POCSO சட்டம் வடிவமைப்பில் பாலின-நடுநிலையானது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை, சட்டமன்றம் எத்தகைய நோக்கத்துடன் இயற்றியதோ அத்தகைய நோக்கத்துடனேயே புரிந்து கொள்ள வேண்டும்.


ஒரு சிறுவன் மீது 'பாலுறுப்புரீதியிலான பாலியல் தாக்குதல்' (penetrative sexual assault) செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் சம்பந்தப்பட்ட வழக்கின் மனு மீது உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இந்தக் குற்றம், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்புச் (Protection of Children from Sexual Offences (POCSO)) சட்டம், 2012-ஆம் ஆண்டின் பிரிவு 3-ன் கீழ் வரையறுக்கப்பட்டதாகும்.


இந்தச் சட்டம் குறிப்பிட்ட பாலினம் சார்ந்தது என்றும், அதாவது, இது ஆண் குற்றவாளிகளுக்கு மட்டுமே பொருந்தும், எனவே, இந்தச் சட்டம் தனக்குப் பொருந்தாது என்று மனுதாரர் வாதிட்டுள்ளார். அதன் இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், இந்த மனு இந்தியாவின் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் நோக்கத்திற்கு ‘இந்த விதியின் கீழ் பெண்கள் மீது குற்றத்திற்காக வழக்குத் தொடர முடியுமா?’ என்ற அடிப்படையான ஒரு கேள்வியை எழுப்புகிறது. 


அசாம், ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: தேசிய குற்றப் பதிவுகள் துறையின் (National Crime Records Bureau (NCRB)) தரவு


இந்த உரை பாலின நடுநிலையை ஆதரிக்கிறது.


 கிடைக்கக்கூடிய ஆதாரங்களின்படி, இதற்கு ஆம் என்பதே பதிலாகத் தெரிகிறது. POCSO சட்டம் குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இருவருக்கும் பாலின நடுநிலையானது என்பது உறுதியாகிறது. இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவதாக, சரியாகப் பொருள் கொள்ளப்பட்டால், சட்டத்தின் உரை அதன் பயன்பாட்டை ஆண் குற்றவாளிகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.

பிரிவு 3, குற்றவாளிக்கு 'அவர்' என்ற பிரதிபெயரைப் பயன்படுத்துவதால், அது பாலின-நடுநிலையானது என்று மனுதாரர் வாதிட்டுள்ளார்.


இருப்பினும், எனினும், பொது விதிகள் (General Clauses (GC)) சட்டம், 1897-ன் பிரிவு 13(1) இவ்வாறு கூறுகிறது: 'ஆண்பாலைக் குறிக்கும் சொற்கள், பெண்களையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும்.' பொது விதிகள் சட்டம், சட்டம் தொடர்பான விளக்கங்களுக்கு உதவும் வகையில் விதிகள் மற்றும் வரையறைகளை வகுப்பதால், போக்சோ சட்டத்தில் இதற்கு நேர்மாறாக வெளிப்படையாகக் கூறப்படாவிட்டாலோ அல்லது சூழலிலிருந்து வேறுபாடு தெரியாவிட்டாலோ, பிரிவு 13(1)-இன் பொருள் என்னவென்றால், 'அவர்' என்பதில் 'அவள்' என்பதையும் உள்ளடக்கியது என்பதைக் குறிக்கிறது.


போக்சோ சட்டத்தின் பிரிவு 3-ல் உள்ள பாலுறுப்புரீதியிலான பாலியல் வன்கொடுமைக்கான வரையறையால் இந்த விளக்கம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. இது ஆணுறுப்பு பயன்பாட்டுக்கு அப்பாற்பட்ட செயல்களையும் உள்ளடக்குகிறது. அதாவது, விரல் அல்லது பொருளினால் அத்துமீறல், அல்லது வாய் வழி அத்துமீறல் போன்ற செயல்களையும் உள்ளடக்குகிறது. இவை பெண் குற்றவாளிகளாலும் செய்யப்படலாம் என்று வாதிடப்படுகிறது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அத்துமீறல் செயல்களில் ஏதேனும் ஒன்றை ஒரு நபர் ஒரு குழந்தையைத் தங்களுடனோ அல்லது மூன்றாவது நபருடனோ கூடச் செய்ய வைக்கும் சூழ்நிலைகளையும் இந்த விதி உள்ளடக்கியுள்ளது. இது அதன் பாலின-நடுநிலை நோக்கத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


ஒரு திட்டமிட்ட சட்டமன்றத் தீர்மானம்


இரண்டாவது காரணம், போக்ஸோ சட்டத்தை பாலின-நடுநிலையாக வைத்திருப்பதற்கான சட்டமியற்றும் நோக்கத்தை நம்பகமான அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மக்களவையில் டிசம்பர் 20-ஆம் தேதி 2024-ஆம் ஆண்டு ஒரு கேள்விக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில், போக்ஸோ சட்டம் 'ஒரு பாலின-நடுநிலையான சட்டம்' என்று தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (திருத்தம்) மசோதா, 2019-ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அதன் 'நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையும்' போக்ஸோ சட்டம் 'பாலின-நடுநிலையானது' என்று குறிப்பிட்டிருந்தது.


இருப்பினும், இங்குள்ள பாலின-நடுநிலைமை பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு (அதாவது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு) மட்டுமே பொருந்தும், குற்றமிழைப்பவருக்கு அல்ல என்று வாதிட வாய்ப்பிருக்கலாம். இதற்கு முக்கியக் காரணம், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 7-ஆம் தேதி 2019-ஆம் ஆண்டு அளித்த எழுத்துபூர்வமான பதில்களில் ஒன்று, போக்ஸோ சட்டம் 'பாலின-நடுநிலையான சட்டம் என்பதால் சிறுவர்களின் பாலியல் வன்கொடுமை குற்றங்களையும் உள்ளடக்கியது' என்பதாகும்.


போக்ஸோ சட்டத்தின் கடந்த பத்தாண்டு காலத்தை மதிப்பிடுதல்


இருப்பினும், இத்தகைய புரிதல் சட்டமன்றத்தின் நோக்கத்தைத் தவறாகப் பிரதிபலிக்கும். பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita( BNS)), 2023-ன் பிரிவு 63-ல் (முன்னர் இந்திய தண்டனைச் சட்டம், 1860-ன் பிரிவு 375-ஆக இருந்தது) காணப்படும் 'பாலியல் வன்புணர்வு' பற்றிய விதியைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது 'ஒரு நபர்' 'ஒரு பெண்ணுக்கு' எதிராக சில வகை ஊடுருவும் பாலியல் செயல்களைச் செய்தால், அவர் பாலியல் குற்றவாளியாவார் என்று குறிப்பிடுகிறது.


இது தெளிவாகப் பாலின-குறிப்பிட்ட விதியாகும். இதில் பெண்கள் மட்டுமே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகக்கூடியவர்களாகவும், ஆண்கள் மட்டுமே பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளாக இருக்கலாம் என்று கருதுகிறது. போக்சோ சட்டத்தையும் பாலினம்-சார்ந்ததாக மாற்ற, பாராளுமன்றம் நோக்கம் கொண்டிருந்தால், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 63-ல் உள்ள அதே பாலியல் செயல்களைப் பெரும்பாலும் உள்ளடக்கிய போக்சோ சட்டத்தின் பிரிவு 3-ன் வார்த்தைகளிலும் அதே பாலினம்-சார்ந்த மொழி இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.


போக்சோ சட்டம் அத்தகைய பாலினம்-சார்ந்த விவரக்குறிப்பைக் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு வேண்டுமென்றே செய்யப்பட்ட சட்டமன்றத் தேர்வாகக் காணப்பட வேண்டும். இது போக்சோ சட்டம் இன்னும் பரந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தைத்  தெளிவாக  எதிரொலிக்கிறது. 

இது சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறது


இறுதியாக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் ஆகிய இருவருக்குமே போக்சோ சட்டம் பாலின-நடுநிலையானதாக இருக்க வேண்டும் என்று பொருள்படுத்துவதற்கு வலுவான நெறிமுறை காரணங்கள் உள்ளன. குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட எந்தவொரு சட்டமும் உள்ளடக்கியிருக்க வேண்டிய குற்றங்களின் பன்முகத்தன்மையை, சாக்ஷி Vs இந்திய யூனியன் (2004) (Sakshi vs Union of India (2004)) வழக்கில், உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், குழந்தைகளுக்கெதிரான பாலியல் அத்துமீறல்கள் பெரும்பாலும் ஆணுறுப்பு-யோனிப் புணர்ச்சிக்கு அப்பாற்பட்ட பரந்த அளவிலான பாலியல் நடத்தைகளை உள்ளடக்கியுள்ளது என்று  உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.


சமீபத்திய தீர்ப்பில், உச்சநீதிமன்றம் போக்சோ சட்டத்திலிருந்து எவ்வாறு விலகியுள்ளது? 


பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றவாளியின் பாலினத்தைப் பொறுத்து குழந்தை பாலியல் அத்துமீறல் வடிவங்கள் வேறுபடலாம் என்றாலும், அத்தகைய அத்துமீறல் அடிப்படையில் அதிகாரம், நம்பிக்கை மற்றும் பாதிப்புத்தன்மை ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வுகளில் ஆழமாகப் பதிந்துள்ளது. எனவே, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான பெரும்பாலான வழக்குகள் இன்னும் ஆண் குற்றவாளிகள் மற்றும் பெண் பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கியது. ஆனால், ஆய்வுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கூற்றுகள் பெண்கள், ஆண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களைச் செய்ய முடியும் என்பதையும், அவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. போக்சோ சட்டத்தை பாலினம்-சார்ந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது இத்தகைய அனுபவங்களைக் கண்ணுக்குப் புலப்படாததாக்கி, சில பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மறுப்பது போலாகிவிடும். 


பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் பாலினம் அல்லது பாலின அடையாளம் எதுவாக இருந்தாலும், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதே சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.


ஷ்ரத்தா சவுத்ரி, குர்கானில் உள்ள BML முஞ்சால் பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளியில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.


Original Article : The POCSO Act is gender-neutral by design


Share: