ஏன் வீட்டு மாடத்தில் (balcony) கஞ்சா செடி வளர்ப்பது குற்றம்; ஆனால், பாங் (Bhang) வாங்குவது குற்றமல்ல?

 பாங் (Bhang) சட்ட நிலை, இந்தியாவில் கஞ்சா சட்டங்கள் (Cannabis Laws) : கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இந்தியாவில் இந்தச் செடி தொடர்பான பொதுவான குழப்பத்தை தெளிவுபடுத்தியது: கஞ்சாவின் சில பாகங்கள் தொழில்நுட்ப ரீதியாக 'போதைப் பொருள்' (narcotic drug) என்ற வரையறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், செடியை வளர்க்கும் செயல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் கஞ்சா சட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன: அதன்படி, நவம்பர் 4 அன்று கேரள உயர் நீதிமன்றம், கஞ்சா வளர்த்ததற்காக ஒருவருக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. வாடகை வீட்டின் மொட்டை மாடியில் தொட்டிகளில் ஐந்து கஞ்சா செடிகளுடன் கலால் அதிகாரிகளால் மனுதாரர் பிடிபட்டார். அவர் ஒரு புதிய தற்காப்பு வாதத்தை முன்வைத்தார் – அந்தச் செடிகளில் இன்னும் "பூக்கும் அல்லது காய்க்கும் நுனிகள்" (flowering or fruiting tops) உருவாகவில்லை என்று வாதிட்டார். சட்டத்தின்படி, பூக்கும் நுனிகள் மட்டுமே "கஞ்சா" (ganja) என்று கருதப்படுவதாக அவர் கூறினார். எனவே, அந்த மொட்டுகள் இல்லாத செடி சட்ட விரதோமானதாக கருத்தப்படக்கூடாது என்று வாதிட்டார்.


சி.எஸ். டயஸ் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு இந்த வாதத்தை நிராகரித்தது. 1985ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் சட்டம் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS Act)), "கஞ்சா செடிக்கும்" (cannabis plant) "கஞ்சா" (ganja) என்ற தயாரிப்புக்கும் இடையே தெளிவான வரையறையை வைத்துள்ளதாக நீதிமன்றம் கூறியது. கஞ்சா அதன் பூக்கும் நுனிகளால் வரையறுக்கப்பட்டாலும், சட்டம் தனியாகவும் வெளிப்படையாகவும் கஞ்சா இனத்தைச் சேர்ந்த எந்தச் செடியின் வளர்ப்பையும் தடை செய்கிறது.


இந்தியாவில், இந்தச் செடி தொடர்பான பொதுவான குழப்பத்தை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது: கஞ்சாவின் சில பாகங்கள் தொழில்நுட்ப ரீதியாக "போதைப்பொருள்" (narcotic drug) என்ற வரையறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், செடியை வளர்க்கும் செயல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.


இந்திய சட்டத்தின் கீழ் 'கஞ்சா' என்றால் என்ன?


1985ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் சட்டம் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS Act)) இயற்றப்பட்டது. சர்வதேச அழுத்தம் குறிப்பாக, அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சட்டத்தை இயற்றியது. இந்திய கலாச்சாரத்தில் எப்போதும் ஒரு பகுதியாக இருந்த ஒரு பொருளை குற்றமாக்குவதற்கு (criminalise) எதிரான வாதங்கள் இருந்தாலும், சட்டம் செடியின் அனைத்து பாகங்களுக்கும் முழுமையான தடையை விதிக்கவில்லை.


போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 2(iii), "கஞ்சா (சணல்)" (cannabis - hemp) என்பது சரஸ் (charas), கஞ்சா (ganja) மற்றும் இவை இரண்டிலிருந்தும் தயாரிக்கப்படும் எந்த கலவை அல்லது பானத்தையும் குறிக்கும் என்று வரையறுக்கிறது. சரஸ் (charas) என்பது கஞ்சா செடியிலிருந்து பெறப்பட்ட "பிரிக்கப்பட்ட பிசின், எந்த வடிவிலும்" – ஹாஷிஷ் எண்ணெய் (hashish oil) உள்பட என வரையறுக்கப்படுகிறது. கஞ்சா என்பது "கஞ்சா செடியின் பூக்கும் அல்லது காய்க்கும் மொட்டுகள்" (flowering or fruiting tops) என்று வரையறுக்கிறது. இருப்பினும், இந்த வரையறையில் “மொட்டுகள் இல்லாத போது செடியின் விதைகள் மற்றும் இலைகள்” சட்டத்திற்குள் வரவில்லை.


பாங் (Bhang) சட்ட இடைவெளி


இலைகள் மற்றும் விதைகளின் இந்த விலக்கு தான் பாங் (Bhang)-கான சட்டப்பூர்வ இடத்தை உருவாக்குகிறது – இது கஞ்சா செடியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் உண்ணக்கூடிய தயாரிப்பு ஆகும். இது பெரும்பாலும் ஹோலி மற்றும் மகா சிவராத்திரி போன்ற பண்டிகைகளின் போது உட்கொள்ளப்படுகிறது.


போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS Act)) சட்டம் இலைகளை "கஞ்சா" என வகைப்படுத்தாததால், பாங் "போதைப்பொருள்" (narcotic drug) அல்லது "மனம்பாதிக்கும் பொருள்" (psychotropic substance) என்ற வரையறைக்குள் வருவதில்லை. எனவே, கஞ்சாவின் உற்பத்தி, வைத்திருத்தல், விற்பனை, வாங்குதல் மற்றும் பயன்பாடு சட்டத்தின்கீழ் குற்றமாக இருந்தாலும், பாங் இந்த சட்டத்திற்குள் வரவில்லை.


ஆனால் இதன் அர்த்தம் பாங் ஒழுங்குபடுத்தப்படாதது என்று அல்ல. போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் சட்டம் தொடர்பான தேசிய கொள்கை (National Policy on NDPS), பாங் உற்பத்தி சட்டத்தால் உள்ளடக்கப்படவில்லை என்றாலும், அது மாநில சட்டங்களுக்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்துகிறது. தொழில்துறை நோக்கங்களுக்காக அல்லது நார் மற்றும் விதைகளைப் பெறுவதற்காக கஞ்சா செடிகளின் சாகுபடி மற்றும் உற்பத்தி, வைத்திருத்தல், நுகர்வு மற்றும் போக்குவரத்தை அனுமதிக்கவும் ஒழுங்குபடுத்தவும் மாநில அரசுகளுக்கு சட்டம் அனுமதி அளிக்கிறது.


இதன் விளைவாக, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பாங் விற்க அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்குகின்றன. அசாம் போன்ற மற்ற மாநிலங்கள், உள்ளூர் சட்டங்களின்கீழ் அதை முழுவதுமாக தடை செய்துள்ளன.


வீட்டில் ஏன் கஞ்சா வளர்க்க முடியாது?


கஞ்சா இலைகள் போதைப்பொருள் மற்றும் மனம்பாதிக்கும் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS Act)) சட்டத்தால் உள்ளடக்கப்படவில்லை என்றால், அவற்றை அறுவடை செய்ய ஒருவர் ஏன் செடி வளர்க்க முடியாது? கடந்த வார கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.


சட்டத்தின் பிரிவு 8(b), மருத்துவ அல்லது அறிவியல் நோக்கங்களுக்காகவும், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையிலும் தவிர, எந்த கஞ்சா செடியின் சாகுபடியையும் தடை செய்கிறது. சட்டத்தின் பிரிவு 2(iv)-ல் "கஞ்சா செடி" (cannabis plant) என்பது "கஞ்சா இனத்தைச் சேர்ந்த எந்தச் செடியும்" என்று வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது.


சட்டத்தில், பூக்கள் உள்ள செடியும் பூக்கள் இல்லாத செடிக்கும் இடையில் என்று எந்த வேறுபாடும் காட்டப்படவில்லை – குற்றம் செடியை “வளர்ப்பது” (cultivation) என்பதில் உள்ளது. தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது அல்ல. இது, பொதுவாக விவசாயத்தைக் குறிக்கிறது என்ற மனுதாரரின் வாதமும் நிராகரிக்கப்பட்டது. "வளர்ப்பு" என்பது ஒரு வயலிலோ அல்லது பூந்தொட்டியிலோ ஒரு செடியை வளர்ப்பது அல்லது தோட்டக்கலை செய்வதை உள்ளடக்கியது என்பதை நிறுவ நீதிமன்றம் சட்ட அகராதிகளைப் பயன்படுத்தி விளக்கியது.


சுருக்கமாக, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடையில் பாங்-கை சட்டப்பூர்வமாக வாங்கலாம். ஆனால், அந்த இலைகளை உற்பத்தி செய்யும் செடியை வளர்ப்பது குற்றமாகும்.


தண்டனை மற்றும் அளவு


சட்டத்தின் கீழ் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்கான தண்டனை, சம்பந்தப்பட்ட போதைப்பொருளின் அளவின் அடிப்படையில் "சிறிய" மற்றும் "வணிக" என மதிப்பிடப்படுகிறது.


கஞ்சாவிற்கு, "சிறிய அளவு" 1 கிலோ வரை என்ற அளவு உள்ளது. charas-க்கு, இது 100 கிராம் என்ற அளவு உள்ளது. சிறிய அளவுடன் பிடிபடுவது ஒரு வருடம் வரை கடுமையான சிறைத்தண்டனை ரூ. 10,000 அபராதம் அல்லது இரண்டிற்கும் வழிவகுக்கும்.


கஞ்சாவிற்கு "வணிக அளவு" (commercial quantity), குறைந்தது 20 கிலோவிற்கு மேல் என்ற அளவு உள்ளது; charas-க்கு, இது 1 கிலோ அல்லது அதற்கு கிலோவிற்கு மேல் என்ற அளவு உள்ளது. இதற்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை மற்றும் ரூ 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.


சிறிய மற்றும் வணிக அளவுகளுக்கு இடையில் உள்ள அளவை உள்ளடக்கிய எந்தவொரு குற்றத்திற்கும், தண்டனை 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ 1 லட்சம் அபராதம் வரை நீட்டிக்கப்படலாம்.


கேரள வழக்கில் உள்ளதைப் போல் செடியை வளர்ப்பது – 10 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.


தொழில்துறை மற்றும் மருத்துவ விதிவிலக்குகள்


அதன் கடுமையான தடை இருந்தபோதிலும், சட்டம் சட்டப்பூர்வ சாகுபடிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. சட்டத்தின் பிரிவு 14, தோட்டக்கலை (horticultural) மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக மட்டுமே கஞ்சாவின் சாகுபடியை அனுமதிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக நார் அல்லது விதையைப் பெறுவதற்கு, அல்லது மருத்துவ பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கிறது.


இந்த விதி உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் தொழில்துறை சணல் (industrial hemp) சாகுபடியை சட்டப்பூர்வமாக்க அனுமதித்துள்ளது இது கஞ்சா செடியின் ஒரு வகை ஆகும், ஆனால் அதில் போதை ஏற்படுத்தும் டெட்ராஹைட்ரோகேனாபினால் (Tetrahydrocannabinol) என்ற ரசாயனத்தின் அளவு மிகக் குறைவாக (பொதுவாக 0.3%-க்கும் கீழே) உள்ளது. எனவே, இது “போதை” தராது. 2018-ஆம் ஆண்டில், உத்தரகாண்ட் சணல் சாகுபடிக்கு உரிமம் வழங்கிய முதல் மாநிலமாக மாறியது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அனுமதி வழங்கியுள்ளன.


மத்திய அரசாங்கம் மருத்துவ ஆராய்ச்சிக்காக கஞ்சா வளர்ப்பதற்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research) போன்ற அறிவியல் அமைப்புகளுக்கும் உரிமம் வழங்கியுள்ளது. 2020-ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் மருத்துவ கஞ்சா மருத்துவமனை பெங்களூரில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட, நோய்களுக்கு கஞ்சா அடிப்படையிலான (cannabis-based) மருந்துகளை பரிந்துரைக்கிறது.


2019-ஆம் ஆண்டு முதல், கஞ்சா மீதான தடையை எதிர்த்து, Great Legalisation Movement India Trust என்ற வழக்கறிஞர் குழுவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கட்டுப்பாடுகள் அறிவியல் பூர்வமானவை அல்ல என்றும் தன்னிச்சையானவை என்ற வாதத்தை முன் வைக்கிறது.


Original Article: Why growing a cannabis plant in your balcony is a crime, but buying bhang isn’t.



Share:

உலகளாவிய கார்பன் திட்டம், தூய்மையான எரிசக்தியில் முதலீடுகளையும் மக்களின் தாங்குதிறனை வலுப்படுத்துவதையும் முக்கியத் தேவையாக வலியுறுத்துகிறது.

 இது ஒரு கவலையளிக்கும் செய்தியாக உள்ளது - புவி வெப்பமடைதலின் ஆபத்தான தாக்கங்களைத் தணிக்கும் அளவுக்கு கார்பன் நீக்க முயற்சி வலுவாக இல்லை.


2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக கார்பன் உமிழ்வு புதிய உச்சத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெற்று வரும் 30வது காலநிலை மாநாட்டுடன் ஒப்பிட்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை இதனைத் தெரிவிக்கிறது. 2024-ஆம் ஆண்டைவிட அமெரிக்கா 1.9 சதவீத அதிகரிப்பையும், அதைத் தொடர்ந்து இந்தியா 1.4 சதவீதத்தையும், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளன. இருப்பினும், உலகளாவிய கார்பன் திட்டத்துடன் பணிபுரியும் 130 விஞ்ஞானிகள் குழு தயாரித்த அறிக்கை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பெரிய அளவிலான பயன்பாடு காரணமாக, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வெளியேற்றம் மிகவும் மெதுவாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆண்டு ஒப்பீட்டளவில் குளிர்ந்த கோடைக்காலமும், முன்கூட்டியே தொடங்கிய பருவமழையும் இந்தியாவின் மின்சாரத் துறை உமிழ்வு 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2024-ன் அதே காலகட்டத்தைவிட குறைவாக இருக்க காரணமாக அமைந்தன. இந்தியாவின் பொருளாதாரத்தில் கார்பன் தீவிரத்தை குறைப்பதற்கான நீண்டகால போக்கின் ஒரு பகுதியாகவும் இந்த மந்தநிலையைப் பார்க்க வேண்டும் - 2004-2015-ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் சராசரி வளர்ச்சி 2015-2024-ஆம் ஆண்டில் 3.6 சதவீதமாகக் குறைந்தது. இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவின் புள்ளிவிவரங்கள் நாட்டின் உமிழ்வில் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக நிலவிய கீழ்நோக்கிய போக்கின் (downward trend) தலைகீழ் மாற்றத்தைக் காட்டுகின்றன.


உலகளாவிய கார்பன் திட்டம் (Global Carbon Project) முக்கிய நாடுகளில் உமிழ்வைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், கார்பனைக் குறைப்பதற்கான முயற்சிகள் புவி வெப்பமடைதலின் ஆபத்தான விளைவுகளைத் தடுக்க போதுமானதாக இல்லை என்றும் எச்சரிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலக்கரியை மின்சாரத்தின் முக்கிய ஆதாரமாக மாற்றியுள்ளது. அந்த சூழலிலும், எரிசக்தி மீதான தேவை அதிகரித்து வருவதால், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டில் எந்தக் குறைவும் இல்லை. உலகளாவிய உமிழ்வுகள் 2030-ஆம் ஆண்டில் குறையக்கூடும். ஆனால், அது பாரிஸ் ஒப்பந்த இலக்கான 1.5°C-க்குக் கீழே வெப்பமயமாதலைத் தக்கவைக்க போதுமானதாக இருக்காது. தற்போதைய விகிதத்தில் உமிழ்வு தொடர்ந்தால், பாரிஸ் ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட கார்பன் வரம்பை உலகம் கிட்டத்தட்ட பயன்படுத்திவிடும் என்று அறிக்கை எச்சரிக்கிறது. 30வது காலநிலை மாநாட்டுடன் உடன் இணைந்து வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவது போல், உலகம் 2.6 டிகிரி வெப்பநிலை உயர்வை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது.


பிரேசிலில் ஒன்றுகூடியுள்ள பேச்சுவார்த்தையாளர்களுக்கு இந்தச் செய்தி தவறாக சென்று விடக் கூடாது. 30-வது கால நிலை மாநாடு, சுத்தமான எரிசக்தி பயன்பாட்டுக்கான ஒரு தெளிவான எதிர்கால திட்டத்தை (roadmap) வழங்க சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், வெள்ளம், வறட்சி, புயல், புவி வெப்பமடைதலின் காரணமாக ஏற்படும் பேரிடர்களுக்கு எதிராக உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டிய நேரம் இது.


Original Article: Global Carbon Project underlines need for investments in clean energy, building people’s resilience.


Share:

தேசிய பத்திரிகை தினம் மற்றும் இந்தியாவின் 2025 பத்திரிகை சுதந்திர நிலைப்பாடு.

நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினமாக - ஏன் அனுசரிக்கப்படுகிறது ? இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்றால் என்ன, 2025ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?


தற்போதைய செய்தி : 


இன்று தேசிய பத்திரிகை தினமாகும். இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகையின் முக்கியப் பங்கை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ஆம் தேதி பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நவம்பர் 16, 1966 அன்று செயல்படத் தொடங்கிய இந்தியப் பத்திரிகையாளர் மன்றத்தின் தொடக்க நாளை தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் அதிகரித்துவரும் தவறான தகவல்களுக்கு இடையில் பத்திரிகை நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. துல்லியமான மற்றும் நெறிமுறை அறிக்கையிடலின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த சூழலில், இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் இந்தியா பற்றி மட்டுமல்லாமல், 2025-ஆம் ஆண்டில் உலக பத்திரிகை சுதந்திர அட்டவணையில் (World Press Freedom Index) இந்தியாவின் நிலை பற்றியும் புரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் (Press Council of India (PCI)) என்பது 1965-ஆம் ஆண்டு இந்தியப் பத்திரிகையாளர் சட்டத்தின் கீழ் 1966-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான தன்னாட்சி அமைப்பாகும். 1965-ஆம் ஆண்டு சட்டம், 1975-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டது.


2. 1978-ஆம் ஆண்டு இந்தியப் பத்திரிகையாளர் சட்டத்தின்கீழ், 1979-ஆம் ஆண்டு இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் மறுசீரமைக்கப்பட்டது. பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பது, செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் பத்திரிகையாளர்களிடையே சுய ஒழுங்குமுறையை ஊக்குவிப்பது இந்தியப் பத்திரிகையாளர் சட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்களாகும்.


3. இந்தியப் பத்திரிகையாளர் மன்றத்தின் கூற்றுப்படி,  பத்திரிகையாளர் மன்றம்  “ஒரு நெறிமுறை கண்காணிப்பாளராக” செயல்படுகிறது என்றும், பத்திரிகைகள் இந்த சக்திவாய்ந்த ஊடகத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் உயர்தரங்களை பராமரிப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், எந்தவொரு வெளிப்புற காரணிகளின் செல்வாக்கு அல்லது அச்சுறுத்தல்களால் அது தடைபடாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.


4. மிகமுக்கியமாக, பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்க அமைப்புகளைக் கூட கேள்வி கேட்க முடியும் என்பதால், இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஊடகக் குழுக்களிடம் இருந்து வேறுபடுகிறது.


5. இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் ஒரு தலைவரால் தலைமை தாங்கப்படுகிறது. அவர் வழக்கமாக இந்திய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியாக இருப்பார். மேலும், இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது மற்றும் 1978-ஆம் ஆண்டு இந்தியப் பத்திரிகை சட்டத்தின் பிரிவு 5(3)-ன்கீழ் உள்ள விதிகளின்படி குழு மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.


6. பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தித்தாள்கள் பின்பற்ற வேண்டிய 'பத்திரிகை நடத்தை விதிமுறைகளை' இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் வகுத்துள்ளது. 'பத்திரிகை நடத்தை விதிமுறைகளை' மீறும் அச்சு ஊடகங்களில் உள்ள உள்ளடக்கங்களை குழு தானாக அல்லது ஏதேனும் ஒரு நபர் புகார் அளிக்கும்போது பிரச்சினைகளைக் கவனிக்கிறது.



1. 2025ஆம் ஆண்டில், பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி அறைகள் மீதான அதிகரித்துவரும் பொருளாதார அழுத்தங்களால் உலகளாவிய பத்திரிகை சுதந்திரம் அச்சறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பத்திரிகையாளர்கள் ஏற்கனவே பல சமூக, அரசியல் மற்றும் சட்ட சவால்களை எதிர்கொள்வதால், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் பணியை இன்னும் கடினமாக்குகிறது.


2. எந்த எல்லைகளும் இல்லாத நிருபர்கள் (Reporters Without Borders (RSF)) அமைப்பின் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2025-ன் புதிய கண்டுபிடிப்பு, ஒரு கவலையளிக்கும் சரிவைக் காட்டுகிறது. வரலாற்றில் இது முதல்முறையாக, உலகளாவிய பத்திரிகை சுதந்திர நிலைமை "கடினமானது" என்று விவரிக்கப்படுகிறது.

எல்லைகளற்ற நிருபர்கள் என்றால் என்ன?

எல்லைகளற்ற நிருபர்கள் அல்லது பிரெஞ்சு மொழியில் Reporters Sans Frontières என்பது பாரிஸ் நாட்டில் உள்ள பிரான்சின் பாரிஸை தலைமையிடமாகக் கொண்ட ஒரு உலகளாவிய ஊடக கண்காணிப்பு அமைப்பாகும். இது உலகின் பல நாடுகளில் செய்தியாளர்களின் சுதந்திரத்தைப் பற்றி வருடாந்திர அறிக்கையை வெளியிடுகிறது. "நாங்கள் ஒரு தொழிற்சங்கமோ அல்லது ஊடக நிறுவனங்களின் பிரதிநிதியோ அல்ல" என்று அந்த அமைப்பின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.



3. நார்வே கடந்த ஆண்டைப் போலவே 2025-ஆம் ஆண்டிலும் பட்டியலில் முன்னணியில் இருந்தது. அதைத் தொடர்ந்து பத்திரிகை சுதந்திர ஆய்வுகளில் தொடர்ந்து உயர்ந்த இடத்தைப் பிடித்த ஸ்காண்டிநேவிய மற்றும் ஐரோப்பிய நாடுகள், வலுவான சட்டப் பாதுகாப்புகள் மற்றும் மாறுபட்ட ஊடகப் பொருளாதாரத்தால் ஆதரிக்கப்படுகின்றன.


2025-ஆம் ஆண்டில் சிறந்த பத்திரிகை சுதந்திரம் கொண்ட முதல் 3 நாடுகள்

தரவரிசை

நாடுகள்

உலகளாவிய மதிப்பெண்

அரசியல்

1

நோர்வே

92.31 

96.22 

2

எஸ்டோனியா

89.46 

90.87 

3

நெதர்லாந்து

88.64 

89.95 



4. இந்த ஆண்டு, எரித்திரியா கடைசி இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில், பத்திரிகை சுதந்திரம் மோசமடைந்து வருகிறது. இந்த நாடுகளில் தொடர்ச்சியான பிளவு மற்றும் அடக்குமுறை காரணமாக பொருளாதார மதிப்பெண்ணில் ஏற்பட்ட 80% சரிவு கவலையளிக்கிறது.

2025ஆம் ஆண்டில் மிக மோசமான பத்திரிகை சுதந்திரம் கொண்ட கடைசி 3 நாடுகள்

தரவரிசை

நாடுகள்

உலகளாவிய மதிப்பெண்

180 

எரித்திரியா

11.32 

179 

வட கொரியா

12.64 

178 

சீனா

14.8 



5. 2025ஆம் ஆண்டில் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index) இந்தியா 32.96 மொத்த மதிப்பெண்களுடன் 151-வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு 159-வது இடத்தில் இருந்து 8 இடங்கள் முன்னேறியது.



6. மதிப்பிடப்பட்ட 180 நாடுகளில், 160 நாடுகள் ஊடக நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மை தொடர்பாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா 57வது இடத்தில் இருந்து, முந்தைய ஆண்டை விட 2 இடங்கள் சரிவை சந்தித்தது. துனிசியா 11 இடங்கள் சரிந்து 129வது இடத்தை பிடித்தது. மற்றும் அர்ஜென்டினா 21 இடங்கள் சரிந்து 87-வது இடத்தை பிடித்தது.


7. அரசியல் நிலையற்ற தன்மை (Political instability) ஊடகப் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்குகிறது. பாலஸ்தீனத்தில் (163வது) குறிப்பிட்ட சிரமங்களும், இஸ்ரேலில் (112வது, 11 இடங்கள் சரிந்து) குறிப்பிடத்தக்க சரிவும் ஏற்பட்டுள்ளது.


8. ஒரு சிலரோ அல்லது அரசாங்கமோ ஊடகங்களைக் கட்டுப்படுத்தும்போது, ​​அது பன்முகத்தன்மையைக் குறைத்து சுய தணிக்கைக்கு (self-censorship) வழிவகுக்கும். இது 29வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, 21-வது இடத்தில் உள்ள கனடா, 10-வது இடத்தில் உள்ளசெக்கியா மற்றும் 25வது இடத்தில் உள்ள பிரான்ஸ் போன்ற 46 நாடுகளைப் பாதிக்கிறது. சில சூழல்கள்ளில், 171வது இடத்தில் உள்ள ரஷ்யாவைப் போல அனைத்து ஊடகங்களும் அரசிடம் உள்ளன.


9. தலையங்கக் குறுக்கீடு (Editorial interference) மதிப்பீடு என்பது பரவலான பிரச்சனை ஆகும். 180 நாடுகளில் 92 நாடுகளில் இந்தப் பிரச்சனை காணப்படுகிறது. 21 நாடுகளில்—உதாரணமாக ருவாண்டா (146வது), ஐக்கிய அரபு எமிரேட்டுகள் (164வது) மற்றும் வியட்நாம் (173வது)—ஊடக உரிமையாளர்கள் ஒழுங்காக செய்தியாளர் முடிவுகளில் தலையீடு செய்கிறார்கள், என்று எந்த எல்லைகளும் இல்லாத நிருபர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.


பத்திரிகை சுதந்திரத்தை எல்லைகளற்ற நிருபர்களின் குறியீடு எவ்வாறு அளவிடுகிறது?


1. அதன் வலைத்தளத்தின்படி, பத்திரிகை சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்கள் அரசியல், பொருளாதார, சட்டபூர்வமான அல்லது சமூக அழுத்தம் இல்லாமல், அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் இல்லாமல் பொதுமக்களுக்கு சேவை செய்யும் செய்திகளை சுதந்திரமாகத் தேர்வுசெய்யலாம், உருவாக்கலாம் மற்றும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வரையறையின் அடிப்படையில் உலகளவில் பத்திரிகை சுதந்திரத்தின் அளவை இந்தக் குறியீடு ஒப்பிடுகிறது


2. இது 0  என்பது மோசமான பத்திரிகை சுதந்திரம் மற்றும் 100 என்பது சிறந்த பத்திரிகை சுதந்திரம் போன்றவற்றுக்கு இடையே மதிப்பெண்ணை உருவாக்குகிறது. இந்த மதிப்பெண் இரண்டு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. அவை : 


(i) ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது அவர்களது பணியுடன் தொடர்பான துன்புறுத்தல்களின் எண்ணிக்கை, செய்தியாளர்கள் கைது செய்யப்படுவது அல்லது கொல்லப்படுவது போன்ற செய்திகளை கண்காணித்து பகுப்பாய்வு செய்கிறது.


(ii) பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் போன்ற "பத்திரிகை சுதந்திர நிபுணர்களை" 24 மொழிகளில் கிடைக்கும் ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்கச் சொல்லி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நிலைமையை எந்த எல்லைகளும் இல்லாத நிருபர்களின் குறியீடு ஆய்வு செய்கிறது.


பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை


1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை வழங்குகிறது. இந்த உரிமை அரசாங்க கட்டுப்பாடுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே உள்ளது. இருப்பினும், தீண்டாமை, மனிதக் கடத்தல் மற்றும் அடிமைத் தொழில் (bonded labour) போன்றவை மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் தனிநபர்களுக்கும் எதிராகவே வெளிப்படையாகத் தடை விதிக்கின்றன.


2. இது இந்திய குடிமக்களுக்கு (citizens) மட்டுமே பொருந்தும் ; வெளிநாட்டவர்களுக்கு (foreigners) பொருந்தாது. அரசியலமைப்பின் 19(1) பிரிவு பேச்சு சுதந்திரம் தொடர்பான சில உரிமைகளைப் பாதுகாத்தல், முதலியன. அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு: அதன் படி


(அ) ​​பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்;


(ஆ) ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாகக் கூடுவது;


(இ) சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை உருவாக்குதல்;


(ஈ) இந்தியப் பிரதேசம் முழுவதும் சுதந்திரமாகச் செல்ல;


(உ) இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும் குடியேறவும்; மற்றும்



Knowledge Nugget | National Press Day and India’s 2025 Press Freedom Standing: A must-know for UPSC Exam

(ஊ) நீக்கப்பட்டது


(எ)எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள அல்லது எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது தொழிலையும் மேற் கொள்ளலாம் என்று கூறுகிறது.


3. அரசியலமைப்பின் 19(1) பிரிவில் வழங்கப்பட்ட சுதந்திரம் முழுமையானதோ அல்லது கட்டுப்பாடுகள் அற்றதோ அல்ல. அதைத் தொடர்ந்து வரும் 19(2) பிரிவு, பேச்சு சுதந்திரத்தின் மீதான “நியாயமான கட்டுப்பாடுகள்” அல்லது விதிவிலக்குகளை பின்வரும் தலைப்புகளின் கீழ் பட்டியலிடுகிறது: அவை


→ அரசின்  பாதுகாப்பு,


→ வெளிநாடுகளுடனான நட்புறவுகள்


→ பொது ஒழுங்கு,


→ கண்ணியம் மற்றும் ஒழுக்கம்,


→ நீதிமன்ற அவமதிப்பு,


→ அவதூறு,


→ குற்றத்தைத் தூண்டுதல்,


→ இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகும்.


Original Article: National Press Day and India’s 2025 Press Freedom Standing.


Share:

பிர்சா முண்டா மற்றும் ஆதிவாசி மகாசபை பற்றி…

முக்கிய அம்சங்கள்:


— “ஜார்க்கண்ட் இயக்கத்தின்வீச்சு 2000-ஆம் ஆண்டில் நடந்த பிரதேச மறுசீரமைப்புக்கும் அப்பால் நீண்டு செல்கிறது. அதன் தோற்றத்தை, சுரண்டல் செய்யும் வெளியாட்களைக் (உள்ளூரில் 'திக்கு (diku)' என்று அழைக்கப்படும் சொல்) எதிர்த்து ஆதிவாசிகள் பல நூற்றாண்டுகளாக நடத்திய அணி திரட்டல்களில் அறிஞர்கள் காண்கின்றனர். ஆனால் 1938-ஆம் ஆண்டில் ஆதிவாசி மகாசபாவின் உருவாக்கம் மற்றும் ஜெய்பால் சிங் முண்டாவின் கவர்ச்சிகரமான தலைமையின்கீழ் அதன் மாற்றம் ஆகியவை இயக்கத்திற்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் மையத்தை அளித்தன. அவர் பிரிவினைவாதத்தை நாடாமல், வளங்களைச் சுரண்டும் வெளிப்புற சக்திகளிடமிருந்து பாதுகாப்பையும் நீண்டகாலமாக விளிம்புகளுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு கண்ணியத்தையும் கோரும் சுயாட்சிக்கான கோரிக்கையை அவர் எடுத்துரைத்தார். ”


— “சுதந்திரத்திற்குப் பிறகு, ஆதிவாசி மகாசபா 1950-ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் கட்சியாக மாறியது. இந்த மாற்றம், கலாச்சார உறவுகளையும் பொதுவான சுரண்டலின் வரலாற்றையும் பகிர்ந்து கொண்ட ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பூர்வீக மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் வாக்காளர்களை மேலும் பரவலாக்கியது.”


— “1951 மற்றும் 1957-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் கட்சியின் வலுவான செயல்திறன், கோரிக்கையின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்தியது. இருப்பினும், 1956-ஆம் ஆண்டில், மாநில மறுசீரமைப்பு ஆணையம் தனி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான திட்டத்தை நிராகரித்தது. ஏனெனில், அது மொழியியல் அளவுகோலை பூர்த்தி செய்யவில்லை. இது இயக்கத்தைப் பிளவுபடுத்தியது, இதன் காரணமாக 1963-ஆம் ஆண்டில் சிங் காங்கிரசுடன் இணைந்தார்.”


— “1973-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. ராய் மற்றும் குர்மி தலைவர் பினோத் பிஹாரி மஹ்தோ ஆகியோருடன் இணைந்து ஷிபு சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) உருவாக்கப்பட்டதன் மூலம் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM), இயக்கத்தின் புவியியல் மற்றும் கற்பனை எல்லையை மாற்றியது.”


— “அரசியல் மையப்புள்ளி சோட்டா நாக்பூர் மற்றும் சந்தால் பர்கானா ஆகிய ஆதிவாசிப் பகுதிகளிலிருந்து ஜாம்ஷெட்பூர் (Jamshedpur), பொகாரோ (Bokaro) மற்றும் தன்பாத் (Dhanbad) ஆகிய தொழில்துறைப் பகுதிகளுக்கு மாறியது. இங்கு, ஆதிவாசி அடையாளம், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM)) இந்த இயக்கத்தில் ஒரு வர்க்கப் பரிமாணத்தைச் சேர்த்து, அதன் சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தியதுடன், வெறும் கலாச்சார உரிமைகளில் மட்டுமில்லாமல், பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான சிந்தனையிலும்  வேரூன்றியது.”


— “1986-ஆம் ஆண்டு நிர்மல் மஹ்தோவின்கீழ் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (All Jharkhand Students Union (AJSU)) உருவாக்கப்பட்டதன் மூலம் இந்த உத்வேகம் தீவிரமடைந்தது. இது ஓரளவுக்கு அனைத்து அசாம் மாணவர் சங்கத்தை மாதிரியாகக் கொண்டது. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தின் (All Jharkhand Students Union (AJSU)) உறுதியான அரசியல், இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்ததுடன், ஒரு புதிய தலைமுறையினரைத் தன்வசம் ஈர்த்ததோடு அதற்கு அமைப்புக் கட்டமைப்பு வலிமையையும் இளமைத் துடிப்பையும் அளித்தது.”


— இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியும் நிபந்தனைக்குட்பட்ட ஆதரவை வழங்கத் தொடங்கியது. இருப்பினும், அது ஜார்கண்ட் என்ற கோரிக்கையை வனஞ்சல் (Vananchal) என்று மறுவடிவமைத்தது. இது ஆதிவாசிகள் அடிப்படையில் வனவாசிகள், அதாவது காடுகளில் வாழும் இந்துக்கள் என்ற அதன் சித்தாந்த நிலைப்பாட்டைப் பிரதிபலித்தது. இந்த மறுபெயரிடல் பரவலாக எதிர்க்கப்பட்டதுடன், ஜார்கண்ட் இயக்கத்தின் தனித்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. இது ஆதிவாசி மையத்துடன் கூடிய பிராந்திய அடையாளத்தில் வேரூன்றி இருந்தது. ஆனால், மற்ற விளிம்புநிலை குழுக்களை உள்ளடக்கும் அளவுக்குப் பரந்ததாக இருந்தது. இது, மண்ணின் மைந்தர்கள் என்ற பிரத்தியேக அரசியல் இல்லாமல், பல்வேறு மக்களின் (பஹுஜன்) சிந்தனையை ஒருங்கமைத்தது போல இருந்தது. அங்கீகாரம், மறுபகிர்வு மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை இணைத்த இந்த இயக்கம், ஒரு மாநிலத்தை மட்டுமன்றி, ஒரு சமூக மாற்றத்தையும் கோரியது. ”


— “ஏறக்குறைய 75 ஆண்டுகால போராட்டம் மற்றும் தியாகத்திற்குப் பிறகு, ஜார்க்கண்ட் இறுதியாக நவம்பர் 15-ஆம் தேதி 2000-ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது. பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் இது நிகழ்ந்தது இந்த சாதனைக்கு ஒரு தார்மீக மற்றும் வரலாற்று மதிப்பு கிடைத்தது. இருப்பினும், 25 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த இயக்கத்தை ஊக்குவித்த விடுதலையின் நோக்கம்  பகுதியளவு மட்டுமே நிறைவேறியுள்ளது.”


— “உள்கட்டமைப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஜார்க்கண்ட் மறுக்க முடியாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால், ஆழமான கட்டமைப்பு சவால்கள் இன்னும் கடுமையாகவே உள்ளன. வளர்ச்சியால் ஏற்படும் இடப்பெயர்வு, ஆதிவாசி சமூகங்களை தொடர்ந்து அச்சுறுத்துகிறது, வெளிநாடுகளுக்கு அல்லது வெளியூர்களுக்குச் செல்வது குறிப்பிடத்தக்க அளவை எட்டியுள்ளது. மேலும், சமூக பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மிகவும் வெளிப்படையான பதற்றமான இடம் என்னவென்றால், பழங்குடியினர் தகுதி கோருவது தொடர்பாக ஆதிவாசிகள் மற்றும் குர்மிஸ் (Kudmis) இடையே உள்ள மோதல் ஆகும். இது நீண்டகாலமாக இருந்த சமூகக் குழுக்களை நிலைகுலையச் செய்துள்ளது.”


— “ஜார்க்கண்ட் மாநிலத்தின் 25 ஆண்டு மாநில அந்தஸ்து என்பது ஒரு சம்பிரதாய தருணம் என்பதைவிட மேலாக இருந்து, சிந்தனையை தூண்டும் வகையில் அமைய வேண்டும். மாநிலம் அதன் தலைவர்களை தொலைதூரச் சின்னங்களாக இல்லாமல், ஒரு தீர்வு காணப்படாத போராட்டத்தின் குரல்களாக நினைவுகூர வேண்டும். மேலும், அதன் மக்கள் கண்ணியம், நீதி மற்றும் சமத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு ‘ஜார்க்கண்ட்’ என்ற இயக்கத்தின் முக்கிய வாக்குறுதிக்கு திரும்ப வேண்டும்.”


உங்களுக்குத் தெரியுமா?


— இந்திய அரசியலமைப்பின் 3வது பிரிவானது, புதிய மாநிலங்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள மாநிலங்களை எளிய பெரும்பான்மையுடன் மாற்றவும், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஒப்புதலில்லாமல் பிரிக்கவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.


— அரசாங்கம் ஒரு புதிய மாநிலத்தை உருவாக்க முடிவு செய்து, அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டமன்றம் அல்லது சட்டமன்றங்களின் கருத்துக்களைப் பெறுமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


— புவியியல், நிதி நிலை, தலைநகரம், உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு கூறுகளைப் பிரிப்பது: அதாவது, பழைய மற்றும் புதிய மாநிலங்களுக்கு இடையேயான சொத்துக்கள், உள்கட்டமைப்பு, மனித வளங்கள், நதிநீர் ஆகியவற்றைப் பிரிப்பது குறித்த விவரங்களுடன் ஒரு மசோதா தயாரிக்கப்பட வேண்டும். சட்டமன்றங்களின் கருத்துக்கள் அனுப்பப்பட்டவுடன், அந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றவுடன், புதிய மாநிலம் நடைமுறைக்கு வருகிறது.


 Original Article : About the Birsa Munda and the Adivasi Mahasabha.


Share:

நெகிழ்வான பணவீக்க இலக்கு, ஒரு நல்ல சமநிலை

வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் பேரியல் (macro) நிலைமைகளுக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளக்கூடிய பணவீக்க விகிதங்களைப் பெறுவது மதிப்புக்குரியது.


இந்தியாவில் தற்போதுள்ள நெகிழ்வான பணவீக்க இலக்கு நிர்ணய (Flexible Inflation Targeting (FIT)) கட்டமைப்பு, பணவியல் கொள்கைக்கான ஆணையாக, பணவீக்கத்தை 4% (+/-)2 சதவீதமாக  நிர்வகிக்கும் காலக்கெடு மார்ச் 2026-ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மேலும், இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி நன்கு ஆராயப்பட்ட ஒரு விவாதக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. மேலும், பல கேள்விகளுக்கு கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையில், தலைப்புச் செய்திக்கும் முக்கிய பணவீக்கத்திற்கும் (உணவைத் தவிர்த்து), ஏற்கத்தக்க பணவீக்க நிலை மற்றும் பணவீக்க வரம்பு ஆகிய மூன்று கேள்விகளைப் பற்றி பேசுகிறது.




பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்


இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு முன், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது நிதி கொள்கையின் (Monetary Policy) ஒரு முக்கியமான நோக்கம் என்பதை முதலில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமான பணவீக்கம், ஏழை குடும்பங்களை விடவும், பணக்காரர்கள் மற்றும் வருமானம் பாதுகாக்கப்பட்ட குடும்பங்களை விடவும் விகிதாசார ரீதியாக அதிகமாகப் பாதிக்கும் ஒரு பிற்போக்கு நுகர்வு வரி (regressive consumption tax) ஆகும். உண்மையில், அதிக மற்றும் நிலையற்ற பணவீக்கம் சேமிப்பைப் பாதிக்கிறது மற்றும் முதலீடுகளை தவறாக வழிநடத்துகிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான பணவீக்கம் பற்றிய பிரச்சினை முதலில் சக்ரவர்த்தி குழுவின் முன் வந்தது, அந்தக் குழு, "... ஏற்றுக்கொள்ளக்கூடிய விலை உயர்வு 4 சதவீதம் (வளர்ச்சித் துறைகளுக்கு வளங்களை ஈர்க்க தேவையான ஒப்பீட்டு விலைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது)..." என்று கருதியது. அதற்குக் கொடுக்கப்பட்ட காரணம் ஓரளவு தெளிவற்றதாக இருக்கிறது.


1994-ஆம் ஆண்டு தானியங்கி பணமாக்குதல் முறையை ஒழித்ததிலிருந்து, ரிசர்வ் வங்கி பணவீக்க மேலாண்மையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இது ரிசர்வ் வங்கிக்கு பணவியல் கொள்கையை நடத்துவதில் செயல்பாட்டு சுயாட்சியை வழங்கியது. 2016-ஆம் ஆண்டில், இந்தியா பணவீக்க இலக்கு நிர்ணய கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது. இது பரந்த அளவில் நிறுவன சுயாட்சியையும் வழங்கியது. 2016-ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் பணவீக்கம் பல அதிர்ச்சிகளை எதிர்கொண்ட போதிலும், பெரும்பாலும் குறிப்பிட்ட வரம்பிற்குள் உள்ளது. இது இன்னும் வளர்ந்துவரும் ஒரு கட்டமைப்பிற்கு ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. 


எதை இலக்காகக் கொள்ள வேண்டும்?


ஒட்டுமொத்தப் பணவீக்கமா  அல்லது அடிப்படைப் பணவீக்கமா எதை இலக்காகக் கொள்வது என்பது மீண்டும் மீண்டும் வரும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. பணவீக்கக் கட்டுப்பாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதும், ஏழைகளை அதிர்ச்சிகளிலிருந்து பாதுகாப்பதும் என்றால், ஒட்டுமொத்தப் பணவீக்கமே பொருத்தமான இலக்காக இருக்க வேண்டும். 'உணவுப் பணவீக்கம்' என்பது விநியோக அதிர்ச்சிகளின் விளைவு மட்டுமே என்ற அனுமானம் அவசியமில்லை. கடந்த சில நிகழ்வுகள் காட்டியுள்ளபடி, விரிவாக்கப் பணவியல் கொள்கை சூழலில் 'உணவுப் பணவீக்கம்', சுருக்கப் பணவியல் கொள்கை சூழலில் இருப்பதைவிட மிக அதிகமாக இருக்கும்.

தனிப்பட்ட விலைகளின் நடத்தை பொதுவான விலை (அதனால், பணவீக்கம்) அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது என்ற தவறான முடிவும் உள்ளது. 1963-ஆம் ஆண்டு மும்பையில் ஒரு இந்திய பார்வையாளர்களிடம் மில்டன் ஃப்ரீட்மேன்  கூறியது போல், அரசாங்கம் ஒரு முழுமையான வேலைவாய்ப்புக் கொள்கையில் உறுதியாக இருந்தால், அதற்கேற்ப அரசாங்கச் செலவினங்களுக்காகவோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ அதிகப் பணத்தை அச்சிடுவதன் மூலம் பண விநியோகத்தை விரிவாக்கலாம். அந்த விஷயத்தில், ஊதியங்களின் மேல்நோக்கிய உந்துதல் பணவீக்கத்தை உருவாக்கியது என்பது உண்மைதான், ஏனெனில் அது அவசியமான பணவீக்கத்தை ஏற்படுத்தியதல்ல, மாறாக அது பணத்தின் இருப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய வழிமுறையாக இருந்தது என்று தெரிவித்திருந்தார். 


ஒட்டுமொத்த பணப்புழக்கம் அல்லது பண விநியோகத்தில் விரிவாக்கம் இல்லாமல், பொதுவான விலை நிலை உயர முடியாது. இந்தியாவில் தற்போதைய ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கும் அடிப்படைப் பணவீக்கத்திற்கும் இடையேயான விவாதம், சார்பு விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பொதுவான விலை நிலைக்கும் உள்ள வேறுபாட்டைத் தவறவிடுவதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த தேவை மாறாதபோது, ​​உணவுப் பணவீக்கம் ஒப்பீட்டு விலைகளில் மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்தும். பொது விலை நிலை பாதிக்கப்படாது. இருப்பினும், ஊதியங்கள் மற்றும் பிற வழிகளில் அதிகரித்த அழுத்தம் மூலம் உணவுப் பணவீக்கத்தின் இரண்டாம் சுற்று தாக்கங்களை இந்தியத் தரவு காட்டுகிறது. ஃபிரைட்மேன் எச்சரித்தபடி, ஒட்டுமொத்த தேவை விரிவாக்கம் அனுமதிக்கப்பட்டால், இது பொதுவான விலை நிலையில் ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில், பணவியல் கொள்கையின் வரம்பில் 'உணவுப் பணவீக்கம்' கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.


ஏற்றுக்கொள்ளக்கூடிய பணவீக்க அளவு



பிலிப்ஸ் வளைவைப் (Phillips Curve) பயன்படுத்தி சில ஆய்வுகள், வளர்ச்சிக்கும் பணவீக்கத்திற்கும் இடையில் ஒரு சமரசம் இருப்பதாக வாதிடுகின்றன. அனுபவ ரீதியாக, பிலிப்ஸ் வளைவு வாதம் காலத்தின் சோதனையில் நிற்கவில்லை. ஃப்ரீட்மேன் மற்றும் மற்றவர்கள் வாதிட்டது போல, குறுகியகால சமரசம் மட்டுமே உள்ளது. மேலும், நீண்ட காலத்திற்கு, எதிர்பார்ப்புகள் கட்டமைக்கப்படுவதால், எந்த சமரசமும் இருக்காது.

இருப்பினும், குறுகிய காலத்தில்கூட, குறைந்த அளவிலான பணவீக்கம் வளர்ச்சியை எளிதாக்கக்கூடும். ஆனால், ஒரு நிலைக்கு மேல், அதிக பணவீக்கம் வளர்ச்சியைப் பாதிக்கவே செய்கிறது. மேலும், இவ்வாறாக ‘வரம்புப் பணவீக்கம்’ என்ற கருத்து உருவானது. 1991-ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து (COVID-19 ஆண்டைத் தவிர்த்து) பணவீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டிற்குமான வருடாந்திர தரவுகள் வழங்கப்பட்டுள்ள வரைபடத்தில் இதைக் கவனிக்கலாம். இந்த இரண்டு மாறிகளுக்கும் இடையே ஒரு எளிய இருபடி கோடு (simple quadratic line) ஒரு சீரற்ற (non-linear) உறவைக் கொடுக்கிறது. வளைவு மாறும் புள்ளி 3.98 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பணவீக்கம் சுமார் 4 சதவீதமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.


பணவியல் கொள்கை என்பது பெரும்பாலும் எதிர்காலத்தைக் கணக்கில் கொள்வது மற்றும் பணவீக்க இலக்கின் தற்போதைய மறுஆய்வு (FIT) அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அதாவது 2030-31-ஆம் ஆண்டு வரை, அதற்கான கட்டமைப்பை பரிந்துரைப்பதாகும். வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் பேரியல் நிலைமைகளுக்கு (macro conditions) ஏற்ப, ஏற்றுக்கொள்ளக்கூடிய பணவீக்க விகிதங்களைப் பெறுவது மதிப்புக்குரியதாயாகும். இந்தத் திசையில் ஒரு ஆரம்ப உருவகப்படுத்துதல் பயிற்சி, ஏற்றுக்கொள்ளக்கூடிய விகிதமாக 4 சதவீதத்திற்கும் குறைவான பணவீக்கத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய விகிதமாக பரிந்துரைக்கிறது.  இதற்கு சில உறுதிப்பாட்டுச் சோதனைகள் தேவைப்படுகிறது. குறிப்பாக, அடுத்த ஐந்தாண்டுகளில் நிதியியல் மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து, இது 4 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்க இலக்கிற்காக வாதிடுவதற்கு மிகவும் குறைந்த இடமே உள்ளது என்பதைக் குறிக்கிறது.


பணவீக்கக் குழுவில்


தற்போதைய +/-2% வரம்பு, பணவியல் அதிகாரிகள் செல்ல போதுமான நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது. ஆனால், மத்திய வங்கி எவ்வளவு காலம் உச்சவரம்பிற்கு அருகில் இருக்க முடியும் என்பது பரிந்துரைக்கப்படவில்லை. உண்மையில், உச்சவரம்பிற்கு மிக அருகில் இருப்பது கட்டமைப்பின் நோக்கத்தையே தோற்கடிக்கும்.  பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் உயரும்போது, வளர்ச்சி விகிதம் கடுமையாகக் குறைய வாய்ப்புள்ளது  என்பதையும் வரைபடம்  சுட்டிக்காட்டுகிறது.


வருங்காலத்தில் நிதி கொள்கையை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தும் இது அமையும். இந்தியாவின் பணவீக்க வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்தால், 1970-ஆம் ஆண்டு மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் அதிகப் பணவீக்கத்திற்கான ஒரு முக்கியக் காரணம், நிதிப் பற்றாக்குறையின் பணமாக்கலே  ஆகும். அதனால்தான், 1990-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தச் செயல்பாட்டில் ஒரு முக்கிய அம்சம், பற்றாக்குறையின் தானியங்கி பணமாக்கலின் விளைவைக் கொண்ட தற்காலிக கருவூலச் சீட்டுகளை வெளியிடும் முறையை ஒழிப்பதாகும். இதனைத் தொடர்ந்து, பிற்காலத்தில் நிதி பொறுப்பு மற்றும் நிதித்திட்ட மேலாண்மைச் சட்டம் (Fiscal Responsibility and Budget Management (FRBM)) கொண்டுவரப்பட்டது. இதன் இயல்பான தொடர்ச்சியே பணவீக்க இலக்கு நிர்ணயம் ஆகும். நிதி பொறுப்பு மற்றும் நிதித்திட்ட மேலாண்மைச் சட்டத்தின்  (Fiscal Responsibility and Budget Management (FRBM)) விதிகளும் பணவீக்க இலக்கு நிர்ணயமும் (Flexible Inflation Targeting (FIT)) இணைந்தே செயல்படுத்தப்பட வேண்டும். இந்த இரண்டு கட்டமைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தவறவிட்டால், அது மற்றொன்றில் விளைவுகளை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த பேரியல் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆபத்தை  ஏற்படுத்தும். 


சி. ரங்கராஜன், சென்னை மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் தலைவராக உள்ளார். என்.ஆர். பானுமூர்த்தி, சென்னை மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் இயக்குநராக உள்ளார்.

Original Article: Flexible inflation targeting, a good balance 

Share: