வருமானம் வளர்ச்சியின் முக்கியமான அங்கமாக இருப்பதால், இந்தியாவில் குறைந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (per capita GDP) மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index (HDI)) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
சமீபத்தில், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme (UNDP)) மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2025-ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, இந்தியா தனது மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டு வரிசையை 193 நாடுகளில் 2022-ஆம் ஆண்டில் 133-ஆவது இடத்திலிருந்து 2023-ஆம் ஆண்டில் 130-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. HDI மதிப்பு 2022-ஆம் ஆண்டில் 0.676-லிருந்து 2023-ஆம் ஆண்டில் 0.685 ஆக முன்னேறியுள்ளது. மொத்த தேசிய தனிநபர் வருமானம் (gross national income per capital) HDIஇன் அங்கங்களில் ஒன்றாகும். இந்த சூழலில் நாம் இங்கே இரண்டு விசயங்களை விவாதிக்கிறோம்: (1) காலப்போக்கில் மனிதவள மேம்பாட்டு குறியீட்டின் முன்னேற்றம்; (2) இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு செயல்திறனில் தனிநபர் வருமானத்தின் பங்கை பற்றியதாகும்.
நாம் 1990 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் முன்னேற்றத்தைப் பார்க்கிறோம். இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு மதிப்பு 1990-ஆம் ஆண்டில் 0.446-லிருந்து 2023-ஆம் ஆண்டில் 0.685-ஆக அதிகரித்துள்ளது. - 33 ஆண்டுகளில் 53 சதவீதம் அதிகரிப்பு மற்றும் ஆண்டுக்கு 1.31 சதவீத வளர்ச்சி (அட்டவணையைப் பார்க்கவும்). இந்தியாவிற்கான மனிதவள மேம்பாட்டு குறியீடு உலகளாவிய மற்றும் தெற்காசிய சராசரிகளைவிட வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
அதே காலகட்டத்தில்: (a) மொத்த தேசிய தனிநபர் வருமானம் $2,167-லிருந்து $9,048 ஆக உயர்ந்தது - நான்கு மடங்கு அதிகரிப்பு; (b) ஆயுட்காலம் (life expectancy) 58.6 ஆண்டுகளிலிருந்து 72 ஆண்டுகளாக உயர்ந்தது. 23 சதவீத அதிகரிப்பு; (c) எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகள் (expected years of schooling) 8.2 ஆண்டுகளிலிருந்து 13 ஆண்டுகளாக உயர்ந்தது. சீர்திருத்தத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும். இருப்பினும், மனிதவள மேம்பாட்டுக் குறியீடு தரவரிசையில் இந்தியா பல நாடுகளைவிட பின்தங்கியுள்ளது. மற்ற BRICS நாடுகளான ரஷ்யா (64), சீனா (75), பிரேசில் (84) தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை (78) இந்தோனேசியா (113) மற்றும் பிலிப்பைன்ஸ் (117) போன்ற சில ஆசிய நாடுகள் இந்தியாவைவிட தரவரிசையில் முன்னணியில் உள்ளன. அதே, நேரத்தில் வங்காளதேசம் (130) ஒரே மாதிரியான தரவரிசையைக் கொண்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில், நேபாளம் (145), மியான்மார் (149) மற்றும் பாகிஸ்தான் (168) போன்ற நாடுகள் மட்டுமே மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவை விட குறைந்த தரவரிசையைக் கொண்டுள்ளன.
தனிநபர் வருமானம் (Per capita income)
மனிதவள மேம்பாட்டு அறிக்கை இந்தியா 2023-ஆம் ஆண்டில் 0.685 HDI மதிப்புடன் நடுத்தர மனித வளர்ச்சி பிரிவில் (medium human development category) உள்ளது மற்றும் 0.700 என்ற உயர் மனித வளர்ச்சி வரம்பிற்கு (High human development threshold) நெருங்கி வருகிறது என்று கூறுகிறது. இருப்பினும், மக்கள்தொகை அழுத்தங்கள் (demographic pressures) காரணமாக தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதால், பல BRICS மற்றும் ஆசிய நாடுகளைப் பிடிக்க இந்தியாவிற்கு அதிக நேரம் எடுக்கும்.
மனித வளர்ச்சியின் முக்கிய பரிமாணங்களான சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் சராசரி சாதனையின் சுருக்கமான அளவீடுதான் மனிதவள மேம்பாட்டு குறியீடு என்பதை கவனத்தில் கொள்ளலாம். ஆரோக்கிய பரிமாணம் பிறப்பின்போதே ஆயுட்காலத்தால் மதிப்பிடப்படுகிறது. கல்வி பரிமாணம் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான சராசரி கல்வி ஆண்டுகள் (mean years of schooling) மற்றும் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள குழந்தைகளுக்கான எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகளால் அளவிடப்படுகிறது. வாழ்க்கைத் தர பரிமாணம் மொத்த தேசிய தனிநபர் வருமானம் (gross national income per capital) மூலம் அளவிடப்படுகிறது.
கல்வி, ஆரோக்கியம், வருமானம் அல்லது நுகர்வு போன்ற வருமானம் அல்லாத குறிகாட்டிகளின் (non-income indicators) முன்னேற்றத்தை காலப்போக்கில் ஆய்வு செய்யலாம் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால், அவை அனைத்தையும் ஒரு குறியீட்டில் மாற்றுவது பல ஒருங்கிணைப்பு சிக்கல்களை (aggregation problems) உருவாக்குகிறது. கொள்கை ரீதியாக, அவை தனிச்சையானதாக இருக்க வேண்டும்.
T.N. ஸ்ரீனிவாசன் 2007-ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டை (HDI) சுட்டிக்காட்டினார். அதன்படி, உடல்நலம், கல்வி மற்றும் வருமானம் போன்ற பல்வேறு விவகாரங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட எடைகளைப் பயன்படுத்துவது அர்த்தமற்றது என்று கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தால் முன்னோடியாகக் கொண்ட மனிதவள மேம்பாட்டுக் குறியீடு, தன்னிச்சையாக எடைபோடப்பட்ட அளவீடு அல்லாத குறியீடுகளின் கூட்டுத்தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது நிச்சயமாக எந்த அர்த்தமுள்ள அர்த்தத்திலும் பல பரிமாணக் கருத்தாக்கம் அல்ல. மாறாக, மற்றொரு தன்னிச்சையான ஒற்றை பரிமாணக் குறியீடாகும்".
மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டை பொறுத்தவரை, மூன்று அங்கங்களும் சமமான பங்களிப்புகளைக் கொண்டுள்ளன. மொத்த தேசிய வருமானம் (Gross National Income (GNI)) தனிநபர் வருமானம் குறியீட்டில் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பை கொண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவின் அடிப்படையில் இந்தியா உலகின் 4-வது அல்லது 5-வது பெரிய பொருளாதாரமாகும் மற்றும் அதன் மொத்த உள் நாட்டு (GDP) பெரிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்த 6-7 சதவீதத்தில் வளர்ந்து வருகிறது. இருப்பினும், வாங்கும் சக்தி சமநிலை (Purchasing Power Parity (PPP)) $9,047 தனிநபர் வருமானம் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் மிகக் குறைவாக உள்ளது.
அட்டவணை மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் அங்கங்களின் தரவரிசைகளை வழங்குகிறது. இந்தியாவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வாங்கும் சக்தி சமநிலை தரவரிசையில் 123 ஆகும். அதே, நேரத்தில் ஆயுட்காலம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகளின் தரவரிசைகள் முறையே 112 மற்றும் 114 ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனிநபர் வருமானத்தின் தரவரிசை சுகாதாரக் கூறு மற்றும் கல்வியின் குறிகாட்டிகளில் ஒன்றைவிட மிகக் குறைவு. கல்வியின் மற்றொரு குறிகாட்டியான சராசரி பள்ளிப்படிப்பு ஆண்டுகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் தரவரிசை 143-ல் மிகவும் குறைவாக உள்ளது.
அதிக மக்கள்தொகை காரணமாக இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைவாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 2000-ஆம் ஆண்டில் நிலையாக இருந்திருந்தால், 2025-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் GNI தனிநபர் வருமானம் வாங்கும் சக்தி சமநிலையில் $12,282 ஆக இருந்திருக்கும். இது 114-ஆவது தரவரிசையைக் கொண்டிருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2000-ஆம் ஆண்டில் மக்கள்தொகை நிலைப்படுத்தப்பட்டிருந்தால் HDI தரவரிசை மிக உயர்ந்ததாக இருந்திருக்கும். எனவே, இந்தியாவில் குறைந்த தனிநபர் வருமானம் அதிக மக்கள்தொகை எண்ணிக்கை காரணமாகும். இது 2050-க்குப் பிறகு மட்டுமே நிலைப்படும். எனவே, இந்தியாவில் குறைந்த அளவிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, HDI வருமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
வருமானம் மனித வளர்ச்சியை தெளிவாக குறிக்கவில்லை என்பதால் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (Human Development Index (HDI)) உருவாக்கப்பட்டது. ஆனால் வருமானம் கணக்கீட்டில் நுழைந்த விதம் ஒரு நாடு முற்றிலும் வருமானத்தின் அடிப்படையில் பெறும் தரவரிசையிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இல்லை. செய்யப்பட்ட ஆய்வு அனைத்து 193 நாடுகளுக்கும் உண்மையான GDP தனிநபர் குறியீடு மற்றும் மனித வளர்ச்சிக் குறியீட்டுக்கு இடையேயான தரவரிசை தொடர்பு கெழு (rank correlation coefficient) 0.97-ல் உயர்ந்ததாக இருப்பதைக் காட்டுகிறது. இருப்பினும், நடுத்தர மனித வளர்ச்சி நாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டுடன் தரவரிசை தொடர்பு கெழு 0.78 ஆகக் குறைவாக இருப்பதைக் காணலாம்.
எங்கள் பகுப்பாய்விலிருந்து இரண்டு முடிவுகள் உள்ளன. முதலாவது, தனிநபர் வருமானத்தின் படி தரவரிசை மற்றும் HDI தரவரிசை மிக நெருக்கமாக உள்ளன. இந்தியாவின் விஷயத்தில், குறைந்த HDI தரவரிசை ஓரளவு அதிக மக்கள்தொகை காரணமாகும். மக்கள்தொகை தொடர்ந்து வளர்வதால் HDI-ல் எங்கள் தரவரிசை குறைவாகவே தொடரும். இது HDI-ன் முக்கியமான அங்கமான வருமானத்தில் நாம் பயணிக்க வேண்டிய தூரத்தை மட்டுமே காட்டுகிறது. தற்போதைய தனிநபர் வருமான நிலையைக் கருத்தில் கொண்டு வேகமாக வளர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
ரங்கராஜன், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் முன்னாள் தலைவர் மற்றும் ரிசர்வே வங்கியின் முன்னாள் ஆளுநர்; தேவ், விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணைய முன்னாள் தலைவர் மற்றும், மும்பை இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தர்.