தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையின் பின்னணியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வரவிருக்கும் இந்திய பயணம் குறித்து . . . -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி:


உக்ரைன் நெருக்கடியில் இந்திய அரசாங்கமும் பிரதமர் நரேந்திர மோடியும் சமச்சீர் அணுகுமுறையைக் கடைப்பிடித்ததற்காக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பாராட்டினார். பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக அவர் கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தருவார் என்பதையும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் லாவ்ரோவ் உறுதிப்படுத்தினார்.


முக்கிய அம்சங்கள்:


  • பிப்ரவரி 2022ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு புடின் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிகளுக்கு தலைமை தாங்கும் வேளையில் இந்த வருகை அறிவிக்கப்பட்டுள்ளது. குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  • மாஸ்கோவில் நடைபெற்ற ‘ரஷ்யாவும் இந்தியாவும்: புதிய இருதரப்பு நிகழ்ச்சி நிரலை நோக்கி ஒன்றிணைதல்’ (‘Russia and India: Together Towards a New Bilateral Agenda’) மாநாட்டில் காணொளி உரையில் லாவ்ரோவ் கூறியதாவது:


“கடந்த ஆண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் ரஷ்யாவிற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தமுறை ரஷ்ய அதிபர் புடின் இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார், மேலும், அவரது இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.”


உங்களுக்குத்  தெரியுமா?:


  • பிப்ரவரி 2022ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது. இது இந்தியாவிற்கு ராஜதந்திர சவாலை உருவாக்கியது. இருப்பினும், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா தொடர்ந்து தொடர்புகளை வைத்திருக்கிறது. இரு தரப்பினரும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


  • கடந்த ஆண்டு ஜூலை மாதம், புடினின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.  மேலும், 2025ஆம் ஆண்டு 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருமாறும் மோடி அவரை அழைத்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


  • கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி கியேவுக்குச் சென்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தார். நெருக்கடிக்குத் தீர்வு காண புடினுடன் பேசுமாறு ஜெலென்ஸ்கியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.


  • கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக அக்டோபரில் அவர் மீண்டும் ரஷ்யாவிற்கு பயணம் செய்தார். மே மாதம் ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டங்களுக்கும் அவர் அழைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் மாஸ்கோவிற்கு வருவாரா என்பதை டெல்லி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.


Original article:
Share: