திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டத்திற்கு, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த நிறுவனக் கட்டமைப்பு தேவைப்படுகிறது. -எம்.எஸ். சாஹூ மற்றும் ராகவ் பாண்டே


கடன் அல்லது நிதி நெருக்கடிகளைத் தீர்க்கும் முறை, பழமையான மற்றும் அதிகக் கட்டுப்பாடுகள் கொண்ட மறுவாழ்வு முறையிலிருந்து, சந்தை நிலவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் சந்தை சார்ந்த தீர்வு முறைக்கு மாறியுள்ளது.


மே மாதம் 2024-ஆம் ஆண்டில், நிதியமைச்சர் ஒரு முக்கியக் குறிப்பைத் தெரிவித்தார்: 'நலிவடைந்த தொழில்துறை நிறுவனங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1985' (Sick Industrial Companies Act (SICA)) முப்பது ஆண்டுகளில் எவ்வளவு வழக்குகளைத் தீர்த்ததோ, அதே அளவிலான வழக்குகளை 'திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டம், 2016' (Insolvency and Bankruptcy Code (IBC)) வெறும் ஏழே ஆண்டுகளில் தீர்த்து வைத்துள்ளது. இந்த அறிக்கை, இந்தச் சட்டங்களைப் பற்றிய விவாதங்களை முறையான மற்றும் நியாயமான ஒப்பீடுகளை நோக்கி மெதுவாகத் திருப்பியது.


பல ஆண்டுகளாக, விமர்சகர்கள் திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டத்தை (IBC), 1993-ஆம் ஆண்டின் கடன் மீட்பு மற்றும் திவால் சட்டம் (Recovery of Debts and Bankruptcy Act (RDBA)) அல்லது 2002-ஆம் ஆண்டின் நிதிச் சொத்துக்களைப் பத்திரப்படுத்துதல் மற்றும் மறுகட்டமைத்தல் மற்றும் பாதுகாப்பு வட்டி அமலாக்கச் சட்டத்துடன் (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act (SARFAESI)) ஒப்பிட்டுப் பேசி வந்தனர். இருப்பினும், அத்தகைய ஒப்பீடுகள் சரியானவை அல்ல. ஏனெனில், முந்தைய சட்டங்கள் முக்கியமாகக் கடனைத் திரும்பப் பெறுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவை. ஆனால் திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டத்தின்கீழ் (IBC), கடனை மீட்பது என்பது நிறுவனங்களின் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காணும் பரந்த இலக்கின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். மேலும், கடனைத் திரும்பப் பெறுவதிலும்கூட, இந்தக் கடன் மீட்புச் சட்டங்களைவிட திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டம் தொடர்ந்து சிறந்த செயல்திறனைக் காட்டியுள்ளது.


எனவே, கால அளவு மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்  திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டம் (IBC) மற்றும் நலிவடைந்த தொழில்துறை நிறுவனங்கள் சட்டம் (SICA) ஆகிய இரண்டு முறைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நியாயமானதும் அவசியமானதும் ஆகும். இவை இரண்டுமே பெருநிறுவனங்களின் நிதி நெருக்கடிகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றாலும், முற்றிலும் மாறுபட்ட நிறுவன அணுகுமுறைகளையும் பொருளாதாரக் கொள்கைகளையும் பின்பற்றுகின்றன. திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்தச் சட்டத்தை பற்றி மட்டுமல்லாமல், இந்த இரண்டு அமைப்புகளும் உருவாக்கியுள்ள மாறுபட்ட பொருளாதாரக் கலாச்சாரங்களையும் மதிப்பீடு செய்வது முக்கியமானதாகிறது.


நலிவடைந்த தொழில்துறை நிறுவனங்கள் சட்டத்தின் ஆண்டுகள்


1985-ஆம் ஆண்டில் தொழில்துறை தோல்விகளைக் கையாள்வதற்காக இந்தியா, நலிவடைந்த தொழில்துறை நிறுவனங்கள் சட்டத்தைக் (SICA) கொண்டு வந்தபோது, அது காலத்திற்கு முந்தைய ஒரு முற்போக்கான நடவடிக்கையாக இருந்தது. ஏனெனில், 1991-ஆம் ஆண்டில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை கொண்டு வரப்பட்டு தொழில்களைத் தொடங்கவும் நடத்தவும் அதிக சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்பே இச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம், அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இயங்கிய அந்த 'கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு' காலத்தின் அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரச் சிந்தனையைப் பிரதிபலித்தது. பொது நலன் கருதியும், இந்திய அரசியலமைப்பின் 39-வது பிரிவின்கீழ் உள்ள 'அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை' ஊக்குவிப்பதற்காகவும் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நலிவடைந்த நிறுவனங்களைக் கண்டறிவது மட்டுமின்றி, நிதியுதவி, சலுகைகள் மற்றும் நிறுவனரீதியான ஆதரவு மூலம் அவற்றை மீட்டெடுக்கும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.


நலிவடைந்த தொழில்துறை நிறுவனங்கள் சட்டம் (SICA) நிறுவனங்களின் திவால் நிலையை ஒரு நோய் போலவே கருதியது. நிதி நெருக்கடியில் இருந்த நிறுவனங்கள் 'நலிவடைந்த' நிறுவனங்கள் என்றும், அவற்றிற்கு 'மறுவாழ்வு' தேவை என்றும் கூறப்பட்டது. இந்த வார்த்தைகள் 'கடன்' என்ற ஆழமான கலாச்சாரச் சிந்தனையோடு ஒத்துப்போனதால், முதலீட்டு மூலதனத்தைவிட அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள்மீது அதிக அனுதாபத்தை உருவாக்க வழிவகுத்தது. இதன் காரணமாக, தொழில்துறை மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியம் (Board for Industrial and Financial Reconstruction (BIFR)) என்ற அமைப்பு, உரிமையாளர்கள் தங்களின் நலிவடைந்த நிறுவனங்களை நீண்டகாலத்திற்கு விட்டு வைக்கும் ஒரு நீண்டகாலப் பராமரிப்பு மையமாக மாறியது. ஆனால், நிறுவனங்களின் நிதி நெருக்கடிக்குத் தகுந்த தீர்வுகளைக் காண்பதற்கான திறனோ அல்லது உந்துதலோ தொழில்துறை மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரிய (BIFR) அமைப்பிடம் இல்லை.


இந்த நீண்ட காலகட்டத்தில், நிறுவனத்தை உருவாக்கிய நிறுவனர்களே அதன் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். ஆனால், கடன் கொடுத்தவர்கள் இந்தச் செயல்பாட்டிற்கு வெளியேயே நிறுத்தப்பட்டு, முடிவுகள் எடுப்பதில் எந்த அதிகாரமும் இல்லாமல் இருந்தனர். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டது போல, நலிவடைந்த தொழில்துறை நிறுவனங்கள் சட்டம் (SICA) கடன் வாங்கியவர்களை ஒரு இரும்புத் திரைக்குப் பின்னால் வைத்துப் பாதுகாத்தது; இதனால் கடன் கொடுத்தவர்கள் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் காலவரையின்றித் தடுக்கப்பட்டனர். இந்த அணுகுமுறை பொருளாதாரரீதியான தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக நிறுவனக் கட்டுப்பாட்டிலிருந்து 'நிறுவனர்களை' நீக்குவது ஒரு தண்டனையாகப் பார்க்கப்பட்ட ஒரு தவறான அமைப்பை அடிப்படையாகக் கொண்டது.


இயல்புநிலையை மறுபரிசீலனை செய்தல்


திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டம் (IBC) என்பது கடனைத் திருப்பிச் செலுத்தாததால் ஏற்படும் நிதி நெருக்கடியை அணுகும் கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது. இதை ஒரு ஒழுக்கக் கேடாகப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு சாதாரணப் பொருளாதார நிகழ்வாகவே இச்சட்டம் கருதுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய ஒரு நிறுவனம், சரியாகச் செயல்படாத ஒரு அமைப்பிற்குள் சிக்கிக்கொண்ட சொத்துக்களின் தொகுப்பாகவே பார்க்கப்படுகிறது. எனவே, யாருக்கு அனுதாபம் காட்டுவது என்பதில் கவனம் செலுத்தாமல், அந்தச் சொத்துக்களை யார் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டறிவதே இதன் முக்கிய நோக்கமாக மாறியுள்ளது.


இன்றைய நவீனச் சந்தைகள் நிலையற்றவை ஆகும். தொழில்நுட்பங்கள் மாறலாம், தொழிலை விரிவுபடுத்தும் திட்டங்கள் ஆபத்தாக முடியலாம் அல்லது நிர்வாகம் தோல்வியடையலாம். இந்தத் தோல்வி ஏன் ஏற்பட்டது என்பதில் திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டம் (IBC) அதிகக் கவனம் செலுத்துவதில்லை. நிறுவனத்தின் நிறுவனர்கள் தோல்வியடைந்தால், அந்த நிறுவனத்தின் பொருளாதார மதிப்பைப் பாதுகாக்க, உலக அளவில் திறமையான வேறு யாரிடமாவது நிறுவனத்தை ஒப்படைக்க இந்தச் சட்டம் முயல்கிறது. ஒருவேளை அந்த நிறுவனத்திற்கு இனி எந்த மதிப்பும் இல்லை என்ற நிலை வந்தால், அதன் சொத்துக்கள் விற்கப்பட்டு, வேறு இடங்களில் திறம்படப் பயன்படுத்த வழிவகை செய்யப்படுகிறது.


இது ஒரு அடிப்படையான ஒப்பந்தக் கொள்கையைச் சார்ந்தது. வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கொண்ட ஒரு நிறுவனம் என்பது அடிப்படையில் பங்குதாரர்களுக்கும் கடன் வழங்குபவர்களுக்கும் இடையேயான ஒரு ஒப்பந்தமாகும். கடன்கள் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் வரை, பங்குதாரர்களே நிறுவனத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். கடன் கொடுத்தவர்கள் அதில் தலையிட முடியாது. ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறும்போது, பெருநிறுவன நொடிப்புநிலை தீர்வு செயல்முறையைத் (Corporate Insolvency Resolution Process (CIRP)) தொடங்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. இந்தச் செயல்முறை நிறுவனர்களைக் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, கடன் கொடுத்தவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கிறது. அந்த நிலைக்குப் பிறகு, நிறுவனத்தின் எஞ்சியிருக்கும் மதிப்பு முக்கியமாகக் கடன் கொடுத்தவர்களுக்கே சொந்தமாகிறது. நிறுவனத்தின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதில் அரசோ அல்லது நிறுவனத்தை உருவாக்கியவர்களோ முடிவெடுக்க முடியாது. கடன் கொடுத்தவர்களின் வணிகரீதியான முடிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், நீதிமன்றங்கள் பொதுவாக இந்த விவகாரங்களில் தலையிடுவதில்லை.


சட்டப்பிரிவு- 29A ஒரு நிறுவனம் மற்றும் அதன் நிறுவனருக்கும் இடையேயான பிரிவினையை மேலும் வலுப்படுத்துகிறது. பெருநிறுவன நொடிப்புநிலை தீர்வு செயல்முறையின்போது (CIRP), கடன் செலுத்தத் தவறிய நிறுவன உரிமையாளர்கள் தங்களது நிறுவனங்களை மிகக் குறைந்த விலைக்கு மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை இந்தச் சட்டப்பிரிவு தடுக்கிறது. இதன் பின்னணியில் உள்ள யோசனை மிகவும் எளிதானது: உண்மையான வணிகத் தோல்விகளை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் வேண்டுமென்றே கடன் செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுக்கு எந்தச் சலுகையும் வழங்கப்படக் கூடாது.


வெவ்வேறு சட்டங்கள் இயற்கையாகவே வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தின. நலிவடைந்த தொழில்துறை நிறுவனங்கள் சட்ட (SICA) முறைமையானது, நிறுவனங்களின் நிதி நெருக்கடிகளைத் திறம்படக் கையாள்வதில் தோல்வியடைந்தது. இது 'இரட்டை இருப்புநிலை குறிப்பேடு சிக்கலுக்கு' (Twin Balance Sheet Syndrome (TBS)) வழிவகுத்தது. இதனால், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகிய இரண்டின் நிதி நிலைகளும் பலவீனமடைந்தன. இதற்கு நேர்மாறாக, திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டம் (IBC) இந்தச் சிக்கலைக் குறைக்கவும், கடன் வழங்குவதில் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் உதவியது. இதன் விளைவாக, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக்கடன் (Gross Non-Performing Assets (Gross NPAs)) விகிதம், கடந்த 2018-ஆம் ஆண்டில் 14.8 சதவீதமாக உச்சத்தில் இருந்தது, 2025-ஆம் ஆண்டிற்குள் சுமார் 2.2 சதவீதமாகக் குறைந்தது.





வெற்றிக் கதை


திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டம் (IBC) கொண்டுவரப்பட்ட பிறகு, நிறுவனங்களின் கடன் மீட்பு விகிதங்கள் மற்றும் தீர்வு காண்பதற்கான நேரம் ஆகிய இரண்டிலுமே நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. உலக வங்கியின் 'தொழில் செய்வதை எளிதாக்குதல்' குறியீடுகள் இந்த மாற்றத்தைப் பிரதிபலித்தன.  திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டம் (IBC) கொண்டுவரப்பட்ட மூன்றே ஆண்டுகளுக்குள், நொடிப்பு நிலைத் தீர்வில் இந்தியாவின் தரவரிசை 136-லிருந்து 52-ஆக உயர்ந்தது. முக்கியமாக, இந்தச் சட்டத்தின்கீழ் தீர்வு காணப்பட்ட நிறுவனங்கள் செயல்பாட்டு ரீதியாக மீண்டும் வலுவடைந்தன: தீர்வு காணப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள், அவற்றின் சராசரி விற்பனை மற்றும் மூலதனச் செலவு இரண்டு மடங்கு அதிகரித்தன. சொத்து வளர்ச்சி விகிதம் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்தது, லாபம் ஈட்டும் திறன் தொழில்துறை தரத்திற்கு நிகராக உயர்ந்தது, மற்றும் சந்தை மதிப்பு மூன்று மடங்காக அதிகரித்தது.


ஒருவேளை, திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டத்தின் (IBC) மிகப்பெரிய வெற்றி என்பது, அது சட்டரீதியாகச் செயல்படத் தொடங்குவதற்கு முன்பாகவே அதன் பயத்தினால் ஏற்படும் தீர்வுகளில்தான் அடங்கியுள்ளது. தங்கள் நிறுவன சாம்ராஜ்யத்தை இழந்துவிடுவோம் என்ற பயம், தொழில்துறை நிறுவனர்களின் நடத்தையை அடிப்படையிலேயே மாற்றியமைத்துள்ளது. நீதிமன்றத்தால் திவால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே, பல்லாயிரக்கணக்கான கடன் பெற்றவர்கள் தங்களது கடனைத் தீர்த்துக்கொண்டுள்ளனர். இன்னும் பலர், தங்களுக்கு எதிராக விண்ணப்பம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே கடனைச் சரிசெய்துவிடுகிறார்கள். இந்த ஒழுக்கமான நடத்தை, இதற்கு முந்தைய நலிவடைந்த தொழில்துறை நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் (SICA) முற்றிலும் இல்லாமல் இருந்தது.


திவால் மற்றும் நொடிப்புநிலை சட்டம், 2016 (IBC) கொண்டுவரப்படுவதற்கு முந்தைய காலத்திற்கும், அதற்குப் பிந்தைய காலத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மிகத் தெளிவானது. இருப்பினும், இந்த திவால் மற்றும் நொடிப்புநிலை சட்டம் (IBC) இன்னும் சில நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான தடைகளை எதிர்கொண்டுதான் வருகிறது. ஏறத்தாழ 400 நிறுவன மறுசீரமைப்புத் திட்டங்கள் இன்னும் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன என்றும், சில திட்டங்களின் தாமதம் நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் சமீபத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.


திவால் மற்றும் நொடிப்புநிலை சட்டத்தின் (IBC) முழுத் திறனையும் வெளிப்படுத்தவிடாமல் தடுக்கும் இத்தகைய முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், இதற்கு முந்தைய பழைய சட்ட அமைப்புகளிலிருந்து இந்த திவால் மற்றும் நொடிப்புநிலை சட்டத்தை (IBC) ஒரு சிறந்த சட்டமாக வேறுபடுத்திக் காட்டிய அந்தச் செயல்திறன் நன்மைகளை நாம் இழக்க நேரிடும். திவால் மற்றும் நொடிப்புநிலை சட்டம் (IBC) தனது அடுத்த பத்தாண்டிற்குள் அடிவைக்கும் இந்த நேரத்தில், அதன் நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முழுக் கவனமும் செலுத்தப்பட வேண்டும். அப்போதுதான், திறமையின்மையைப் பாதுகாத்த கடந்த காலத் தோல்விகள் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.


சாஹூ, இந்திய திவால் மற்றும் நொடிப்புநிலை வாரியத்தின் (IBBI) முன்னாள் தலைவரும், திவால் சட்ட அகாடமியின் (ILA) ஒரு ஓய்வுபெற்ற சிறப்புப் பேராசிரியரும் ஆவார். பாண்டே, டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (NLUD) திவால்நிலை முதுகலை திட்டத்தின் (PGIP) இயக்குநராக உள்ளார்.

Original link:

IBC needs an institutional boost.


Share:

வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்ட (VB-G RAM G) விதிமுறைகள்: ஜூலை 1 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட முறைக்கு மாற்றாக வரும் புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்ட (Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) விதிகள் 125 நாட்கள் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு, மாற்றியமைக்கப்பட்ட நிதிப் பகிர்வு முறை, நேரடிப் பயன் பரிமாற்றம் மூலமாக நேரடியாக ஊதியம் வழங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான புதிய முறை ஆகியவற்றை அறிமுகப்படுத்துகின்றன.


வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம், 2025 (VB-G RAM G)) Act, 2025) சட்டம், 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) மாற்றாக வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, ஒன்றிய அரசு இதனைச் செயல்படுத்துவதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.


இந்த வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம், உத்தரவாதமளிக்கப்பட்ட ஊதிய வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் நிதிப் பொறுப்பின் பெரும்பகுதியை மாநிலங்களின்மீது சுமத்துகிறது மற்றும் நிதி ஒதுக்கீடு செயல்முறையை ஒன்றிய அரசின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.


இந்தப் புதிய விதிகளில் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, சரிபார்க்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) அடையாள அட்டை (Job card) வைத்திருப்பவர்கள், இந்த புதிய திட்டத்தின் கீழும் வேலை பெற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க பதினாறாவது நிதிக் குழுவின் (Sixteenth Finance Commission) திட்ட செயல்முறையைப் பயன்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. மற்றொரு புதிய விதியின்படி, குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டின் ஒரு பகுதியை அரசு தனியாக ஒதுக்கி வைக்கவும் அனுமதிக்கிறது.


இந்தப் புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள் என்னென்ன, மற்றும் அவை தொழிலாளர்கள், இந்தத் திட்டம் மற்றும் மாநிலங்களின் நிதி நிலைமை ஆகியவற்றில் என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். 


முதலாவதாக, வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம் (VB-G RAM G), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGA) இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம் (VB-G RAM G Act), கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் ஐந்து கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்கு வேலை வழங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக அமையும் என்கின்றனர்.


இந்தச் சட்டம் வேலை நாட்களின் எண்ணிக்கையை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்துகிறது. மேலும், வேளாண் சாகுபடிக்கு போதிய தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பயிர் விதைப்பு மற்றும் அறுவடை தீவிரமாக நடக்கும் காலங்களில் 60 நாட்கள் வேலை இடைவேளையையும் இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.


ஒன்றிய அரசு 100% ஊதியச் செலவை ஏற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) போலல்லாமல், புதிய வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம் (VB-G RAM G) திட்டமானது 40% நிதிச் சுமையை மாநில அரசுகளின்மீது சுமத்துகிறது. எனினும், வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி மாநிலங்கள், மற்றும் சொந்தமாகச் சட்டமன்றத்தைக் கொண்டுள்ள யூனியன் பிரதேசங்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது; இந்த பிராந்தியங்களில் ஒன்றிய அரசே 90% நிதிச் சுமையைப் பகிர்ந்துகொள்ளும். அதேநேரத்தில், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களின் முழு நிதிச் சுமையையும் ஒன்றிய அரசே முழுமையாக ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும், இந்தப் புதிய திட்டம் மாநிலங்களின் தொழிலாளர் நிதி ஒதுக்கீடு திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும் பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGS) முறையை முற்றிலும் மாற்றியமைக்கிறது.  இனி மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசே நேரடியாகத் தீர்மானிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


புதிய விதிகள் யாவை?


மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் (Ministry of Rural Development (MoRD)) கடந்த மே மாதம் 23-ஆம் தேதியன்று, வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (VB-G RAM G) விதிகளை வெளியிட்டது. இதில் தினசரி கூலி வழங்குதல், வேலையின்மைக்கான உதவித்தொகை, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டக் கண்காணிப்பு தொடர்பான முக்கியமான எட்டு வரைவு விதிகள் இடம்பெற்றுள்ளன. அந்த விதிகள் பின்வருமாறு:


  • தேசிய அளவிலான வழிகாட்டுதல் குழு விதிகள் 

  • குறை தீர்க்கும் விதிகள் 

  • நிர்வாகச் செலவின விதிகள்

  • வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இடைக்கால ஏற்பாடுகளுக்கான விதிகள் 

  • வழக்கமான நிதி ஒதுக்கீட்டிற்கான கொள்கை அளவுகோல் விதிகள் 

  • மத்திய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதக் குழு விதிகள் 

  • கூலி மற்றும் வேலையின்மை உதவித்தொகை வழங்குவதற்கான நடைமுறை விதிகள் 

  • மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்கமான நிதியைவிட கூடுதலாகச் செய்யும் செலவினங்களின் நடைமுறைகள் மற்றும் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கான திட்டச் செலவின விதிகள், 2026


ஒரு மாதத்திற்குள் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் மத்திய அமைச்சகம் கோரியுள்ளது. இதற்குப் பிறகு, அமைச்சகம் இந்த புதிய விவாதத்திற்குரிய விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய விதிகள், தற்போது பணியில் இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) தொழிலாளர்களை எவ்வாறு பாதிக்கின்றன?


புதிய விதிகளின்படி, தற்போதைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) தொழிலாளர்களுக்கு "இடைக்கால விதிகளே" மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவர்களின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) அடையாள அட்டைகள் புதுப்பிக்கப்பட்டு, மின்-வாடிக்கையாளர் சரிபார்ப்பு (e-KYC) மூலம் உறுதி செய்யப்பட்டவுடன், அவை 'வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத்  திட்டத்தின்கீழ் (VB-G RAM G Act) வேலை பெறுவதற்கும் செல்லுபடியாகும். புதிய சட்டத்தின்கீழ் மாநில அரசுகள் 'ஊரக வேலைவாய்ப்பு உறுதி அட்டைகளை' வழங்கும் வரை இந்த இடைக்கால ஏற்பாடு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அனைத்து  ஊதியத் தொகை மற்றும் வேலையின்மைக்கான உதவித்தொகை வழங்கல்கள், நேரடியாகப் பயனாளிகளின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குகளில் 'நேரடிப் பலன் பரிமாற்றம்' மூலம் மட்டுமே செலுத்தப்படும் என்று புதிய விதிகள் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றன. இருப்பினும், ஒன்றிய அரசு வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத்  திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய தினசரி ஊதிய விகிதத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 




மாநிலங்களுக்கு இந்தப் புதிய விதிகளின் முக்கியத்துவம் என்ன?


2026–27-ஆம் நிதியாண்டுக்கான வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்காக ஒன்றிய அரசு ரூ.95,692.31 கோடியை ஒதுக்கியுள்ளது.


மாநிலங்களைப் பொறுத்தவரை, நிதி ஒதுக்கீடு மற்றும் கூடுதல் செலவினங்கள் தொடர்பான விதிகளே மிகவும் முக்கியமானவையாகும்.


2026-ஆம் ஆண்டின் நெறிமுறைப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு விதிகளுக்கான வரைவு குறிக்கோள் அளவுகோல்களின்படி (Draft Objective Parameters for Normative Allocation Rules, 2026), அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில், ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது.


இந்த விதிகளின்படி, மாநிலங்களுக்கான நெறிமுறை சார்ந்த நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க, ஒன்றிய அரசு பதினாறாவது நிதி ஆணையத்தின் கிடைமட்டப் பகிர்வு பரிந்துரைகளைப் பயன்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பதினாறாவது நிதி ஆணையத்தின் கணக்கீட்டு முறைகளின்படி, சில மாநிலங்களுக்கு 2025-26-ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (MGNREGS) கிடைத்த நிதியோடு ஒப்பிடும்போது, புதிய வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத்  திட்டத்தின் (VB-G RAM G) மூலம் கிடைக்கப் பெறும் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கக்கூடும். இத்தகைய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை அடங்கும். இதற்கு நேர்மாறாக, உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், அசாம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் நிதிப் பங்கீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.



முக்கியமாக, இந்த வரைவு விதிகளில் நிலையான நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியை தனியாக ஒதுக்கி வைப்பதற்கான ஒரு வழிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனியாக வைக்கப்படும் தொகையானது - தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், சமூகத் தணிக்கை நடைமுறைகளைப் பின்பற்றுதல், ஒரு நிதியாண்டில் பணிகளை முடிக்கும் வீதம் மற்றும் ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்படும் பிற செயல்திறன் குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்படும். இருப்பினும், இவ்வாறு தனியாக எடுத்துவைக்கப்பட வேண்டிய நிதியின் பங்கு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.


இந்த புதிய வழிமுறையானது அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.


சட்டப்பிரிவில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான விதியின்படி, மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையான நிதியைத் தாண்டிச் செய்யும் கூடுதல் செலவினங்களை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும். அதாவது, அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகச் செலவு செய்தால், அந்த கூடுதல் செலவை அந்த மாநில அரசே ஏற்கவேண்டும் என்று விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

 

Original link:

VB-G RAM G rules: What changes as the new job scheme replaces MGNREGS from July 1?


Share:

வரதட்சணை பழக்கம் பெண்களை அவமதிக்கிறது, ஆண்களை சிறுமைப்படுத்துகிறது. இந்தியாவில் இதற்கு இடமில்லை. -லட்சுமி பூரி


வரதட்சணை சட்டவிரோதமானது என்பதால் மட்டுமல்ல, அது ஒழுக்கமற்றது நாகரிகமற்றது என்பதாலும் ஒழிக்கப்பட வேண்டும். அது பெண்களை வன்மையாகத் தாக்குகிறது, ஆண்களைக் சிறுமைப்படுத்துகிறது, குடும்பத்தைச் சீரழிக்கிறது. மேலும், சமமான பங்களிப்பின் அடிப்படையில் அமைய வேண்டிய திருமணத்தை மோசமானதாக்குகிறது.


ஐக்கிய நாடுகள் பெண்கள் (UN Women) அமைப்பில் பணியாற்றிய ஆண்டுகளில், லத்தீன் அமெரிக்காவின் பெலேம் டோ பாரா மாநாடு (Latin America’s Belém do Pará Convention) மற்றும் பெண்ணினக் கொலை மீதான அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான மாதிரிச் சட்டம் (Inter-American Model Law on femicide/feminicide) ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண்களாக இருப்பதாலேயே கொல்லப்படுதல் என்ற கருத்தாக்கத்தை அங்கீகரிப்பதை நாங்கள் ஊக்குவித்தோம். இந்தியாவில் எந்தவொரு குற்றத்தையாவது உண்மையாகவே பெண்ணினக் கொலை (femicide) என்று வகைப்படுத்த முடியுமானால், அது வரதட்சணைக் கொலைதான்.

வரதட்சணையுடன் தொடர்புடைய ஒவ்வொரு துயரச் சம்பவமும், அடுத்த செய்திச் சுழற்சியில் மறைந்துபோவதற்கு முன்பாக, தேசத்தின் மனசாட்சியை உலுக்குகிறது. தற்போது விசாரணையில் உள்ள சம்பவங்கள், பரபரப்பு அல்லது உணர்ச்சிப் பொங்குதல்களுக்கான சந்தர்ப்பங்களாக மாறக்கூடாது. மாறாக, அவை ஒரு நாகரிக முரண்பாட்டைப் பிரதிபலிக்கும் சமூகத்தை நிர்பந்திக்க வேண்டும். பெண்களைத் திரிதேவிகள், லட்சுமி, சரஸ்வதி மற்றும் பார்வதியாகப் போற்றும் இந்தியாவானது எப்படி அவர்களின் கண்ணியத்தை எப்படிப் பணையம் வைத்து, நாரி சக்தியை அவமதிக்க முடியும்? 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை அடைய விரும்பும் இந்தியாவில், மகள்களைக் கார்கள், பணம், தங்கம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ஈடாக எடைபோடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?


வரதட்சணை (Dowry) என்பது ஒரு பழக்கமோ, பரிசோ, அல்லது திருமணங்களின் பகட்டிற்குப் பின்னால் மறைந்திருக்கும் 'குடும்பக் கௌரவமோ' அல்ல. அது திருமணம் தன் ஆன்மாவை இழக்கும் ஒரு சந்தை ஆகும்.


பெண்ணின் சொத்து என்ற கோட்பாடு (concept of stree dhan) வரதட்சணை கொடுக்கும் வழக்கத்தை நியாயப்படுத்தாது. பாரம்பரியமாக, அது ஒரு மகளின் நிதிப் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை வழங்குவதற்காக, அவருடைய தனிப்பட்ட உரிமை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், அவருக்குத் தானாக முன்வந்து வழங்கப்படும் சொத்துக்கள், நகைகள், உடைமைகள் அல்லது பரிசுகளைக் குறித்தது. அதன் நோக்கம் பெண்ணுக்கு அதிகாரம் அளிப்பதே தவிர, கணவனின் குடும்பத்தை வளப்படுத்துவதல்ல. நவீன வரதட்சணை என்பது, தொடக்கத்தில் ஒரு பாதுகாப்புக் கருத்தாக இருந்ததன் ஒரு பயங்கரமான திரிபு ஆகும்.


வரதட்சணை என்பது ஒரு பழைய சமூகத் தீமை மட்டுமல்ல. அது வன்முறையின் ஒரு தொடர்ச்சி. அது கோரிக்கையாகத் தொடங்கி, உரிமை கோரலாக வளர்ந்து, வற்புறுத்தலாக இறுகி, பெரும்பாலும் துன்புறுத்தல், தாக்குதல், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் கொலைக்குக் கூட வழிவகுக்கிறது. அது வர்க்கம், சாதி, மதம் மற்றும் பிராந்தியம் ஆகிய எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது. 2024-ம் ஆண்டில் இந்தியாவில் 5,737 வரதட்சணைக் கொலைகள் பதிவாகியுள்ளன.  இதன் பொருள், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 16 பெண்கள் இறக்கின்றனர். விசாரணைகள் முடிவடைந்த வழக்குகளில், சுமார் 35 சதவிகித வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேபோக்கு, பெரும்பாலான பிற தெற்காசிய நாடுகளிலும் காணப்படுகிறது. வரதட்சணையானது, பாலின சமத்துவம், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை ஒழித்தல் ஆகியவற்றுக்கு உலகை அர்ப்பணிக்கும் நிலையான வளர்ச்சி இலக்கு-5-ன் மீதான ஒரு நேரடித் தாக்குதலாகவும் உள்ளது.


வரதட்சணை என்பது ஒரு ஆணின் கண்ணியத்திற்கு இழைக்கப்படும் அவமதிப்புமாகும். வரதட்சணையைக் கேட்கும் அல்லது ஏற்கும் ஒருவன், தனக்குத்தானே ஒரு சந்தை விலையை நிர்ணயித்துக் கொள்கிறான். அவன் தனது புருஷார்த்தத்தையும் புருஷத்துவத்தையும், அதாவது தனது திறமை, குணம் மற்றும் ஆண்மையையும் பலவீனப்படுத்திக் கொள்கிறான். இத்தகைய ஆண்மை, தன்னை மற்றவர்கள் அங்கீகரிப்பதற்காக மிரட்டிப் பறிப்பதைச் சார்ந்துள்ளது. இது ஆண்மையின் ஒரு பலவீனமான மற்றும் பிறரைச் சார்ந்த வடிவமாகும்.


துயரம் என்னவென்றால், வரதட்சணையானது எதிர்பார்ப்பு, தகுதி, 'குடும்பங்களை இணைத்தல்', 'வெறும் ஒரு கார்' அல்லது 'வீடு அமைக்க உதவுதல்' போன்ற பல்வேறு வடிவங்களில் வருகிறது. ஆனால் வரதட்சணைக்கான முதல் கோரிக்கை ஒரு பேரம் பேசுவதல்ல, அது ஒரு எச்சரிக்கை மணி. இளம் பெண்கள் இந்த முதல் அபாயச் சின்னத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கல்வியும் வேலைவாய்ப்பும் முக்கியமானவை. ஆனால் உளவியல்ரீதியான தயார்நிலையும் அதே அளவு முக்கியமானது. வரதட்சணை கேட்கும் உறவிலிருந்து விலகிச் செல்வது என்பது ஒரு தோல்வியுற்ற நிச்சயதார்த்தமோ அல்லது திருமணமோ அல்ல. அது ஒரு சுய மீட்புச் செயல்.


பெண்ணின் பெற்றோருக்கும் ஒரு தீவிரமான பொறுப்பு உள்ளது. முதலாவதாக, அவர்கள் வரதட்சணை கொடுக்கவே கூடாது. திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்கப்படும்போது, ​​அவர்களின் உள்ளுணர்வு, 'எப்படியாவது திருமணத்தைக் காப்பாற்று' என்பதிலிருந்து 'எப்படியாவது மகளைக் காப்பாற்று' என்பதற்கு மாற வேண்டும். பல இளம் பெண்கள் அனுசரித்துச் செல்லவோ, சமரசம் செய்துகொள்ளவோ ​​அல்லது குடும்ப கௌரவத்தைப் பற்றி சிந்திக்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், வன்முறை நிறைந்த வீட்டில் கௌரவம் இருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் இல்லத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்ற வேண்டுமே தவிர, நீதிமன்றமாக அல்ல.

வரதட்சணைக் கொடுமையில் ஈடுபடும் மாமியார், நாத்தனார் அல்லது பெண் உறவினர், மற்றொரு பெண்ணின் அடிமைத்தனத்திற்குக் காவல்காரராக ஆகிறார். ஆணாதிக்கம் என்பது ஆண் ஆதிக்கத்தால் மட்டுமல்ல, பெண்களின் உடந்தையாலும் நிலைத்திருக்கிறது. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த வலியானது, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கொடுமையாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.


இந்தியாவில் வரதட்சணையைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பு உள்ளது. 1961-ம் ஆண்டின் வரதட்சணைத் தடைச் சட்டம் (Dowry Prohibition Act), வரதட்சணை கொடுப்பதையும் வாங்குவதையும் தண்டிக்கிறது. பாரதிய நியாய சம்ஹிதையின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவு-80 ஆனது வரதட்சணைக் கொலைகளைக் கையாள்கிறது. அதேசமயம், பிரிவு-85 கொடுமை மற்றும் துன்புறுத்தலைக் கையாள்கிறது. இருப்பினும், முறையாகச் செயல்படுத்தப்படாத ஒரு சட்டம் என்பது சாவி இல்லாத பூட்டப்பட்ட கதவைப் போன்றது. மேலும், அதிக எண்ணிக்கையிலான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவதை, அந்த வழக்குகள் பொய்யானவை என்பதற்கான ஆதாரமாகக் கருதக்கூடாது. தாமதமான விசாரணைகள், விரோதமான சாட்சிகள், சமூக அழுத்தம், களங்கம் அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே செய்யப்படும் சமரசங்கள் ஆகியவற்றால் விடுதலைகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.


முன்னேறிச் செல்வதற்கான வழி, நான்கு 'பி'க்கள் கட்டமைப்பைச் (P’s framework) சார்ந்திருக்க வேண்டும். தடுப்பு (Prevention) என்பது மணப்பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை உருவாக்குவது மற்றும் கடுமையான அமலாக்கத்தின் மூலம் தடுப்பை வலுப்படுத்துவது ஆகும். பாதுகாப்பு (Protection) என்பது பாதுகாப்பான புகார் அளிக்கும் அமைப்புகள், உதவி எண்கள் மற்றும் உடனடிப் பதிலளிக்கும் காவல் துறை ஆகும். வழக்குத் தொடருதல் (Prosecution) என்பது கணவர், மாமியார்-மாமனார் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது விரைவான பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாகும். நெருக்கடி கால சேவைகளை வழங்குதல் (Provision of crisis response services) என்பது தங்குமிடங்கள், ஆலோசனை, சட்ட உதவி, நிதி உதவி மற்றும் மனநலப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதாகும்.


வரதட்சணை சட்டவிரோதமானது என்பதால் மட்டுமல்ல, அது மனசாட்சியற்றதும் நாகரிகமற்றதும் ஆகும் என்பதாலும் ஒழிக்கப்பட வேண்டும். அது பெண்களை வன்மையாகச் சிதைக்கிறது, ஆண்களைக் சிறுமைப்படுத்துகிறது, குடும்பத்தைச் சீரழிக்கிறது. மேலும், சமமான பங்களிப்பின் அடிப்படையில் அமைய வேண்டிய திருமணத்தை மோசமானதாக்குகிறது. எந்தவொரு சடங்கும் வற்புறுத்தலை ஏற்றுக்கொள்ளச் செய்யமுடியாது. எந்தவொரு குடும்ப கௌரவமும் மிரட்டிப் பணம் பறிப்பதை நியாயப்படுத்த முடியாது. ஒரு விலையுடன் தொடங்கும் திருமணம் புனிதமானதாகக் கருதப்பட முடியாது.


கட்டுரையாளர் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிப் பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் ஆவார்.

Original link:

Practice of dowry violates women, diminishes men. It has no place in Bharat.

Share:

இந்தியா-ஐக்கிய அரபு அமீரக உறவுகளில் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு அம்சங்கள் ஏன் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன? -முகமது முத்தாசிர் குவாமர்

ஐக்கிய அரபு அமீரகத்துடனான, வளர்ந்துவரும் கூட்டாண்மைக்கு இணையாக, சவூதி அரேபியா உள்ளிட்ட பிற பிராந்திய நாடுகளுடனான உறவுகளை இந்தியா எவ்வாறு கவனமாகச் சமநிலைப்படுத்தியுள்ளது? அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோதலுக்குப் பிறகு, மேற்கு ஆசியாவின் நிலைமை வளைகுடாப் பகுதியில் இந்தியாவின் எவ்வாறு உறவுகளுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது?.



சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையிலான உறவுகள் மேலும் ஒரு இராஜதந்திரரீதியில் புதிய பரிணாமத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மேற்கு ஆசியாவில் உருவாகிவரும் நிகழ்வுகளின் தாக்கத்தைச் சமாளிப்பதற்காக இரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்பு வழிமுறைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.


2026 மே 15 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது, ​​ஐரோப்பாவில் உள்ள மேலும் நான்கு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அப்போது, ​​இருதரப்பு நாட்டினரும் தங்களின் நிலையான மற்றும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவான உத்திசார் கூட்டாண்மையின் ஒரு முக்கியத் தூணாக அங்கீகரித்தனர்.


இருதரப்பு நாட்டின் உறவுகள் மேலும் ஒரு இராஜதந்திரரீதியில் புதிய பரிணாமத்தை அடைவதற்குப் பங்களித்த காரணிகள் யாவை? பிரதமரின் பயணத்தின் மற்ற முக்கிய கவனம் செலுத்திய பகுதிகள் யாவை? இருதரப்பு நாட்டின் உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் நெருக்கமாக இணைந்து பணியாற்றிய மற்ற முக்கியத் துறைகள் யாவை?


இந்தியா-ஐக்கிய அரபு அமீரக உறவுகள் எவ்வாறு இராஜதந்திரரீதியில் புதிய பரிணாமத்தைப் பெறுகின்றன?


பாரம்பரியமாக, பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் துறையில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக ஒத்துழைப்பானது, ஆயுதப் படைகளுக்கு இடையேயான இருதரப்பு நாடுகளின் பயிற்சிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. படிப்படியாக, ஆயுதப் படைகளுக்கு இடையேயான வழக்கமான இருதரப்புப் பயணங்கள், வலுவான கடல்சார் மற்றும் கடலோரப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் நெருங்கிய ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் அவை விரிவுபடுத்தப்பட்டன.



இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், உத்திசார், பாதுகாப்பு மற்றும் தற்காப்பு அம்சங்கள் இருதரப்பு உறவுகளில் அதிகரித்த நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த ஒத்துழைப்பை முன்னெடுத்த முக்கிய காரணிகளில் ஒன்று, 2020 செப்டம்பரில் கையெழுத்திடப்பட்ட ஆபிரகாம் உடன்படிக்கை (Abraham Accords). இது இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவது குறித்த விவாதத்தை அதிகரித்தது. இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள இந்தியா, மேற்கு ஆசியாவில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த உதவக்கூடிய ஒரு முக்கியமான சர்வதேச இணைப்பாகக் கருதப்பட்டது.


இதன் விளைவாக, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் பிற பிராந்திய நாடுகளை உள்ளடக்கிய பல முக்கிய முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. இதற்கு ஒரு உதாரணம், இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட I2U2 என்ற அமைப்பு ஆகும். இந்த அமைப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதோடு, ஒரு தொலைநோக்கு செயல்திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கிறது.


இதேபோல், செப்டம்பர் 2023-ல் தொடங்கப்பட்ட இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India, Middle East, Europe Economic Corridor (IMEC)), இந்தியா, அரேபிய வளைகுடா, மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் ஐரோப்பா ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தகம், வணிகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, வளைகுடா மற்றும் மேற்கு ஆசியாவின் இணைப்புத் திறனைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.


மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்கள் இந்தியாவின் வளைகுடா உத்தியை எவ்வாறு மறுவடிவமைக்கின்றன?


அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து காசா முனை, லெபனான், ஏமன் ஆகிய பகுதிகளில் நடந்த போர்கள், இஸ்ரேல்-ஈரான் மறைமுக மோதல் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் சம்பந்தப்பட்ட சமீபத்திய போர் ஆகியவற்றால் ஏற்பட்ட பிராந்திய சூழல், வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளுக்குப் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.


பிப்ரவரி 28, 2026 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு பிராந்திய நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரவும், அதன் அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரானின் பிராந்திய மறைமுகக் குழுக்களுக்கான ஆதரவை அகற்றவும் ஒரு விரைவான இராணுவ நடவடிக்கையாகவே இந்தப் போர் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.


இருப்பினும், ஈரானின் மீள்திறன் இந்த கருத்துக்கணிப்பைத் தவறென நிரூபித்தது. ஏனெனில், அந்த ஆட்சியானது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலைத் தாங்கி நின்றது மட்டுமல்லாமல், பிராந்திய நிலைத்தன்மைக்குக் கடுமையான இடையூறுகளையும் ஏற்படுத்தியது. இதில், கணிசமான உயிர் இழப்புகள் மற்றும் அதன் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டபோதிலும், தெஹ்ரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council(GCC)) நாடுகளைக் குறிவைத்து பதிலடி கொடுத்ததுடன், ஹோர்முஸ் நீரிணையையும் முற்றுகையிட்டது.


வளைகுடாவின் மாறிவரும் பாதுகாப்புச் சூழல்


வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளைக் குறிவைப்பதும், ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவதும், பிராந்திய பாதுகாப்பின்மைக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, தங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கு முக்கியமாகத் திகழும் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக, பாரம்பரியமாக வெளிப்புறப் பாதுகாப்பு உத்தரவாதங்களைச் சார்ந்திருக்கும் அரபு வளைகுடா நாடுகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை, பிராந்திய நாடுகளைத் தங்களின் வெளிப்புறப் பாதுகாப்பு கூட்டாண்மைகளைப் பன்முகப்படுத்தவும், அதேநேரத்தில் தங்களின் பாரம்பரிய கூட்டாணி நாடுகளுடன் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு உறவுகளை நாடவும் தூண்டியுள்ளது. இதில் முக்கிய பிராந்திய சக்திகள், குறிப்பாக சவூதி அரேபியா போன்ற நாடுகள், பிராந்தியப் பாதுகாப்பு நிலைமையை அதிக சந்தேகக் கண்ணுடன் பார்க்கத் தொடங்கியுள்ளன.


மிக முக்கியமாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்துவரும் மோதல், அதன் மறைமுகக் குழுக்களின் ஈடுபாடு, மற்ற பிராந்திய நாடுகளின் பாதுகாப்புக்கு எதிரான அவற்றின் போர்க்குணமிக்க நடத்தை மற்றும் அமைதி, நிலைத்தன்மை மீதான முழுமையான அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள், முக்கிய சர்வதேச அமைப்புகளுடனான தங்களின் பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கூட்டாண்மையின் எல்லையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.


2025 ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கத்தார் மீது ஈரான் மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளை ஈரான் குறிவைத்தது போன்ற சம்பவங்கள், வளைகுடா பிராந்தியத்தில் ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், முன்னர் பிராந்தியத்தின் வெளிப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பவராகக் கருதப்பட்ட அமெரிக்கா, இப்போது பாதுகாப்பை வழங்குபவராகக் கருதப்படாமல், பாதுகாப்பின்மைக்கான ஒரு மூலமாகவே அதிகளவில் பார்க்கப்படுகிறது.


இதன் விளைவாக, செப்டம்பர் 2025-ல், சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் உத்தி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Strategic Mutual Defence Agreement (SMDA)) கையெழுத்திட்டன. இதில், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்ற நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று கூறும் ஒரு பரஸ்பர பாதுகாப்புப் பிரிவு சேர்க்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், இரு நாடுகளும் எகிப்து மற்றும் துருக்கியை ஒரு பரந்த பிராந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைக்க முயல்வதன் மூலம், இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தப் பணியாற்றி வருகின்றன. இருப்பினும், கடந்த காலத்தில் மேற்கு ஆசியாவில் இதுபோன்ற பல நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அரிதாகவே வெற்றி பெற்றுள்ளன.




ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் விரிவடைந்து வரும் இராஜதந்திர கூட்டாண்மை நாடுகள் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் உத்திசார் பரிமாணங்களில் அதிகரித்து வரும் இணக்கம், மேலும் முறையான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2026 ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் புதுதில்லிக்கு வருகை தந்தபோது, ​​இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாதுகாப்பு கூட்டாண்மை குறித்த ஒரு நோக்க கடிதத்தில் (Letter of Intent (LoI)) கையெழுத்திட்டன. மே மாதம் பிரதமர் மோடியின் வருகையின்போது, ​​இந்திய-ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு தரப்பினரும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒரு இராஜதந்திர கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


பாதுகாப்பு மட்டுமின்றி, எரிசக்திப் பாதுகாப்பும் இப்பயணத்தின் மற்றொரு முக்கியக் கவனமாக இருந்தது. கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) விநியோகம் ஆகியவற்றில், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பில் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு முக்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது.


இந்திய நிறுவனங்கள், இந்தியாவிற்கு ஆண்டுக்கு 4.5 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) வழங்குவதற்காக, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் (Abu Dhabi National Oil Company (ADNOC)) நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. மேலும், இந்தியாவின் இராஜதந்திரரீதியில் எண்ணெய் இருப்புகளுக்கு ஐக்கிய அரபு அமீரகமே மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. பிரதமர் மோடியின் பயணத்தின்போது, ​​ஒரு விரிவான எரிசக்தி கூட்டமைப்புக்கான புதிய முயற்சிகளை ஊக்குவிக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.


மேலும், இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் வர்த்தகம், வணிகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளின் அடித்தளமாகத் திகழும், மக்களுக்கிடையிலான வலுவான தொடர்புகளைக் கட்டமைப்பதிலும் இவ்விரு நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடுகளில் ஒன்றாகவும், இந்தியாவிற்கான முதல் 10 அந்நிய நேரடி முதலீட்டு (foreign direct investment (FDI)) ஆதாரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.


இந்தியா-ஐக்கிய அரபு அமீரக உறவுகளின் பல தூண்கள்


மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய வெளிநாட்டவர்களே மிகப்பெரிய சமூக குழுவாக உள்ளனர். இவர்கள் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும், தொழில்முனைவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள ஒரு துடிப்பான, தொழில்முறை சமூகத்தை உருவாக்குகின்றனர். இந்திய வணிகங்கள் வர்த்தகம், சில்லறை விற்பனை, மனை வணிகம், கட்டுமானம், பொறியியல், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், விருந்தோம்பல், கல்வி, சுகாதாரம், விநியோகச் சங்கிலி, தகவல் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளன.


மக்களுக்கிடையிலான வலுவான தகவல் தொடர்புகள், வர்த்தகம், வணிகம், முதலீடுகள் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு ஆகியவற்றுடன், உணவுப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பும் நிலவுகிறது. ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உணவு மற்றும் விவசாயப் பொருட்களை வழங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியப் பொருட்களை பரந்த வளைகுடா மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியத்திற்கு மறு ஏற்றுமதி செய்யும் மையமாகவும் செயல்படுகிறது.


இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான பல உயர்மட்டப் பயணங்கள், அவற்றிற்கிடையேயான வளர்ந்து வரும் நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றன. பிரதமர் மோடியின் சமீபத்திய பயணம், ஆகஸ்ட் 2015-ல் அவர் மேற்கொண்ட முதல் பயணத்திற்குப் பிறகு, வளைகுடா நாட்டிற்கு அவர் மேற்கொண்ட 8-வது பயணமாகும். மேலும், மே 2022-ல் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து, அதிபர் முகமது பின் சயத் 3 முறை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் மட்டும், அவர் 5 முறை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கு ஆசியாவில் இந்தியாவின் சமநிலைப்படுத்தும் அணுகுமுறை


இருதரப்பு உறவுகள், அமைதி, செழிப்பு, நிலைத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் பொதுவான நலன்கள் மற்றும் உலகக் கண்ணோட்டங்களில் வேரூன்றியுள்ளன. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்துடனான பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட வளர்ந்துவரும் கூட்டாண்மை இருந்தபோதிலும், புதுதில்லி சவூதி அரேபியா உள்ளிட்ட பிற பிராந்திய நாடுகளுடனான உறவுகளைச் சமநிலைப்படுத்துவதில் கவனமாக இருந்து வருகிறது.


சவூதி அரேபியா பாகிஸ்தான் மற்றும் ஈரானுடன் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாரசீக வளைகுடாவில் ஈரானின் போர்க்குணம் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளுடனான வணிக உறவுகளைப் பாதித்த போதிலும், இந்தியா தனது அணுகுமுறையில் சீராக இருந்து வருகிறது. வளைகுடா மற்றும் பரந்த மேற்கு ஆசியாவில் இந்தியாவின் பன்முக அரசியல், இராஜதந்திர, உத்திசார்ந்த, புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கு இது முக்கியமானது.


Original link:

Why defence, security dimensions become increasingly central to India-UAE ties?.


Share:

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத் தொழில்நுட்பம் (fuel cell technology) எவ்வாறு வேலை செய்கிறது? -குஷ்பூ குமாரி


ரயில்வே வாரியத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்தியாவின் ஹைட்ரஜன் ரயில் அறிமுகமாக உள்ளது. இதற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பம் என்ன?


  தற்போதைய செய்தி :


இந்தியா, ஜெர்மனி, ஸ்வீடன், ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தனது சொந்த ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட கடிதத்தில், ரயில்வே வாரியம்  நாட்டின் முதல் “ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் ரயிலை அறிமுகப்படுத்த (hydrogen-powered train set) அனுமதி வழங்கியுள்ளது. ‘ஹைட்ரெயில்’ (hydrail) அல்லது ‘H-ரயில்கள்’ என அழைக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்கள், மின்மயமாக்கப்படாத ரயில் பாதைகளில் டீசல் என்ஜின்களுக்கு ஒரு மாற்றாக கருதப்படுகின்றன.


முக்கிய அம்சங்கள்:


1. உலகின் மிகப்பெரிய ரயில் வலை அமைப்புகள் ஒன்றை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில் தினமும் 25,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில், ஹரியானா மாநிலத்திலுள்ள ஜிந்த் மற்றும் சோனிபத் நகரங்களுக்கு இடையே இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், சென்னையைத் தளமாகக் கொண்ட ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையால் (Integral Coach Factory (ICF)) உருவாக்கப்பட்டுள்ளது. 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ஹைட்ரஜன் ரயில் , மணிக்கு அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும்.


2. 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கு, ரயில்வேயில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது ஒரு  முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்வே, “பாரம்பரியத்திற்கான ஹைட்ரஜன்” (Hydrogen for Heritage) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய மற்றும் மலைப்பாதைகளில் 35 ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.


3. ஹைட்ரஜன் ரயில்கள் என்பது, மேலே செல்லும் மின்கம்பிகள் மூலம் மின்சாரம் பெறும் பாரம்பரிய மின்சார ரயில்களிலிருந்து வேறுபட்டு, தானாகவே மின்சார உற்பத்தி அமைப்பைக் கொண்ட மின் ரயில்களாகும். அவை  ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத் தொழில்நுட்பத்தை (Hydrogen Fuel Cell (HFC)) பயன்படுத்துகின்றன. இது அழுத்தம் அதிகமாக உள்ள ஹைட்ரஜன் மற்றும் வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் ஆகியவற்றுக்கு இடையேயான மின்வேதியியல் (electrochemical) வினை மூலம் தேவையான ஆற்றலை உருவாக்குகிறது. மேலும், இது பயன்படுத்தப்படும் இடத்தில் பூஜ்ஜிய உமிழ்வு (Zero-emission) அமைப்பாக செயல்படுகிறது.


4. எரிபொருள் கலத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ரயிலின் இழுவை (traction) அமைப்புகளுக்கு (Traction systems) நேரடியாக சக்தி அளிக்கிறது. அதேநேரத்தில், ரயிலில் உள்ள மின்கலன்கள் அதிகப்படியான மின்சாரத்தை சேமித்து வைத்து, வேக அதிகரிப்பு மற்றும் மீளுருவாக்க பிரேக்கிங் (regenerative braking) நேரங்களில் கூடுதல் மின்சாரத்தை வழங்குகின்றன. ஹைட்ரஜன் ரயில்கள் மீளுருவாக்க பிரேக்கிங் (regenerative braking) தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம், பிரேக் போடும்போது உருவாகும் இயக்க ஆற்றலை (kinetic energy) மின்சாரமாக மாற்றி, ரயிலில் உள்ள மின்கலன்களை மீண்டும் ரீசார்ஜ் செய்கிறது.


ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத் (Hydrogen Fuel Cell technology) தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?


5. ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத் தொழில்நுட்பங்கள், ஹைட்ரஜனில் சேமிக்கப்பட்டுள்ள வேதியியல் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவதன் மூலம், தூய்மையான மற்றும் உயர்தர மின்சாரத்தை உருவாக்குகின்றன. ஒரு ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத் தொழில்நுட்பத்தின் முக்கியக் கூறுகள் மெல்லிய சவ்வு மின்முனை அமைப்பு (Membrane Electrode Assembly (MEA)) மற்றும் இருமுனைத் தகடுகள் ஆகும்.


6. மெல்லிய சவ்வு மின்முனை அமைப்பு (Membrane Electrode Assembly (MEA)) என்பது மின்வேதியியல் முறை  நடைபெறும் இடமாகும். இது, இரண்டு வினையூக்கி அடுக்குகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள ஒரு புரோட்டான் பரிமாற்ற சவ்வை (Proton Exchange Membrane (PEM)) கொண்டுள்ளது. அவை ஆனோடு (எரிபொருள் கலத்திற்குள் ஹைட்ரஜன் வாயு நுழையும் இடம்) மற்றும் கேத்தோடு (காற்றிலிருந்து ஆக்ஸிஜன் நுழையும் இடம்) ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அவற்றைச் சுற்றி வாயு அடுக்குகள் பரவலாக அமைந்துள்ளன. இவை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவை பரவ உதவி செய்கின்றன. மேலும், எதிர்வினை மூலம் உருவாகும் துணைப்பொருட்களான நீர் மற்றும் வெப்பத்தை வெளியேற்றவும் உதவுகின்றன.



கூறு

இடம்/செயல்பாடு

மெல்லிய சவ்வு மின்முனை அமைப்பு (Membrane Electrode Assembly (MEA))

மின்னணுக்களைப் பிரிப்பதன் மூலம் மின்சாரத்தை உருவாக்கத் தேவையான வேதியியல் வினையை உருவாக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறை இதுவாகும். இவை ஒரு புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane (PEM)), வாயுப் பரவல் அடுக்குகள் மற்றும் வினைவேகமாற்றி அடுக்குகளை கொண்டுள்ளன.

புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane (PEM))

ஆனோடுக்கும் கேத்தோடுக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ள, சாதாரண சமையலறை நெகிழி உறை போன்ற தோற்றமுடைய மையச் சவ்வு இதுவாகும். இது நேர்மின் அயனிகளை மட்டுமே கடத்துகிறது மற்றும் எலக்ட்ரான்களைத் தடுக்கிறது.

ஆனோடு வினையூக்கி

ஹைட்ரஜன் நுழைந்து புரோட்டான்கள்/எலக்ட்ரான்களாகப் பிரியும் இடம் இதுவாகும்.

எதிர்மின்வாய் வினையூக்கி

காற்றில் உள்ள ஆக்ஸிஜன் புரோட்டான்கள்/எலக்ட்ரான்களுடன் இணையும் இடத்தில் இது உள்ளது.

வாயு பரவல் அடுக்குகள்

வினையூக்கி அடுக்குகளைச் சூழ்ந்து, வாயுக்களைப் பரப்பி, நீர் மற்றும் வெப்பத்தை அகற்றலாம்.

இருமுனைத் தகடுகள்

வெளிப்புறப் பக்கங்களில், வாயு விநியோகம், அடுக்கில் உள்ள மின்கலன்களுக்கு இடையேயான எலக்ட்ரான் கடத்தல் மற்றும் வெப்ப மேலாண்மை ஆகியவற்றை எளிதாக்கலாம்.


7. அமெரிக்க எரிசக்தித் துறையின் கூற்றுப்படி, சாதாரண சமையலறையில் பயன்படுத்தப்படும் நெகிழி உறையைப் போன்று தோற்றமளிக்கும், சிறப்பாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு பொருளான PEM, நேர்மின் அயனிகளை மட்டுமே கடத்தி, எலக்ட்ரான்களைத் தடுக்கிறது. எரிபொருள் மின்கலத் தொழில்நுட்பத்திற்கு PEM தான் முக்கியமானது. அது ஆனோடுக்கும் கேத்தோடுக்கும் இடையில் தேவையான அயனிகளை மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.


8. முதலில், ஹைட்ரஜன் எரிபொருள் (H2) ஆனோடு வழியாகச் செலுத்தப்பட்டு, ஒரு வினையூக்கியைப் பயன்படுத்தி ஆக்சிஜனேற்றம் மூலம் புரோட்டான்கள் (H+) மற்றும் எலக்ட்ரான்களாக (e-) பிரிக்கப்படுகிறது. பின்னர் PEM, புரோட்டான்களை மட்டுமே கேத்தோடிற்குச் செல்ல அனுமதிக்கிறது. எலக்ட்ரான்களைத் தடுக்கிறது.

இந்தியாவிற்கு ஹைட்ரஜன் ரயில்கள் (Hydrogen Trains) முக்கியத்துவம் வாய்ந்தவை?

  • அவை, 2070-க்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைதல்,

  • டீசலைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல்,

  • ரயில்வேயில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவளித்தல்,

  • தூய ஆற்றலுக்கு மாறுவதை ஊக்குவித்தல் போன்றவையாகும்.



9. எலக்ட்ரான்கள் வெளிப்புற சுற்று வழியாகப் பாய்ந்து மின்சாரத்தை உருவாக்குகின்றன. கேத்தோடில் (cathode), காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வினையூக்கியுடன் இணைந்து அதன் அளவு குறைகிறது. பின்னர், சவ்வு வழியாக வந்த புரோட்டான்களும் வெளிப்புற சுற்றிலிருந்து வரும் எலக்ட்ரான்களும் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து தண்ணீரை உருவாக்குகின்றன.


10. இருமுனைத் தகடுகள் வாயு (bipolar plates facilitate) விநியோகம், அடுக்கில் உள்ள மின்கலங்களுக்கு இடையேயான எலக்ட்ரான் கடத்தல் மற்றும் வெப்ப மேலாண்மை போன்றவற்றை எளிதாக்குகின்றன. இந்தத் தொடர்ச்சியான மின்வேதியியல் செயல்முறையானது, ஹைட்ரஜனின் வேதியியல் ஆற்றலை நேரடியாக மின் ஆற்றலாக மாற்றுகிறது. இதில் நீராவி மட்டுமே துணை விளைபொருளாக உருவாகிறது.


11. எரிபொருள் மற்றும் ஆக்ஸிகரணிகள் தொடர்ந்து வழங்கப்படும் வரை இந்தச் செயல்முறை ஆற்றலை உருவாக்கும். மின்வேதியியல் (electrochemical) முறையின் மூலம் இவை இயங்குவதால், ஹைட்ரஜன் எரிபொருள் கலன்களில் நகரும் பாகங்கள் எதுவும் இல்லை. இதுவே இவற்றின் செயல்பாட்டை அமைதியாகவும், அதிக நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறது

தேசிய ஹைட்ரஜன் ஆற்றல் இயக்கம்


1. 2047-ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் மற்றும் 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் என்ற இந்தியாவின் இலக்குகளில் பசுமை ஹைட்ரஜனின்  முக்கியத்துவதை அங்கீகரித்து, தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் 2023-ஆம் ஆண்டில் ஒன்றிய  அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.



2. இந்தத் திட்டத்தின் நோக்கம், 2030-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 5 மில்லியன் மெட்ரிக் டன் ((Million Metric Tonne)) பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திறனை உருவாக்குவதும், ஏற்றுமதி சந்தைகளின் வளர்ச்சியுடன் இதனை ஆண்டுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதும் ஆகும்.


3. புதைபடிவ எரிபொருட்கள் மற்றும் புதைபடிவ எரிபொருள் சார்ந்த மூலப்பொருட்களுக்குப் பதிலாக, பசுமை ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தத் திட்டம் ஆதரிக்கிறது. இதில், அம்மோனியா உற்பத்தி மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பில் புதைபடிவ எரிபொருள் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனுக்குப் பதிலாக பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துதல், பசுமை ஹைட்ரஜனைக் கொண்டு எஃகு உற்பத்தி செய்தல் மற்றும் பசுமை ஹைட்ரஜனிலிருந்து பெறப்படும் செயற்கை எரிபொருட்களின் (பசுமை அம்மோனியா, பசுமை மெத்தனால் போன்றவை உட்பட) பயன்பாடு போன்றவை இடம் பெற்றிருக்கும்.


ஹைட்ரஜனின் வகைகள்

சாம்பல் ஹைட்ரஜன்

இது இந்தியாவின் உற்பத்தியில் அதிக பங்கு வகிக்கிறது. இது “நீராவி மீத்தேன் சீர்திருத்த” (Steam Methane Reforming (SMR)) முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் இயற்கை எரிவாயு (மீத்தேன்) மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை புதைபடிவ எரிபொருட்களை சார்ந்தது மற்றும் கார்பன் டையாக்சைடை வளிமண்டலத்தில் வெளியிடுகிறது.

நீல ஹைட்ரஜன்


நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் போது உருவாகும் கார்பனை   பூமிக்கு அடியில் பாதுகாப்பாக சேமிப்பதே கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (Carbon Capture and Storage (CCS)) தொழில்நுட்பமாகும். காற்றில் உள்ள கார்பனை நேரடியாக உறிஞ்சி எடுக்கும் கார்பன் -டை-ஆக்சைடு அகற்றுதல் (carbon dioxide removal (CDR)) முறையில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இந்த முறையின் போது கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு போன்ற துணை விளைபொருட்கள்   சேமிக்கப்படுகின்றன.

பச்சை ஹைட்ரஜன்

இதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் இயங்கும் மின்னாற்பகுப்பிகளை (Electrolysers) கொண்டு, நீரின் மின்னாற்பகுப்பு (Water Electrolysis) முறை மூலம் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரித்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஹைட்ரஜன் உற்பத்திக்கான, நடைமுறையில் உமிழ்வற்ற ஒரு வழிமுறையாகக் (emission-free pathway) கருதப்படுகிறது.


Original link:

Share: