இந்தியாவில் வேலையின்மை கடந்த 8 ஆண்டுகளில் அனைத்து சமூகங்களையும் எவ்வாறு பாதித்துள்ளது? எந்த முன்னேற்றமும் இல்லாத 2023-24? -உதித் மிஸ்ரா

 இந்து சமூகத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (other backward caste (OBC)) மற்றும் பட்டியிலடப்பட்ட வகுப்பினர் (scheduled caste (SC)) ஆகிய இரு பிரிவினரும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். 2016-17 மற்றும் 2023-24-க்கு இடையில் இரு வகுப்பினரருக்கும் இடையே வேலைவாய்ப்பு விகிதம் 6.36 சதவீத புள்ளிகள்  குறைந்துள்ளது. 


இந்த ஆண்டு ஏப்ரலில், இந்தியாவின் வாக்காளர்களைப் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி அமைப்பான வளரும் சமூகங்களின் ஆய்வு மையம்  (Centre for the Study of Developing Societies (CSDS-Lokniti)), அதன் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. 2024-ல் வாக்காளர்களுக்கு மிக முக்கியமான  பிரச்சனை  வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்று அது கண்டறிந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் சுமார் 29% பேர் வேலையின்மை தங்கள் வாக்குகளைப் பாதிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். இரண்டாவது பெரிய பிரச்சனை விலைவாசி உயர்வு ஆகும். பதிலளித்தவர்களில் 23% இது மிக முக்கியமான பிரச்சினை என்று கூறியுள்ளனர். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 52% பேர் இந்த இரண்டு கவலைகளையும் ஒன்றாகக் கூறுகின்றனர்.

 

மக்கள் யாருக்கு வாக்களிக்க திட்டமிட்டாலும், இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சனைகள் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு என்பதை பலர் ஒப்புக்கொள்கிறார்கள். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​அரசியல் வாதிகள் மதம் மற்றும் ஜாதிகளுக்கு இடையே  பிளவு ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி பேசி வருகின்றனர். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அதிக விலைவாசிகள் பல்வேறு  பிரிவில் உள்ள மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி அவர்கள் அதிகம் பேசவில்லை.

 

 பிரதமர் மோடியின் ஆட்சியில்  வருமானம் விலைவாசி உயர்வுடன் இருந்ததா என்பதைப் பார்க்க, ExplainSpeaking ஒரு எளிய வழியைக் கொண்டுள்ளது. சம்பளம் 2019-ல் இருந்து குறைந்தது 32% ஆகவும், 2014-ல் இருந்து 64% ஆகவும் அதிகரிக்கவில்லை என்றால், 2014-ல் மோடி பதவியேற்பதற்கு முன் இருந்ததை விட நீங்கள் மோசமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பணவீக்கம் பணக்காரர்களை விட ஏழைகளை அதிகம் பாதிக்கிறது என்றாலும், அது குறிப்பிட்ட மதங்கள் அல்லது சாதிகளை நேரடியாக குறிவைக்கவில்லை.   


வேலையின்மை அனைவரையும் பாதித்துள்ளது. ஆனால் வெவ்வேறு அளவுகளில். 2016-17 முதல் 2023-24 வரை மத மற்றும் சாதிக் குழுக்களிடையே வேலை தொடர்பான பிரச்சினைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) தரவு காட்டுகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தரவு உதவுகிறது. 


ஆனால் தரவுகளைப் பார்ப்பதற்கு முன், இங்கே சில அடிப்படைக் கருத்தியல் புரிதல் உள்ளது. பின்வரும் ஏழு தரவு அட்டவணைகள் பின்வரும் நான்கு மாறிகள் பற்றிய தகவலை வழங்குகின்றன:  


1. உழைக்கும் வயது மக்கள் தொகை (working-age population): இது 15 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகை மட்டுமே. 


2. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)): உழைக்கும் வயது மக்களில் தீவிரமாக வேலை தேடும் நபர்களின் சதவீதம். இது 35 வயதான திருமணமான பெண், வேலை வேட்டையில் ஈடுபடாதவர், 22வயது மாணவர் அல்லது ஓய்வு பெற்ற 65 வயது முதியவர் போன்றவர்களை விலக்குகிறது. LFPR ஒரு பொருளாதாரத்தில் வேலைகளுக்கான தேவையைக் காட்டுகிறது.


3. வேலையின்மை விகிதம் (Unemployment Rate (UER)): வேலையின்மை விகிதம் தீவிரமாக வேலை தேடுபவர்களைக்  குறிக்கிறது.  இது தொழிலாளர் சக்தியின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது. வேலைச் சந்தை எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை அளவிட வேலையின்மை விகிதம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்து வருவதால், வேலையின்மை விகிதம் தவறாக  வழிநடத்தப்படுகிறது. நீண்ட காலமாக வேலையில்லாமல் இருப்பவர்கள் வேலை தேடுவதை நிறுத்தும்போது இது நிகழலாம். எனவே, வேலையின்மை விகிதம் குறைந்தால், அதிக வேலைகள் கிடைக்கும் என்று அர்த்தமில்லை. வேலைச் சந்தையின் முழுப் படத்தைப் புரிந்துகொள்ள வேலையின்மை விகிதம் மற்றும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பது சிறந்தது. 


4. வேலைவாய்ப்பு விகிதம் (Employment Rate (ER)): வேலைவாய்ப்பு விகிதம் இந்தியாவில் வேலைவாய்ப்பின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான மிகவும் நம்பகமான வழியாகக் கருதப்படுகிறது. பணிபுரியும் வயதினரின் மொத்த எண்ணிக்கையை மொத்தமாகப் பிரிப்பதன் மூலம் இது கணக்கிடப்படுகிறது. காலப்போக்கில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் நிறைய மாறும் பொருளாதாரத்தில் வேலையின்மை விகிதத்தை விளக்கும்போது எழும் சிக்கல்களை இந்த அளவீடு தவிர்க்கிறது.


வேலை வாய்ப்பு விகிதம் ஒரு பொருளாதாரத்தில் வேலை எவ்வளவு ஆரோக்கியமானது என்பதைக் காட்ட தெளிவான எணிக்கையை வழங்குகிறது. இது அதிகரித்துக் கொண்டிருந்தால், அதிகமான மக்கள் (உழைக்கும் வயதுடைய மொத்த மக்கள்தொகையின் சதவீதத்தில்) வேலை தேடுகிறார்கள் என்று அர்த்தம். அது குறைகிறது என்றால், மக்கள்தொகையின் சதவீதத்தில் குறைவான நபர்களுக்கு வேலை உள்ளது என்று அர்த்தமாகும்.  

  

உழைக்கும் வயது மக்கள் தொகை:


இந்தியாவின் உழைக்கும் வயது மக்கள் தொகை 2016-17-ல் 96.45 கோடியிலிருந்து 2023-24-ல் 113.86 கோடியாக 18.1% அதிகரித்துள்ளது.


இந்த அதிகரிப்பில் இந்துக்களின் பங்கு 86%, அவர்களின் உழைக்கும் வயது மக்கள் தொகை 18% அதிகரித்துள்ளது.


  முஸ்லீம் மதத்தவரில் உழைக்கும் வயது மக்கள் தொகை 13.5% அதிகரித்துள்ளது. இது உழைக்கும் வயது மக்கள்தொகையில் 9.54% ஆகும்.


கிறிஸ்தவ மதத்தவரில் உழைக்கும் வயது மக்கள்தொகை, சிறியதாக இருந்தாலும், 48% அதிகரித்துள்ளது.


தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labor force participation rate by religion (LFPR)):


இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில், குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை  விட அதிக தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.


LFPR குறைவதை விட காலப்போக்கில் அதிகரிக்கிறது என்றால் அதுசிறந்ததாகக் கருதப்படுகிறது.


இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம்  2016-17ல் குறைவாக இருந்தது மற்றும் எட்டு ஆண்டுகளில் 5.8% குறைந்துள்ளது.  LFPR-ன் மிகப்பெரிய வீழ்ச்சி 86% மக்கள்தொகை கொண்ட இந்துக்களிடமிருந்து வருகிறது. வேலை தேடும் வயதுடைய இந்துக்களின் சதவீதம் 2016-17- ல் 46.6% ஆக இருந்து மார்ச் 2024-ல் 40.53% ஆக குறைந்துள்ளது. இது 6சதவீத புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது.


 முஸ்லிம்கள் தொடர்ந்து குறைந்த LFPR-ஐப் பெற்றுள்ளனர். அவர்களின் சரிவு 5.2 சதவீத புள்ளிகளில் சற்று குறைவாக உள்ளது. 


மத வாரியான வேலையின்மை விகிதம் (Religion-wise Unemployment Rate (UER)):


 தொழிலாளர் பங்கேற்பு விகிதம் வீழ்ச்சியுடன், வேலையின்மை விகிதமும் குறையும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஏனெனில், குறைவான மக்கள் வேலைகளைத் தேடுகிறார்கள். இருப்பினும்,  இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2023-24-ல் 8.03% ஆக இருந்தது, 2016-17-ல் 7.42% அதிகமாக இருந்தது. இந்த ஆண்டுகளுக்கு இடையில், வேலையின்மை விகிதம் வேறுபட்டது. 2017-18-ல் அதன் குறைந்தபட்சமாக 4.69% ஆகவும். COVID-19 தொற்றுநோய்களின் போது 2020-21-ல் 8.73% ஆகவும் இருந்தது.


உழைக்கும் வயதுடைய மக்களில், சுமார் 86% இந்துக்கள், எனவே இந்துக்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் ஒட்டுமொத்த விகிதத்தை பாதிக்கிறது. 2016-17 இல், இது 7.28% ஆக இருந்தது, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது 2020-21 இல் 8.73% ஆக இருந்தது. இது 2022-23ல் 7.59% ஆகக் குறைந்தது, ஆனால் 2023-24ல் 8.07% ஆக உயர்ந்தது.


முஸ்லீம்களிடையே வேலையின்மை விகிதம் 2016-17-ல் அதிகபட்சமாக 8.79% ஆகவும், 2017-18-ல் 5.31% ஆகவும், தொற்றுநோய்களின் போது 2020-21 இல் 9.22% ஆகவும் இருந்தது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.5 சதவீத புள்ளிகள் குறைந்து, 2023-24ல் 8% ஆக முடிந்தது. இது இந்துக்களை விட சற்று குறைவாகும்.


2016-17-ல் சீக்கியர்கள் குறைந்த வேலையின்மை விகிதம் 6.4% ஆக இருந்தது. 2023-24-ல், இது 8.94% ஆக உயர்ந்தது. இது அனைத்து சமூகங்களுக்கும் வேலையின்மை அதிகமாக இருந்தபோது, ​​2020-21 கோவிட்-19 ஆண்டில் 9.09% ஆக இருந்தது.


மதம் வாரியான வேலைவாய்ப்பு விகிதம்:


இந்தியாவில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம்  5.6 சதவீத  புள்ளிகள் குறைந்துள்ளது.  வேலை செய்யும் வயதுடைய இந்தியர்களின் சதவீதம் 2016-17-ல் 42.8% ஆக இருந்து 2023-24-ல் 37.2% ஆகக் குறைந்துள்ளது.


  இந்துக்கள் மத்தியில் வேலைவாய்ப்பு விகிதம் மிகப்பெரிய சரிவைக் கண்டது. 2023-24-ல் கிட்டத்தட்ட 6 சதவீத புள்ளிகள் குறைந்து 37.26% ஆக இருந்தது.


2016-17-ல் முஸ்லிம்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் மிகக் குறைவாக இருந்தது மற்றும் 2023-24 இல் 4.45 சதவீத புள்ளிகள் குறைந்து 35.5% ஆக இருந்தது, இது அனைத்து மத சமூகங்களிலும் மிகக் குறைவு.


இந்துக்களுக்குள் இருக்கும் சாதிகள் குறித்து:


கடந்த எட்டு ஆண்டுகளில் இந்துக்களிடையே வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்று தரவு காட்டுகிறது. ஆனால், இந்துக்களுக்குள் எந்த சாதியினர் அதிக வேலை இழப்பை சந்தித்துள்ளனர்? கண்டுபிடிக்க, குறிப்பிட்ட தரவு அட்டவணைகளைப் பார்க்க வேண்டும்.


சாதி வாரியாக உழைக்கும் வயது மக்கள் தொகை:


உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் 60% பேர்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மேலும் 23% பேர் பட்டியலிடப்பட்ட சாதியினராக உள்ளனர். இந்த இரு பிரிவினரும் இந்துக்களின் மொத்த உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 82% ஆகவும், அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.


சாதி வாரியான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR):


அனைத்து சாதியினருக்கும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது. இருப்பினும்,  உயர் சாதி இந்துக்கள் மிகக் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை கொண்டுள்ளனர்.


சாதி வாரியான வேலையின்மை விகிதம்:


தொழிலாளர் பங்கேற்பு விகிதம்  குறையும் போது, ​​வேலையின்மை விகிதம் குறைய வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு இது நிகழ்கிறது. அங்கு வேலையின்மை விகிதம் 7.7% லிருந்து 7.4% ஆக குறைகிறது. ஆனால், உயர் சாதி இந்துக்களுக்கு இது பொருந்தாது. அவர்களின் UER 2016-17-ல் 8.62% ஆக இருந்தது. ஆனால், 2023-24-ல் 9.83% ஆக உயர்ந்தது.  

 

சாதி வாரியான வேலைவாய்ப்பு விகிதம் (Employment Rate):


 அனைத்து சாதிகளிலும் வேலைவாய்ப்பு விகிதங்கள் குறைந்துள்ளன.    2016-17-ல் உயர் சாதியினருடன் ஒப்பிடும்போது அதிக வேலையின்மை விகிதம் கொண்டிருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023-24-ல் அவர்களின் வேலை வாய்ப்பு விகிதங்கள் (Employment Rate) உயர் சாதியினருக்கு 4.21 சதவீத புள்ளி வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது, ​​இரு பிரிவினருக்கும் 6.36 சதவீத புள்ளிகள் குறைவாக இருந்தன. 


 உயர் சாதி இந்துக்கள் 2016-17 -ல் மிகக் குறைந்த வேலைவாய்ப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர். மேலும், இந்தப் போக்கு இன்னும் குறைந்த மட்டத்தில் இருந்தாலும் தொடர்கிறது.




Original article:

Share: