விநியோகங்கள் PM-KISAN போர்ட்டலில் சரிபார்க்கப்பட்ட தரவுகளுடன் இப்போது பணம் செலுத்துதல் கண்டிப்பாக இணைக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கும் தகுதியற்ற பெறுநர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுப்பதற்கும் இது பொறுப்பாகும்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, PM-KISAN திட்டத்தின் கீழ் 19 தவணைகளில் ₹3.68 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. அவை, இந்த திட்டத்திற்கான நன்மைகள் உண்மையிலேயே, தேவைப்படும் விவசாயிகளைச் சென்றடைகிறதா? இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) பிப்ரவரி 2019-ல் தொடங்கப்பட்டது. இது சாகுபடி செய்யக்கூடிய நிலங்களைக் கொண்ட தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 வழங்குகிறது. ஆதார்-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் நேரடி பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT) மூலம் பணமானது மூன்று சம தவணைகளில் செலுத்தப்படுகிறது. ஆரம்பத்தில், சேர்க்கை விகிதத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருந்தது. இருப்பினும், சமீபத்திய போக்குகள் மிகவும் சிக்கலான மற்றும் சீரற்ற வடிவத்தைக் காட்டுகின்றன.
எழுச்சி மற்றும் சரிவு (The Surge and Decline)
இந்தத் திட்டம் வலுவாகத் தொடங்கியது. இரண்டாவது தவணையில் (ஏப்ரல்–ஜூலை 2019) பயனாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியது. இது 90% அதிகரித்து, 6 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளை எட்டியது. அடுத்த இரண்டு தவணைகளில், சேர்க்கை விகிதம் 8 கோடியைத் தாண்டியது. 2020-ம் ஆண்டின் நடுப்பகுதியில், இது 9 கோடியைத் தாண்டியது. இந்த வேகமான வளர்ச்சி, குறிப்பாக தொற்றுநோய்க்கு முன்பு, ஆதார் அடிப்படையிலான தளங்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பின் ஆதரவுடன், அரசாங்கத்தின் தீவிர செயல்பாட்டுத் திறனைக் காட்டியது.
PM-KISAN 2022-ம் ஆண்டின் நடுப்பகுதியில் (ஏப்ரல்–ஜூலை) 10.48 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நிதியைப் பெற்றதன் மூலம் அதன் எல்லா நேரங்களிலும் இல்லாத உச்சத்தை எட்டியது. இது இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது கிராமப்புற குடும்பத்தையும் உள்ளடக்கியது. இருப்பினும், 12-வது தவணையிலிருந்து (ஆகஸ்ட்–நவம்பர் 2022) எண்ணிக்கை விரைவாகக் குறைந்தது. பயனாளிகள் ஒரு சுழற்சியில் 10.48 கோடியிலிருந்து 8.57 கோடியாகக் குறைந்தது, இது 18.3% சரிவாக உள்ளது.
இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சரிவு அல்ல. அடுத்த பல சுழற்சிகளில், பயனாளிகளின் எண்ணிக்கை 8.1 முதல் 8.5 கோடி வரை இருந்தது. இதன் போக்கு, 16வது தவணையில் (டிசம்பர் 2023-மார்ச் 2024) மட்டுமே, 9.04 கோடியாக உயர்ந்தது. இந்த அதிகரிப்பு, நவம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்ட தீவிர செறிவூட்டல் இயக்கத்தின் சார்பாக, இது 1.5 கோடி புதிய தகுதியுள்ள விவசாயிகளைச் சேர்த்தது.
சரிபார்ப்பு மற்றும் விலக்கு (Verification and Exclusion)
கடுமையான டிஜிட்டல் சரிபார்ப்பு செயல்முறைகள் காரணமாக பயனாளிகளின் எண்ணிக்கை மாறுகிறது என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செயல்முறைகளில் ஆதார் இணைப்பு, கட்டாய eKYC மற்றும் நிலப் பதிவு சரிபார்ப்பு ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கைகள் மோசடியைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை என்று அரசாங்கம் நம்புகிறது. இருப்பினும், அவை அமைப்பில் உள்ள ஆழமான சிக்கல்களையும் வெளிப்படுத்தின. இதுவரை, சலுகைகளைப் பெறத் தகுதியற்றவர்களிடமிருந்து ₹416 கோடி மீட்கப்பட்டுள்ளது. இதில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் திட்டத்தில் தவறாகப் பதிவு செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் அடங்குவர்.
வேளாண் துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் சமீபத்தில் மக்களவையில், மானியங்கள் வழங்குவது PM-KISAN போர்ட்டலில் உள்ள சரிபார்க்கப்பட்ட தரவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பொறுப்பாகும். மேலும், தகுதியற்ற பெறுநர்களிடமிருந்து நிதியை மீட்டெடுக்க வேண்டும்.
PM-KISAN கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. இது கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது மற்றும் வேளாண் பண்ணை உள்ளீடுகளில் முதலீடுகளை அதிகரித்துள்ளது. இது விவசாயிகளின் ஆபத்துகளை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்தியுள்ளது. கூடுதலாக, இந்த திட்டம் விவசாய மற்றும் தற்செயலான செலவுகள் இரண்டையும் ஆதரித்தது. இது PM-KISAN ஐ இந்தியாவின் விவசாய சமூகத்திற்கு ஒரு மாற்றும் திட்டமாக மாற்றியுள்ளது.
டிஜிட்டல் பிளவு
ஆனால், தளத்தில் விவசாயத் தலைவர்கள் ஆதங்கத்துடன் குரல் எழுப்புகின்றனர். இது “ஆண்டுக்கு ₹6,000 என்பது ஒரு பொதுவான அடையாளச் செயலாகும். இது நம் பிரச்சினைகளைத் தீர்க்காது," என்று ஷெட்காரி சங்கதனாவின் தலைவர் மது ஹர்னே கூறினார். மேலும், "நமது தேவை உள்கட்டமைப்பு, சந்தை அணுகல் மற்றும் தொழில்நுட்பம், அதிகாரத்துவ தடைகள் மற்றும் பெயரளவு செயல்பாடுகள் அல்ல," என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 9 கோடி முதல் கிட்டத்தட்ட 15 கோடி விவசாயிகள் உள்ளனர். இருப்பினும், விவசாயிகளில் பலர் PM-KISAN திட்டத்தின் பலன்களைப் பெறுவதில்லை என்று விவசாயிகள் தலைவர்கள் வாதிடுகின்றனர்.
தகுதியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் விடுபட்டுள்ளனர் என்று ஹார்னே சுட்டிக்காட்டினார். மேலும், மோசமான இணைய அணுகல் அல்லது தகுதிக்குத் தேவையான இணையவழிச் செயல்முறைகளை முடிக்க இயலாமை போன்ற டிஜிட்டல் தடைகள் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
பணவீக்கத்திற்கான இணைப்பு
PM-KISAN தவணைத் தொகையை உயர்த்துமாறு பல விவசாய அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன. அவர்கள் அதை பணவீக்கத்துடன் இணைக்க விரும்புகிறார்கள். இந்தக் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் நிலைக்குழு இந்த விவகாரத்தை மதிப்பாய்வு செய்தது. 2024-25ஆம் ஆண்டிற்கான அதன் முதல் அறிக்கையில், PM-KISAN சம்மன் நிதித் தொகையைத் திருத்த ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்று குழு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையிடம் கேட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை அவர்கள் குறிப்பாகக் குறிப்பிட்டனர். PM-KISAN திட்டத்தை பணவீக்கத்துடன் இணைக்க தற்போது எந்த திட்டமும் இல்லை என்று வேளாண் துறையின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.