ஐரோப்பாவில் சீனாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கான பயணம் -மனோஜ் ஜோஷி

 சவாலான புவிசார் அரசியல்  சூழலுக்கு இடையே , சீன அதிபரின் ஐரோப்பா பயணம் நன்கு திட்டமிடப்பட்டு இருந்தது.     

  

சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யாவைத் தவிர்த்து, ஐந்தாண்டுகளில் முதல் முறையாக இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தார். அவர் பிரான்ஸ், செர்பியா மற்றும் ஹங்கேரிக்கும் பயணம் செய்தார். ஐரோப்பாவிற்கு அதன் சொந்த போர்த்திறன் சுதந்திரம் (“strategic autonomy”) வேண்டும் என்ற கருத்தை பிரான்ஸ் ஆதரிக்கிறது. செர்பியா வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO)) அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லை மற்றும் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. மறுபுறம், ஹங்கேரி அதன் ரஷ்ய சார்பு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றது மற்றும் சீனாவை விமர்சிக்கும் ஐரோப்பிய ஒன்றிய தீர்மானங்களை அடிக்கடி எதிர்க்கிறது. 

 

உலக நிகழ்வுகள், வருகையின் இலக்குகள் 


கோவிட்-19 தொற்றுநோய் சீனாவைத் தனிமைப்படுத்தியது. பொருளாதார சிக்கல்கள் காரணமாக அதன் உலகளாவிய முதலீட்டு இலக்குகளை பாதித்தது. ஜி ஜின்பிங் இரண்டரை ஆண்டுகளாக வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரும் குறைவாகவே பயணம் செய்தார். இந்த காலகட்டத்தில், உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீனா-அமெரிக்கா  வர்த்தகப் போர் தீவிரமடைந்தது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தொழில்நுட்ப மோதலாக மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டிலும், சீனா நியாயமற்ற முறையில் குறைந்த விலையில் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து. அதற்கு பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த சர்ச்சைகளில் பல மின்சார வாகனங்கள் (electric vehicles (EV)) தயாரிப்பில், சீனா இப்போது  உலகளவில்  முன்னணியில் உள்ளது.


ஜி ஜின்பிங்கிற்கு மூன்று முக்கிய இலக்குகள் இருந்தன : ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருப்பதைத் தடுப்பது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக மோதலைத் தவிர்ப்பது மற்றும் ஐரோப்பாவில் சீனாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவது. உக்ரைன்-ரஷ்ய போரினால் அவர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். இது ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளை மேலும் ஒன்றிணைத்து, மறைமுகமாக சீனாவை பாதித்தது. இது சீனாவின் வர்த்தகக் கொள்கைகளில் எதிர்மறையான ஐரோப்பிய ஒன்றியக் கருத்துக்களையும் பாதித்தது. 


பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் பிரெஞ்சு (Emmanuel Macron) வர்த்தக நலன்களை நலன்களை மேம்படுத்துதல் மற்றும் மாஸ்கோவிற்கு ஆயுத பாகங்களை வழங்குவதை நிறுத்த சீனாவுக்கு  வலியுறுத்துவதை நோக்கம் கொண்டிருந்தார். ஜின்பிங்கின் வருகைக்கு முன்னர் அவர் திபெத்திய பிரதமர் பென்பா செரிங்கையும் (Penpa Tsering) சந்தித்து ஒரு செய்தியை அனுப்பினார்.  


பாரிசில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லையனை (Ursula von der Leyen) சந்தித்தார். அவர் சீன இறக்குமதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் சீனாவிலிருந்து "ஆபத்து குறைப்பு" (“de-risking”) கொள்கையை ஆதரித்தார். திரு. மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் இருவரும் சீனாவை ஐரோப்பாவுடன் தனது வர்த்தகத்தை சமநிலைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.


சீன மின்சார வாகனங்கள்  ஐரோப்பிய கார்களை விட குறைவாக இருப்பது ஒரு பிரச்சனை என்று பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொள்கின்றன.  சீனா தனது மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறது. ஆனால், ஐரோப்பா தனது சொந்த கார் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க விரும்புகிறது.


2019-ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம், சீனாவை "ஒத்துழைப்புக்கான ஒரு பங்காளி, ஒரு பொருளாதார போட்டியாளர் மற்றும் ஒரு முறையான போட்டியாளர்" என்று வரையறுத்தது. சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, போக்குவரத்து விளக்குகள் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் காட்டும்போது வாகனம் ஓட்டுவது போன்ற குழப்பம் என்று விமர்சித்தார். ஆனால், இந்த சிக்கலான திட்டம் ஐரோப்பாவின் சீனா கொள்கையை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் அபாயங்களைக் கருத்தில் கொண்டு பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்புகிறது.


ஹங்கேரி மீது கவனம்


செர்பியா மற்றும் ஹங்கேரியில் சீன அதிபர் திரு. ஜி பிங்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. செர்பியாவில் சீனாவின் நேரடி முதலீடு அதிகரித்து, $5.5 பில்லியன் எட்டுகிறது. இந்த முதலீட்டில் பெரும்பகுதி செப்பு சுரங்கம் மற்றும் எஃகு செயலாக்க ஆலைக்கு செல்கிறது. பெல்கிரேட்-புடாபெஸ்ட் (Belgrade-Budapest) அதிவேக இரயில் பாதையை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. மேலும், சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட சீன ஆதரவுடன் மேலும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான திட்டங்கள் உள்ளன. கிழக்கு ஹங்கேரியில் உள்ள சீன தொழிற்சாலைகளை மேற்கு ஐரோப்பிய சந்தைகளுடன் ரயில்வே வழியாக இணைக்கும் திட்டமும் உள்ளது. ஒரு பெரிய சீன பேட்டரி நிறுவனமான  Contemporary Amperex Technology Co., Limited (CATL), ஜெர்மன் மின்சார வாகன தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதற்காக ஹங்கேரியில் ஒரு ஆலையை உருவாக்குகிறது. மற்றொரு சீன மின்சார வாகன நிறுவனமான Build Your Dreams (BYD), தனது முதல் ஐரோப்பிய தொழிற்சாலையை தெற்கு ஹங்கேரிய நகரமான Szeged-இல்  நிறுவுகிறது.


இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக ஹங்கேரி உள்ளது. இது உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டத்திற்கு சீனாவுக்கு அணுகலை வழங்குகிறது. ஹங்கேரியின்  கொள்கைகள் அதன் கிழக்கு ஐரோப்பிய அண்டை  நாடுகளிடலிருந்து வேறுபட்டது. அவர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எச்சரிக்கையாக உள்ளனர்.


மேற்கு ஐரோப்பிய சந்தைகளை அணுக 17 + 1  எனப்படும் சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா (China and Eastern Europe (CEE)) சமூகத்தின் மூலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதை சீனா நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை ஆதரிப்பதால், உக்ரைன் போர் இந்த உறவுகளை சீர்குலைத்தது. போருக்கு முன்னரே, சீனா மேற்கு ஐரோப்பாவில் கவனம் செலுத்தியதால் சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா முன்முயற்சி ஈர்ப்பை இழந்தது, ஏனெனில் சீனா முக்கியமாக மேற்கு ஐரோப்பாவில் கவனம் செலுத்துவதை நாடுகள் உணர்ந்தன.


சீனாவின் திட்டங்களுக்கு ஐரோப்பா முக்கியமானது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் (Belt and Road Initiative (BRI)) ஒரு பகுதியாக சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மத்திய ஆசியா வழியாக ரயில் பாதைகளை உருவாக்குவது ஒரு பெரிய திட்டமாகும். ஐரோப்பாவிற்கான தூரத்தை வேகமான ரயில்கள் மூலம் குறைக்க சீனா விரும்புகிறது. இதனை அவர்களின் மேம்பட்ட தயாரிப்புகளுக்கு ஒரு பெரிய சந்தையாகக் கருதுகிறார்கள்.   


உலகளவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, சவாலான புவிசார் அரசியலுக்கு மத்தியில் ஐரோப்பாவில் சீன நலன்களைப் பாதுகாப்பதை திரு. ஜி ஜின்பிங் நோக்கமாகக் கொண்டுள்ளார். எவ்வாறாயினும், ஹங்கேரி மற்றும் செர்பியாவிற்கான பயணங்கள், நட்பை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுடன் சீனாவின் உறவுகளை மேம்படுத்தாது, ஏனெனில், ஐரோப்பா நாடுகள் சீனாவைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர்.


மனோஜ் ஜோஷி,  புது தில்லியிலுள்ள  Observer Research Foundation இல் சிறப்பு ஆய்வராக உள்ளார்.




Original article:

Share: