டிரம்பின் கட்டண வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், பிரேசில் ஷெர்பாக்களின் சந்திப்பு ஒரு தெளிவான அர்த்தத்தை வெளிப்படுத்தும்.
BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா தலைமையிலான ஒன்பது வளர்ந்து வரும் நாடுகளின் வேகமாக வளர்ந்து வரும் குழுவாகும். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பொதுவான நாணயம் (common currency) என்ற யோசனையை கைவிடுவது குறித்து உறுதிமொழி அளிக்க வாய்ப்பில்லை. பல பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் நாணய ஒத்துழைப்பிலும் இறுதியில் டாலர் மதிப்பிழப்பிலும் ஆர்வமாக உள்ளனர் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.
அக்டோபர் 2024-ம் ஆண்டில் கசானில் நடைபெற்ற கடைசி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், நிறுவன உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகள் உட்பட பல பங்கேற்பாளர்கள் அமெரிக்க டாலருக்கு மாற்றாக விவாதித்தனர். குறிப்பாக, உலகளாவிய தெற்கில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு டாலரை அதிகமாக நம்பியிருப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த பிரச்சனைகளில் கடன் சுமை உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சிகளை நெருக்கமாகப் பின்பற்றும் ஒரு ஆதாரமாக இதற்கான தகவலை வணிக நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டது.
டிரம்பின் கட்டண வரிவிதிப்பின் மீதான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் டாலர் குறைப்பு அல்லது பொதுவான நாணயத்திற்கான திட்டங்களை கைவிடுவது குறித்து எந்தவொரு நிலைப்பாட்டையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், பிரிக்ஸ் அமைப்பில் அங்கீகரீக்கப்பட்ட நாணயமானது தொலைதூர சாத்தியமாகவும் மற்றும் நிறைய வேலை உருவாக்கத்திற்கும் தேவைப்படுகிறது என்று அதன் வட்டாரங்கள் மேலும் கூறியது.
'டாலர் மதிப்பு நீக்கம் இல்லை' (No De-dollarisation)
அடுத்த BRICS ஷெர்பாஸ் கூட்டமானது (BRICS sherpas meeting) 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிரேசிலில் நடைபெறலாம். இந்தச் சந்திப்பின் மூலம் இந்த விவகாரத்தில் மேலும் ஒரு தெளிவு கிடைக்கும். இதில், முக்கியமாக பணமதிப்பு நீக்கம் (de-dollarisation) தொடர்பாக கசானில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மேலும் விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் தொடக்கத்தில், டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாவது, பிரிக்ஸ் நாடுகள் டாலரில் இருந்து விலகிச் செல்ல முயல்கின்றன என்ற கருத்து இனி செல்லாது என்றும், இதனால் அமெரிக்கா சும்மா பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் தனது சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியலில்' (Truth Social), இந்த பிரிக்ஸ் நாடுகளில் இருந்து ஒரு உறுதிப்பாட்டை விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். இதில், புதிய BRICS நாணயத்தை உருவாக்க மாட்டோம் என்றும், அவர்கள் உறுதியளிக்க வேண்டும். மேலும், அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் அவர்கள் ஆதரிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், 100 சதவீத வரி விதிக்கப்படும். கூடுதலாக, அவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கான அணுகலை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் பதிவிட்டவுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்ததாவது, டாலர் மதிப்பிழப்பை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், தற்போது, பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் கூறியதாவது, "பிரிக்ஸ் அமைப்பானது நிதி பரிவர்த்தனைகள் (financial transactions) பற்றி விவாதிக்கிறது. அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக ரீதியில் நட்பு நாடாகும். டாலரை பலவீனப்படுத்துவதில் இந்தியாவுக்கு எந்த விருப்பம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India (RBI)) முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸும் பேசினார். இதில், இந்தியா டாலர் மதிப்பிழப்பைப் (de-dollarisation) பின்பற்றவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், உள்நாட்டு நாணயங்களில் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான சமீபத்திய நடவடிக்கைகள் இந்திய வர்த்தகத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும்.
திட்டமிடப்பட்ட பிரிக்ஸ் நாணயமானது, ஒரு கற்பனை நாணயம் மற்றும் டாலரைப் போன்றது அல்ல, இதை டிரம்ப் புரிந்துகொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த கருத்து 'தரக்குறியீட்டு நாணயம்' (benchmarking currency) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது ஒரு குறிப்பு நாணயமாகும் (reference currency) ஆகும்.
BRICS நாணயத்தை வைத்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இதனால், ஒன்றை உருவாக்க, நிதி மற்றும் பணவியல் கொள்கைகள் இணக்கமாக இருக்க வேண்டும். இதில், முக்கியமாக கடன்-ஜிடிபி விகிதங்கள் போன்றவற்றை சீரமைப்பதும் இதில் அடங்கும். இருப்பினும், BRICS அமைப்பில் இந்த நடைமுறையானது இது கடினமாக உள்ளது. ஏனெனில், அதன் உறுப்பினர்களின் பொருளாதாரங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
ஆனால், தரக்குறியீட்டு நாணயத்தை (benchmarking currency) உருவாக்குவது எளிதானது. இந்த நாணயமானது, BRICS நாணயத்தை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தி, BRICS தொகுதிக்குள் உள்ள பொருட்களின் மதிப்பைக் காட்டும். இந்த நாணயத்தின் மதிப்பு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற வலுவான பொருளாதாரங்களால் தீர்மானிக்கப்படும். இந்த தீர்மானத்தின் அடிப்படையில், ஒரு சில நாணயங்கள் மட்டுமே BRICS நாணயத்தை உருவாக்கும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு (taskforce) இதற்கான விவரங்களை தெளிவாக விவாதத்திற்கு உட்படுத்தும்.
கசான் உச்சிமாநாட்டில், பணமதிப்பு நீக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களை இந்த கூட்டமைப்பு அறிவித்தது. இந்த திட்டங்களில் பல இராஜதந்திர திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் அடங்கும். அவை உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பு ஒரு பொதுவான கட்டண உள்கட்டமைப்பை ஆராயவும் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, அவர்கள் BRICS தானிய பரிமாற்றத்தை (grain exchange) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.