தற்போதைய செய்தி: நாட்டின் 23 இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பாதிக்கும் மேற்பட்டவற்றில், 2021-22ஆம் ஆண்டை விட 2023-24ஆம் ஆண்டில் இளங்கலை தொழில்நுட்ப மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 10 சதவீத புள்ளிகளுக்கு மேல் குறைந்துவிட்டன. இது ஒன்றிய அரசின் முதல் தரவுகளை வெளிப்படுத்துகிறது.
முக்கிய அம்சங்கள்:
• 2023-24ஆம் ஆண்டில் வாரணாசியில் உள்ள IIT (BHU) தவிர, 23 IIT-களில் 22-ல் வேலைவாய்ப்புகள் 2021-22 உடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாக நாடாளுமன்றக் குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
• நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங் தலைமையிலான குழு, 2021-22 மற்றும் 2023-24-க்கு இடையில் இந்திய தொழில்நுட்ப கழகங்களில் வேலைவாய்ப்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.
• பழைய இந்திய தொழில்நுட்ப கழகங்களில் இளங்கலை தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டன:
• IIT- மெட்ராஸ்: 85.71% → 73.29% 12 சதவீத புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது
• IIT-பம்பாய்: 96.11% → 83.39% 13 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது
• IIT-கான்பூர்: 93.63% → 82.48% 11 புள்ளிகள் சரிவு
ஏற்பட்டுள்ளது.
• IIT- டெல்லி: 87.69% → 72.81% 15 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது.
• 2021-22-ஆம் ஆண்டில், வேலைவாய்ப்பு விகிதங்கள் 83.15% வாரணாசியில் உள்ளன இந்திய தொழில்நுட்ப கழகம் முதல் 98.65% (ஐஐடி கோவா) வரை இருந்தன, 14 90% க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளைப் பெற்றன.
• 2023-24ஆம் ஆண்டில், IIT ஜோத்பூர், பாட்னா மற்றும் கோவா மட்டுமே 90%-க்கும் மேற்பட்ட இந்திய தொழில் நுட்ப கழங்கங்கள் அதிகமான வேலைவாய்ப்புகளைக் கொண்டிருந்தன, IIT ஜோத்பூர் 92.98% (அதிகபட்சம்) மற்றும் IIT தார்வாட் 65.56% (குறைந்தபட்சம்) ஆகும்.
• IIT தார்வாட் மிகப்பெரிய சரிவைக் கண்டது (90.20% → 65.56%, 25 புள்ளிகள் சரிவு), அதைத் தொடர்ந்து ஐஐடி ஜம்மு (92% → 70%).
• IIT கரக்பூர் 86.79%-லிருந்து 83.91% (2.88 புள்ளிகள் சரிவு) ஆக மிகக் குறைந்த சரிவைக் கண்டது.
உங்களுக்குத் தெரியுமா?
• குழுவின் அறிக்கை NIT-களிலும் இதே போன்ற போக்கைக் காட்டியது. மேலும் 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு இடையில் ஒவ்வொரு மாணவருக்கும் கிடைத்த சராசரி நிதித் தொகுப்பில் சரிவு ஏற்பட்டது. ஆனால், அதற்கான தரவுகள் சேர்க்கப்படவில்லை.
• IIT-கள் பதிவு செய்ய மறுத்த போதிலும், வேலைவாய்ப்பு செயல்முறையில் ஈடுபட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த வீழ்ச்சிக்கு பல காரணங்களைக் கூறினர்: 2022-ல் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு வேலைக்கு எடுத்ததன் விளைவுகள், தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் போன்ற முக்கியத் துறைகளில் மந்தநிலை மற்றும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணமாகும்.
• IIT கரக்பூரில் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய மற்றொரு நபர், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பை ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டினார். IIT கரக்பூரில், வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 2018-19-ல் 1,757-லிருந்து 2023-24ல் 2,668 ஆக அதிகரித்துள்ளது, அதே காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1,375-லிருந்து 1,662 ஆக உயர்ந்துள்ளது.
• IIT பாம்பேயில் வேலைவாய்ப்பு சதவீதம் 2022-23ல் 82.16%-லிருந்து 2023-24ல் 74.53% ஆகக் குறைந்தாலும், இந்தத் தரவிலிருந்து மட்டும் முடிவுகளைப் பெறுவது தவறாக இருக்கும் என்று ஒரு அதிகாரி கூறினார். ஏனெனில் இது வளாகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்புகளை மட்டுமே காட்டுகிறது. வேறு எந்த பாதைகளையும் காட்டவில்லை. "வேலைவாய்ப்பு பெறவில்லை” என்று காட்டப்படும் பல மாணவர்கள் உயர்கல்வி அல்லது வளாகத்திற்கு வெளியே வேலைவாய்ப்பு அல்லது தொழில்முனைவு போன்ற பாதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். வெளியேறும் கணக்கெடுப்புடன் ஒப்பிடாமல் இந்தச் சரிவு உண்மையான பிரதிபலிப்பை வழங்காது" என்று அந்த அதிகாரி கூறினார்.
• புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வெளியேறும் கணக்கெடுப்பின்படி, 2018 முதல் 2022 வரை, 57.1% மாணவர்கள் வளாக வேலைவாய்ப்புகள் மூலம் வேலை பெற்றுள்ளனர். 10.3% பேர் சுயமாக வேலைகளை தேர்ந்தெடுத்துள்ளனர். 1.6% பேர் புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர். 8.3% பேர் அரசு வேலைகளில் சேர்ந்துள்ளனர். 6.1% பேர் இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர் மற்றும் 12% பேர் இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.