இலவச உணவு, நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) கீழ் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா என்பதை நிபுணர்கள் தீர்மானிக்க வேண்டும் -ஜியா ஹக்

 5,00,000 தொலைதூர நியாய விலைக் கடைகளின் வலையமைப்பைக் கொண்ட பொது விநியோக முறை (public distribution system(PDS)) அல்லது PDS-ன் கீழ் இலவச ரேஷன் பொருட்களை எவ்வாறு "நடத்துவது" என்பது குறித்து நிபுணர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு விவாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. 


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) 2013-ன் கீழ் கிட்டத்தட்ட 800 மில்லியன் மக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவானது, பணவீக்கக் கணக்கீடுகளில் (inflation calculations) இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க விரும்புகிறது. இது புதிய, புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டை (consumer price index (CPI)) உருவாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். இது சில்லறை விலையில் ஏற்படும் மாற்றங்களை அளவிடும்.


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு விவாதக் கட்டுரையை வெளியிட்டுள்ளதாவது, பொது விநியோக முறையின் (public distribution system (PDS)) மூலம் விநியோகிக்கப்படும் இலவச உணவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த நிபுணர்களின் கருத்துகளை இது குறிப்பிடுகிறது. PDS ஆனது 500,000 நியாய விலைக் கடைகளின் வலையமைப்பை உள்ளடக்கியது.


குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) 2022-23 தொடங்கப்பட்ட பிறகு, 2012 முதல் 2024 வரை நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படை ஆண்டை (base year) திருத்தம் செய்வதற்கு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) முடிவு செய்தது. தற்போது, அடிப்படை ஆண்டை (base year) மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது என்று நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து இலவச பொது விநியோக முறையின் (public distribution system (PDS)) மூலம் பொருட்களை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார். இதற்கான, நிபுணர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜனவரி 15 ஆகும். 


வேகமாக மாறிவரும் நுகர்வு முறைகளைக் கருத்தில் கொண்டு, பொதுவான பொருட்கள் மற்றும் சேவைகளின் பொதுவான சில்லறை விலைகளில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் துல்லியமாக கண்காணிக்க நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மறுசீரமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கும், அதற்கு மேலே இருப்பவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும். PDS ரேஷன் ஆனது, முன்பு அதிக மானியத்துடன் வழங்கப்பட்டது. 


நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும் பயனாளிகள், ஒரு கிலோ அரிசிக்கு 3 ரூபாய், ஒரு கிலோ கோதுமைக்கு 2 ரூபாய், சிறுதானியங்களுக்கு 1 ரூபாய் என்ற பெயரளவு விலையை இன்னும் செலுத்த வேண்டியிருந்தது. 2023 முதல், அரசாங்கம் தானியங்களை இலவசமாக வழங்கத் தொடங்கியது. 2021 முதல், இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இது முக்கியமாக வானிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் அதிகரித்துள்ளது.


நிபுணர்களின் கூற்றுப்படி, தற்போதைய CPI மாதிரி இரண்டு முக்கிய காரணங்களால் காலாவதியானதாகிவிட்டது. ஒன்று, தற்போதைய நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 2012 உடன் குறியிடப்படுகிறது. இது அடிப்படை ஆண்டு (base year) என்று அழைக்கப்படுகிறது. இதை பத்தாண்டிற்கும் மேலாக வரம்பை நிர்ணயிக்கிறது. அடிப்படை ஆண்டில் விலைகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைக் கணக்கிட ஒரு குறிப்பு நிலையாக (reference point) செயல்படுகிறது. இது 2024 வரை புதுப்பிக்கப்படுகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


இரண்டாவதாக, குடும்பங்களின் நுகர்வு-செலவு முறைகள் 2012 முதல் மாறிவிட்டன. நுகர்வோர் பொதுவாக தங்கள் ஒட்டுமொத்த செலவினங்களின் விகிதாச்சாரமாக உணவுக்கு குறைவாக செலவிடுகிறார்கள். உணவு மற்றும் பான வகை தற்போதைய CPI உள்ளடக்கத்தில் 54.2% ஆகும். 


"புதிய CPI நடவடிக்கையில் உணவு போன்ற இலவச சமூக இடமாற்றங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பது பற்றிய தெளிவான புரிதல் எங்களுக்குத் தேவை" என்று அந்த அதிகாரி கூறினார்.


சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்களின்படி, CPI ஆனது குடும்பங்களின் இறுதி நுகர்வு செலவினங்களை மட்டுமே சேர்க்க வேண்டும். உணவு போன்ற இலவச சமூக இடமாற்றங்கள் குறியீட்டிலிருந்து விலக்கப்பட வேண்டும்.


கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தைச் சேர்ந்த அரிஹந்த் வாஜ்பாய், IMF பரிந்துரைத்தபடி, பணவீக்கக் கணக்கீடு பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றார்.

                     



Original article:

Share:

பயிர்களைப் பாதுகாத்தல் -சலீல் சிங்லக் ரவி

 வேளாண் இடுபொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான சில நடவடிக்கைகள். 


மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சந்தையில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரமற்ற தன்மையை சுட்டிக்காட்டினார். இதற்காக கடுமையான சட்டங்களை கொண்டு வரலாம் என்று அவர் மேலும் பரிந்துரைத்தார். முன்மொழியப்பட்ட பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா (Pesticide Management Bill (PMB)) 2020 ஆனது, 1968-ம் ஆண்டின் பூச்சிக்கொல்லிச் சட்டத்தை (Insecticides Act) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தரமற்ற பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்க குற்றவியல் குற்றச்சாட்டுகள் உட்பட கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த முயல்கிறது.


இருப்பினும், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டுக்கு தண்டனை நடவடிக்கைகள் அவசியமில்லை. இதற்கு உள்கட்டமைப்பு மற்றும் திறமையான தொழிலாளர்கள் முதலீடு தேவை. உற்பத்தியாளர்களும் உயர் தரத்திற்கு உறுதியளிக்க வேண்டும். தயாரிப்பு பதிவு, சந்தை மாதிரி மற்றும் நம்பகமான ஆய்வக சோதனை ஆகியவற்றிற்கும் வலுவான மற்றும் வெளிப்படையான ஒழுங்குமுறை அமைப்பு தேவைப்படுகிறது.


மருந்து மாதிரி (Pharma model) 


மருந்துத் தொழில் ஒரு பயனுள்ள உதாரணத்தை வழங்குகிறது. 2003-ம் ஆண்டில், QR குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடுமையான அமலாக்கத்தின் காரணமாக போலி பூச்சிகொல்லி மருந்துகளின் விற்பனையை குறைக்க உதவியது.


சுகாதார அமைச்சகம் இந்திய தர கவுன்சிலுடன் (Quality Council of India (QCI)) இணைந்து செயல்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசின் சுகாதார சேவைகளை (Central Government Health Services (CGHS)) மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஒரு பெரிய சீர்திருத்தத்தில், மத்திய அரசின் சுகாதார சேவை (CGHS) நல்ல உற்பத்தி நடைமுறைகளை (Good Manufacturing Practices (GMP)) மேம்படுத்தியுள்ளது. டிசம்பர் 2024-ம் ஆண்டுக்குள் இந்தப் புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.


வேளாண் இரசாயனத் தொழிலிலும் இதேபோன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைத் தேவைப்படுகிறது. முதலில், தேவையான உற்பத்தி உள்கட்டமைப்பு (manufacturing infrastructure) மற்றும் நற்சான்றிதழ்களைக் (credentials) கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பதிவானது (registration) வழங்கப்பட வேண்டும். மதிப்பீட்டு வழிகாட்டுதல்கள் சீரானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். கூடுதலாக, சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL)) மற்றும் நல் ஆய்வக பயிற்சியின் (Good Laboratory Practice (GLP)) அங்கீகாரத்துடன் மத்திய பூச்சிக்கொல்லி ஆய்வகத்தை (Central Insecticides Laboratory) புதுப்பிப்பது முக்கியம். மாநில அளவிலான பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். முழு டிஜிட்டல் பதிவு அமைப்பு (digitized registration system) நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவும்.


உயிரி தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology) மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) ஆகியவை வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கான ஒப்புதல்களுக்கான பங்கு, பொறுப்புகள், செயல்பாடுகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை விவரிக்க விரிவான வழிகாட்டுதல் ஆவணத்தை வெளியிட்டுள்ளன. இதேபோன்ற வழிகாட்டுதல் ஆவணம் மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் (Central Insecticide Board(CIB)) மற்றும் பதிவுக் குழுவிற்கும் (Registration Committee(RC)) பதிவு நடைமுறைகளை வலுப்படுத்த பெரிதும் உதவும். 


புதிய நிறுவனத்தை அறிந்து கொள்ளுங்கள் (Know Your Company (KYC)) என்ற தேவைகளை அமல்படுத்துவதன் மூலம் மத்திய பூச்சிக்கொல்லி வாரியம்(CIB) மற்றும் பதிவுக் குழு (Registration Committee(RC)) முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் விளைவாக 7,000-க்கும் மேற்பட்ட இணக்கமற்ற நிறுவனங்களின் பதிவு, நீக்கம் செய்யப்பட்டுள்ளது. போலி உற்பத்தியாளர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, தொழில்துறையில் சுமார் 2,500 முறையான நிறுவனங்களை விட்டு வெளியேறும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை அமைப்பின் (Integrated Pesticide Management System (IPMS)) ஒரு பகுதியாக உண்மையான நிறுவனங்களின் டிஜிட்டல் பதிவேடு பதிவை ஒழுங்குபடுத்தவும், உற்பத்தி உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் வெளிப்படைத்தன்மையை வழங்கவும் உதவும். 


இந்திய தரக் குழு (Quality Council of India (QCI)) போன்ற ஒரு சுதந்திரமான அமைப்பானது மருந்துத் துறையில் உற்பத்தி நிலையங்களைத் தணிக்கை செய்ய முடியும். இது அவர்கள் தரமான அளவில் மருந்துகளின் தரங்களைப் பின்பற்றுவதை உறுதி செய்யும்.


மற்றொரு முக்கியமான சீர்திருத்தம் புதுமையை ஊக்குவிப்பதாகும். புதிய மூலக்கூறுகளை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்கும்.


விவசாயிகள் பாதிப்பு 


தரமற்ற பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிதான். அவர்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட மற்றும் குறைந்த தரமான வரம்பிலிருந்து தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


தற்போது, ​​'இந்தியாவில் உருவாக்குவோம்' (Make in India) முயற்சியில் பதிவு செய்வதற்கான தளர்வான வழிகாட்டுதல்கள் உள்ளன. இது தொழில்நுட்ப பூச்சிக்கொல்லிகளுக்கு 2,000 பதிவுகளுக்கு வழிவகுத்தது. இருப்பினும், இவற்றில் 20 சதவீதத்திற்கும் குறைவான நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. பதிவு செயல்பாட்டில் இரகசியத்தன்மையின் அவசியத்தை இது காட்டுகிறது. இது உண்மையான உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் மற்றும் போலி பதிவுகளைத் (copycat registrations) தடுக்கும்.


வேளாண் அமைச்சகம் மற்றும் மத்திய பூச்சிக்கொல்லி வாரியம்(CIB) மற்றும் பதிவுக் குழு (RC) ஒழுங்குமுறை கட்டமைப்பை சீர்திருத்த நடவடிக்கை எடுப்பது ஊக்கமளிக்கிறது. அவர்கள் தரமற்ற தயாரிப்புகளை உரையாற்றுகிறார்கள். இது வேளாண் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இது சிறந்த தயாரிப்பு நிர்வாகத்தை உறுதி செய்வதோடு மேலும் புதுமையான மற்றும் பாதுகாப்பான பயிர் பாதுகாப்பு விருப்பங்களை வழங்கும்.


சிங்கால் PI இண்டஸ்ட்ரீஸின் தலைவர் எமரிட்டஸ் மற்றும் ரவி சின்ஜெண்டா இந்தியாவின் தலைமை நிலைத்தன்மை அதிகாரி ஆவார்.



Original article:

Share:

டாலர் பிரச்சினைகள்: பிரிக்ஸ் (BRICS) ஒரு பொதுவான நாணயம் (common currency) என்ற யோசனையை கைவிடாது - அமிதி சென்

 டிரம்பின் கட்டண வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், பிரேசில் ஷெர்பாக்களின் சந்திப்பு ஒரு தெளிவான அர்த்தத்தை வெளிப்படுத்தும். 


BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா தலைமையிலான ஒன்பது வளர்ந்து வரும் நாடுகளின் வேகமாக வளர்ந்து வரும் குழுவாகும். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பொதுவான நாணயம் (common currency) என்ற யோசனையை கைவிடுவது குறித்து உறுதிமொழி அளிக்க வாய்ப்பில்லை. பல பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் நாணய ஒத்துழைப்பிலும் இறுதியில் டாலர் மதிப்பிழப்பிலும் ஆர்வமாக உள்ளனர் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.


அக்டோபர் 2024-ம் ஆண்டில் கசானில் நடைபெற்ற கடைசி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், நிறுவன உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகள் உட்பட பல பங்கேற்பாளர்கள் அமெரிக்க டாலருக்கு மாற்றாக விவாதித்தனர். குறிப்பாக, உலகளாவிய தெற்கில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு டாலரை அதிகமாக நம்பியிருப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த பிரச்சனைகளில் கடன் சுமை உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சிகளை நெருக்கமாகப் பின்பற்றும் ஒரு ஆதாரமாக இதற்கான தகவலை வணிக நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டது.


டிரம்பின் கட்டண வரிவிதிப்பின் மீதான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் டாலர் குறைப்பு அல்லது பொதுவான நாணயத்திற்கான திட்டங்களை கைவிடுவது குறித்து எந்தவொரு நிலைப்பாட்டையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், பிரிக்ஸ் அமைப்பில் அங்கீகரீக்கப்பட்ட நாணயமானது தொலைதூர சாத்தியமாகவும் மற்றும் நிறைய வேலை உருவாக்கத்திற்கும் தேவைப்படுகிறது என்று அதன் வட்டாரங்கள் மேலும் கூறியது. 


'டாலர் மதிப்பு நீக்கம் இல்லை' (No De-dollarisation)


அடுத்த BRICS ஷெர்பாஸ் கூட்டமானது (BRICS sherpas meeting) 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிரேசிலில் நடைபெறலாம். இந்தச் சந்திப்பின் மூலம் இந்த விவகாரத்தில் மேலும் ஒரு தெளிவு கிடைக்கும். இதில், முக்கியமாக பணமதிப்பு நீக்கம் (de-dollarisation) தொடர்பாக கசானில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மேலும் விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.


டிசம்பர் தொடக்கத்தில், டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாவது, பிரிக்ஸ் நாடுகள் டாலரில் இருந்து விலகிச் செல்ல முயல்கின்றன என்ற கருத்து இனி செல்லாது என்றும், இதனால் அமெரிக்கா சும்மா பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


டிரம்ப் தனது சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியலில்' (Truth Social), இந்த பிரிக்ஸ் நாடுகளில் இருந்து ஒரு உறுதிப்பாட்டை விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். இதில், புதிய BRICS நாணயத்தை உருவாக்க மாட்டோம் என்றும், அவர்கள் உறுதியளிக்க வேண்டும். மேலும், அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் அவர்கள் ஆதரிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், 100 சதவீத வரி விதிக்கப்படும். கூடுதலாக, அவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கான அணுகலை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.


டிரம்ப் பதிவிட்டவுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்ததாவது, டாலர் மதிப்பிழப்பை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், தற்போது, ​​பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் கூறியதாவது, "பிரிக்ஸ் அமைப்பானது நிதி பரிவர்த்தனைகள் (financial transactions) பற்றி விவாதிக்கிறது. அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக ரீதியில் நட்பு நாடாகும். டாலரை பலவீனப்படுத்துவதில் இந்தியாவுக்கு எந்த விருப்பம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.


அதே நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India (RBI)) முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸும் பேசினார். இதில், இந்தியா டாலர் மதிப்பிழப்பைப் (de-dollarisation) பின்பற்றவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், உள்நாட்டு நாணயங்களில் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான சமீபத்திய நடவடிக்கைகள் இந்திய வர்த்தகத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும்.


திட்டமிடப்பட்ட பிரிக்ஸ் நாணயமானது, ஒரு கற்பனை நாணயம் மற்றும் டாலரைப் போன்றது அல்ல, இதை டிரம்ப் புரிந்துகொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த கருத்து 'தரக்குறியீட்டு நாணயம்' (benchmarking currency) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது ஒரு குறிப்பு நாணயமாகும் (reference currency) ஆகும். 


BRICS நாணயத்தை வைத்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இதனால், ஒன்றை உருவாக்க, நிதி மற்றும் பணவியல் கொள்கைகள் இணக்கமாக இருக்க வேண்டும். இதில், முக்கியமாக கடன்-ஜிடிபி விகிதங்கள் போன்றவற்றை சீரமைப்பதும் இதில் அடங்கும். இருப்பினும், BRICS அமைப்பில் இந்த நடைமுறையானது இது கடினமாக உள்ளது. ஏனெனில், அதன் உறுப்பினர்களின் பொருளாதாரங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.


ஆனால், தரக்குறியீட்டு நாணயத்தை (benchmarking currency) உருவாக்குவது எளிதானது. இந்த நாணயமானது, BRICS நாணயத்தை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தி, BRICS தொகுதிக்குள் உள்ள பொருட்களின் மதிப்பைக் காட்டும். இந்த நாணயத்தின் மதிப்பு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற வலுவான பொருளாதாரங்களால் தீர்மானிக்கப்படும். இந்த தீர்மானத்தின் அடிப்படையில், ஒரு சில நாணயங்கள் மட்டுமே BRICS நாணயத்தை உருவாக்கும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு (taskforce) இதற்கான விவரங்களை தெளிவாக விவாதத்திற்கு உட்படுத்தும்.


கசான் உச்சிமாநாட்டில், பணமதிப்பு நீக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களை இந்த கூட்டமைப்பு அறிவித்தது. இந்த திட்டங்களில் பல இராஜதந்திர திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் அடங்கும். அவை உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பு ஒரு பொதுவான கட்டண உள்கட்டமைப்பை ஆராயவும் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, அவர்கள் BRICS தானிய பரிமாற்றத்தை (grain exchange) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




Original article:

Share:

அமெரிக்காவில் அதிகரித்து வரும் நோரோவைரஸ் (Norovirus) பாதிப்புகள்: இது எவ்வாறு பரவுகிறது? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்?

 நோரோவைரஸ் என்பது அதி தொற்றுநோய் வகை வைரஸ் ஆகும். இது சில நேரங்களில் 'குளிர்கால வாந்தி கிருமி' (winter vomiting bug) என்றும் குறிப்பிடப்படுகிறது. 


தி நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, இந்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு உணவக நிகழ்வில் பரிமாறப்பட்ட மூல சிப்பிகளுடன் தொடர்புடைய நோரோவைரஸால் குறைந்தது 80 பேர் நோய்வாய்ப்பட்டனர். அவை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து பெறப்பட்டன. மேலும், திரும்ப பெறப்படுவதற்கு முன்பு 14 அமெரிக்க மாநிலங்களில் விற்கப்பட்டன. 


இந்தியாவில், நோரோவைரஸ் முன்பு கேரளாவில் மக்களை பாதித்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகச் சிறிய அளவில் உள்ளது. 


நோரோவைரஸ் என்றால் என்ன?  அது எவ்வாறு பரவுகிறது? 


நோரோவைரஸ் என்பது மிகவும் தொற்றுநோய் வகை வைரஸ் ஆகும். இது சில நேரங்களில் 'குளிர்கால வாந்தி கிருமி'  (‘winter vomiting bug) என்றும் குறிப்பிடப்படுகிறது. இது அசுத்தமான உணவு, நீர் மற்றும் மேற்பரப்புகள் மூலம் பரவுகிறது. இது பரவும் முக்கிய வழி வாய் மற்றும் மலப் பாதை வழியாகும்.


இது வயிற்றுப்போக்கைத் தூண்டும் ரோட்டா வைரஸைப் போன்றது மற்றும் அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. நோய் பாதிப்புகள் பொதுவாக பயணக் கப்பல்களில், மருத்துவ இல்லங்கள், தங்குமிடங்கள் மற்றும் பிற மூடிய இடங்களில் நிகழ்கின்றன. 


உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, "நோரோவைரஸ் தொற்று குடல் அழற்சி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது மற்றும் நீண்டகால நோயுற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும்" என்று அதிகரித்து வரும் சான்றுகள் தெரிவிக்கின்றன. 


ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 200 மில்லியன் வழக்குகள் உட்பட ஆண்டுதோறும் 685 மில்லியன் நோரோவைரஸ் வழக்குகள் காணப்படுகின்றன என்று அது மேலும் குறிப்பிடுகிறது. அமெரிக்காவின் உணவுப்பழக்கம் நோய்க்கு நோரோவைரஸ் முக்கிய காரணம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வலைத்தளம் மேலும் கூறுகிறது. இது நாட்டில் உள்ள அனைத்து உணவுப்பழக்க நோய்களிலும் 58% காரணமாகிறது. 


நோரோவைரஸின் அறிகுறிகள் யாவை? 


நோரோவைரஸின் ஆரம்ப அறிகுறிகள் வாந்தி மற்றும் / அல்லது வயிற்றுப்போக்கு ஆகும். அவை வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு காணப்படும். 


நோயாளிகள் குமட்டலை உணர்கிறார்கள் மற்றும் வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலிகளால் பாதிக்கப்படுகின்றனர். தீவிர சந்தர்ப்பங்களில், நீரிழப்புக்கும் வழிவகுக்கும். 


நோரோவைரஸுக்கு எதிராக ஒருவர் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்? 


பல்வேறு வகையான வைரஸ்கள் இருப்பதால், நீங்கள் பல முறை பாதிக்கப்படலாம். நோரோவைரசை கை சுத்திகரிப்பான்கள் போன்ற பல கிருமிநாசினிகளைக் கொண்டு கொல்வது கடினம். மேலும், 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கும். எனவே, உணவை வேக வைப்பது அல்லது தண்ணீரில் குளோரின் சேர்ப்பது வைரஸைக் கொல்லாது.


அடிப்படை முன்னெச்சரிக்கையும் மிகவும் எளிமையானது. கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு அல்லது டயப்பர்களை மாற்றிய பிறகு மீண்டும் மீண்டும் சோப்புடன் கைகளை கழுவுதல் மற்றும்  சாப்பிடுவதற்கு முன்பு அல்லது உணவு தயாரிப்பதற்கு முன்பு கைகளை கவனமாக கழுவுவது முக்கியம். பாதிப்புகளின் போது, ஒரு மில்லியனுக்கு 5,000 பகுதிகள் என்ற அளவில் ஹைபோகுளோரைட் கரைசலுடன் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். 


அறிகுறிகள் நின்ற இரண்டு நாட்களுக்கு பிறகு,  பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்றும், நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மற்றவர்களுக்கு உணவு தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்துகிறது. 


நோரோவைரஸுக்கான சிகிச்சை என்ன? 


நோய் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும். இது இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை நீடிக்கும். இது நோயாளிக்கு கடினமாக இருந்தாலும், மிகவும் இளமையாக இல்லாத, வயதான அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பெரும்பாலான மக்கள் போதுமான ஓய்வுடன் குணமடைய முடியும்.


ரியல்-டைம் ரிவர்ஸ் படியெடுத்தல்-பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (real-time reverse transcription-polymerase chain reaction) எனப்படும் சோதனையைப் பயன்படுத்தி மருத்துவர்கள் அதைக் கண்டறியின்றனர். இந்த நோய்க்கு தடுப்பூசிகள் இல்லை.


கடுமையான கட்டத்தில் நீரேற்றத்தை பராமரிப்பது முக்கியம். தீவிர நிகழ்வுகளில், நோயாளிகளுக்கு நீர் பாதிப்பு ஏற்படும் நேரங்களில் திரவங்களை நரம்பு வழியாக வழங்க வேண்டும்.




Original article:

Share:

பீட்டா தலைமுறை -ரோஷினி யாதவ்

 1. பீட்டா தலைமுறை  என்பது 2025 மற்றும் 2039 ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த குழந்தைகளின் குழுவைக் குறிக்கிறது. இந்த தலைமுறையில் உள்ள குழந்தைகள் Z தலைமுறை (Gen Z) மற்றும் ஆல்பா தலைமுறையில் உள்ளவர்களை விட வேகமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. 

 

2. இசட், பெரும்பாலும் இசட் தலைமுறை என்று குறிப்பிடப்படுகிறது. இது 1990-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை மற்றும் 2010-ஆம் ஆண்டுகளின் முற்பகுதிக்கு இடையில் பிறந்த நபர்களை உள்ளடக்கியது. அவர்கள் இணையம், சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் வளர்ந்தவர்கள். ஆல்பா தலைமுறை 2010 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் பிறந்தவர்களைக் குறிக்கிறது. 

 

3. இசட் தலைமுறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் திறமையானவர்கள் மற்றும் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளைவிட டிஜிட்டல் தகவல்தொடர்புகளை விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தலைமுறை இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றில் அவர்களின் பன்முகத்தன்மைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

4. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் Z தலைமுறை மற்றும் ஆல்பா தலைமுறை மத்தியில் அவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவதால், தலைமுறை பீட்டாவின் குழந்தைகள் வளரும் நேரத்தில், தொழில்நுட்பம் இன்னும் முன்னேறும் என்று நம்பப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் இணைப்பு ஆகியவை அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க வாய்ப்புள்ளது. 

5. ஆல்ஃபா தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வளர்ந்துள்ளனர். இதற்கிடையில், பீட்டா தலைமுறையின் குழந்தைகள் குவாண்டம் கம்ப்யூட்டிங் (quantum computing) மற்றும் மெட்டாவர்ஸ் (metaverse) போன்ற இன்னும் அதிநவீன முன்னேற்றங்களைத் சார்ந்து இருப்பதன் மூலம் ஆல்பா தலைமுறையை விஞ்சும் திறனைக் கொண்டிருப்பர். 

6. புதிய தலைமுறை பல்வேறு அம்சங்களில் முந்தைய தலைமுறையை மிஞ்சி விடுகிறது என்று அடிக்கடி கூறப்படுகிறது. எனவே, பீட்டா தலைமுறை புதிய யோசனைகளைத் தழுவி உடனடி நடவடிக்கை எடுக்கும் திறனால் வகைப்படுத்தப்படலாம். இருப்பினும், உலகம் முன்னோடியில்லாத வேகத்தில் மாறி வருவதால், அவற்றைப் பற்றி உறுதியான அறிக்கைகளை வெளியிடுவது இன்னும் முன்கூட்டியே உள்ளது. 

மில்லினியல்கள் மற்றும் ஜெனரேஷன் எக்ஸ் 

      மில்லினியல் என்ற சொல் 1981 மற்றும் 1996-ஆம் ஆண்டுக்கு  இடையில் பிறந்த ஒரு நபரை விவரிக்கப் பயன்படுகிறது மற்றும் X தலைமுறை என்பது 1960 களின் நடுப்பகுதி மற்றும் 1980-ஆம் ஆண்டுகளின் முற்பகுதிக்கு இடையில் பிறந்த நபர்களை உள்ளடக்கியது. 

 

1. மெட்டாவர்ஸ் என்பது ஒரு கூட்டு, கணினியால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அங்கு பயனர்கள் மற்ற உண்மையான நபர்களின் டிஜிட்டல் முறைகளை ஆராய்ந்து தொடர்பு கொள்ளலாம். 

 

2. மெட்டாவர்ஸ் (மெய்நிகர் ரியாலிட்டி, மெய்நிகர் பிரபஞ்சம் அல்லது சைபர்வேர்ல்ட் என்றும் அழைக்கப்படுகிறது) இரண்டாவது வாழ்க்கை மற்றும் பிற ஆன்லைன் ரோல் பிளேமிங் சூழல்கள் போன்ற விளையாட்டுகளுடன் ஓரளவு ஒத்திருக்கிறது, இது பயனர்களை மாற்று நபர்களை எடுக்கவும், புதிய நண்பர்களைச் சந்திக்கவும், தங்கள் சொந்த கதாபாத்திரங்களை உருவாக்கவும் அனுமதிக்கிறது. 

 

3. மெட்டாவர்ஸ் தற்போது ஒரு ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும் Facebook தன்னை Meta என மறுபெயரிடத் தேர்ந்தெடுத்த பிறகு அது கூட்டு மெய்நிகரில் நுழைந்தது. செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள அச்சங்களைப் போலவே, மெட்டாவர்ஸ் ஒழுங்குமுறை மேற்பார்வை, தனியுரிமை மற்றும் பயனர் பாதுகாப்பு ஆகியவற்றைச் சுற்றி குறிப்பிடத்தக்க விவாதங்களைத் தூண்டியுள்ளது. 

 



செயற்கை நுண்ணறிவு (AI) 


1. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்ய இயந்திரங்கள், குறிப்பாக கணினிகளின் திறன். இந்த பணிகளில் மொழியைப் புரிந்துகொள்வது, வடிவங்களை அங்கீகரிப்பது, சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் முடிவுகளை எடுப்பது போன்ற விஷயங்கள் அடங்கும். 

 

2. செயற்கை நுண்ணறிவு (AI)  இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம்: செயற்கை குறுகிய நுண்ணறிவு (Artificial Narrow Intelligence (ANI)) பலவீனமான AI என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI) ) வலுவான AI என்றும் குறிப்பிடப்படுகிறது. 

 

3. ANI குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு குறுகிய களத்திற்குள் சிறந்து விளங்குகிறது. எடுத்துக்காட்டுகளில் சிரி போன்ற மெய்நிகர் உதவியாளர்கள், நெட்ஃபிக்ஸ் போன்ற தளங்களில் பரிந்துரை அமைப்புகள் மற்றும் பட அங்கீகார மென்பொருள் ஆகியவை அடங்கும். ANI அமைப்புகள் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவை மற்றும் அவற்றின் நிபுணத்துவத்தை தொடர்பில்லாத பணிகளுக்கு மாற்ற முடியாது. 

 

4. இதற்கு மாறாக, AGI மனித அறிவாற்றல் திறன்களைப் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு மனிதன் செய்யக்கூடிய எந்தவொரு அறிவார்ந்த பணியையும் செய்ய உதவுகிறது. AGI பொது பகுத்தறிவு திறன்களைக் கொண்டிருக்கும், சூழலைப் புரிந்துகொள்வார் மற்றும் பல்வேறு களங்களில் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும். இது பணி-குறிப்பிட்ட நிரலாக்கம் தேவைப்படாமல் தன்னாட்சி கற்றல் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் கொண்டதாக இருக்கும். 

 

5. இயந்திர கற்றல் (Machine Learning (ML)) மற்றும் ஆழ்ந்த கற்றல் (Deep Learning (DL)) ஆகியவை AI இன் துணைக்குழுக்கள் ஆனால் சிக்கலான தன்மை மற்றும் திறன்களில் வேறுபடுகின்றன. இயந்திர கற்றல் தரவுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் கணிப்புகளைச் செய்வதற்கும் பயிற்சி வழிமுறைகளை உள்ளடக்கியது மற்றும் பெரும்பாலும் கையேடு அம்சம் பிரித்தெடுத்தல் தேவைப்படுகிறது. 

 

6. இயந்திர கற்றல் துணைக்குழுவானஆழ்ந்த கற்றல் (Deep Learning (DL)), பெரிய தரவுத்தொகுப்புகளிலிருந்து அம்சங்களை தானாகவே கற்றுக்கொள்ள பல அடுக்குகளுடன் உள்ள அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. சிறிய தரவுத்தொகுப்புகளுடன்  இயந்திர கற்றல் (ML) நன்றாக வேலை செய்யும் அதே வேளையில், ஆழமான கற்றல் (DL) அதிக அளவு தரவு மற்றும் கணக்கீட்டு சக்தி தேவைப்படுகிறது.




Original article:

Share:

நல்லாட்சி என்றால் என்ன? - குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

  முக்கிய எடுத்துக்காட்டுகள்: 


• நல்லாட்சி தினமாக (Good Governance Day) அனுசரிக்கப்படும் மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25, 2019 அன்று தொடங்கப்பட்ட இந்த குறியீடு (index) விவசாயம், பொருளாதார நிர்வாகம், பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுமை உள்ளிட்ட துறைகளில் 50 க்கும் மேற்பட்ட குறிகாட்டிகளை உள்ளடக்கியது. 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டு தரவரிசையில் பெரிய மாநிலங்களில் தமிழகம் மற்றும் குஜராத் முறையே முதலிடம் பிடித்தன. 


• சமீபத்தில் டிசம்பர் 7 அன்று, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை (Department of Administrative Reforms and Public Grievances (DARPG)) 2023 குறியீட்டை வெளியிட திட்டமிட்டது. டிசம்பர் 19 முதல் டிசம்பர் 24 வரை பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான தேசிய பிரச்சாரமான 'பிரஷசன் கான் கி ஓரே' (‘Prashasan Gaon Ki Ore’)  அறிவித்த DARPG, "சிறப்பு பிரச்சாரம் 4.0, நல்லாட்சி குறியீடு 2023 மற்றும் CPGRAMS-ன் ஆண்டு அறிக்கை குறித்த மதிப்பீட்டு அறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும்" என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 


• மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் டிசம்பர் 25, 2021-ஆம் ஆண்டு  அன்று வெளியிடப்பட்ட 2021-ஆம் ஆண்டு குறியீடு, 10 துறைகளில் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. கூட்டு தரவரிசையில் குஜராத் முதலிடத்தில் இருந்தாலும், 20 மாநிலங்கள் 2019 முதல் கூட்டு மதிப்பெண்களில் முன்னேற்றத்தைக் காட்டின. 


உங்களுக்குத் தெரியுமா?


• 2014-ஆம் ஆண்டில், மத்திய அரசு டிசம்பர் 25 "நல்லாட்சி தினமாக" கொண்டாடுவதாக அறிவித்தது. இந்த நாள் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளாகும். 


• பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நல்லாட்சி குறியீட்டு அறிக்கையின்படி, "நல்லாட்சி என்பது குடிமக்களின் முன்னேற்றத்தை முதன்மையான முன்னுரிமையாக வைத்து முடிவுகளை செயல்படுத்தும் (அல்லது செயல்படுத்தப்படாத) ஒரு பயனுள்ள மற்றும் திறமையான செயல்முறையாக குறிப்பிடப்படலாம். வள ஒதுக்கீடு, முறையான நிறுவனங்களை உருவாக்குதல், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமைத்தல் போன்றவை இந்த இலக்கை அடைவதற்கான ஒரு பகுதியாகும். 


• நல்லாட்சி வாரம் (Good Governance Week) டிசம்பர் 19, 2024 முதல் டிசம்பர் 24, 2024 வரை நடந்தது. இந்த வார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியாவின் அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் "கிராமங்களை நோக்கி நிர்வாகம்" (“Prashasan Gaon Ki Ore”) என்ற நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்பட்டது.




Original article:

Share:

வெப்பமான நவம்பர் 2024-ன் இந்தியாவிற்கும் உலகிற்குமான தாக்கம் -அபினவ் ராய்

 நவம்பர் 2024 ஆனது இந்தியாவில் 123 ஆண்டுகளில் இரண்டாவது வெப்பமான நவம்பர் ஆகும். இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் என்ன?  நீர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களில் அதன் தாக்கங்கள் என்ன? 


2024-ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் இந்தியாவில் 123 ஆண்டுகளில் இரண்டாவது வெப்பமான நவம்பர் மாதமாக இருந்தது. இது சுற்றுச்சூழல் அமைப்புகளில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் தாக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் ரபி (குளிர்கால) பயிர்களின் வளர்ச்சியை சீர்குலைப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. 


இந்த வெப்பமயமாதல் போக்கு அக்டோபரில் பருவமழைக்கு பிந்தைய பருவத்திலிருந்து தொடர்கிறது. மேலும், 2024-ஆம் ஆண்டை உலகளவில் பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாக மாற்ற பங்களிக்கக்கூடும். ஆனால், இயல்பான வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்கள் என்ன? இது இந்தியாவிற்கும் உலகிற்கும் என்ன தாக்கத்தை வெளிப்படுத்துகிறது?  


வானிலை ஆய்வாளர்கள் குறைந்தபட்சம் 30 ஆண்டுகால காலநிலை தரவுகளைப் பயன்படுத்தி, அவற்றின் 'இயல்பான' மதிப்புகளிலிருந்து காலநிலை அளவுகளை விலகிச் செல்வது பற்றிய எந்த முடிவையும் பெறுகின்றனர். தற்போது, இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) 1991-2020 ஆண்டை அடிப்படை காலமாகப் பயன்படுத்துகிறது.  


நவம்பர் 2024-ஆம் ஆண்டில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 29.37ºC என்று குறிப்பிடப்பட்டது. இது வழக்கமான 28.75ºC ஐ விட 0.62ºC அதிகமாகும். சராசரி குறைந்தபட்ச வெப்பநிலையானது சாதாரண 15.86ºC ஐ விட 1.05ºC அதிகமாக இருந்தது.


IMD மழைப்பொழிவு தரவின் படி, 2024 நவம்பரில் நாடு 55 சதவீதம் குறைவான மழையைப் (13.5 மிமீ) பெற்றுள்ளது.  இது நீண்ட கால சராசரி (long-period average (LPA)) 29.7 மிமீக்கு எதிராக உள்ளது. இந்தியாவின் வடமேற்கு பிராந்தியம் மிக மோசமான பற்றாக்குறையை எதிர்கொண்டது. அதனால், 79.87 சதவீதம் குறைவான மழை பெய்தது.  


அதிக வெப்பநிலை மற்றும் மழையின்மைக்கான முக்கிய காரணங்கள் வலுவான மேற்கத்திய இடையூறுகள் மற்றும் சூறாவளி இடையூறுகள் இல்லாதது ஆகும். மேற்கத்திய இடையூறுகள் பொதுவாக ஆண்டின் இந்த நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவிற்கு மழை மற்றும் குளிர்ந்த காற்றைக் கொண்டுவருகின்றன. இதனால், நாடு மிகக் குறைந்த மழையை பெறுகிறது.


வங்காள விரிகுடாவில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மட்டுமே உருவாகி, ஒன்று ஃபெங்கல் புயலாக மாறியது. ஆனால், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இந்த காரணிகள் நீண்ட வறண்ட காலத்தை ஏற்படுத்தியது. இதனால் நவம்பர் மாதம் வழக்கத்தை விட வெப்பமானது.


மத்திய மற்றும் கீழ் வெப்பமண்டல மட்டங்களில் குறைந்த அழுத்த சூறாவளி வானிலை நிலைமைகள் என மேற்கத்திய இடையூறுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறுக்கிறது. இது முக்கியமாக மத்தியதரைக் கடல், காஸ்பியன் கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளில் உருவானது. இது துணை வெப்பமண்டல மேற்கு ஜெட் நீரோடைகளால் கிழக்கு நோக்கி கொண்டு செல்லப்பட்டு இந்திய துணைக் கண்டத்தை அடைகிறது. இந்த மேற்கத்திய இடையூறுகள் வடமேற்கு இந்தியாவில் இமயமலையை அடையும் போது, அவை பனி மற்றும் மழை வடிவில் தங்கள் ஈரப்பதத்தை வெளிப்படுத்துகிறன்றன.  


மேற்கத்திய இடையூறுகள் மழை மற்றும் பனியைக் கொண்டுவரும் வானிலை அமைப்புகளாகும். இது மேற்குக் காற்றினால் ஏற்படுகிறது. அவை வெப்பமண்டல சூறாவளிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை மண்டலத்தின் வடக்கே உள்ள பகுதிகளில்,  நடு-அட்சரேகைகளில் உருவாகின்றன. இந்த இடையூறுகள் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் மிகவும் கடுமையாக இருக்கும். அதனால், வடமேற்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைப் பாதிக்கிறது.


சில நேரங்களில், அவை வடக்கு சமவெளிகளுக்கு கூட நீட்டிக்கப்படுகின்றன மற்றும் மிகவும் தேவையான குளிர்கால மழையை வழங்குகின்றன. இந்த மழைப்பொழிவு ராபி பயிர் சுழற்சிக்கு அவசியம் மற்றும் வறண்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறையைத் தணிக்க உதவுகிறது. உச்ச குளிர்கால மாதங்களில் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை), இந்தியா மாதத்திற்கு 6-7 மேற்கத்திய இடையூறுகளை ஏற்படுத்தலாம். 


"மேற்கத்திய இடையூறு" ("Western Disturbance") என்ற சொல்லை முதலில் எஸ்.எல். 1947-ஆம் ஆண்டில் மலூர்கர் இந்தியாவை நோக்கி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் வானிலை அமைப்புகளை விவரிக்கிறார். மற்ற குறைந்த அழுத்த அமைப்புகளைப் போலவே, இது குறிப்பாக வடமேற்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு மழையைக் கொண்டுவருகிறது. இது முன்பு "குளிர்கால இடையூறு" ("Winter Disturbance.") என்று அழைக்கப்பட்டது.


இந்தியா மிகப்பெரிய புவியியல் பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாட்டின் முக்கிய மழைப்பொழிவு ஆதாரமாக தென்மேற்கு பருவமழை இருந்தாலும், அதன் இடஞ்சார்ந்த பரப்பு ஒரே மாதிரியாக இல்லை. மேற்கு இமயமலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (யூ.டி) குளிர்கால மழைப்பொழிவுக்கு மேற்கத்திய இடையூறுகளை நம்பியுள்ளன. பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் உள்ள கோதுமை, பருப்பு, கடுகு போன்ற ராபி பயிர்களுக்கு மேற்கத்திய இடையூறுகளால் கொண்டு வரப்பட்ட மழைப்பொழிவு மிகவும் முக்கியமானது.  


ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் குளிர்கால மழைப்பொழிவில் சுமார் 30 சதவீதம் மேற்கத்திய இடையூறுகளால் ஏற்படுகிறது. வலுவான மேற்கத்திய இடையூறுகள் பெரும்பாலும் இந்த பிராந்தியங்களுக்கு கடுமையான பருவகால பனிப்பொழிவைக் கொண்டுவருகின்றன. இது பிராந்திய பனிப்பொழிவைத் தக்கவைக்கவும் நீர் வளங்களை நிரப்பவும் உதவுகிறது.  


உறைபனி நிலையில் அதிக உயரத்தில் பனிப்பொழிவு எளிதில் உருகுவதில்லை. இந்த பனி பனிப்பாறைகளுக்கு ஆதரவளிக்கிறது. பின்னர், இது சமூகத்திற்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரை வழங்கும் ஆறுகளை உருவாக்க உதவுகிறது. மேற்கத்திய இடையூறுகள் இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியின் பிரதிபலிப்பையும் (ஆல்பிடோ) மாற்றலாம். இது இந்திய கோடை பருவமழை தொடங்கும் போது பாதிக்கிறது. இது இந்திய கோடை பருவமழையின் தொடக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.  


இருப்பினும், மேற்கத்திய இடையூறுகள் எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்தும். வலுவான மேற்கத்திய இடையூறுகள் ஏற்படும் போது, அவை சில நேரங்களில் வடக்கு சமவெளிகளில் அடர்த்தியான மூடுபனி மற்றும் கடுமையான குளிர் அலை நிலைமைகளை ஏற்படுத்துகின்றன. மிகக் கடுமையான பனிப்பொழிவு நிகழ்வுகள் அல்லது ஆலங்கட்டி மழை போன்ற நிலைமைகள் சில நேரங்களில் பயிர்களை சேதப்படுத்துகின்றன மற்றும் நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு அபாயத்தை அதிகரிக்கும். 


வழக்கத்திற்கு மாறாக வெப்பமான 2024 நவம்பர் இந்தியாவிற்கும் உலகிற்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின்படி, நவம்பர் 2024 உலகளவில் இரண்டாவது வெப்பமான நவம்பர் ஆகும், சராசரி வெப்பநிலை 14.10ºC ஆகும், இது மாதாந்திர சராசரியை விட 0.73ºC அதிகமாகும்.  


கடல் பனி மட்டங்களும் இந்த வெப்பமயமாதல் போக்கை பிரதிபலித்தன. அண்டார்டிகா கடல் பனி நவம்பர் 2024 இல் அதன் மிகக் குறைந்த அளவைக் கண்டது. மேலும், அதன் சராசரியைவிட 10 சதவீதம் குறைவு.  இதேபோல், ஆர்க்டிக் கடல் பனிக்கட்டியும் அதன் மூன்றாவது மிகக் குறைந்த அளவை எதிர்க்கொண்டது. மேலும், அதன் அளவு சராசரியை விட 9 சதவீதம் குறைந்துள்ளது.  


இந்தியாவில், வெப்பமான நவம்பர் பரந்த புவி வெப்பமடைதல் போக்குடன் ஒத்துப்போகிறது. இது 2024 ஐ பதிவில் வெப்பமான ஆண்டாக மாற்றக்கூடும். இந்த மாற்றங்கள் உலகளாவிய மற்றும் பிராந்திய காலநிலை வடிவங்களில் பெரிய மாற்றங்களைக் குறிக்கின்றன. இந்த வெப்பமயமாதல் போக்கு பருவகால பனி உறை மற்றும் கடல் பனியைக் குறைக்கும். இது சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை மாற்றக்கூடிய தீவிர நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.  


மேற்கத்திய இடையூறு நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களால் தூண்டப்பட்ட மழையின்மை மற்றும் சூறாவளி செயல்பாடு நாட்டின் வடக்குப் பகுதியில் குளிர்கால பயிர்களை எதிர்மறையாக பாதிக்கும். இந்த பயிர்கள் தேவையான மழைப்பொழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய குளிர் காலநிலைகளுக்கு மேற்கத்திய இடையூறுகளை நம்பியுள்ளன. 


ஆகையால், வெப்பமான நவம்பர் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான அவசரத்தை நினைவூட்டுகிறது. ஏனெனில், இது சுற்றுச்சூழல் அமைப்புகளின் நுட்பமான சமநிலையைப் பாதிக்கிறது. பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.  




Original article:

Share: