இந்தியா ஏன் 112-ஐ அனைவருக்குமான அவசரக்கால எண்ணாக தேர்ந்தெடுத்தது? -தீரஜ் மிஸ்ரா

எந்த உதவி எண்ணை அழைப்பது? அவசரக்கால சூழலை எதிர்கொண்ட  பின் இந்தியர்கள் எதிர்கொள்ளும் முதல் சிக்கலாக இது இருந்து வருகிறது. இந்தியாவில் பிளவுப்பட்டிருக்கும் பல்வேறு அவசர உதவி எண்களை ஒருங்கிணைப்பதற்காக, அரசு '112' என்ற அனைவருக்குமான எண்ணை அறிமுகப்படுத்தியது. அந்த எண் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் இங்கே உள்ளன.


சாலை விபத்து ஏற்படும்போது எந்த உதவி எண்ணை அழைப்பீர்கள்? அல்லது தீ விபத்து ஏற்பட்டால்? அல்லது மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டால்?


அவசரநிலை ஒன்றுக்குப் பிறகு இந்தியர்கள் எதிர்கொள்ளும் முதல் சிக்கலாக இது இருந்து வருகிறது. பல்வேறு உதவி எண் எண்கள் குழப்பத்தை ஏற்படுத்தி, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தாமதத்தை ஏற்பத்துகின்றன.


இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஒன்றிய அரசு 2019-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 911-ஐப் போலவே, நாடு முழுவதும் அவசரகால பதிலளிப்பு அமைப்பு (Nationwide Emergency Response System (NERS)) எண் 112-ஐ அறிமுகப்படுத்தியது. 100 (காவல்துறை), 101 (தீயணைப்பு), 102 (அவசர மருத்துவ சேவைகள்), 108 (ஆம்புலன்ஸ்), 1033 (நெடுஞ்சாலை), 181 (பெண்கள்), 1098 (குழந்தை) மற்றும் 1091 (துன்பத்தில் உள்ள பெண்) போன்ற அனைத்து அவசரகால எண்களையும் ஒரே குறியீட்டின்கீழ் கொண்டு வருவதே இதன் நோக்கமாக இருந்தது.


இருப்பினும், 112 சேவை தொடங்கப்பட்டு 7  ஆண்டுகள் ஆன பிறகும், டெல்லி, கேரளா, குஜராத், ஹரியானா மற்றும் லட்சத்தீவு ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அனைத்து அவசர உதவி எண்களையும் 112 என்ற நாடு முழுவதும் அவசரகால பதிலளிப்பு அமைப்பு சேவையில் ஒருங்கிணைத்துள்ளன என்பதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மூலம் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' கண்டறிந்துள்ளது.


உத்தரப் பிரதேசம் அனைத்து அவசர உதவி எண்களையும் 112 என்ற ஒரே அவசர உதவி எண்ணின்கீழ் ஒருங்கிணைக்கும் பணியை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. தற்போது 102 அவசர மருத்துவ சேவை மட்டும் 112-ல் இணைக்கப்பட வேண்டியுள்ளது.


மே 26 அன்று, அனைத்து அவசர எண்களையும் 112 உதவி எண்ணுடன் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகள்ரீதியாகவும் ஒருங்கிணைக்கும் பணியை நிறைவு செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்சநீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம் வழங்கியது.


இவை அனைத்திலும் ஒரு கேள்வி எழுகிறது. இந்தியாவின் பொது உதவி எண் குறியீடு ஏன் 112-ஆக உள்ளது. வேறு எந்த எண்ணும் இல்லையா?


112 ஏன் இந்தியாவின் அனைவருக்குமான அவசர எண்ணாக உள்ளது?


இது போன்ற எண்ணை இந்தியா மட்டும் பின்பற்றவில்லை. 112 என்ற உதவி எண் ஐரோப்பிய உறுப்பு நாடுகளாலும் மற்றும் பல நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது.


ஐரோப்பிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு நிர்வாகங்களின் மாநாடு (Conference of Postal and Telecommunications Administrations (CEPT)) 1976-ஆம் ஆண்டிலேயே 112-ஐ ஒரு பொதுவான அவசரகால எண்ணாக முதலில் பரிந்துரை செய்தது. மேலும், ஐரோப்பா  இரண்டு நடைமுறைக் காரணங்களுக்காக அவ்வாறு செய்தது.


முதலாவதாக, அந்தக்காலகட்டதில் தொலைபேசிகளில் சுழலும் எண்வட்டைச்சுழற்று (rotary dials) இருந்தன.  அவற்றில் ‘112’ என்ற எண்ணை சுழற்றுவதற்கு  குறைந்த நேரமே தேவைப்பட்டது. இரண்டாவதாக, ‘3’ என்ற எண்ணை சுழற்றினால் சுழற்சிநிலை முடிவடைந்து விடும். எனவே, தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் ‘112’ என்ற எண்ணை சுழற்ற முடிந்தது என்று உத்தரப் பிரதேச அரசின் 2019-ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று கூறுகிறது.


தவறுதலாக அழைப்பு விடுக்கப்படுவதைத் தவிர்க்க, 111 அல்லது 999 போன்ற அடிக்கடி வரும் இலக்கங்களுக்குப் பதிலாக, வெவ்வேறு இலக்கங்களை ஐரோப்பிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு நிர்வாகங்களின் மாநாடு தேர்வு செய்தது.


தற்போதைய நவீன தொடுதிரைகளிலும், 108 அல்லது 102 போன்ற எண்களை விட 112 என்ற எண்ணை டயல் செய்வது எளிதாக இருக்கிறது.


இந்தியா ஏன் அனைவருக்குமான ஒரு  உதவி எண்ணை வழங்க முடிவு செய்தது?


இந்தியாவில், 2012-ஆம் ஆண்டு டெல்லி பேருந்து கூட்டுப் பாலியல் கொடுமை வழக்கு தொடர்பான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 112 அவசரகால பதில் அமைப்பு (Emergency Response System (ERSS)) தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி லீலா சேத் மற்றும் இந்தியாவின் முன்னாள் பொது வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் ஆகியோரையும் உள்ளடக்கிய நீதிபதி ஜே. எஸ். வர்மா குழு, அவசரகால அழைப்புகளுக்குப் பதிலளித்து அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஒரு அவசரகால பதில் பிரிவை அனுப்பும் திறனைக் கொண்ட அனைவருக்குமான ஒரு அவசரகால பதில் அமைப்பை அமைக்குமாறு பரிந்துரை செய்தது.


அதனைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறை 112 என்ற அவசர எண்ணை ஒதுக்கியதுடன், அனைத்து விதமான அவசரநிலைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு வழங்கும் வகையில், உள்துறை அமைச்சகம் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று நிர்பயா நிதியின் மூலம் இதனை இந்தியா முழுவதும்  அறிமுகப்படுத்தியது.


உச்சநீதிமன்றத்திடம் அளித்த பதில்களில், 16 மாநிலங்கள் பல உதவி எண்களைப் பொதுவான குறியீட்டுடன் (common code) பகுதியளவில் ஒருங்கிணைத்துள்ளதாகத் தெரிவித்தன. 10 மாநிலங்கள் எந்தவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மூன்று மாநிலங்களின் பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.


112 என்ற எண் எவ்வாறு உதவும்?


112 என்பது ஒரு அனைவருக்குமான அவசரக்கால எண்ணாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மாவட்டம் அல்லது மாநில அளவில் ஒரே கட்டுப்பாட்டு மையம் (Centralised Command Centre) மூலம் கண்காணித்து நிர்வகிக்க உதவுகிறது. உதாரணமாக, உத்தரப் பிரதேசம் லக்னோவில் ஒரு கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது. கட்டுப்பாட்டு மையத்திலிருந்து மாநிலம் முழுவதும் வரும் அவசரக்கால அழைப்புகள் கையாளப்படுகின்றன.


"UP-112 என்ற சேவை 2017-ல் தொடங்கப்பட்டது. பதற்றமான பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 6,278 காவல் துறை வாகனங்கள் உள்ளதாகவும், தினமும் 30,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெறுகிறோம். மேலும், 'பாதுகாப்பான நகரம் லக்னோ', 'லக்னோ ஸ்மார்ட் சிட்டி', 'UPSRTC மொபைல் செயலி' மற்றும் 'குழந்தைகள் உதவி எண்' போன்ற 25 சேவைகளை ஒருங்கிணைத்துள்ளோம். மேலும், சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் 'PM-Rahat' சேவையை ஒருங்கிணைத்துள்ளோம். இதன்மூலம், கட்டணமில்லா சிகிச்சை பெறக்கூடிய அருகிலுள்ள மருத்துவமனை குறித்த விவரங்களை நாங்கள் வழங்குகிறோம். ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு, வளங்களைச் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது என்று UP-112-ன் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.


அந்த அதிகாரி கூறியதாவது: "எங்களுக்கு அழைப்பு வரும்போது, ​​தீ விபத்து, அவசரஊர்தி அல்லது காவல் உதவி போன்ற அவசரத் தேவைக்கேற்ப அந்த அமைப்பு ஒரு நிகழ்வு அல்லது கோரிக்கைப் பதிவை உருவாக்குவதுடன், அருகிலுள்ள காவல் சுற்றுக்காவல் வாகனத்தையும் உடனடியாகச் செயல்படத் தூண்டுகிறது”.             


Original Link: Why India adopted 112 as its universal emergency number.

Share:

மதிய உணவுத் திட்ட சர்ச்சை : வங்காளம் முட்டைகளைத் தவிர்க்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஊட்டமளிக்க தமிழ்நாடு மேற்கொண்ட நூற்றாண்டுகால முயற்சிகளை நினைவுகூர்தல் -அனகா ஜெயகுமார்

முட்டைகளைத் தவிர்ப்பதற்கான மேற்குவங்க அரசு எடுத்துள்ள முடிவு, கல்வி, ஊட்டச்சத்து மற்றும் குழந்தை நலன் குறித்த மாறிவரும் கருத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பள்ளி உணவுத் திட்டக் கொள்கையில் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்நாட்டின்மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


பள்ளிகளில் குழந்தைகளுக்கு எத்தகைய உணவை வழங்க வேண்டும் என்பது குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ள நிலையில், மதிய உணவில் இருந்து முட்டைகளை நீக்கப்போவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.


அரசு சைவ உணவுக் கொள்கையைத் திணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இருப்பினும், மாற்றியமைக்கப்பட்ட இத்திட்டத்திற்காக 'இஸ்கான்' (ISKCON) அமைப்போடு இணைந்து செயல்படும் தனது முடிவை ஆளும் பாஜக நியாயப்படுத்தியுள்ளது. இதனை "ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்தம்" என்று அது விவரித்துள்ளது.


இந்த முடிவு, தமிழ்நாட்டுடன் ஒப்பீடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது, ​​தமிழ்நாடு இந்தியாவில் மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதுடன், பல ஆண்டுகளாகத் தனது திட்டத்தின்கீழ் முட்டைகளையும் வழங்கி வருகிறது.


இருப்பினும், இந்த ஒப்பீடு முட்டைகளைத் தாண்டி விரிவானது. குழந்தைகளுக்கு என்ன உணவளிக்க வேண்டும்?, ஏன் உணவளிக்க வேண்டும்? என்பதை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து மறுபரிசீலனை செய்ததன் விளைவாக, தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டம் கடந்த நூற்றாண்டில் சீராகப் பரிணமித்துள்ளது.


குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைத்தல்...


மெட்ராஸ் மாநில முதலமைச்சராக இருந்த கே. காமராஜ், 1956-ல் பள்ளி உணவுத் திட்டத்திற்கான யோசனையைக் கொண்டு வந்ததாகப் பெரும்பாலும் பாராட்டப்படுகிறார். ஆனால், இவர்தான் இத்திட்டத்தைத் தொடங்கிய முதல் நபர் அல்ல. சுதந்திரத்திற்கு முந்தைய மெட்ராஸ் மாகாணத்தில், குழந்தைகளைப் பள்ளிகளுக்கு வரவழைப்பதற்காகப் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் காமராஜ் இத்திட்டத்தை உருவாக்கினார்.


கட்டாயத் தொடக்கக் கல்வியை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 1920-ல் மெட்ராஸ் மாகாணத்தில் பொது நிதியுதவியுடன்கூடிய முதல் பள்ளி மதிய உணவுத் திட்டம் பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


வறுமை, பசி மற்றும் குழந்தைகளின் வருமானத்தையே குடும்பங்கள் சார்ந்திருக்கும் நிலை ஆகியவை பல குழந்தைகள் பள்ளிக்குத் தவறாமல் செல்வதைத் தடுத்தன என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர். மேலும், கட்டாயக் கல்வியை வெறும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே அடைய முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர் என நவீன தெற்காசிய வரலாற்றாசிரியரான கேட்ரியோனா எல்லிஸ் எழுதிய 2023-ம் ஆண்டு நூல் ஒன்று குறிப்பிடுகிறது.




இந்தப் பின்னணியில், நீதிக் கட்சி தலைமையிலான மெட்ராஸ் மாநகராட்சி, குழந்தைகளை வகுப்பறைகளுக்கு ஈர்க்கவும் தக்கவைக்கவும் ஒரு ஊக்கத்தொகையாகப் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்று, 'குழந்தைப் பருவத்தைக் கற்பனை செய்தல், குழந்தைகளை மேம்படுத்துதல்: பிற்கால காலனித்துவ தென்னிந்தியாவில் ஒரு 'அக்கறையுள்ள' அரசின் தோற்றம்' (Imagining Childhood, Improving Children: The Emergence of an ‘Avuncular’ State in Late Colonial South India) என்ற தலைப்பிலான புத்தகம் கூறுகிறது.


பெரும்பாலான தகவல்களின்படி, கட்சித் தலைவரும் மெட்ராஸ் மாநகராட்சி மன்றத்தின் தலைவருமான பி. தியாகராய செட்டி, மாநிலத்தின் ஏழைக் குழந்தைகள் பயனடையும் வகையில் மதிய உணவுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப் பரிந்துரைத்தார். எல்லிஸ் மற்றும் பிற ஆதாரங்களின்படி, அவரது வேண்டுகோளின் பேரில், மெட்ராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சரான தலைவர் ஏ. சுப்பராயலு ரெட்டியார், 1920-ல் மெட்ராஸ் நகரின் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள காக்ரேன் பேசின் மாநகராட்சிப் பள்ளியில் அத்தகைய திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


இந்தத் திட்டம், பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பள்ளியின் 165 மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்றும், அதேநேரத்தில் பெற்றோரைத் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்க ஊக்குவிக்கும் என்றும் செட்டி வாதிட்டார். மாணவர்கள் வேலைக்குச் செல்லாமல் பள்ளியில் தங்கியிருக்கும்போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்ய இந்த உணவுகள் உதவுவதாகவும், பள்ளிக்கு வராததற்காகத் தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதைவிட இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.


ஒரு குழந்தைக்கான தினசரி உணவுச் செலவு ஓர் அணா (one anna) என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


'குழந்தைப் பருவத்தைக் கற்பனை செய்தல், குழந்தைகளை மேம்படுத்துதல்' (Imagining Childhood, Improving Children) என்ற நூலில், இத்திட்டம் விரைவாகத் தனது மதிப்பை நிரூபித்ததாக எல்லிஸ் குறிப்பிடுகிறார். 1926-ல், பிற்காலத்தில் இந்தியாவின் முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக ஆன சிங்காரவேலு செட்டி, உணவு வழங்கும் பள்ளிகளில் சுமார் 90% வருகைப்பதிவு இருந்ததால், இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டார்.


1927-ல் இந்தத் திட்டம் சிறிது காலம் இடைநிறுத்தப்பட்டபோது, ​​வருகை 50% குறைந்ததாகக் கூறப்படுகிறது என்பதையும் எல்லிஸ் குறிப்பிடுகிறார். நிதி ஒதுக்கீட்டுக் குறைப்புகளை எதிர்கொண்டபோதும், கவுன்சிலர்கள் குழந்தைகளுக்கான உணவை, “அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கான ஒரு ஊக்கம்” என்றும், “கல்வியை மேம்படுத்துவதே மாநகராட்சியின் முதன்மையான கடமையாகும்” என்றும் கூறி ஆதரித்துப் பேசினர்.


அந்தப் பத்தாண்டின் இறுதியில், இத்திட்டம் குறித்த விவாதங்கள் மாணவர் வருகையை மேம்படுத்துவதையும் தாண்டிச் சென்றன. 1930-ல், மெட்ராஸ் மாநகராட்சி அறிவித்தாவது, “ஒரு குழந்தையின் உடலுக்கு உணவளிக்க முடியாவிட்டால், அதன் மூளைக்கு உணவளிக்க முடியாது.” ஊட்டச்சத்து, சுகாதாரம், மருத்துவப் பரிசோதனை மற்றும் குழந்தை வளர்ச்சி ஆகியவற்றை இணைக்கும் ஒரு பரந்த அணுகுமுறையின் முக்கிய அங்கமாகப் பள்ளி உணவுகள் அதிகளவில் பார்க்கப்பட்டன.


…மேலும் அவர்களைத் தொடர்ந்து பள்ளியில் தக்கவைத்தல்


எல்லிஸின் (Ellis) கூற்றுப்படி, 1930-களில் மெட்ராஸில் உள்ள கல்வி அதிகாரிகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அவர்களின் கல்வியின் மையமாகக் கருதத் தொடங்கியிருந்தனர். மாநகராட்சி விவாதங்களில், பள்ளி உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பு, சமச்சீர் உணவை உறுதி செய்வதன் அவசியம் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவை அடிக்கடி விவாதிக்கப்பட்டன. வழக்கமான உட்கொள்ளப்படும் சாதம் மற்றும் தயிர் உணவை விட ரொட்டியும் பாலும் சிறந்தவை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் வாதிட்டனர். அதே நேரத்தில், உணவுகள் உள்ளூர் உணவுப் பழக்கவழக்கங்களையும் மத உணர்வுகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்று மாநகராட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தியதாக அந்த நூல் குறிப்பிடுகிறது.


பள்ளி உணவுத் திட்டத்தின் ஒரு வழக்கமான அங்கமாக மருத்துவப் பரிசோதனையும் அதிகளவில் இணைக்கப்பட்டது. இது, குழந்தைகளின் உடல்நலத்தை அதிகாரிகள் கண்காணிக்கவும், பள்ளிகள் கல்விக்கு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து மற்றும் உடல் வளர்ச்சிக்கும் பொறுப்பானவை என்ற கருத்தை வலுப்படுத்தவும் வழிவகுத்தது.


அரசு குழந்தைகளைப் பார்க்கும் விதத்தில் இது ஒரு பரந்த மாற்றத்தை இது பிரதிபலித்தது. அவர்களின் உடல்நலமும் கல்வியும் பொதுச் செலவினங்களை நியாயப்படுத்தும் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் அதிகளவில் விவரிக்கப்பட்டனர் என்று எல்லிஸ் எழுதுகிறார்.


இருப்பினும், இந்த அரசியல் நடவடிக்கை எப்போதும் போதுமான நிதியை ஈட்டித் தரவில்லை. நீதிக் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் குழந்தைகளின் நலனுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகும், மதிய உணவுக்கான நிதிநிலை அறிக்கை ரூ.20,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்துவதற்கான ஒரு முன்மொழிவு, செலவு காரணமாக நிராகரிக்கப்பட்டது என்று எல்லிஸ் குறிப்பிடுகிறார்.


எல்லிஸின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் பயனாளிகளில் பெரும்பான்மையானோர் தலித் குழந்தைகளாக இருந்தனர். இது அக்காலகட்டத்தின் வறுமைப் போக்குகளைப் பிரதிபலித்தது.


திட்டத்தை விரிவுபடுத்துதல் மற்றும் முட்டைகளை அறிமுகப்படுத்துதல்


சுதந்திரத்திற்குப் பிறகு, அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற தனது முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, 1956-ல் முதலமைச்சர் காமராஜ் பள்ளி உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியபோது அடுத்த முக்கிய மைல்கல் எட்டப்பட்டது.


பின்னர், முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரனின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தியதுடன், பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தியது.


1989-ம் ஆண்டு ஜனவரி மாதம், சத்துணவுத் திட்டத்தின் கீழ் வரும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு வேகவைத்த முட்டை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்ட அரசாணை, மாநிலம் முழுவதும் முட்டைகளைக் கொள்முதல் செய்தல், பரிசோதித்தல் மற்றும் விநியோகிப்பதற்கான விரிவான நடைமுறைகளை வகுத்தது. முட்டைகளைச் சேர்த்த இந்த நடவடிக்கை, பள்ளி உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்தது.


அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், முட்டை விநியோகத்தின் எண்ணிக்கையையும், மதிய உணவுப் பட்டியலையும் விரிவுபடுத்தி, வாழைப்பழங்கள், ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துப் பொருட்களை இதில் சேர்த்தன. 2013-ல், முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, மதிய உணவுத் திட்டத்தின் ஊட்டச்சத்து மதிப்பையும் ஈர்ப்பையும் விரிவுபடுத்தும் நோக்கில் 'பல்வகை உணவுத் திட்டத்தை' (Variety Meals) அறிமுகப்படுத்தினார்.


இன்று, தமிழ்நாட்டில் வாரத்தில் ஐந்து நாட்கள் சத்துணவு திட்டத்தில் பலவகை உணவுகளுடன் (Variety Meals), குறைந்தபட்சம் 46 கிராம் எடையுள்ள முட்டைகள் தனித்தனியாகப் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு முட்டையும் 6.12 கிராம் புரதத்தையும் 80 கிலோகலோரி ஆற்றலையும் அளிப்பதாக மாநில அரசு கூறுகிறது.


அகில இந்திய அளவிலான முயற்சிகள்


1984-ம் ஆண்டில், இந்தியாவில் பள்ளி மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது மாநிலமாக கேரளா திகழ்ந்தது. அடுத்த சில ஆண்டுகளில், பல மாநிலங்கள் இத்திட்டத்தின் தங்களது சொந்த பள்ளி மதிய உணவுத் திட்டங்களைத் தொடங்கின. இறுதியாக 1995-ல் மத்திய அரசு இதில் தலையிட்டதுடன், இது 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 2,408 வட்டாரங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். ஆரம்பத்தில், இத்திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.


2001-ல், உச்சநீதிமன்றத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைத் தொடர்ந்து, மாநிலங்கள் உலர் உணவுப் பொருட்களுக்குப் (dry rations) பதிலாக சமைத்த மதிய உணவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டன. 2007-ல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இத்திட்டத்தை 8-ம் வகுப்புக்கும் விரிவுபடுத்தியது.


2021-ல், இத்திட்டம் பிஎம் போஷன் (PM POSHAN) எனப் பெயர் மாற்றப்பட்டது. சூடான சமைத்த உணவுகள் மூலம் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்காக உலகிலேயே முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.


Original Link: Midday meal row: As Bengal drops eggs, recalling Tamil Nadu’s century-long efforts to nourish schoolkids

Share:

அமைச்சரவைச் செயலாளர் (Cabinet Secretary) என்பவர் யார்? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• ஜூன் 12-ஆம் தேதி  அனுப்பப்பட்ட குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டியதன் முக்கியத்துவதையும், சிறிய விவகாரங்களைக்கூட சரியாகச் செய்வதன் முக்கியத்துவம், மேலும் வழக்கமானதாகத் தோன்றும் விவகாரங்களையும் அவ்வப்போது நிறுத்தி மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.


• பயனுள்ள கூட்டங்களை நடத்துவது குறித்த வழிகாட்டி ஒன்றை நல்லாட்சிக்கான தேசிய மையம் (National Centre for Good Governance (NCGG) தயாரித்துள்ளது. இதனை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்குமாறு சோமநாதன் செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார். நல்லாட்சிக்கான தேசிய மையத்துடன் இணைந்து அமைச்சரவைச் செயலகம் பல்வேறு தலைப்புகளில் இது போன்ற வழிகாட்டிகளை வெளியிடும் என்றும் அவர் கூறினார். ஒரு அதிகாரியின் பணி நேரத்தில் கூட்டங்கள் அதிக நேரம் எடுக்கும் என்பதால் கூட்டங்களை நடத்துவது முதல் தலைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று சோமநாதன் எழுதியுள்ளார்.


• தங்களுக்கு வழங்கப்படும் துறை சார்ந்த பயிற்சிகளில் மகிழ்ச்சி அடைந்தாலும், "வழக்கமானவை என்று கருதப்படும் விஷயங்கள்" குறித்து கூடுதல் நடைமுறை ஆலோசனைகள் தேவை என்று பல நடுத்தர நிலை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக அமைச்சரவைச் செயலாளர் எழுதினார். "'வழக்கமானவை' என்பது சலிப்பூட்டுவதாகத் தோன்றினாலும், அவை பெரும்பாலும் மிக முக்கியமானவை; எனவே, அரசுப் பணியில் நமது நீண்டகாலப் பயணத்தில், அவற்றைச் சற்று நின்று மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம்" என்று அவர் எழுதினார்.



• கூட்டங்களை நடத்துவது குறித்த 10 பக்க வழிகாட்டி, ஒரு கூட்டத்தை ஏன் நடத்த வேண்டும், யாரை அழைக்க வேண்டும், எப்போது நடத்த வேண்டும் போன்ற அடிப்படைகளிலிருந்து தொடங்குகிறது. மேலும், ஒரு செய்தியை மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலமாகவே முடிக்க முடிந்தால், அதற்காக தேவையற்ற கூட்டங்களை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று சோமநாதன் செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.


உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு இடையிலான பணிகளைச் சுமூகமாக மேற்கொள்வதை உறுதிசெய்யும் வகையில், 1961-ஆம் ஆண்டு 'இந்திய அரசு பணி பரிமாற்றம் விதிகள் (Transaction of Business) மற்றும் 1961-ஆம் ஆண்டு 'இந்திய அரசு பணி ஒதுக்கீடு (Allocation of Business) விதிகள், ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு அமைச்சரவைச் செயலகத்திற்கு (Cabinet Secretariat) உள்ளது.


—அமைச்சரவைச் செயலகம் அமைச்சரவை மற்றும் அதன் குழுக்களுக்குச் செயலக செயல்பாடுகள் தொடர்பான உதவிகளை வழங்குகிறது. மேலும், அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிசெய்தல், அமைச்சகங்கள்/துறைகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை சரிசெய்தல்  மற்றும் செயலாளர்களின் நிரந்தர அல்லது தற்காலிகக் குழுக்கள் மூலம் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் மூலமாக அரசாங்கத்தின் முடிவெடுக்கும் செயல்முறைக்கு உதவுகிறது. இந்த நடைமுறையின் மூலம் புதிய கொள்கை முயற்சிகளையும் (New Policy Initiatives) ஊக்குவிக்கிறது.


நாட்டில் ஏற்படும் முக்கிய நெருக்கடி சூழ்நிலைகளை நிர்வகித்து, அதில் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதும் அமைச்சரவைச் செயலகத்தின் முக்கியப் பணியாகும்.


• மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசத்தின் மிக முக்கியமான அதிகாரியே  குடிமைப் பணி அதிகாரியும், நிர்வாகத் தலைவரே தலைமைச் செயலாளர் (Chief Secretary) ஆவார். முதலமைச்சரால் நியமிக்கப்படும் தலைமைச் செயலாளர், நிர்வாக விவகாரங்களில் முக்கிய ஆலோசகராகச் செயல்படுவதுடன், மாநில குடிமைப் பணிகளுக்குத் தலைமை ஏற்று, மாநில அமைச்சரவையின் செயலாளராகவும் (secretary to the state cabinet) பணியாற்றுகிறார் .



Share:

அவசரநிலை தொடர்பான அரசியலமைப்பு விதிகள் என்னென்ன? -குஷ்பூ குமாரி

அவசரநிலை தொடர்பான அரசியலமைப்பு விதிகள் என்னென்ன?

-குஷ்பூ குமாரி


நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அவசரநிலை (Emergency) பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்பே, அதற்கான தொடக்கம் நீதிமன்ற அறையிலேயே ஆரம்பமாகிவிட்டது. 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-26 இடைப்பட்ட அந்த இரவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர், ஊடகங்களுக்குத் தணிக்கை விதிக்கப்பட்டது, மக்களின் சுதந்திரமும் பறிக்கப்படத் தொடங்கியது. ஆனால், அந்த இரவுக்கு வழிவகுத்த அரசியல் நிகழ்வுகளின் சங்கிலித்தொடர், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அலகாபாத் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்போடு தொடங்கிவிட்டது. டெல்லியைச் சூழ்ந்த அந்த இருண்ட காலத்திற்காகவே அவசரநிலை இன்றுவரை நினைவுகூரப்படுகிறது, ஆனால் அதற்கான சட்டரீதியான தொடக்கம் பகல் வெளிச்சத்திலேயே அரங்கேறிவிட்டதாக சுபம் குமார் குறிப்பிட்டுள்ளார்.


முக்கிய அம்சங்கள்:


— இந்த வரலாற்றுத் திருப்பத்திற்கான தொடக்கப்புள்ளியை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிமன்ற அறைகளில் இருந்து நாம் கண்டறியலாம். நீதிமன்ற அறை எண் 5-ல் நீதிபதி ஜெக்மோகன்லால் சின்ஹா இந்த வழக்கின் விசாரணையை நடத்தினார். 1971-ஆம் ஆண்டு ரே பரேலி (Rae Bareli) தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து ராஜ் நாராயண் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், இந்திரா காந்தி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது, அந்த விசாரணை நீதிமன்ற அறை எண் 24-ல் நடந்தது.


— இந்த விவகாரம் 1971-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் தொடங்கியது. 1969-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி உடைந்ததாலும், டிசம்பர் மாதம் 1970-ஆம் ஆண்டில் மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதாலும், எதிர்க்கட்சிகள் "இந்திராவை அகற்றுவோம்" (Indira Hatao) என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் செய்தன. அதற்குப் பதிலடியாக இந்திரா காந்தி "வறுமையை ஒழிப்போம்" (Garibi Hatao) என்ற முழக்கத்தை முன்வைத்தார். ரே பரேலி தொகுதியில் இந்திரா காந்தி 1,83,309 வாக்குகளைப் பெற்றார், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயண் 71,499 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

— பெரும்பாலான வேட்பாளர்களுக்கு இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி இத்துடன் பிரச்சனையை முடித்திருக்கும்.                ஆனால், ராஜ் நாராயண் இந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றார். அரசு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது, பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பணம் செலவு செய்தது மற்றும் இந்திரா காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தில் இணைவதற்கு முன்பு பிரதமரின் செயலகத்தில் பணிபுரிந்த யஷ்பால் கபூர் என்பவரைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஏப்ரல் மாதம் 1971-ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன்கீழ் (Representation of the People Act, 1951) அவர் இந்தத் தேர்தல் வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.


— காலப்போக்கில், இந்த வழக்கு முக்கியமாக யஷ்பால் கபூர் மற்றும் சில குறிப்பிட்ட தேதிகளை நோக்கியே நகர்ந்தது. கபூர் 1971-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசுப் பணியில் இருந்து ராஜினாமா செய்திருந்தார்.                                தேர்தல் சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர் தனது வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக அரசு அதிகாரிகளின் உதவியைப் பயன்படுத்துவது 'ஊழல் நடவடிக்கை' என்று கருதப்படுகிறது.


— அரசு அதிகாரிகள், காவல்துறை மற்றும் பொதுத்துறை வசதிகள் அனைத்தும் இந்தியக் குடியரசுக்கே சொந்தமானவை. அவை ஆளுங்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படக் கூடாது. ரேபரேலி (Rae Bareli) தொகுதியில், இந்த அடிப்படை விதியே ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக மாறியது; ஏனெனில், அங்கு விசாரணைக்குள்ளான வேட்பாளர் நாட்டின் பிரதமராக இருந்தார்.


— இந்த வழக்கு விசாரணை மூன்று ஆண்டுகள் மிகவும் மெதுவாகவே நகர்ந்தது. 1974-ஆம் ஆண்டு கோடைகால விடுமுறைக்குப் பிறகு, நீதிபதி ஜெக்மோகன்லால் சின்ஹா இந்த வழக்கைப் பொறுப்பேற்று, அதன் விசாரணையை வேகப்படுத்தினார். மார்ச் மாதம் 1975-ஆம் ஆண்டில், இந்திரா காந்தி சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜரானார், இது இந்த வழக்கின் மீது ஒட்டுமொத்த பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்தது.


— நீதிபதி சின்ஹா நீதிமன்ற அறைக்குள் நுழைந்தபோது, அறை கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ராஜ் நாராயண் நீதிமன்றத்தில் தான் அமைதியாக இருப்பதாகத் தனது வழக்கறிஞர் சாந்தி பூஷணிடம் உறுதியளித்த பிறகே அங்கு வந்திருந்தார். ராஜ் நாராயண் பொதுவாக எதையும் வெளிப்படையாகவும் முன்கோபத்துடனும் பேசக்கூடியவர் என்பதால், அவரை அழைத்து வர வழக்கறிஞர் பூஷண் முதலில் தயங்கியிருந்தார்.


— பிரதமரின் பதவிக்கான கண்ணியத்திற்கு நீதிமன்றம் மதிப்பளித்தது. இந்திரா காந்தி சாட்சிக் கூண்டில் (Witness box) நிற்க வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. வழக்கறிஞர் சாந்தி பூஷணிடம் கலந்தாலோசித்த பிறகு, நீதிபதி சின்ஹா தனக்கு வலதுபுறம் சற்று உயரமான மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் இந்திரா காந்தியை அமர அனுமதித்தார். அவரது வழக்கறிஞர் எஸ்.சி.கரே அவரிடம் முதலில் கேள்விகளைக் கேட்டார், அதைத் தொடர்ந்து சாந்தி பூஷண் குறுக்கு விசாரணை செய்தார்.


— 12-ஆம் தேதி ஜூன் மாதம் 1975-ஆம் ஆண்டு, நீதிபதி சின்ஹா, இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவித்தார். யஷ்பால் கபூரின் உதவி மற்றும் அரசு ஆதாரங்களைப் பயன்படுத்தியது போன்ற சில குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், அவர் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்வதற்காக நீதிமன்றம் இந்தத் தீர்ப்பிற்கு ஒரு குறுகிய கால இடைக்காலத் தடையை வழங்கியது. இருப்பினும், அதற்குள்ளாகவே நாட்டின் அரசியல் நெருக்கடி தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி அவருக்குப் பின்னால் உறுதியாக நின்றது, அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்தத் தீர்ப்பை அரசாங்கத்தின் சட்டபூர்வத் தன்மைக்கு வந்த ஒரு மிகப்பெரிய நெருக்கடியாகக் கருதின.





— ஜூன் மாதம் 24-ஆம் தேதி, உச்சநீதிமன்ற நீதிபதி வி. ஆர். கிருஷ்ண அய்யர், இந்திரா காந்தி பிரதமராகத் தொடர அனுமதித்தார்; ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருடைய அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தார். அதற்கு அடுத்த நாள், ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் மற்ற தலைவர்கள் டெல்லியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினர். அன்றைய தினம் மாலையே, நாட்டில் அவசரநிலைச் சட்டத்தைப் பிரகடனப்படுத்துமாறு இந்திரா காந்தி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார். ஜூன் மாதம் 25-ஆம் தேதி, 1975-ஆம் ஆண்டு நள்ளிரவுக்குச் சற்று முன்பாக, குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவசரநிலைக்கான அறிவிப்பைக் கையெழுத்திட்டு வெளியிட்டார்.


— இத்துடன் ரேபரேலி வழக்கு முடிந்துவிடவில்லை. நாடாளுமன்றம் தேர்தல் சட்டத்தை கடந்த காலத்திற்கும் பொருந்தும் வகையில் முன்தேதியிட்டு மாற்றியமைத்தது. மேலும், 39-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் பிரதமரின் தேர்தல் வழக்கை நீதிமன்றங்களில் மேல்முறையீட்டுக்கு உட்படுத்துவதில் இருந்து பாதுகாக்க முயன்றது.


— நவம்பர் மாதம் 1975-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, தேர்தல் சட்டத்தில் செய்யப்பட்ட பல மாற்றங்களை ஏற்றுக்கொண்டது. ஆனால், கேசவானந்த பாரதி வழக்கில் (Kesavananda Bharati case) வழங்கப்பட்ட 'அடிப்படை அமைப்பு கோட்பாட்டை' முன்வைத்து, பிரதமரின் தேர்தல் வழக்கை நீதிமன்ற மறுஆய்வுக்கு அப்பாற்பட்டதாகப் பாதுகாத்த அந்த ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவை மட்டும் நீதிமன்றம் ரத்து செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


— பொதுவாக, "அவசரநிலை" (Emergency) என்பது ஜூன் மாதம் 25-ஆம் தேதி, 1975-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 21-ஆம் தேதி, 1977-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைக் குறிக்கிறது. இந்தநேரத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கம் நமது அரசியலமைப்பில் உள்ள சிறப்புப் பிரிவுகளைப் பயன்படுத்தி, நாட்டின் நிர்வாகம் மற்றும் சட்டமியற்றும் அதிகாரங்கள்மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.


— இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் பகுதி 18-ல் (Part XVIII), சட்டப்பிரிவுகள் 352 முதல் 360 வரை உள்ள அவசரநிலைப் பிரிவுகள், மூன்று வெவ்வேறு வகையான அவசரநிலைகளை குறித்து விவரிக்கின்றன.


— 1975-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய அவசரநிலை, இந்தியாவின் ஜனநாயகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள், கூட்டணி அரசாங்கங்களின் எழுச்சி, புதிய சமூக சக்திகளின் உருவாக்கம் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.


— ஜனதா அரசு, 1976-ஆம் ஆண்டின் 42-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட பல மாற்றங்களை ரத்துசெய்தது. அது அவசரநிலைக்கான விதிமுறைகளை முழுமையாக நீக்கிவிடவில்லை. ஆனால், எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை அவசரநிலையைக் கொண்டு வருவதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றியது.


Original Link: What are the constitutional provisions related to the Emergency?

Share:

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக உறவுகளில் ஜூலை மாதம் ஒரு மிகப்பெரிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது - ஹர்ஜிந்தர் காங்

'நவீன வர்த்தக ஒப்பந்தங்களின் பொன்னான தரநிலை' (gold standard) என்று கருதப்படும் இங்கிலாந்து-இந்தியா இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 அன்று நடைமுறைக்கு வருகிறது.


பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிக்க உதவுவதால் வர்த்தக ஒப்பந்தங்கள் முக்கியமானவை. ஆனால், எல்லா ஒப்பந்தங்களும் ஒரு பெரிய திருப்புமுனையை (game changer) ஏற்படுத்துவதில்லை. முக்கிய துறைகளில் கூட்டு வளர்ச்சியை ஊக்குவித்தல், அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தின் எல்லைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றைச் செய்யும் ஒப்பந்தமே அத்தகைய சிறப்பைப் பெறுகிறது. எனவே, 'விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்' (Comprehensive Economic and Trade Agreement (CETA)) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விவரிக்க வணிகங்களும் வர்த்தக சங்கங்களும் இச்சொல்லைப் பயன்படுத்துவதில் ஆச்சரியமில்லை. G-20 நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இந்தியா உள்ளது. இதற்கு இணையாக, முதலீட்டிற்கான உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து உள்ளது. 2025-ல் G-7 நாடுகளில் மூன்றாவது வேகமாக வளர்ந்த பொருளாதாரமாகவும் திகழ்ந்தது. இரு நாடுகளும் ஒன்றையொன்று சந்தைகளில் முன்னுரிமை அடிப்படையில் அணுகுவதை அனுமதிப்பதன் மூலம், இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெறும் இராஜதந்திர வெற்றியைத் தாண்டிச் செயல்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க நீண்டகால நன்மைகளை அளிக்கும் வகையிலான வலுவான பொருளாதார நன்மையை உருவாக்குகிறது. நீண்டகால அடிப்படையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) £5.1 பில்லியனாலும், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) £4.8 பில்லியனாலும் உயர்த்துவதுடன், இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு £25.5 பில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா உறுதியாக உள்ளது - பிரதமர் மோடி


2025-ல் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு ஆண்டுக்கு £48 பில்லியனாக இருந்தது. இது ஜூலை 15 முதல், இரு நாடுகளுக்கும் இடையே வணிகங்கள் வர்த்தகம் செய்வது மலிவானதாகவும், விரைவானதாகவும், எளிதானதாகவும் மாறும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதைக் கண்டுள்ளோம். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கான இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையிலும், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சியின் புதிய காலகட்டம் தொடங்கும் நிலையிலும், இந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் குறையும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வரும் ஆண்டுகளில் இரு நாடுகளும், இரு தரப்பு வணிகங்களும் எத்தகைய சாதனைகளைப் படைக்கப் போகின்றன என்பதைப் பார்க்க நாம் அனைவரும் ஆவலுடன் இருக்க வேண்டும். இவை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் அடையாளங்களாகும். ஆனால், இது வெறும் எண்களைப் பற்றியது மட்டுமல்ல. பரந்த மற்றும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஒப்பந்தம் ஆகும்.


இந்த ஒப்பந்தம் பரந்த அளவிலானதாகவும், வலுவானதாகவும், இரு நாடுகளுக்கும் நீண்டகால வளர்ச்சியைத் தரும் உந்துசக்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் ஆரம்பத்திலிருந்தே உடன்பட்டிருந்தனர். ஏறக்குறைய மூன்று ஆண்டுகால தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்து மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களிலேயே பொருளாதாரரீதியாக இது மிக முக்கியமானதாகும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல, இந்தியா இதுவரை மேற்கொண்ட மிக விரிவான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. மொத்தத்தில், இந்த ஒப்பந்தம் வணிக நிறுவனங்கள், நுகர்வோர் மற்றும் இரு நாடுகளின் பொருளாதாரங்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு வெற்றிகரமான ஒப்பந்தமாகும். இதன் மூலம் கிடைக்கக்கூடிய பரந்த அளவிலான நன்மைகளை புரிந்துகொள்ள, இந்தியத் தயாரிப்புகளுக்கு இங்கிலாந்தின் 99 சதவீத வரிப் பட்டியலுக்கு (tariff lines) கீழ் சுங்கவரி விலக்கு அளிக்கப்படும். அதே நேரத்தில், இங்கிலாந்துப் பொருட்களுக்கான தனது 90% வர்த்தக வரிப் பிரிவுகளில் இந்தியா வரிகளை நீக்கும் அல்லது குறைக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஜவுளி, தோல் மற்றும் ஆபரணங்கள் போன்ற அதிக மனிதவளம் தேவைப்படும் துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும். அதேசமயம், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் நிதிச் சேவைகள் போன்ற துறைகளில் ஏற்றுமதியை பெருமளவில் அதிகரிக்கவும் இது வழிவகுக்கும்.


இதேபோன்று, இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கான வரிகள் சுமார் 400 மில்லியன் பவுண்டுகள் வரை குறையும் என்றும், அடுத்தடுத்த கட்டங்களில் இது 900 மில்லியன் பவுண்டுகள் வரை குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. விண்வெளித் துறை, வாகன உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் விஸ்கி (whisky) தயாரிப்பு போன்ற முக்கியத் துறைகள் அனைத்தும் இதனால் கணிசமான பலனைப் பெறும். இது இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்குப் பல பில்லியன் பவுண்டுகள் வருவாயைச் சேர்க்கும். இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது மட்டுமல்லாமல், இது ஒரு தொடக்கமாகவும் அமைகிறது.


மும்பை மற்றும் லண்டனைத் தாண்டிய நன்மைகள்


வர்த்தகக் கொள்கை குறித்த தொடர்ச்சியான விமர்சனங்களில் ஒன்று, அதிலிருந்து கிடைக்கும் பலன்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே குவிந்துள்ளன என்பதுதான். இரு நாடுகளிலும் உள்ள முக்கிய நகரங்களைத் தாண்டி, உள்ளூர் பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்த ஒப்பந்தம் பயனளிப்பதை உறுதி செய்துள்ளது. இது, 30 அத்தியாயங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்பிலும் அதிக வளர்ச்சி மற்றும் அதிக மதிப்புள்ள துறைகளுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையிலான மற்றும் பிரத்யேகமான அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. நடைமுறைரீதியாகப் பார்க்கும்போது, ​​உற்பத்தியாளர்கள், புத்தாக்கத்தை முன்னெடுப்போர், விநியோகச் சங்கிலி வணிகங்கள் மற்றும் சேவை ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் மிகவும் திறம்படப் போட்டியிட இது வழிவகுக்கும். இத்தகைய வணிகங்களில் பல, பெரிய நகரங்களிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளன. மலிவான இறக்குமதி மற்றும் குறைவான வர்த்தகத் தடைகள் மூலம் அவை பயனடையும். உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு ஜவுளி உற்பத்தியாளரால் இனி இங்கிலாந்துக்கு மிகவும் தீவிரமாக வர்த்தகம் செய்யமுடியும். அதேபோல, பர்மிங்காமில் உள்ள வாகன உதிரிபாக உற்பத்தியாளரால் குறைந்த செலவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலும்.


இந்தியா-இங்கிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்ன?


நவீன வர்த்தகம் என்பது வெறும் சுங்க வரிகளைக் (tariffs) குறைப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது சுங்க நடைமுறைகள், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளையும் உள்ளடக்கியது. இதனால்தான், இந்த அம்சங்கள் இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு உயர்தர மற்றும் நவீன வர்த்தக ஒப்பந்தமாக மாற்றுகின்றன. மேம்படுத்தப்பட்ட சுங்க நடைமுறைகள் சரக்குகள் சந்தையை விரைவாகச் சென்றடைய உதவும். இது அதிகப்படியான நிர்வாகச் சிக்கல்களைத் (red tape) தாங்க முடியாத சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். இங்கிலாந்து உலகளவில் புகழ்பெற்ற துறையான சேவைகள் பிரிவில், முக்கிய சந்தைகளுக்கான அணுகலை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது. இதன்மூலம், இந்தியாவில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இங்கிலாந்து நிறுவனங்களுக்கும், அதேபோல இங்கிலாந்தில் இந்திய நிறுவனங்களுக்கும் தேவையான நிலையான சூழல் (predictability) கிடைக்கிறது. ஊழல் தடுப்பு, பாலின சமத்துவம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்தியா மேற்கொள்ளும் முதல் தனித்துவமான அத்தியாயங்களையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது. அத்துடன், வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா இதுவரை மேற்கொண்ட மிக விரிவான தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த உறுதிமொழிகளில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. ஆனால், இது வெறும் சந்தை அணுகல் பற்றியது மட்டுமல்ல; உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்வது பற்றியதுமாகும். அந்த விஷயத்தில் இந்த ஒப்பந்தம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.


உதாரணமாக, பால் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய்களுக்கான பாதுகாப்பை இந்தியா தொடர்ந்து தக்கவைத்துள்ளது. அதேவேளையில், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட அரிசி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றிற்கான பாதுகாப்பை இங்கிலாந்து உறுதிசெய்கிறது. வர்த்தக ஒப்பந்தங்கள் வளர்ச்சி மட்டுமல்லாது, நிலைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையின் அடிப்படையிலும் மதிப்பிடப்படும் இந்தக் காலகட்டத்தில், அதை எவ்வாறு சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்பதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது.


ஒப்பந்தத்தின் சிறப்பான பலன்கள்


இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமானது, அளவிடக்கூடிய பொருளாதாரப் பலன்கள், எதிர்காலத் துறைகளில் வலுவான சந்தை அணுகல், நடைமுறைக்கு ஏற்ற வர்த்தக எளிமைப்படுத்தல், வலுவான உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ள நெறிமுறைகள் சார்ந்த அத்தியாயங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது என்பது தெளிவாகிறது. நவீன வர்த்தக ஒப்பந்தங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்மாதிரியாக அமைகிறது. இது பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கிறது, தொழிலாளர்களைப் பாதுகாக்கிறது, புதுமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒரு உயர் தரத்தை நிறுவுகிறது.


இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் தருவாயில், நடைமுறைப்படுத்த வேண்டியப் பணி தெளிவாக உள்ளது. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இரு நாடுகளின் வணிக நிறுவனங்களும் ஏற்றுமதியை முன்னிறுத்த வேண்டும், கொள்முதல் வாய்ப்புகளை ஆராய வேண்டும், புதிய மூல விதிகளைப் பின்பற்றி விநியோகச் சங்கிலிகளை வரைபடமாக்க வேண்டும், மேலும் விரைவாகச் செயல்பட வேண்டும். ஏனெனில் வர்த்தகத்தில், முதலில் செயல்படுபவரின் திறன் உண்மையானது, அது அரிதாகவே இருமுறை கிடைக்கும்.


ஹர்ஜிந்தர் காங் அவர்கள் தெற்காசியாவிற்கான மாட்சிமை பொருந்திய மன்னரின் வர்த்தக ஆணையராகவும், மேற்கு இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை உயர் ஆணையராகவும் உள்ளார்.


Original Link: July opens the biggest chapter in India-U.K. trade relations 

Share:

வளரிளம் பருவத்தினரின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பள்ளிகள் எவ்வாறு கையாளலாம்? -சுப்பராவ் எம். கவரவரபு, பாரதி குல்கர்னி

உடல் உழைப்பின்மையையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைப் போலவே தீவிரமான ஒன்றாகக் கருதப்பட வேண்டும். பள்ளிகள், முறையான உடற்பயிற்சியையும், விளையாட்டுகளையும் விருப்பத் தேர்வுகளாக அல்லாமல், கல்வித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக உறுதி செய்ய வேண்டும்.


கோடை விடுமுறைக்குப் பிறகு, நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, லட்சக்கணக்கான வளரிளம் பருவத்தினரின் ஆற்றல், லட்சியங்கள் மற்றும் கவலைகளால் வகுப்பறைகள் மீண்டும் நிரம்பின. இருப்பினும், அவர்களின் வளர்ந்து வரும் லட்சியங்களுக்குப் பின்னால், வளரிளம் பருவத்தினரின் ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற ஒரு அமைதியான பொது சுகாதார நெருக்கடி மறைந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) 2023-24-ஆம் ஆண்டின் ஆய்வின் முடிவுகள் கவலைக்குரிய ஒரு சூழலை வெளிப்படுத்துகின்றன. 15-49 வயதுடைய பெண்களிடையே உடல் பருமன் 24%-லிருந்து 30.7% ஆகவும், ஆண்களிடையே 22.9%-லிருந்து 27.3% ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களிடையே உயர் இரத்த சர்க்கரை அளவு 15.6%-லிருந்து 20.9% ஆகவும், பெண்களிடையே 13.5%-லிருந்து 17.8% ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு காலத்தில் நகரங்கள் மற்றும் வசதியான சமூகங்களுடன் தொடர்புடையதாக இருந்த, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மன அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள், இப்போது கிராமப்புற மக்களையும் பாதிக்கின்றன. இந்தியா இப்போது ஒரு இரட்டைச் சுமையை எதிர்கொள்கிறது. இதில், குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பெரியவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், உடல் பருமன் நீரிழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இத்தகைய உடல்நலப் பிரச்சினைகள் வயதுவந்த பிறகு தொடங்குவதில்லை. அவற்றின் வேர்கள் பதின்ம பருவத்திலேயே உருவாகின்றன. எனவே, ஊட்டச்சத்துக் குறைபாடு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பள்ளிகளே மிக முக்கியமான இடமாக அமைகின்றன.


வளரிளம் பருவத்தினரிடையே உடல் பருமனை எதிர்த்துப் போராடுதல்


உணவு முறைகளை வித்தியாசமான முறையில் அணுகுதல்

ஊட்டச்சத்துக் குறைபாடு (malnutrition) என்பது இனி எடை குறைவாக இருப்பது மட்டுமல்ல என்பதைப் பள்ளிகள் உணர வேண்டும். இந்தியா 'கொழுப்பு மிகுந்த மெல்லிய தோற்ற' உடலமைப்பைக் (thin-fat phenotype) காண்கிறது. இதன் பொருள், ஒல்லியாகத் தோற்றமளிக்கும் குழந்தைகள் ஆபத்தான வளர்சிதை மாற்ற அபாயத்தைக் கொண்டுள்ளனர். விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வின்படி-2019 (Comprehensive National Nutrition Survey (CNNS)), 27.4% இந்திய வளரிளம் பருவத்தினர் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். அதே நேரத்தில், உடல் பருமன் குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35% பேர் வளர்ச்சி குன்றியவர்களாக இருந்தாலும், வயது வந்தோருக்கான அளவிலான டிரைகிளிசரைடுகளைக் (adult-level triglycerides) கொண்டுள்ளனர். இது, வயது வந்தோருக்கான நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய ஒரு வளர்சிதை மாற்ற அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த நோய்களைத் தடுப்பது பள்ளிகளிலேயே தொடங்க வேண்டும், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு மருத்துவமனைகளில் அல்ல.


Triglyceride : ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides) என்பது நம் இரத்தத்தில் காணப்படும் ஒரு வகையான கொழுப்பு ஆகும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பயன்படுத்திய பிறகு, எஞ்சியிருக்கும் கலோரிகள் ட்ரைகிளிசரைடுகளாக மாற்றப்பட்டு உடலின் கொழுப்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன.


வளரிளம் பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள்


டெல்லியில் பள்ளி செல்லும் வளரிளம் பருவத்தினரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பால் மற்றும் பால் பொருட்கள், கீரை வகைகள் மற்றும் பழங்களின் நுகர்வு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைவாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மிக அதிகமான குழந்தைகள் தானியங்கள் நிறைந்த உணவை உட்கொள்கின்றனர். அதேசமயம், புரதச்சத்துக்களும் பாதுகாப்பு உணவுகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. மேம்படுத்தப்பட்ட மதிய உணவுகள், ஆரோக்கியமான உணவகங்கள் மற்றும் சமச்சீரான உணவைத் தட்டுகளில் எவ்வாறு சேர்ப்பது என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் உணவு செயல்விளக்கங்கள் மூலம் பள்ளிகள் இதைச் சரிசெய்ய முடியும். இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் 2024, தட்டின் அளவில் பாதியளவு பழங்கள் மற்றும் காய்கறிகளாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. இருப்பினும், அதிகநேரம் உட்கார்ந்து மற்றும் திரைகளைப் பயன்படுத்தும் குழந்தைகள் தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் செயலற்ற வாழ்க்கை முறைகளின் தீங்கு விளைவிக்கும் கலவையை உருவாக்குகிறது. பள்ளித் தோட்டங்கள், பழ இடைவேளைகள் மற்றும் உள்ளூர் பருவகால விளைபொருட்களின் பயன்பாடு ஆகியவை ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை அன்றாட வாழ்வில் ஒரு வழக்கமான அங்கமாக மாற்ற உதவும்.


சர்க்கரை மற்றும் அதிகளவு-பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra-Processed Foods (UPFs)) குறித்து கவனம் செலுத்துதல்


அதிகப்படியான சர்க்கரையால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்துத் தெளிவாக விளக்கப்பட வேண்டும். சர்க்கரை கலந்த பானங்கள், அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு (High Fat, Sugar and Salt (HFSS)) கொண்ட உணவுகள், மற்றும் அதிகளவு-பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPF) ஆகியவை பாரம்பரிய உணவுகளுக்குப் பதிலாக வேகமாக இடம்பெயர்ந்து வருகின்றன. இந்தியப் பதின்ம வயதினரிடையே 'ஃப்ரீ சுகர்' (free sugar - உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை) மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு ஆபத்தான அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அதிகளவு-பதப்படுத்தப்பட்ட உணவுகளின் (UPF) நுகர்வு ஆண்டுக்கு ஆண்டு 13.7%-க்கும் அதிகமாக அதிகரித்து வருவதாக சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கசப்பான உண்மை என்னவென்றால், இன்று உட்கொள்ளப்படும் அதிகப்படியான சர்க்கரை நாளை வளர்சிதை மாற்ற அபாயமாக மாறுகிறது. பள்ளிகள் சர்க்கரை கலந்த பானங்களை உட்கொள்வதை தீவிரமாகத் தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும். மேலும், பொதுவாக உட்கொள்ளப்படும் பானங்கள் மற்றும் உணவுகளில் மறைந்திருக்கும் சர்க்கரையின் அளவை வெளிப்படுத்தும் அறிவிப்புப் பலகைகளையும் அவை காட்சிப்படுத்த வேண்டும். ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் பிரச்சாரங்களைவிட, தொடர்ந்து சொல்லப்படும் செய்திகளே அறிவை ஆரோக்கியமான பழக்கவழக்கங்களாக மாற்ற உதவுகின்றன.


உடல் உழைப்பின்மையையும் மோசமான உணவுப் பழக்கத்தைப் போலவே தீவிரமாகக் கருதவேண்டும். பள்ளிகள், முறையான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை விருப்பத் தேர்வுகளாக அல்லாமல், கல்வித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக உறுதிசெய்ய வேண்டும். குறைந்த உடல் இயக்கம், மாறிவரும் உணவுப் பழக்கங்கள் மற்றும் அதிகரித்துவரும் உடல் பருமன் போன்ற நகர்ப்புற வாழ்க்கை முறைப் பழக்கங்கள் இப்போது கிராமப்புற சமூகங்களையும் பாதித்து வருவதால், இது மிகவும் முக்கியமானதாகும். இதனால் உடல் உழைப்பின்மை என்பது நகரப் பள்ளிகளின் பிரச்சனை மட்டுமல்ல, இது ஒரு நாடுதழுவிய பெருந்தொற்றாக மாறுகிறது.


அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.


ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் போதுமான உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே தொற்றா நோய்கள் (non-communicable diseases) ஏற்படுவதற்கான பொதுவான ஆபத்துக் காரணிகளாக உள்ளன. வளரிளம் பருவத்தினரிடையே உடல் பருமன் வேகமாக அதிகரிப்பது, இளம் வயதிலேயே ஏற்படும் வகை-2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இது எதிர்காலத்தில் சுகாதாரச் செலவுகள் பெருமளவில் அதிகரிக்கவும் வழிவகுக்கும். எனவே, வலுவான மற்றும் நிலையான அரசு கொள்கைகளின் ஆதரவுடன், 'அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இல்லாத பள்ளி வளாகங்கள்' (UPF-free school zones) என்பது ஒரு நாடு தழுவிய இயக்கமாக மாற வேண்டும்.


பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் பள்ளிகள்


இங்குதான் 'நமது உணவைச் சரிசெய்வோம்' ((Let’s Fix Our Food - LFOF)) முன்முயற்சியானது, ஒரு வலுவான பயணத்தை வழங்குகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்-தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (Indian Council of Medical Research-National Institute of Nutrition (ICMR-NIN)) தலைமையிலான நமது உணவைச் சரிசெய்வோம் (LFOF) கூட்டமைப்பு, ஆதார அடிப்படையிலான கொள்கையை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து கல்வியறிவு மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளுக்காகப் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றின் மூலம் வளரிளம் பருவத்தினருக்கு ஆரோக்கியமான உணவுச் சூழல்களை உருவாக்கப் பணியாற்றும் ஒரு பலதரப்பு பங்குதாரர் முன்முயற்சியாகும். அதன் வெளியீடுகளில் அதிகக் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட (HFSS) உணவு விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகள், ஆரோக்கியமற்ற பானங்கள் மீதான வரிவிதிப்பு, மாதிரி பள்ளி ஊட்டச்சத்து பாடத்திட்டம் மற்றும் உணவு அடையாள சீட்டு வாசிப்புத் தொகுப்பு ஆகியவை அடங்கும்.


2050-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 21.8 கோடி ஆண்களும் 23.1 கோடி பெண்களும் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள் என்று 'லான்செட்' (Lancet) இதழின் 2025-ம் ஆண்டு ஆய்வு ஒன்று கணித்துள்ளது. இதில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட வளரிளம் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே இந்த அதிகரிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பள்ளிகள் பாடப்புத்தகங்கள் மூலம் ஊட்டச்சத்து குறித்த தகவல்களைக் கற்பிப்பதோடு நின்றுவிடக் கூடாது. அவை திறன் சார்ந்த கற்றல் முறையைக் கடைபிடிக்க வேண்டும். உணவுப் பொருட்களின் லேபிள்களைப் படித்தல், சரியான உணவு அளவுகளைத் தீர்மானித்தல், உணவுச் சந்தைப்படுத்தல் உத்திகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் அடிப்படை சமையல் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிகள் வெறும் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, அவை பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த நிறுவனங்களாகத் திகழும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்தியாவில் பள்ளிகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உணவுப் பழக்கவழக்கங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும், சர்க்கரை கலந்த பானங்களின் நுகர்வு குறைவதையும் நிரூபித்துள்ளன. ஆரோக்கியமற்ற உணவு முறைகளிலிருந்து இன்று பாதுகாக்கப்படும் ஒரு குழந்தை, எதிர்காலத்தில் நோயாளியாக மாறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.


சுப்பாராவ் எம். கவரவரப்பு (SubbaRao M. Gavaravarapu) அவர்கள் ICMR-தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் 'அறிவியலாளர் G' (Scientist G) ஆகப் பணியாற்றுவதுடன், 'லெட்ஸ் ஃபிக்ஸ் அவர் ஃபுட்' (LFOF) முன்னெடுப்பையும் வழிநடத்துகிறார். பாரதி குல்கர்னி (Bharati Kulkarni) அவர்கள் ICMR-தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.


Original Link: How schools can tackle adolescent malnutrition? 

Share:

புதிய டிஜிட்டல் அடிமைத்தனத்திற்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன -சசி தரூர்

கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு (AI) ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதால், வழக்கமான ஒழுங்குமுறைகளைத் தாண்டி அதற்கென அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.


போப் பதினான்காம் லியோ (Pope Leo XIV) தனது 'Magnifica Humanitas' என்ற அதிகாரப்பூர்வ திருச்சபைக் கடிதத்தில், தற்போதைய தொழில்நுட்ப நெருக்கடியை ஆன்மீக அடிப்படைகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இறைவனின் படைப்பில் மனிதனே முதன்மையான மையப்புள்ளி என்பதை அவர் மனிதகுலத்திற்கு நினைவூட்டுகிறார். இருப்பினும், புனிதமான இந்த மனித கண்ணியம் முன்னெப்போதும் இல்லாத ஒரு சவாலை எதிர்கொள்கிறது. செயற்கை நுண்ணறிவை (AI) நாம் கட்டுப்படுத்தாமல் விட்டால், அது நம்முடைய தனிப்பட்ட தரவுகளின் உரிமையைப் பறித்து, 'டிஜிட்டல் அடிமைத்தனம்' (Digital slavery) என்ற புதிய வடிவத்திற்கு நம்மைத் தள்ளிவிடும் என்று போப் எச்சரிக்கிறார்.                   இது மனிதர்களை விலைக்கு வாங்கி அடிமைகளாக நடத்திய பழைய கொடுமைக்கு இணையானது என்றும் இந்த விவகாரம் மனித கண்ணியத்தோடு நேரடியாகத் தொடர்புடையது என்பதால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதை வெறும் நல்லெண்ணங்களின் அடிப்படையிலோ அல்லது இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பொறியாளர்களின் மனசாட்சியின் பொறுப்பிலோ மட்டும் விட்டுவிட முடியாது என்று போப் உறுதியாகக் கூறுகிறார். மாறாக, வெறும் வெற்று உபதேசங்களுக்குப் பதிலாக வலுவான மற்றும் கட்டாயமாக்கப்பட்ட சட்டங்களும், சிலிக்கான் வேலியின் (Silicon Valley) நவீன பெருநிறுவன அதிபர்களின் வெற்று வாக்குறுதிகளை நம்பாமல் சுதந்திரமான பொதுக் கண்காணிப்பு அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும், ஒருவருக்கு வங்கி கடன் கிடைப்பதா, வேலை கிடைப்பதா, மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைப்பதா அல்லது கல்வி வசதி கிடைப்பதா என்பதை ஒரு தானியங்கி கணினி அமைப்பு தீர்மானிக்கும் போதெல்லாம், அந்த முடிவிற்கு ஒரு மனிதரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்ற தெளிவான விதிமுறை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். போப் பதினான்காம் லியோவின் முக்கியக் கோரிக்கை என்னவென்றால், இந்த புதிய மின்னணு நிர்வாக அமைப்பு, பெரும்பாலான இறையாண்மை கொண்ட அரசாங்கங்களைவிடவும் அதிகப் பணமும் செல்வாக்கும் கொண்ட ஒரு சில தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் கைகளில் ரகசியமாகச் சிக்கிவிடக் கூடாது. அது கடுமையான சட்டங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதாகும். இதற்காக, தேவையெனில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியைத் திட்டமிட்டுச் சற்றே தாமதப்படுத்தவும் வேண்டும் என்றும் குறிப்பிடுள்ளார்.


விதிமுறைகள் பின்தங்கும்போது


இருப்பினும், ஒரு அடிப்படையான பிரச்சனை இன்னும் நீடிக்கிறது.              செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியடையும் வேகமும், அதற்கான ஒழுக்கநெறி மற்றும் சட்ட விதிகள் உருவாக்கப்படும் வேகமும் ஒன்றாக இருப்பதில்லை. புத்தொழில் (Start-up) நிறுவனங்களின் கலாச்சாரத்திற்கே உரிய அதிவேகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. வேகமாக முன்னேற வேண்டும், வளர்ச்சி என்ற பெயரில் சமூகத்தின் மீது தொடர்ச்சியான ஆரம்பக்கட்ட சோதனைகளை நடத்த வேண்டும் என்ற எண்ணமே இதனை இயக்குகிறது.                 இந்த அசுர வேகத்திற்கு வணிகப் போட்டிகள் மட்டுமின்றி, சிலிக்கான் வேலி (Silicon Valley) முதல் ஷென்சென் (Shenzhen) நகரம் வரை இடைவிடாது நடக்கும் கணிதக் கண்டுபிடிப்புகளும் முக்கியக் காரணமாகும். இது உலகெங்கிலும் உள்ள சட்டமியற்றுபவர்களுக்கு ஒரு பெரிய சவாலை ஏற்படுத்துகிறது.                                       ஒரு நாடாளுமன்றத்தால் மனிதன் என்ன செய்கிறான் என்பதைக் கட்டுப்படுத்த முடியும், ஆனால் ஒரு புதிய கணிதக் கோட்பாடு, ஒரு கண்டுபிடிப்பு அல்லது ஒரு சமன்பாடு (Equation) உருவாக்கப்படுவதை ஒருபோதும் தடுத்து நிறுத்தமுடியாது. இப்படியிருக்க, போப் ஆண்டவரின் விருப்பங்களைச் சட்டமியற்றுபவர்கள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? என்ற கேள்வி எழுகிறது. 


பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் சட்டங்கள் மிகவும் மெதுவாகவே இயற்றப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 'செயற்கை நுண்ணறிவுச் சட்டம்' (AI Act) அல்லது இங்கிலாந்தின் 'இணையப் பாதுகாப்புச் சட்டம்' போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவதற்குள்ளாகவே, அவை எந்தத் தொழில்நுட்பப் பாதிப்புகளைத் தடுக்க உருவாக்கப்பட்டனவோ, அந்தப் பாதிப்புகள் தங்களை முற்றிலும் மாற்றிக்கொண்டு அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுகின்றன. இதனால் ஒரு முழுத் தலைமுறையுமே டிஜிட்டல் உலகப் பாதிப்புகளுக்கு இடையில் எந்தவொரு பாதுகாப்பும் இன்றி வளர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் வேகத்தோடு ஒப்பிடும்போது, கொள்கை வகுப்பாளர்கள் எப்போதுமே பின்தங்கியே இருந்துள்ளனர். இப்போதைய சூழலிலும் நாம் மீண்டும் பின்தங்கவே போகிறோம்.


புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைவிட சட்டங்கள் எப்போதுமே மிகவும் மெதுவாகத்தான் இயற்றப்படும் என்பது விதியாகிப் போனால், அதன் விளைவுகள் ஜனநாயகக் சமூகங்களுக்கு வெறும் சட்டரீதியான சிக்கலாக மட்டும் இருக்காது. அது அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கே சவாலாக மாறிவிடும். குடிமக்களால் எது உண்மை, எது பொய் என்று பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டால், அங்கு ஜனநாயகம் செயல்பட முடியாது. அதன் அடிப்படையில் பார்த்தால், ஜனநாயக ஆட்சி முறை என்பது ஒரு பொதுவான உண்மைத் தளத்தை நம்பியே உள்ளது. அதாவது, பொது விவாதங்கள், கொள்கைகள் மற்றும் தேர்தல் தேர்வுகள் ஆகிய அனைத்தும் அடிப்படை உண்மைகளை அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொள்வதில் இருந்தே தொடங்குகின்றன. அந்த அடித்தளமே திட்டமிட்டுத் தகர்க்கப்படும்போது, ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் ஆபத்து ஏற்படுகிறது. இன்று, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்களும், மேம்பட்ட போலி ஊடக வடிவங்களும் (Deepfakes) எந்த அளவுக்கு உண்மையாகத் தோற்றமளிக்கின்றன என்றால், மனிதக் கண்களாலோ அல்லது காதுகளாலோ அவை போலி என்பதை இனி துல்லியமாகக் கண்டறிய முடியாது. இது ஏற்கனவே நிஜ வாழ்க்கையாக மாறிவிட்டது.                         அரசியல் தலைவர்களின் குரல் மற்றும் காணொளிகள் மிகத் துல்லியமாகப் போலியாக உருவாக்கப்பட்டு, தேர்தல் நேரங்களில் திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. வாக்காளர்களை வாக்களிக்க வராமல் தடுக்கவும், இல்லாத ஒரு ஊழலை திடீரெனப் புதிதாக உருவாக்கவும், அரசு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை நொடிப்பொழுதில் சிதைக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.



இந்தப் பாதிப்பை, சமூக ஊடகங்களின் கணினி வழிமுறை (Algorithmic manipulation) இன்னும் பல மடங்கு தீவிரமாக்குகிறது. பெருநிறுவனங்களின் சமூக ஊடகத் தளங்கள், பயனர்களைத் தங்கள் பக்கங்களிலேயே எப்போதும் மூழ்கடித்திருக்கச் செய்யும் வணிக மாதிரியைக் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் ஆத்திரம், பயம் மற்றும் பரபரப்பான செய்திகள்தான் அதிக பார்வையாளர்களைச் சென்றடைகின்றன.  இதனால், இந்தத் தளங்களின் கணினி வழிமுறைகள் திட்டமிட்டே தீவிரமான, ஒருதலைப்பட்சமான கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை அதிகளவில் பரப்புகின்றன.      இது மக்களைத் தீவிரவாதப் போக்கை நோக்கித் தள்ளுகிறது. குடிமக்களை அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட சிந்தனைக் குமிழிகளுக்குள் (Echo chambers) அடைத்து வைப்பதன் மூலம், இந்த அமைப்புகள் இணைய வழி வெறுப்பைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி, சமூகப் பிரிவினையை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம், இந்தத் தனியார் சமூக ஊடகத் தளங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத ஒரு எல்லையற்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றன. சமூக ஒற்றுமையை அழித்து, தங்களுடைய காலாண்டு பெருநிறுவன லாபத்தை பெருக்குவதற்காக, பொதுவெளியின் விதிகளை இந்த நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கின்றன.


ஜனநாயகத்தின் டிஜிட்டல் பாதிப்பு


ஒரு சமூகம் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து, மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான உண்மை இல்லாத நிலைக்குத் தள்ளப்படும்போது, அது வெளிநாடுகளின் தலையீட்டிற்கு மிக எளிதான இலக்காக மாறிவிடுகிறது. இந்தியாவின் எதிரி நாடுகளும், சில தனிநபர் அமைப்புகளும் சமூக ஊடகங்களின் இத்தகைய பலவீனங்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அவற்றை நவீனத் தகவல் போர்க்களமாக (Information warfare) மாற்றியுள்ளன. வெளிநாட்டினரின் இத்தகைய தகவல் மோசடித் திட்டங்கள் இப்போது பழையபடி சாதாரண 'தானியங்கி கணக்குகள்' (Bot) மூலமாக பரப்பப்படும் தேவையற்ற விளம்பரங்கள் போல இருப்பதில்லை. மாறாக, அவை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் அதிநவீன உளவியல் தாக்குதல்களாக உருவெடுத்துள்ளன. இலக்கு வைக்கப்படும் நாட்டில் ஏற்கனவே இருக்கும் மதம், இனம் அல்லது பொருளாதாரரீதியிலான பிளவுகளை ரகசியமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களுக்கு ரகசியமாகப் பணம் கொடுத்து, அவற்றை உருவாக்கி, மக்களிடம் பெரிய அளவில் கொண்டு சேர்ப்பதன் மூலம், எதிரி நாடுகள் ஒரு ஜனநாயக நாட்டை உள்ளிருந்தே சீர்குலைத்து, அதன் சொந்த குடிமக்களையே ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்ப முடியும். திட்டமிட்டு நடத்தப்படும் இத்தகைய பிரச்சாரங்கள், ஒரு ஜனநாயக நாட்டின் இறையாண்மைக்கே நேரடியாக விடுக்கப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், உலகளாவிய தொழில்நுட்ப மையமாகவும் இருக்கும் இந்தியா, இந்த நெருக்கடியின் மிக முக்கியமான மையப்புள்ளியில் உள்ளது. டிஜிட்டல் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து, அதற்கேற்ற டிஜிட்டல் பயன்பாட்டு அறிவு (Digital literacy) மக்களிடம் முழுமையாகச் சென்றடையாத ஒரு சூழலில், செயற்கையான போலித் தகவல்களும் சமூக ஊடகங்களின் கணினி வழிமுறை அமைப்பு ஏற்படுத்தும் பிரிவினைகளும் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.


வழக்கமாக, ஒரு பிரச்சனை நடந்தபிறகு கொண்டுவரப்படும் சட்டங்கள் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் எப்போதும் பின்தங்கியே இருக்கும் என்றால், இந்தியா பழைய பாணியிலான ஒழுங்குமுறைச் சட்டங்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அதற்குப் பதிலாக, இந்தியாவிற்கான ஒரு நிலையான சட்டம் மற்றும் கொள்கை வடிவமைப்பு, ஒரேநேரத்தில் செயல்படக்கூடிய ஐந்து முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.


முதலாவதாக, செயற்கை நுண்ணறிவு (AI) மேலாண்மை என்பது முழுக்க முழுக்க மக்களின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தனிமனித கண்ணியத்திற்கும், டிஜிட்டல் சுதந்திரத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். குடிமக்களுக்குத் தங்களின் தனிப்பட்ட தரவுகள்மீது முழு உரிமை இருப்பதையும், கடுமையான அனுமதி நடைமுறைகள் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய வேண்டும்; மேலும் வேலைவாய்ப்பு, கடன் மற்றும் மருத்துவச் சேவைகள் போன்ற முக்கியமான துறைகளில் கணினி வழிமுறைகள் மூலம் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு (Algorithmic discrimination) எதிரான தெளிவான பாதுகாப்பை வழங்க வேண்டும். இரண்டாவதாக, சமூக ஊடக நிறுவனங்கள் ஜனநாயகத்திற்குப் பொறுப்பேற்கக் கூடியவைகளாக மாற்றப்பட வேண்டும். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் கணினி வழிமுறை அமைப்புகள் நாட்டின் அமைதியைக் சீர்குலைக்கும் போலிச் செய்திகளைப் பரப்பி லாபம் ஈட்டும் அதேவேளையில், தங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு இருக்கிறது என்று கூறி இனி தப்பித்துக் கொள்ள முடியாது. அவர்கள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரச் சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம், அவர்கள் எந்த அடிப்படையில் தகவல்களைப் பயனர்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள் என்பதைத் தன்னிச்சையான குழுக்கள் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.  மேலும், கணினி வழிமுறை அமைப்புகள் மூலம் பரப்பப்பட்டு மக்களிடையே வன்முறையை ஏற்படுத்தும் போலித் தகவல்களுக்கு அந்த நிறுவனங்களே முழுப் பொறுப்பேற்க வழிவகை செய்ய வேண்டும்.


மூன்றாவதாக, இத்தகைய புதிய விதிமுறைகள் மற்றும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் போதிலும், மக்களின் பேச்சு சுதந்திரப் பாதுகாப்பு முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தவறான தகவல்களை வரையறுக்கும் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், ஒருபோதும் அரசாங்க ஆதரவுடைய தணிக்கையாகவோ அல்லது மாற்று அரசியல் கருத்துக்களை முடக்கும் ஒரு கருவியாகவோ மாறிவிடக் கூடாது. இந்த விதிமுறைகளின் கவனம் முழுவதும், தனிமனிதர்களின் கொள்கை சார்ந்த பேச்சுகளைக் கடுமையான முறையில் ஒடுக்குவதற்குப் பதிலாக, தானியங்கி போலிக் கணக்குகள் மற்றும் போலி காணொளிகள்/புகைப்படங்களை (Deepfake) உருவாக்குபவர்கள் போன்ற சமூக ஊடகத் தளங்களின் செயல்பாட்டு அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமே இருக்க வேண்டும்.


நான்காவதாக, மக்களிடையே சிந்திக்கும் திறனை வளர்க்காமல், வெறும் தொழில்நுட்பத் தீர்வுகள் மட்டுமே முழுமையான பலனைத் தந்துவிடாது. எனவே, ஊடக அறிவு (Media literacy) மற்றும் டிஜிட்டல் குடியுரிமை (Digital citizenship) ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு மாபெரும், அரசாங்க ஆதரவுடைய கல்வித் திட்டத்தை இந்தியா தொடங்க வேண்டும். குடிமக்கள் தங்களுக்கு வரும் டிஜிட்டல் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயவும், உணர்ச்சிகளைத் தூண்டி ஏமாற்றும் உத்திகளைக் கண்டறியவும் பயிற்சி அளிக்கும் வகையில்,                              இந்தப் பாடத்திட்டம் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கிராமப்புற சமூக மையங்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இறுதியாக, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க, திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்களை உடனுக்குடன் கண்டறியக்கூடிய அதிநவீன, பல்துறை சார்ந்த 'முன்னெச்சரிக்கை அமைப்புகளை' இந்தியா உருவாக்க வேண்டும். மேம்பட்ட கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள், சுதந்திரமான உண்மைக்கண்டறியும் குழுக்கள் மற்றும் நெறிசார் முடக்குநர்கள் (Ethical hackers) ஆகியோரிடையே ஒத்துழைப்பை உருவாக்குவதன் மூலமும், வெளிநாடுகளிலிருந்து நடத்தப்படும் தகவல் போர்முறைப் பிரச்சாரங்கள் இணையத்தில் பரவுவதற்கு முன்பே அவற்றை அடையாளம் கண்டு முறியடிக்க முடியும்.





அரசியலமைப்புரீதியான கட்டாயம்


இறுதியாக, நம் காலத்தின் பாடம் மிகவும் தெளிவாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மேலாண்மை என்பது வெறும் ஒழுங்குமுறை விதிகளாகவோ அல்லது தொழில்நுட்ப விதிகளாகவோ மட்டுமே சுருங்கிவிட முடியாது. தகவல் அமைப்பைச் சிதைக்கும் இத்தகைய செயல்களை, பெருநிறுவனங்களின் சிறிய தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலமாகவோ அல்லது ஒரு சில சட்டத் திருத்தங்கள் மூலமாகவோ சரிசெய்துவிடலாம் என்று நினைப்பது ஒரு மிகப்பெரிய தவறாகும். ஏனெனில், இந்தத் தொழில்நுட்பங்களுக்கு உண்மையை மாற்றியமைக்கவும், சமூகத்தைப் பிளவுபடுத்தவும், வாக்காளர்களின் சுதந்திரமானத் தேர்வைச் சிதைக்கவும் கூடிய தனித்துவமான ஆற்றல் உள்ளது. எனவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேலாண்மை என்பது ஒரு நாட்டின் 'அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டாயக் கடமையாக' இருக்க வேண்டும். பெருநிறுவனங்களோ அல்லது அரசாங்கங்களோ உருவாக்கும் பொய்களில் இருந்து உண்மையை மக்கள் தெளிவாகப் பிரித்தறியும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.                   இந்தத் தடையற்ற, நேர்மையான தகவல் அமைப்பைப் பெறும் உரிமையை, குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமை, சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றின் நீட்சியாகவே கருத வேண்டும்.


மேலும், இந்த மேலாண்மை முறை முற்றிலும் ஜனநாயகப்பூர்வமாக இருக்க வேண்டும். சிலிக்கான் வேலி (Silicon Valley) நிறுவனங்களின் தலைவர்களுக்கும் நம் நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே ரகசியமாக விவாதிக்கப்படக் கூடாது. டிஜிட்டல் பொதுவெளியை வழிநடத்தும் விதிகள் நாடாளுமன்றத்தின் திறந்த விவாதங்கள், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் வெளிப்படையான நிறுவனக் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலமாகவே உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொழில்நுட்பம் என்பது ஒரு சில பெருநிறுவன கூட்டமைப்பின் நிதி நலன்களுக்காக இல்லாமல், மக்களின் ஒட்டுமொத்த நன்மைகளுக்காகச் செயல்படுவதை உறுதிசெய்ய முடியும். அதேநேரத்தில், இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேலாண்மை உலக அரசியல் சூழலை உன்னிப்பாகக் கவனிப்பதாக இருக்க வேண்டும். ஏனெனில், இன்றைய உலகளாவிய போர்க்களத்தின் புதிய முனையாக இந்தத் தகவல் தொழில்நுட்ப வெளிதான் உருவெடுத்துள்ளது. இறையாண்மை கொண்ட இந்திய நாடு, இத்தகைய கணினி வழிமுறை சார்ந்த (Algorithmic) முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, போர்க்களத்தில் நாமாகவே ஆயுதங்களைக் கீழே போடுவதற்குச் சமம் ஆகும். நமது பொதுவெளியை இயக்கும் மென்பொருள் குறியீடுகள், நாட்டின் எல்லை உள்கட்டமைப்பைப் போன்றே தேசியப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்பதை ஜனநாயக நாடுகள் உணர வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேலாண்மையை ஒரு அரசியலமைப்பு அரணாகவும், ஜனநாயகக் கட்டளையாகவும், தேசிய இறையாண்மையின் முதன்மைத் தூணாகவும் உயர்த்துவதன் மூலம் மட்டுமே, இந்த டிஜிட்டல் யுகத்தின் சவால்களைச் சமாளித்து இந்திய ஜனநாயகம் நிலைத்திருக்க முடியும்.


சசி தரூர், திருவனந்தபுரம் தொகுதியின் நான்காவது முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (காங்கிரஸ் கட்சி) ஆவார். மேலும், அவர் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளராகவும் திகழ்கிறார். அவர் இதுவரை 29 புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் மிக சமீபத்திய புத்தகமாக ‘The Sage Who Reimagined Hinduism: The Life, Lessons and Legacy of Sree Narayana Guru’ என்பது குறிப்பிடத்தக்கது.


Original Link: The new digital slavery needs constitutional guardrails 

Share: