2015-16 மற்றும் 2021-22-க்கு இடையில் உற்பத்தி, மதிப்புக் கூட்டல் (value added) மற்றும் வேலைவாய்ப்பில் (employment) முறைசாரா துறையின் பங்கு குறைந்துள்ளது.
முறைசாராத் துறை என்பது இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். இதில், சுமார் 89 சதவீத பணியாளர்கள் முறைசாரா வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில், முறைப்படுத்தலை ஊக்குவிக்க அரசாங்கம் பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இதில் முக்கிய நடவடிக்கைகளில் சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Services Tax (GST)) செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டணங்களை விரிவுபடுத்துதல் மற்றும் நிதி உள்ளடக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகள் வரி முறைக்குள் அதிகமான வணிகங்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தொழிலாளர்களுக்கு, இ-ஷ்ரம் போர்டல் (E-Shram portal), பிரதான் மந்திரி ரோஜ்கர் ப்ரோட்சஹன் யோஜனா (Pradhan Mantri Rojgar Protsahan Yojana (PMRPY)), மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation (EPFO)) மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (Employees' State Insurance Corporation(ESIC)) சேர்க்கைக்கான பொது மன்னிப்பு திட்டங்கள் (amnesty schemes) போன்ற முயற்சிகள் சமூக பாதுகாப்பு நிலையை நீட்டிக்க முயன்றன. 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிலாளர் குறியீடுகளில் கிக் மற்றும் நடைபாதைத் தொழிலாளர்கள் (gig and platform workers) உட்பட முறைசாரா தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளும் அடங்கும். இருப்பினும், இந்த முயற்சிகளின் முடிவுகள் இன்னும் தெளிவாக இல்லை.
ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கவும், நடுத்தர காலத்தில் வரி இணக்கத்தை மேம்படுத்தவும் GST வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், இது சிறு மற்றும் முறைசாரா வணிகங்களை விகிதாசாரமற்ற முறையில் பாதித்துள்ளது. இது இணக்கச் செலவுகளையும் அதிகரித்துள்ளது மற்றும் குறுகிய காலத்தில் மதிப்புச் சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது.
இதேபோல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் முறையான நிதி சேர்க்கையை அதிகரித்தது. இருப்பினும், இது கடுமையான குறுகியகால பணப்புழக்க சிக்கல்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, பணத்தைச் சார்ந்த சிறு வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும். கோவிட் 19-ன் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இந்த சவால்களை இன்னும் மோசமாக்கின.
இந்தப் போக்குகள் முறைசாரா உற்பத்தித் துறையில் உள்ள சவால்களைக் காட்டுகின்றன. முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் வணிகங்கள் பாதுகாப்பான பொருளாதார கட்டமைப்புகளின் ஒரு பகுதியாக மாற உதவுவதற்குப் பதிலாக, புதிய விதிமுறைகள் அவர்களை மேலும் பின்னுக்குத் தள்ளக்கூடும். இந்த சூழலில், கடந்த பத்தாண்டுகாலத்தில் இந்தியாவின் முறைசாரா துறை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை ஆராய்வது முக்கியமானது.
உற்பத்தித் துறை, பகுப்பாய்வு செய்யப்பட்டது
பல ஆதாரங்களில் இருந்து தரவைப் பயன்படுத்தி இந்தியாவின் முறைசாரா உற்பத்தித் துறையை பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதில் இணைக்கப்படாத வேளாண்மை சாரா நிறுவனங்கள் (கட்டுமானம் தவிர்த்து) மீதான தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS) 67-வது (2010-11) மற்றும் 73-வது (2015-16) சுற்றுகள் அடங்கும். இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) 2021-22 மற்றும் வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பின் (Annual Survey of Industries (ASI)) மூன்று சுற்றுகளிலிருந்தும் தரவையும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போதுள்ள, பகுப்பாய்வு வெளியீடு (output), மதிப்பு கூட்டல் (value added) மற்றும் வேலைவாய்ப்பு (employment) ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. காலப்போக்கில் முறைசாரா உற்பத்தித் துறையில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் போக்குகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படும்.
2010-11 மற்றும் 2015-16-க்கு இடையில், உற்பத்தியில் முறைசாரா துறையின் பங்கு மற்றும் மொத்த மதிப்பு கூட்டுதல் (GVA) இரண்டும் அதிகரித்ததைக் காண்கிறோம். மேலும், உற்பத்தியில் வளர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இருப்பினும், 2015-16 மற்றும் 2021-22-க்கு இடையில், போக்குகள் சிறிது வேறுபடுகின்றன. 2015-16-க்குப் பிறகு வெளியீட்டுப் பங்கு வெகுவாகக் குறைந்தது. இது, கிட்டத்தட்ட அதன் 2010-11 நிலைக்குத் திரும்பியது. அதே நேரத்தில், GVA பங்கு இந்தக் காலகட்டம் முழுவதும் படிப்படியாகச் சரிவைச் சந்தித்தது.
மாறுபட்ட சரிவு விகிதங்கள் இருந்தபோதிலும், இரண்டு குறிகாட்டிகளும் உற்பத்தியில் முறைசாரா துறையின் பங்கில் ஒட்டுமொத்தமாக குறைந்து வருவதை பிரதிபலிக்கின்றன. 2010–11ல் 78 சதவீதமாக இருந்த முறைசாரா துறையின் பங்கு 2021–22ல் 68 சதவீதமாக சரிந்த நிலையில், முறைசாரா துறையின் பங்கு 22 சதவீதத்தில் இருந்து 32 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் முதல் பார்வையில், முறையானத்துறை வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் உயர்வு என்பது அதிகரித்த முறைப்படுத்தலைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்துவதன் மூலம் ஏறக்குறைய பாதி அதிகரிப்பு (சுமார் 5 சதவிகிதம்) ஒப்பந்தக்காரர்கள் மூலம் முறைசாரா நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டதன் காரணமாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீட்டு நிறுவனங்கள்
முறைசாரா துறை நிறுவனங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது, தனிநபர்கள் அல்லது பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் இல்லாமல் வீடுகளால் நடத்தப்படும் சொந்தக் கணக்கு உற்பத்தி நிறுவனங்கள் (Own Account Manufacturing Enterprises (OAME)) ஆகும். இரண்டாவது வகை, குறைந்தபட்சம் ஒரு தொழிலாளியையாவது வழக்கமான அடிப்படையில் பணியமர்த்தும் நிறுவனங்கள் ஆகும். 2010-11 ஆம் ஆண்டில், முறைசாரா துறையில் உற்பத்தி மற்றும் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (GVA) நிறுவனங்களே பெரும்பாலானவை. அவை உற்பத்தியில் 79% மற்றும் GVA-ல் 64% பங்களித்தன. 2021-22 வாக்கில், இந்தப் பங்குகள் உற்பத்திக்கு 65% ஆகவும், GVA-க்கு 59% ஆகவும் குறைந்தன.
இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் குறைந்தது. இது 2010-11ஆம் ஆண்டில் 40% ஆக இருந்து 2021-22ஆம் ஆண்டில் 32% ஆக குறைந்தது. இது முறைசாரா துறைக்குள் ஒரு மாற்றத்தைக் காட்டுகிறது. பொதுவாக குறைந்த உற்பத்தித்திறன், சொத்து-ஏழை மற்றும் வீடு சார்ந்த OAMEகள், நிறுவனங்களின் பங்கு குறைந்ததால் மிகவும் பொதுவானதாகிவிட்டிருக்கலாம்.
எனவே, நம் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் முறைசாரா தன்மையின் நுணுக்கமான பார்வையை முன்வைக்கின்றன. உற்பத்தி, மதிப்பு கூட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முறைசாரா துறையின் பங்கு குறைந்துள்ள நிலையில், முறையான துறைக்குள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிகரிப்பு, முறைசாரா நிறுவனங்களுக்குள் முறைசாரா வேலைவாய்ப்பை நோக்கிய சிக்கலான மாற்றத்தைக் குறிக்கிறது. கூடுதலாக, OAMEகளின் வளர்ந்து வரும் பங்கு வலுவான வேலைவாய்ப்பு சவால்களை பரிந்துரைக்கிறது. ஏனெனில், பல தனிநபர்கள் வாய்ப்பைவிட உயிர்வாழும் தேவைக்காக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடலாம். முறைசாரா துறையின் அதிக உற்பத்திப் பகுதியின் பங்கு, அதாவது நிறுவனங்களின் பங்கு குறைந்துள்ளது. அதாவது அவை இறுதியாக முறையான துறையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன அல்லது சாதரணமாக இல்லாமல் போய்விட்டன என்பதைக் குறிக்கலாம்.
முறைசாரா தன்மையைக் (informality) குறைப்பதற்கான கொள்கை முயற்சிகள் இப்போது சொந்தக் கணக்கு உற்பத்தி நிறுவனங்களில் (OAME) அதிக நிலையான மற்றும் இலாபகரமான அலகுகளாக மாறுவதற்கு வசதியாக நேரடியாக கவனம் செலுத்த வேண்டும். உற்பத்திக்கான போட்டித்தன்மையை மேம்படுத்த, தரக் கட்டுப்பாடு, பேக்கேஜிங், பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் திறன் மேம்பாடு போன்ற இலக்குக்கான தலையீடுகள் இதற்குத் தேவை. கடன், வணிகப் பயிற்சி மற்றும் சந்தை இணைப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவது அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை மேலும் மேம்படுத்தலாம்.
உற்பத்தியில் தொழிலாளர்கள்-தீவிர வளர்ச்சியை வளர்ப்பது சொந்தக் கணக்கு உற்பத்தி நிறுவனங்களில் (OAME) உள்ளவர்களுக்கு பாதுகாப்பான வேலைகளை வழங்க முடியும். இது முறைசாரா வேலைகளை நம்பியிருப்பதையும் குறைக்கலாம். இருப்பினும், முறைசாரா நிறுவனங்களின் முயற்சிகள் வெறும் நிறுவனங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். தொழிலாளர்கள் பாதுகாப்புகளையும் பெற வேண்டும். வரி மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளில் நிறுவனங்களை ஒருங்கிணைப்பது தானாகவே தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்தாது. முறையான துறையில் அதிகரித்து வரும் முறைசாரா வேலைகளில் இருந்து இது தெளிவாகிறது. கூடுதல் தொழிலாளர் பாதுகாப்புகள் இல்லாமல், முறைப்படுத்தல் வணிகங்களுக்கு உதவக்கூடும். ஆனால், தொழிலாளர்களை பாதிக்கப்படக்கூடியவர்களாக மாற்றும்.
திவேதி மற்றும் மிஸ்ரா பொருளாதாரத்தில் உதவிப் பேராசிரியர்களாக உள்ளனர். திவேதி மேலாண்மை ஆய்வுகள் பீடத்திலும், மிஸ்ரா டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியிலும் கற்பிக்கிறார்.