மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் சமநிலையான செயல்பாடு -அபிஜித் சிங்

 மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் இராஜதந்திரம் எதிர்காலத்தில் மிகவும் முக்கியமானதாக மாறக்கூடும். இருப்பினும், இப்போதைக்கு இது இராஜதந்திர ரீதியாக அல்ல, மாறாக இன்னும் ஈடுபாட்டுடன் உள்ளது.


இந்தியா ஆப்பிரிக்காவுடன் அதன் கடல்சார் நடவடிக்கைகளின் மீதான ஈடுபாட்டை அமைதியாக அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்திய கடற்படை ஆப்பிரிக்கா-இந்தியா முக்கிய கடல்சார் ஈடுபாடு (Africa-India Key Maritime Engagement (AIKEYME)) என்ற புதிய பயிற்சி தான்சானியா கடற்கரையில் தொடங்கியது. இதில் 10 ஆப்பிரிக்க நாடுகளின் கடற்படைகள் ஈடுபட்டன. மேலும், கிட்டத்தட்ட அதே நேரத்தில், இந்தியப் பெருங்கடல் கப்பல் (Indian Ocean Ship (IOS)) சாகர் என்றும் அழைக்கப்படும் INS சுனைனா, மேற்கு இந்தியப் பெருங்கடல் வழியாக ஒரு மாத காலப் பணியமர்த்தலைத் தொடங்கியது. இந்தக் கப்பல் இந்திய மற்றும் ஆப்பிரிக்க பணியாளர்களின் கலவையான குழுவினரை ஏற்றிச் சென்றது. இந்த நடவடிக்கைகள் இந்தியா தனது கடல்சார் இருப்பை விரிவுபடுத்துவதற்கும், பிராந்திய பாதுகாப்பு வழங்குநராக (regional security provider) அதன் பங்கை வலுப்படுத்துவதற்கும், ஆப்பிரிக்காவுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை உருவாக்குவதற்கும் மேற்கொண்ட பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.


இந்த அடையாளங்களுக்குப் பின்னால் உள்ள குறியீடு தெளிவாக உள்ளது. AIKEYME பயிற்சி மற்றும் IOS Sagar ஆகியவை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) "விருப்பமான பாதுகாப்பு கூட்டணியாக" மாறுவதற்கான இந்தியாவின் இலக்கைக் காட்டுகின்றன. அவை, பிரதமர் மோடியின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான (Security and Growth for All in the Region (SAGAR)) தொலைநோக்குப் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பிராந்திய கடல்சார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதையும் உலகளாவிய தெற்கில் இந்தியாவின் தலைமையை எடுத்துக்காட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட புதிய MAHASAGAR கட்டமைப்பையும் அவை பிரதிபலிக்கின்றன.


மொரிஷியஸ், சீஷெல்ஸ், கென்யா மற்றும் மொசாம்பிக் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் IOS சாகரில் இருப்பது, இந்தியா தனிமையில் அல்ல, கூட்டாண்மையில் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவின் நடவடிக்கைகள் வளர்ந்துவரும் கடல்சார் உத்தியைக் காட்டுகின்றன. இந்தியப் பெருங்கடலின் இயக்கவியல் மிகவும் சிக்கலானதாகி வருகிறது. இந்த மாற்றங்கள் பாரம்பரிய பாதுகாப்பு கவலைகள் மற்றும் பாரம்பரியமற்ற சவால்கள் இரண்டாலும் பாதிக்கப்படுகின்றன. இந்த சவால்களில் கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் காலநிலை தொடர்பான இடையூறுகள் ஆகியவை அடங்கும்.


இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த செய்தியை இது அனுப்புகிறது. கடல்சார் அச்சுறுத்தல்கள் குறித்த பகிரப்பட்ட விழிப்புணர்வை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியா தனது கடற்படை அனுபவத்தையும் வழங்குகிறது. இந்தியா ஒரு முக்கியமான கடல்சார் சக்தியாகக் காணப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை அமைப்பதில் ஒத்துழைப்பு, நிலையான இருப்பு மற்றும் தலைமை மூலம் செல்வாக்கை நாடுகிறது.


இருப்பினும், அடையாளம் மற்றும் உத்தியின் வருவாய் எப்போதும் நேர்த்தியாக சீரமைப்பதில்லை. இந்த இராணுவ மற்றும் இராஜதந்திர முயற்சியின்கீழ், இந்த முயற்சி உண்மையில் எதை நோக்கமாகக் கொண்டுள்ளது? என்ற கடினமான கேள்வி உள்ளது. இது ஆப்பிரிக்க கடல்சார் வலிமையை உருவாக்குவது பற்றியதா, அல்லது இது முக்கியமாக மேற்கு இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்த இந்தியாவின் கவலைகளால் இயக்கப்படுகிறதா?


ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் சீனாவின் இருப்பு கணிசமாக வளர்ந்துள்ளது. துறைமுகங்களைக் கட்டுதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை அதிகரிப்பது ஆகியவை இதில் அடங்கும். 2024-ம் ஆண்டில் தான்சானியா மற்றும் மொசாம்பிக்குடன் அதன் அமைதி மற்றும் பாதுகாப்பு பயிற்சிகளைப் போலவே, ஆப்பிரிக்க நாடுகளுடனும் சீனா வழக்கமான கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சிகளில் சீன போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படையினர் ஆப்பிரிக்க இராணுவங்களுடன் இணைந்து பணியாற்றி, வலுவான இராஜதந்திர உறவுகளைக் காட்டுகின்றனர்.


இந்தியா இப்போது இந்த நாடுகளில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், அளவு, நிலையான முதலீடு மற்றும் நிறுவப்பட்ட இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சீனா இன்னும் சாதகமாக உள்ளது. இதற்கு மாறாக, இந்தியா இன்னும் இலக்கை எட்ட முயற்சிக்கிறது.


ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் கடல்சார் ஈடுபாடு மாற்று வழிகளை வழங்குவதற்கான முயற்சியாகும். இந்தியா நம்பகமான கூட்டணி நாடாக இருக்க முடியும் என்பதை ஆப்பிரிக்க நாடுகளுக்கு உறுதியளிப்பதே இதன் நோக்கம் ஆகும். இது, சீனாவின் செல்வாக்கிற்கு சாதகமான எதிர் சமநிலையாகவும் இந்தியா செயல்பட விரும்புகிறது.


இருப்பினும், தரையில் நிலைமை மிகவும் சிக்கலானது. ஆப்பிரிக்க நாடுகள் சித்தாந்த சீரமைப்பு அல்லது புவிசார் அரசியல் கூட்டணிகளில் ஆர்வம் காட்டவில்லை. உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் வர்த்தகத்தைக் கொண்டுவரும் நடைமுறை கூட்டாண்மைகளை அவர்கள் விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில், சீனாவுக்கு ஒரு நன்மை உண்டு. அதாவது, சீனா உறுதியான முடிவுகளை வழங்குவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


இந்தியா, அதன் இராஜதந்திர திறன்களைப் பெற்றிருந்தாலும், சீனாவின் ஈடுபாட்டின் அளவைப் பொருத்த நிதி ஆதாரங்களையோ அல்லது தேவையான நிறுவனங்களையோ இன்னும் கொண்டிருக்கவில்லை.


இந்தியாவின் இராஜதந்திரக் கண்ணோட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த இடைவெளி மிகவும் கவனிக்கத்தக்கது. இந்தியா பெரும்பாலும் தன்னை ஒரு "முதல் பதிலளிப்பவர்" (first responder) அல்லது "நிகர பாதுகாப்பு வழங்குநர்" (net security provider) என்று பார்க்கிறது. இது, இந்தியாவின் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளில் ஒரு பொதுவான யோசனையாகும். இருப்பினும், பல ஆப்பிரிக்க நாடுகள் எப்போதும் இந்தியாவை ஒரே மாதிரியாகப் பார்ப்பதில்லை. அவர்கள் இந்தியாவின் நோக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கிறார்கள். மேலும், பெரும் சக்தியாக போட்டி நிறைந்த நாடுகளில் ஈடுபடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற வலுவான உறவுகளைக் கொண்ட நாடுகளில்கூட, இந்திய ஆதரவு திட்டங்கள் சில நேரங்களில் அரசியல் பின்னடைவை எதிர்கொண்டுள்ளன. மேலும், இராஜதந்திர எல்லை மீறல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.


நிலைத்தன்மை குறித்த பிரச்சினையும் உள்ளது. அதாவது, கடல்சார் இராஜதந்திரம் வளம் நிறைந்தது. இதில், கப்பல்களை நிலைநிறுத்துதல், கூட்டுப் பயிற்சிகளை நடத்துதல் மற்றும் பயிற்சித் திட்டங்களை வழங்குதல் ஆகியவை சுவாரஸ்யமாகத் தோன்றலாம். ஆனால், அவற்றுக்கு குறிப்பிடத்தக்க நேரம், பணம் மற்றும் தளவாடங்கள் தேவை. அரேபிய கடல், வங்காள விரிகுடா மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஏற்கனவே செயல்பாடுகளை நிர்வகிக்கும் ஒரு கடற்படைக்கு, மேற்கு நாடுகளுக்கான இந்த தொடர்பு அதன் திறனை நீட்டிக்கக்கூடும். இதன் நிலைமை என்னவென்றால், இந்த ஈடுபாடுகள் வழக்கமானதாக மாறக்கூடும். இதற்கு தெளிவான உத்திக்கான இலக்கு இல்லாமல், தொடர்ச்சியைப் பராமரிக்க மீண்டும் மீண்டும் செய்யப்படலாம்.


ஆப்பிரிக்க கடற்கரை நாடுகளுடன் ஈடுபடுவதில் இருந்து இந்தியா பின்வாங்கக்கூடாது. உண்மையில், இந்த நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவது முக்கியம். இது நம்பிக்கையை வளர்க்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், பொறுப்பான கடல்சார் நடத்தைக்கான விதிகளை உருவாக்கவும் உதவும். இருப்பினும், இந்த முயற்சி வாக்குறுதிகளை மட்டுமல்ல, யதார்த்தமான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சீனாவின் அணுகுமுறையை பின்பற்ற இந்தியா முயற்சிக்கக்கூடாது. அந்த வழியில் போட்டியிட அதே அளவிலான மையப்படுத்தப்பட்ட நிதி, பெருநிறுவன வலிமை அல்லது உள்கட்டமைப்பு அதற்கு இல்லை. இது புத்திசாலித்தனமான கூட்டாண்மைகளை உருவாக்க முடியும். இவை ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன்கூட இருக்கலாம். ஒன்றாக, அவர்கள் கூட்டுறவு கட்டமைப்புகளை உருவாக்க முடியும். இந்த கட்டமைப்புகள் பிரமாண்டமாக இருக்காது. ஆனால், அவை இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆப்பிரிக்க வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அவை பயனுள்ள மாற்றுகளை வழங்க முடியும்.


இந்தியா தனது செயல்பாட்டை செல்வாக்கு என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும் என்பது மிகவும் முக்கியமான ஆபத்தாகும். ஆப்பிரிக்க கடல்சார் விவகாரங்களில் அதன் வளர்ந்துவரும் இருப்பு உள்நாட்டு விவரிப்புகள் மற்றும் வெளிப்புறக் கருத்துக்களை ஆதரிக்கக்கூடும். இருப்பினும், காணக்கூடியதாக இருப்பது நீண்டகால இராஜதந்திர சக்தியை உருவாக்காது. விநியோகம், நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையால் ஆதரிக்கப்படாவிட்டால், இருப்பு மட்டுமே அதிகாரத்தை சமப்படுத்தாது.


இதேபோல், உலகளாவிய தெற்கு ஒற்றுமை (Global South solidarity) பற்றிய பேச்சு உணர்ச்சி ரீதியாக சக்தி வாய்ந்தது. ஆனால், அது உண்மையான நடவடிக்கையால் ஆதரிக்கப்பட வேண்டும். இந்தியா பிராந்தியத்தை வழிநடத்த விரும்புகிறது. இருப்பினும், அந்தத் தலைமையைப் பராமரிக்கத் தேவையான பொருளாதார மற்றும் நிறுவன ஆதரவைவிட அதன் முயற்சிகள் இன்னும் அதிகமாக உள்ளது.


மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ராஜதந்திரம் எதிர்காலத்தில் மிகவும் முக்கியமானதாக மாறக்கூடும். ஆனால் தற்போது, ​​அது ஒரு தெளிவான உத்தியைவிட ஒரு இலக்காகும். பிராந்தியத்தில் அதிகமான நாடுகள் ஈடுபடுகின்றன என்பதை இந்தியா அறிந்திருக்கிறது. இருப்பு மட்டுமே விளைவுகளை வடிவமைக்காது என்பதையும் அது அறிந்திருக்க வேண்டும்.


அபிஜித் சிங், புது தில்லியின் ORF-ல் உள்ள கடல்சார் கொள்கை முன்முயற்சியின் முன்னாள் தலைவர்.


Original article:
Share: