பீகாரைச் சேர்ந்த ஒரு குடிமகன் தங்கள் மாநிலத்தில் வாக்களிப்பதும், மகாராஷ்டிரா அல்லது கேரளாவில் வாக்களிப்பதும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும்.
பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) புலம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படலாம் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது. பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு முக்கிய மாநிலங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த இடம்பெயர்வு நாடு முழுவதும் தெரியும். கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இது குறிப்பாகத் தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும், இந்த இடம்பெயர்வை பதிவு செய்ய அதிக அதிகாரப்பூர்வ தரவு இல்லை. கடைசி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-ஆம் ஆண்டில் நடந்தது. 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்த 15 ஆண்டுகளின் இந்த இடம்பெயர்வு முறைகளைப் (migration patterns) பதிவு செய்யும். ஆனால், மக்கள் எங்கு செல்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் மாற்றுத் தரவுத் (Proxy data) தொகுப்புகள் மற்றும் சமீபத்திய மாதிரி ஆய்வுகள் உள்ளன.
பீகார் மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதே சிறப்பு தீவிர திருத்த நோக்கங்களில் ஒன்றாக இந்திய தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. இடம்பெயர்ந்தோர் வாக்களிக்கும் உரிமைகள் குறித்த கவலை தவறானது. இடம்பெயர்ந்தோர் எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு அல்ல. தற்போது, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வாக்களிக்க வேண்டும். பீகாரின் சிறப்பு தீவிர திருத்தம் என்பது குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தின் அடிப்படையில் யார் எங்கு வாக்களிக்கலாம் என்பதைக் கண்டறியும் ஒரு சோதனையாகும். மக்கள்தொகை கணக்கியல் (demographic accounting) மற்றும் பொறியியல் இரண்டிலும் இந்த சோதனை பீகாரை மாநில தேர்தலைவிட பல்வேறு அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும்.
தொகுதிகளின் மக்கள்தொகை அமைப்பை மாற்றுவது தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு வழியாகும். பீகாரைச் சேர்ந்த ஒரு குடிமகன் பீகாரில் வாக்களிப்பதும், மகாராஷ்டிரா அல்லது கேரளாவில் வாக்களிப்பதும் தேசிய அரசியலில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். வசிப்பிடம் மற்றும் வாக்களிப்பு தொடர்பான சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மக்கள்தொகை மாற்றங்களின் அரசியல் தாக்கத்தை விரைவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது.
மக்கள்தொகை அதிகமான இடங்களிலிருந்து குறைவான இடங்களுக்கு நகர்கிறார்கள்; மேலும், அவர்கள் மோசமான பொருளாதார வாய்ப்புள்ள இடங்களிலிருந்து சிறந்த வாய்ப்புள்ள இடங்களை நோக்கி நகர்கிறார்கள். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை அந்த நேரத்தில் எங்கு, எத்தனை பேர் இடம்பெயர்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய மாற்றுத் தரவுகளும் (Proxy data) இதை ஆதரிக்கின்றன. சரியான எண்கள் நமக்குத் தெரியாவிட்டாலும், மக்கள் எங்கு செல்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்பதற்கான பொதுவான போக்கைப் புரிந்துகொள்ள இந்தத் தரவு நமக்கு உதவுகிறது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) அறிக்கையின்படி, முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணத்திலிருந்து முதல் குறிப்பு வருகிறது. இந்த ஆய்வறிக்கையில் ஒரு பின்னடைவு பகுப்பாய்வு, முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணத்திற்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பைக் காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவிற்கு முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளுடன் வரும் பயணிகளின் எண்ணிக்கையை, அவர்களின் புறப்படும் நிலையங்களின் அடிப்படையில் காட்டுகிறது. மாநிலத்தின் எல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் இந்த முறையைப் பயன்படுத்தி எல்லையைக் கடக்கிறார்கள். அதே, நாளில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, எல்லையைப் பகிர்ந்துகொள்ளாத மாநிலங்களுக்கு இடையிலான முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணம் இடம்பெயர்வுக்கு வலுவான மாற்றாக மாறுகிறது. முன்பதிவு செய்யப்படாத பயணசீட்டுகளைக் கொண்ட பயணிகளில் 50% பேர் மகாராஷ்டிராவிலிருந்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து 12.3% பேர் குஜராத்திலிருந்தும் 5.4% பேர் கர்நாடகாவிலிருந்தும் வருகிறார்கள் - இரண்டும் (விளக்கப்படம் 1-ல்) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிற்கு இடம்பெயர்ந்தோரை அனுப்பும் முதல் ஐந்து மாநிலங்களில் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளன. ஒவ்வொன்றும் மொத்த இடம்பெயர்ந்தோரில் 7%-க்கும் அதிகமாக உள்ளனர்.
மற்றொரு அளவீடு சேமிப்புக் கணக்கு இருப்புகளுக்கும் நடப்புக் கணக்கு இருப்புகளுக்கும் உள்ள விகிதமாகும். ஒரு நடப்புக் கணக்கு, பொதுவாக வணிகங்களால் இயக்கப்படுவது, சேமிப்புக் கணக்கு அளிக்காத அம்சங்களை வழங்குகிறது. குறைந்த சேமிப்பு-நடப்புக் கணக்கு விகிதங்களைக் கொண்ட மாவட்டங்கள் பொதுவாக இடம்பெயர்ந்தோரை ஈர்க்கும் உயர் பொருளாதார செயல்பாடுகளைக் கொண்ட நகரங்களாகும். எடுத்துக்காட்டாக, மும்பை (0.56), டெல்லி (2.24) மற்றும் பெங்களூரு (2.21) ஆகியவை தேசிய சராசரியான 3.72-ஐ விட மிகக் குறைந்த விகிதங்களைக் கொண்டுள்ளன.
இதற்கு நேர்மாறாக, ஒப்பீட்டளவில் அதிக சேமிப்பு-நடப்புக் கணக்கு (savings-to-current account) விகிதங்களைக் கொண்ட நகரங்கள் வரையறுக்கப்பட்ட பொருளாதார செயல்பாடுகளைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் பல மாவட்டங்கள் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளன. இது சாத்தியமான வெளியேற்ற இடப்பெயர்வைக் குறிக்கிறது. வரைபடம் 2, 2017-18 முதல் 2022-23 வரை சேமிப்புக் கணக்கு வைப்புகளுக்கும் நடப்புக் கணக்கு வைப்புகளுக்கும் உள்ள மாவட்ட அளவிலான சராசரி விகிதத்தைக் காட்டுகிறது. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பல தெற்கு தலைநகரங்களும், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற தொழில்துறை மையங்களும் நீல நிறத்தில் தனித்து நிற்கின்றன. இது சாத்தியமான உள்நுழைவு இடப்பெயர்வைக் (in-migration) குறிக்கிறது.
2024ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் ஆய்வில், சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி ஆய்வு செய்தது. இந்த தொழிலாளர்களில் 35% பேர் பீகாரிலிருந்தும், 20% பேர் ஒடிசாவிலிருந்தும், 16% பேர் வடகிழக்கிலிருந்தும் வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.(படம் 3).
மற்றொரு தரவுத் தொகுப்பும் இதே போக்கைக் காட்டுகிறது. தொற்றுநோய் ஊரடங்கின்போது, பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் செய்தனர். பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த பகுப்பாய்வு, தமிழ்நாட்டிலிருந்து வெளியேறும் பெரும்பாலான (30%) பயணிகள் பீகார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டதை காட்டுகிறது.
பீகாரில் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் பயிற்சி பற்றி என்ன தரவு காட்டுகிறது
இந்த இடம்பெயர்ந்த மக்கள் ஒரு படிப்படியான செயல்முறையின் மூலம் தாங்கள் குடியேறும் மாநிலங்களில் (host States) நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறுகிறார்கள். ஆனால், வசிப்பிட விதி அமலாக்கம் இந்த செயல்முறையை துரிதப்படுத்தக்கூடும். அரசியல் தன்மை மற்றும் தேர்தல் இயக்கவியல் மக்கள்தொகையின் மாறும் அமைப்புக்கு ஏற்ப பதிலளிக்கிறது. டெல்லி மற்றும் மும்பையில், இந்தி பேசும் பகுதியிலிருந்து வரும் இடம்பெயர்ந்தோர் இப்போது ஒரு தீர்மானகரமான அரசியல் தொகுதியாக உள்ளனர். மேலும், கட்சிகள் அதற்கேற்ப பதிலளிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராச்சியத்திலும், அதிகமான இந்திய மக்கள் அங்கு இடம்பெயர்ந்ததால், இந்திய பின்னணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெற்றனர். பீகார் சிறப்பு தீவிர திருத்த அரசியல், பீகார் மாநில எல்லைகளைத் தாண்டி பல்வேறு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆதாரம்: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) அறிக்கை மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழு.