நிதி ஈவுத்தொகை -தலையங்கம்

 இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய மிகை தொகையை பரிமாற்றம் (surplus transfer) செய்தது. இது அரசாங்க நிதியை சரிசெய்ய உதவும். 


2023-24 ஆம் ஆண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் மிகை தொகை பரிமாற்றம் (surplus transfer)  செய்யப்பட்ட ரூ.2,10,874 கோடியானது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தொகை அடுத்த அரசாங்கத்தின் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு உதவியாக இருக்கும். இந்த பரிமாற்றம் 2022-23 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்ட ₹87,416 கோடியை விட 141% அதிகமாகும். மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கி அரசாங்கத்திற்கு அனுப்பிய மிக உயர்ந்த பணப்பரிமாற்றமாகும். 2019-ம் ஆண்டில் பிமல் ஜலான் குழுவின் (Bimal Jalan committee) ஆலோசனையின் பேரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மூலதன கட்டமைப்பின் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதியான தற்செயல் ஆபத்து இடையகத்திற்கு (contingency risk buffer) பங்களித்த பின்னர் உபரி தீர்மானிக்கப்பட்டது.


மேம்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப, இந்திய ரிசர்வ் வங்கியானது நிதியாண்டு-2024 க்கான அதன் இருப்புநிலைக் குறிப்பில் தற்செயல் ஆபத்து இடையகத்திற்கான (contingency risk buffer) ஒதுக்கீட்டை 6.5% ஆக அதிகரித்தது. மெதுவான வளர்ச்சி மற்றும் தொற்றுநோய் காரணமாக நிதியாண்டு-2019 மற்றும் நிதியாண்டு-2022 க்கு இடையில் இந்த ஒதுக்கீடு 5.5% ஆக இருந்தது.


கடந்த நிதியாண்டில் மிகப் பெரிய மிகைத் தொகை ஏற்பட்டது. ஆனால், ஏன் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு-2024 ஆண்டு அறிக்கை வெளிவரும் போது மட்டுமே நமக்குத் தெரியும். இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தின் பெரும்பகுதி வெளிநாட்டு நாணயத்தில் இருப்பதாலும், 2024 நிதியாண்டில் அது சுமார் 17% வளர்ச்சியடைந்துள்ளதாகவும் ஆரம்ப தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிற முன்னேறிய பொருளாதாரங்களில் உயர்ந்த வட்டி விகிதங்கள் இந்த சொத்துக்களில் இருந்து வருமானங்களை உயர்த்தியிருக்கலாம். இந்தியாவில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் இந்திய அரசாங்க பத்திரங்களிலிருந்து வருமானத்தை அதிகரித்திருக்கும். அந்நியச் செலாவணி சந்தையில் தலையீடுகளிலிருந்து ஆதாயங்களும் பங்களித்தன. செலவினப் பக்கத்தில், உள்நாட்டு பணப்புழக்கம் சரிசெய்தல் வசதி (liquidity adjustment facility (LAF)) செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி செலவு உதவியது. இந்திய ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்பட்டதாக தெரிகிறது. ரூபாய் மற்றும் அரசாங்கப் பத்திரங்களின் வருவாயை சீராக வைத்து விஷயங்களை சமப்படுத்தினார்கள். மேலும், அவர்கள் பெரிய வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ (portfolio) வரவுகளைக் கையாண்டனர். மேலும் அவர்கள் அரசாங்கத்திற்கு மாற்றுவதற்கான உபரியை அதிகப்படுத்தினர்.


2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஈவுத்தொகை மற்றும் உபரியாக கணிக்கப்பட்ட ₹1,02,000 கோடியை விட நிதியாண்டு-2024 இல் அறிவிக்கப்பட்ட உபரி தொகை மிக அதிகம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 முதல் 0.3% வரையிலான கூடுதல் பரிமாற்றம், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் மற்றும் சந்தைக் கடன் வாங்குவதைக் குறைக்கும். மாற்றாக, உள்கட்டமைப்பு செலவினங்களுக்கு ஒன்றிய அரசு நிதியைப் பயன்படுத்தலாம். குறைந்த சந்தை கடன் நிதி ஒருங்கிணைப்பை விரைவுபடுத்த உதவும். இது 2025-26 க்குள் 4.5% நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைய உதவும். காகித விநியோகத்தைக் குறைப்பது என்பது, ரிசர்வ் வங்கியானது அரசு கடன் வாங்குவதற்கு உதவ வேண்டியதில்லை. மாறாக, அதன் ₹70 லட்சம் கோடி இருப்புநிலைக் குறிப்பைக் குறைக்கும். மேலும், குறைவான அரசாங்கப் பத்திரங்கள் G-sec விளைச்சல்கள் மற்றும் சந்தை விகிதங்கள் குறையும், இது பணவியல் கொள்கைக்கு (monetary policy) முக்கியமானது.  




Original article:

Share:

ஈரான் அதிபரின் மரணத்தில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் - அர்ஜுன் சென்குப்தா

 ஞாயிற்றுக்கிழமை மே 19-ஆம் தேதி  ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர். ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த மூடுபனியின் போது இது நடந்தது. விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணத்தை தெஹ்ரான் இன்னும் தெரிவிக்கவில்லை.


இருப்பினும், பல வல்லுநர்கள் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெல் 212 (Bell 212 chopper) ஹெலிகாப்டர் 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மேலும் அது 45 ஆண்டுகள் பழமையானது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பழைய விமானங்கள் நம்பகமானவை மற்றும் பாதுகாப்பானவை என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் ஈரான் ஜனாதிபதி ஏன் இவ்வளவு பழைய ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினார்? 


பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானின் விமானத் துறை


1979 புரட்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஈரான் மீது பல தடைகளை விதித்துள்ளன. 2022-வரை, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வரை, ஈரான் உலகளவில் அதிக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) தெரிவித்துள்ளது. இந்த தடைகள் ஈரானை உலகளவில் தனிமைப்படுத்தி அதன் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறையை கடுமையாக பாதித்துள்ளது.


அல் ஜசீராவின் கூற்றுப்படி, அமெரிக்கத் தடைகள் ஈரானுக்கு 10%க்கும் அதிகமான அமெரிக்கத் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பாகங்களைக் கொண்ட விமானம் அல்லது விமானப் பாகங்கள்  பெறுவதைத் தடுக்கின்றன. இதேபோன்ற தடைகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தனிப்பட்ட மேற்கத்திய நாடுகளாலும் விதிக்கப்படுகின்றன. பெரும்பாலான விமானங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தயாரிக்கப்படுவதால், இந்த தடைகள் தெஹ்ரானை மேற்கத்திய விமானங்களை வாங்குவதையும் அதன் பழைய கடற்படையை இயங்க வைப்பதற்கான பாகங்களைப் பெறுவதையும் நிறுத்துகின்றன.


விமானங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தவிர, பொருளாதாரத் தடைகள் ஈரான் பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியைப் பெறுவதையும் தடுக்கிறது. ரைசியின் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தயாரித்த அமெரிக்க நிறுவனமான பெல் டெக்ஸ்ட்ரான் (Bell Textron), "பெல் ஈரானில் எந்த வியாபாரமும் செய்யவில்லை அல்லது அவர்களின் ஹெலிகாப்டர்களுக்கு உதவவில்லை" என்று கூறினார். ரஷ்ய விமானங்களும் அமெரிக்க பாகங்களைச் சார்ந்துள்ளன. இதன் பொருள் மாஸ்கோவால் தெஹ்ரானுக்கும் முழுமையாக உதவ முடியாது என்பதாகும். கூடுதலாக, உக்ரைன் போர் மற்றும் அதன் விளைவாக பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யாவில்  விமானங்கள் மற்றும் பாகங்கள் குறைவாக உள்ளது.


ஈரானின் வயதான மற்றும் நம்பமுடியாத கடற்படை


பொருளாதாரத் தடைகளின் விளைவாக ஈரானின் பயணிகள் கடற்படையின் சராசரி விமான வயது கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆக்கியுள்ளது.  இது உலகளாவிய சராசரியை விட இரு மடங்கு அதிகம் என்று விமான தரவு குழு சிரியம் (Cirium) தெரிவித்துள்ளது. ஈரான் ஏர், 40ஆண்டுகளுக்கும் மேலான பழமையான விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.ஒப்பிடுகையில், கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் சராசரியாக 9 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை .


ஒரு விமானம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் போது அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. விபத்து விகிதங்களுக்கும் 18 ஆண்டு வரையிலான விமான பயன்பாட்டிற்கும் இடையே தொடர்பு  எதுவும் இல்லை. இருப்பினும், 20 ஆண்டுகளுக்கும் மேலான விமானங்களால் விபத்துகள் அதிகரிக்கிறது என்று பாஸ்டனில் உள்ள மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழக (Massachusetts Institute of Technology, Boston) பேராசிரியரான ஆர் ஜான் ஹான்ஸ்மேனின் விளக்குகிறார். 


பொருளாதாரத் தடைகள் தொடங்கியதிலிருந்து ஈரான் மோசமான விமானப் பாதுகாப்பு பதிவைக் கொண்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு முதல், ஈரானில் 73 விமான விபத்துக்கள் (ஹெலிகாப்டர்கள் தவிர) நடந்துள்ளன. இது 2,286 இறப்புகளை ஏற்படுத்தியது. ஜெனீவாவை தளமாகக் கொண்ட விமான விபத்துக் காப்பகப் பணியகம் (Bureau of Aircraft Accidents Archives  (B3A)) தெரிவித்துள்ளது. 1979 மற்றும் 2002-க்கு இடையில் ஈரானில் 109 விமான விபத்துக்கள் ஏற்பட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் (Aviation Safety Network  (ASN)) கூறுகிறது.


ஒப்பீட்டளவில், இதே காலகட்டத்தில், பாகிஸ்தானில் 42 விபத்துகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக 854 பேர் உயிரிழந்துள்ளனர் என்று B3A தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு, சில மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை நிக்கின. இதன் மூலம் ஈரான் போயிங் (Boeing) மற்றும் ஏர்பஸ் (Airbus) நிறுவனங்களுடன் $40 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்துவிட்டது. இருப்பினும், 2018-ல் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ்  செய்யப்பட்ட மாற்றமானது ஈரான் கடற்படையின் முன்னேற்றத்திற்கு தடைசெய்தது. 


அந்த காலகட்டத்தில் ஈரான் மூன்று ஏர்பஸ் ஜெட் விமானங்கள்  மற்றும்  13 சிறிய சுழல்விசை முந்துகை (turboprop) விமானங்கள் மட்டுமே வாங்க முடிந்தது என்று அல் ஜசீரா (Al Jazeera) அறிக்கை தெரிவித்துள்ளது. 




Original article:

Share:

புனே போர்ஷே விபத்து : இந்தியாவில் உடைந்த குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கம் -மீரான் சதாய் பர்வான்கர்

 கிரிமினல் விசாரணைகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு மேல்முறையீடுகளை விசாரித்து மற்றொரு வருடத்தில் தீர்ப்பளிக்கப்பட்டால், நிலைமை வேறுவிதமாக இருக்கும். சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க பெற்றோர்கள் பயப்படுவார்கள், மேலும் மதுக்கடைக்காரர்கள் அவர்களுக்கு மதுவை வழங்குவதில் எச்சரிக்கையாக இருப்பார்கள். 


பொறுப்பற்ற இளைஞரால் புனேவில் இரண்டு இளம் உயிர்களை இழந்ததற்காக நாடு துக்கம் அனுசரிக்கும் அதே வேளையில், தோல்வியுற்ற குற்றவியல் நீதி அமைப்பின் யதார்த்தத்தை நாம் எதிர்கொள்கிறோம். குடிபோதையில் பணக்கார பையன் அலட்சியமாக நடந்துகொண்டான். அவரது குற்றத்தை மென்மையாகக் கையாளும் போது சிறார் நீதி வாரியம் (Juvenile Justice Board) எவ்வளவு பொறுப்புடன் இருந்தது என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.


கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளை எவ்வாறு கையாள்வது என்பதில் பெரிய சிக்கல் உள்ளது. மக்கள் இப்போது மற்றொரு சோகமான விபத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது 2002-ல் நடிகர் சல்மான் கான் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தை நினைவூட்டுகிறது. இதற்காக, நீதிமன்றம் தீர்ப்பை முடிவு செய்ய 13 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் குற்றவாளி இல்லை என்று  விடுவிக்கப்பட்டார் நமது குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம், தீர்ப்புகள் வழங்க பல ஆண்டுகள் ஆகும். புனேவில் போர்ஷை ஓட்டும் இளைஞர்களைப் போல, சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கவோ அல்லது புறக்கணிக்கவோ சிலருக்கு இது தைரியமாக இருக்கிறது.


நாட்டின் சட்டத்தின் மீதான மரியாதை குறைவாக இருப்பது, விசாரணைகளில் நீண்ட கால தாமதத்தின் நேரடி விளைவாகும். கிரிமினல் விசாரணைகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு மேல்முறையீடுகளை விசாரித்து மற்றொரு வருடத்தில் தீர்ப்பளிக்கப்பட்டால், நிலைமை வேறுவிதமாக இருக்கும். சட்டத்தின் மீது மரியாதை இருக்கும். சிறார்களிடம் கார் சாவியை ஒப்படைக்க பெற்றோர்கள் பயப்படுவார்கள் மற்றும் மதுக்கடைக்காரர்கள் அவர்களுக்கு மதுவை வழங்குவதில் கவனமாக இருப்பார்கள்.


ஆனால், தற்போதைய சூழல் அதற்கு நேர்மாறானது. தேசிய குற்ற பதிவுகள் பணியகம் (National Crime Records Bureau (NCRB)) 2022 அறிக்கையின்படி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் மரணங்கள் சம்பந்தப்பட்ட 90%க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக, நகரங்களில் குறைந்தளவில் தண்டனை விகிதம் 30% ஆகும். மேலும், சாட்சிகளின் தாமதங்கள் காவல்துறையின் புலனாய்வைக் கடினமாக்குகின்றன. குற்றவியல் வழக்குகள் எவ்வாறு விசாரிக்கப்படுகின்றன என்பதை இந்தப் பிரச்சனைகள் மூலம் தெளிவுபடுத்துகின்றன. இந்தியாவில் சட்டப்பூர்வ செயல்முறைகள் அதிக நேரம் எடுக்கும் என்றும், மேலும் இவை சிக்கலானவை என்றும் பலர் நினைக்கிறார்கள். இதனால், பல குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. மாநில மற்றும் மத்திய அரசுகள் நீதித்துறை உள்கட்டமைப்பை ஏன் விரைவாக விசாரணை செய்ய மேம்படுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.


2023 டிசம்பரில், இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கு 21 நீதித்துறை அதிகாரிகள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது சட்ட ஆணையத்தின் (Law Commission) பரிந்துரையான ஒரு மில்லியனுக்கு 50 நீதிபதிகள் என்ற பரிந்துரையை விட மிகக் குறைவு. இந்தியாவில் காவலர்கள்-குடிமக்கள் விகிதம் (police population ratio) 1,00,000 குடிமக்களுக்கு 152 அதிகாரிகள் என்ற வீதத்தில் உள்ளது. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட விகிதம் 1,00,000 குடிமக்களுக்கு 222 அதிகாரிகள் ஆவார். காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (Bureau of Police Research and Development) சமீபத்திய அறிக்கை, ஜனவரி 1, 2022 நிலவரப்படி நாட்டில் காவல்துறை அதிகாரிகளுக்கு சுமார் 4,00,000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளிப்படுத்துகிறது. இருந்தபோதிலும், குற்றவியல் வழக்குகளை மாநில காவல்துறை ஒப்பீட்டளவில் விரைவாக முடித்து வைக்கிறது. இருப்பினும், இதற்கான  தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்.


2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் 75% சாலை விபத்து மரணங்கள் மற்றும் 65% மோதி விட்டு தப்பிச் செல்லுதல் வழக்குகள் (hit-and-run cases) ஒரு வருடத்திற்குள் காவல்துறையால் குற்றப்பத்திரிகை செய்யப்பட்டன. இது 'இந்தியாவில் குற்றம்-2022' (Crime In India-2022) அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு தொழில்நுட்ப பயன்பாட்டில் வழக்கமான பயிற்சி அளிப்பது மற்றும் நன்கு பொருத்தப்பட்ட தடயவியல் ஆய்வகங்கள் மூலம் சிறந்த கண்டறிதல், உயர்தர விசாரணைகள் மற்றும் அதிக தண்டனைகளுக்கு வழிவகுக்கும். ஆச்சரியம் என்னவென்றால், புனேவில் உள்ள வாரியம் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விரைவாக விடுவித்தது. விபத்துகள் குறித்து கட்டுரை எழுதவும், 15 நாட்கள் போக்குவரத்து போலீசாருக்கு உதவவும், கவுன்சிலிங் எடுக்கவும் சொன்னார்கள். இந்த முடிவு நியாயமற்றதாகவும் உணர்ச்சியற்றதாகவும் தெரிகிறது. ஏனெனில், இந்த விபத்தில் இரண்டு இளம் உயிர்கள் பலியாகின. ஆனால், இந்த மெத்தனம் நீதியை கேலிக்கூத்தாகக் கருதப்படுகிறது. புனே காவல்துறை இந்த வழக்கை குற்றமற்ற கொலை என்று பதிவு செய்துள்ளது. இது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய கடுமையான குற்றம் மற்றும் ஒப்பீட்டளவில் 40 சதவிகிதம் சிறந்த தண்டனை விகிதத்தைக் கொண்டுள்ளது. புனே ஜேஜே வாரியத்தின் உடனடி உத்தரவு சம்பந்தப்பட்ட அதிகாரியால் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் நம்புகிறேன். இதற்கிடையில் சிறுவனை மீண்டும் ஆஜராகுமாறு வாரியம் கூறியுள்ளது. போர்ஷே டிரைவரை வயது முதிர்ந்தவராக முயற்சி செய்ய மகாராஷ்டிர அரசின் முடிவு சரியான திசையில் எடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். 


டிசம்பர் 2012 கற்பழிப்பு வழக்கு பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சீற்றத்திற்கு வழிவகுத்தது போலவே, துரதிர்ஷ்டவசமான வழக்கு மற்றும் அப்பாவி இளைஞர்களின் உயிர்கள் சாலைப் பாதுகாப்பு மற்றும் கவனமாக வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு காரணிகளில் நமது அக்கறையின்மையிலிருந்து நம்மை கோபப்படுத்தியது. இது போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு அவர்களின் சொந்த பொறுப்புணர்வை குடிமக்கள் ஏற்றுக்கொள்வதற்கும் பொறுப்பான பெற்றோராக அவர்களின் பங்கிற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். அந்தச் சட்டம், நெறிமுறைகள் இல்லையென்றால், மதுக்கூடம் (bars) மற்றும் கஃபேக்களில் (cafes) போதைப்பொருள் மற்றும் மதுவுடன் இளம்வயதினரை ஈடுபடுபவர்களைத் தடுக்கும். சாலை நீதியை கவனத்தில் கொண்டு வந்ததற்காக பாதிக்கப்பட்ட இளம் பெண்களான அனீஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா ஆகியோர் நினைவுகூரப்படட்டும்.


கட்டுரையாளர், ஐபிஎஸ் அதிகாரி, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் டிஜியாக இருந்து ஓய்வு பெற்றவர்.




Original article:

Share:

இந்தியாவில் வேலையின்மை கடந்த 8 ஆண்டுகளில் அனைத்து சமூகங்களையும் எவ்வாறு பாதித்துள்ளது? எந்த முன்னேற்றமும் இல்லாத 2023-24? -உதித் மிஸ்ரா

 இந்து சமூகத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (other backward caste (OBC)) மற்றும் பட்டியிலடப்பட்ட வகுப்பினர் (scheduled caste (SC)) ஆகிய இரு பிரிவினரும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். 2016-17 மற்றும் 2023-24-க்கு இடையில் இரு வகுப்பினரருக்கும் இடையே வேலைவாய்ப்பு விகிதம் 6.36 சதவீத புள்ளிகள்  குறைந்துள்ளது. 


இந்த ஆண்டு ஏப்ரலில், இந்தியாவின் வாக்காளர்களைப் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி அமைப்பான வளரும் சமூகங்களின் ஆய்வு மையம்  (Centre for the Study of Developing Societies (CSDS-Lokniti)), அதன் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. 2024-ல் வாக்காளர்களுக்கு மிக முக்கியமான  பிரச்சனை  வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்று அது கண்டறிந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் சுமார் 29% பேர் வேலையின்மை தங்கள் வாக்குகளைப் பாதிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். இரண்டாவது பெரிய பிரச்சனை விலைவாசி உயர்வு ஆகும். பதிலளித்தவர்களில் 23% இது மிக முக்கியமான பிரச்சினை என்று கூறியுள்ளனர். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 52% பேர் இந்த இரண்டு கவலைகளையும் ஒன்றாகக் கூறுகின்றனர்.

 

மக்கள் யாருக்கு வாக்களிக்க திட்டமிட்டாலும், இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சனைகள் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு என்பதை பலர் ஒப்புக்கொள்கிறார்கள். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​அரசியல் வாதிகள் மதம் மற்றும் ஜாதிகளுக்கு இடையே  பிளவு ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி பேசி வருகின்றனர். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அதிக விலைவாசிகள் பல்வேறு  பிரிவில் உள்ள மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி அவர்கள் அதிகம் பேசவில்லை.

 

 பிரதமர் மோடியின் ஆட்சியில்  வருமானம் விலைவாசி உயர்வுடன் இருந்ததா என்பதைப் பார்க்க, ExplainSpeaking ஒரு எளிய வழியைக் கொண்டுள்ளது. சம்பளம் 2019-ல் இருந்து குறைந்தது 32% ஆகவும், 2014-ல் இருந்து 64% ஆகவும் அதிகரிக்கவில்லை என்றால், 2014-ல் மோடி பதவியேற்பதற்கு முன் இருந்ததை விட நீங்கள் மோசமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பணவீக்கம் பணக்காரர்களை விட ஏழைகளை அதிகம் பாதிக்கிறது என்றாலும், அது குறிப்பிட்ட மதங்கள் அல்லது சாதிகளை நேரடியாக குறிவைக்கவில்லை.   


வேலையின்மை அனைவரையும் பாதித்துள்ளது. ஆனால் வெவ்வேறு அளவுகளில். 2016-17 முதல் 2023-24 வரை மத மற்றும் சாதிக் குழுக்களிடையே வேலை தொடர்பான பிரச்சினைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) தரவு காட்டுகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தரவு உதவுகிறது. 


ஆனால் தரவுகளைப் பார்ப்பதற்கு முன், இங்கே சில அடிப்படைக் கருத்தியல் புரிதல் உள்ளது. பின்வரும் ஏழு தரவு அட்டவணைகள் பின்வரும் நான்கு மாறிகள் பற்றிய தகவலை வழங்குகின்றன:  


1. உழைக்கும் வயது மக்கள் தொகை (working-age population): இது 15 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகை மட்டுமே. 


2. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)): உழைக்கும் வயது மக்களில் தீவிரமாக வேலை தேடும் நபர்களின் சதவீதம். இது 35 வயதான திருமணமான பெண், வேலை வேட்டையில் ஈடுபடாதவர், 22வயது மாணவர் அல்லது ஓய்வு பெற்ற 65 வயது முதியவர் போன்றவர்களை விலக்குகிறது. LFPR ஒரு பொருளாதாரத்தில் வேலைகளுக்கான தேவையைக் காட்டுகிறது.


3. வேலையின்மை விகிதம் (Unemployment Rate (UER)): வேலையின்மை விகிதம் தீவிரமாக வேலை தேடுபவர்களைக்  குறிக்கிறது.  இது தொழிலாளர் சக்தியின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது. வேலைச் சந்தை எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை அளவிட வேலையின்மை விகிதம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்து வருவதால், வேலையின்மை விகிதம் தவறாக  வழிநடத்தப்படுகிறது. நீண்ட காலமாக வேலையில்லாமல் இருப்பவர்கள் வேலை தேடுவதை நிறுத்தும்போது இது நிகழலாம். எனவே, வேலையின்மை விகிதம் குறைந்தால், அதிக வேலைகள் கிடைக்கும் என்று அர்த்தமில்லை. வேலைச் சந்தையின் முழுப் படத்தைப் புரிந்துகொள்ள வேலையின்மை விகிதம் மற்றும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பது சிறந்தது. 


4. வேலைவாய்ப்பு விகிதம் (Employment Rate (ER)): வேலைவாய்ப்பு விகிதம் இந்தியாவில் வேலைவாய்ப்பின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான மிகவும் நம்பகமான வழியாகக் கருதப்படுகிறது. பணிபுரியும் வயதினரின் மொத்த எண்ணிக்கையை மொத்தமாகப் பிரிப்பதன் மூலம் இது கணக்கிடப்படுகிறது. காலப்போக்கில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் நிறைய மாறும் பொருளாதாரத்தில் வேலையின்மை விகிதத்தை விளக்கும்போது எழும் சிக்கல்களை இந்த அளவீடு தவிர்க்கிறது.


வேலை வாய்ப்பு விகிதம் ஒரு பொருளாதாரத்தில் வேலை எவ்வளவு ஆரோக்கியமானது என்பதைக் காட்ட தெளிவான எணிக்கையை வழங்குகிறது. இது அதிகரித்துக் கொண்டிருந்தால், அதிகமான மக்கள் (உழைக்கும் வயதுடைய மொத்த மக்கள்தொகையின் சதவீதத்தில்) வேலை தேடுகிறார்கள் என்று அர்த்தம். அது குறைகிறது என்றால், மக்கள்தொகையின் சதவீதத்தில் குறைவான நபர்களுக்கு வேலை உள்ளது என்று அர்த்தமாகும்.  

  

உழைக்கும் வயது மக்கள் தொகை:


இந்தியாவின் உழைக்கும் வயது மக்கள் தொகை 2016-17-ல் 96.45 கோடியிலிருந்து 2023-24-ல் 113.86 கோடியாக 18.1% அதிகரித்துள்ளது.


இந்த அதிகரிப்பில் இந்துக்களின் பங்கு 86%, அவர்களின் உழைக்கும் வயது மக்கள் தொகை 18% அதிகரித்துள்ளது.


  முஸ்லீம் மதத்தவரில் உழைக்கும் வயது மக்கள் தொகை 13.5% அதிகரித்துள்ளது. இது உழைக்கும் வயது மக்கள்தொகையில் 9.54% ஆகும்.


கிறிஸ்தவ மதத்தவரில் உழைக்கும் வயது மக்கள்தொகை, சிறியதாக இருந்தாலும், 48% அதிகரித்துள்ளது.


தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labor force participation rate by religion (LFPR)):


இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில், குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை  விட அதிக தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.


LFPR குறைவதை விட காலப்போக்கில் அதிகரிக்கிறது என்றால் அதுசிறந்ததாகக் கருதப்படுகிறது.


இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம்  2016-17ல் குறைவாக இருந்தது மற்றும் எட்டு ஆண்டுகளில் 5.8% குறைந்துள்ளது.  LFPR-ன் மிகப்பெரிய வீழ்ச்சி 86% மக்கள்தொகை கொண்ட இந்துக்களிடமிருந்து வருகிறது. வேலை தேடும் வயதுடைய இந்துக்களின் சதவீதம் 2016-17- ல் 46.6% ஆக இருந்து மார்ச் 2024-ல் 40.53% ஆக குறைந்துள்ளது. இது 6சதவீத புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது.


 முஸ்லிம்கள் தொடர்ந்து குறைந்த LFPR-ஐப் பெற்றுள்ளனர். அவர்களின் சரிவு 5.2 சதவீத புள்ளிகளில் சற்று குறைவாக உள்ளது. 


மத வாரியான வேலையின்மை விகிதம் (Religion-wise Unemployment Rate (UER)):


 தொழிலாளர் பங்கேற்பு விகிதம் வீழ்ச்சியுடன், வேலையின்மை விகிதமும் குறையும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஏனெனில், குறைவான மக்கள் வேலைகளைத் தேடுகிறார்கள். இருப்பினும்,  இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2023-24-ல் 8.03% ஆக இருந்தது, 2016-17-ல் 7.42% அதிகமாக இருந்தது. இந்த ஆண்டுகளுக்கு இடையில், வேலையின்மை விகிதம் வேறுபட்டது. 2017-18-ல் அதன் குறைந்தபட்சமாக 4.69% ஆகவும். COVID-19 தொற்றுநோய்களின் போது 2020-21-ல் 8.73% ஆகவும் இருந்தது.


உழைக்கும் வயதுடைய மக்களில், சுமார் 86% இந்துக்கள், எனவே இந்துக்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் ஒட்டுமொத்த விகிதத்தை பாதிக்கிறது. 2016-17 இல், இது 7.28% ஆக இருந்தது, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது 2020-21 இல் 8.73% ஆக இருந்தது. இது 2022-23ல் 7.59% ஆகக் குறைந்தது, ஆனால் 2023-24ல் 8.07% ஆக உயர்ந்தது.


முஸ்லீம்களிடையே வேலையின்மை விகிதம் 2016-17-ல் அதிகபட்சமாக 8.79% ஆகவும், 2017-18-ல் 5.31% ஆகவும், தொற்றுநோய்களின் போது 2020-21 இல் 9.22% ஆகவும் இருந்தது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.5 சதவீத புள்ளிகள் குறைந்து, 2023-24ல் 8% ஆக முடிந்தது. இது இந்துக்களை விட சற்று குறைவாகும்.


2016-17-ல் சீக்கியர்கள் குறைந்த வேலையின்மை விகிதம் 6.4% ஆக இருந்தது. 2023-24-ல், இது 8.94% ஆக உயர்ந்தது. இது அனைத்து சமூகங்களுக்கும் வேலையின்மை அதிகமாக இருந்தபோது, ​​2020-21 கோவிட்-19 ஆண்டில் 9.09% ஆக இருந்தது.


மதம் வாரியான வேலைவாய்ப்பு விகிதம்:


இந்தியாவில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம்  5.6 சதவீத  புள்ளிகள் குறைந்துள்ளது.  வேலை செய்யும் வயதுடைய இந்தியர்களின் சதவீதம் 2016-17-ல் 42.8% ஆக இருந்து 2023-24-ல் 37.2% ஆகக் குறைந்துள்ளது.


  இந்துக்கள் மத்தியில் வேலைவாய்ப்பு விகிதம் மிகப்பெரிய சரிவைக் கண்டது. 2023-24-ல் கிட்டத்தட்ட 6 சதவீத புள்ளிகள் குறைந்து 37.26% ஆக இருந்தது.


2016-17-ல் முஸ்லிம்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் மிகக் குறைவாக இருந்தது மற்றும் 2023-24 இல் 4.45 சதவீத புள்ளிகள் குறைந்து 35.5% ஆக இருந்தது, இது அனைத்து மத சமூகங்களிலும் மிகக் குறைவு.


இந்துக்களுக்குள் இருக்கும் சாதிகள் குறித்து:


கடந்த எட்டு ஆண்டுகளில் இந்துக்களிடையே வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்று தரவு காட்டுகிறது. ஆனால், இந்துக்களுக்குள் எந்த சாதியினர் அதிக வேலை இழப்பை சந்தித்துள்ளனர்? கண்டுபிடிக்க, குறிப்பிட்ட தரவு அட்டவணைகளைப் பார்க்க வேண்டும்.


சாதி வாரியாக உழைக்கும் வயது மக்கள் தொகை:


உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் 60% பேர்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மேலும் 23% பேர் பட்டியலிடப்பட்ட சாதியினராக உள்ளனர். இந்த இரு பிரிவினரும் இந்துக்களின் மொத்த உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 82% ஆகவும், அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.


சாதி வாரியான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR):


அனைத்து சாதியினருக்கும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது. இருப்பினும்,  உயர் சாதி இந்துக்கள் மிகக் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை கொண்டுள்ளனர்.


சாதி வாரியான வேலையின்மை விகிதம்:


தொழிலாளர் பங்கேற்பு விகிதம்  குறையும் போது, ​​வேலையின்மை விகிதம் குறைய வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு இது நிகழ்கிறது. அங்கு வேலையின்மை விகிதம் 7.7% லிருந்து 7.4% ஆக குறைகிறது. ஆனால், உயர் சாதி இந்துக்களுக்கு இது பொருந்தாது. அவர்களின் UER 2016-17-ல் 8.62% ஆக இருந்தது. ஆனால், 2023-24-ல் 9.83% ஆக உயர்ந்தது.  

 

சாதி வாரியான வேலைவாய்ப்பு விகிதம் (Employment Rate):


 அனைத்து சாதிகளிலும் வேலைவாய்ப்பு விகிதங்கள் குறைந்துள்ளன.    2016-17-ல் உயர் சாதியினருடன் ஒப்பிடும்போது அதிக வேலையின்மை விகிதம் கொண்டிருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023-24-ல் அவர்களின் வேலை வாய்ப்பு விகிதங்கள் (Employment Rate) உயர் சாதியினருக்கு 4.21 சதவீத புள்ளி வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது, ​​இரு பிரிவினருக்கும் 6.36 சதவீத புள்ளிகள் குறைவாக இருந்தன. 


 உயர் சாதி இந்துக்கள் 2016-17 -ல் மிகக் குறைந்த வேலைவாய்ப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர். மேலும், இந்தப் போக்கு இன்னும் குறைந்த மட்டத்தில் இருந்தாலும் தொடர்கிறது.




Original article:

Share:

இந்திய ஆயுதப்படைகள் ஒருங்கிணைந்த அரங்கு கட்டளைகளுக்கு (integrated theatre commands) மாறுவது ஏன்? -அம்ரிதா நாயக் தத்தா

 இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்தத் திட்டம்,  மோதல் அல்லது போரின் போது வரையறுக்கப்பட்ட இராணுவ இலக்குகளுடன் குறிப்பிட்ட எதிரி அடிப்படையிலான அரங்குகளில் கூட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


ஒருங்கிணைந்த அரங்கு கட்டளைகளை (integrated theatre commands) உருவாக்குவதற்கான வரைவை இந்திய ஆயுதப்படைகள் சிறப்பாகச் செய்து வருகின்றன. 


இந்த சீர்திருத்தமானது, இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை (Indian Air Force (IAF)) ஆகியவற்றைத் தெளிவான இராணுவ பாதுகாப்பு நோக்கங்களுடன் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019-ம் ஆண்டில் பாதுகாப்புப் படைத் தலைவர் (Chief of Defence Staff (CDS)) பதவியை உருவாக்கி, இந்த திட்டத்தின் மாற்றத்தை மேற்பார்வையிட இராணுவ விவகாரத் துறையை (Department of Military Affairs (DMA)) அமைப்பதன் மூலம் அரசாங்கமானது இந்த சீர்திருத்தத்தைத் தொடங்கியது. பி.ஜே.பி தனது தேர்தல் அறிக்கையில் மிகவும் திறமையான நடவடிக்கைகளுக்கு இராணுவ அரங்கு கட்டளைகளை (military theatre commands) நிறுவுவதாக உறுதியளித்தது.


இந்தியாவின் அரங்கு கட்டளைகளுக்கு (theatre commands) சிறந்த மாதிரியைக் கண்டறிய கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இறுதி ஒப்புதலை அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.


தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, தற்போதுள்ள திட்டத்தை மேன்மைப்படுத்த இன்னும், விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கீழ் மட்டங்களில் சேவைகளை ஒருங்கிணைக்க மற்ற முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.  மூன்று பாதுகாப்புச் சேவைகளும் தற்போது, தனித்தனியாக அவற்றின் தனிப்பட்ட செயல்பாட்டுக் கட்டளைகளின் கீழ் இயங்குகின்றன. 

 

அரங்குமயமாக்கலில் (Theaterisation)  மூன்று சேவைகளிலிருந்தும் குறிப்பிட்ட பிரிவு பணியாளர்களை ஒரே அரங்கு கட்டளையாளர்களின் (single theatre commander) கீழ் வைக்க வேண்டும். இதனால், அவர்கள் ஒரு போர் அல்லது மோதலில் ஒரே குழுவாக இணைந்து போராடுகிறார்கள். மேலும், இதன் செயல்பாட்டில் தனிப்பட்ட சேவைகளின் மனிதவளம் மற்றும் வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துகிறார்கள். 


மூன்று சேவைகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டுள்ளன. அரங்கு கட்டளைகள் (theatre commands) நிறுவப்படும் போது, இந்த சேவைகளின் பணியாளர்கள், சொத்துக்கள், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றை அவை ஒன்றாகக் கொண்டுவரும். இந்த ஒருங்கிணைப்பு, குறிப்பிட்ட செயல்பாட்டுப் பகுதிகளில் இராணுவ இலக்குகளை அடைய சுமூகமாக இணைந்து செயல்பட உதவும். 

 

ஆயுதப்படைகள் ஏற்கனவே அதிக ஒருங்கிணைப்பை நோக்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மும்பையை முதல் முத்தரப்பு பொது பாதுகாப்பு நிலையமாக மாற்றுவது  (first tri-service common defence) மற்றும் விநியோகச் சங்கிலிகள் (supply chains) மற்றும் சேவைகளுக்கு இடையேயான இடுகைகளை சீராக்க நாடு முழுவதும் கூட்டு தளவாட முனைகளை அமைப்பது ஆகியவை திட்டங்களில் அடங்கும். 


கட்டளைகள் மற்றும் தலைமையகம்


இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனவரி 2023 இல், இராணுவத்தின் சமீபத்திய வரைவு மூன்று எதிரி அடிப்படையிலான அரங்கு கட்டளைகளைக் (theatre commands) கொண்டுள்ளது. பாகிஸ்தானை எதிர்கொள்ளும் ஒரு மேற்கத்திய அரங்கு கட்டளை (theatre commands), சீனாவை எதிர்கொள்ளும் வடக்கு அரங்கு கட்டளை (theatre commands) மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருந்து வெளிப்படும் அச்சுறுத்தல்களுக்கான கடல் அரங்கு கட்டளை (maritime theatre command) ஆகும்.


ஜெய்ப்பூரில் மேற்கு அரங்கு கட்டளையையும் (western theatre command), லக்னோவில் வடக்கு அரங்கு கட்டளையையும் (northern theatre command) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கார்வார் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை பரிசீலனையில் இருந்தாலும், கடல்சார் அரங்கு கட்டளைக்கு (maritime theatre command) கோயம்புத்தூரில் தலைமையிடம் அமைக்கப்படலாம். 


முந்தைய வரைவுகள் சேவைகளுக்கு இடையேயான விவாதங்களின் அடிப்படையில் மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன. ஒரு வான் பாதுகாப்பு ஆணையகம், கூடுதல் அரங்க கட்டளைகள், ஒரு கூட்டு தளவாட கட்டளையகம், ஒரு விண்வெளி கட்டளை மற்றும் ஒரு பயிற்சி கட்டளை ஆகியவற்றிற்கான திட்டங்கள் இருந்தன. இருப்பினும், இதற்கான கட்டமைப்பு மற்றும் அரங்கு கட்டளைகளின் எண்ணிக்கை குறித்து சேவைகளிடையே கருத்து வேறுபாடுகள் தற்போதைய திட்டத்தை வருவதற்கு முன்பு பல மாற்றங்களுக்கு வழிவகுத்தன. 


பகுத்தறிவு செயல்முறை 


அரங்கு கட்டளைகளை உருவாக்குவது எப்படி தற்போதைய சேவை கட்டளைகளை மேலும் ஒழுங்கமைக்கச் செய்யும்? 

 

தற்போது, இராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்கு தலா ஏழு கட்டளைகளும், கடற்படைக்கு மூன்று கட்டளைகளும் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளை மற்றும் இராஜதந்திர படைகள் கட்டளை (Strategic Forces Command (SFC)), தலைமையகம் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களும் (Headquarters Integrated Defence Staff (HQIDS)) ஆகிய இரண்டு முத்தரப்பு கட்டளைகளும் உள்ளன. 


இதில், அரங்கு கட்டளைகளை உருவாக்கிய பிறகு, சேவைகளின் மூன்று கட்டளை தலைமையகங்கள் அரங்கு கட்டளை (theatre command) தலைமையகமாக மாறும். தற்போது, அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளை அரங்கு கட்டளைகளில் ஏதேனும் ஒன்றில் சேர்க்கப்படலாம். மேலும், தலைமையகம் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களும் (Headquarters Integrated Defence Staff (HQIDS)), பாதுகாப்புப் படைத் தலைவரின் கீழ் செயல்படும். இராஜதந்திர படைகள் கட்டளை (Strategic Forces Command (SFC)) தொடர்ந்து சுதந்திரமாக செயல்படும்.


ஜெனரல் அல்லது அதற்கு சமமான பதவியில் இருக்கும் அதிகாரிகள் மூன்று அரங்கு கட்டளைகளுக்கு தலைமை தாங்குவார்கள். அவர்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு அறிக்கை அளிப்பார்கள். மேலும், துணை பாதுகாப்புப் படைத் தலைவர்  ஆகியோரை நியமிக்கும் திட்டங்களும் உள்ளன. துணை பாதுகாப்புப் படைத் தலைவர், ஒரு பொது அல்லது அதற்கு சமமான, இராஜதந்திர திட்டமிடல், திறன் மேம்பாடு மற்றும் கொள்முதல் ஆகியவற்றைக் கையாளுவார். துணை பாதுகாப்புப் படைத் தலைவர், ஒரு லெப்டினன்ட் ஜெனரல் அல்லது அதற்கு சமமானவர். அரங்குகளின் செயல்பாடுகள், உளவுத்துறை மற்றும் அதற்கான சொத்து ஒதுக்கீடு ஆகியவற்றை நிர்வகிப்பார்.


முப்படைகளின் தலைவர்களும் சேவைகளை உயர்த்துதல், பயிற்சி அளித்தல் மற்றும் நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்கள். மூன்று அரங்கு கட்டளையாளர்கள் (theatre commanders) செயல்பாடுகளை கையாளுவார்கள். இந்த திட்டங்கள் எதுவும் இதுவரை அரசின் இறுதி ஒப்புதலைப் பெறவில்லை.




Original article:

Share:

ஐரோப்பாவில் சீனாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கான பயணம் -மனோஜ் ஜோஷி

 சவாலான புவிசார் அரசியல்  சூழலுக்கு இடையே , சீன அதிபரின் ஐரோப்பா பயணம் நன்கு திட்டமிடப்பட்டு இருந்தது.     

  

சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யாவைத் தவிர்த்து, ஐந்தாண்டுகளில் முதல் முறையாக இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தார். அவர் பிரான்ஸ், செர்பியா மற்றும் ஹங்கேரிக்கும் பயணம் செய்தார். ஐரோப்பாவிற்கு அதன் சொந்த போர்த்திறன் சுதந்திரம் (“strategic autonomy”) வேண்டும் என்ற கருத்தை பிரான்ஸ் ஆதரிக்கிறது. செர்பியா வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO)) அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லை மற்றும் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. மறுபுறம், ஹங்கேரி அதன் ரஷ்ய சார்பு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றது மற்றும் சீனாவை விமர்சிக்கும் ஐரோப்பிய ஒன்றிய தீர்மானங்களை அடிக்கடி எதிர்க்கிறது. 

 

உலக நிகழ்வுகள், வருகையின் இலக்குகள் 


கோவிட்-19 தொற்றுநோய் சீனாவைத் தனிமைப்படுத்தியது. பொருளாதார சிக்கல்கள் காரணமாக அதன் உலகளாவிய முதலீட்டு இலக்குகளை பாதித்தது. ஜி ஜின்பிங் இரண்டரை ஆண்டுகளாக வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரும் குறைவாகவே பயணம் செய்தார். இந்த காலகட்டத்தில், உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீனா-அமெரிக்கா  வர்த்தகப் போர் தீவிரமடைந்தது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தொழில்நுட்ப மோதலாக மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டிலும், சீனா நியாயமற்ற முறையில் குறைந்த விலையில் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து. அதற்கு பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த சர்ச்சைகளில் பல மின்சார வாகனங்கள் (electric vehicles (EV)) தயாரிப்பில், சீனா இப்போது  உலகளவில்  முன்னணியில் உள்ளது.


ஜி ஜின்பிங்கிற்கு மூன்று முக்கிய இலக்குகள் இருந்தன : ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருப்பதைத் தடுப்பது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக மோதலைத் தவிர்ப்பது மற்றும் ஐரோப்பாவில் சீனாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவது. உக்ரைன்-ரஷ்ய போரினால் அவர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். இது ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளை மேலும் ஒன்றிணைத்து, மறைமுகமாக சீனாவை பாதித்தது. இது சீனாவின் வர்த்தகக் கொள்கைகளில் எதிர்மறையான ஐரோப்பிய ஒன்றியக் கருத்துக்களையும் பாதித்தது. 


பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் பிரெஞ்சு (Emmanuel Macron) வர்த்தக நலன்களை நலன்களை மேம்படுத்துதல் மற்றும் மாஸ்கோவிற்கு ஆயுத பாகங்களை வழங்குவதை நிறுத்த சீனாவுக்கு  வலியுறுத்துவதை நோக்கம் கொண்டிருந்தார். ஜின்பிங்கின் வருகைக்கு முன்னர் அவர் திபெத்திய பிரதமர் பென்பா செரிங்கையும் (Penpa Tsering) சந்தித்து ஒரு செய்தியை அனுப்பினார்.  


பாரிசில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லையனை (Ursula von der Leyen) சந்தித்தார். அவர் சீன இறக்குமதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் சீனாவிலிருந்து "ஆபத்து குறைப்பு" (“de-risking”) கொள்கையை ஆதரித்தார். திரு. மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் இருவரும் சீனாவை ஐரோப்பாவுடன் தனது வர்த்தகத்தை சமநிலைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.


சீன மின்சார வாகனங்கள்  ஐரோப்பிய கார்களை விட குறைவாக இருப்பது ஒரு பிரச்சனை என்று பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொள்கின்றன.  சீனா தனது மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறது. ஆனால், ஐரோப்பா தனது சொந்த கார் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க விரும்புகிறது.


2019-ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம், சீனாவை "ஒத்துழைப்புக்கான ஒரு பங்காளி, ஒரு பொருளாதார போட்டியாளர் மற்றும் ஒரு முறையான போட்டியாளர்" என்று வரையறுத்தது. சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, போக்குவரத்து விளக்குகள் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் காட்டும்போது வாகனம் ஓட்டுவது போன்ற குழப்பம் என்று விமர்சித்தார். ஆனால், இந்த சிக்கலான திட்டம் ஐரோப்பாவின் சீனா கொள்கையை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் அபாயங்களைக் கருத்தில் கொண்டு பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்புகிறது.


ஹங்கேரி மீது கவனம்


செர்பியா மற்றும் ஹங்கேரியில் சீன அதிபர் திரு. ஜி பிங்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. செர்பியாவில் சீனாவின் நேரடி முதலீடு அதிகரித்து, $5.5 பில்லியன் எட்டுகிறது. இந்த முதலீட்டில் பெரும்பகுதி செப்பு சுரங்கம் மற்றும் எஃகு செயலாக்க ஆலைக்கு செல்கிறது. பெல்கிரேட்-புடாபெஸ்ட் (Belgrade-Budapest) அதிவேக இரயில் பாதையை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. மேலும், சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட சீன ஆதரவுடன் மேலும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான திட்டங்கள் உள்ளன. கிழக்கு ஹங்கேரியில் உள்ள சீன தொழிற்சாலைகளை மேற்கு ஐரோப்பிய சந்தைகளுடன் ரயில்வே வழியாக இணைக்கும் திட்டமும் உள்ளது. ஒரு பெரிய சீன பேட்டரி நிறுவனமான  Contemporary Amperex Technology Co., Limited (CATL), ஜெர்மன் மின்சார வாகன தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதற்காக ஹங்கேரியில் ஒரு ஆலையை உருவாக்குகிறது. மற்றொரு சீன மின்சார வாகன நிறுவனமான Build Your Dreams (BYD), தனது முதல் ஐரோப்பிய தொழிற்சாலையை தெற்கு ஹங்கேரிய நகரமான Szeged-இல்  நிறுவுகிறது.


இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக ஹங்கேரி உள்ளது. இது உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டத்திற்கு சீனாவுக்கு அணுகலை வழங்குகிறது. ஹங்கேரியின்  கொள்கைகள் அதன் கிழக்கு ஐரோப்பிய அண்டை  நாடுகளிடலிருந்து வேறுபட்டது. அவர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எச்சரிக்கையாக உள்ளனர்.


மேற்கு ஐரோப்பிய சந்தைகளை அணுக 17 + 1  எனப்படும் சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா (China and Eastern Europe (CEE)) சமூகத்தின் மூலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதை சீனா நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை ஆதரிப்பதால், உக்ரைன் போர் இந்த உறவுகளை சீர்குலைத்தது. போருக்கு முன்னரே, சீனா மேற்கு ஐரோப்பாவில் கவனம் செலுத்தியதால் சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா முன்முயற்சி ஈர்ப்பை இழந்தது, ஏனெனில் சீனா முக்கியமாக மேற்கு ஐரோப்பாவில் கவனம் செலுத்துவதை நாடுகள் உணர்ந்தன.


சீனாவின் திட்டங்களுக்கு ஐரோப்பா முக்கியமானது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் (Belt and Road Initiative (BRI)) ஒரு பகுதியாக சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மத்திய ஆசியா வழியாக ரயில் பாதைகளை உருவாக்குவது ஒரு பெரிய திட்டமாகும். ஐரோப்பாவிற்கான தூரத்தை வேகமான ரயில்கள் மூலம் குறைக்க சீனா விரும்புகிறது. இதனை அவர்களின் மேம்பட்ட தயாரிப்புகளுக்கு ஒரு பெரிய சந்தையாகக் கருதுகிறார்கள்.   


உலகளவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, சவாலான புவிசார் அரசியலுக்கு மத்தியில் ஐரோப்பாவில் சீன நலன்களைப் பாதுகாப்பதை திரு. ஜி ஜின்பிங் நோக்கமாகக் கொண்டுள்ளார். எவ்வாறாயினும், ஹங்கேரி மற்றும் செர்பியாவிற்கான பயணங்கள், நட்பை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுடன் சீனாவின் உறவுகளை மேம்படுத்தாது, ஏனெனில், ஐரோப்பா நாடுகள் சீனாவைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர்.


மனோஜ் ஜோஷி,  புது தில்லியிலுள்ள  Observer Research Foundation இல் சிறப்பு ஆய்வராக உள்ளார்.




Original article:

Share:

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு வழங்க வேண்டுமா? -அரூன் தீப்

 இந்த மாத தொடக்கத்தில், சேவை குறைபாட்டை தவிர்ப்பதற்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (Consumer Protection Act), 1986-ன் கீழ் வழக்கறிஞர்களை பொறுப்பேற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சட்டத்தின் கீழ் மருத்துவ நிபுணர்களை பொறுப்பேற்க வைத்த 1995-ம் ஆண்டு முடிவை மறுபரிசீலனை செய்யவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. மருத்துவத் துறையை உள்ளடக்கிய சட்டத்தின் கீழ் 'சேவைகள்' என்பதன் வரையறை மறுபரிசீலனை செய்யப்படும். இந்த விவகாரம் பெரிய அமர்வு முன் வைக்கப்படும். வழக்கறிஞர்களைப் போலவே மருத்துவர்களும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டுமா? ராஜேஸ்வரி சேகர், சரோஜா சுந்தரம் ஆகியோர் அருண் தீப்பிடம் கேள்வி குறித்து விவாதிக்கின்றனர். 


நோயாளிகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது பொருத்தமானதா?


ராஜேஸ்வரி சேகர் : 1995-ம் ஆண்டின் வழக்கை மறுபரிசீலனை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது. இது 'சேவை' (service) என்ற வார்த்தையை தெளிவுபடுத்தும். இந்திய மருத்துவ சங்கம் vs. V.P. சாந்தா வழக்கு முக்கியமானது. மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளனர். மருத்துவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் மற்றும் மக்களுக்கு சிறப்பு சேவைகளை வழங்குகிறார்கள். இதை வேறு எந்த தொழிலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மனித உடல்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக செயல்படுகின்றன. இதனால் அதிகளவில் பணி மற்றும் ஆராய்ச்சி குறித்த மருத்துவ நடைமுறைக்கு செல்கிறது. மேலும், பல அறுவை சிகிச்சைகள் உயர் தொழில்நுட்பம் கொண்டவை. இதனால், நோயாளிகளுக்கு கவனமாக கவனிப்பு மிக அவசியம்.


ஆனால் சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களும் உள்ளனர். அவர்கள் மருத்துவரின் கட்டணத்தையோ, மருத்துவமனை கட்டணத்தையோ செலுத்த விரும்பவில்லை. சலசலப்பை உருவாக்கி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். இது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஒரு வேதனையான அனுபவமாக மாறுகிறது. ஆனால், பொதுவாக சம்மந்தப்பட்ட நடைமுறை நன்றாக நடக்கும்போது, நோயாளிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால், அந்த நடைமுறைகள் தவறாக நடக்கும்போது, மருத்துவரையும் மருத்துவமனையையும் குற்றம் சாட்டுகிறார்கள். இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. புகார்களுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் பல சோதனைகளுக்கு உத்தரவிடுகிறார்கள். இது அதிக  செலவுகளுக்கு வழிவகுக்கிறது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும். இந்த வழியில், கருத்து வேறுபாடு இருந்தால், அவர்கள் தங்கள் செயல்களில் சரியானவர்கள் என்பதைக் காட்டலாம்.


சரோஜா சுந்தரம் : நோயாளிகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது பொருத்தமானது. ஏனென்றால், அது இல்லாமல், குறைகளை நிவர்த்தி செய்ய அவர்களுக்கு ஒரு பயனுள்ள அமைப்பு இல்லை. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் (Indian Medical Council Act), 1956 ஆனது, தவறான நடத்தையை வரையறுக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அல்லது குடும்பங்களுக்கு பயனளிக்காது. தேசிய மருத்துவ ஆணையமானது, நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நுகர்வோருக்கான உரிமைகளைப் பாதுகாக்கிறது.  குடிமை மற்றும் குற்றவியல் சட்டங்கள் இரண்டிலும் விதிகள் உள்ளன. ஆனால், நோயாளிகள் இறந்தால் மட்டுமே குற்றவியல் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. குடிமை சட்டம் ஒரு இதற்கான தீர்வை வழங்குகிறது. ஆனால், இதை பெற பல விதிகள், கட்டணங்கள் மற்றும் தாமதங்களுடன் நீண்ட சோதனைகளை உள்ளடக்கியது. இதனால் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு செல்ல விரும்புவதில்லை. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்பது நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய நோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒரு பயனுள்ள சட்டமாகும். மேலும், இதில் நுகர்வோர் யார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு நபர் ஒரு பொருளை அல்லது சேவையை பயன்படுத்துவதற்காக வாங்கும்போது, சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி அவர் நுகர்வோர் ஆவார். மருத்துவத் தொழிலைப் பொறுத்தவரை, இது ஒரு வணிகம் அல்ல, ஆனால் பெரும்பாலும் செலவுடன் தொடர்புடைய சேவையாகும்.


வி.பி. சாந்தா வழக்கின் தீர்ப்பு, மருத்துவர்-நோயாளி உறவு சேவைக்கான ஒப்பந்தம் என்றும், அது மருத்துவ சேவைச் சட்டத்தின் கீழ் வருகிறது என்றும் விளக்குகிறது. இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயனளிக்கிறது. அது இல்லாமல், நோயாளிகள் எங்கு உதவியை நாடுவார்கள்?


மருத்துவ புகார்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் வாய்ப்புகள் என்ன?


ராஜேஸ்வரி சேகர் : சில நேரங்களில், மருத்துவ வல்லுநர்கள் பெரிய தவறுகளை செய்கிறார்கள். அப்போது, சட்ட நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது. ஆனால் யாராவது ஒரு நல்ல வேலையைச் செய்து இன்னும் சந்தேகத்தை எதிர்கொள்ளும்போது என்ன செய்வது? நோயாளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதன்மூலம் தொடங்குகிறார்கள். பின்னர், அவர்கள் மாவட்ட மன்றத்திற்கும், பின்னர் மேல்முறையீட்டில் மாநில ஆணையத்திற்கும், பின்னர் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கும் செல்கிறார்கள். அப்போது, நிரபராதி என்பதை நிரூபிக்க 10 வருடங்கள் ஆகும். இது உண்மையில் மருத்துவர்களின் தகுதியை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.  மருத்துவர் உதவி வழங்குகிறார். அவர் ஒரு வழக்கறிஞரைப் போல மிகவும் திறமையானவர். நோயாளிக்கு உதவ அவர் தயாராக இருக்கிறார். ஆனால் சிக்கல்கள் உள்ளன. தாமதங்கள் மற்றும் தேவையற்ற வழக்குகள். சிலர் டாக்டர்களுக்கு பணம் கொடுக்க மறுப்பதால், பிரச்னைகளை உருவாக்குகின்றனர். இது மருத்துவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, மருத்துவத்தைப் பற்றி நிறைய அறிந்தவர்கள் மற்றும் இந்த வழக்குகளைக் கையாளக்கூடிய ஒருவரை டாக்டர்கள் சங்கங்கள் பொறுப்பேற்றால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால், அது நீண்ட நேரம் எடுக்கும். நீதிமன்றங்கள் சொந்தமாக முடிவுகளை எடுக்க முடியாது; அவர்களுக்கு மருத்துவர்களின் குழுக்களிடமிருந்து நிபுணர் கருத்துகள் தேவை. எனவே, அந்த படிநிலையை நாம் தவிர்க்கலாம்.


சரோஜா சுந்தரம் : 1995 தீர்ப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer Protection Act) நோயாளிகளுக்கு முறைகேடுகளை எதிர்த்து தீர்வு காண ஒரு வழியை வழங்குகிறது. இந்த சட்டம் நோயாளிகளுக்கு பயனளிக்கிறது. சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தீர்வுகள் நோயாளிக்கு மிகவும் சாதகமாக உள்ளன. இத்தனை ஆண்டுகளில் இந்தச் சட்டத்தின் கீழ் தீர்வு முகமைகளால் வழங்கப்பட்ட நியாயமற்ற அல்லது பொருத்தமற்ற தீர்ப்பின் எந்தவொரு வழக்கையும் சுட்டிக்காட்ட முடியாது என்று நான் நினைக்கிறேன். சிக்கல் மிகவும் சிக்கலானதாக இருந்தால் நிபுணர்களின் கருத்து கேட்கப்படுகிறது, பின்னர் மட்டுமே வழக்குகள் முடிவு செய்யப்படும்.


நுகர்வோரைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது ஒரு உண்மையான முறைகேடாக இருக்கும் அல்லது நோயாளி அல்லது அவரது குடும்பத்தினர் மருத்துவரால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உறுதியாக நம்ப வைக்கப்படும். சரியான நேரத்தில் போதுமான தகவல்களை வழங்காதது இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். நுகர்வோர் ஆணையங்களில் ஏற்படும் தாமதம் கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், இதற்கான வழக்குகளை கையாள்வதில் 10-12 ஆண்டுகள் தாமதம் செய்வது சட்டத்தின் நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இது புகார்களுக்கு விரைவான தீர்வு வழங்குவதாகும்.


நுகர்வோர் மன்றங்கள் மருத்துவ புகார்களுக்கு ஏற்றதாக இல்லை என்றால் மாற்று வழிமுறை எப்படி இருக்கும்?


சரோஜா சுந்தரம் : முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கை என்பது வேறு, பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்குவது வேறு. காப்பீடு, வங்கி மற்றும் மின்சாரத் துறைகளில் குறைதீர்ப்பாளர்கள் இருப்பதைப் போலவே, மருத்துவ சிக்கல்களுக்கும் ஒரு தனிப்பட்ட அதிகாரம் இருக்கலாம். நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்ய நுகர்வோருக்கு இன்னும் விருப்பம் இருக்க வேண்டும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் நீதியானது, மருத்துவ அலட்சியத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


குறை தீர்க்கும் மன்றங்கள் உள்ளார்ந்த அபாயங்களிலிருந்து தவறான மற்றும் பாதகமான விளைவுகளுக்கு இடையில் வேறுபடுகின்றனவா? மருத்துவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?


இராஜேஸ்வரி சேகர் : ஒரு வலுவான ஒழுங்குமுறை ஆணையமானது, மருத்துவ நிபுணர்களைக் கண்காணித்து என்ன நடக்கிறது என்பதைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவர்களுக்கு இருக்க வேண்டும். 


ஏதேனும் பிரச்சனையில் சிக்கினால் பாதுகாப்பாக இருப்பதற்காக  மருத்துவர்கள் சந்தா செலுத்தும் மருத்துவ இழப்பீட்டுக் காப்பீடு உள்ளது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால் அது கடினமான செயலாகும்.


சரோஜா சுந்தரம் : சில தீர்ப்புகள் நுகர்வோருக்கு எதிராக உள்ளன. ஒவ்வொரு மருத்துவரும் குற்றம் சாட்டப்படுவதில்லை, ஒவ்வொரு வழக்கும் நுகர்வோருக்கு சாதகமாக இல்லை. ஆணையங்கள் வழக்குகளை கவனத்துடன் கையாள்கின்றன.   

 

மருத்துவப் பதிவுகளைப் பராமரிப்பதற்கான சரிபார்ப்புப் பட்டியல் நெறிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம். தகவலறிந்த ஒப்புதலைப் பெறுதல், நடைமுறைகளுக்கு முன் அது சார்ந்த அபாயங்களைத் தெளிவாக விளக்குதல், செயல்முறை விளைவுகளைப் பகிர்தல் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டால் நோயாளிகளை உடனடியாகப் பரிந்துரைத்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் மருத்துவர்கள் வழக்குகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகின்றன.


ராஜேஸ்வரி சேகர், சென்னையில் 18 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட மருத்துவ-சட்ட நிபுணர் ஆவார்.  சரோஜா சுந்தரம், சென்னையைச் சேர்ந்த சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக் ஷன் குரூப்பின் நிர்வாக இயக்குநராக இருப்பவர்.




Original article:

Share: