத்கிரி, குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உதவிப் பேராசிரியர்.




Original article:

Share:

இந்தியாவின் வேளாண்துறையை எல்லோருக்கும் திறந்துவிடுவது, அத்துறைக்கு கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் -மன்பிரீத் சிங் பாதல்

 இந்தியா தனது விவசாய அமைப்புகளை அகற்றி, சர்வதேச சந்தை சக்திகளுக்கு திறக்க வேண்டும் என்ற அழுத்தம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்களது சொந்த விவசாயத்தை நிதியுதவி செய்து கொண்டிருக்கவில்லை என்றால் மட்டுமே நியாயமானதாக இருக்கும்.


வேளாண் துறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது என்று சொல்வதும், சிறு விவசாயிகளின் குடும்பங்கள் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றன என்று கூறுவதும் போதாது. இந்த புள்ளிவிவரங்கள் கதையின் முழு அளவையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே, இந்தியாவின் விவசாய மற்றும் கிராமப்புறங்களை அறியாதவர்களுக்கு, இந்தத் தரவு ஒரு பெரிய நிகழ்வை மறைக்கிறது.


ஒரு விவசாயியாகவும் முன்னாள் நிதியமைச்சராகவும் நான் இதைச் குறிப்பிடுவதாவது, திறந்தவெளி விவசாயத்தின் விளைவுகள் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டவை. இதில், சமூக நிலைத்தன்மையானது ஆபத்தில் உள்ளது. மற்றும் இது நாம் தயாராக இல்லாத ஒரு கலாச்சார எழுச்சியை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, 250 மில்லியன் மக்கள் நேரடியாக விவசாயத்தை சார்ந்துள்ளனர். மேலும், 700 மில்லியன் இந்தியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயம் மற்றும் கிராமப்புறத் துறையுடன் தொடர்புடையவர்கள் ஆவர். வேளாண் துறையைப் பாதுகாப்பது என்பது வெறும் கொள்கை மட்டுமல்ல. இது மில்லியன் கணக்கான மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும். இது பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார நிலைத்தன்மையை பராமரிப்பதற்கு மிகவும் முக்கியமானது.


வேளாண் மானியம் (subsidy) மற்றும் வரிவிதிப்புகள் (tariffs) பற்றிய வாதம் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) மையமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பகுதியிலும், விதிமுறைகளும் அணுகுமுறையும் வேறுபடுகின்றன. ஆனால், பிரச்சினை அப்படியே உள்ளது. இந்தியாவில் MSP இருந்தால், அமெரிக்காவில் ERP, PLC, ARC மற்றும் DMC உள்ளன. இவற்றைப் பற்றி மேலும் விளக்குகிறேன்.


ERP என்பது MSPக்கு இணையான பயனுள்ள ஒரு குறிப்பு விலையாகும் (Reference Price). அமெரிக்காவில், சந்தை விலைகள் இந்த நிலைக்குக் கீழே விழுந்தால், விவசாயிகள் அரசாங்கத்திடமிருந்து நேரடி பணம் பெறுகிறார்கள். மேலும், இது விலை இழப்பு பாதுகாப்பு (Price Loss Coverage (PLC)) என்று அழைக்கப்படுகிறது. PLC மற்றும் வேளாண் இடர் பாதுகாப்பு (Agriculture Risk Coverage (ARC)) இரண்டும் கோதுமை மற்றும் சோளம் முதல் சோயாபீன் மற்றும் பருத்தி வரை 22 முக்கியப் பயிர்களை உள்ளடக்கியது. இந்த அமைப்புகள் விவசாயத்திற்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. ஏனெனில், அவை பால்வள வருவாய் பாதுகாப்பு (Dairy Margin Coverage (DMC)) திட்டத்தின் கீழ் பால் துறைக்கும் நீட்டிக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான வேளாண் கொள்கை (Common Agricultural Policy (CAP)), விலைகள் தலையீட்டு அளவைவிடக் குறையும்போது, அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலைகளைப் போலவே செயல்படும்போது, பணம் வழங்கப்படுகின்றன.


இந்தியாவில், அரசாங்கம் MSP-யில் பயிர்களை கொள்முதல் செய்தாலும், அமெரிக்காவில் அரசாங்கம் பயிர்களை கொள்முதல் செய்வதில்லை, மாறாக விலைகள் குறைந்தபட்சத்தைவிடக் குறைவாக இருந்தால் விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்துகிறது. இந்தியாவில் கல்வியறிவு நிலைகள் மற்றும் பல்வேறு EU மற்றும் US கொள்கைகளில் சேர தேவையான ஆவணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய விவசாயிகளை இந்த அமைப்புகளுக்கு மாறச் சொல்வது அதிகாரத்துவத்தின் மற்றொரு அடுக்கைச் சேர்க்கும். இந்தியாவில் US மற்றும் EU மாதிரிகளை செயல்படுத்த பல ஆண்டுகள் அல்லது பல காலங்கள் ஆகும்.


அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் சொந்த வேளாண் துறைகளுக்கு மானியம் வழங்காவிட்டால், அதன் வேளாண் வழிமுறைகளை அகற்றி, சர்வதேச சந்தை சக்திகளுக்குத் திறக்க இந்தியா மீதான அழுத்தம் நியாயமானதாக இருக்கும். அமெரிக்கா சுமார் 20 பில்லியன் டாலர்களையும் EU சுமார் 50 பில்லியன் டாலர்களையும் விவசாய மானியங்களுக்கு செலவிடுகிறது. உண்மையில், இந்த மானியங்களில் பல மறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் MSP அமைப்பு மிகவும் வெளிப்படையானது.


அமெரிக்க மானியங்களின் கவனம் பெரிய வேளாண் சார்ந்ததாக உள்ளது. அதே நேரத்தில், இந்திய வேளாண் கொள்கை சிறு விவசாயிகளை மையமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க கொள்கை முன்னுரிமைகளில் சந்தை நிலைப்படுத்தல், வருமான பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், இந்தியா சிறு விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது. கிராமப்புற பொருளாதாரத்தின் நிலையான மேம்பாட்டை உறுதி செய்வதும் ஆகும். ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் வருமான ஆதரவு, சுற்றுச்சூழல் இலக்குகள், காலநிலை மற்றும் பல்லுயிர் இலக்குகளை நோக்கமாகக் கொண்டுள்ளன.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியில், 80 சதவீத மானியங்கள் பெரிய பண்ணைகளுக்குச் செல்கின்றன. அதே நேரத்தில் இதற்கு நேர்மாறாக இந்தியாவில், 80 சதவீத மானியங்கள் சிறு மற்றும் நடுத்தர வேளாண்களுக்குச் செல்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம், அதன் சமீபத்திய பட்ஜெட் திட்டங்களில், சிறு விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம், அமெரிக்க மாதிரியிலிருந்து விலகி, இந்திய மாதிரிக்கு நெருக்கமான ஒன்றைப் பின்பற்றி செயல்படுத்துகிறது. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான விவசாயக் கொள்கையில் (CAP) சமீபத்திய ஏற்பாடு 2021-2027-ஆம் ஆண்டிற்கான 387 பில்லியன் யூரோக்கள் ($451 பில்லியன்) ஆகும். மேலும் சமீபத்தில் கடந்த மாதம், பெரிய விவசாயிகளிடமிருந்து சிறிய விவசாயிகளுக்கு ஆதரவை மாற்றும் முயற்சியில், ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு 1,00,000 யூரோக்கள் என்ற வரம்பை அவர்கள் முன்மொழிந்தனர். அதாவது ஒரு விவசாயிக்கு ஒரு கோடி மானியம் என்ற உச்சவரம்பைக் குறிக்கிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, உண்மையான பிரச்சினை நியாயமான மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒப்பந்தங்களை வைத்திருப்பதுதான். இந்திய MSP தெளிவானது, வெளிப்படையானது மற்றும் இந்திய சூழலை மையமாகக் கொண்டது போலவே, CAP, ERP, PLC, ARC மற்றும் DMC ஆகியவற்றின் அமைப்புகள் அமெரிக்க மற்றும் EU சூழல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்ணோட்டம் பொருளாதாரத்திலிருந்து மட்டுமல்ல, சமூகம், அரசியல் மற்றும் கலாச்சாரத்திலிருந்தும் வருகிறது. அமெரிக்கா மற்றும் EU மானியங்கள் சந்தையை தங்களுக்கு சாதகமாக சிதைக்கும்போது, முழு வேளாண் துறையையும் அனைவருக்கும் இலவசமாகத் திறப்பது ஒரு வகையான சமச்சீரற்ற போரை உருவாக்கும். இது இந்திய சமூகத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக ஏற்படும் எழுச்சி மிகப்பெரியதாக இருக்கும்.


இந்த நிலைப்பாடு மிக உயர்ந்த மட்டங்களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், "எங்களுக்கு, எங்கள் விவசாயிகளின் நலன் முதன்மையானது. இந்தியா அதன் விவசாயிகள், பால் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது. இந்த நிலைப்பாட்டிற்கு தான் தனிப்பட்ட முறையில் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருப்பதாகவும், ஆனால் அதற்குத் தயாராக இருப்பதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.


எழுத்தாளர் பஞ்சாபின் முன்னாள் நிதியமைச்சர் ஆவார்.



Original article:

Share:

புத்தகத்துடன் தேர்வெழுதும் CBSE திட்டம் மற்றும் மாணவர்கள் மீதான அதன் தாக்கம் -விதீஷா குந்தமல்லா

 நினைவாற்றல் சார்ந்த தேர்வுகளைவிட திறந்த புத்தகத் (open-book) தேர்வுகள் எப்போதும் எளிதானவை அல்ல. இந்த முறை இந்தியாவிற்குப் புதியதல்ல, ஆனால் இதைப் பயன்படுத்துவது சில சவால்களைச் சந்தித்துள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)), 2026-27 கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பில் திறந்த புத்தகத் தேர்வு முறைகளை (open-book assessments (OBE)) தொடங்க உள்ளது. பல ஆசிரியர்கள் இந்த யோசனையை ஆதரிப்பதாக ஒரு ஆய்வு முடிவு காட்டியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.


ஜூன் மாதம் CBSE நிர்வாகக் குழு இந்தத் திட்டத்தை அங்கீகரித்தது. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியலுக்கும் 2023 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒரு மாதிரி ‘திறந்த புத்தகத் தேர்வுகள்’ நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை திறந்த புத்தகத் தேர்வு முறைகளின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் இந்திய வகுப்பறைகளில் அவற்றின் பங்கு பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.


திறந்த புத்தகத் தேர்வுகள் என்றால் என்ன?


திறந்த புத்தகத் தேர்வு, மாணவர்கள் தேர்வின் போது நினைவாற்றலை மட்டும் சார்ந்து இருப்பதற்கு பதிலாக, பாடப்புத்தகங்கள், வகுப்பு குறிப்புகள் அல்லது பிற குறிப்பிட்ட பொருட்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.


இதிலுள்ள சவால் என்பது எங்கு பார்க்க வேண்டும் என்பதை அறிவது, பொருளைப் புரிந்துகொள்வது, மற்றும் அதைப் பிரச்சினைக்கு பயன்படுத்துவது ஆகும். உதாரணமாக, ஒரு அறிவியல் கட்டுரையில், உண்மைகள் உங்கள் முன்னால் இருக்கலாம், ஆனால் உண்மையான சோதனை என்பது அவற்றை ஒன்றிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே ஆகும். இந்தத் தேர்வுகள் மாணவர்கள் வெறுமனே அவற்றை மீண்டும் சொல்வதற்குப் பதிலாக, யோசனைகளை திறம்பட விளக்க முடியுமா என்பதை மதிப்பிடுகின்றன.


உலகளவில் ‘திறந்த புத்தகத் தேர்வு’ முறையின் வரலாறு என்ன?


திறந்த புத்தகத் தேர்வுகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஹாங்காங் 1953-ல் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியது.


2004-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் மிங்-யின் சான் மற்றும் குவோக்-வை முய் ஆகியோரால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், முதல் முறையாக திறந்த புத்தகத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அவற்றைப் பற்றி நேர்மறையான கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் ஆழமாகத் தயாராகவில்லை என்பதைக் கண்டறிந்தனர்.


பல மாணவர்கள் கேள்விகளைப் படித்து தேவையான விஷயங்களைக் கண்டுபிடிக்க 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டதாக ஆய்வு காட்டுகிறது. அவர்கள் பெரும்பாலும் பயிற்றுவிப்பாளரின் கையேடுகளுடன் தொடங்கி, பின்னர் ஒன்று அல்லது இரண்டு பாடப்புத்தகங்களுக்குச் சென்றனர். சிலர் விரிவுரையாளரின் குறிப்புகளின் குறுகிய பதிப்புகளை உருவாக்கினர் அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க "தயார் செய்யப்பட்ட மாதிரி" புத்தகங்களைப் பயன்படுத்தினர்.


1951 மற்றும் 1978-ஆம் ஆண்டுக்கு இடையில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் பல்வேறு பல்கலைக்கழக பாடநெறிகளில் திறந்த புத்தகத் தேர்வுகளை சோதித்தன. அவர்கள் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் விரிவுரை குறிப்புகளைப் பயன்படுத்த அனுமதித்தனர். 


Towards Excellence இதழில் மம்தா மற்றும் நிதின் பிள்ளை எழுதிய 2022ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வறிக்கையில், திறந்த புத்தகத் தேர்வுகள் ஒரே மாதிரியான ஒட்டுமொத்த முடிவுகளைக் கொண்டிருந்தன என்று கூறப்பட்டுள்ளது. அவை மாணவர்கள் மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக கருத்துக்களை நன்கு புரிந்துகொள்ள உதவியது. பலவீனமான மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டனர். மேலும், பாரம்பரியத் தேர்வுகளுடன் ஒப்பிடும்போது சோதனைகள் வெவ்வேறு திறன்களை அளவிடுகின்றன.


ஆரம்பகால சோதனைகளுக்குப் பிறகும், முக்கியமான பள்ளித் தேர்வுகளில் திறந்த புத்தகத் தேர்வுகள் இன்னும் அசாதாரணமான நிலையில் உள்ளது. இங்கிலாந்தின் GCSEகள் அல்லது US SATகள் போன்றவை மூடிய புத்தகத் தேர்வு முறைகளைப்  பயன்படுத்துகின்றன.


கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், இது சிறிது காலத்திற்கு மாறியது. பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் திறந்த புத்தகத் தேர்வு திறந்த வலைத் தேர்வுகளை அறிமுகப்படுத்தின. ஆனால் அவர்கள் இந்த முறைக்கு பழக்கப்படாததால் பல மாணவர்கள் முதலில்  கடினமாக இருப்பதாக உணர்ந்தனர்.


இந்தியாவில் திறந்த புத்தகத் தேர்வு ஒரு புதிய கருத்தா?


2014-ஆம் ஆண்டில், CBSE திறந்த உரை அடிப்படையிலான மதிப்பீட்டை (Open Text-Based Assessment (OTBA)) அறிமுகப்படுத்தியது. இது மனப்பாடம் செய்வதைக் குறைக்கும். இது 9-ஆம் வகுப்பு இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கும், 11-ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளுக்கும் பொருளாதாரம், உயிரியல் மற்றும் புவியியல் போன்ற பாடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. தேர்வுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாணவர்கள் குறிப்புப் பொருட்களைப் பெற்றனர்.


2017-18 வாக்கில், CBSE OTBA-ஐ நிறுத்தியது. அதன் முக்கிய நோக்கமான திறன்களை வளர்க்க உதவவில்லை என்று கூறியது.


கல்லூரிகளில் திறந்த புத்தகத் தேர்வுகள் மிகவும் பொதுவானவை. 2019-ஆம் ஆண்டில், ஒரு நிபுணர் குழு பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளில் அவற்றின் பயன்பாட்டை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அங்கீகரித்தது.


தொற்றுநோய் காலத்தில், டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் திறந்த புத்தகத் தேர்வுகளைப் பயன்படுத்தின. IIT டெல்லி, IIT இந்தூர் மற்றும் IIT பம்பாய் ஆகியவையும் அவற்றை இணைய வழியில் நடத்தின.


டெல்லி பல்கலைக்கழகம் தனது முதல் திறந்த புத்தகத் தேர்வை ஆகஸ்ட் 2020-ல் நடத்தியது. இத்தேர்வுகளை கடைசியாக மார்ச் 2022-ல் நடத்தியது. இது ஜனவரி 2022-ல் உடல் தகுதித் தேர்வுகளுக்குத் திரும்பியது. ஆனால், நவம்பர் 2021-ல் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலும் ஒரு சுற்று அனுமதித்தது.


சமீபத்தில், கேரளாவின் உயர்கல்வி சீர்திருத்த ஆணையம், உள் அல்லது நடைமுறைத் தேர்வுகளுக்கு மட்டுமே திறந்த புத்தகத் தேர்வுகளைப் பயன்படுத்த பரிந்துரைத்தது.


‘திறந்த புத்தகத் தேர்வு’ முறைகளை பற்றி ஆராய்ச்சி என்ன சொல்கிறது?


2000-ஆம் ஆண்டு நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், திறந்த புத்தகத் தேர்வுகள் (OBEs) எழுதும் மாணவர்கள் குறிப்புகளை நினைவில் கொள்வதைவிட அவர்களின் சொந்த கருத்துக்களை இணைப்பதே அதிக வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டது. இந்த வடிவம் ஒரு புத்தகத்தில் சரியான பக்கத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக ஆழமான சிந்தனையை ஊக்குவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


புவனேஸ்வரில் உள்ள AIIMS-ல், மருத்துவ மாணவர்கள் திறந்த புத்தகத் தேர்வு முறைகளின்போது குறைவான மன அழுத்தத்தை உணர்ந்ததாக ஆராய்ச்சி காட்டுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டு 98 மாணவர்களை உள்ளடக்கிய இந்தியாவை தளமாகக் கொண்ட மற்றொரு இணையவழி முன்னோடி ஆய்வில், 78.6% பேர் தேர்ச்சி பெற்றனர். கருத்து தெரிவித்த 55 பேரில், பெரும்பாலானவர்கள் இந்த வடிவம் "மன அழுத்தம் இல்லாதது" என்று கூறினர், ஆனால், பலர் மோசமான இணைய வசதியை ஒரு பெரிய பிரச்சனையாகக் குறிப்பிட்டனர்.


டெல்லி பல்கலைக்கழகத்தில், தனஞ்சய் ஆஷ்ரி மற்றும் பிபு பி. சாஹூ ஆகியோரின் ஆய்வில், தேவையான திறன்களில் சிறப்பு பயிற்சி இல்லாவிட்டாலும், திறந்த புத்தகத் தேர்வு முறைகளில் மாணவர்கள் சிறப்பாக மதிப்பெண் பெற்றதைக் கண்டறிந்தனர். நிர்மா பல்கலைக்கழகத்தில் மம்தா மற்றும் நிதின் பிள்ளை ஆகியோரின் ஆராய்ச்சி, உண்மையான முன்னேற்றத்திற்கு குறிப்பிட்ட பயிற்சி தேவை என்று பரிந்துரைத்தது. விடைகளைத் தேடுவதற்குப் பதிலாக, ஒரு கேள்வியைப் புரிந்துகொள்வது, கருத்துகளை பகுப்பாய்வு செய்வது மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்பதை மாணவர்களுக்குக் கற்பிப்பது போன்றவை இதில் அடங்கும்.


CBSE இப்போது ‘திறந்த புத்தகத் தேர்வு’ முறைக்கு ஒப்புதல் அளிப்பது ஏன்?


இந்த மாற்றம் பள்ளிகள் மாணவர்களை சோதிக்கும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாகும்.


தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 திறந்த புத்தகத் தேர்வுகளை குறிப்பாகக் குறிப்பிடவில்லை. ஆனால், கருத்துக்களை மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி, திறன்கள் மற்றும் புரிதலில் அதிக கவனம் செலுத்த பரிந்துரைக்கிறது. மாணவர்கள் கருத்துக்களைக் கற்றுக்கொள்வது, விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் அந்த அறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்குவதே இதன் நோக்கம்.


பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பும் (National Curriculum Framework for School Education (NCERT)) இதை ஆதரிக்கிறது. தற்போதைய தேர்வுகள் முக்கியமாக நினைவாற்றலைச் சோதிக்கின்றன, சில சமயங்களில் மாணவர்களிடையே பயத்தை உருவாக்குகின்றன என்று அது கூறுகிறது. இதை மேம்படுத்த, வெவ்வேறு கற்றல் பாணிகளுக்கு ஏற்ற, பயனுள்ள கருத்துக்களை வழங்க மற்றும் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவும் தேர்வு முறைகளை இது பரிந்துரைக்கிறது.



Original article:

Share:

மண் வளத்தை மீட்டெடுக்க இந்தியா பழுப்புப் புரட்சி 2.0யை மேற்கொள்ள வேண்டும். -முரளி கோபால், அல்கா குப்தா

 பால்பண்ணைத் துறையில் அமுலின் முன்மாதிரியைப் பின்பற்றி, பரவலாக்கப்பட்ட, கிராமப்புற கூட்டுறவு முறையைப் பயன்படுத்தி, பண்ணைக் கழிவுகளை மண்ணை மேம்படுத்தும் கரிமப் பொருட்களாக மாற்ற வேண்டும்.


வேளாண் கழிவுகளை நிர்வகிப்பதில் இந்தியா ஒரு பெரிய சிக்கலை எதிர்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும், நாடு 350-500 மில்லியன் டன்களை உற்பத்தி செய்கிறது. இந்தக் கழிவுகளில் பெரும்பாலானவை எரிக்கப்படுகின்றன அல்லது தவறான முறையில் அழுக விடப்படுகின்றன.  இதனால் கடுமையான காற்று மாசுபாடு, பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் மண்ணில் கரிம கார்பன் இழப்பு ஏற்படுகிறது. பால் துறையில் அமுல் கூட்டுறவு நிறுவனத்தின் வெற்றியிலிருந்து கற்றுக்கொண்டு, வேளாண் கழிவுகளை உரம், மண்புழு உரம் மற்றும் பயோகரி போன்ற மண்ணை வளப்படுத்தும் பொருட்களாக மாற்ற இந்தியா ஒரு பரவலாக்கப்பட்ட கிராமப்புற கூட்டுறவு மாதிரியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஹிராலால் சவுத்ரி தொடங்கிய முதல் பழுப்புப் புரட்சி, விசாகப்பட்டினத்தின் பழங்குடிப் பகுதிகளில் தோல் மற்றும் காபியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது. பழுப்புப் புரட்சி 2.0 இந்தியாவின் மண் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நீண்டகால உணவு உற்பத்தியைப் பராமரிக்கவும், கிராமப்புற வேலைகளை உருவாக்கவும், உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக இந்தியாவின் காலநிலை இலக்குகளை ஆதரிக்கவும் உதவும். AI அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் கார்பன் வரவு திட்டங்களைப் பயன்படுத்துவது செயல்முறையை திறமையானதாகவும், வெளிப்படையானதாகவும், பொருளாதார ரீதியாக நிலையானதாகவும் மாற்றும்.





மண் வளம் குறையும்


இந்தியாவின் மண் வளம் கடந்த பத்தாண்டுகளாக குறைந்து வருகிறது. முக்கியமாக மண்ணில் உள்ள இயற்கை கரிம அளவு குறைந்துள்ளதால், இந்த சரிவு அதிக உள்ளீடு, தீவிர விவசாயம் மற்றும் ஒற்றைப் பயிர் சாகுபடியுடன் தொடங்கியது. இந்தியாவின் பெரும்பாலான வேளாண் நிலங்களில் இப்போது நீண்டகால உற்பத்தித்திறனுக்குத் தேவையான அளவைவிட குறைவான கரிமப் பொருட்கள் உள்ளன என்று ஆராய்ச்சி காட்டுகிறது.


இதைத் தீர்க்க, ஒரு தேசிய இயக்கமாக "பழுப்புப் புரட்சி 2.0" பரிந்துரைக்கப்படுகிறது. வயல் பயிர்கள் (அரிசி, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி மற்றும் கரும்பு போன்றவை), தோட்டக்கலை (காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் கிழங்குகள்), எண்ணெய் வித்துக்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் (தேங்காய், பாக்கு, எண்ணெய், பனை, தேயிலை மற்றும் காபி போன்றவை) ஆகியவற்றிலிருந்து அதிக அளவு பயிர் எச்சங்கள் மற்றும் வேளாண் கழிவுகளை மறுசுழற்சி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். நிலையான விவசாயத்தை மீட்டெடுக்க இந்தக் கழிவுகளிலிருந்து வரும் கரிம உள்ளடக்கம் மீண்டும் மண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படும்.


அமுல் போன்ற கூட்டுறவு மாதிரியைப் பயன்படுத்த இந்த திட்டம் பரிந்துரைக்கிறது. இது அமைப்பை உள்ளடக்கியதாக மாற்றும் மற்றும் உள்ளூர் பகுதிகளிலிருந்து தேசிய அளவில் விரைவாக வளர அனுமதிக்கும்.


வேளாண் கழிவுகள் மற்றும் ஆபத்துகள்


இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 முதல் 990 மில்லியன் டன் பயிர் எச்சங்கள் மற்றும் விவசாயக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. பல மாவட்டங்களில், இந்தக் கழிவுகளில் 40%-க்கும் அதிகமானவை பழங்கள், காய்கறிகள் மற்றும் பிரதான பயிர்களிலிருந்து வருகின்றன. சில தோட்டக்கலைப் பகுதிகளில், இது 70% வரை அடையலாம்.


தற்போது, இந்த உயிரியலில் 20%-க்கும் குறைவானது முறையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட முறையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவை வெளிப்படையாக எரிக்கப்படுகின்றன, கொட்டப்படுகின்றன அல்லது நிர்வகிக்கப்படாமல் விடப்படுகின்றன. இது மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் மற்றும் கரிமங்களை இழக்க வழிவகுக்கிறது. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.


தோட்டப் பயிர் கழிவுகள் மற்றொரு வகை கழிவுகள் ஆகும். இது மிக மெதுவாக உடைந்து நீண்ட காலத்திற்கு உருவாகலாம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களை உருவாக்குகின்றன.


வேளாண் கழிவுகளை மோசமாக நிர்வகிப்பதால் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுகிறது. வட இந்தியாவில், விவசாயிகள் பெரும்பாலும் மீதமுள்ள பயிர் எச்சங்களை எரிக்கின்றனர்.  இது நுண்ணிய துகள் பொருள் (PM2.5), விஷ வாயுக்கள் மற்றும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் போன்ற அதிக அளவு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியிடுகிறது.


உதாரணமாக, ஒரு டன் நெல் வைக்கோலை எரிப்பதால் சுமார் 3 கிலோ துகள் பொருள், 60 கிலோ கார்பன் மோனாக்சைடு மற்றும் 1,460 கிலோ கார்பன் டை ஆக்சைடு, சிறிய அளவு சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு உற்பத்தியாகிறது.


கழிவு நீர்நிலைகளில் சேரும்போது, அது யூட்ரோஃபிகேஷனை ஏற்படுத்துகிறது. [யூட்ரோபிகேஷன் (Eutrophication) என்பது நீர்நிலைகளான ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றில் அதிகப்படியான நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ், குவிந்து, நீரின் தரத்தை பாதிக்கும் ஒரு செயல்முறையாகும். இது பொதுவாக விவசாய நிலங்களில் இருந்து வரும் உரங்கள், கழிவுநீர், அல்லது கழிவு கிடங்குகளில் இருந்து வெளியேறும் நீர் ஆகியவற்றால் நீர்நிலைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது]. அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த மாசுபாடு காற்று மற்றும் நீர் இரண்டையும் பாதிக்கிறது. கிராமப்புற சுகாதாரம், பொருளாதாரத்தை சேதப்படுத்துகிறது மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறது.





கொள்கை கவனம் ஏன் மாற வேண்டும்?


தற்போதைய கொள்கைகள் வேளாண் கழிவுகளை உயிரி எரிபொருள்கள் அல்லது மதிப்புமிக்க உயிர்வேதியியல் பொருட்களுக்கான தொழில்துறைப் பொருளாகப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கரிமக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் முக்கியப் பங்கை அவை பெரும்பாலும் கவனிக்கவில்லை.


வேளாண் கழிவுகளை அதிக மதிப்புள்ள தொழில்துறை பொருட்களாக மாற்றுவது விரைவான பொருளாதார நன்மைகளைத் தரும். ஆனால் கழிவுகளின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இதற்கு ஏற்றது. இந்த அணுகுமுறை மண்ணை மேம்படுத்தப் பயன்படுத்தக்கூடிய கரிமப் பொருட்களையும் எடுத்துக்கொள்ளும்.


மண்ணில் இயற்கை கரிம இழப்பு எதிர்கால பயிர் விளைச்சலைக் குறைக்கிறது. வேளாண்மையின் முறையை அச்சுறுத்துகிறது, கிராமப்புற வருமானத்தைக் குறைக்கிறது மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு மதிப்பு சேர்க்கும் வாய்ப்புகளைத் துண்டிக்கிறது. நீண்டகாலத்திற்கு, மண்வளம் புறக்கணிக்கப்பட்டால், வேளாண் கழிவுகளின் தொழில்துறை பயன்பாடுகூட தோல்வியடையும். 


அமுல் மாதிரி


பால்வளத் துறையில் அமுலின் வளர்ச்சி, பழுப்புப் புரட்சி 2.0-ஐ வளர்ப்பதற்கு ஒரு நல்ல உதாரணத்தை வழங்குகிறது.


அமுல் கிராம அளவிலான பால் உற்பத்தியாளர்களை, உறுப்பினர்களுக்குச் சொந்தமான இலாபப் பகிர்வு அமைப்பாக ஒன்றிணைத்தது. இந்த அமைப்பு உள்ளூர் மக்களை பங்கேற்க அனுமதித்தது. அதே நேரத்தில் பெரிய அளவிலான செயல்பாடுகளிலிருந்து பயனடையவும் அனுமதித்தது.


வேளாண் கழிவு மறுசுழற்சிக்கும் இதேபோன்ற அணுகுமுறையைப் பயன்படுத்தலாம். உள்ளூர் மறுசுழற்சி கூட்டுறவு நிறுவனங்கள் உரம், மண்புழு உரம் மற்றும் உயிரிக்கரி போன்ற பொருட்களை சேகரித்து, அறிவியல் ரீதியாக செயலாக்கி, சந்தைப்படுத்தலாம். இந்த உற்பத்தியில் பெரும்பகுதியை உள்ளூர் மண்ணுக்குத் திருப்பி அனுப்பலாம், மேலும் கூடுதல் பொருட்களை சந்தையில் விற்கலாம்.


தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் (எஸ்ஏயூக்கள்) மற்றும் கிரிஷி விக்யான் கேந்திரங்கள் (கேவிகேக்கள்) போன்ற நிறுவனங்கள் வழங்கலாம். இதில் கிராமப்புற தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாடு முழுவதும் உட்பொதிக்கப்பட்டிருக்கும். கூட்டுறவு அமைப்புகள், பகிரப்பட்ட நிதி, தரக் கட்டுப்பாடு மற்றும் தயாரிப்புக் கண்காணிப்பை நிர்வகிக்கும்.


அறிவியல் முன்னேற்றங்கள், AI ஒருங்கிணைப்பு


புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த மாதிரி மிகவும் பயனுள்ளதாகவும் திறமையாகவும் மாற முடியும்.


விரைவான உரமாக்கல், மேம்படுத்தப்பட்ட மண்புழு உரமாக்கல் மற்றும் மட்டு உயிரிசார் அலகுகள் மக்கள் இந்த முறையைப் பின்பற்றுவதையும் உயர்தர மண் திருத்தங்களை உருவாக்குவதையும் எளிதாக்குகின்றன.


செயற்கை நுண்ணறிவு மற்றும் IoT தளங்களைப் பயன்படுத்துவது மண்ணின் ஆரோக்கியத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், உரம் உற்பத்தியை மேம்படுத்தவும், உயிரி பொருட்களின் இயக்கத்தை மிகவும் திறம்பட திட்டமிடவும் உதவுகிறது.


இந்த தரவு சார்ந்த முறைகள் கார்பன் கடன் திட்டங்களுக்கான வெளிப்படையான கண்காணிப்பையும், தயாரிப்பு தரத்தை உறுதி செய்வதையும், விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் ஆலோசனை மற்றும் கருத்துக்களை வழங்குவதையும் அனுமதிக்கின்றன.


பிரவுன் புரட்சி 2.0 தேசிய விவசாய முன்னுரிமைகளுடன் பொருந்த வேண்டும் மற்றும் சமீபத்திய நிபுணர் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும்.


ICAR மற்றும் NAAS ஆகியவை பண்ணைக் கழிவுகளை பிராந்திய-குறிப்பிட்ட மறுசுழற்சி செய்தல், உரமாக்கல் மையங்கள் அல்லது கூட்டுறவுகளை அமைத்தல் மற்றும் மண்ணின் கரிம கார்பனில் நிரூபிக்கப்பட்ட அதிகரிப்புகளின் அடிப்படையில் சலுகைகளை வழங்குதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.


"வேளாண் கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்குதல்" போன்ற அரசாங்க வழிகாட்டிகள், சோதிக்கப்பட்ட மற்றும் அளவிடக்கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை விவரிக்கின்றன, அவற்றில் பல கூட்டுறவு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன.


கொள்கை பரிந்துரைகள்


பழுப்புப் புரட்சி 2.0 ஐ அடைய, ஒவ்வொரு விவசாய மாவட்டத்திலும் கூட்டுறவு அடிப்படையிலான வேளாண் கழிவு சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் அலகுகளுக்கு வலுவான விதிகள் மற்றும் சரியான நிதியுதவி கொள்கையில் இருக்க வேண்டும். உழவர்கள் உயிரிப்பொருட்களைச் சேகரித்து செயலாக்குவதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைப் போன்ற பொருளாதார நன்மைகளைப் பெற வேண்டும். சிறிய உரம் தயாரித்தல் மற்றும் உயிரி கரி அலகுகளுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் அவற்றின் மேலாண்மை KVK மற்றும் வேளாண் விரிவாக்கத் திட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். திறந்தவெளி எரிப்பு மற்றும் கவனக்குறைவான கழிவுகளை அகற்றுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டும். சிறந்த மாற்று வழிகளைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு சரியான ஆதரவு வழங்கப்பட வேண்டும்.


இந்திய மற்றும் சர்வதேச காலநிலை நிதிகளைப் பயன்படுத்தி மண்ணில் கார்பனை சேமித்து வைப்பதற்காக விவசாயிகளுக்கு தேசிய கரிம கார்பன் கடன் பதிவேடு வெகுமதி அளிக்க வேண்டும். AI அடிப்படையிலான கண்காணிப்பு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டும். வேளாண் கழிவு மறுசுழற்சி மண் சுகாதார அட்டை திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். விழிப்புணர்வு திட்டங்களுடன் விவசாயிகளுக்கு அவர்களின் மண் நிலை மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட உரத்தின் நன்மைகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.


ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் மற்றும் உழவர்களின் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி திறமையான தொழிலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.


இராஜதந்திர நன்மைகள்


பழுப்புப் புரட்சி 2.0, மண் ஆரோக்கியத்தையும் வளத்தையும் மீட்டெடுப்பதையும், மண் அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்கவைக்க உதவுவதையும், நீண்டகாலத்திற்கு பயிர் விளைச்சலை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வறட்சி மற்றும் வெள்ளங்களுக்கு வேளாண்மையை மேலும் தாங்கும் திறன் கொண்டதாக மாற்றும்.


சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் மில்லியன் கணக்கான கிராமப்புற வேலைகளை உருவாக்கும். இது உழவர்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் விலையுயர்ந்த உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.


சுற்றுச்சூழல் ரீதியாக, இது பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம், நீர் தரம் மற்றும் பல்லுயிரியலை மேம்படுத்தலாம் மற்றும் காலநிலை தொடர்பான நன்மைகளுக்கான இந்தியாவின் வாதத்தை வலுப்படுத்தலாம்.


தொழில்நுட்பரீதியாக, நிலையான வேளாண்மைத் தரவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முன்னணி எடுத்துக்காட்டாக இது செயல்படும்.


நிலைத்தன்மை, சமூக உள்ளடக்கம்


சுருக்கமாக, பழுப்புப் புரட்சி 2.0, உள்ளூர், உள்ளடக்கிய மற்றும் கூட்டுறவு முயற்சிகள் மூலம் விவசாயக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உரத்தை இந்திய மண்ணில் மீண்டும் சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இது ஒரு சிறிய அல்லது எளிதான கொள்கைத் தேர்வல்ல. ஆனால், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு கிராமப்புற செழிப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான மற்றும் நீண்டகால உத்தி. இந்த இயக்கத்திற்கு முன்னுரிமை அளித்து அதை விரிவுபடுத்துவதற்கு வலுவான தேசியத் தலைமை தேவை. அவ்வாறு செய்வதன் மூலம், அறிவியல் நிலைத்தன்மையை சமூக உள்ளடக்கத்துடன் இணைப்பதில் இந்தியா மீண்டும் ஒரு உலகளாவிய முன்மாதிரியை அமைக்க முடியும்.


முரளி கோபால் வேளாண் நுண்ணுயிரியலில் முதன்மை விஞ்ஞானியாகவும், உடலியல், உயிர்வேதியியல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடு தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.


அல்கா குப்தா கேரளாவின் காசர்கோட்டில் உள்ள ஐசிஏஆர்-மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் நுண்ணுயிரியலில் முதன்மை விஞ்ஞானியாக உள்ளார்.



Original article:

Share: