வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஒரு தேசிய நீர் தொலைநோக்கு. -நிலாஞ்சன் கோஷ்

நீர் மேலாண்மை (Water governance) காலநிலை மாற்றத்திற்கேற்ப மாறும் திறன் கொண்டதாக (climate-resilient) இருக்கவேண்டும்.  அதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.


இந்தியா ஏற்கனவே நீர் நெருக்கடியின் கடைசி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முரண்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. அதிகமான நதி அமைப்புகளைக் கொண்ட ஒரு நாடு, தீவிரமடைந்துவரும் பற்றாக்குறை, மோதல் மற்றும் சூழலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதற்கான விளக்கம் நீர்ப் பற்றாக்குறையில் இல்லை. மாறாக அது நிர்வகிக்கப்படும் விதத்தில்தான் உள்ளது.


இந்தியாவில் நீர், அரசியல் எல்லைகளை தாண்டி உள்ளது. ஆறுகள் மாநிலங்களைக் கடந்து செல்கின்றன. நிலத்தடி நீர் மேற்பரப்பு நீரோட்டங்களுடன் கலக்கிறது. மேலும், நீர் ஒரே நேரத்தில் வேளாண்மை, தொழில், நகரங்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்குப் பயன்படுகிறது.


இருப்பினும், நிர்வாகம் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநிலங்கள் முழுவதும் பரவி உள்ளது. நீரைத் திசைதிருப்புதல், அணைகள், மாசுபாடு போன்ற மேல்மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், கீழ்மட்டத்தில் குறைவான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. ஒரு சூழலியல் அமைப்பு, ஒன்றோடொன்று தொடர்பற்ற தனிப்பிரிவுகளால் நிர்வகிக்கப்படுகிறது.


காலநிலை மாற்றம் (Climate change) இந்தப் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்துகிறது. மழைப்பொழிவில் ஏற்படும் மாறுபாடுகள், அடிக்கடி ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சி மற்றும் மாறிவரும் நீரியல் சுழற்சிகள் ஆகியவை நிலையான நிர்வாகக் கட்டமைப்புகளைப் பயனற்றதாக்கி வருகின்றன.


வேளாண்மைக்கான ஊக்கத்தொகைகள், குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலைகள், அதிக நீர் தேவைப்படும் பயிர் முறைகளை வலுப்படுத்தியுள்ளன. நெல் மற்றும் கோதுமை மூலம் உணவுப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், அது நிலத்தடி நீர் குறைதல் மற்றும் ஆற்றுப் படுகைகளில் ஏற்படும் நெருக்கடி போன்ற  அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


பல  ஆண்டுகளாக, இந்தியாவின் அணுகுமுறை "கணித அடிப்படையிலான நீரியல்" (arithmetic hydrology”) கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. நீரை அதிகமாக வழங்குவதன் மூலம் (supply) நீர் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்ற எளிமைப்படுத்தப்பட்ட நம்பிக்கையாக உள்ளது. பெரிய அணைகள், கால்வாய்கள் மற்றும் நீர் எடுக்கும் அமைப்புகள் குறுகிய காலத்தில் நீர் கிடைப்பதை அதிகரித்துள்ளன. மணல் ஓட்டம் (sediment flow) மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. “கணித அடிப்படையிலான நீரியல்” (arithmetic hydrology) என்ற அணுகுமுறை, அதிக நீர் அதிக பயிர்கள், அதிக வளர்ச்சி (more water, more crops, more growth) என்ற எளிமையான சிந்தனையை ஊக்குவித்துள்ளது. ஆனால், இன்றைய நீர் சிக்கல்கள் மற்றும் செங்குத்து அச்சு (ordinate) போன்ற கணித கட்டமைப்பில் மட்டும் வெளிப்படுத்தக்கூடியவையாக இருந்திருந்தால், அவை நேரியல் இயற்கணிதத்தின் வாயிலாகவே தீர்க்கப்பட்டிருக்கும். அவை இனி சிக்கலான பிரச்சினைகளாகவும் இருக்காது.


இப்போது ஒரு முக்கிய மாற்றத்தை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது “வளர்ந்த இந்தியா” (Viksit Bharat) நோக்கங்களுடன் இணைந்த ஒருங்கிணைந்த தேசிய நீர் தொலைநோக்கு (National Water Vision) ஒன்றை உருவாக்க வேண்டும்.

அந்த தேசிய நீர் தொலைநோக்கு திட்டத்தின் 12 முக்கியக் கோட்பாடுகள் (tenets) பின்வருமாறு:


12 கோட்பாடுகள்


முதலாவதாக, ஆற்றுப் படுகையே நிர்வாகத்தின் அலகாக இருக்க வேண்டும். மாநில அடிப்படையிலான சிதறிய அணுகுமுறைக்கு பதிலாக, படுகை அளவிலான நிர்வாக அமைப்புகள் உருவாக்க வேண்டும்.


இரண்டாவதாக, நீர் ஒரு நிலையான இருப்பாகக் கருதப்படாமல், ஒரு மாறும் சமூக-சூழலியல் ஓட்டமாக (dynamic socio-ecological flow) அங்கீகரிக்கப்பட வேண்டும். மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர், வண்டல்கள், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் ஆற்றல் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்புகளின் பாகங்களாகும். இவற்றில் ஒரு சரிவு ஏற்படும் இடையூறுகள், அமைப்பு முழுவதும் தொடர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆளுகை இந்தச் சிக்கலான தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


மூன்றாவதாக, இந்தியா, ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மையை (Integrated Water Resource Management) நதி பள்ளத்தாக்கு அளவில் செயல்படுத்த வேண்டும். வேளாண்மை, நகர வளர்ச்சி, தொழில் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒரே கட்டமைப்பில் இணைக்கப்பட வேண்டும்.


நான்காவதாக, தொடர்ச்சியான மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகளில் வெளிப்படும் தற்போதைய முரண்பாடான கூட்டாட்சி முறைக்கு பதிலாக, அதிகாரம் அளிக்கப்பட்ட நதிப் படுகை ஆணையங்கள், பல்துறை நிபுணத்துவம் மற்றும் வெளிப்படையான தரவு அமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


ஐந்தாவதாக, இலவச அல்லது குறைந்த விலை வளமாகக் கருதப்படும் நீர், திட்டமிட்ட முறையில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதற்கும் தவறாக ஒதுக்கப்படுவதற்கும் உள்ளாவதால், அதற்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும்.


ஆறாவதாக, இது நீர் வரவுகள், வர்த்தகம் செய்யக்கூடிய அனுமதிகள் மற்றும் நீர் வழிப்பொருட்கள் போன்ற சந்தை அடிப்படையிலான கருவிகளுக்கு இடமளிக்கிறது. இவை பாதுகாப்பு மற்றும் திறமையான ஒதுக்கீட்டிற்கான ஊக்கங்களை ஒருங்கிணைக்க முடியும்.


ஏழாவதாக, சுற்றுச்சூழல் நீரோட்டங்கள் கொள்கையின் அடிப்படையில் உருவாக்க வேண்டும். ஆறுகள் வேளாண்மை, வாழ்வாதாரங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைத் தாங்கி நிற்கும் ஒரு உயிருள்ள அமைப்புகளாகும். இந்தச் செயல்பாடுகளைப் புறக்கணிப்பது வளர்ச்சியையே சீர்குலைக்கும்.


எட்டாவதாக, இந்தியா விநியோகத்தை அதிகரிப்பதிலிருந்து தேவை மேலாண்மைக்கு மாறவேண்டும். செயல்திறன் மேம்பாடுகள், பயிர் பல்வகைப்படுத்தல், நடத்தை மாற்றம் ஆகியவை உள்கட்டமைப்பை நிரந்தரமாக விரிவுபடுத்தாமலேயே நீர் பாதுகாப்பை வழங்க முடியும்.


ஒன்பதாவது, நிர்வாகம் தரவு அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். நீரியல், சூழலியல் மற்றும் சமூகப் பொருளாதாரத் தரவுகளை ஒருங்கிணைக்கும் வடிநில அளவிலான தகவல் அமைப்புகள், தகவலறிந்த முடிவெடுப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும்.


பத்தாவதாக, தனியார் துறையும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ESG தொடர்புடைய நீர் மேலாண்மை, நீர் கடன் (water credits) மற்றும் பொறுப்பான தொழில் நடைமுறைகள் மூலம் முதலீடு மற்றும் புதுமையை அதிகரிக்கலாம்.


பதினொன்றாவதாக, நீர் மேலாண்மை காலநிலை மாற்றத்திற்கேற்ப தாங்கும் திறன் கொண்டதாக (climate-resilient) மாறவேண்டும். நிச்சயமற்ற நிலை மற்றும் அபாயங்களை உள்ளடக்கும் மாற்றத்திறன் (adaptive) அமைப்புகள் மிகவும் முக்கியம்.


இறுதியாக, நிர்வாகம் அனைவர் பங்கேற்புடனும் (inclusive) இருக்க வேண்டும். கீழ்மட்ட (bottom-up) மற்றும் மேல்மட்ட (top-down) அணுகுமுறைகளுக்கு இடையில் சரியான சமநிலை இருக்க வேண்டும். நீர் மேலாண்மையில் பெண்கள் முக்கியமானவர்களாகக் கருதப்பட வேண்டும்.


பரிந்துரைக்கப்பட்ட தேசிய நீர் தொலைநோக்கின் 12-வது கோட்பாடு, 2026 உலக நீர் தினத்தின் கருப்பொருளான நீர் மற்றும் பாலினம் (Water and Gender) என்பதுடன் ஒத்துப்போகிறது. இதில் “நீர் தொடர்பான தீர்வுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளை மையமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கட்டுரையாளர், அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான துணைத் தலைவர் ஆவார்.

                 


Original Link: A national water vision for Viksit Bharat.


Share:

மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) என்பவை யாவை? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• கடந்த வாரத்திலிருந்து, கடும் வெப்பத்திற்குப் பதிலாக இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை பொழிந்து, வெப்பநிலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது.


• மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) என்பவை மழையைப் பொழிவிக்கும் ஒரு முக்கிய காற்றழுத்த மண்டலங்களாகும். இவை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பகுதிகளைத் தாண்டி உருவாகி, கிழக்கு நோக்கி இந்தியாவை நோக்கி நகரும்போது மெடிட்டரேனியன் கடல், கருங்கடல், காஸ்பியன் கடல் மற்றும் அரபிக்கடல் ஆகியவற்றிலிருந்து  ஈரப்பதத்தை (moisture) சேகரித்துக்கொள்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், இந்தியாவைப் பாதிக்கும் மேற்கத்திய இடையூறு காற்று ஓட்டங்களின் நிகழ்வெண்ணும் (frequency) தீவிரமும் (intensity) குறைந்துள்ளதால், மழை மற்றும் பனிப்பொழிவு நேரடியாகப் பாதிப்புகளை சந்தித்துள்ளது.



வாரம்

இந்தியா


கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா

வடமேற்கு இந்தியா

மத்திய இந்தியா

தென் தீபகற்ப இந்தியா

பிப் 26 - மார்ச் 4

-86

-74

-99

-99

9

மார்ச் 5 - 11

-92

-85

-93

-98

-92

மார்ச் 12 - 18

66

267

-19

-30

3.4


• கடந்த வாரம் அடுத்தடுத்து வந்த இரண்டு தீவிரமான 'மேற்கத்திய இடையூறுகள்' மார்ச் 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவைக் கடந்து சென்றபோது, ​​இந்தப்போக்கு மாறியது.


• இதன் விளைவாக கடுமையான வானிலை நிகழ்வுகள் — இடியுடன் கூடிய மழை, மின்னல் , ஆலங்கட்டி மழை (hailstorm), குறுகிய காலத்திலேயே அதிக மழை (24 மணி நேரத்தில் 115 மிமீக்கு மேல்) மற்றும் பனிப்பொழிவு, மேற்கு இமயமலைப் பகுதிகள், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, தென் இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகின. அண்டை நாடான பாகிஸ்தானும், சில நாட்களுக்கு முன்பு கடுமையான வானிலையைச் சந்தித்தது.


• வளிமண்டலக் கீழடுக்குகளில் ஏற்பட்ட இடையூறுகளுடன் சேர்த்து, ஒரு காற்று சுழற்சி (cyclonic circulation) நீண்டகாலம் நீடித்தது. மேலும், வங்காள விரிகுடாவிலிருந்து இப்பகுதிக்கு ஈரப்பதத்தைக் கொண்டுவந்த வலுவான தென்மேற்கு அல்லது தெற்கு திசைக்காற்றும் வீசியது. இது மத்திய மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் காற்றுகள் ஒன்றிணையும் சூழலை உருவாக்கியது. இதேபோன்ற வானிலை மார்ச் 2023-லும் பதிவானதாக, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) வல்லுநர்கள் தெரிவித்தனர்.



உங்களுக்குத் தெரியுமா?



• மார்ச் மாதத்தின் நடுப்பகுதியை ஒட்டி ஏற்பட்ட பல்வேறு வானிலை காரணிகளின் கூட்டு விளைவாக, நாடு முழுவதும் ஆலங்கட்டி மழை பொழிந்தது. முதலாவதாக, பருவமழை பொழியாத மாதங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை), மேற்கத்திய இடையூறுகள் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மழைப்பொழிவையும் (உயரமான மலைப்பகுதிகளில் பனிப்பொழிவையும்) ஏற்படுத்துகின்றன. குளிர்காலத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக விலகாத நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது.


ஆலங்கட்டி மற்றும் இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு மார்ச் மாதமே மிகவும்  ஏற்ற மாதமாக அமைகிறது. மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு வெப்பநிலை உயரத் தொடங்குகிறது; அப்போது சாதகமான வானிலை சூழல்கள்  ஏற்படும் பட்சத்தில், இடி, மின்னல் மற்றும் தீவிர மழைப்பொழிவு  ஏற்படக்கூடும்.


கிழக்கு இந்தியப் பகுதிகளில், வடமேற்குக் காற்றால் உருவாகும் திடீர் புயல்கள் (Nor’westers”) மேற்கு வங்கத்தில் 'Kalbaisakhi' என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் காற்றுகள், இந்தக்காலகட்டத்தில் திடீரெனத் தீவிரமான புயல்கள், கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை ஆகியவற்றை உருவாக்கக்கூடும்.


• 'வெப்ப அலை' (Heatwave) என்பது அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கத்திற்கு மாறாக மிக அதிக வெப்பநிலை நிலவும் ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட சூழலை 'வெப்ப அலை' என்று அறிவிப்பதற்கான அளவுகோலானது, அந்த ஆண்டின் அப்போதையக் காலகட்டத்தில் அப்பகுதியில் நிலவும் வெப்பநிலையைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.


• இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விதிமுறைகளின்படி, "சமவெளிப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு வானிலை நிலையத்தின் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், மலைப்பகுதிகளில் பகுதிகளில் குறைந்தது 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் பதிவாகும் பட்சத்தில்," அந்தப் பகுதியில் 'வெப்ப அலை' நிலவுவதாக அறிவிக்கப்படுகிறது. 


இயல்பான வெப்பநிலையிலிருந்து ஏற்படும் விலகலின் அடிப்படையில், இந்த விலகல் 4.5°C முதல் 6.4°C வரை இருந்தால் அது 'வெப்ப அலை' (Heatwave) என்றும்; இந்த விலகல் 6.4°C-க்கு மேல் இருந்தால் அது 'கடுமையான வெப்ப அலை' (Severe Heatwave) என்றும் அறிவிக்கப்படுகிறது.


உண்மையான அதிகபட்ச வெப்பநிலையின் அடிப்படையில், அதிகபட்ச வெப்பநிலை 45°C-க்கு மேல் இருந்தால் அது 'வெப்ப அலை' என்றும்; வெப்பநிலை 47°C-க்கு மேல் இருந்தால் அது 'கடுமையான வெப்ப அலை' என்றும் இந்திய வானிலை மையம்  (IMD) தெரிவிக்கிறது.


• 'மேற்கத்திய இடையூறுகள்' (Western disturbances) என்பவை மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் புயல்களாகும். இவை டெல்லிக்குக் கிழக்குக் காற்றைக் கொண்டுவருவதுடன், காற்றில் ஈரப்பதத்தின் அதிகரிப்பு மற்றும் மேகமூட்டம் அல்லது மழையையும் ஏற்படுத்துகின்றன. இவை குளிர்காலத்தில் வழக்கமாக நிகழும் நிகழ்வுகளாகும். பருவமழை மற்றும் கோடைக்காலங்களில், இவை அதிகமாக வெப்பமண்டல (tropical) பண்புகளைக் கொண்டு மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்துகின்றன. குளிர்காலத்தில், இவை மலைப்பகுதிகளில் மழையும் பனிப்பொழிவும் ஏற்படுத்தி, சமவெளி பகுதிகளுக்கு அதிக ஈரப்பதத்தையும் கொண்டு வருகின்றன. மேகமூட்டம் காரணமாக இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கிறது. அதே சமயம் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை குறைகிறது.



Original Link: What are western disturbances?

Share:

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு : அது என்ன? அது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? இந்தியா ஏன் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறது? - ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி :


நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கா– இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இதுவரை இந்தியாவின் எரிவாயு துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமையலுக்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மற்றும் தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு அதற்குள் இருக்கும், வணிகரீதியான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு நுகர்வோர் (உணவகங்கள், தாபாக்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் வழக்கமான எரிவாயு இணைப்புகள் இல்லாத புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள்) மற்றும் உரங்கள், பெட்ரோ கெமிக்கல்கள் முதல் மட்பாண்டங்கள் மற்றும்  பஞ்சிரும்பு வரை, இயற்கை எரிவாயு மூலப்பொருளைச் சார்ந்திருக்கும் உற்பத்தியாளர்களாக உள்ளனர்.


முக்கியக் குறிப்புகள்:


1. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) என்பது ஒப்பீட்டளவில் சுத்தமான, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் செயல்திறன் மிக்க எரிசக்தி மூலமாகும். இது நிறமற்றதும், மணமற்றதாகும். மிகச்சிறிய கசிவைக்கூட எளிதில் கண்டறியும் வகையில், இதில் ஒரு கடும்  "துர்நாற்றத்தை" (stenching) ஏற்படுத்தும் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.


2. சாதாரண வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஒரு வாயுவாக இருக்கும். ஆனால், குறைந்த அழுத்தம் அல்லது குளிர்வித்தல்  பணிகளை செய்யும் போது அது திரவமாக மாறுகிறது. திரவநிலையில் இருப்பதால் அதை எளிதாக சேமிக்கவும், எடுத்துச் செல்லவும் முடியும். குளிர்விக்கப்பட்டு அல்லது அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட பிறகு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பொதுவாக எஃகு அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்ட கொள்கலன்களில் (containers) சேமிக்கப்படுகிறது.


3. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என்பது அதிக ஆற்றல்கொண்ட எரிபொருள் ஆகும். இது டீசல், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோல் மற்றும் உயிரிப் பொருள் தொகுப்பு (biomass) மூலம் பெறப்படும் ஆல்கஹால்கள் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் எரிபொருட்களைவிட ஒரு அலகிற்கு அதிக வெப்ப மதிப்பை (calorific value) வழங்குகிறது. இதன் காரணமாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு அதிக வெப்பத்துடன் எரிகிறது. இது அதிக செயல்திறனை அளிக்கும் ஒரு முக்கிய நன்மையாகும். இதன் தனித்துவமான பண்புகள் காரணமாக, இது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலமாக இருந்து வருகிறது.


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?


1. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போதோ அல்லது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பதப்படுத்தும்போதோ, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஒரு துணைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் இயற்கையாகவே காணப்படும் ஹைட்ரோகார்பன்களான புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


2. உலக லிக்விட் கேஸ் சங்க அளித்த (World Liquid Gas Association) தகவலின்படி, உலகளவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவில் 60% இயற்கை எரிவாயு செயலாக்கத்திலிருந்து கிடைக்கிறது. மேலும், 40% மூல எண்ணெய் சுத்திகரிப்பில் (refining) இருந்து பெறப்படுகிறது. ஆனால், இந்த விகிதங்கள் பகுதிகளுக்கு ஏற்பவும், காலத்துக்கு ஏற்பவும் மாறுபடலாம். எனவே, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என்பது ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரித்தலின் போது இயற்கையாகவே உருவாகும் ஒரு துணைப் பொருளாகும்.




திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பயன்பாடுகளும் நன்மைகளும் என்ன?


1. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவிற்கு பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. இது வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்துத் துறை, விவசாயம், மின் உற்பத்தி, சமையல், வெப்பமூட்டும் அமைப்புகள் எனப் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் சமையல் எரிவாயுவாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பயன்படுத்தப்படுகிறது. மேலும், வேளாண் துறையிலும், குறைந்த அளவு புகையை வெளியிடும் வாகனப் போக்குவரத்து எரிபொருளாகவும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


2. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு முழுச் சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, வளர்ந்துவரும் கிராமப்புற சமூகங்களுக்கு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பாரம்பரிய சமையல் எரிபொருட்கள் மரக்கட்டி, கரி, மாட்டு சாணம் போன்றவைக்கு மாற்றாக முதல் நவீன தீர்வாக அமைகிறது. இதன் மூலம் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.


3. 'உலக திரவ எரிவாயு சங்கத்தின்' (World Liquid Gas Association) கூற்றுப்படி, "வீடுகளுக்குள் சமையல் செய்யும்போது விறகு அல்லது பிற உயிரிப் பொருட்கள்  தொகுப்பு (biomass) எரிக்கப்படுவதால் உருவாகும் துகள்கள் மற்றும் நச்சு இரசாயனங்களின் கலவை, ஏழைச் சமூகங்களில் வாழும் பல மக்களிடையே பரவலான நோய்களுக்கும், அவர்களின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைவதற்கும்  முக்கிய காரணமாக அமைகிறது. இயல்பாகவே சுத்தமாக எரியும் தன்மையைக் கொண்டிருப்பதால், நாம் சுவாசிக்கும் காற்றைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு நடைமுறை வழிமுறையை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு வழங்குகிறது.


4. அதிக மாசு ஏற்படுத்தும் திட எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், 'கருப்பு கார்பன்' (black carbon) மற்றும் நுண்துகள்களின் வெளியேற்றத்தைக் குறைக்க திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு உதவுகிறது. இதன்மூலம் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள காற்றின் தரம் மேம்படுவதுடன், அதனால் ஏற்படும் உடல்நல அபாயங்களும் குறைகின்றன.



இந்தியாவின் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் இறக்குமதி சார்பு நிலை பற்றி


1.  ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (Petroleum Planning and Analysis Cell (PPAC)) வெளியிட்ட தரவுகளின்படி, தரவுகள் கிடைத்த முந்தைய ஆண்டான 1999 முதல், இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் நிகர இறக்குமதியாளராக இருந்து வருகிறது.


2. நாடு படிப்படியாகத் தனது சொந்தப் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் திறனைப் பெற்று வந்தபோதிலும், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மட்டும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. தற்போது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு  நாட்டின் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருளாகவும் திகழ்கிறது.


3. இந்தியா தனது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) தேவையில் 60 சதவீதத்தைப் பூர்த்திசெய்ய இறக்குமதியை சார்ந்துள்ளது. மேலும், அதன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதிகளில் 90 சதவீதம், ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கு ஆசியாவிலிருந்து வருகிறது.


4. பிற எரிபொருள் பொருட்களுக்கான இறக்குமதிச் சார்புநிலையை இந்தியா கணிசமாக குறைத்தாலும், சமையல் எரிவாயுவிற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேவையை பூர்த்திசெய்ய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதியை  அதிக அளவு சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


5. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதற்குப் பின்னால், அதற்கான தேவை உயர்ந்து வருவதே முக்கியக் காரணமாகும். வேகமாக நடந்துவரும் நகரமயமாக்கல், நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் வளர்ச்சி மற்றும் கிராமப்புறக் குடும்பங்களுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு சிலிண்டர்களை வழங்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் இந்தத் தேவை அதிகரிப்பிற்குப்  முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.


                                  உங்களுக்குத் தெரியுமா?


மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரின் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் கடுமையான தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டில் மின் தூண்டல் அடுப்புகள் (induction cooktops) விற்பனை அதிகரித்துள்ளது. பாரம்பரிய எரிவாயு அடுப்புகள் (gas stoves) திறந்த எரிப்பு (combustion) செயல்முறையை பயன்படுத்தி தீயை உருவாக்குகின்றன. ஆனால், ஒரு மின் தூண்டல் அடுப்பு இந்த எரிப்பு வேதியியல் செயல்முறையை தவிர்க்கிறது.


6. 1998–99 முதல் 2023–24 வரை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பயன்பாடு ஐந்து மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் உற்பத்தி மூன்று மடங்கிற்கு குறைவாகவே உயர்ந்துள்ளது. 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பயன்பாட்டு வளர்ச்சி குறைந்தாலும், தேவைக்கு ஏற்ப உற்பத்தித் திறனை (production capacity) அதிகரிக்க இந்தியா போராடி வருகிறது.


7. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஒரு துணைப் பொருளாக இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்முறையின் திறனை இந்தியா விரிவுபடுத்திய போதிலும், உள்நாட்டு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு உற்பத்தி ஒரு வரம்பை (ceiling) எட்டியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


8. உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெட்ரோலியப் பொருட்களின் மொத்த உற்பத்தியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பங்கு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 1998-99-ல், மொத்த சுத்திகரிப்பு உற்பத்தியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் அளவு 5.2%-ஆக இருந்தது. ஆனால், 2024-25-ல், உற்பத்தித் திறன் அதிகரித்து வந்தபோதிலும், சுத்திகரிப்பு உற்பத்தியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பங்கு 4.2% ஆக மட்டுமே உள்ளது.




அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்றால் என்ன?


1. மேற்கு ஆசியப் போரின் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிபொருள் ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த எரிபொருளைச் சார்ந்திருக்கும் "முன்னுரிமைத் துறைகளுக்கு" (priority sectors) இயற்கை எரிவாயுவை திசைதிருப்பும் வகையில், மார்ச் 9-ஆம் தேதியன்று அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தைப் பயன்படுத்தியது.


2. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (Essential Commodities Act (ECA)) 1955-ல், பொது மக்களின் நலன் கருதி, சில பொருட்களின் உற்பத்தி, வழங்கல், விநியோகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக” இயற்றப்பட்டது. பதுக்கல் அல்லது கள்ளச்சந்தையில் விற்கப்படும் அபாயத்தின் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அல்லது தயாரிப்புகளின் விநியோகம் தடைபட்டால், அது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்.

3. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் (Essential Commodities Act) படி, “அத்தியாவசிய பொருட்கள்” என்பது, மாட்டுத் தீவனம், நிலக்கரி மற்றும் அதன் துணைப்பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் அணிகலன்கள், பருத்தி மற்றும் கம்பள துணிகள், மருந்துகள் (Drugs and Cosmetics Act, 1940-ன் பிரிவு 3-ல் வரையறுக்கப்பட்டவை ஆகும். மேலும், உணவுப் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் அவற்றால் செய்யப்பட்ட பொருட்கள், மூல பருத்தி, மூல சணல் போன்றவை. ஒன்றிய அரசு அறிவிப்பின் மூலம் (notified order) சேர்க்கும் பிற பொருட்களும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில்  இடம் பெற்றிருக்கும்.


4. சட்டத்தின்கீழ், “அத்தியாவசியப்” பொருளாகக் கருதப்படும்  வகைப்படுத்தப்பட்ட எந்த ஒரு பொருளுக்கும் அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க அதிகாரம் கொண்டுள்ளது.


5. ஜூன் 2020-ல், ஒன்றிய அரசு ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம், குறிப்பிட்ட சில பண்டங்களை 'அத்தியாவசியப் பண்டங்கள்' பட்டியலிலிருந்து நீக்கியது. இதன் விளைவாக, போர், பஞ்சம், பொருட்களின் விலை   உயர்வு மற்றும் அதிக தக்கதை கொண்ட இயற்கை சீற்றங்கள் போன்ற "அசாதாரணச் சூழல்களில்" மட்டுமே, அப்பண்டங்களின் விலைகளை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பண்டங்களில், தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கும். இத்தகைய சூழ்நிலைகளில், தனிநபர்கள் வைத்திருக்கும் கையிருப்பு அளவிற்கும் அரசு வரம்புகளை விதிக்கலாம்.


Original Link: LPG in Focus: What it is, how it is produced, and why India depends on imports


Share:

சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

கடந்த மாதம் அமெரிக்க உச்சநீதிமன்றம், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்கீழ் (International Emergency Economic Powers Act (IEEPA)) விதிக்கப்பட்டிருந்த வரிவிதிப்புகளை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் பிரிவு 122-ன்கீழ் (Section 122) ஐந்து மாத காலத்திற்கு 10% உலகளாவிய வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (United States Trade Representative (USTR)), தனது வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சட்டப்பூர்வமாக ஆதரவளிக்கும் வகையில் ஒரு புதிய வரிவிதிப்பு முறையை உருவாக்கக்கூடும் என்கின்றனர். 


முக்கிய அம்சங்கள்:


— அமெரிக்காவால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிரிவு-301 (Section 301) விசாரணைகளின் அடிப்படையில் இந்த புதிய வரி விதிப்பு முறை அமையக்கூடும் என்கின்றனர். இந்த விசாரணைகளின் மூலம் விதிக்கப்படும் வரிகள், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட அமெரிக்காவின் பிற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அடிப்படையாக அமையும் என்கின்றனர். இந்த இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் ஏற்கனவே இரு நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


— சர்வதேச வர்த்தக நிபுணர்களின் கருத்துப்படி, அமெரிக்க சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்ட (IEEPA) தீர்ப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்கள் அவற்றின் பொருளாதார மதிப்பை இழந்துவிட்டன. இதற்கு முக்கியக் காரணம், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே 15-20% வரையிலான வரிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதோடு, சந்தை அணுகல், கொள்முதல் மற்றும் விதிமுறைகளில் முக்கிய சலுகைகளையும் வழங்கியிருந்தன. இருப்பினும், பரஸ்பர வரிக் கொள்கையை நீதிமன்றம் ரத்துசெய்த பிறகு, வாஷிங்டன் அனைத்து வர்த்தகப் பங்காளிகள் மீதும் ஒரே மாதிரியான 10% வரியை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


— அமெரிக்கா தனது வரி விதிப்பு முறையை மறுசீரமைப்பு செய்துவரும் வேளையில், இந்தியா அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும், எதிர்கால வரி கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க சந்தையில் இந்தியா பெறக்கூடிய நன்மைகள் ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்தும் என்று வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் கடந்த  திங்கள்கிழமை, மார்ச் மாதம் 16-ஆம் தேதி தெரிவித்துள்ளார்.


— இதற்கு முக்கியக் காரணம், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பல வர்த்தக பங்குதாரர்கள் தங்களது வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.


— கடந்த மாதம் அமெரிக்க உச்சநீதிமன்றம் சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்கீழ் (IEEPA) விதிக்கப்பட்டிருந்த வரிவிதிப்புகளை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பிரிவு-122-ன்கீழ் ஐந்து மாத காலத்திற்கு 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளது. இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, தனது வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சட்டப்பூர்வமாக ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிவிதிப்பு முறை ஒன்றை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) உருவாக்கக்கூடும் என்கின்றனர்.


— இந்திய அரசு அதிகாரிகள் இறுதி வர்த்தக ஒப்பந்தம் பிரிவு-301 வரிகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் என்று கூறியுள்ள நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) தனது விசாரணையில், இந்தியா "கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியைக்" கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 


— அமெரிக்காவின் உயர்மட்ட வர்த்தக அமைப்பான அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுடன் $58 பில்லியன் மதிப்பிலான இருதரப்பு வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது. மேலும், உலகளாவிய சரக்கு வர்த்தகத்தில் ஜவுளி, சுகாதாரம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகிய துறைகளில் இந்தியா உபரி வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


— இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின்மீது அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரிகளே சுங்க வரிகள் எனப்படும். இவை வெளிநாட்டுப் பொருட்களை உள்நாட்டுப் பொருட்களைவிட அதிக விலையுள்ளதாக மாற்றுகின்றன, இதன் மூலம் நுகர்வோரை உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கின்றன. மேலும், சுங்க வரிகள் வெளிநாட்டுப் போட்டியிலிருந்து உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதோடு, அரசாங்கத்திற்குத் தேவையான வருவாயையும் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கின்றனர். 

Original Link:  What is the International Emergency Economic Powers Act (IEEPA)? 


Share:

மின்காந்த தூண்டல் பாத்திரங்கள் (induction pan) ஏன் அதிக ஆற்றல் திறன் கொண்டது? -பிரியா குமாரி சுக்லா

தற்போதைய நிலை : மேற்கு ஆசியாவில் நடக்கும் போர், இந்தியாவிற்கான சமையல் எரிவாயு விநியோகத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக, எல்பிஜி சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் அதிகமான மக்கள் மின்காந்த தூண்டல் அடுப்புகளை (induction cooktops) வாங்குகிறார்கள்.


முக்கியக் குறிப்புகள் :


பொதுவாக எரிவாயு அடுப்புகள் (gas stoves), திறந்த தீச்சுடரை உருவாக்க எரிதலைச் சார்ந்துள்ளன. ஆனால், மின்காந்த தூண்டல் அடுப்பு (induction cooktop) இந்த எரியும் செயல்முறையைப் பயன்படுத்துவதில்லை. இது தீச்சுவாலையை உருவாக்காது. இதன் கண்ணாடி மேற்பரப்பு சமைக்கும்போதும் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாகவே இருக்கும்.


மின்காந்த தூண்டல் அடுப்பின் (induction cooktop) வழவழப்பான செராமிக் அல்லது கண்ணாடி மேற்பரப்பிற்குக் கீழே, செப்புக் கம்பியால் இறுக்கமாகச் சுற்றப்பட்ட ஒரு சுருள் அமைந்துள்ளது. அடுப்பை இயக்கும்போது மின்சுற்று முழுமையடைந்து, அந்தக் கம்பி வழியாக மாறுதிசை மின்னோட்டம் (AC) பாய அனுமதிக்கிறது. பின்னர், இந்த மாறுதிசை மின்னோட்டம் அடுப்பின் மேற்பரப்பிற்குச் சற்று மேலே, விரைவாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது.


இந்த மாறும் காந்தப்புலம், மேற்பரப்பையோ அல்லது காற்றையோ சூடாக்காமல், கண்ணாடி மேற்பரப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள காற்று வழியாக எளிதாக கடந்து செல்கிறது. இது அடுப்பின் மேற்பரப்பு அதன் இயல்பான வெப்பநிலையை பெரும்பாலும் பராமரிக்க அனுமதிக்கிறது. பொதுவாக இந்த அடுப்பு பெறும் எந்த வெப்பமும் சூடான பாத்திரத்துடனான தொடர்பினால் மட்டுமே ஏற்படுகிறது.


ஆனால் சில சமையல் பாத்திரங்கள் ஏன் மின்காந்த தூண்டல் அடுப்புகளுடன் பொருந்தாது? ஏனென்றால், மின்காந்த தூண்டல் முறையானது ஃபெரோகாந்த சமையல் பாத்திரங்களில் (ferromagnetic materials) சிறப்பாகச் செயல்படுகிறது. அதாவது, காந்தப்புலங்களுக்கு எதிர்வினையாற்றும் இரும்பு அல்லது சில வகை எஃகு போன்ற பொருட்களில் மட்டும் வினைபுரியும். சில நேரங்களில், சமையல் பாத்திரத்தின் அடிப்பகுதி மட்டுமே அத்தகைய பொருட்களால் செய்யப்பட்டிருக்கலாம். இதுவே "மின்காந்த தூண்டல் அடிப்பகுதி" (induction base) என்று சந்தைப்படுத்தப்படுகிறது.





அப்படியானால், உணவு எப்படி சூடாகிறது? இதற்கான பதில் அறிவியலில், குறிப்பாக ஃபாரடேயின் மின்காந்த தூண்டல் விதியில் (Faraday’s Law of Induction) உள்ளது. இந்த விதியின்படி, ஒரு காந்தப்புலம் தொடர்ந்து மாறும்போது, அது ஒரு மின்னழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த மின்னழுத்தம் பின்னர் ஒரு மின்சாரத்தை உருவாக்குகிறது. இது உலோகம் போன்ற அருகிலுள்ள எந்தவொரு மின் கடத்தியிலும் நிகழ்கிறது.


இந்த அதிக ஏற்ற இறக்கமுள்ள காந்தப்புலத்திற்குள் உலோகப் பாத்திரம் வைக்கப்படும்போது, அது ஒரு கடத்தியைப் போல செயல்படுகிறது. காந்தப்புலம், பாத்திரத்தின் அடிப்பகுதியில் சிறிய, வட்டவடிவ மின்சார மின்னோட்டங்களை உருவாக்குகிறது. இந்த மின்னோட்டங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிந்து, உலோகத்திற்குள் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கின்றன. இவை சுழல் மின்னோட்டங்கள் (eddy currents) என்று அழைக்கப்படுகின்றன. வெப்பத்தை உருவாக்குவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.


இரும்பு போன்ற உலோகங்கள் முழுமையான மின்-கடத்திகள் அல்ல. அவற்றுக்கு இயற்கையான மின்தடை (electrical resistance) உண்டு. எனவே, சுழல் மின்னோட்டங்கள் (eddy currents) பாத்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள அணுக்கள் வழியாகச் செல்லும்போது, அவை இந்த மின்தடையை எதிர்கொள்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையே ஏற்படும் மின் உராய்வு, நகரும் எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலை நேரடியாக வெப்ப ஆற்றலாக (வெப்பமாக) மாற்றுகிறது. இந்தச் செயல்முறை ஜூல் வெப்ப விதியால் (Joule’s Law of Heating) நிர்வகிக்கப்படுகிறது.



உங்களுக்குத் தெரியுமா? 


விக்கிப்பீடியாவின்படி, மின்காந்தவியலில், மாறும் காந்தப்புலம் ஒரு மின்சுற்றில் எவ்வாறு மின்சாரத்தை உருவாக்க முடியும் என்பதை ஃபாரடேயின் மின்தூண்டல் விதி விவரிக்கிறது. மின்காந்த மின்தூண்டல் (electromagnetic induction)  என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, மின்மாற்றிகள் (transformers), மின்தூண்டிகள் (inductors) மற்றும் பல வகையான மின் மோட்டார்கள் (electric motors), மின்னாக்கிகள் (generators) மற்றும் மின்சுருள்களின் (solenoids) ஆகியவற்றின் அடிப்படைச் செயல்பாட்டுக் கொள்கை இதுவே ஆகும்.


விக்கிப்பீடியாவின்படி, ஃபோகால்ட் மின்னோட்டம் (Foucault’s current) என்றும் அழைக்கப்படும் சுழல் மின்னோட்டம் என்பது ஒரு மின்சாரச் சுழற்சியாகும். ஒரு கடத்தியில் உள்ள காந்தப்புலம் மாறும்போது, கடத்திக்குள் இது உருவாகிறது. ஒரு கடத்தி காந்தப்புலத்தைப் பொறுத்து நகரும்போதும் இது உருவாகலாம். இது ஃபாரடேயின் மின்தூண்டல் விதியின்படி நிகழ்கிறது. சுழல் மின்னோட்டங்கள் கடத்திகளுக்குள் மூடிய சுழற்சிகளாகப் பாய்கின்றன. அவை காந்தப்புலத்திற்குச் செங்குத்தான தளங்களில் நகர்கின்றன.


விக்கிப்பீடியாவின்படி, ஜூல் வெப்பமாக்கல் என்பது ஒரு மின்கடத்தி வழியாக மின்சாரம் பாயும்போது வெப்பம் உருவாகும் செயல்முறையாகும். இது மின்தடை வெப்பமாக்கல் (resistance heating) அல்லது ஓமிக் வெப்பமாக்கல் (Ohmic heating) என்றும் அழைக்கப்படுகிறது.



Original Link: Why an induction pan is so energy efficient?


Share:

உழவர்களுக்கான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை

உழவர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


உழவர்களுக்கான முழு கடன் தள்ளுபடி தொடர்பான திட்டம் எதுவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை  என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மார்ச் மாதம் 23-ஆம் தேதி, 2026 -ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இருப்பினும், உழவர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இதில் கிசான் கடன் அட்டை (Kisan Credit Card (KCC)) மூலம் சரியான நேரத்தில் போதுமான கடன் வழங்குவதும் அடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ், மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் (Modified Interest Subvention Scheme (MISS)) மூலமாக ₹3 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் மானிய விலையிலான குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன. மேலும், கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் உழவர்களுக்குக் கூடுதல் வட்டிச் சலுகைகளும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும், அரசாங்கம் பிணையில்லா (Collateral-free) குறுகியகால விவசாயக் கடன்களை, அதன் சார்பு தொழில்களுக்கான கடன்களையும் சேர்த்து, ₹1.60 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தியுள்ளது. அதோடு, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னுரிமைத் துறை கடன் வழங்கும் வழிகாட்டுதல்களின்கீழ், வேளாண்மை உள்ளிட்ட பொருளாதாரத்தின் முக்கிய முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கிகள் மூலம் போதுமான கடன் உதவி கிடைப்பதை உறுதிசெய்து வருவதாகவும் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


மேலும், நிலம் வைத்துள்ள உழவர்களுக்குக் பயிர் காப்பீடு மற்றும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கே ரொக்கப் பணத்தை மாற்றும் வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.


மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், ராணுவப் பணியின் காரணமாகவோ அல்லது பணியின் போது ஏற்பட்ட பாதிப்பு தீவிரமடைந்ததாலோ உடல் ஊனமுற்றுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் மாற்றுத்திறனாளர் ஓய்வூதியத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறினார். இந்த வரி விலக்கு என்பது 1922-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின்கீழ் (Income-Tax Act, 1922) மார்ச் மாதம் 21-ஆம் தேதி, 1922-ஆம் ஆண்டு தேதியிட்ட அறிவிப்பு எண் 878-F மூலம் வழங்கப்பட்ட நடைமுறையிலிருந்து இன்றுவரை நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் (Income-tax Act, 1961) அமலுக்கு வந்தபோது, அந்தச் சட்டத்திலுள்ள நீக்கம் மற்றும் பாதுகாப்பு விதிகளின் மூலம் முந்தைய வரிவிலக்கு சலுகை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


2025-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் (Income-tax Act, 2025) இயற்றப்பட்டதோடு, இதற்கு முன்னிருந்த 1922-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் மற்றும் அது தொடர்பான சேமிப்பு விதிகள் ஆகியவை செயல்பாட்டில் இல்லாமல் போனதாகவும்  எனவே, புதிய சட்டத்தில் இதற்கெனத் தனியாக ஒரு தெளிவான விதி குறிப்பிடப்படாத நிலையில், அந்த வரிவிலக்கு தானாகவே காலாவதியாகிவிடும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


முன்னர் நடைமுறையில் இருந்த அதே வரிவிலக்கு, அதன் வரம்பு மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட அனைத்தும் எந்த மாற்றமுமின்றித் தொடர்வதை உறுதி செய்யும் வகையிலேயே தற்போதைய இந்த நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


குறிப்பிட்ட இந்த வரி விலக்கு நிறுத்தப்படவில்லை என்பதையும், அது தொடர்ந்து அமலில் இருக்கும் என்பதையும் நிதி அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.


இதற்கு மாறாக, 2025-ஆம் ஆண்டு வருமானவரிச் சட்டத்தின்கீழ் (Income-tax Act, 2025), ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத்திற்கு (Disability Pensions) எனத் தனியாக வரி விலக்கு அளிப்பதற்கான திருத்தத்தை 2026-ஆம் ஆண்டு நிதி மசோதா (Finance Bill, 2026) முன்மொழிவதாகவும் அவர் தெரிவித்தார்.


ஜனவரி மாதம் 31-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆயுதப் படைகளைச் சேர்ந்த 1,47,263 பணியாளர்கள் உடல் ஊனமுற்ற நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்; மேலும், பணியைத் தொடரத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்ட 89,598 பணியாளர்கள் தற்போது ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத்தைப் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். 

வருமான வரிச் சட்டம், 2025-ன் (Income-tax Act, 2025) விதிகள் தற்போதுள்ள சட்ட நிலையை அப்படியே தொடர்வதாகவும், அவை எந்தப் புதிய வரியையும் அறிமுகப்படுத்தவோ அல்லது ஏற்கனவே உள்ள வரி விலக்குகளை நீக்கவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, பழைய வரிச் சலுகைகளைப் பாதுகாப்பதற்கான 'முன்னோர் உரிமைப் பிரிவு' (Grandfathering Clause) எனப்படும் பாதுகாப்புக் காலநீட்டிப்பு எதுவும் இந்தச் சட்டத்தில் தேவையில்லை என்று அவர் விளக்கமளித்தார்.


பணியிலுள்ள ராணுவப் பணியாளர்கள் ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், அதில் நோய், காயம் அல்லது இதர உடல்நலக் குறைபாடுகள் கண்டறியப்படுபவர்கள் குறைந்த மருத்துவ வகைப்பாட்டில் (Low Medical Classification (LMC)) வைக்கப்பட்டு, சேவை விதிகளின்படி அவர்கள் அவ்வப்போது தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்த வருடாந்திர மருத்துவப் பரிசோதனையானது பொதுவான உடல் நலப் பரிசோதனை மற்றும் உடல் உறுப்பு மண்டலப் பரிசோதனைகளை உள்ளடக்கியது; இது ஒரு தொகுதி மருத்துவப் பரிசோதனைகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அந்தந்தப் படைகளில் அந்த அதிகாரி வகிக்கும் பொறுப்பு அல்லது பணி நிலைக்கேற்ப இந்தப் பரிசோதனைகள் மாறுபடும் என்றும் கூறினார்.


ஒருவரது உடல்நிலை அல்லது நோயின் பாதிப்பைக் கண்டறிந்த பிறகு, அந்தப் பணியாளரின் மருத்துவநிலை, அவர் பணியில் தொடர்வதற்கான கட்டுப்பாடுகள்  மற்றும் அவரது மருத்துவத் தரம் அல்லது வகைப்பாடு ஆகியவை குறித்து ஒரு மருத்துவச் சேவை நிபுணர் தனது கருத்தைத் தெரிவிப்பார் என்றும் சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு நபருக்கான மருத்துவ வகைப்பாடானது (Medical classification), ஆயுதப்படைகளுக்கான மருத்துவச் சேவை விதிமுறைகள்-2010 திருத்தப்பட்ட பதிப்பின் பத்திகள் 418 மற்றும் 419-ன்படி அமைக்கப்பட்ட ஒரு மருத்துவக் குழுவால் இறுதி செய்யப்படுகிறது. 


ஒருவரின் உடல்நிலை மற்றும் நோயின் தீவிரத்தைப் பற்றி மட்டுமே மருத்துவ வாரியங்கள் வரையறுக்கின்றன. மேலும், அந்த நோயாளி முழுமையாகக் குணமடையவும், அவரது உடல்நிலை மேலும் மோசமடையாமல் இருக்கவும் வேலையில் என்னென்ன கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் மருத்துவ வாரியம் பரிந்துரைப்பதாகத் தெரிவிக்கின்றனர். 


இராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு கொள்கைகள், அந்தந்தப் படைகளின் நிர்வாகப் பிரிவு (Military Secretary Branch (MS Branch)) அல்லது மற்ற படைகளில் (விமானம் மற்றும் கடற்படை) அதற்கு இணையான பிரிவுகளால் கையாளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Original Link: No proposal for complete loan waiver for farmers

Share: