இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டது. இதனால், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 'ஜெய் ஜவான் ஜெய் கிசான்' (லால் பகதூர் சாஸ்திரி எழுதியது) 'ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான்' (ஏ.பி. வாஜ்பாய்) என்ற முழக்கத்தை, இப்போது, 'ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்' (பிரதம அமைச்சரால்) என்று மறுபெயரிடுவதற்கான முடிவு வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது. பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை முக்கியத்துவம் கொடுப்பதால், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முயற்சிகளின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள, இந்தியாவின் தற்போதைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Research and Development (R&D)) நிதி நிலைமை மற்றும் அதன் விளைவுகளைப் பார்ப்பது முக்கியம். இந்தியாவானது, வேறு சில நாடுகளை விட குறைவாக செலவழித்த போதிலும், இந்தியா இன்னும் ஏராளமான காப்புரிமைகளை, நிறைய முனைவர் பட்டங்களை (PhDs) உருவாக்குவது மற்றும் பல கட்டுரைகளை வெளியிடுவது சிறந்த முயற்சியாகும். இந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, இந்த வெளியீடுகளின் தரத்தையும் சரிபார்க்க வேண்டியது மிக அவசியம்.
இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை (Research and Development (R&D)) மிகவும் வளர்ந்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்தச் செலவு 2010-11ல் ₹6,01,968 மில்லியனில் இருந்து 2020-21ல் ₹12,73,810 மில்லியனாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியாவை, மற்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியா முதலீடு செய்வது குறைவு. உதாரணமாக, சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4%, ஜெர்மனி 3.1%, தென் கொரியா 4.8% மற்றும் அமெரிக்கா 3.5% ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடுகின்றன.
ஆராய்ச்சி வெளியீடு, கண்டுபிடிப்பு
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சிறிய தொகையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு (Research and Development (R&D)) செலவிட்டாலும், கல்வியில் திறமையானவர்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், 40,813 முனைவர்களை (PhDs) உருவாக்குகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த தரமானது, அறிவுசார் மூலதனத்தை (intellectual capital) வளர்ப்பதிலும், உலகளாவிய ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை காட்டுகிறது. கூடுதலாக, இந்தியாவின் ஆராய்ச்சியின் வெளியீடு கணிசமாக உள்ளது. இது, 2022 ஆம் ஆண்டில் 300,000 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகளுடன் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவின் வலுவான ஆராய்ச்சி சூழல் மற்றும் பல்வேறு துறைகளில் அறிவை மேம்படுத்துவதற்கான பங்களிப்பைக் காட்டுகிறது. மேலும், காப்புரிமை மானியங்களிலும் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. 2022 இல் வழங்கப்பட்ட 30,490 காப்புரிமைகளுடன் உலகளவில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் சீனாவை விட குறைவாக இருந்தாலும், இந்தியாவின் கண்டுபிடிப்பு, நிலப்பகுதி மேம்பட்டு வருவதையும், எதிர்காலத்தில் அதிக அறிவுசார் சொத்துக்களை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது என்பதையும் காட்டுகிறது.
இந்தியாவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு (Research and Development (R&D)) பெரும்பாலான செலவுகள் அரசாங்கத்திடம் இருந்து வருகிறது. இதில் மத்திய அரசு (43.7%), மாநில அரசுகள் (6.7%), உயர்கல்வி நிறுவனங்கள் (Higher Education Institutions (HEI)) (8.8%), மற்றும் பொதுத்துறை தொழில்துறை (4.4%) ஆகியவை அடங்கும். இருப்பினும், 2020-21ல் தனியார் தொழில்துறையின் பங்களிப்பு 36.4% மட்டுமே ஆகும். இதில், அரசாங்கம், வணிகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவை பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் முதலீடு
2022-23 ஆம் ஆண்டிற்கான, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை புள்ளிவிவரங்களின்படி, 2020-21 ஆம் ஆண்டில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இந்தியா $17.2 பில்லியன் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டின் பெரும்பகுதியான, 9.4 பில்லியன் டாலர்கள் அல்லது 54% அரசுத் துறைக்கு செல்கிறது. இந்த பணத்தின் பெரும்பகுதி நான்கு முக்கிய அறிவியல் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது: அவை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (30.7%), விண்வெளித் துறை (18.4%), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (12.4%), மற்றும் அணுசக்தி துறை (11.4%) ஆகியவை ஆகும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் பெரும்பகுதி அரசாங்கத்திடம் இருந்து வருகிறது. அவர்கள், தங்கள் சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கு நிறைய பணம் செலவழிக்கிறார்கள். மேலும், ஆராய்ச்சி செய்வதற்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் இந்த ஆய்வகங்கள் மிகவும் முக்கியமானவையாக உள்ளது. ஒதுக்கப்படும் அரசாங்கத்தின் நிதியுதவி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அவற்றின் உத்திகள் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த நெருங்கிய தொடர்பு, முக்கியமான அறிவியல் முன்னேற்றத்தை வழிநடத்துவதிலும், ஊக்குவிப்பதிலும் அரசாங்கம் எவ்வளவு முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள தனியார் துறைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு குறைவான பங்களிப்பான, சுமார் 6.2 பில்லியன் டாலர்கள் வழங்குகின்றன. இது, நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்த செலவில் 37% ஆகும். உலகளவில், வணிகங்கள் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் முயற்சிகளுக்கு 65% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன. இது, இந்தியாவின் சூழ்நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க மாறுபாட்டைக் காட்டுகிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற முன்னணி கொண்ட நாடுகள், புதுமையான பொருளாதாரங்களில், தனியார் துறைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் 70% க்கும் அதிகமாக வழங்குகின்றன. இது, வலுவான தொழில்-கல்வி ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை தனியார் நிறுவனங்களின் அதிக ஈடுபாடு மற்றும் தொழில்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பு ஆகியவற்றால் மேம்படுத்தப்படலாம்.
உயர் கல்வி நிறுவனங்கள் ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டில் ஒரு சிறிய பகுதியான, சுமார் 8.8% ($1.5 பில்லியன்) பங்களிக்கின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு தொழில்துறையின் பங்களிப்புகளை அதிகரிப்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகும். இதற்கு, பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பல்நோக்கு அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தியா தனது சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலப்பரப்பை மேம்படுத்த அதன் வரையறுக்கப்பட்ட முடிவு மற்றும் சிறந்த உத்தியை மேம்படுத்தும் அதே வேளையில், மற்ற வளர்ந்த நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை அமல்படுத்துவது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மைக்கு அவசியம்.
முயற்சிகளின் தாக்கம்
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்திக்கான இலக்குகள், அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவதைச் சார்ந்துள்ளது. தற்போதைய, இடைவெளியைக் குறைக்க, தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிப்பதோடு, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கான வசதிகளை வலுப்படுத்த வேண்டும். தேசிய டீஃப் தொழில்நுட்ப தொடக்கக் கொள்கை (National Deep Tech Startup Policy (NDTSP)) போன்ற முன்முயற்சிகள் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. இந்த கொள்கை, இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களை ஈடுபட ஊக்குவிக்கும். டீஃப் தொழில்நுட்பத்தை (Deep Tech’s) உருவாக்குவது சில நேரம் எடுக்கும் மற்றும் அபாயங்களை உள்ளடக்கியது என்றாலும், அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் தொழில்நுட்ப சவால்களைத் தீர்ப்பதிலும் முதலீடு செய்வது புதிய சந்தைக்கான வாய்ப்புகளைத் திறக்கும். சமீபத்திய, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சட்டம் (Anusandhan National Research Foundation (ANRF) Act) முன்னேற்றத்தின் அடித்தளமாக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
இந்த புதிய சட்டம் நாடு முழுவதும் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்த உதவும். இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டில் உள்ள இடைவெளியைக் குறைப்பதும், உயர்கல்வி நிறுவனங்களில் வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும் இதன் இலக்காகும். இருப்பினும், சமமான நிதி விநியோகம், பல்வேறு துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய தரங்களை பூர்த்தி செய்தல் போன்ற சவால்களை இது எதிர்கொள்கிறது. இந்த முயற்சிகள், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு சிறந்த உத்திகள் மூலம் வழிகாட்டுதலை வழங்குகிறது. அதே நேரத்தில், அதிக தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது. தேசிய டீஃப் தொழில்நுட்ப தொடக்கக் கொள்கை (NDTSP) மற்றும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) சட்டத்துடன் இணைந்து இடைக்கால பட்ஜெட், வளர்ந்து வரும் தொழில்களில் தனியார் துறை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
அனிமேஷ் ஜெயின், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகத்தில் கொள்கை பகுப்பாய்வு பிரிவில் பணியாற்றுகிறார்.
அனுராக் ஆனந்த், இந்திய அறிவியல் கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை-கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக உள்ளார்.
Original article: