ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்களை சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்தது தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation (CBI)) என்ன கண்டுபிடித்துள்ளது?
ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், மனித கடத்தல் நெட்வொர்க் (human trafficking network) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நெட்வொர்க் இந்தியர்களை "பாதுகாப்பு உதவியாளர்கள்" (security helpers) மற்றும் ரஷ்ய இராணுவத்தில் உள்ள பிற பணியாளர்கள் போன்ற பணிகளுக்கு நியமிக்கிறது. இது, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய-உக்ரைன் போரில் சிக்கித் தவிக்கும் பல இந்தியர்கள், ரஷ்ய ராணுவத்துடன் சேர்ந்து தவறான நம்பிக்கைகளின் கீழ் வேலை செய்து ஏமாற்றப்பட்டதால், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இது காட்டுகிறது.
என்ன நடந்தது?
இந்த ஆண்டு பிப்ரவரியில், ரஷ்யாவுக்காக இந்தியர்கள் போராடத் தொடங்கியதை பற்றி பல செய்திகள் பேசுகின்றன. ஆரம்பத்தில், "இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக" (army security helpers) பணியமர்த்தப்பட்ட சில இந்தியர்களின் கடவுச்சீட்டுகள் மற்றும் ஆவணங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எடுத்துக்காட்டும் வகையில், தி ஹிந்து செய்திகளை வெளியிட்டது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு முகவரின் உதவியுடன் ரஷ்யாவுக்குச் சென்றதாகவும், போர் நடந்த பகுதிக்கு அனுப்பப்பட மாட்டார் என அவருக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார். இருப்பினும், சில ஆயுதப் பயிற்சிகளுக்குப் பிறகு ஜனவரி மாதம் அவர் போர் நடந்த பகுதிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு மாதத்திற்கு ₹ 1.95 லட்சம் சம்பளம் மற்றும் ₹50,000 போனஸ் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், உறுதியளிக்கப்பட்ட சம்பளம் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதில், பல இந்தியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பின்னர் அரசாங்க உதவியை நாடினர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஏழு பேர், தாங்கள் சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்றதாகவும், அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இரஷ்ய ராணுவத்தில் "உதவியாளர்களாக" (helpers) சேருமாறும் கட்டாயப்படுத்தியதாக வீடியோ எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரஷ்ய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு மாஸ்கோ ஆட்சேர்ப்பு மையத்தில் (Moscow recruitment center) சுமார் 100 இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், ரஷ்யாவில் பல ஆட்சேர்ப்பு மையங்கள் இருப்பதால் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில், "இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக" (army security helpers) சேரும் அனைவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். இந்த ஒப்பந்தம், குறைந்தது ஒரு வருடம் நீடிக்கும் எனவும், அதில் கையெழுத்திட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு முன் வெளியேற முடியாது எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆட்சேர்ப்பு முகமைகள் எப்படி மக்களை ஏமாற்றினார்கள்?
கடந்த வாரம், இந்தியாவின் பல நகரங்களில் ஆட்கடத்தல் நெட்வொர்க்கை மத்திய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்தது. இந்த நெட்வொர்க் இந்தியா முழுவதும் ஏழு நகரங்களில் விசா ஆட்சேர்ப்பு செய்பவர்களை (visa recruiters) சம்மந்தப்படுத்தியது. இதன் மூலம், ஆலோசனை நிறுவனங்களால் இந்திய இளைஞர்கள் ஏமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. ரஷ்ய இராணுவத்தில் பாதுகாப்புக் காவலர்களாகவும், உதவியாளர்களாகவும் சேருவதன் மூலம் சிறந்த வாழ்க்கை மற்றும் வேலைகள் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டன. இதுவரை, விசாரணை நிறுவனம், ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட 35 நபர்களைக் கண்டறிந்துள்ளது மற்றும் கடத்தலில் ஈடுபட்டுள்ள இந்தியா முழுவதும் பரவியுள்ள குறைந்தது 17 ஆலோசனை நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
மத்திய புலனாய்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்த நெட்வொர்க் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள் மூலம் இந்திய இளைஞர்களை ஈர்த்தது. இவர்கள், ரஷ்யாவில் அதிக ஊதியம் பெறும் வேலைகள் வாங்கி தருவதாக வாக்குறுதியளித்தன. இதில், பல மாணவர்கள் ஏமாற்றப்பட்டு, தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்டனர். இந்த முகவர்கள், படிப்பிற்கு குறைந்த கட்டணங்கள் மற்றும் நீண்ட நாள் விசாக்களை தருவதாக அவர்களுக்கு உறுதியளித்தனர். பின்னர், இவர்கள் ரஷ்யாவிற்கு வந்ததும், உள்ளூர் முகவர்கள் மாணவர்களின் கடவுச்சீட்டை எடுத்துக்கொண்டனர். இதனால், அவர்களை ஆயுதப் படையில் சேர கட்டாயப்படுத்தினர். இதன் விளைவாக, போரில் குறைந்தது இரண்டு இந்தியர்கள் சண்டையிட்டு இறந்ததாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசு கூறியது என்ன?
இரஷ்ய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றி ஏமாற்றப்பட்ட இந்திய குடிமக்களை விடுவிப்பது குறித்து, ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், அவர்களைக் கண்டுபிடிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்து வருவதாகவும், அவர்களை விடுவிப்பதற்காக ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறினார். இந்திய குடிமக்களை விரைவில் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்தினார். மத்திய புலனாய்வு அமைப்பின் நடவைக்கைகளை மேற்கோள் காட்டி, ரஷ்ய இராணுவத்தில் சாதகமான வேலைகளுக்காக, முகவர்களின் சலுகைகளால் ஆசைப்பட வேண்டாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை வலியுறுத்தியது.