அக்ரி ஸ்டாக் இணையதள புரட்சி. -தேவேஷ் சதுர்வேதி

வேளாண் தொழிலாளர்களின் நலனுக்கான டிஜிட்டல் சேவைகளை வழங்கும் முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துதல்.


தரப்படுத்தப்பட்ட வேளாண் தொழிலாளர்களின் தரவுத்தளம் தேவையென்பதை உணர்ந்த அரசாங்கம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்புடன் 2024-ஆம் ஆண்டில் டிஜிட்டல் வேளாண் தொழிலாளர் இயக்கம் (Digital Agriculture Mission) என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த இயக்கத்தின் முக்கியமான மற்றும் அமைதியான உந்து சக்தியாக அக்ரி ஸ்டாக் இணையதளம் (Agri Stack) உருவெடுத்து வருகிறது. இதில் பண்ணை, வேளாண் தொழிலாளர் மற்றும் பயிரிடப்பட்ட பயிர் என மூன்று முக்கியப் பதிவேடுகள் உள்ளன. இந்தியாவின் வேளாண்மை துறையில் 'அக்ரி ஸ்டாக் இணையதளம்' ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.


பண்ணைப் பதிவேடு (Farm Registry) என்பது புவிசார் குறியீடு இடப்பட்ட வேளாண் நிலங்களின் தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது. இதன் இரண்டாவது அடுக்கில், நிலம் வைத்துள்ள ஒவ்வொரு வேளாண் தொழிலாளருக்கும் ஒரு தனித்துவமான 'வேளாண் தொழிலாளர் அடையாள எண்' வழங்கப்படுகிறது. இதில் அவர்கள் வைத்துள்ள அனைத்து நிலங்களின் விவரங்களும், கூட்டு உரிமையாளராக இருந்தால் அவர்களின் பங்கு எவ்வளவு என்ற விவரமும் அடங்கும். இந்தத் தரவுகள் நில உரிமை ஆவணங்களுடன் (Record of Rights (RoR)) நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், வாரிசுரிமை அல்லது விற்பனை மூலம் உரிமையாளர் மாறினால், அது பண்ணைப் பதிவேட்டில் தானாகவே புதுப்பிக்கப்படும். மூன்றாவது அடுக்கில், ஒவ்வொரு நிலத்திலும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் விவரங்கள் இருக்கும். இவை ஒவ்வொரு பயிர் பருவத்திலும் விதைப்பு முடிந்த பிறகு, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பயிர் கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்படுகின்றன.



அக்ரி ஸ்டாக் இணையதளம் (Agri Stack) என்பது ஒரு ஒருங்கிணைந்த தரவுத்தளமாகும். இது தனிநபர் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைச் சற்றும் மீறாமல், மிகவும் கண்டிப்புடன் பின்பற்றிச் செயல்படுகிறது. இத்திட்டம் பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களுக்கு இடையேயான சேவைகளை, விதிகள் மற்றும் தானியங்கி முறையின் அடிப்படையில் முறையாக வழங்குவதை உறுதி செய்கிறது.


உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு


நாடெங்கிலும் உள்ள நில நிர்வாக முறைகளில் நிலவும் வேறுபாடுகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த அமைப்பு அந்தந்த உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நெகிழ்வுத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக நில ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல், இன்னும் முன்னோர்களின் பெயரிலேயே நிலம் இருக்கும் மாநிலங்களில், அந்த நிலத்தைச் சாகுபடி செய்யும் வாரிசுகள், வருவாய்த்துறையின் சரிபார்ப்பிற்குப் பிறகு தங்களுக்கான வேளாண் தொழிலாளர் அடையாள அட்டையைப் (Farmer ID) பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். சட்டங்கள் அனுமதிக்கும் இடங்களிலும் மற்றும் மாநில அரசுகள் சம்மதிக்கும் இடங்களிலும், உரிமையாளரின் முறையான அங்கீகாரத்துடன், நிலத்தைப் பகிர்ந்து சாகுபடி செய்பவர்கள் மற்றும் குத்தகை தொழிலாளர்கள் குறிப்பிட்ட திட்டப்பலன்களைப் பெறச் சேர்க்கப்படலாம். சமூக நில உரிமைப் பழக்கம் பரவலாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில், 'புவிசார் குறியீடு' அடிப்படையிலான சான்றிதழ் முறை மூலம், அந்தந்த ஊர் பாரம்பரிய வழக்கங்கள் பாதிக்கப்படாமல் தகுதியுள்ள நபர்களைத் திட்டங்களில் இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்தச் செயல்பாட்டில் ஒரு முக்கிய சாதனையாக இதுவரை 9.40 கோடிக்கும் அதிகமான வேளாண் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டைகள் (Farmer IDs) உருவாக்கப்பட்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டில், 24-மாநிலங்கள் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 30 கோடி நிலப்பரப்புகளில் டிஜிட்டல் பயிர் ஆய்வுகளை மேற்கொண்டன. இந்த ஆய்வுகள் மொபைல் கருவிகள், புவிசார் குறியீடு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமாக நடத்தப்பட்டன.


இது பாரம்பரிய ஆய்வு முறைகளிலிருந்து ஒரு முக்கியமான மாற்றமாகும். வழக்கமான பழைய முறைகள் பெரும்பாலும் மெதுவாக இருப்பதோடு, சீரற்றத் தன்மை மற்றும் பிழைகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளையும் கொண்டிருந்தன.


வேளாண் தொழிலாளர்களுக்குப் பயனளித்தல்


இது காகித வடிவிலான ஆவணங்களிலிருந்து மின்னணு முறைக்கு மாறும் ஒரு செயலாகும். இது "ஒற்றை உண்மைத் தரவு ஆதாரமாக" (Single source of truth) செயல்படுகிறது. இதன்மூலம் வேளாண் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டிய அவசியமின்றி பல சேவைகளைப் பெற முடியும், இதனால் பரிவர்த்தனை செலவுகளும் குறைகின்றன. தகுதியுள்ள பயனாளிகளைத் துல்லியமாக அடையாளம் காணவும், அரசாங்கப் பலன்கள் இடைத்தரகர்கள் இன்றிச் சரியான நபர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் உதவுகிறது.


நிலம் தொடர்பான தரவுகளைப் பயிர் மற்றும் மண்ணின் ஆரோக்கியம் குறித்த தகவல்களுடன் ஒருங்கிணைப்பது, வேளாண் விரிவாக்க சேவைகளில் (Agricultural Extension Services) ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன்மூலம், ஒவ்வொரு வேளாண் தொழிலாளிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை மிகக் குறைந்த செலவில் உருவாக்கி பகிர்ந்து கொள்ள முடியும். உள்ளூர் தட்பவெப்ப நிலைகளைக் கணக்கில் கொண்டு, பயிர் விதைப்பதற்கான சிறந்த நேரம், நீர் பாசன அட்டவணைகள், உரப்பயன்பாடு மற்றும் பூச்சக்கொல்லி மருந்து மேலாண்மை போன்ற விஷயங்களில் வேளாண் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்ற தனிப்பட்ட வழிகாட்டுதல்களைப் பெற முடியும்.


அக்ரி ஸ்டாக் இணையதளமானது (Agri Stack) துல்லியமான மற்றும் உடனுக்குடனான தரவுகளைக் கொண்டு, வேளாண் சாகுபடி சார்ந்த கொள்கைகளைத் வகுக்க உதவுகிறது. பயிரிடும் முறைகளைக் கண்காணிப்பதற்கும், சந்தையில் பொருட்களின் வரத்து மற்றும் தேவைக்கு இடையே உள்ள இடைவெளியைக் கணிப்பதற்கும் பயன்படுகிறது. இதன் மூலம், விலையேற்றம் அல்லது விலை வீழ்ச்சி போன்றவற்றைத் தடுக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது.


ஒன்றிய மற்றும் மாநில அமைச்சகங்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தங்களுக்கெனத் தனித்தனியான வேளாண் தரவுத்தளங்களை உருவாக்கியுள்ளன. அக்ரி ஸ்டாக் இணையதளம் (Agri Stack) என்பது இந்தத் தனித்தனி அமைப்புகளை நீக்கிவிட்டு, ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தை உருவாக்குகிறது. இதன் மூலம், சரிபார்க்கப்பட்ட ஒரே விதமான தகவல்களைப் பல்வேறு அரசு அமைப்புகளும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.


ஏற்கனவே பல மாநிலங்கள் அக்ரி ஸ்டாக் (Agri Stack) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன. உத்தரப் பிரதேசம் இதனை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) அடிப்படையிலான கொள்முதல் பணிகளுக்குப் பயன்படுத்துகிறது. கடந்த குறுவை (Kharif) சாகுபடி காலத்தில், நெல் கொள்முதலுக்காக வேளாண் தொழிலாளர்களை எளிதாகப் பதிவு செய்ய சத்தீஸ்கர் மாநிலம், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. மத்தியப் பிரதேசம், (Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM-ASHA) திட்டத்தின்கீழ் சோயாபீன் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சிக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க இந்தத் தரவுத்தளத்தைப் பயன்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அனைத்து நேரடிப் பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) சார்ந்த சலுகைகளுக்கும் அக்ரி ஸ்டாக் (Agri Stack) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் மேலும் வளர்ச்சியடையும்போது, பயிர் விவரங்கள், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் சந்தை விலைகளை ஒருங்கிணைத்து வேளாண் தொழிலாளர்களுக்குப் பயனுள்ள செயலிகளை புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்க முடியும்.


தன்னுடைய சமீபத்திய பொதுக் கூட்ட உரைகளில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், Agri Stack (அக்ரி ஸ்டாக்) திட்டமானது "இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய மைல்கல்" என்றும், இது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட "அடுத்த ‘UPI’ போன்றதொரு புரட்சி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அக்ரி ஸ்டாக் (Agri Stack) என்பது எதிர்காலத்தை நோக்கிய ஒரு சீர்திருத்தமாகும், இது பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் மூலம் வேளாண் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், அரசு நிர்வாகத்தையும் மேம்படுத்துகிறது.


தேவேஷ் சதுர்வேதி, இந்திய அரசின் முன்னாள் வேளாண்துறை செயலாளர் ஆவார்.




Original Link: The agri stack revolution.


Share:

அவசரகால கடனளிப்பு உத்திரவாதத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு கடன் திருப்பிச் செலுத்தும் ஒழுங்குமுறை மிகவும் அவசியமானது. -பவர்லால் சந்தக்

ஒரு சிறந்த கடன் திட்ட வடிவமைப்பு மட்டுமே அந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய உதவாது. அதனுடன் சேர்ந்து, சந்தையில் ஏற்பட்டுள்ள வர்த்தகக் கடன் விநியோகச் சரிவையும் முறையாகக் கையாண்டு சரிசெய்ய வேண்டும்.


அவசரகால கடனளிப்பு உத்திரவாதத் திட்டம் 5.0 (Emergency Credit Line Guarantee Scheme 5.0 (ECLGS 5.0)) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏனெனில், தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்கள், உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல்களால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் (Micro, Small and Medium Enterprises (MSMEs)), விமானப் போக்குவரத்துத் துறையும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. 100 சதவீத அரசு உத்தரவாதம், கட்டுப்படுத்தப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் ஏறக்குறைய தானியங்கி முறையிலான கடன் ஒப்புதல்கள் என, இத்திட்டம் முந்தைய அவசரகால கடனளிப்பு உத்திரவாதத் திட்டம் 5.0 (ECLGS) பதிப்புகளைப் போலவே கடன் வாங்குபவர்களுக்குச் சாதகமான அணுகுமுறையைத் தொடர்ந்து வழங்குகிறது.


மே மாதம் 2020-ஆம் ஆண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக (MSMEs) தொடங்கப்பட்ட அவசரகால கடனளிப்பு உத்திரவாதத் திட்டம் 1.0 (ECLGS 1.0), அதுவரை இந்தியா வழங்கியதிலேயே மிகவும் எளிதான நடைமுறை மூலதனத் திட்டமாக இருந்திருக்கலாம். இதன்படி, வணிகங்கள் தங்களின் ஏற்கனவே உள்ள கடன் தொகையில் 20 சதவீதம் வரை எந்தவித பிணையும் (Collateral) இன்றி கடனாகப் பெற முடிந்தது. வங்கிகளுக்கான வட்டி விகிதம் 9.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டதுடன், பரிசீலனை கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படவில்லை. மேலும், அரசு 100 சதவீத உத்திரவாதம் அளித்ததால், கடன் வழங்கும் வங்கிகளுக்கான அபாயம் (Credit risk) முற்றிலுமாக நீக்கப்பட்டது. வங்கிகளே தகுதியுள்ள கடனாளிகளைத் தேடித் பிடித்துத் தொடர்பு கொண்டன, அரசாங்கமும் இக்கடனைப் பெறுவதை ஊக்குவித்தது. இருப்பினும், 2023-ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் முடிவடைந்த நான்கு கட்ட அவசரகால கடனளிப்பு உத்திரவாதத் திட்டம் (ECLGS) திட்டங்களுக்குப் பிறகு, ஒதுக்கப்பட்ட ரூ.5 லட்சம் கோடியில் ரூ. 2.45 லட்சம் கோடி மதிப்பிலான உத்திரவாதங்களை மட்டுமே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளன. வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகை ₹3.6 லட்சம் கோடியாகும், மேலும்,  இதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை ஆகும்.


குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) மற்றும் வியாபாரிகள் வங்கிக் கடன்களை (Loans) மட்டுமே நம்பியிருப்பதில்லை. அவர்களின் அன்றாட வணிகம் "வர்த்தகக் கடன்" எனும் தொடர்ச்சியான ஒரு முறையிலேயே இயங்குகிறது. அதாவது, பெரிய நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அரசுத் துறைகள் போன்ற வாங்குபவர்களுக்குப் பொருட்கள் மற்றும் சேவைகள் முன்கூட்டியே வழங்கப்பட்டு, அதற்கான பணம் பின்னர் ஒரு தேதியில் செலுத்தப்படும். வங்கிகள் வழங்கும் "நடைமுறை மூலதனம்" (Working capital) வழக்கமாக இந்த வர்த்தகக் கடன் முறையோடு இணைக்கப்பட்டிருக்கும். ஒரு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் என்பது, பொருட்களை வாங்கியவர்கள் எவ்வளவு விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் தங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. கொரோனா (Covid-19) பெருந்தொற்று இந்தப் பணப்பரிமாற்றச் சுழற்சியைச் சீர்குலைத்தது, அதன் பாதிப்புகள் இன்றும் தொடர்கின்றன.


இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், சிறப்பாக நிர்வகிக்கப்படும் ஒரு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் (MSME) ஒரு நடைமுறைச் சாத்தியமான முடிவை எடுத்தது. ஏற்கனவே வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் தாமதமாகவோ அல்லது வராமலோ இருக்கும் ஒரு சந்தையில், மேலும் கடன் வாங்கி புதிய வர்த்தகக் கடன்களை (Trade credit) வழங்குவது என்பது அந்த நிறுவனத்தின் நிதிப் பொறுப்புகளை மட்டுமே அதிகப்படுத்தும். மேலும், அப்படி வழங்கப்படும் பணம் முழுமையாகவோ அல்லது சரியான நேரத்திலோ திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதை அந்த நிறுவனம் உணர்ந்துகொண்டது.


வங்கிகள் இந்த விவகாரத்தை தங்களின் வழங்கல்ரீதியிலான பார்வையில் இருந்து அணுகின. அதாவது, கடன் வழங்குவதற்குத் தயாராக இருந்தது, அதற்கு உத்தரவாதமும் இருந்தது, மேலும் அது எளிதில் பெறக்கூடிய வகையிலேயே அமைந்திருந்தது. ஆனால், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) எதிர்கொண்ட சிக்கல் 'தாமதமான நிலுவைத் தொகைகள்' ஆகும். அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை என்பது பிரச்சினையல்ல, மாறாக தாங்கள் செய்த விற்பனைக்கான பணத்தை வசூலிப்பதில் உள்ள சிக்கலே பெரும் சவாலாக இருந்தது. இத்திட்டத்தின் வடிவமைப்பில் குறைபாடு இருப்பதைவிட, இருதரப்பினருக்கும் இடையிலான இந்த கண்ணோட்டரீதியான மாற்றமே, இத்திட்டம் மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டதற்கான முக்கியக் காரணமாகும்.


அவசரகால கடனளிப்பு உத்திரவாதத் திட்டம் 5.0-ஐச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள்


அவசர கடன் உத்தரவாதத் திட்டம் 5.0 (Emergency Credit Line Guarantee Scheme 5.0 (ECLGS 5.0)) குறித்த முக்கியக் கவலை என்னவென்றால், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நிலவிய பணப்பரிமாற்ற நடைமுறைகள் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதாகும். அவசர காலத்தின்போது தொடங்கிய பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள், மெல்ல மெல்ல ஒரு பொதுவான வணிகப் பழக்கமாகவே மாறிவிட்டன. கொள்முதல் செய்பவர்களுக்கு, முறையாகப் பணம் செலுத்தாமல் இருப்பதும் அல்லது தாமதப்படுத்துவதும் ஒரு விதிவிலக்கான செயலாக இல்லாமல், தங்களின் செயல்பாட்டு மூலதனத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு வழக்கமான தந்திரமாகவே மாறிவிட்டது. இத்தகைய தாமதங்கள் பரவலாகும்போது, நற்பெயர் கெட்டுவிடும் என்ற பயம் குறைகிறது, ஏனெனில், உண்மையாகப் பணம் செலுத்துபவர்களுக்கும், ஏமாற்றுபவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிவது கடினமாகிறது. இதனால் எந்த ஒரு தனி நிறுவனமும் தானாக முன்வந்து பணப்பரிமாற்ற ஒழுங்குமுறையை மேம்படுத்த விரும்புவதில்லை. வர்த்தகக் கடன், விநியோகச் சங்கிலி நிதி, வங்கியின் செயல்பாட்டு மூலதனம் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனம் (Non-Banking Financial Company (NBFC)) கடன்கள் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. எனவே, ஒரு துறையில் ஏற்படும் அழுத்தம் மொத்த அமைப்பிற்கும் பரவி, கடன் சுழற்சியின் வேகத்தைக் குறைப்பதோடு, கடனைப் பெருக்கும் திறனைக் (Credit multiplier) குறைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது. 


இந்தச் சவாலை எதிர்கொள்வதற்குத் தேவையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஏற்கனவே இந்தியாவில் இருப்பது நமது நல்வாய்ப்பாகும். GSTN (சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பு) விநியோகச் சங்கிலி முழுவதும் நடைபெறும் விலைப்பட்டியல் (Invoice) அளவிலான பரிவர்த்தனை தரவுகளைப் பதிவு செய்கிறது. உடனடி பணப்பரிமாற்ற வசதி (Unified Payments Interface (UPI)), தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் (National Electronic Funds Transfer (NEFT)) மற்றும் நிகழ்நேர மொத்தத் தீர்வு (Real Time Gross Settlement (RTGS)) போன்றவை பணம் செலுத்தப்பட்ட நேரத்தைக் குறிப்பிடும் துல்லியமான பதிவுகளை உருவாக்குகின்றன. கணக்குத் தொகுப்பாளர் (Account Aggregator) கட்டமைப்பு, வாடிக்கையாளரின் சம்மதத்துடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது. இப்போது தேவைப்படுவதெல்லாம் ஒரு கூடுதல் தொழில்நுட்ப நடவடிக்கை மட்டுமே. அது, அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு விலைப்பட்டியலையும் அதற்கேற்ற டிஜிட்டல் பணப்பரிமாற்றப் பதிவுடன் முறையாக இணைப்பதாகும்.


ஒரு நுகர்வோர் சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பு (GSTN) மூலம் ஒரு விலைப்பட்டியலை ஏற்றுக்கொண்டால், அது டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான பொறுப்பாக அல்லது கடனாக மாறுகிறது. இந்த விலைப்பட்டியலுடன், அந்தப் பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை — அதாவது பணப்பரிமாற்றக் குறிப்பு எண் (Unique Transaction Reference (UTR)), தேதி, தொகை மற்றும் பணம் செலுத்திய முறை — இணைப்பதன் மூலம் ஒரு நம்பகமான தணிக்கை தடத்தை (Audit trail) உருவாக்க முடியும். இதன் மூலம் எந்தெந்த விலைப்பட்டியல்களுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளது அல்லது எவை இன்னும் நிலுவையில் உள்ளன என்பதை எளிதாகக் கண்டறியலாம். இதனால் கடன் வழங்குபவர்கள் (வங்கிகள்), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) சொத்து மதிப்புப் பட்டியலை மட்டும் பார்க்காமல், அவற்றின் உண்மையான பணப்புழக்க நடைமுறையையும் மதிப்பிட முடியும். ஒரு நிறுவனம்தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் கணிக்க இதுவே மிக முக்கியமான காரணியாகும்.


மின்னணு வரவுச் சீட்டுத் தள்ளுபடி தளம் (Trade Receivables Discounting System (TReDS)) தளங்கள், வாங்குபவர்களின் சரிபார்க்கப்பட்ட கட்டணப் பதிவுகளின் அடிப்படையில் விலைப்பட்டியல் தள்ளுபடி விகிதங்களைத் தீர்மானிக்க முடியும். இது நம்பகமான வாங்குபவர்களைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) குறைந்த வட்டி செலவில் கடன் கிடைக்க உதவுகிறது. காலப்போக்கில், வழக்கமாகப் பணம் செலுத்துபவர்களின் உண்மையான பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கடன் விவரக் குறிப்பு, பிணையாக வைக்கப்படும் சொத்துக்களின் தேவையைக் குறைக்க வழிவகுக்கும். அவசரகால கடன் வரிசை உத்தரவாதத் திட்டம் 5.0 (ECLGS 5.0) என்பது நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் சரியான இலக்கை நோக்கிச் செயல்படும் ஒரு திட்டமாகும்.


இருப்பினும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான (MSMEs) இந்தத் திட்டத்தின் வெற்றியானது, இறுதியில் அவை இயங்கும் வர்த்தகக் கடன் செலுத்தும் முறையின் தன்மையைப் பொறுத்தே அமையும். முன்னதாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால கடனளிப்பு உத்திரவாதத் திட்டம் 1.0 (ECLGS 1.0) திட்டத்தில் பார்த்தது போல, வெறும் கடனை மட்டும் எளிதாகக் கிடைக்கச் செய்வது, அது முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது.


பவர்லால் சந்தக், இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் முன்னாள் துணை பொதுமேலாளர் ஆவார்.





Original Link: Payment discipline, a must for making ECLGS work .


Share:

உலகளாவிய நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு மையங்கள் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையை மறுவடிவமைத்து வருகின்றன; ஆனால், அந்த நிறுவனங்களின் உயர்பதவிகளை யார் வகிக்கிறார்கள்? -சௌம்யரேந்திர பாரிக்

ஆரம்பத்தில், செலவுகளைக் குறைப்பதற்காகவும் மற்றும் பின்னணி அலுவலக ஆதரவுப் பணிகளுக்காகவும் மட்டுமே இந்தியாவில் தொடங்கப்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres (GCC)), இன்று இந்தியாவின் பரந்த தொழில்நுட்பத் திறமையாளர்கள் மற்றும் வலுவான டிஜிட்டல் சூழலமைப்பின் உதவியுடன், புத்தாக்கம் மற்றும் பொறியியல் துறையின் முக்கிய மையங்களாக வளர்ந்துள்ளன.


இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்களின் (GCC) கட்டமைப்பு மிக வேகமாக மாறி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய இந்திய மையங்களை பின்னணி அலுவலகப் பணிகளுக்காக மட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடு, பொறியியல், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய வணிகச் செயல்பாடுகளுக்காகவும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. சமீபத்திய அறிக்கை ஒன்றின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் தற்போது 2,117 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இவை 2.36 மில்லியன் (சுமார் 23.6 லட்சம்) நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, 2025-26-ஆம் நிதியாண்டில் சுமார் 98.4 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 8.2 லட்சம் கோடி ரூபாய்) வருவாயை ஈட்டியுள்ளன.

உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) என்பது பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது உலகளாவிய வணிகத்திற்காகத் தொழில்நுட்பம், பொறியியல், செயல்பாடுகள், நிதி, ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற முக்கியமான பணிகளை நிர்வகிக்க வெளிநாடுகளில் உருவாக்கும் மையங்களாகும். தொடக்க காலத்தில், இந்தியாவில் உள்ள உலகளாவிய திறன் மையங்கள் (GCC) முக்கியமாகச் செலவுகளைக் குறைப்பதற்கும், அலுவலகத்தின் பின்னணிப் பணிகளை கவனிப்பதற்கும் மட்டுமே அமைக்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பத் திறமையாளர்கள் மற்றும் வலுவான டிஜிட்டல் சூழல் காரணமாக, இவை புதுமை மற்றும் பொறியியலுக்கான முக்கிய மையங்களாக வளர்ந்துள்ளன. இன்று, பல உலகளாவிய திறன் மையங்கள் தங்களின் நிறுவனங்களுக்காக செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடு, இணைய பாதுகாப்பு, சிப் வடிவமைப்பு, மேகக்கணிப் பொறியியல் (Cloud engineering) மற்றும் நிறுவன உருமாற்றம் போன்ற நவீனத் தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 


தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (National Association of Software and Service Companies (NASSCOM)) மற்றும் ‘Zinnov’ என்ற ஆலோசனை நிறுவனம் இணைந்து தயாரித்த ‘The GCC Value Orbit’ என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்துறை 32% வளர்ச்சியை எட்டியுள்ளது. இக்காலக்கட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட புதிய உலகளாவிய திறன் மையங்கள் (GCC) மற்றும் 1,000 கூடுதல் கிளை மையங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளன.


இருப்பினும், உலகளாவிய திறன் மையங்களின் (Global Capability Centres (GCCs)) வேகமான வளர்ச்சி ஏற்பட்ட போதிலும், இந்தியா எதிர்பார்த்த அளவிற்கான சர்வதேச முடிவெடுக்கும் அதிகாரங்கள் மற்றும் மூத்த தலைமைப் பொறுப்புகளை இன்னும் பெறவில்லை என்று கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். பொறியியல், செயல்பாடுகள் மற்றும் தயாரிப்பு சார்ந்த பொறுப்புகள் இந்தியாவில் பெருமளவு அதிகரித்திருந்தாலும், ஒரு நிறுவனத்தின் உத்தி சார்ந்த கட்டுப்பாடு மற்றும் உயர்மட்ட பெரு நிறுவன அதிகாரங்கள் பொதுவாக வெளிநாடுகளில் உள்ள தலைமையகங்களிலேயே தொடர்ந்து நீடிக்கின்றன.



இந்த அறிக்கையே ஒரு முக்கிய இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது; அதாவது, இந்தியாவில் உள்ள உலகளாவிய திறன் மையங்களில் (GCCs) வெறும் 5% மட்டுமே மாற்றத்திற்கான மையங்களாக வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றில் மட்டுமே உயர்மட்டத் தலைமைப் பொறுப்புகளும், சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அடுத்தகட்ட சவால் என்பது வெறும் செயல்பாட்டு மற்றும் பொறியியல் மையமாகமட்டும் இல்லாமல், பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய தலைமைப் பொறுப்புகள், செயற்கை நுண்ணறிவு தலைமைக் குழுக்கள் மற்றும் நிறுவன அளவிலான முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இடமாக உருவெடுப்பதே ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


செலவு சேமிப்பு அடிப்படையிலான வர்த்தகத்திலிருந்து, உத்திசார் உரிமையாளராக உருவெடுத்தல்


இந்த அறிக்கை இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்கள் (GCC) வளர்ச்சி என்பது இனி வெறும் குறைந்த செலவிலான ஒப்பந்தப் பணிகளை (Low-cost outsourcing) செய்வது மட்டுமே அல்ல என்று கூறுகிறது. உலகளாவிய நிறுவனங்கள் தற்போது தங்களது இந்திய மையங்களிடம் தயாரிப்புகள், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், தளங்கள் மற்றும் வணிக முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம், உலகளாவிய திறன் மையங்கள் (GCC) வெறும் "பணி வழங்கும் இயந்திரங்களாக" மட்டும் இல்லாமல், நிறுவனங்களின் முக்கிய நரம்பு மையங்களாக மாறி வருகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாகச் செயற்கை நுண்ணறிவு விளங்குகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (GCC) இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் திறன்களைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றில் 250-க்கும் மேற்பட்ட மையங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலுக்கான பிரத்யேகமான சிறப்பு மையங்களைக் கொண்டுள்ளன. இந்தியாவின் இந்த உலகளாவிய திறன் மையங்களின் (GCC) கட்டமைப்பு 2,50,000-க்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவு வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதன்மூலம், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவுத் திறமையாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.


உலகளாவிய செயற்கை நுண்ணறிவு அமைப்பின் பயன்பாடு மற்றும் பொறியியல் அடுக்குகளில், இந்தியா மிக முக்கியமான இடத்தைப் பிடித்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs), தற்போது செயற்கை நுண்ணறிவு மாதிரி பொறியியல், நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைச் செயல்படுத்துதல், சிப் வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மென்பொருள் மேம்பாடு போன்ற பணிகளைக் கையாண்டு வருகின்றன. அதே நேரத்தில், நிறுவனங்கள் தங்களை முழுமையாக "செயற்கை நுண்ணறிவு-சார்ந்த" (AI-native) அமைப்புகளாக மாற்றியமைத்து வருகின்றன. இதன் விளைவாக, அதிகப்படியான ஆட்களைப் பணிக்குத் திரட்டும் முறைக்குப் பதிலாக, தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் குறிப்பிட்ட துறைசார்ந்த நிபுணத்துவம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்துவதில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன.


உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பீடு


இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்களின் (GCC) வளர்ச்சி, பாரம்பரிய தகவல் தொழில்நுட்ப (IT) சேவைத் துறைக்கு பெரும் சவாலையும் அழுத்தத்தையும் அளித்து வருகிறது. நீண்டகாலமாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையானது, மனித உழைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தப் பணி (Labour-based outsourcing) மற்றும் பணியாற்றிய நேரம் மற்றும் செலவுகளின் அடிப்படையில் ஊதியம் பெறும் ஒப்பந்தங்களை மட்டுமே பெரிதும் நம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் முக்கியமான பணிகளை ஒப்பந்த பணி (Outsourcing) செய்வதற்குப் பதிலாக, தங்களுடைய சொந்தப் பிரிவு அலுவலகங்களான உலகளாவிய திறன் மையங்கள் (GCC) மூலமாக நேரடியாகச் செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் இந்தியாவின் பெரிய ஒப்பந்தப் பணி நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து வருவதுடன், திறமையான பணியாளர்களுக்கானப் போட்டியும் அதிகரித்துள்ளது. அதிக சம்பளம், சிறந்த தயாரிப்பு அனுபவம் மற்றும் வேலை நிலைத்தன்மை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, பொறியாளர்கள் அத்தகைய உலகளாவிய திறன் மையங்களை நோக்கி அதிகம் செல்கின்றனர்.

‘Nasscom-Zinnov’ நிறுவனங்களின் அறிக்கையும் இந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அந்த அறிக்கையின்படி, வணிக மாதிரிகள் 'நேரம் மற்றும் பொருட்களின்' அடிப்படையிலான கட்டண முறையிலிருந்து, 'மதிப்புப் பகிர்வு' மற்றும் 'லாபப் பகிர்வு' மாதிரிகளுக்கு மாறி வருகின்றன. அதே சமயம், இந்தியாவில் உள்ள உலகளாவிய திறன் மையங்கள் (GCC) தயாரிப்புகள் மற்றும் உருமாற்றத் திட்டங்களுக்கான முழுப்பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளன.


தொழில்துறை வல்லுநர்களின் கருத்துப்படி, இது இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாரம்பரிய வணிக மாதிரியைப் பாதிக்கக்கூடும். வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் தொழில்நுட்பப் பணிகளை நிர்வகிப்பதற்காக, பெருமளவிலான ஊழியர்களைப் பணியமர்த்துவதன் மூலமே இந்த நிறுவனங்கள் இதுவரை வளர்ச்சி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும், இந்த மாற்றம் முற்றிலும் எதிர்மறையான ஒன்றாக இருக்காது. வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்குப் பதிலாக, இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது ஆலோசனை வழங்குதல், செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு, தானியங்கி முறை மற்றும் தளம் சார்ந்த பொறியியல் (Platform engineering) போன்ற அதிக மதிப்புமிக்க உயர்தரப் பணிகளை நோக்கித் தள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Original Link: Global firms’ AI centres are reshaping Indian IT industry, but who has the top jobs?


Share:

தொகுதி வரையறை மற்றும் சமத்துவமான அரசியல் பிரதிநிதித்துவத்தின் அரசியலமைப்பு நோக்கம். - திலீப் பி சந்திரன்

சமத்துவமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள், தொகுதி மறுவரையறை (Delimitation) மூலமாகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைப்பதில் உள்ள அரசியல் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த சவால்கள் யாவை?


குறிப்பிடத்தக்க மக்கள்தொகை வளர்ச்சியைச் சந்திக்கும் தொகுதிகளுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், நாடாளுமன்றத் தொகுதிகளின் காலமுறைத் தொகுதி வரையறை (Periodic delimitation) மற்றும் மறுஒதுக்கீடுகள் பெரும்பாலும் 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு' எனும் ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன.


ஆனால், பிரதிநிதித்துவ ஏற்றத்தாழ்வைச் (representational imbalance) சரிசெய்வதற்கான இந்த முயற்சி, கூட்டாட்சிச் சமநிலையின்மீது எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? ஒவ்வொரு கூட்டாட்சி அலகிற்கும் சமமான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் அரசியலமைப்பு நோக்கத்துடன் இது ஏதேனும் முரண்பாட்டைக் கொண்டுள்ளதா?ஆனால் அதற்கு முன், 'தொகுதி வரையறை' (Delimitation) என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்?


'தொகுதி வரையறை' (Delimitation) என்றால் என்ன, அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?


தொகுதி வரையறை என்பது, ஒரு நாட்டில் அல்லது சட்டமன்றம் உள்ள ஒரு பகுதியில் உள்ள தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் 81-வது பிரிவு, ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக இடங்களைப் பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறது. மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களை வெளிக் காட்டும் வகையிலும், சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலும்,   பத்தாண்டுகளுக்கு ஒரு முறை  மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு, இடங்கள் மறுஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 82 குறிப்பிடுகிறது.


தொகுதி வரையறை ஆணையச் சட்டவிதிகளின்கீழ்  குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு தொகுதி மறுவரையறை ஆணையம் அல்லது தொகுதி மறுவரையறை ஆணையத்தால் எல்லை வரையறை மேற்கொள்ளப்படுகிறது.  ஆணையம் பொதுவாக மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்: தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆகியோர்  உறுப்பினர்களாக இருப்பார்கள்.


இதுவரை நான்கு தொகுதி மறுவரையறை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன: அவை,


1952-ஆம் ஆண்டில், 1952-ஆம் ஆண்டின் “தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1963-ல், 1962-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1973-ல், 1972-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


2002-ஆம் ஆண்டில், 2002-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1951, 1961 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் மூன்று தொகுதி மறுவரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், கடைசியாக  தொகுதி மறுவரையறைப் பணி 1976-ல் நிறைவு செய்யப்பட்டது. 1976-ஆம் ஆண்டில், 42-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 25 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டது.


இருப்பினும், 2001-ஆம் ஆண்டின் 84-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டிற்கு பிறகான காலகட்டதின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்படும் வரை இந்த முடக்கத்தை நீட்டித்தது. 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து தீர்மானித்து வந்தபோதிலும், 1991-ஆம் ஆண்டின் தொகுதிப் பிரிவினைக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாக கருத்தில் கொள்ளப்பட்டது .


அதன்பிறகு, 2003-ஆம் ஆண்டின் 87-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், மக்களவை அல்லது சட்டமன்றங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கையைப் பாதிக்காமல், 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களில் உள்ள  தொகுதிகளை மறுசீரமைக்க வழிவகை செய்தது.


இதன் பின்னணியில், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று மக்களவையில் மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன: அவை,


(i) அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026.


(ii) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026.


(iii) தொகுதி மறுவரையறை மசோதா, 2026 ஆகும்.


இந்த மசோதாக்கள், முக்கியயாக தொகுதி வரையறை தொடர்பான 82-வது சட்டப்பிரிவைத் திருத்துவதன் மூலம், மக்களவை இடங்களை (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்) 543-லிருந்து 850-ஆக விரிவுபடுத்தவும், இந்த தொகுதி வரையறையின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை வழங்கவும் முயன்றன.


தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்காக, ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைக்குமாறு 2026-ஆம் ஆண்டின் தொகுதி மறுவரையறை மசோதா முன்மொழிந்தது. இருப்பினும், 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவின்  மூலமாக  மக்களவையை விரிவுபடுத்தவும், மாநிலங்களுக்கான இடப் பங்கீட்டை மறுஒதுக்கீடு செய்யவும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மக்களவையில் நிறைவேறவில்லை.


அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி  தொடர்பான கேள்விகள்


இந்தத் தோல்வி, பின்வரும் முக்கியமான அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது: தொகுதி மறுவரையறை செயல்முறைக்கு, சட்டப்பிரிவின் 368-வது பிரிவின் கீழ் அரசியலமைப்புத் திருத்தம் ஏன் தேவைப்படுகிறது? மக்களவை மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களின் இடங்களை விரிவுபடுத்துவதில் உள்ள அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சவால்கள் யாவை? முன்மொழியப்பட்ட இந்த தொகுதி மறுவரையறை, ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான கூட்டாட்சி உறவை (federal relationship) எவ்வாறு வடிவமைக்கும்?


முன்னர் குறிப்பிட்டபடி, அரசியலமைப்பின் 81-வது பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலமும் பிராந்தியத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். அவ்வாறு பிரிக்கப்படும்போது, ​​ஒவ்வொரு தொகுதியின் மக்கள் தொகைக்கும் அதற்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம், முடிந்தவரை, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மேலும், மக்களவையில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும் இந்த பிரிவு  குறிப்பிடுகிறது.


பிரிவு 81(3), இட மறுஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக 'மக்கள்தொகையை' நிர்ணயிப்பதற்கான முடக்கும் ஆண்டை  வரையறுக்கிறது. அரசியலமைப்பின்  பிரிவு 82, ("ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகான மறுசீரமைப்பு") மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்களை “மறுசீரமைப்பதை” (readjustment) கட்டாயமாக்குகிறது.


மாநில சட்டமன்றங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் தொகுதிகளின் மறுவரையறை ஆகியவை சட்டப்பிரிவின் 170-வது பிரிவின்படி மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முடக்கத்தின் காரணமாக, 2026-ஆம் ஆண்டிற்குப்  பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பே அதிகமாக மறுசீரமைப்புக்கான ஒரு குறிப்பாகச் செயல்படுகிறது.


எனவே, எல்லை நிர்ணயம் மற்றும் இட ஒதுக்கீடு மறுஒதுக்கீடு தொடர்பான  அனைத்து செயல்முறைகளுக்கும், 368-வது பிரிவின்கீழ் வகுக்கப்பட்டுள்ள நடைமுறையின் மூலம், இந்த அரசியலமைப்பு விதிகளைத் திருத்துவது  முக்கியதுத்வம் பெறுகிறது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மாற்றியமைக்கும் எந்தவொரு திருத்தத்திற்கும், சபையில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் (2/3) குறையாத உறுப்பினார்கள்  வாக்களிக்க வேண்டும். மேலும், சட்டம் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பின் பிரிவு 368(2) வலியுறுத்துகிறது.


மக்கள்தொகைக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள், மக்களவையில் நியாயமான இடப் பங்கீட்டில் தேவையற்ற சிரமங்கள் எதிர்கொள்ளமல் இருப்பதை உறுதிசெய்வதே, ஒரு குறிப்பு ஆண்டின் (reference year) அடிப்படையில் தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைப்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாகும்.


இருப்பினும், சில மாநிலங்கள், குறிப்பாக இந்தியாவின் தென் மாநிலங்கள், வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியில் அரசியலமைப்பு முடக்கம் நீக்கப்படுவது, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதை உறுதி செய்வதில் தங்களுக்குப் பாதகமாக அமையும் என்று  கருதுகின்றன.





மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம், தங்களின் மக்களவை  இடங்கள் கணிசமாகக் குறையக்கூடும் என்று சில மாநிலங்கள் கருதுகின்றன. அதே நேரத்தில், மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள, வட மாநிலங்கள், விகிதாச்சாரத்திற்கு அதிகமாக இடங்களைப் பெறக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது,


குறிப்பாக, குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதமானது, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக, பொருளாதார மேம்பாட்டின் பிற துறைகளில் செய்யப்பட்ட வெற்றிகரமான முதலீடுகளின் விளைவாகவே ஏற்பட்டது. எனவே, சில தென்  மாநிலங்கள், தொகுதி மறுவரையறையானது மக்கள்தொகையின் அளவை மட்டுமே சார்ந்திருக்காமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) மற்றும் பொருளாதார மேம்பாட்டின் பிற குறிகாட்டிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றன.


முன்னோக்கிச் செல்வதற்கான வழி என்னவாக இருக்கலாம்?


முன்னர் குறிப்பிட்டபடி, கணிசமான மக்கள்தொகை வளர்ச்சியை அனுபவிக்கும் தொகுதிகளுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையில் அவ்வப்போது தொகுதி மறுவரையறை மற்றும் இட மறுஒதுக்கீடு செய்வது நியாயப்படுத்தப்படுகிறது.


எனவே, தொகுதி மறுவரையறைப் பணியை நீண்டகாலமாக நிறுத்தி வைத்திருப்பது, கூட்டாட்சிக்கு சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு நோக்கத்திற்கு முரணாகத் தோன்றுகிறது. தொகுதி மறுவரையறைக்கான ஒரு சுதந்திரமான மற்றும் நிரந்தரமான அரசியலமைப்பு அமைப்பு, ஒன்றியத்திற்கும் கூட்டாட்சிக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம் உதவக்கூடும்.


மாநிலங்களுக்கு இடங்களை மறுஒதுக்கீடு செய்வதில் உள்ள சிக்கல்களைத் தவிர, விரிவான தொகுதி மறுவரையறைத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள நிர்வாகச் செலவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளையும் அரசாங்கம் கவனதில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், தொகுதி மறுவரையறை விவகாரங்களில் நீதிமன்றத் தலையீட்டைத் தவிர்ப்பது, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான கேள்விகள் எழும்போது, ஒரு சிறந்த கூட்டாட்சித் தத்துவத்துடன் (Ideal Federalism) முழுமையாகப் பொருந்தாது.


சட்டப்பிரிவு 329(a), தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தடைசெய்தாலும், 2024-ஆம் ஆண்டு கிஷோர்சந்திர சங்கன்லால் ரத்தோட் (Kishorchandra Chhanganlal Rathod Case) வழக்கில், தொகுதி மறுவரையறை ஆணையத்தின் ஓர் உத்தரவு தெளிவாகத் தன்னிச்சையானதாகவும் அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகவும் இருந்தால், அதனை மறுஆய்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Original Link: Delimitation and constitutional objective of equitable political representation.


Share:

இரு தரப்புகளிலும் சிறந்தது: கருக்கலைப்பு விதிகள் பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கக்கூடாது - ஸ்னேகா பானர்ஜி

விரும்பாத கர்ப்பத்தினால் (unwanted pregnancy) ஏற்படும் உளவியல் பாதிப்பை உணர்வுப்பூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலும், பாதுகாப்பான கருக்கலைப்புக்கான அணுகலை எளிதாக்கும் வகையிலும் சட்டவிதிகள் விரிவுபடுத்தப்படுவது முக்கியமான நடவடிக்கையாகும்.


1971-ஆம் ஆண்டின் மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் (Medical Termination of Pregnancy (MTP)), 2021-ல் திருத்தப்பட்டு, கருக்கலைப்புக்கான காலவரம்பை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்கள் வரை விரிவுபடுத்தியது. இந்த வரம்பைத் தாண்டி, மனுதாரர்கள் அனுமதி கோரி நீதிமன்றங்களை அணுகியுள்ளனர். மேலும், பல சமயங்களில் மருத்துவ வாரியங்களும் மருத்துவர்களும் இந்தக் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிதுள்ளனர். இந்த ஆண்டு இரண்டு முக்கிய வழக்குகளில், உச்சநீதிமன்றம், பெண்களின் கருவுறுதல் சார்ந்த தன்னுரிமையை (reproductive autonomy) நிலைநிறுத்தும் தெளிவான கருத்துக்களுடன், 24 வாரங்களுக்குப் பிறகான கருக்கலைப்புக்கு அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றத் தலையீடுகள் அடிக்கடி தேவைப்படுவதால், பிற்காலக் கர்ப்பக்கலைப்புகளுக்கான இனப்பெருக்க கருவுறுதல் சார்ந்த தன்னாட்சி உரிமையை உறுதிசெய்யும் சட்டரீதியான பாதுகாப்புகளை விரிவுபடுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது.


சில நாட்களுக்கு முன்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த   வழக்கில், 17 வயது இளைஞருடன் முழுமையான  சம்மதத்துடன் கொண்ட உறவின் மூலம் கருவுற்ற 15 வயது சிறுமிக்குத் தெரியாமல் கருத்தரித்திருந்தார். அந்தச் சிறுமியின் தாயின் முயற்சியால், மேற்கொள்ளபட்ட ஒரு மருத்துவ சோதனையில் 27 வார கர்ப்பம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய பிறகு கருக்கலைப்பு செய்வதற்கான போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (All India Institute of Medical Sciences (AIIMS)) மருத்துவக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அந்த மருத்துவக் குழுவின் பரிந்துரைக்கான காரணங்களில் ஒன்று, அந்தச் சிறுமிக்கு மனநலக் கோளாறு எதுவும் இல்லை என்பதுதான். இருப்பினும், அந்த சிறுமியின் "உளவியல் மற்றும் உணர்ச்சிரீதியான நல்வாழ்வு" (psychological and emotional well-being) மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், அந்தச் சிறுமி பலமுறை தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளுக்குத் தள்ளப்பட்டாள் என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், இந்த முக்கியமான அம்சத்தை  சரியாக கணக்கில் எடுத்துக்கொண்டது. நீதிமன்றத்திற்கு வரும் ஒவ்வொரு வழக்கிலும் பெண்களின் வேதனையை இந்த அளவிற்குத்  ஆழமாக ஆராய வேண்டிய அவசியமில்லை. விரும்பாத கர்ப்பம் (unwanted pregnancy) ஏற்படுத்தும் மன உளைச்சலை உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பான கருக்கலைப்புக்கான வசதிகளை எளிதாக்கும் வகையில் சட்டவிதிகளை விரிவுபடுத்துவது  முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.


இந்த வழக்கு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையால் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்ய வழிவகுத்தது. பெண்கள் விரும்பாத கர்ப்பத்தை முழுமையாகச் சுமக்க அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் உச்சநீதிமன்றம் உறுதியாக இருந்தது. அவர்களின் கருவுறுதல் சார்ந்த தன்னாட்சி உரிமை (reproductive autonomy), "தாயைவிட அதிக கவனம் பெறும்" பிறக்காத சிசுவின் உரிமைக்கு எதிராக நிறுத்த முடியாது. "மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை முறைகள்" மூலம் "கர்ப்பத்தைக் கலைப்பதற்கான" விதிமுறைகளை உருவாக்குவதன் மூலம், இந்தியச் சட்டம் சுகாதாரப் பாதுகாப்பு மேற்பார்வையின் முக்கியதுவத்தை அங்கீகரிக்கிறது. இருப்பினும், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை "மருத்துவ சேவையை மட்டுமே வழங்க வேண்டும்" என்றும், "தகவலின் அடிப்படையில்  முடிவை எடுக்க" வாய்ப்பளிக்கப்பட வேண்டிய "குடிமக்களுக்காக அவ்வாறு தேர்வு செய்ய முடியாது" என்றும் உச்சநீதிமன்றம் நினைவுபடுத்தியது.


கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் செய்யப்படும் கருக்கலைப்பு வழக்குகளில், குறைப்பிரசவத்தை உள்ளடக்கிய கருக்கலைப்பு முறை ஒரு சர்ச்சைக்குரிய விவாகரமாக மாறுகிறது. இது, அந்தக் கருவின் "உயிர்வாழும் திறன்" குறித்த  கவலைகளுக்கும், "கருக்கொலை" (foeticide) நிகழக்கூடும் என்ற அச்சங்களுக்கும் வழிவகுக்கிறது. இதற்கு எதிரான வாதம், கர்ப்பத்தை முழுமையாகக் கொண்டு, குழந்தையைத் தாய் கைவிட்டு, தத்தெடுப்பிற்காக ஒப்படைக்க வேண்டும் என்பதாகும். கர்ப்பிணிப் பெண்ணை, "இன்னும் பிறக்காத குழந்தைக்காக சமரசம் செய்து கொள்ளும்" அணுகுமுறை, "சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "உயிர்வாழும் சாத்தியக்கூறு" (viability) இருப்பதாகக் கருதப்படும் இது போன்ற சூழல்களில், குழந்தை பிறந்தவுடன் அதற்கு உயிர்கொடுக்க, தீவிர மருத்துவத் தலையீடு தேவைப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு வழக்கிலும், மருத்துவக் குழு இந்த உண்மையையே சுட்டிக்காட்டியிருந்தது.


விரும்பாத கர்ப்பத்தின்போது உயிரூட்டத்தை மறுப்பதை, மருத்துவ வாரியங்கள் "கருக்கொலைக்கு" (foeticide) சமமாகக் கருதும் அரசியலமைப்பு அடிப்படைகளைக் கேள்விபடுத்துவது முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். தேவையற்ற கர்ப்பத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம், குழந்தையைப் பெற்றெடுத்து அதைத் தத்தெடுப்புக்குக் கொடுக்குமாறு கேட்பது, அந்த பெண்ணின்  மன உளைச்சலை  மேலும் அதிகப்படுத்தும். முதலாவதாக, இந்தியாவில் தத்தெடுப்பு விகிதங்கள் மிகவும் குறைவாக உள்ளன. அரசின் பராமரிப்பில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளில், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தத்தெடுக்கப்படுகின்றனர். இந்தக் சூழலில், ஒருவர் தனது குழந்தையைத் தத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒரு செயலாகும். இரண்டாவதாக, தத்தெடுப்பு சுமுகமாக நடைபெற்றாலும், ஒரு பெண் தான் விரும்பாத கர்ப்பத்தின் மூலம் பிறந்த குழந்தையைக் கைவிட்டோம் என்ற மனநிலையுடன் வாழ விரும்பாமல் இருக்கலாம். தாமதமான கருக்கலைப்பை நாடுபவர்கள், தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால், அனுமதிக்கப்பட்ட காலவரையறைக்குள் கருக்கலைப்பு செய்துகொள்ள இயலாத நிலையில், ஒரு விரும்பாத கர்ப்பத்தினால் ஏற்பட்ட மிகுந்த மனவேதனையின் காரணமாகவே அவ்வாறு செய்கிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் தொடுக்கபட்ட இரண்டு வழக்குகளில், அந்தச் சிறுமிகள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை முதலில் அறிந்திருக்கவில்லை.


கருத்தடை முறை தவறுதல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய எதிர்பாரா சூழல்களில், ‘மனவேதனை’ மற்றும் ‘கருவுற்ற பெண்ணின் மனநலத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்பு’ ஆகியவற்றை அங்கீகரிக்க கருக்கலைப்புச் சட்டம் (Medical Termination of Pregnancy (MTP)) சட்டம் முற்படுகிறது.  கருவில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டால், கர்ப்பத்தின் எந்தக் ஒரு நிலையிலும் கருக்கலைப்பு செய்வதற்கு கர்ப்பத்தின் காலம் ஒரு தடையாக இருக்காது. மேலும், கருவுறுதல் சார்ந்த தன்னாட்சி உரிமையை (reproductive autonomy),  ஒரு அடிப்படை உரிமையாக நிலைநிறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இதற்கேற்ப சட்டரீதியான உத்தரவாதங்கள் நிலைநிறுத்தப்படுவது  முக்கியமான நடவடிக்கையாகும். எனவே, விரும்பத்தகாத கர்ப்பங்களால் பெண்களுக்கு ஏற்படும் வேதனையை, கர்ப்பகால வரம்புகளை ஒதுக்கி வைப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதக்கூடிய ஒரு சட்ட அணுகுமுறையை வலுப்படுத்துவது  முக்கியமானதாகும்


கட்டுரையாளர், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.




Original Link: Best of Both Sides: Abortion rules should not override fundamental rights of women


Share:

ஈரான் போரும் இந்தியாவின் உத்திசார் தன்னாட்சிக்கான சவால்களும். -தீபா எம். ஒல்லப்பள்ளி, என். மனோகரன்

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் அணிசேரக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும்.


கடந்த ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நட்பு மற்றும் எதிரி நாடுகளுக்கு எதிராக நடத்திய வரி-விதிப்புப் போர்கள், ஈரான் மீதான முன்னெப்போதும் இல்லாத இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்த எதிர்த் தாக்குதல்களால் ஏற்பட்ட நிலைத்தன்மையின்மையுடன் ஒப்பிடும்போது, இவை இப்போது முக்கியத்துவம் குறைந்தவையாகத் தோன்றுகின்றன. பல பத்தாண்டுகளாக, எரிசக்திப் பாதுகாப்பு, புவிசார் அரசியல் சாதகம் மற்றும் உத்திசார் தன்னாட்சிக்கான வாய்ப்பு ஆகியவற்றிற்காக, ஒரு நிலையான மற்றும் நட்புறவு பேணுவதில் தெஹ்ரானில் இந்தியாவின் பங்குகள் மிக அதிகளவில் இருந்து வந்துள்ளன. உக்ரைன் போர், வெளியுறவுக் கொள்கையைச் சுதந்திரமாகவும் நெகிழ்வாகவும் நிர்வகிக்கும் இந்தியாவின் திறனைச் சோதித்தது. ஈரான் போர் இப்போது இன்னும் பெரிய சவாலை முன்வைக்கிறது. அது ஒரு முழுத் தலைமுறையையே வடிவமைக்கக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட தொடர்ச்சியான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு பெரிய புவிசார் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மாற்றத்தின் குறியீடாகப் பரவலாகக் காணப்பட்டன. இந்த புதிய மேற்கு ஆசியப் போர்ச் சூழலில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கு வலுவான நிலையைத் தருவதில்லை என்பது ஏற்கெனவே தெளிவாகியுள்ளது.


உத்திசார் தன்னாட்சியின் முடிவு கடினமானது


பிரான்சிடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் (Free Trade Agreement (FTA)) வரலாற்றுச் சாதனைகளைச் சுட்டிக்காட்டின. (தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 20 ஆண்டுகால மெதுவான பேச்சுவார்த்தைகள் மற்றும் 2016 முதல் ரஃபேல் விமானங்கள் குறித்த நீட்டிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு) இந்த வியக்கத்தக்க விரைவான முடிவுகள், அதிபர் டிரம்பின் கடுமையான வரிவிதிப்புகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருந்தன. ஆனால், அமெரிக்காவின் ஒருதலைப்பட்சப் போக்கிற்கு எதிராக, மேலும் பரவலாக்கப்பட்ட பலமுனை உலக ஒழுங்கை நோக்கிய முக்கியமான படிகள் இவை என்பதை இந்தியாவும், பிரான்ஸ் போன்ற சில ஐரோப்பிய நாடுகளும் நம்புவதாகத் தோன்றியது. ஈரான் மீதான தாக்குதலால் உலகளாவிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளை வாஷிங்டன் புறக்கணிப்பது, அமெரிக்காவின் ஒருமுனைப் போக்கு உறுதியாக நிலைத்திருப்பதை காட்டுகிறது.


அதிபர் டிரம்பின் கட்டாய வரிவிதிப்புகள் வரும்வரை, பொருளாதாரக் கொள்கை வகுப்பதில் சுதந்திரம் குறித்து இந்தியா அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. ஏனெனில், போருக்குப் பிந்தைய, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO)) மற்றும் ஆசிய முறையான ஒப்பந்தக் கூட்டணிகளைக் கொண்ட அமெரிக்க தலைமையிலான இராணுவ ஆணையைப் போலல்லாமல், வாஷிங்டனின் தாராளவாதப் பொருளாதார ஆணை பெரும்பாலும் வலுவான சந்தையால் இயக்கப்பட்டு, திறந்ததாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருந்தது. பொருளாதார மற்றும் இராணுவ ஒருதலைப்பட்சவாதத்தின் இந்த இரட்டைத் தாக்குதல், இந்தியா போன்ற நாடுகள் தங்களின் உத்திசார் தன்னாட்சியைச் செயல்படுத்துவதை இப்போது மேலும் கடினமாக்கும்.


அதிபர் டிரம்ப், பிரத்தியேக இராணுவ அமைப்பைப் பிரதிபலிக்கும் வழிகளில் பொருளாதார அமைப்பை மாற்றி வருகிறார். பிற நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளைத் தனது இராஜதந்திர நலன்களுடன் மேலும் சீரமைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அதிகளவில் கோரி வருகிறது. இது முந்தைய நடைமுறைகளிலிருந்து ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. மேலும், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தாராளவாதப் பொருளாதார அமைப்பு முழுவதையும் அச்சுறுத்துகிறது. இந்தியா, அமெரிக்காவுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதேவேளையில், கூட்டணி அரசியலிலிருந்து விலகியும் இருந்து வருகிறது. 2000-ம் ஆண்டிலிருந்து இந்தியாவுடன் வர்த்தக உறவுகளைப் பெரிய அளவில் வளர்ப்பதிலிருந்து இது அமெரிக்காவைத் தடுக்கவில்லை. உண்மையில், 2021-22-ல் அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடாக சீனாவைப் பின்னுக்குத் தள்ளியது. ஆனால், அமெரிக்க-சீன உறவுகள் கடுமையாகச் சரிந்து கொண்டிருந்தபோதே, இந்தியாவின் பொருளாதார நட்புநாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது, மிகச் சமீபகாலம் வரை, பொருளாதார மற்றும் இராஜதந்திர நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டியிடும் வழிகளைப் பின்பற்றியபோதும், அவை ஒன்றாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.


இந்தியா மற்றும் அமெரிக்காவைப் பொறுத்தவரை, வளர்ந்துவரும் சீனா குறித்த நலன்களின் கருத்து, அவற்றின் நடுகளுக்கிடையேயான உறவுகளை மீள முடியாததாகத் தோன்றும் ஒரு நிலைக்குக் கொண்டு வந்திருந்தது. இந்த உத்திசார் சந்திப்பு நிகழ்ந்தபோதிலும், வல்லரசு நாடுகளுடனான இந்தியாவின் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டாண்மை அப்படியே நீடித்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஈரான், இஸ்ரேல், வியட்நாம் மற்றும் முக்கிய ஐரோப்பிய வல்லரசுகளுடன், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட, எந்தவொரு வலுவான தரப்பையும் சாராமல் ஒரேநேரத்தில் நல்லுறவைப் பேணும் இந்தியாவின் திறனே, உத்திசார் தன்னாட்சியின் மிகத் தெளிவான வெளிப்பாடும் செயல்முறையும் ஆகும்.


ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவது, சாபஹார் துறைமுகம் குறித்த ஈரானுடனான இராஜதந்திர கூட்டாண்மையைக் கைவிடுவது, பிரிக்ஸ் அமைப்பில் டாலர் பயன்பாட்டைக் குறைக்கும் திட்டத்தைப் பரிசீலிப்பதைக் கூடத் தவிர்ப்பது மற்றும் அமெரிக்காவின் புவிசார் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களுடன் தெளிவாக இணங்கிப்போவது போன்ற அதிபர் ட்ரம்பின் தன்னிச்சையான கோரிக்கைகள், பல பத்தாண்டுகளில் இந்தியாவின் உத்திசார் தன்னாட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன. எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக ரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்கா வழங்கிய 30 நாள் விதிவிலக்கு, வாஷிங்டனால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் பேரிலேயே இந்தியாவிற்கு ஒரு குறுகிய கால நிவாரணமாக அமைந்தது. மார்ச் 4 அன்று, இந்தியக் கடற்படையின் 'சர்வதேச கடற்படை ஆய்வு-2026' (International Fleet Review) பயிற்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படைக் கப்பலான 'ஐரிஸ் தேனா'வை (IRIS Dena) ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இந்தியப் பெருங்கடலில் மூழ்கடித்தது, இந்தியாவிற்கு ஒரு கவலையை விடப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம், பிராந்தியத்தின் முன்னணி கடற்படை சக்தி என்ற இந்தியாவின் பிம்பத்திற்குச் சேதம் விளைவித்தது.


ஐரோப்பாவுடனான ஒப்பந்தங்கள் அபாயங்களை நீக்கவில்லை.


ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் (FTA), பிரான்சுடனான அதன் வரலாற்று சிறப்புமிக்க ரஃபேல் போர் விமான ஒப்பந்தமும் இரண்டு முக்கிய முன்னேற்றங்களாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவாக்கிய புதிய இராஜதந்திர சவால்களைச் சமாளிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாகவே பலரும் இவற்றைப் பார்த்தனர். இந்தியா நீண்டகாலமாக விரும்பிய தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆதரவை இந்த ஒப்பந்தம் இறுதியாக வழங்கும் என்ற நம்பிக்கையில், இந்தியாவானது ரஷ்ய மற்றும் அமெரிக்க விமானங்களுக்குப் பதிலாக பிரெஞ்சு போர் விமானங்களைத் தேர்ந்தெடுத்தது. இந்தியாவும் அதன் இராணுவமும் வளர்ந்து வருகின்றன. மேலும், இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்யும். ஆனால் பிரான்ஸ் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தத்தின் செலவினங்கள் மிக அதிகமாக இருந்தாலும், அமெரிக்காவிடமிருந்து இதைவிடச் சிறந்த ஒப்பந்தம் இந்தியாவிற்குக் கிடைப்பது சாத்தியமில்லை. ரஷ்யாவிடமிருந்து சிறந்த செயல்திறன் கொண்ட போர் விமானமும் கிடைக்காது. இந்த புவிசார் அரசியல் சூழலில், இந்தியாவும் பிரான்சும் தங்கள் நட்பு நாடுகளைப் பன்முகப்படுத்தவும், தங்களின் உத்திசார் தன்னாட்சியைப் பாதுகாக்கவும் விரும்புவதால், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் உதவுகிறது. ஆனால், எவ்வளவு தொழில்நுட்பம் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பது குறித்தும், மூலக் குறியீடுகளும் வழிமுறைகளும் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறித்தும் சில சந்தேகங்கள் உள்ளன. இதன் பொருள், மேம்படுத்தல்களுக்காக இந்தியா பிரான்சுடன் பிணைக்கப்பட்டிருக்கும் என்பதாகும். இது இந்தியாவின் 'இந்தியாவில் தயாரிப்போம்' (Make in India) என்ற இலட்சியத்தையும் பாதிக்கக்கூடும்.




தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, அதிபர் டிரம்பின் பொருளாதாரத் தாக்குதல்கள் மற்றும் ஒரு தாராளவாதப் பொருளாதார உலக ஒழுங்கு என்ற கருத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு அவசர முயற்சி ஆகியவற்றின் பின்னணியில் இதைக் காணலாம். ஆனால், இந்தியாவில், ஒரு பெரிய தேர்தல் பிரிவாக இருக்கும் விவசாயிகள் மற்றும் தொழில்துறைத் தொழிலாளர்களிடமிருந்து கடக்க வேண்டிய உள்நாட்டு அரசியல் தடைகள் உள்ளன. மேலும், பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியமும் இப்போது இந்தியா மீது செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு வழியாக வர்த்தகத்தையும் வணிகத்தையும் பயன்படுத்தக்கூடும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அதிபர் டிரம்பின் நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து அபாயங்களைக் குறைப்பது, வெளிப்படையாக அரசியல் அல்லது பொருளாதார அபாயங்களை அகற்றவில்லை.


அமெரிக்காவின் நீண்ட சார்புநிலை


உத்திசார் தன்னாட்சியை வலுப்படுத்துவதற்கான மிகவும் அடிப்படைப் பலவீனமாகத் தோன்றுவது, ஒரு புதிய உலக ஒழுங்கைப் பற்றிய பொதுவான கண்ணோட்டம் என்ற புதுமையான யோசனையாகும். புவிசார் அரசியல்ரீதியாகப் பார்த்தால், மேற்கத்திய நாடுகளைவிட இந்தியா உலகளாவிய பன்முனைத்தன்மைக்கு மிகவும் ஆதரவாக உள்ளது. பிரான்ஸைத் தவிர, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் அழுத்தம் அதிகரிக்கும்போது பொதுவாக அமெரிக்காவுடன் அணிசேர்கின்றன. இந்தத் தருணத்தில், அதிபர் டிரம்ப் ஐரோப்பாவுடன் கடுமையாக நடந்துகொள்ளும்போது, ஐரோப்பா இந்தியா போன்ற நாடுகளை நோக்கித் திரும்புவது இயல்பானது. இருப்பினும், வரலாற்றுரீதியாக, ஐரோப்பிய நாடுகள் பொதுவாக அமெரிக்காவின் வழியைப் பின்பற்றி வந்துள்ளன.


பிப்ரவரி 2026-ல் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ ஆற்றிய உரை, ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்தவை என்பதைத் தெளிவுபடுத்தியது. பொதுவான நாகரிகம் மற்றும் அடையாளம் என்ற அடிப்படையில் அதை முன்வைத்த அவர், உலகளாவிய தெற்கைப் புறக்கணித்தார். அவர் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி, மேற்கத்திய காலனித்துவ விரிவாக்கத்தை வெளிப்படையாக மூடிமறைத்து, ஒரு "மேற்கத்திய விநியோகச் சங்கிலி" அதன் நிலையை மீண்டும் பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது, இத்தகைய ஒரு புதிய புவி-பொருளாதாரக் கூட்டணி அமைப்பு படிநிலை அமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது. உலகளாவிய தெற்கு நாடுகள் கூட்டணி நாடுகளாக இருப்பதைவிட, போட்டியின் இலக்குகளாகவே அதிகம் தெரிகின்றன. விமர்சனப் பார்வை கொண்டதாகக் கருதப்பட்ட ஐரோப்பியப் பார்வையாளர்களால் மார்கோ ரூபியோவுக்கு அளிக்கப்பட்ட எழுந்து நின்று கைதட்டல், பல உண்மைகளை வெளிப்படுத்தியது.


கலாச்சார மோதல்கள் மற்றும் பழங்குடி அரசியல் நிலவும் இந்தக் காலகட்டத்தில், கடுமையான சவால்கள் எழும்போது, ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு இயல்பான கூட்டாண்மையைக் காண்பது கடினம். ஈரான் போரினால் உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், மேற்கு ஆசிய மோதல் குறித்த "இது எங்கள் போர் அல்ல" போன்ற அறிவிப்புகள் மூலம் தயக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களைத் திறம்பட எளிதாக்கும் என்பது தெளிவாகிறது. உருவாகும் எந்தவொரு புதிய பிராந்திய ஒழுங்கிலும், இந்தியாவின் உத்திசார் தன்னாட்சியின் நோக்கங்களுக்காக இந்தியாவால் ஐரோப்பியர்களை நம்பியிருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.


தீபா எம். ஒல்லபள்ளி, அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான ஆராய்ச்சிப் பேராசிரியராகவும்; என். மனோகரன், கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியராகவும் இயக்குநராகவும் உள்ளனர்.


Original Link:  The Iran war, India’s strategic autonomy challenges.


Share:

இந்தியாவின் தொழிலாளர் சந்தை முன்னேற்றம் கண்டாலும், சவால்கள் நீடிக்கின்றன. -பலாஷா நாக்பால்

காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு-2025 (PLFS) அறிக்கையானது, திறன்கள் மற்றும் பங்கேற்பு சார்ந்த கட்டமைப்புக் குறைபாடுகளையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், வேலைவாய்ப்புப் போக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது.


ஒவ்வொரு ஆண்டும், சுமார் 7 முதல் 10 மில்லியன் இளம் இந்தியர்கள் தொழிலாளர் சந்தையில் (labour market) நுழைகின்றனர். இவர்களுக்கு முந்தைய எந்தத் தலைமுறையினரையும் விடவும், இவர்கள் சிறந்த கல்வித் தகுதியைப் பெற்றுள்ளனர். தேசிய அளவில், சராசரியாக 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் முறையான பள்ளிப் படிப்புக்காலம் 10 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. மேலும், சிறந்த கல்வியுடன் சேர்த்து, இந்த இளைஞர்கள் உயர்ந்த நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளனர். இது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட, தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த புதிய தொழிலாளர்களை இந்தியப் பொருளாதாரத்தால் ஆக்கப்பூர்வமாக உள்வாங்கிக்கொள்ள முடியுமா? எத்தகைய சூழல்களில் இது சாத்தியமாகும்? மேலும், இந்தியாவின் மக்கள்தொகை வலிமையானது அர்த்தமுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதை இந்தியா எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?


சமீபத்தில் வெளியிடப்பட்ட, காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு-2025 (PLFS) அறிக்கையானது சில முக்கிய விவரங்களை வழங்குகிறது. இது பல பரிமாணங்களில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டுவதோடு, இந்தியாவின் 'மக்கள்தொகை ஈவுத்தொகையை' (Demographic Dividend) முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தீர்க்கப்பட வேண்டிய சில சவால்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


வேலைவாய்ப்பில் ஊக்கமளிக்கும் போக்குகள்


தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate(LFPR)) 59% ஆகவும், பணியாளர் பங்கேற்பு விகிதம் (Workforce Participation Rate) 57% ஆகவும், வேலையின்மை விகிதம் (unemployment rate) 3% ஆகவும் உள்ளது. இவை வேலைவாய்ப்புத் துறையின் வலுவான முதன்மை குறிகாட்டிகளாகும். 2024-ம் ஆண்டிலிருந்து இளைஞர்களிடையேயான வேலையின்மை குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரண்டிலும் உள்ள இளைஞர்களிடையே முன்னேற்றம் காணப்படுகிறது. 2025-ம் ஆண்டு வரையிலான மாதாந்திர காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) அறிக்கைகளும் பெண்களின் பங்கேற்பில் மேம்படும் போக்குகளைச் சுட்டிக்காட்டுகின்றன. கிராமப்புறங்களில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 2025 செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து வந்த மாதங்களில் அதிகரித்துடன், மே மாதத்திற்குப் பிறகு அதன் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. இந்தப் போக்குகள், பல சுற்று கணக்கெடுப்புகளிலும் நிலையான மற்றும் சீரான முன்னேற்றம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.


வேலைவாய்ப்பின் தரமும் மேம்பட்டுள்ளது. நிலையான ஊதியம் மற்றும் சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகளின் பங்கு 22%-லிருந்து 24%-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் முன்னேற்றம் பதிவாகியுள்ளது. அதற்கேற்ப, சுயவேலைவாய்ப்பின் பங்கு 58%-லிருந்து 56%-ஆகக் குறைந்துள்ளது. முறைசார்ந்த சம்பள வேலைவாய்ப்புகள் பொதுவாக அதிக வருமானம் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற சமூகப் பாதுகாப்புக்கான அணுகலுடன் தொடர்புடையது என்பதால், வேலைவாய்ப்பின் தன்மையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் 2025-ம் ஆண்டின் தரவுகளில் உள்ள மிக முக்கியமான அறிக்கைகளில் ஒன்றாகும்.


ஊதியப் போக்குகளும், குறிப்பாகப் பெண்களைப் பொறுத்தவரை இந்த நிலையையே வலுப்படுத்துகின்றன. நிலையான சம்பள வேலைவாய்ப்புகளில், ஆண்களின் வருமானம் 6%-ஆக இருந்த நிலையில், பெண்களின் வருமானம் 7%-ஆக வளர்ந்துள்ளது. சுயதொழிலை பொறுத்தவரை, ஆண்களின் வருவாய் 8% உயர்ந்திருந்த நிலையில் பெண்களின் வருவாய் 9% உயர்ந்ததுள்ளது. அதேவேளையில், தற்காலிகத் தொழில்துறையில் ஆண்களின் ஊதியம் பெரும்பாலும் மாற்றமின்றி இருந்தபோதிலும், பெண்களின் ஊதியம் 5% அதிகரித்துள்ளது.


அதேநேரத்தில், மொத்த வருமானத்தில் உள்ள பாலின இடைவெளிகளை மேலும் குறைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இத்தரவுகளின் பகுப்பாய்வின்படி, பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தில் சுமார் 76%-ம், தற்காலிகப் பணிகளில் சுமார் 69%-ம், சுயதொழிலில் வெறும் 36%-ம் வருவாய் ஈட்டுகின்றனர். இந்த வேறுபாடுகள் இன்றும் கணிசமான அளவிலேயே நீடித்தாலும், ஊதியம் அடிப்படையிலான வேலைவாய்ப்பை நோக்கிய மாற்றம் பெண்களுக்கு மேலும் உறுதியான பொருளாதாரரீதியாகப் பெரிதும் தெளிவான நன்மைகளை அளிக்கத் தொடங்கியுள்ளது.



கட்டமைப்புரீதியான மாற்றங்கள் சிறந்த வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றன. மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத் துறையின் பங்கு 43 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் பங்களிப்பு முறையே சுமார் 12% மற்றும் 13%-ஆக வளர்ந்துள்ளன. இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் அதிகளவில் நுழைகின்றனர். இளைய தலைமுறையினரிடையே சாதி மற்றும் பாலின அடிப்படையிலான தொழில் பிரிவினை, மூத்த தலைமுறையினரைவிட கணிசமாகக் குறைவாக உள்ளது. இது, கல்விக்கான விரிவான அணுகல் மற்றும் அதிகரித்து வரும் சமூக நகர்வு ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவுகள் ஆகும். இம்மாற்றங்கள் தற்போது தொழிலாளர் சந்தையில், அனைவரையும் உள்ளடக்கிய விளைவுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.


திறன் இடைவெளிகளும் வேலைவாய்ப்பு உருவாக்கமும்


கல்வி நிலையிலிருந்து வேலைவாய்ப்புச் சூழலுக்கு மாறுவதே இங்குள்ள முதல் சவாலாகும். இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவோரின் எண்ணிக்கை பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வருமானப் பிரிவினரும் உயர்கல்வியை எளிதில் அணுக முடிகிறது. இருப்பினும், இதில் இன்னும் சில முக்கிய இடைவெளிகள் நீடிக்கவே செய்கின்றன. உதாரணமாக, 2004 மற்றும் 2023-க்கு இடையில், ஆண்டுதோறும் சுமார் 5 மில்லியன் பட்டதாரிகள் தொழிலாளர் சந்தையில் நுழைந்தனர். ஆனால், அவர்களில் சுமார் 2.8 மில்லியன் பேர் மட்டுமே ஏதேனும் ஒரு வகையிலான வேலைவாய்ப்பைப் பெற முடிந்தது.


முறையான திறன் பயிற்சி பெறுவதற்கான வரையறுக்கப்பட்ட அணுகலும் ஒரு சவாலாக உள்ளது. 15-59 வயதுக்குட்பட்டவர்களில் 4% பேர் மட்டுமே முறையான தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இருப்பினும், பயிற்சி பெற்றவர்களில், பணியிடப் பங்கேற்பு கணிசமாக அதிகமாக உள்ளது. இது ஆண்களுக்கு 83% மற்றும் பெண்களுக்கு 51%-ஆகவும் உள்ளது. இது திறன் பயிற்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான வலுவான தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்தியா இந்தத் தொடர்பை திறம்படப் பயன்படுத்தி, பயிற்சி வாய்ப்புகளைப் பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும்.


பெண்களின் தொடர்ச்சியான பணியிடப் பங்கேற்பில் மற்றொரு சவால் உள்ளது. தொழிலாளர் சக்திக்கு வெளியே உள்ள பெரும்பாலான ஆண்கள் கல்வியை முதன்மைக் காரணமாகக் குறிப்பிட்டாலும், பெண்கள் குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டுப் பொறுப்புகளைச் சுட்டிக்காட்டினர். இது, ஊதியம் பெறாத வேலைகளைச் சமமற்ற முறையில் பகிர்வதால் ஏற்படும் கட்டமைப்புத் தடைகளை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, நகர்ப்புறங்களில் சுயதொழில் செய்யும் ஆண்கள், பெண்களைவிட வாரத்திற்குச் சுமார் 17.5 மணிநேரம் அதிகமாக வேலை செய்கிறார்கள். மேலும், வழக்கமான சம்பளப் பணியில் இந்த இடைவெளி வாரத்திற்குச் சுமார் 7.9 மணிநேரமாக உள்ளது. இது, பெண்கள் சமமற்ற விகிதத்தில் அனுபவிக்கும் ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத உழைப்பு எனும் தொடர்ச்சியான இரட்டைச் சுமையைப் பிரதிபலிக்கிறது. மாதாந்திர காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) தரவுகள் சில மேம்பாடுகளைச் சுட்டிக்காட்டினாலும், தொழிலாளர் பங்கேற்பில் உலகிலேயே மிகப்பெரிய பாலின இடைவெளிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்னும் திகழ்கிறது.


நான்காவது சவால் நீட் (NEET) குழுவினர். 15-29 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 25% பேர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மேலும், இவர்கள் தீவிரமாக வேலை தேடுவதை நிறுத்திவிட்டதால், வேலையின்மை புள்ளிவிவரங்களில் இவர்கள் கணக்கிடப்படுவதில்லை. இதன் விளைவாக, முழுமையாகப் பயன்படுத்தப்படாத உழைப்பின் உண்மையான அளவு முழுமையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. சரியான நேரத்தில் தலையீடு செய்யப்படாவிட்டால், இந்த ஈடுபாடின்மை நீண்டகாலத்திற்கு இளைஞர்கள் தொழிலாளர் சக்தியிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும். இதன் விளைவாக வருமான இழப்பு, குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் மெதுவான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிக்கு வழிவகுக்கும்.


எதிர்காலத்தில், இந்தியா தனது மக்கள்தொகை ஈவுத்தொகையின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2030-க்குப் பிறகு உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையின் பங்கு குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சத்தை அடைய நாம் ஒரே ஒரு கொள்கைச் சுழற்சி மட்டுமே உள்ளது. இது, கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சவால்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட கொள்கைரீதியான பதிலளிப்பின் அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், நிலைமை முன்னெப்போதையும்விட அதிக சவாலாக மாறி வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் திறன் தேவைகளை மறுவடிவமைக்கிறது, பசுமை மாற்றம் துறைசார் வேலைவாய்ப்பு முறைகளை மாற்றுகிறது மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை மீண்டும் வரையறுக்கின்றன.


முன்னோக்கிய பாதை


இந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகின்றன. இருப்பினும், இந்தியாவின் தொழிலாளர் வர்க்கம் சரியான திறன்களைப் பெற்று, இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய உற்பத்தி சார்ந்த வேலைகளில் பணியமர்த்தப்பட்டால் மட்டுமே, இந்தியா இவற்றிலிருந்து பயனடைய முடியும். காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) 2025 தரவுகள், தொழிலாளர் சந்தை மெதுவாக ஒரு நேர்மறையான திசையில் நகர்வதைக் காட்டுகின்றன. அது படிப்படியாக முறைப்படுத்தப்பட்டு, ஊதிய உயர்வுகளை உருவாக்கி, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது.


இருப்பினும், இந்த ஆதாயங்களை அர்த்தமுள்ள மற்றும் உற்பத்தித்திறன் சார்ந்த பொருளாதார வளர்ச்சியாக மாற்றுவதற்கு, மேலும் இலக்கு சார்ந்த தலையீடுகள் தேவைப்படும். தொழில்துறைக்குத் தேவையான திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துதல், பாலினப் பாகுபாடு இல்லாத தலையீடுகள் மூலம் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை உறுதி செய்தல் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நிலையான வேலைவாய்ப்பிற்கான பாதைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். நீட் (NEET) இளைஞர்களைப் பொருளாதாரத்தில் தீவிரப் பங்களிப்பாளர்களாக மீண்டும் ஈடுபடுத்துவதற்கு, தொழிற்பயிற்சிகள் போன்ற இலக்கு சார்ந்த திட்டங்களும் முக்கியமானதாக இருக்கும்.


ஃபலாஷா நாக்பால், ஆக்ஸ்போர்டு கொள்கை மேலாண்மை அமைப்பின் வாழ்வாதாரம் மற்றும் பாலினத் துறையின் தலைவர்.


Original Link: India’s labour market shows gains, but challenges persist.


Share:

இந்தியாவின் நிறைவான மின் உற்பத்தித் திட்டத்திற்கு ஏன் ஒரு தெளிவான எதிர்மறை உண்மை (counterfactual) தேவைப்படுகிறது? -மார்டண்ட் ஷர்துல், அலெக்சாண்டர் ஹோகெவீன் ரட்டர்

நமது நாடு தனது நிலக்கரித் தேவையில் 25-30% இறக்குமதி செய்வதால், 20-25 ஆண்டுகால வளங்களின் இருப்புநிலையானது எரிபொருள் விலையின் அபாயத்தைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு மாறாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) உற்பத்தி, தொடர்ச்சியான எரிபொருள் விநியோக அபாயங்களுக்கான தன்மையைக் குறைப்பதுடன், செலவு அமைப்பை ஆரம்பக்கட்ட முதலீடு மற்றும் அமைப்புரீதியிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றைச் சார்ந்ததாக மாற்றியமைக்கிறது.


மார்ச் 2026-ல், ஒன்றிய மின்சார ஆணையம் 2026-2027 முதல் 2035-2036 வரையிலான தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டத்தை (National Generation Adequacy Plan (NGAP)) வெளியிட்டது. 2035–36-ஆம் ஆண்டிற்கான மின் உற்பத்தி ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காக, குறைந்தபட்சச் செலவு மிகையாக்கம் (combining least-cost optimization), மின் விநியோக மாதிரி உருவாக்கம் மற்றும் நிகழ்தகவு சார்ந்த நம்பகத்தன்மைப் பகுப்பாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும், மிகவும் விரிவான மின் திட்டமிடல் பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இத்திட்டம் 1,100 ஜிகாவாட்க்கும் அதிகமான மொத்த மின் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது. இத்திறனில், 70% புதைபடிவமற்ற எரிபொருள் சார்ந்த திறனாகவும், 174 GW / 888 GWh அளவிலான மின் சேமிப்புத்  திறனையும் உள்ளடக்கியுள்ளது.


2025-26 மற்றும் 2035-36-க்கு இடையில் 87.2 ஜிகாவாட் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தித் திறனை கூடுதலாகச் சேர்க்கப்படுவது ஒரு முக்கியமான விளைவாகும். இதன் உற்பத்தித் திறன் அளவையும், நீண்டகால தாக்கங்களையும் கருத்தில் கொண்டு, ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது திட்டமிடப்பட்ட இந்த நிலக்கரி சார்ந்த திறனை, அதே அளவிலான போதுமான மற்றும் நம்பகத்தன்மை தரநிலைகளைப் பராமரிக்கும் அதே வேளையில், கூடுதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (RE) மற்றும் மின் சேமிப்பு வசதிகள் மூலம் ஈடுசெய்ய முடியுமா?


திட்டமிடப்பட்ட 87.2 ஜிகாவாட் நிலக்கரி சேமிப்பின் எதிர்பார்க்கப்படும் கூடுதல் ஆற்றல் மற்றும் போதுமான பங்களிப்பை, எளிமைப்படுத்தப்பட்ட அழுத்த நிலைகளின் கீழ், கூடுதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சேமிப்பின் மூலம் தோராயமாக மதிப்பிட முடியுமா என்பதை ஆய்வு செய்வதற்காக, ஆய்வாளர்கள் ஒரு தீர்மானகரமான மின்-அழுத்தச் சோதனை மாதிரியாக்கப் பயிற்சியை மேற்கொண்டனர்.


பயன்படுத்தப்பட்ட திட்டவட்டமான கருத்துகணிப்புகளின்கீழ், இந்த ஆற்றலின் பங்களிப்பை தோராயமாக அடைவதற்கு கூடுதலாக 191 ஜிகாவாட் சூரிய ஆற்றல், 51 ஜிகாவாட் காற்றாலை ஆற்றல், 29 ஜிகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் 9 ஜிகாவாட் நீரேற்று சேமிப்பு ஆற்றல் தேவைப்படலாம் என சுட்டிக்காட்டும் மாதிரிகள் (Indicative modelling) தெரிவிக்கின்றன. இது, தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்ட (NGAP) வழித்தடத்தில் இருந்த சுமார் 764 ஜிகாவாட் உடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிலையங்களை சுமார் 1,006 ஜிகாவாட்டாக அதிகரிக்கும்.


இருப்பினும், தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டத்தைப் (NGAP) போலல்லாமல், இந்தச் செயல்முறை முழு மின் உற்பத்தித் தொகுப்பிலும் உள்ள முழு-அமைப்பு சார்ந்த இடைவினைகளை மதிப்பீடு செய்வதில்லை. எனவே இதனை ஒரு முழு-அமைப்பு மிகையாக்க விளைவாகக் (full-system optimization study) கருதாமல், ஒரு குறிப்பிட்ட மின்-அழுத்தச் சோதனையாகவே கருத வேண்டும்.


குறைவான காற்றின் நிலைகள் போன்ற நெருக்கடியான காலகட்டங்களைச் சமாளிக்கத் தேவையான கூடுதல் கட்டமைப்பு மற்றும் சேமிப்புத் திறனுக்கான தேவைகள் குறித்த மிதமான கருத்துகணிப்புகளின் கீழும், அத்தகைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிமுறையானது, அமைப்புச் செலவுகளை ஒவ்வொரு ஆண்டும் ₹1.4 லட்சம் கோடிக்கும் மேலாகக் குறைக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீடுகள், எரிபொருள் விலைகள், சேமிப்புச் செலவுகள், நிதி நிலைமைகள் மற்றும் மின் அமைப்பு ஒருங்கிணைப்புத் தேவைகள் தொடர்பான நிலைகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. காலப்போக்கில் நிலக்கரி எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டால், வளங்களின் இருப்பு நிலை முழுவதும் இந்த வேறுபாடு இன்னும் அதிகமாகிறது.


கூடுதலாக, இந்தியா தனது நிலக்கரியில் 25-30% இறக்குமதி செய்வதால், 20-25 ஆண்டுகால வளங்களின் இருப்பு நிலையைப் பொருத்து எரிபொருள் விலையின் அபாயத்தைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு மாறாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, தொடர்ச்சியான எரிபொருள் விநியோக அபாயங்களுக்கான பாதிப்பைக் குறைத்து, செலவுக் கட்டமைப்பை முன்கூட்டிய முதலீடு மற்றும் அமைப்பு ஒருங்கிணைப்பை நோக்கி மாற்றுகிறது.


தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டத்தின் (NGAP) ஒரு முக்கிய அம்சமானது, மின் உற்பத்திக்கு போதுமான தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் அளிக்கும் முக்கியத்துவம் ஆகும். எனவே, நிலக்கரிக்கு மாற்றாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்படுத்தப்பட்டால், அந்த அமைப்பு அனைத்து நேரங்களிலும் அதன் தேவையை நம்பகத்தன்மையுடன் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தக் காரணத்திற்காக, மூன்று அமைப்புசார் கட்டுப்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.


முதலாவதாக, சேமிப்பின் தொடர்ச்சி இன்றியமையாதது. அடுத்தடுத்த தேவைச் சுழற்சிகள் முழுவதும் சேமிப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். பல நாட்களுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி குறைவாக இருந்தால், சேமிப்பின் அளவு குறையக்கூடும். சேமிப்பு தீர்ந்துவிட்டால், அமைப்பு பாதிப்புக்குள்ளாகி, தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளிகளை எதிர்கொள்ள நேரிடலாம்.


இரண்டாவதாக, மின்னேற்றப் போதுமான அளவை (charging sufficiency) உறுதிசெய்யப்பட வேண்டும். சேமிப்பகத்தால் (Storage systems), மின்னேற்றம் செய்யப்பட்டதை மட்டுமே வெளியேற்ற முடியும். 80-88% வரையிலான இருவழித் திறன்களுடன், மின்சுமையைப் பூர்த்தி செய்வதற்கும் மின்னேற்றம் செய்வதற்கும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி, தேவையை விட அதிகமாக இருக்க வேண்டும். இந்த கூடுதல் உற்பத்தி, தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சேமிப்பு அமைப்புகளை மீண்டும் மின்னேற்றம் செய்வதற்கும் தேவைப்படுகிறது. இதன் விளைவாக, மின் அமைப்புக்கு உபரித் திறன் அல்லது அதிகப்படியான கட்டுமானம், அத்துடன் அவ்வப்போது குறைப்பும் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் அமைப்பின் செயல்பாட்டைச் சோதித்ததில், ​​போதுமான திறன் என்பது நிறுவப்பட்ட திறனை (MW) மட்டும் சார்ந்தது அல்ல, மாறாகக் கிடைக்கக்கூடிய சேமிக்கப்பட்ட ஆற்றலையும் (MWh) சார்ந்துள்ளது என்பது தெரியவருகிறது.


மூன்றாவதாக, வருடாந்திர ஆற்றல் வழங்கல் போதுமானதாக இருந்தாலும், குறிப்பிட்ட காலங்களில் பற்றாக்குறைகள் ஏற்படலாம். உதாரணமாக, சூரிய ஆற்றல் நேரத்திலிருந்து சூரிய ஆற்றல் அல்லாத நேரங்களுக்கு மாறும் போது, அல்லது நீண்டகாலத்திற்கு காற்றாலை மின் உற்பத்தி குறைவாக இருக்கும்போது பற்றாக்குறைகள் ஏற்பட்டு, தொகுதி அளவில் மின் பற்றாக்குறைகளை உருவாக்கக்கூடும்.


தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டம் (NGAP) ஏற்கனவே மேம்பட்ட நிகழ்தகவு மாதிரியாக்கம் (sophisticated probabilistic modelling) மற்றும் காலவரிசை விநியோகப் பகுப்பாய்வு (chronological dispatch analysis) மூலம் இந்தச் சூழ்நிலைகளில் பலவற்றைக் கண்டறிகிறது. இருப்பினும், வெளியிடப்பட்ட முடிவுகள், வெளிப்படையான நிலக்கரி மாற்று அழுத்தச் சூழ்நிலைகளின்கீழ், குறிப்பாகத் தொடர்ச்சியான குறைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அல்லது சேமிப்புத் தீர்வு காலங்களில், இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை மதிப்பிடுவதை எளிதாக்குவதில்லை.


நிர்ணயவாத அழுத்தச் சோதனைகள் (Deterministic stress tests), இந்த அமைப்பு நடத்தைகளை மேலும் வெளிப்படையானதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் மாற்றுவதன் மூலம் தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டக் (NGAP) கட்டமைப்பிற்குத் துணைபுரிய முடியும். இது தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டத்தின் (NGAP) வழிமுறையை மாற்றிவிடாது. ஆனால் முக்கிய திட்டமிடல் தேர்வுகள் குறித்த வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தக்கூடும். மேலும், கண்டறியப்பட்ட நிலக்கரித் திறன், சேமிப்புக் காலம், பரிமாற்றத் தயார்நிலை அல்லது நிறுவுவதற்கான காலக்கெடு போன்ற கட்டுப்படுத்தும் அமைப்புசார் கட்டுப்பாடுகளைப் பிரதிபலிக்கிறதா அல்லது காலப்போக்கில் மாறக்கூடிய கருத்துகணிப்புகளால் முடிவுகள் பாதிக்கப்படுகின்றனவா என்பதை நிறுவவும் இது உதவும்.


அனல் மின் நிலையங்களைச் (thermal plants) செயல்பாட்டுக்குக் கொண்டுவர பொதுவாக 6-8 ஆண்டுகள் ஆகும் நிலையில், சேமிப்பு அமைப்புகளைப் (storage systems) பெரும்பாலும் விரைவாக நிறுவ முடியும் என்பதால், மாற்று வழிகளை வெளிப்படைத்தன்மையுடன் மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எல்-நினோ மற்றும் லா-நினோ நிகழ்வுகள் மின்சாரத் தேவையைப் பாதிக்கின்றன. எனவே, இதற்கான பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கான இருப்புத் திறன் திட்டமிடலில், அனல் மின்சாரம், சேமிப்பு மற்றும் நீர்மின்சக்தி ஆகியவை பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்பதால், அத்தகைய காலநிலைத் தாக்கங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.


நீண்ட காலமாக, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகள், ஒரு எரிசக்தி மாற்ற நிலையின் ஒரு பகுதியாகவே கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மாறாக, நிச்சயமற்ற தன்மையின் கீழ் போதுமான தன்மையையும், அமைப்புரீதியான நம்பகத்தன்மையையும் தக்கவைத்துக் கொண்டே, நுகர்வோருக்கான செலவுகளைக் குறைக்கும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சேமிப்பு மற்றும் அனல் மின் இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.


தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டம் (NGAP) கடுமையான வழிமுறை, ஏற்கனவே ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளது. அடுத்தகட்டமாக, மலிவுத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பைச் சிறந்த முறையில் அதிகரிக்கக்கூடிய வழியைக் கண்டறிய, நெருக்கடியான சூழ்நிலைகளின்கீழ் மாற்று வழிகளைச் சோதிக்க வேண்டும்.


அலெக்சாண்டர் ஹோகவீன் ரூட்டர், வளப் போதுமான திட்டமிடலில் அனுபவமுள்ள ஒரு தன்னார்வ எரிசக்தி நிபுணர் மற்றும் எரிசக்தி கொள்கையில் கவனம் செலுத்தும் எமர்ஜென்ட் வென்ச்சர்ஸ் மானியதாரர் ஆவார். மார்தாண்ட் ஷர்துல், GWEC-இன் முன்னாள் கொள்கை இயக்குநர் (இந்தியா) ஆவார்.




Original Link: Why India’s generation adequacy plan needs a clear counterfactual.


Share: