மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (HDI) வருமானத்தைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. -சி ரங்கராஜன் எஸ் மகேந்திர தேவ்

 வருமானம் வளர்ச்சியின் முக்கியமான அங்கமாக இருப்பதால், இந்தியாவில் குறைந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (per capita GDP) மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index (HDI)) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கட்டுப்படுத்தலாம்.


சமீபத்தில், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme  (UNDP)) மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2025-ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, இந்தியா தனது மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டு வரிசையை 193 நாடுகளில் 2022-ஆம் ஆண்டில் 133-ஆவது இடத்திலிருந்து 2023-ஆம் ஆண்டில் 130-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. HDI மதிப்பு 2022-ஆம் ஆண்டில் 0.676-லிருந்து 2023-ஆம் ஆண்டில் 0.685 ஆக முன்னேறியுள்ளது. மொத்த தேசிய தனிநபர் வருமானம் (gross national income per capital) HDIஇன் அங்கங்களில் ஒன்றாகும். இந்த சூழலில் நாம் இங்கே இரண்டு விசயங்களை விவாதிக்கிறோம்: (1) காலப்போக்கில் மனிதவள மேம்பாட்டு குறியீட்டின் முன்னேற்றம்; (2) இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு செயல்திறனில் தனிநபர் வருமானத்தின் பங்கை பற்றியதாகும்.   


நாம் 1990 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் முன்னேற்றத்தைப் பார்க்கிறோம். இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு மதிப்பு 1990-ஆம் ஆண்டில் 0.446-லிருந்து 2023-ஆம் ஆண்டில் 0.685-ஆக அதிகரித்துள்ளது. - 33 ஆண்டுகளில் 53 சதவீதம் அதிகரிப்பு மற்றும் ஆண்டுக்கு 1.31 சதவீத வளர்ச்சி (அட்டவணையைப் பார்க்கவும்). இந்தியாவிற்கான மனிதவள மேம்பாட்டு குறியீடு உலகளாவிய மற்றும் தெற்காசிய சராசரிகளைவிட வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.


அதே காலகட்டத்தில்: (a) மொத்த தேசிய தனிநபர் வருமானம் $2,167-லிருந்து $9,048 ஆக உயர்ந்தது - நான்கு மடங்கு அதிகரிப்பு; (b) ஆயுட்காலம் (life expectancy) 58.6 ஆண்டுகளிலிருந்து 72 ஆண்டுகளாக உயர்ந்தது. 23 சதவீத அதிகரிப்பு; (c) எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகள் (expected years of schooling) 8.2 ஆண்டுகளிலிருந்து 13 ஆண்டுகளாக உயர்ந்தது. சீர்திருத்தத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும். இருப்பினும், மனிதவள மேம்பாட்டுக் குறியீடு தரவரிசையில் இந்தியா பல நாடுகளைவிட பின்தங்கியுள்ளது. மற்ற BRICS நாடுகளான ரஷ்யா (64), சீனா (75), பிரேசில் (84) தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை (78) இந்தோனேசியா (113) மற்றும் பிலிப்பைன்ஸ் (117) போன்ற சில ஆசிய நாடுகள் இந்தியாவைவிட தரவரிசையில் முன்னணியில் உள்ளன. அதே, நேரத்தில் வங்காளதேசம் (130) ஒரே மாதிரியான தரவரிசையைக் கொண்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில், நேபாளம் (145), மியான்மார் (149) மற்றும் பாகிஸ்தான் (168) போன்ற நாடுகள் மட்டுமே மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவை விட குறைந்த தரவரிசையைக் கொண்டுள்ளன.


தனிநபர் வருமானம் (Per capita income)


மனிதவள மேம்பாட்டு அறிக்கை இந்தியா 2023-ஆம் ஆண்டில் 0.685 HDI மதிப்புடன் நடுத்தர மனித வளர்ச்சி பிரிவில் (medium human development category) உள்ளது மற்றும் 0.700 என்ற உயர் மனித வளர்ச்சி வரம்பிற்கு (High human development threshold) நெருங்கி வருகிறது என்று கூறுகிறது. இருப்பினும், மக்கள்தொகை அழுத்தங்கள் (demographic pressures) காரணமாக தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதால், பல BRICS மற்றும் ஆசிய நாடுகளைப் பிடிக்க இந்தியாவிற்கு அதிக நேரம் எடுக்கும்.


மனித வளர்ச்சியின் முக்கிய பரிமாணங்களான சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் சராசரி சாதனையின் சுருக்கமான அளவீடுதான் மனிதவள மேம்பாட்டு குறியீடு என்பதை கவனத்தில் கொள்ளலாம். ஆரோக்கிய பரிமாணம் பிறப்பின்போதே ஆயுட்காலத்தால் மதிப்பிடப்படுகிறது. கல்வி பரிமாணம் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான சராசரி கல்வி ஆண்டுகள் (mean years of schooling) மற்றும் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள குழந்தைகளுக்கான எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகளால் அளவிடப்படுகிறது. வாழ்க்கைத் தர பரிமாணம் மொத்த தேசிய தனிநபர் வருமானம் (gross national income per capital) மூலம் அளவிடப்படுகிறது.


கல்வி, ஆரோக்கியம், வருமானம் அல்லது நுகர்வு போன்ற வருமானம் அல்லாத குறிகாட்டிகளின் (non-income indicators) முன்னேற்றத்தை காலப்போக்கில் ஆய்வு செய்யலாம் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால், அவை அனைத்தையும் ஒரு குறியீட்டில் மாற்றுவது பல ஒருங்கிணைப்பு சிக்கல்களை (aggregation problems) உருவாக்குகிறது. கொள்கை ரீதியாக, அவை தனிச்சையானதாக இருக்க வேண்டும்.


T.N. ஸ்ரீனிவாசன் 2007-ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டை (HDI) சுட்டிக்காட்டினார். அதன்படி, உடல்நலம், கல்வி மற்றும் வருமானம் போன்ற பல்வேறு விவகாரங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட எடைகளைப் பயன்படுத்துவது அர்த்தமற்றது என்று கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தால் முன்னோடியாகக் கொண்ட மனிதவள மேம்பாட்டுக் குறியீடு, தன்னிச்சையாக எடைபோடப்பட்ட அளவீடு அல்லாத குறியீடுகளின் கூட்டுத்தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது நிச்சயமாக எந்த அர்த்தமுள்ள அர்த்தத்திலும் பல பரிமாணக் கருத்தாக்கம் அல்ல. மாறாக, மற்றொரு தன்னிச்சையான ஒற்றை பரிமாணக் குறியீடாகும்".


மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டை பொறுத்தவரை, மூன்று அங்கங்களும் சமமான பங்களிப்புகளைக் கொண்டுள்ளன. மொத்த தேசிய வருமானம் (Gross National Income (GNI)) தனிநபர் வருமானம் குறியீட்டில் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பை கொண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவின் அடிப்படையில் இந்தியா உலகின் 4-வது அல்லது 5-வது பெரிய பொருளாதாரமாகும் மற்றும் அதன் மொத்த உள் நாட்டு (GDP) பெரிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்த 6-7 சதவீதத்தில் வளர்ந்து வருகிறது. இருப்பினும், வாங்கும் சக்தி சமநிலை (Purchasing Power Parity (PPP))  $9,047 தனிநபர் வருமானம் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் மிகக் குறைவாக உள்ளது.


அட்டவணை மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் அங்கங்களின் தரவரிசைகளை வழங்குகிறது. இந்தியாவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி,  வாங்கும் சக்தி சமநிலை தரவரிசையில் 123 ஆகும். அதே, நேரத்தில் ஆயுட்காலம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகளின் தரவரிசைகள் முறையே 112 மற்றும் 114 ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனிநபர் வருமானத்தின் தரவரிசை சுகாதாரக் கூறு மற்றும் கல்வியின் குறிகாட்டிகளில் ஒன்றைவிட மிகக் குறைவு. கல்வியின் மற்றொரு குறிகாட்டியான சராசரி பள்ளிப்படிப்பு ஆண்டுகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் தரவரிசை 143-ல் மிகவும் குறைவாக உள்ளது.


அதிக மக்கள்தொகை காரணமாக இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைவாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 2000-ஆம் ஆண்டில் நிலையாக இருந்திருந்தால், 2025-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் GNI தனிநபர் வருமானம் வாங்கும் சக்தி சமநிலையில் $12,282 ஆக இருந்திருக்கும். இது 114-ஆவது தரவரிசையைக் கொண்டிருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2000-ஆம் ஆண்டில் மக்கள்தொகை நிலைப்படுத்தப்பட்டிருந்தால் HDI தரவரிசை மிக உயர்ந்ததாக இருந்திருக்கும். எனவே, இந்தியாவில் குறைந்த தனிநபர் வருமானம் அதிக மக்கள்தொகை எண்ணிக்கை காரணமாகும். இது 2050-க்குப் பிறகு மட்டுமே நிலைப்படும். எனவே, இந்தியாவில் குறைந்த அளவிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, HDI வருமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கட்டுப்படுத்தலாம்.


வருமானம் மனித வளர்ச்சியை தெளிவாக குறிக்கவில்லை என்பதால் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (Human Development Index (HDI)) உருவாக்கப்பட்டது. ஆனால் வருமானம் கணக்கீட்டில் நுழைந்த விதம் ஒரு நாடு முற்றிலும் வருமானத்தின் அடிப்படையில் பெறும் தரவரிசையிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இல்லை. செய்யப்பட்ட ஆய்வு அனைத்து 193 நாடுகளுக்கும் உண்மையான GDP தனிநபர் குறியீடு மற்றும் மனித வளர்ச்சிக் குறியீட்டுக்கு இடையேயான தரவரிசை தொடர்பு கெழு (rank correlation coefficient) 0.97-ல் உயர்ந்ததாக இருப்பதைக் காட்டுகிறது. இருப்பினும், நடுத்தர மனித வளர்ச்சி நாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டுடன் தரவரிசை தொடர்பு கெழு 0.78 ஆகக் குறைவாக இருப்பதைக் காணலாம்.


எங்கள் பகுப்பாய்விலிருந்து இரண்டு முடிவுகள் உள்ளன. முதலாவது, தனிநபர் வருமானத்தின் படி தரவரிசை மற்றும் HDI தரவரிசை மிக நெருக்கமாக உள்ளன. இந்தியாவின் விஷயத்தில், குறைந்த HDI தரவரிசை ஓரளவு அதிக மக்கள்தொகை காரணமாகும். மக்கள்தொகை தொடர்ந்து வளர்வதால் HDI-ல் எங்கள் தரவரிசை குறைவாகவே தொடரும். இது HDI-ன் முக்கியமான அங்கமான வருமானத்தில் நாம் பயணிக்க வேண்டிய தூரத்தை மட்டுமே காட்டுகிறது. தற்போதைய தனிநபர் வருமான நிலையைக் கருத்தில் கொண்டு வேகமாக வளர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.


ரங்கராஜன், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் முன்னாள் தலைவர் மற்றும் ரிசர்வே வங்கியின் முன்னாள் ஆளுநர்; தேவ், விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணைய முன்னாள் தலைவர் மற்றும், மும்பை இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தர்.


Original article:
Share:

உல்லாஸ் (ULLAS) திட்டத்தின் கீழ் மிசோரம், கோவாவின் 'முழு கல்வியறிவு' என்ற அடையாளம் எதைக் குறிக்கிறது?

 இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூகத்தில் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் பற்றிய புரிதல் (Understanding of Lifelong Learning for All in Society (ULLAS)) திட்டம் என்பது வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டமாகும். இத்திட்டம் 15 வயதுக்கு மேற்பட்ட 5 கோடி ‘எழுத்தறிவு இல்லாத நபர்களுக்கு' (non-literate individuals) அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணிக்கை திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


கடந்த மாதம், மிசோரம் மற்றும் கோவா மாநிலங்கள் ULLAS எனப்படும் திட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளிக்குச் செல்லாத நபர்களுக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தங்களை "முழுமையான எழுத்தறிவு" மாநிலங்களாக அறிவித்தன.


கோவாவின் கல்வியறிவு விகிதம் 99.72%-ஆக இருந்த நிலையில், மிசோரமின் கல்வியறிவு விகிதம் 98.2%-ஆக இருந்தது. இந்த மாநிலங்கள் லடாக்கைப் பின்பற்றின. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டத்தின் கீழ் "முழு எழுத்தறிவு" (fully literate) பெற்றதாக அறிவித்த நாட்டிலேயே முதல் மாநிலமான லடாக், "97%-க்கும் அதிகமான கல்வியறிவை அடைந்துள்ளது".


சமூகத்தில் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் பற்றிய புரிதல் எனப்படுகிற உல்லாஸ் (Understanding of Lifelong Learning for All in Society (ULLAS)) திட்டம் என்றால் என்ன?


ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட ULLAS திட்டம் (புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது) 2022 முதல் 2027 வரை செயல்படுத்தப்படுகிறது. இது நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட 5 கோடி 'எழுத்தறிவு இல்லாத நபர்களுக்கு' அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கை திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் பொருள் அடிப்படை படித்தல் மற்றும் எழுதுதல் மற்றும் ஆரம்ப வகுப்புகளில் கற்றுக்கொள்ளப்படும் எளிய கணித செயல்கள் ஆகும். கற்பித்தல் பொருள் நிதி மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு போன்ற 'முக்கியமான வாழ்க்கை திறன்களையும்' (critical life skills) வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வீடு வீடாகச் சென்று செய்யப்பட்ட கணக்கெடுப்பு மூலம் இதுபோன்ற கல்வி தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டுள்ளன. பின்னர், அவர்கள் பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்களால் கற்பிக்கப்படுகிறார்கள். பள்ளி மாணவர்கள், உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், மற்றும் சமுதாய உறுப்பினர்கள். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (National Council of Educational Research and Training (NCERT)) கற்றல் பொருளை உருவாக்கியுள்ளது மற்றும் மாநிலங்கள் அதை தங்கள் உள்ளூர் மொழிகளில் செய்துள்ளன. கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு ஒரு மொபைல் செயலி உள்ளது. ஆனால், இதை இணைய இணைப்பின்றியும் செய்ய முடியும்.


ULLAS என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மிகச் சமீபத்திய வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டமாகும். 1950-களில் இருந்து, அரசாங்கம் இதுபோன்ற பல திட்டங்களை நடத்தி வருகிறது. அவற்றில் 1960-கள் மற்றும் 1970-களில் விவசாயிகள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்டவை அடங்கும். பின்னர், 15 முதல் 35 வயதுடையவர்களுக்காக தேசிய வயது வந்தோர் கல்வித்  (National Adult Education Programme) திட்டத்தைத் தொடங்கியது. அதன் பிறகு, அதே வயதினருக்காக 1988 முதல் 2009 வரை தேசிய எழுத்தறிவு இயக்கம் (National Literacy Mission) செயல்பட்டது.


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance) அரசாங்கம் 2009-ஆம் ஆண்டு 'சாக்ஷர் பாரத்' (எழுத்தறிவு இந்தியா) திட்டத்தைத் தொடங்கியது. இது 2018 வரை தொடர்ந்தது. இது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை வாசிப்பு மற்றும் எழுதும் திறன்களைக் கற்றுக்கொள்ள உதவியது.  மேலும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் அவர்களின் கல்வியைத் தொடரவும் வாய்ப்புகளை வழங்கியது. புதிய ULLAS திட்டமும் அதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.


இத்திட்டம் இதுவரை எவ்வாறு செயல்பட்டது?


செயல்பாட்டு எழுத்தறிவு எண் மதிப்பீட்டுத் தேர்வு (Functional Literacy Numeracy Assessment Test (FLNAT)) நடத்தப்படுகிறது. இது 150 மதிப்பெண்கள் கொண்ட வாசிப்பு, எழுத்து மற்றும் எண் கணிதத் தேர்வாகும். இது வெவ்வேறு மொழிகளில் நடத்தப்படுகிறது. சோதனையில் தேர்ச்சி பெற்றவுடன், கற்பவர் தேசிய திறந்த பள்ளிக் கல்வி நிறுவனத்தால் (National Institute of Open Schooling (NIOS)) அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கையைப் பெற்றுள்ளதாக சான்றளிக்கப்படுகிறது.


மார்ச் 2023 முதல், 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 1.77 கோடி பேர் FLNAT-ல் கலந்து கொண்டுள்ளனர் என்று கல்வி அமைச்சகத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார். ஒன்றிய அரசு வினாத்தாளை வழங்கும்போது, ​​மாநிலங்கள் அதை சூழலுக்கு ஏற்றவாறு உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கின்றன.


ULLAS இணையதளம், சுமார் 2.43 கோடி பதிவு பெற்ற கற்பவர்கள் இருப்பதாகவும், இதுவரை 1.03 கோடி பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர் என்றும் கூறுகிறது. 2024-ல் நடத்தப்பட்ட சோதனைகளின் தரவு மாநிலங்கள் முழுவதும் மாறுபட்ட செயல்திறனைக் காட்டுகிறது. தமிழ்நாடு மற்றும் கோவாவில் FLNAT தேர்வில் கலந்து கொண்டவர்களில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில், சராசரியாக, 90% தேர்ச்சி பெற்றதாக அலுவலர்  கூறினார்.


கடந்த நடத்தப்பட்ட தேர்வுகளில், குஜராத் மற்றும் திரிபுராவில் 87.07% மற்றும் 75.97% தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. உத்தரகண்ட் மற்றும் ஜார்க்கண்டில் 85% தேர்ச்சி விகிதம் இருந்தது. பஞ்சாப், அசாம் மற்றும் உத்தரபிரதேசம் 95%-க்கும் அதிகமாகவும், டெல்லி மற்றும் ராஜஸ்தான் 99%-க்கும் அதிகமாகவும் தேர்ச்சி பெற்றன.


ஜார்கண்ட், தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு தேர்வெழுதியவர்களில் 70%-க்கும் அதிகமானோர் பெண்கள் ஆவார். இந்த எண்ணிக்கை ஒடிசா, உத்தரப் பிரதேசம், அசாம், ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் டெல்லியில் 65% அதிகமாக உள்ளது.

"முழுமையான எழுத்தறிவு" (full literacy) எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?


கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலங்களுக்கு "எழுத்தறிவு" மற்றும் "100% எழுத்தறிவு" ஆகியவற்றை வரையறுத்து கடிதம் எழுதியது. எழுத்தறிவு என்பது "படிக்க, எழுத, புரிந்துகொள்ளும் திறன், அதாவது டிஜிட்டல் எழுத்தறிவு, நிதி எழுத்தறிவு போன்ற முக்கியமான வாழ்க்கைத் திறன்களுடன் அடையாளம் காண, புரிந்து கொள்ள, விளக்க மற்றும் உருவாக்க" என வரையறுக்கப்பட்டது.


ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் 95% எழுத்தறிவை அடைவது முழு எழுத்தறிவு பெற்றவராக இருப்பதற்கு சமமாக கருதப்படலாம் என்றும் கல்வி அமைச்சகம் கூறியது. தகவல்தொடர்பு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐயும் குறிப்பிடுகிறது, இது வயது வந்தோருக்கான கல்விக்கான அரசாங்க முன்முயற்சிகளை "100% கல்வியறிவை அடைவதற்கான அனைத்து முக்கிய நோக்கத்தையும் விரைவுபடுத்த" அழைப்பு விடுக்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் "அனைத்து இளைஞர்களும், பெரியவர்களில் கணிசமான விகிதமும், ஆண்களும் பெண்களும், எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதை" உறுதி செய்வதை உள்ளடக்கிய ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அது குறிப்பிட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி பாடுபடுமாறு மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.


கோவா, மிசோரம் மற்றும் லடாக் ஆகியவை 95% எழுத்தறிவு மதிப்பெண்ணைத் தாண்டிவிட்டதாகக் கூறியுள்ளன. ULLAS திட்டத்திற்கு பிறகு எழுத்தறிவு இல்லாதவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் FLNAT-ஐப் பயன்படுத்துவதை உறுதிசெய்வதே இதற்கு முக்கியமானது.


கோவாவில் உள்ள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் State Council of Educational Research and Training (SCERT)) அதிகாரியின் கூற்றுப்படி, மாநிலத்தின் 116 பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் தரவுகள் 95% முதல் 100% வரை எழுத்தறிவு விகிதங்களை தெரிவிக்கின்றன. மீதமுள்ள 89 பஞ்சாயத்துகள்/நகராட்சிகள்/மாநகராட்சிகளில், கல்வியறிவு இல்லாத 6,299 பேரை அரசு கண்டறிந்தது. மேலும், ULLAS-ன் கீழ், 2,136 பேர் FLNAT பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றனர்.

அடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடியாது. பலர் வயதானவர்கள் மற்றும் பங்கேற்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்று அலுவலர் கூறினார். மீதமுள்ள 89 பஞ்சாயத்துகள்/நகராட்சிகள்/மாநகராட்சிகளில், 6,299 எழுத்தறிவு இல்லாதவர்களை மாநிலம் அடையாளம் கண்டுள்ளது. மேலும் ULLAS-ன் கீழ், 2,136 பேர் பயிற்சி பெற்று FLNAT-ல் தேர்ச்சி பெற்றனர்.


மிசோரமில், ஒரு SCERT அதிகாரி குறிப்பிட்ட காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பின் (PLFS) தரவுகளை சுட்டிக்காட்டினார். 2023-24 PLFS ஆண்டு அறிக்கை 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே 98.2% எழுத்தறிவு விகிதத்தைக் காட்டுகிறது. மிசோரம் 2023-ல் 3,026 எழுத்தறிவு இல்லாதவர்களைக் கண்டறிந்தது. மேலும், 1,692 பேர் ULLAS-ன் கீழ் பயிற்சி பெற்றனர்.


ULLAS திட்டத்தின் கீழ் 32,000-க்கும் மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களை லடாக் அடையாளம் கண்டுள்ளது. முதல் கட்டத்தில் லடாக்கில் 7,300 கற்பவர்கள் FLNAT-ல் தோன்றினர். பின்னர், 2023-ல் இரண்டாம் கட்டத்தில் 22,000-க்கும் அதிகமானோர் மற்றும் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாம் கட்டத்தில் 4,600-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். ஜூன் 2024-ல், ULLAS திட்டத்தின் கீழ் 'முழுமையான எழுத்தறிவு' (fully literate) பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


மற்ற ஆய்வுகள் என்ன காட்டுகின்றன?


கோவாவில் 93.6% எழுத்தறிவு விகிதம் உள்ளது என்றும் அதே நேரத்தில் லடாக் பகுதியில் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 81% எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளதாக 2023-24 (Periodic Labour Force Survey (PLFS)) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. PLFS ஆனது குறைந்தபட்சம் ஒரு மொழியில் ஒரு எளிய செய்தியைப் படிக்கவும் எழுதவும் கூடிய ஒரு நபரை 'எழுத்தறிவு' என்று அடையாளப்படுத்துகிறது.


2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேசிய சராசரி கல்வியறிவு விகிதம் 74.04% என்றும், வயது வந்தோருக்கான எழுத்தறிவு விகிதம் (15 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) 69.3% என்றும், இது 2001-ல் 61% ஆக இருந்தது என்றும், 25.76 கோடி எழுத்தறிவு இல்லாத நபர்களாகவும், 9.08 கோடி ஆண்களும் 8 கோடி ஆண்களும் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில், கோவா 88.7% எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டிருந்தது. அதே சமயம் மிசோரம் 91.3% ஆக இருந்தது. அதிகபட்சமாக 94% கேரளாவில் பதிவாகியுள்ளது.

 

கடந்த ஆண்டு நடந்த ஒரு நிகழ்வில், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்விச் செயலர் சஞ்சய் குமார் ‘கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில், ULLAS திட்டத்தின் மூலம் 100% எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்’ என்றார். கோவா, மிசோரம், டாமன் & டையூ, தாத்ரா & நகர் ஹவேலி, சண்டிகர், லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களை அவர் குறிப்பிட்டார்.


Original article:
Share:

குறைந்து வரும் வறுமையும், அதைக் காட்டும் தரவுகளும்

 இந்தியாவில் கடுமையான வறுமை [Extreme poverty] 2011-12ல் 27.1 சதவீதத்திலிருந்து 2022-23ல் 5.3 சதவீதமாக குறைந்துள்ளதாக சமீபத்திய உலக வங்கி (World Bank) தரவுகள் காட்டுகின்றன. தரவுகள், கொள்கை வகுப்பிற்கான மதிப்புமிக்க உள்ளீடாக செயல்பட வேண்டும்.


இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவமின்மை மதிப்பீடு (Poverty and inequality estimation) கணிசமான விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக, சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதாரம் பல சிக்கல்களை சந்தித்துள்ளது. பெரிய இந்திய வறுமை விவாதம், உண்மையில் மதிப்பீட்டின் அடிப்படையாக அமையும் குடும்பக் கணக்கெடுப்பு தரவுகள் (household survey data), வறுமைக் கோடுகளின் கட்டுமானம் (construction of poverty lines) மற்றும் பல ஆண்டுகளாக ஏற்பட்ட போக்குகள் பற்றிய கருத்து வேறுபாடுகளால் குறிக்கப்பட்டுள்ளது. தரவுகள் இல்லாத நிலையில் இந்த விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. "தரவுத் தர பிரச்சனைகள்" (data quality issues) காரணமாக அரசாங்கம் 2017-18-க்கான நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவுகளை வெளியிடவில்லை. இது பல ஆய்வுகளை இந்தியாவில் வறுமை நிலைகளை மதிப்பிட காலமுறை தொழிலாளர் வளக் கணக்கெடுப்புகள் (Periodic Labour Force Surveys) மற்றும் இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மைய (Centre for Monitoring Indian Economy (CMIE)) தரவுகள் போன்ற மாற்று தரவு ஆதாரங்களைப் பயன்படுத்த வழிவகுத்தது. சமீபத்தில், அரசாங்கம் 2022-23 மற்றும் 2023-24-க்கான குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்புகளின் இரண்டு சுற்றுகளை நடத்துவதன் மூலம் தரவு இடைவெளியை குறைக்க முயற்சித்துள்ளது. இந்த கணக்கெடுப்புகள் கடந்த பத்தாண்டுகளில் வறுமையின் போக்குகளை ஆய்வு செய்ய அனுமதிக்கின்றன. இந்த குறைவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.


இந்தியாவில் கடுமையான வறுமை 2011-12-ஆம் ஆண்டில் 27.1 சதவீதத்திலிருந்து 2022-23-ஆம் ஆண்டில் 5.3 சதவீதமாக குறைந்துள்ளதாக இந்த ஆய்வுக் கட்டுரையில் அறிக்கையிடப்பட்ட சமீபத்திய உலக வங்கி தரவுகள் மதிப்பிடுகின்றன. கடுமையான வறுமையை அளவிடுவதற்கான வரம்பை வங்கி முன்பிருந்த $2.15-லிருந்து ஒரு நாளைக்கு $3 ஆக உயர்த்திய போதிலும், இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க - இந்தியாவில் கடுமையான வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 344.47 மில்லியனிலிருந்து 75.24 மில்லியனாக குறைந்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பு நடத்தப்பட்ட முறை மற்றும் அதன் மாதிரி வடிவமைப்பில் (sampling design) ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக 2011-12 மற்றும் 2022-23ல் நடத்தப்பட்ட நுகர்வு செலவு கணக்கெடுப்புகளின் ஒப்பீட்டு தன்மை (comparability) குறித்து சில கவலைகள் இருந்தபோதிலும், இது ஒரு செங்குத்தான வீழ்ச்சி ஆகும். மேலும், குறைந்த-நடுத்தர வருமான நாடுகளுக்கான ஒரு நாளைக்கு $4.2 வறுமைக் கோட்டை ($3.65லிருந்து மேல்நோக்கி திருத்தப்பட்டதை) கணக்கில் எடுத்துக்கொண்டாலும், இந்தியாவில் வறுமை விகிதம் 2011-12ல் 57.7 சதவீதத்திலிருந்து 2022-23ல் 23.9 சதவீதமாக குறைந்துள்ளது. அதன் பிறகு அந்த ஆண்டும் சரிவு தொடர்ந்ததாகத் தெரிகிறது. முன்னதாக, நிதி ஆயோக் இந்தியாவில் பல்பரிமாண வறுமை [multidimensional poverty] 2005-06-ஆம் ஆண்டில் 55.34 சதவீதத்திலிருந்து 2015-16-ஆம் ஆண்டில் 24.85 சதவீதமாகவும், 2019-21-ஆம் ஆண்டில் 14.96 சதவீதமாகவும் குறைந்தது. இந்த வறுமை மதிப்பீடு 12 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புகளின் (National Family Healthy Surveys) தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.


இந்த வறுமை மதிப்பீடுகளுடன் சேர்ந்து, கினி மற்றும் தெயில் குறியீடுகள் [Gini and Theil indices] போன்ற அளவீடுகளின் அடிப்படையில் இந்தியாவில் சமத்துவமின்மை 2011 மற்றும் 2022-ஆம் ஆண்டிற்கு இடையில் குறைந்துள்ளதாகவும் உலகவங்கி மதிப்பிட்டுள்ளது. எனினும், இந்த சமத்துவமின்மை மதிப்பீடுகள் குடும்ப நுகர்வு செலவு தரவுகளை (household consumption expenditure data) அடிப்படையாகக் கொண்டவை. இது பொதுவாக குடும்ப வருமானத்தை (household income) அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகளைவிட குறைவாக இருக்கும். இது வெறும் கல்விப் பயிற்சி (academic exercise) மட்டுமல்ல. நுகர்வு செலவு கணக்கெடுப்புகள் மற்றும் தொழிலாளர் சக்தி கணக்கெடுப்புகளின் சமீபத்திய சுற்றுகளின் தரவுகள் கொள்கைக்கான மதிப்புமிக்க உள்ளீடாக பணியாற்ற வேண்டும். கொள்கை வகுப்பாளர்களின் தேர்வுகளுக்கு தகவல் அளிக்க வேண்டும்.


Original article:
Share:

ஒரு சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்படும் ஒருவருக்கு பிரிவு 22 என்னென்ன உரிமைகளை வழங்குகிறது? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி: தடுப்புக் காவல் என்பது அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஒரு சிறப்பு அதிகாரமாகும், மேலும் இது அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. கேரளாவில் பணக் கடன் வழங்குவதில் ஈடுபட்ட ஒருவரை தடுத்து வைத்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.


முக்கிய அம்சங்கள்:


  • நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தடுப்புக் காவல் அதிகாரி குறிப்பிட்டுள்ள காரணங்கள், அந்த வழக்குகளில் அவரது ஜாமீனை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தைக் கோருவதற்குப் போதுமானதாக இருக்கலாம் என்று கூறியது. ஆனால், இந்தக் காரணங்கள் அவரை தடுப்புக் காவலில் வைத்திருப்பதை நியாயப்படுத்த போதுமானதாக இல்லை.


  • அரசியலமைப்பின் பிரிவு 22(3)(b)-ன் கீழ் தடுப்புக் காவல் அனுமதிக்கப்படுகிறது என்று அமர்வு சுட்டிக்காட்டியது. இருப்பினும், இது அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே அரசு பயன்படுத்த வேண்டிய ஒரு சிறப்பு அதிகாரம் என்று அவர்கள் கூறினர். எந்தவொரு புதிய குற்றமும் நிகழும் முன் இது ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிக்கிறது, எனவே அதை சாதாரணமாகப் பயன்படுத்தக்கூடாது.


உங்களுக்குத் தெரியுமா?:


  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால், அதற்கு ஒரு முக்கியமான விதிவிலக்கு உள்ளது. பிரிவு 22(3)(b) இந்த பாதுகாப்புகள் முன்னெச்சரிக்கைத் தடுப்புக்காவல் (preventive detention) தொடர்பான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள எவருக்கும் பொருந்தாது என்று கூறுகிறது.


  • முன்னெச்சரிக்கைத் தடுப்புக்காவல் என்பது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஒன்றைச் செய்வதைத் தடுக்க அரசாங்கம் ஒருவரைத் தடுத்து வைக்க முடியும் என்பதாகும். வழக்கமாக, மாவட்ட நீதிபதி இந்த உத்தரவை வழங்குகிறார். ஆனால், காவல்துறைக்கும் அதிகாரம் வழங்கப்படலாம்.


  • ஒருவர் மூன்று மாதங்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டால், பிரிவு 22(4) அதை ஆலோசனை வாரியத்தால் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த வாரியங்கள் அரசால் உருவாக்கப்படுகின்றன. மேலும், பொதுவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் அல்லது மூத்த அதிகாரிகள் இதில் அடங்குவர். தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் பொதுவாக வாரியத்தின் முன் ஒரு வழக்கறிஞரை ஆஜராக வைக்க முடியாது. வாரியம் தடுப்புக்காவலுடன் உடன்பட்டால், அதை சவால் செய்ய நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.


  • பிரிவு 22(5) அரசாங்கம் அந்த நபரிடம் காவலில் இருப்பதற்கான காரணங்களை விரைவாகச் சொல்லி, அவர்களுக்கு பதிலளிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.


  • காரணங்களை பகுதிகளாக அல்லாமல், ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டும். அசல் உத்தரவை ஆதரிக்க அரசாங்கம் பின்னர் புதிய காரணங்களைச் சேர்க்க முடியாது.  காரணங்களை அந்த நபருக்குப் புரியும் மொழியில் விளக்க வேண்டும்.


  • ஆனால் இந்தப் பாதுகாப்பிற்கும் ஒரு வரம்பு உள்ளது. சில உண்மைகளைப் பகிர்வது பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அரசாங்கம் நம்பினால், அவற்றை இரகசியமாக வைத்திருக்க பிரிவு 22(6) அனுமதிக்கிறது.


Original article:
Share:

கேரளா ஏன் சில வன விலங்குகளை கொல்ல அனுமதிக்கும் வகையில் வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்புகிறது? - ஷாஜு பிலிப்

 வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972 திருத்தப்பட வேண்டும் என்று கேரளா விரும்புகிறது, எனவே மனித வாழ்விடங்களுக்குள் நுழையும் வன விலங்குகளை கொல்ல அனுமதிக்கலாம்.

மனித உயிர் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வன விலங்குகளை கொல்ல மத்திய அரசின் அனுமதியை கேரளா நாடியுள்ளது. வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம் (Wildlife (Protection) Act), 1972 திருத்தப்பட வேண்டும். எனவே மனித வாழ்விடங்களுக்குள் நுழையும் வன விலங்குகளை கொல்ல அனுமதிக்கலாம்.


கேரளாவில் வனவிலங்குகள் தாக்குதல் பிரச்சனை


கேரளாவில் வனவிலங்கு தாக்குதல்கள் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. அரசாங்கம் 941 கிராம உள்ளாட்சி அமைப்புகளில் 273 கிராம உள்ளாட்சி அமைப்புகளை பாதிப்பு பகுதிகளாக அடையாளம் கண்டுள்ளது.


பிரச்சனைக்குரிய விலங்குகள் முக்கியமாக புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் மற்றும் மயில்கள் போன்றவை உள்ளன. குரங்குகள் (bonnet macaques) மற்றும் மயில்கள் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும், அவற்றின் தொடர்ச்சியான தாக்குதல்கள் விவசாயிகளை விவசாய நிலங்களின் பெரிய பகுதிகளை விட்டு வெளியேற வைத்துள்ளன.


2016-17ஆண்டு  முதல் ஜனவரி 31, 2024-25 வரை, கேரளாவில் வனவிலங்கு தாக்குதல்களில் 919 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8,967 பேர் காயமடைந்தனர் என்று அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.


கேரளாவில் மனித-வனவிலங்கு மோதல் ஏன் அதிகரித்து வருகிறது?


பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றின் வாழ்விடங்கள் மோசமடைந்து வருவதால் விலங்குகள் காடுகளை விட்டு வெளியேறுவது, வனப்பகுதிகளில் மேய்ச்சல் கால்நடைகள் மற்றும் பயிரிடப்படும் பயிர் வகைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.


ஆனால் மிக முக்கியமாக, காட்டுப் பன்றிகள் மற்றும் பல்வேறு வகையான குரங்குகளின் எண்ணிக்கையில் ஏற்படும் விரைவான அதிகரிப்பு மக்கள் வாழும் பகுதிகளில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.


கேரளா ஏன் வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்புகிறது?


அவசரகால சூழ்நிலைகளில், குறிப்பாக சட்டத்தின் அட்டவணை I-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்குகளைக் கையாளும்போது, ​​தற்போதைய சட்டங்கள் விரைவாகச் செயல்படுவதை கடினமாக்குகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆபத்தான காட்டு விலங்கைக் கொல்லும் முன், மாநிலத்தின் தலைமை வனவிலங்கு காப்பாளர், அந்த விலங்கைப் பிடிக்கவோ, மயக்கமடையவோ அல்லது வேறு இடத்திற்கு நகர்த்தவோ முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும். விலங்கு பிடிபட்டால், அதை நீண்ட நேரம் கூண்டில் வைக்கக்கூடாது. மேலும், சட்டத்தின் விதிகளைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், மனித-வனவிலங்கு மோதல்களைக் கையாளும் போது புலிகள் பாதுகாப்பு ஆணையம் (Tiger Conservation Authority) மற்றும் யானைத் திட்டம் (Project Elephant) வழங்கும் ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்.


மாவட்ட ஆட்சியர் (நிர்வாக நீதிபதி) பொதுமக்களின் அச்சுறுத்தல்களை நீக்க உத்தரவுகளை வழங்க முடியும் என்றாலும், காட்டு விலங்குகளுக்கு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன.


வன விலங்குகளை கொல்வதில் அரசின் நிலைப்பாடு


மக்களைத் தாக்கும் அனைத்து காட்டு விலங்குகளையும் கொல்லும் வகையில், 1972ஆம் ஆண்டு வனவிலங்கு சட்டத்தை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று கேரளா விரும்புவதாக மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் தெரிவித்தார்.


"காரணமின்றி விலங்குகளைக் கொல்ல எங்களுக்கு அனுமதி தேவையில்லை. ஆனால், மக்களை அச்சுறுத்தும் அல்லது பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளைக் கொல்ல, குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த அனுமதியை சில பகுதிகள் மற்றும் பருவங்களுக்கு மட்டுமே வழங்க முடியும். வேலி அமைத்தல் போன்ற பிற முறைகள் விலங்குகளின் தாக்குதல்களைத் தடுக்க வேலை செய்யவில்லை."


காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தும் முறையில், பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர்கள் அவற்றைக் கொல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அவை சரியாக வேலை செய்யவில்லை என்றும் அவர் கூறினார். "காட்டுப்பன்றியைக் கொல்வதற்கு முன், அது கர்ப்பமாக இருக்கிறதா என்று மக்கள் சரிபார்க்க வேண்டும். இதுபோன்ற விதிகள் நடைமுறைக்கு ஏற்றவை அல்ல. காட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மனித உயிர்களைப் பாதுகாக்க அதைக் கட்டுப்படுத்த வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.


விலங்குகளின் சட்ட நிலையை மாற்றுதல்


மாநில அரசு, காட்டுப்பன்றிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சட்டத்தின் பிரிவு 62-ன்படி தீங்கு விளைவிக்கும் விலங்குகளாக அறிவிக்க விரும்புகிறது. மேலும், போனட் குரங்குகளால் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க, அவற்றை பட்டியல் I-இல் இருந்து நீக்க விரும்புகிறது. இந்தக் குரங்கு இனம் 2022-ல் பட்டியல் I-இல் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பு, மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரச்சனை ஏற்படுத்தும் குரங்குகளைப் பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற, தலைமை வனவிலங்கு காப்பாளர் உத்தரவிட முடியும். ஆனால் இப்போது, அவரால் தானாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.


Original article:
Share:

ஒருங்கிணைந்த கூட்டணிக்கு எதிரான போர் -ப சிதம்பரம்

 பிரதமர் அல்லது பாதுகாப்பு அமைச்சர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கி விவாதம் நடத்த அனுமதிக்கும் வகையில் ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவது சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், வெளியுறவுச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரியைப் போலவே, ஆதரவாளர்கள் ஜெனரல் சவுகானையும் கிண்டல்செய்தது மிகவும் தவறு.


எனது கட்டுரையை காலக்கெடுவுக்குள் அனுப்பினேன் (‘இப்படித்தான் பிம்பங்கள் நொறுங்குகின்றன’, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூன் 1, 2025) ஆனால் 24 மணி நேரத்தை தவறவிட்டேன். பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சவுகான், மே 31, 2025 அன்று சிங்கப்பூரில் ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸுக்கு ஒரு நேர்காணலை வழங்கினார். அந்த நேரம், இடம் மற்றும் ஊடகங்களின் தேர்வு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், முற்றிலும் தவறாக இல்லை. அந்த நிகழ்வு ஷாங்க்ரி-லா உரையாடல், இது சர்வதேச இராஜதந்திர ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies (IISS)) சிங்கப்பூரில் நடத்திய ஒரு முக்கியமான வருடாந்திர பாதுகாப்புக் கூட்டமாகும். சிங்கப்பூர் ஒரு நட்பு நாடு.


உண்மையை பின்னர் சொல்ல வேண்டியிருந்தது. பிரதமர் அல்லது பாதுகாப்பு அமைச்சர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு விவாதத்திற்கு அழைக்கக்கூடிய ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், ஆதரவாளர்கள் ஜெனரல் சவுகானை இணையத்தில் தாக்கியது தவறு (வெளியுறவுச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரியைத் தாக்கியது போல).


லாபம் மற்றும் நஷ்டங்கள்


உயர் அரசாங்க அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஜெனரல் சவுகான் பேசியிருக்கலாம். இந்திய இராணுவம் தனது இலக்குகளை அடைந்தது. ஆனால், சில இழப்புகளை சந்தித்தது என்று அவர் தெளிவாகக் கூறினார். மே 7 அன்று தவறுகள் நடந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, இராணுவத் தலைவர்கள் தங்கள் திட்டங்களை மாற்றினர். மேலும், மே 9-10 இரவு பாகிஸ்தானின் இராணுவ விமான தளங்களை இலக்காகக் கொண்டு இந்தியா ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியது. பாதுகாப்புப் படைத் தலைவர் எத்தனை இழப்புகள் ஏற்பட்டன என்று கூறவில்லை. ஆனால், தன்னாட்சி நிபுணர்களும் சர்வதேச ஊடகங்களும் இந்தியா 3 ரஃபேல், 1 சுகோய் மற்றும் 1 மிக் போன்ற ஐந்து விமானங்களை இழந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.


இராஜதந்திர தவறுகள் மற்றும் இழப்புகள் பற்றிய பிரச்சினைக்கு இராணுவ நிபுணர்களால் கவனமாகவும் தீவிரமாகவும் பகுப்பாய்வு தேவையே தவிர, தொலைக்காட்சியில் சத்தமில்லாத விவாதங்கள் அல்ல. பொதுமக்களுக்குக் கிடைக்கும் தகவல்களிலிருந்து  பின்வரும் புள்ளிகள் தெளிவாக உள்ளன:


  • இந்திய விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மே 7-ஆம் தேதி ஆரம்பத்தில் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்தன அல்லது மோசமாக சேதப்படுத்தின.


  • மே 8-ஆம் தேதி இந்தியாவில் உள்ள இலக்குகளைத் தாக்க ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. மேலும், இலக்கு ஏவுகணைகளையும் (guided missiles) பயன்படுத்தியது. மே 8 அன்று இந்தியா சில விமானங்களை இழந்தது. ஜூன் 4 அன்று பாதுகாப்புப் படைத் தலைவரின் கருத்துக்களின்படி, இந்திய விமானங்கள் இந்திய வான்வெளியில் தொலைந்து போயின. மேலும், மே 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் மற்ற விமானங்கள் தரையிறக்கப்பட்டன.


  • தங்கள் உத்தியை மாற்றிய பிறகு, மே 9-10 அன்று இந்திய விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டன (சிடிஎஸ் மே 10 அன்று கூறியது). இந்திய விமானங்கள் இந்திய வான்வெளியில் தங்கி பிரம்மோஸ் ஏவுகணைகள் உட்பட ஏவுகணைகளை ஏவி, பாகிஸ்தானில் உள்ள 11 இராணுவ விமான தளங்களைத் தாக்கின.


  • மே 10 அன்று போர் முடிந்தது.


சீனாவின் மறைமுகப் போர்


இந்தக் கட்டுரை ஒரு இராணுவ நிபுணரைப் போல செயல்படுவது பற்றியது அல்ல. இந்தியா இப்போது ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதே இதன் நோக்கம். சீன விமானங்கள் (J-10), சீன ஏவுகணைகள் (PL-15) மற்றும் சீன வான் பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தானின் இராணுவ இராஜதந்திர ரீதியில் முக்கிய பங்கு வகித்தன என்பது தெளிவாகியுள்ளது.


இந்தியா எதிர்கொண்டதில், சீன விமானங்களில் பறக்கும் பாகிஸ்தான் விமானிகள், சீன ஏவுகணைகளைப் பயன்படுத்துதல் மற்றும் சீன இராணுவ அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தைப் பின்பற்றுதல் ஆகியவை அடங்கும். கூடுதலாக, சீனாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவும் பாகிஸ்தானுக்கு உதவியதாகத் தெரிகிறது. எளிமையாகச் சொன்னால், சீனா தனது ஆயுதங்களைச் சோதிக்கவும், பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக ஒரு மறைமுகப் போரை நடத்தவும் மோதலைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.


இது மற்றொரு பெரிய கேள்விக்கு வழிவகுக்கிறது: இந்தப் புதிய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று அம்ச இராணுவ உத்தி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?


முன்னதாக, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே போரை நடத்த வேண்டும் என்ற கருத்து இருந்தது. ஆனால் இப்போது, ​​போர் வெடித்தால், இந்தியா பாகிஸ்தானையும் சீனாவையும் ஒன்றாக எதிர்த்துப் போராடும் என்பது தெளிவாகிறது. ஒரு முனை அல்லது இரு முனைப் போருக்குத் தயாராகும் யோசனை இனி வேலை செய்யாது. அடுத்த போர் இரு நாடுகளுக்கும் எதிரான ஒற்றை, ஒருங்கிணைந்த முன்னணியாக இருக்கலாம்.


மோடியின் முதல் விதி என்னவென்றால், ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் வலுவான பதிலடி கிடைக்கும் என்பதுதான். கடந்த காலத்தில், இது ‘உரி’க்குப் பிறகு இந்திய இராணுவத்தின் எல்லை தாண்டிய தாக்குதல் அல்லது பதான்கோட்டுக்குப் பிறகு விமானப்படை தாக்குதல் போன்ற நடவடிக்கைகளைக் குறிக்கிறது. ஆனால், அவை எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க போதுமானதாக இல்லை. அதனால்தான் பஹல்காம் தாக்குதலுக்கான பதில் நான்கு நாள் போராக மாறியது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தால், இந்தியா அடுத்து என்ன செய்யும்? நீண்ட, தீவிரமான போர்? பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டிற்கும் எதிரான போர்?


வெளியுறவு & இராணுவக் கொள்கைகள்


பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தற்போதைய சூழ்நிலையில் சிறப்பாக செயல்படவில்லை. இந்தியா எதிர்த்த போதிலும், சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) மே 9 அன்று அதன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fund Facility (EFF)) கீழ் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர்களை வழங்கியது. இதனால் இதுவரை வழங்கப்பட்ட மொத்த தொகை 2.1 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. பின்னர், ஜூன் 3 அன்று, ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank (ADB)) பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் டாலர் கடனை அங்கீகரித்தது. சமீபத்தில், உலக வங்கியும் அடுத்த பத்து ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 40 பில்லியன் டாலர்களை வழங்க முடிவு செய்தது. அமெரிக்காவும் சீனாவும் இந்த முடிவுகளை ஆதரித்தன.


மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலிபான் தடைகள் குழுவின் தலைவராகவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது! (மூலம்: திரு. பவன் கேரா, AICC ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவர்).


இவை அனைத்தும் ஆபரேஷன் சிந்தூரின் போது மற்றும் அதற்குப் பிறகு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாதத்தைப் பற்றிப் பேச மற்ற நாடுகளுக்குச் சென்றிருந்தபோது நடந்தது. ஒவ்வொரு நாடும் பயங்கரவாதத்தைக் கண்டித்தாலும், எனக்குத் தெரிந்தவரை, அவர்களில் யாரும் பாகிஸ்தானை நேரடியாகக் குறை கூறவில்லை.


கடந்த வாரம் நான் குறிப்பிட்டது போல, கூர்மையான மற்றும் சிந்தனைமிக்க மனதைப் பயன்படுத்தி, இந்தியாவின் இராணுவ உத்தி மற்றும் வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து மறுவடிவமைப்பு செய்ய வேண்டிய நேரம் இது.


Original article:
Share:

வேளாண் காடுகள் வளர்ப்பு கிராமப்புற எதிர்காலத்தை மாற்றும். -குஷி திவாரி

 பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க இது ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், இன்னும் சில சிக்கல்கள் உள்ளன.


"வேளாண் காடுகள் வளர்ப்பு: பசுமை காப்பாளர்" (Agroforestry: the green guardian) என்ற எங்கள் ஆராய்ச்சிக் கட்டுரை, லண்டன் பொருளாதாரப் பள்ளியில் 2024–25ஆம் ஆண்டுக்கான Entente Cordiale Dayக்காக உருவாக்கப்பட்டது. விவசாயிகள் சிறப்பாக வருவாய் ஈட்டவும், காற்றில் இருந்து கார்பனை உறிஞ்சவும், இயற்கையை மீட்டெடுக்கவும் இந்தியாவில் வேளாண் காடுகள் எவ்வாறு வளர முடியும் என்பதை இது ஆராய்கிறது.


இயற்கையைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் வேளாண் காடுகள் ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இது பறவைகள், பூச்சிகள் மற்றும் மண் விலங்குகளுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்குகிறது. மேலும், உள்ளூர் வெப்பநிலையை சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் குறைக்கவும் முடியும். இந்தியாவில், வேளாண் காடுகள் ஒவ்வொரு ஆண்டும் காற்றில் இருந்து சுமார் 68 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை அகற்ற முடியும்.


தற்போது, ​​இந்தியாவில் சுமார் 13.75 மில்லியன் ஹெக்டேர் விவசாயக் காடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது இன்னும் சாத்தியமானவற்றில் ஒரு சிறிய பகுதியாகும். பழ மரங்கள், மரம் மற்றும் மருத்துவ தாவரங்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட வேளாண் காடுகள் உதவும். இது மண்ணின் தரத்தையும் மேம்படுத்துகிறது. மண்ணில் அதிக தண்ணீரை வைத்திருக்கிறது மற்றும் காலநிலை பிரச்சினைகளை சிறப்பாகச் சமாளிக்க பண்ணைகள் உதவுகிறது. இருப்பினும், சில சிக்கல்கள் உள்ளன.


மரங்களை வெட்டுவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான விதிகள் ஒரு பெரிய பிரச்சனை. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, சிறப்பு அனுமதி இல்லாமல் 33 வகையான மரங்களை மட்டுமே வெட்டி மாநிலங்களுக்கு இடையில் கொண்டு செல்ல முடியும். தேக்கு மற்றும் சந்தனம் போன்ற மதிப்புமிக்க மரங்களை வளர்க்க விவசாயிகளுக்கு அனுமதி தேவை. இது அவற்றை நடுவதை கடினமாக்குகிறது மற்றும் கவர்ச்சியற்றதாக ஆக்குகிறது.


மற்றொரு பிரச்சனை புரிதல்  இல்லாதது ஆகும். பல விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தில் எந்த வகையான மரங்கள் சிறப்பாக செயல்படுகின்றன அல்லது கார்பன் வரவுத் திட்டங்களில் எவ்வாறு இனைவது என்பது தெரியாது. சில டிஜிட்டல் கருவிகள் மற்றும் அரசாங்க உதவி இருந்தாலும், மொழி, கல்வி அல்லது இணைய சிக்கல்கள் காரணமாக பல விவசாயிகளால் அவற்றைப் பயன்படுத்த முடியாது.


இதைத் தீர்க்க, அரசாங்கக் கொள்கைகளை விவசாயிகளுக்கு உண்மையான உதவியாக மாற்ற உதவும் AgroConnect என்ற டிஜிட்டல் தளத்தை உருவாக்கத் தொடங்கி உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் புத்திசாலித்தனமான வேளாண் வனவியல் தேர்வுகளைச் செய்து அதிக வருமானம் ஈட்ட தகவல் மற்றும் ஆதரவைப் பெறக்கூடிய ஒரே இடமாக AgroConnect வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த ஆராய்ச்சி கேமரூனையும் ஆய்வு செய்தது. அங்கு விவசாயிகள் பெரும்பாலும் வேளாண் காடு வளர்ப்பை முறைசாரா முறையில் கடைபிடிக்கின்றனர். உள்ளூர் விவசாயிகள் மரங்களையும் பயிர்களையும் ஒன்றாக வளர்க்க வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு வருவாய் ஈட்டவும், இயற்கையைப் பாதுகாக்கவும் உதவுகிறது. ஆனால், தொழில்நுட்ப உதவி மற்றும் சந்தைகளுக்கான அணுகல் இல்லாதது இந்த நடைமுறைகளின் நன்மைகளைக் குறைத்துள்ளது.


கேமரூனிடமிருந்து, ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டோம்: இந்தியா மற்றும் கேமரூன் இரண்டிலும், முக்கிய பிரச்சனை நிலமோ மக்களோ அல்ல. மாறாக, வேளாண் காடு வளர்ப்பை ஆதரிக்க சரியான அமைப்புகள் இல்லாதது.


இந்த ஆராய்ச்சி அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மன்னர் சார்லஸ் III ஆகியோரால் ஆதரிக்கப்படும் நன்கு அறியப்பட்ட பிராங்கோ-பிரிட்டிஷ் போட்டியான (Franco-British competition) Entente Cordiale Day Challenge 2025இன் ஒரு பகுதியாகும். இந்த சவால் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான 120 ஆண்டுகால கூட்டாண்மையை அடிப்படையாகக் கொண்டது. இரு நாடுகளிலும் உள்ள தலைவர்கள் இணைந்து பணியாற்ற ஊக்குவிக்கிறது.


நான் பிரான்சைப் பிரதிநிதித்துவப்படுத்தினேன். கேமரூன் மற்றும் பிரான்சின் அணியினருடன் இணைந்து "காலநிலை மாற்றம், பல்லுயிர் மற்றும் வளரும் நாடுகள்" (“Climate change, biodiversity, and developing countries”) என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை உருவாக்கினேன்.


பிரான்சில் முதல் இடத்தைப் பிடித்தோம். மேலும், அதிபரின் லூபெட் விருதைப் (Loubet Award) பெற்றோம். இது மிக உயர்ந்த கௌரவம். எங்கள் திட்டத்தை லண்டன் பொருளாதார பள்ளியில் (London School of Economics) சமர்ப்பித்தோம். மேலும், இங்கிலாந்து பாராளுமன்றம் (U.K. House of Commons) மற்றும் வெளியுறவு & காமன்வெல்த் அலுவலகத்தில் விவாதித்தோம். மொராக்கோவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் COP22-ன் தலைவருமான சலாஹெடின் மெசோவரிடம் எங்கள் யோசனைகளை முன்வைக்கும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது.


எலிசி அரண்மனை (பிரெஞ்சு ஜனாதிபதியின் வீடு) மற்றும் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு எங்கள் குழு அழைக்கப்பட்டுள்ளது. எங்கள் ஆய்வுக் கட்டுரையை Entente Cordiale சங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  இது எங்கள் பணியின் மதிப்பு மற்றும் ஆற்றலைக் காட்டுகிறது.


இந்தியாவில், விவசாயிகள் கடுமையான காலநிலை அபாயங்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால், சுற்றுச்சூழலுக்கு உதவ பெரிய வாய்ப்புகளும் உள்ளன. வேளாண் வனவியல் அவர்களுக்கு காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும், காலப்போக்கில் அவர்களின் வருமானத்தை மேம்படுத்தவும் உதவும். ஆனால், இதை பெரிய அளவில் செயல்படுத்த, நமக்கு வலுவான கொள்கைகள், நல்ல தொழில்நுட்பம் மற்றும் அமைப்பின் மீதான நம்பிக்கை தேவை.


உள்ளடக்கிய மற்றும் விரிவாக்கக்கூடிய திட்டங்களில் வளங்களைச் செலுத்துவதன் மூலம், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் நகர்வு சாத்தியம் என்பதை மட்டுமல்ல, ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதையும் உறுதிசெய்ய முடியும்.


Original article:
Share: