தற்போதைய செய்தி : 2025-26 நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) ஊதியத்தை ஒன்றிய அரசு 2-7% வரை உயர்த்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
• கிராமப்புற வேலை உறுதித் திட்டங்களை நிர்வகிக்கும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Rural Development (MoRD)), 2025-26 நிதியாண்டிற்கான MGNREGS திட்டத்திற்கான ஊதியத்தை திருத்தி அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது.
• NREGS ஊதியம் ₹7 அதிகரித்து ₹26 ஆக உள்ளது. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் ₹7 உயர்வைப் பெற்றன. ஹரியானாவில் அதிகபட்சமாக ₹26 உயர்வு காணப்பட்டது. 2025-26ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு ₹374-லிருந்து ₹400-ஆக ஊதியம் உயர்த்தப்பட்டது. எந்தவொரு மாநிலத்திலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 வழங்குவது இதுவே முதல் முறை.
•கிராமப்புறங்களில் பணவீக்கத்தை அளவிடும் விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index for Agricultural Labourers (CPI-AL)) அடிப்படையில் MGNREGS ஊதியங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
• 2024-25-ஆம் நிதியாண்டில் கோவா அதன் முந்தைய ஆண்டு 2022-23 ஊதிய விகிதத்தைவிட அதிகபட்சமாக 10.56% உயர்வைக் கண்டது. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் மிகக் குறைந்த 3.04% பதிவாகியுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) கீழ், கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வயது வந்த உறுப்பினர்கள் உடலுழைப்பு வேலைகளைச் செய்தால், வருடத்திற்கு குறைந்தது 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலையைப் பெறலாம்.
• MGNREGS-ன் பிரிவு 3 (1) ஒரு நிதியாண்டில் ஒரு கிராமப்புற குடும்பத்திற்கு 100 நாட்களுக்கு குறையாத வேலை வழங்கினாலும், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் குறிப்பாகக் கோராத வரையில் MGNREGS மென்பொருள் ஒரு குடும்பத்திற்கு 100 நாட்களுக்கு மேல் வேலைக்கான தரவு உள்ளீடுகளை அனுமதிக்காததால், அது நடைமுறை உச்ச வரம்பாக மாறியுள்ளது.
• சில சந்தர்ப்பங்களில், அரசாங்கம் 50 கூடுதல் நாட்கள் வேலை வழங்குகிறது. மொத்த வேலை 150 நாட்களாக அதிகரிக்கிறது. உதாரணமாக, வனப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பட்டியல் பழங்குடி குடும்பமும் MGNREGS-ன் கீழ் 150 நாட்கள் வேலை பெற உரிமை உண்டு. அத்தகைய குடும்பங்களுக்கு வன உரிமைச் சட்டம், 2016-ன் கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்த தனியார் சொத்தும் இல்லை.
• தவிர, MGNREGA-ன் பிரிவு 3(4)-ன் கீழ், உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டபடி, வறட்சி அல்லது இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் அரசாங்கம் 50 கூடுதல் நாட்கள் வேலை வழங்க முடியும்.